Tuesday, April 03, 2007

நீங்கள் கேட்டவை

போன வாரம் முழுக்க நம்மக் கச்சேரி களைக் கட்டிப் போச்சு... அந்த திருவிழாவுக்குத் தோரணம் கட்டுன எல்லாருக்கும் பொதுவா ஒரு நன்றின்னு சொல்லிட்டுப் போனாப் பொருத்தமா இருக்காது...

எவ்வளவு பில்டப்புக் கொடுத்தாலும் சொல்லப் போறது என்னவோ கடைசியா அந்த நன்றி தான்.. நட்சத்திரமாப் பேசாம மேடை விட்டு இறங்கி நின்னு பேசுறேன்....

மொதல்ல நம்ம மனச்சாட்சிக்கு நன்றி.. பய இப்போ பயங்கர ரெஸ்ட்ல்ல இருக்கான்..

ஸ்டார் ரிப்போர்ட்டர் செக்ஷன் கனக்கச்சிதமான வெற்றி பெற என் அழைப்பைத் தங்களோட இதரப் பிற பணிச் சுமைகளுக்கும் இடையே ஒப்புக்கொண்ட..நண்பர்கள் வெட்டிப் பயல் பாலாஜி, பொன் ஸ், துளசி அக்கா, அபி அப்பா, ஜி.ராகவன், பாஸ்டன் பாலா ஆகியோருக்கு என் மனமார்ந்த நன்றிகள்

நான் பதிவுகள் மட்டுமே போட்டு விட்டு எஸ் ஆன நேரங்களில் என் பதிவைத் தன் பதிவாய் எண்ணி வந்தவர்களை வரவேற்ற பாசமலர் மை பிரெண்ட்க்கு ஸ்பெஷல் நன்றி.

மை பிரெண்ட் உடன் இணைந்து நம்ம பதிவுகளைக் கலக்கல் கும்மிக் களமாக மாற்றி பட்டையைக் கிளப்பிய பங்காளி புலி, நம்ம நண்பன் சரவணன், நல்நட்பின் ஓசை மனதின் ஓசையார், ராமு தம்பி, மாப்பி சந்தோஷ்,கோபிநாத்,பாசக்காரத் தம்பி, பாசமலர்கள் இமசையக்காதங்கச்சி, துர்கா அனைவருக்கும் நன்றி.

பின்னூட்ட வரலாற்றில் கயமைப் பக்கங்களில் பாசமுடன் தன் பதிவோடு என் பதிவையும் இணைக்க முழுமூச்சாய் போராடிய தலைவர் கொத்தனார், கைக்கொடுத்த மருத்துவர்... இருவருக்கும் என் நன்றி,.

இன்னும் வந்து வாழ்த்திய ஒவ்வொருத்தருக்கும் நன்றி..மணிகண்டன்,பாஸ்ட் பவுலர்,மதுரா,ரவி,ஸ்யாம், மு.கார்த்திகேயன்,தளபதி சிபி,மொத்தமாக வாழ்த்திய அனுசுயா ஆகியோருக்கும் என் நன்றி. இன்னும் ஏதேனும் பெயர்கள் விடுப்பட்டிருந்தால் அதுக்கு நான் இன்றைய பொழுதில் வல்லாரைக் கீரைச் சாப்பிட மறந்தது மட்டுமே காரணம்

பொதுவாக நிறைய பேச வேண்டும் என்ற எண்ணத்தை விட பேசுவதைக் குறைவில்லாமப் பேச வேண்டும்ன்னு ஆசைப் பட்டேன்.. அது ஓரளவு நிறைவேறியதில் சந்தோசம்ங்க..

ஆபிசர் கதையைப் பத்திச் சொல்லணம்ன்னா.. அது கிட்டத் தட்ட என் கதை தாங்க.. கொஞ்சம் போல் பூச்சுற்றல்களோடு.. அப்புறம் அந்தக் கதைப் பத்திச் சொல்லும் போது நம்ம பொன் ஸ் ஏன் நாமும் வலையில் அப்படி ஒரு விளையாட்டை நடத்தாலமேன்னுக் கேட்டிருந்தாங்க.. ..கண்டிப்பாச் செய்வோம்ங்க்... நல்லாவே இருக்கும்... டிசம்பர் வரைக் காத்திருக்க வேண்டுமா என்ன?

ஆபிசர் கதையை ரகளையாய் ரசித்த அனைத்து மக்களுக்கும் மனமார்ந்த நன்றிகள்.. பின்னொரு சம்யத்தில் வாய்ப்புக் கிடைத்தால் ஆபிசர் மறுபடியும் வருவார் தன் கதையோடு கூடவே கிளைக் கதைகளையும் சுமந்தப் படி...

பேட்டிகளுக்கு இப்படி ஒரு பலத்த வரவேற்பு இருக்கும்ன்னு தெரிஞ்சு இருந்தா மனச்சாட்சியை ஓரம் கட்டிட்டு நானே ஸ்டார் ரிப்ப்போர்ட்டர் ஆயிருப்பேன்.. வார இறுதியில் வெளியான பாலாவின் விஷயமுள்ள பேட்டி அதிகம் கவனிக்கப்ப்டாமல் போனதில் எனக்கு வருத்தமே.. ஆனால் அது கவனிக்கப்படும் என்ற நம்பிக்கை எனக்கு இன்னும் இருக்கிறது..

