Wednesday, May 16, 2007

கலாநிதி மாறன் - நிழல் அரசாங்கம்இன்று தமிழகத்தில் நடந்து வரும் திமுக உச்சக் குடும்பத் தகராறில் மிகவும் சாமர்த்தியமாகத் தவிர்க்கப்பட்டிருக்கும் பெயர் கலாநிதி மாறன்.

90களின் ஆரம்பத்தில் பூமாலை என்னும் வீடியோப் பத்திரிக்கையோடு தமிழக மீடியா உலகின் கதவுகளைத் தட்டிப் பார்த்த இளைஞர் கலாநிதி பின் 93ல் சன் டிவி ஆரம்பித்து தமிழக மீடியாவை மொத்தக் குத்தகைக்கு எடுத்துக் கொண்டது வரலாறு..

இந்த இளைஞரின் வெற்றிக்குக் குடும்பத்தின் அரசியல் பலம் ஆதாரம் என்ற கருத்துக்கள் ஒரு புறம் வலம் வந்தாலும்.. இவர் வளர்ச்சிக்கு இவர் முயற்சிகள் பெரும் காரணம் என்பதை மறுக்க இயலாது.

வியாபார உக்திகளில் தன்னை வித்தியாசப் படுத்திக் கொண்டு மக்களுக்குப் பிடித்த விஷ்யங்களைக் கொடுத்து மீடியா மகாராஜா எனப் பத்திரிக்கைகளால் முடிசூட்டவும் பட்டார். விருதுகள் குவிந்தன. நிறுவனம் வளர்ந்தது. கிளைப் பரப்பியது.

96ல் திமுக என்ற கட்சி ஆட்சிக்கு வர இவரது சன் டிவி ஆற்றிய பங்கை யாரும் மறக்கவோ மறுக்கவோ முடியாது.. கட்சியால் வளர்ந்த டிவி எனப் பேசப்பட்ட காலம் போய் கட்சியையே வளர்க்கும் நிலைக்கு கலாநிதி உயர்ந்தார் என்று சொன்னால் அது மிகையாகாது.

ஆனா இது ஒரு திட்டமிட்ட வளர்ச்சி..

தந்தை மாறனின் மரணம்.. கலாநிதியை அரசியலுக்கு அழைத்தது.. அழைத்தது தென்னகத்தின் மூத்த அரசியல் அறிஞர் கலைஞர்... மென்மையாக அழைப்பை மறுத்தார் மாறன்.. அழைப்பை தம்பியிடம் கொடுத்தார். அது வரை நாடறியாத தயாநிதி அடுத்தச் சில காலங்களின் உலகறியும் இந்திய அமைச்சர் ஆனார். சாதனைகள் புரிந்தார். அண்ணன் கலாநிதி தன் வியாபாரத்தில் கண்ணும் கருத்துமாய் தொடர்ந்தார்.

அரசியல் சதுரங்கம் அசாதரமானது தான் ஆனால் வியாபார உலகம் அதற்கு சற்றும் குறைந்தது அல்ல.. அரசியலுக்கு விளம்பரம் தேவை இல்லை.. ஆனால் அரசியல்வாதிகளுக்கு விளம்பரம் அவசியம்.. வியாபாரத்துக்கு விளம்பரம் உயிர்.. வியாபாரிக்கு தேவை இல்லை.. சத்தம் இன்றி சாதனைகள படைத்து சர்ரேன்று தன் பலத்தை கலாநிதி கூட்டிக்கொண்டேப் போனார்.

அவ்வப்போது அவரது வளர்ச்சி விமர்சனத்துக்கு உட்படுத்தப்பட்டாலும் அது திமுக என்ற அரசியல் கட்சியையும் அதன் தலைமையும் தாக்கும் விதமாகவே பெரும்பாலும் அமைந்தது. கலாநிதி அந்த சூழ்நிலையைத் தனக்குக் கேடயமாக திறமையாகப் பயன்படுத்திக் கொண்டார். அவரது முழு நோக்கமும் வளர்ச்சியில் மட்டுமே குறியாய இருந்தது.