இது போல் பேட்டிகள் எடுக்க இன்னும் நிறைய மக்கள் லிஸ்ட்டில் இருக்காங்க... ஆனாப் பாருங்க ஸ்டார் ரிப்போர்ட்டர் இப்போ ஒய்வெடுக்க நம்ம இந்திய கிரிக்கெட் போய் ஒய்வெடுத்துட்டு வந்தாங்களே ஆமாங்க வெஸ்ட் இன்டீஸ் அங்கேத் தான் போயிருக்கார்..வந்தஓடனே அவர்கிட்ட பேசுவோம்..

ரஜினி குறித்தான் என் பதிவில் நண்பர் தாஸ் ஒரு கருத்தைச் சொல்லியிருந்தார்.. அவ்ர் ரஜினி பற்றி போட்டப் பதிவை நானும் படித்தேன்.. ரஜினியிடம் அவர் கண்ட குறைகளைப் பேசியிருந்தார்.. என் பதிவு ரஜினியிடம் நான் கண்ட நிறைகளைப் பட்டியலிட்டு இருந்தேன்... மாற்று கருத்திருந்தும் நம் பதிவுகளைப் படித்து ரசித்ததாய் பெருந்தன்மையோடுச் சொன்ன நண்பர் தாஸ்க்கும் என் நன்றி.

மொத்தத்தில் இது ஒரு அழகான பீலிங்க்ஸ் ஆப் இன்டியாக் கச்சேரி... எல்லாரும் ஓவராப் பீல் ஆவாம வேலையைப் பாருங்கய்யா.. வர்றோம்ங்க...

13 comments:

G.Ragavan said...

சென்ற வாரம் சிறப்பு வாரமாகச் சென்றமைக்கு வாழ்த்துகள். நல்ல கலக்கலாக இருந்தது.

அதென்ன ரஜினி பதிவு? நான் படிக்கவே இல்லையே. இப்பவே போய்ப் பாக்குறேன்.

மனதின் ஓசை said...

தேவ்,
போன வாரம் கலக்கலான ஸ்டார் வாரமாக அமைந்தது.. கும்மி என்பதை விட அருமையான திட்டமிடலோடு அழகான பதிவுகளை கொடுத்து அனைவரையும் ரசிக்க வைத்தாய்.. ஆபிசர் பதிவுகள் மிக அருமை.. ரிபோர்ட்டர் பதிவுகளும் அருமையானவை.மனசாட்சியின் கேள்விகளும் உன்னுடைய அந்த பம்மல் பதிகளும் மறக்க முடியாதவை..

வார கடைசியில் போட்ட பதிவுகள் கவனம் பெறவில்லைஎன்பது நிச்சயமான ஒரு குறைதான். அதற்கு காரணம் அது வெளியான நேரமே காரணம் என நம்புகிறேன்.. இது போன்ற பதிவுகளை தொடரவும்..


வாழ்த்துக்கள்.

நாகை சிவா said...

கச்சேரி நல்லப்படி களை கட்டியது...

வாழ்த்துக்கள்....

மீண்டும் நட்சத்திரமாக நீ ஜொலிக்க வேண்டும்... அதிலும் நான் வந்து குமற வேண்டும். இது தான் என் ஆவா...

பாபா பதிவுகளை படித்தாலும் பின்னூட்டம் இட இயலவில்லை. :-(

இலவசக்கொத்தனார் said...

தம்பி, ஒரு வாரம் நன்றாகக் கழிந்தது. வெகு நாள் கழித்து பின்னூட்ட கயமைத்தனம் செய்ய முடிந்தது மகிழ்ச்சியே. வாரயிறுதிப் பதிவுகளை இப்பொழுதுதான் படிக்கிறேன்.

நல்லதொரு வாரம் தந்தமைக்கு என் நன்றிகள்.

-L-L-D-a-s-u said...

தேவ் .. மறுமொழிக்கு நன்றி ...

நமக்குள்ள என்ன வய, வரப்பு, பங்கு பிரச்சினையா என்ன உங்களை நான் எதிரியாக நினைக்க.. உண்மையாகவே உங்கள் பதிவுகளை , முக்கியமாக ஆஃபிசர் பதிவுகளை, எனக்கும் ஏற்பட்ட அதே மாதிரியான அனுபங்களையும் அசைபோட்டே ரசித்துப்படித்தேன் , ஆனால் பின்னூட்டம் போட, பலபேரை போல சோம்பேறித்தணம் ..ரஜினி விஷயமாக இருக்கவும் , கை அரித்துவிட்டது . weird.,

ரஜினியோடும் எனக்கு வய , வரப்பு, பங்கு பிரச்சினை இல்லை ..

ராகவன்,


சுட்டி இதோ
http://lldasu.blogspot.com/2007/03/blog-post_27.html

நீங்கள் படித்து பிண்ணூட்டமும் இட்டுள்ளீர்கள் .:

Unknown said...