கலாநிதியின் வளர்ச்சியைத் தங்களுக்குச் சாதகமாகவே நினைத்தும் பார்த்தும் வந்த திமுக உச்சக் குடும்பம் ஒரு கட்டத்தில் அந்த வளர்ச்சியின் வேகம் திகைக்க வைத்தது. அந்த வளர்ச்சியில் தங்கள் வீழ்ச்சி ஒளிந்திருக்குமோ என எண்ணம் கொண்டது.. இந்த எண்ணம் உரசலுக்கான முதல் விதையைத் தூவியது...

ஆனாலும் அவர்களால் கலாநிதியை நேராக மோதலுக்கு அழைக்கமுடியவில்லை.. கலாநிதி அப்படி ஒரு நிலையை ஏற்படுத்தியிருந்தார்.. தன் தாக்குதலைப் புத்திசாலித் தனமாகப் பத்திரிக்கையாளன் என்ற போர்வையில் அவ்வப்போது தொடுக்க கலாநிதி தவறவில்லை.

அவரது போர் வியூகம் அப்படி...திமுக உச்சக் குடும்பம் பொறுத்துப் பார்த்து இனியும் அமைதிக் காப்பதில் லாபமில்லை எனப் போர் பிரகடனம் செய்தது தான் மதுரைக் காட்சிகள்...

போர் காட்சிகள் துவங்கி விட்டன... வெட்டப் பட்ட முதல் காய் தயாநிதி..கலாநிதியின் யுத்தத் திட்டத்தின் அறிவிக்கப்படாத தளபதி...

இன்னும் கலாநிதி தன் பங்குக்கு எந்தக் காய்களையும் நகர்த்தவில்லையா நகர்த்துவாரா பொறுத்திருந்துப் பார்ப்போம்...

எது எப்படியோ இப்போதைக்கு இலவசமா டிவி கொடுத்த திமுககாரங்க பக்கம் . இல்ல வசமா ஒரு டிவி...

CAN I SAY KALANIDHI MARAN IS THE MAN TO WATCH OUT FOR IN THIS POLTICAL BATTLE

21 comments:

Ram Ravishankar said...

excellent insights! the whole article of yours reflected my thoughts end-to-end.

.:: மை ஃபிரண்ட் ::. said...

வாவ்.. நல்லாவே யோசிக்கிறீங்க.. இந்த issue-வை பற்றீ நான் படித்து புரிந்துக்கொள்ளும் அளவுக்கு உள்ள இரண்டாவது பதிவு இது.. :-D

G.Ragavan said...

இருக்கலாம். அந்த அளவுக்கா உள்காய்ச்சல் இருக்கு! அடக்கடவுளே...அப்படி இருக்கும்னா...அது ரெண்டு பேருக்குமே நல்லதில்லைன்னு நெனைக்கிறேன். ஆனா ஒன்னு...அதிமுக ஆட்சிக்காலத்துலயும் சன் டீவிதான் நம்பர்-1ஆ இருந்தது. விஜய் டீவியோட போட்டி போடுற விட்டுட்டா ஒழுங்கா இருக்கும். ம்ம்ம்...என்ன நடக்குதுன்னு பாக்கலாம்.

Anonymous said...

மிக அருமையான பதிவு.

கட்சி, கட்டப்பஞ்சாயத்து, ரவுடியிஸத்தில் இறங்காமல் உழைப்பில் உயர்ந்தவர், திறமையாளர் என்று நிருபித்துள்ளார் கலாநிதி. மு.மாறனும் அறிவாளி, அவர் மக்களும் அவ்வாறே. மாறனுக்கு கீழ் மட்ட அரசியல் புலம் இல்லை, அவர்மக்களூக்கும் இல்லை. மு.மாறன் பழகுவதற்கு இனிமையானவர், பலகட்சிகளிலும் நட்புடன் இருந்தவர். தயாநிதியும் அவ்வாறே.

இதில் கொடுமை கலைஞருடன் இருக்கும் எவரும் இந்த விஷயத்தில் அவருக்கு நல்லறிவுறை வழங்கவில்லை. சுற்றீயிருப்பவர்கள் எல்லாம் ஸ்டான் - அழகிரி பஜனையாகவே இருக்கின்றனர். கழகத்தில் அறிவுக்கு இடமில்லை என்பது இன்னுமொறு முறை நிருபிக்கப்பட்டுள்ளது.

இலவசக்கொத்தனார் said...

நல்லா எழுதி இருக்கீங்க.

சில கருத்துக்கள் இருக்கு. தனியா சொல்லறேன்.

மனதின் ஓசை said...

தேவ்,
வித்தியாசமாக யோசித்து எழுதியிருக்கிறாய்.. நடப்பதற்கு வாய்ப்பு இல்லையென சொல்ல முடியாதுதான்.. அரசியலில் எதுவும் நடக்கலாம்.

என் எண்ணங்கள் :
கலாநிதிக்கு பணம் மட்டுமே குறிக்கோள். மீடியாவின் அனைத்து விதங்களிலும் தானே முதலில் இருக்க வேண்டும் என்பதே கனவு. அத்ற்கு திமுக அரசியல் ஆதரவு தேவை பட்டபொழுது அதனை உபயோகப்படுத்திக்கொண்டார். (அவர் தந்தை திமுகாவில் இருந்தது காரணமாக திமுக ஆதரவு என்பது அவர் ரத்ததில் ஊறியதாக இருக்கும்.) அதே நேரத்தில் அது தன் முன்னெற்றத்துக்கு இடையூராக சமீப காலங்களில் வரத்தொடங்கியதால் திமுக ஆதரவு பிம்பத்தை விட்டு வெளிவர முயன்றார். கூடவே கருணாநிதிக்கு பின் ஏன் தயாநிதி வரக்கூடாது என்ற எண்ணமும் ஸ்டாலினுக்கு கொடுக்கப்படும் முக்கியத்துவமும் உறுத்தியது. தானாக நடுநிலை என்பதை விட ஒரு சண்டை வந்து பிரிந்தால் தான் அது நம்பப்படும் என்று ஒரே கல்லில் இரண்டு மாங்காயாக ஸ்டாலின் எதிர்ப்பு/புறக்கணிப்பு வழியில் இறங்கினார்.. இதனால் ஸ்டாலினை ஓரம் கட்டலாம்.. ஓரளவு ஓரம் கட்டியபின் தயாநிதியை திமுக வாரிசாக முன்னிலைப்படுத்தலாம்/திமுக ஆதரவு பிம்பத்தை உடைக்கலாம் என்பதே அவர் நிலை. கருணாநிதிக்கும் முரசொலி மாறம் மேல் இருக்கும் பற்று காரணமாக தயாநிதியை மத்திய மந்திரியாக்கி அழகு பார்த்தார். மீடியா ஆதரவு தேவை + மாறன் பற்றால் அவர்கள் செய்வதை சகித்துக்கொண்டு அதே சமயம் உன்னிப்பாக கவனித்துக் கொண்டு இருந்தார்..
மாறன் சகோதரர்களின் அடுத்தக் கட்டமே இந்த கருத்துக்கணிப்பு + மதுரை சம்பவம் + தயாநிதி ராஜினாமா.

கூடவே.. இது ஒரு நேர்க்கோடான கதை போல் சொல்ல முடியாது என கருதுகிறேன்.. இது பல காலகட்டங்களில் வெவ்வேறு மனநிலைகளில் எடுக்கப்பட்ட முடிவுகளின் கலவை.

மாறன்ஸ் இதுவரை சரியாக காய் நகர்த்தி வந்தாலும் கருணாநிதி தட்ட வேண்டிய நேரம் பார்த்து (மாறன்ஸ் புரிந்து கொள்ளும்படி) தட்டி விட்டார் என்றே கருதுகிறேன்.

மாறன்ஸ்க்கு தான் அகலக்கால் வைத்தது/சரியாக எடை போடாதது இப்பொது புரிந்து விட்டது. மு.க இருக்கும்வரை இனி அடக்கி வாசிப்பார்கள். அதற்குள் மு.க தேவையான காய்களை நகர்த்தி விடுவாரா? பார்க்கலாம்..
சதுரங்க ஆட்டம் ஆரம்பமாகி விட்டது. எதிராளியை குறைவாக எடை போடக்கூடாது என்ற பாடத்தை மாறன்ஸ் புரிந்து கொண்டார்கள்.. பதிலுக்கு காய் நகர்த்துவார்களா இல்லையா என்பதை காலமும் சூழ்நிலைகளும்தான் நமக்கு சொல்லும்.