//சென்ற வாரம் சிறப்பு வாரமாகச் சென்றமைக்கு வாழ்த்துகள். நல்ல கலக்கலாக இருந்தது.//

நன்றி ஜி.ரா.. கூட்டணியில் நீங்களும் தானே இருந்தீங்க உண்மையிலே அது நட்சத்திரங்களின் வாரம் அது:-)

Unknown said...

//தேவ்,
போன வாரம் கலக்கலான ஸ்டார் வாரமாக அமைந்தது.. கும்மி என்பதை விட அருமையான திட்டமிடலோடு அழகான பதிவுகளை கொடுத்து அனைவரையும் ரசிக்க வைத்தாய்.. ஆபிசர் பதிவுகள் மிக அருமை.. ரிபோர்ட்டர் பதிவுகளும் அருமையானவை.மனசாட்சியின் கேள்விகளும் உன்னுடைய அந்த பம்மல் பதிகளும் மறக்க முடியாதவை..//

நன்றி ஹமீது.. எல்லாம் நம்ம முந்தைய நட்சத்திரங்கள் வழ்ங்கிய நல் ஆலோசனைத் தான் காரணம்.

//வார கடைசியில் போட்ட பதிவுகள் கவனம் பெறவில்லைஎன்பது நிச்சயமான ஒரு குறைதான். அதற்கு காரணம் அது வெளியான நேரமே காரணம் என நம்புகிறேன்.. இது போன்ற பதிவுகளை தொடரவும்.. //

தொடரும் உங்கள் ஆதரவோடு..:-)


வாழ்த்துக்கள்.

Unknown said...

//கச்சேரி நல்லப்படி களை கட்டியது...//

வாழ்த்துக்கள்....
புலியின் பங்கை மறக்க முடியுமா?

//மீண்டும் நட்சத்திரமாக நீ ஜொலிக்க வேண்டும்... அதிலும் நான் வந்து குமற வேண்டும். இது தான் என் ஆவா...//
இது டூஊஊஊஊ மச் மச்சு

//பாபா பதிவுகளை படித்தாலும் பின்னூட்டம் இட இயலவில்லை. :-(//
உண்மை நிறையப் பேர் படித்திருக்கிறார்கள் புள்ளி விவரமும் அதையேத் தான் சொல்லுது.

Unknown said...

//தம்பி, ஒரு வாரம் நன்றாகக் கழிந்தது. வெகு நாள் கழித்து பின்னூட்ட கயமைத்தனம் செய்ய முடிந்தது மகிழ்ச்சியே. வாரயிறுதிப் பதிவுகளை இப்பொழுதுதான் படிக்கிறேன்.

நல்லதொரு வாரம் தந்தமைக்கு என் நன்றிகள். //


எல்லாம் தலைவரின் அன்பும் ஆசியும்.. தொடர வேண்டும் அது :)

Unknown said...

//தேவ் .. மறுமொழிக்கு நன்றி ...

நமக்குள்ள என்ன வய, வரப்பு, பங்கு பிரச்சினையா என்ன உங்களை நான் எதிரியாக நினைக்க.. உண்மையாகவே உங்கள் பதிவுகளை , முக்கியமாக ஆஃபிசர் பதிவுகளை, எனக்கும் ஏற்பட்ட அதே மாதிரியான அனுபங்களையும் அசைபோட்டே ரசித்துப்படித்தேன் , ஆனால் பின்னூட்டம் போட, பலபேரை போல சோம்பேறித்தணம் ..ரஜினி விஷயமாக இருக்கவும் , கை அரித்துவிட்டது . weird.,

ரஜினியோடும் எனக்கு வய , வரப்பு, பங்கு பிரச்சினை இல்லை ..

//

வாங்க தாஸ் நீங்களும் நம்மளை மாதிரி ஆபிசர் தானா.. ஆபிசர் டூ ஆபிசர் இனி நட்புத் தான்... வாழ்க வளர்க...

கோபிநாத் said...

\\ேசுவதைக் குறைவில்லாமப் பேச வேண்டும்ன்னு ஆசைப் பட்டேன்.. \\

தேவ்ண்ணே... நீங்கள் எந்த குறையும் இல்லமால் செய்து விட்டீர்கள்.

உங்களின் ஸ்டார் பதிவின் மூலம் எங்களுக்கும் புதிய நண்பர்கள் கிடைத்தார்கள்.

ரிப்போர்ட்டர் பதிவுகள் அனைத்தும் அருமை ;-))

MyFriend said...

என்னது இது????

பின்னூட்டங்கள் 11-ஐ தாண்டவில்லையா???

வெட்கம்.. அவமானம்.. :-P

[சாரி அண்ணா, ரொம்ப பிஸி. உங்களுக்கே தெரியும்.. அதான் கொஞ்சம் லேட்.. ;-)]

MyFriend said...

ஆஹா.. உங்க பாசத்துக்கு ஒரு அளவே இல்லைங்கண்ணா.. உங்களுக்கு நன்றி..

கைக்கொடுத்த கும்மி(பி) கோஸ்டிக்கும் நன்றி.. ;-)

tamil10