இப்போதைய சூழ்நிலையில் மாறன் திமுகாவில் இருந்து( மற்றவர்கள் பார்வைக்கு) விலக்கியே வைக்கப்படுவார். ஆனால் தன் MP பதவியை ராஜினாமா செய்யமாட்டார்.. செய்தால் தேர்தலை சந்திக்க வேண்டி வரும்.. திமுகாவுக்கு நெருக்கடி கொடுக்க நினைத்திருந்தால் இதனை செய்திருக்கலாம்.
நடந்து முடிந்து விட்டதை இரு தரப்பும் தனக்கு சாதகமாகவே பயன்படுத்திக்கொல்லும்.. வெளியில் எதிரெதிராக இருப்பதை போன்ற பின்பத்தை ஏற்படுத்தி
1.தன் வியாபாரத்தை விஸ்தாரமாக்கி கொள்வார்கள்.
2.சன்/தினகரன்/தமிழ்முரசு செய்திகளில் நம்பகத்தன்மையை ஏற்படுத்துவார்கள். (அது திமுக சாதகமாகவே இருக்கும்).

ஆனால் இந்த அரசியல் விளையாட்டுக்களால் தன் உயிரை இழந்துவிட்ட அந்த மூண்று குடும்பங்களுக்கும் பதில் சொல்பவர் யாரோ???

ஜி said...

கட்சியின் ஆதரவு இருந்தாலும், முயற்சியும் புதுமையும் இல்லாமல் இத்தனை உயரத்தை அடைந்திருக்க முடியாது. எல்லாரும் அரசியலை மட்டுமே அலசிக் கொண்டிருக்கையில் சற்றே வித்தியாசனாம, ஆனால் அத்தியாவசியமான கோணத்தில் எழுதியிருக்குறீர்கள் :))

eniyavan said...

thirudi,matravarhalai oliththu,uyarnthu,uyarntha edaththil erunthe vizhapohiravarhal.eraivan thaamathippaan aanaal thavaramaattaan...

நாகை சிவா said...

கலாநிதி மாறனை தாக்காமல் தயாநிதி போட்டு தாக்கியதற்கு இரண்டு காரணம், ஒன்னு கலாநிதியின் தளபதி தயாநிதி, இரண்டு தயாநிதியின் அதிவேக வளர்ச்சியை கண்டு ஏற்கனவே கடும்பயத்தில் இருந்த பலருக்கு இது தான் சரியான சந்தர்ப்பம் என்று அடிச்சு பிடிச்சு நினைத்தை சாதித்து விட்டார்கள்

நாகை சிவா said...

கிடைத்த சான்ஸ் ஏதையும் மிஸ் பண்ணாமல், குடும்பத்தில் இருந்தவர்கள் சின்னதாக தூக்கி விட்டதை வைத்து தங்கள் தனித்திறமையால மேலே வந்தவர்கள் கலாநிதி & தயாநிதி.

ஆனால் ஒரு சிலரை இன்னுமும் மு.க. தாங்கி கொண்டு தான் இருக்க வேண்டியது இருக்கு. கிடைத்த அம்புட்டு வாய்ப்பையும் கோட்டை விட்டாச்சு, மறுபடியும் வாய்ப்புகள் வரமா என்று பாத்துக் கொண்டு இருக்கின்றார்கள்.

இதை அடிப்படையில் வைத்து பாக்கும் போது மாறன் பிரதர்ஸ் பல ஆட்டங்களை நடத்தி காட்டுவார்கள் என்றே படுகிறது.

எங்கும் எப்பவும் எதுக்கும் திறமைக்கு தான் பரிசு.

ulagam sutrum valibi said...

தேவ்
எனக்கு அரசியல் அதிகம் தெரியாது,உங்களைப் போன்றவர்கள் கூறுவதை வைத்துத்தான் அறியமுடிகிறது.எங்களைப் போன்றவர்களுக்காக தொடர்ந்தெழுதவும்.

Anonymous said...

Kalanidhi and Dayanidhi are not good Tamil Nadu and Tamil Media. Both are dangerous, easily they can buy all the opposing medias. It is not good for Tamil Nadu. We need to hear views on all angles. I believe because of Dayanidhi's exit, we are survived from major disaster.

Syam said...

அவுங்க அவுங்க பொழப்ப பார்த்திட்டு இருந்தா நல்லா இருந்து இருக்கும்...சரி மனுசன் தான...பஸ்ல இடமே இல்லனா ஸ்டாண்டிங்லயாவது போனா போதும்னு இருக்கும்...உள்ள ஏறுன உடனே கம்பில சாய இடம் கிடைச்சா நல்லா இருக்கும்...அப்படியே இந்த எண்ணம் தொடர்ந்து மூனு சீட்டும் காலியானா நீட்டி விட்டு படுக்கலாம்னு தோனும்...இது எனக்கு...அவங்க அவங்க சக்திக்கு தகுந்த மாதிரி யோசிக்கராங்க.....பேக் ஃபயர் ஆகிடுச்சு....

Syam said...

//கிடைத்த சான்ஸ் ஏதையும் மிஸ் பண்ணாமல், குடும்பத்தில் இருந்தவர்கள் சின்னதாக தூக்கி விட்டதை வைத்து தங்கள் தனித்திறமையால மேலே வந்தவர்கள் கலாநிதி & தயாநிதி.//

பங்கு, தனி திறமை இருக்கு I totally agree, ஆனா சின்னதா தூக்கி விடல,மத்தவங்கள எல்லாம் பெருசா அமுக்கிட்டாங்க....மத்த டி.வில இருந்து அரசியல் தலைவர்கள் வரை...அதுனால இவுங்க பெரிசா தெரிஞ்சாங்க...லாலு பண்ணலயா காலம் காலமா நஷ்டத்துல போல ரயில்வே துறைய பெரிய லாபமா மாத்தி காட்டுனது....

vignesh said...

really intresting....


நான் படித்து புரிந்துக்கொள்ளும் அளவுக்கு உள்ள இரண்டாவது பதிவு இது.

thanks for your grate explanation...

vignesh said...

sir ,, tamil la eppadi anuppardha nu oru class edunga... enakkum aasai aasaia irukku

Raja Shanmugam said...

//
இந்த இளைஞரின் வெற்றிக்குக் குடும்பத்தின் அரசியல் பலம் ஆதாரம் என்ற கருத்துக்கள் ஒரு புறம் வலம் வந்தாலும்.. இவர் வளர்ச்சிக்கு இவர் முயற்சிகள் பெரும் காரணம் என்பதை மறுக்க இயலாது
///

Its true,Not everybody with political power with out proper planning.
Now they already got Airlines and the next thing they are going to get into is the "Courier service" similar to the one FED-EX & DHL that's the reason they went for airlines....

செந்தில் said...

இது வரைக்கும் ஏன் இவங்க சண்டை போடுறாங்கன்னே எனக்கு தெரியாது. இதுக்குப் பின்னாடி இவ்ளோ இருக்கா? எனக்கு பிடிச்ச ஒரே அரசியல்வாதிய கவுத்திட்டாங்க...:(((

தேவ் | Dev said...

பதிவிற்கு வந்து படித்து தங்கள் கருத்துக்களைப் பகிர்ந்த அனைத்து நண்பர்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்

தேவ் | Dev said...

நண்பர்கள் கேட்டுக் கொண்டது போல் எனக்குத் தெரிந்த அரசியல் விவரங்களை அவ்வப்போது இங்கு பகிர்ந்துக் கொள்ள முயல்கிறேன்.. நன்றி..

Anonymous said...

tibia money tibia gold tibia item runescape money runescape gold tibia money tibia gold runescape gold runescape accounts tibia gold tibia money runescape money runescape gp buy runescape gold tibia gold tibia item buy runescape money runescape gold runescape items tibia money tibia gold

tamil10