Tuesday, May 22, 2007

வ,வா,சங்கத்தில் கைப்புள்ளயின் அடுத்த வாரிசு யார்- மெகா சர்வே முடிவுகள்

வருத்தப்படாத வாலிபர் சங்கம் வலையுலகின் மிகவும் பிரபலமான சங்கம்.. இந்தச் சங்கத்தின் லேட்ட்ஸ்ட் செய்தி சங்கத்தின் 'தல' கைப்புள்ள விரைவில் மணக்கோலம் பூண்டு ரங்கமணியாக பதிவு உயர்வு பெறப் போகிறார் என்பதே.. இதனைத் தொடர்ந்து தமிழகத்தின் நம்பர் ஒன் வலைப்பதிவுகள் தல திருமணம் பற்றிய சூடானச் செய்திகளை வழங்க முயன்று கொண்டிருக்கும் நேரத்தில்..

நமது சென்னைக் கச்சேரி உங்களுக்காக களத்தில் இறங்கியது.. உலகப் புகழ் பெற்ற நிறுவனமான ஓசி பீல் சன் குழுவோடு இணைந்து இணைய ச்ர்வே குரு சர்வேசன் அவர்களின் நல்லாசியோடு நடத்திய சர்வே முடிவுகள் இதோ உங்கள் பார்வைக்கு

ஆம் தலக் கைப்புள்ளக்கு ஆப்பு வைக்க சகல உரிமைகளோடு அவர் தம் தங்கமணி பதவியேற்க போகும் நேரத்தில் மக்களின் ஆப்புக்களை யார் வாங்குவது? தலக் கைப்புள்ள உயிரேன மதித்துப் போற்றிய கடமையை தொடரப் போவது யார்?

வருத்தப்படாத வாலிபர்கள் சங்கத்தில் தலக் கைப்புள்ளயின் அடுத்த வாரிசு யார்?

இந்த கேள்வியோடு தமிழ் கூறும் பதிவர்களைச் சந்தித்தோம்... உலகத் தரம் வாயந்த சர்வே நுணுக்கங்களை நுணுக்கி இந்த சர்வே மேற்கொள்ளப்பட்டது.. முடிவுகள் இதோ வந்து விட்டன..


அயல்நாடுகளில் வாழும் பதிவர்களின் கருத்து
இந்தியவாழ் பதிவர்களின் கருத்து

தமிழகவாழ் பதிவர்களின் கருத்து


பெங்களூர்வாழ் பதிவர்களின் கருத்து
சர்வே முடிவுகளைச் சொல்லியாச்சு...
நாளை பச்சோந்தி மக்கள் கட்சியின் (ப.ம.க) அடுத்த வாரிசு யார்? தொடரும் சரவே
மீண்டும் சந்திப்போமா... அது வரைக்கும் டாட்டாங்கோ

54 comments:

துர்கா|thurgah said...

அதிக ஆப்பு வாங்கும் ராயலுஅண்ணா வாழ்க ;-)

நாமக்கல் சிபி said...

இந்தக் கருத்துக் கணிப்பு முடிவுகளை நான் மனதார வரவேற்கிறேன்!

மக்கள் தீர்ப்பு! மகேசன் தீர்ப்பு!

முத்துகுமரன் said...

திக்கெட்டும் புகழ்சேர்க்கும் எங்க ஊர் ராமுக்கு வாழ்த்துகள். விழும் ஆப்புகள் பூமராங்காக வைப்பவர் மேல் திரும்பும் வண்ணம் கவச உடைகள் தயாராகி வருகின்றன என்பதை தெரிவிக்க கடமைப் பட்டுள்ளேன். :-)

J K said...

ஆரம்பிச்சுட்டீங்களா?...

அபி அப்பா said...

சர்வே எடுத்து குடும்பத்தை பிரிக்க நினைக்கும் தேவ் அவர்களை நான் கண்ணடிக்கிறேன்:-))

ஜி said...

இந்தக் கருத்துக்கணிப்பில் எள்ளளவும் சந்தேகமில்லை என்பது முடிவுகளில் இருந்தே தெளிவாகிவிட்டது. இது உலகம் எதிர்ப்பார்த்தச் சந்தேகத்திற்க்கு இடமில்லாத ஓர் முடிவு...

பெனாத்தல் சுரேஷ் said...

1. இந்தக் கருத்துகணிப்பு நடத்திய நிறுவனம் ஓசி பீல் சன் என்று கச்சேரியார் கூறுகிறார். அது உலகப்புகழ் பெற்றதல்ல . உலகப்புகழ் பெற்ற நிறுவனமான ஓசி பீலா சன்னுக்கு நெருக்கமாக போலியாகத் தயாரிக்கப்பட்ட நிறுவனமாகத் தெரிகிறது.

2. கருத்துக்கணிப்பில் இடம்பெற்ற மக்களின் சாம்பிள் செட் என்ன? 1 நபரை வைத்து கணித்தால் புள்ளி சுத்தமாக எப்படி கணிக்க முடியும்?

3. கணிப்பில் இடம்பெற்றவர்கள் அனைவரும் வ வா சங்க குடும்பத்துக்குள்ளேயே இருக்கிறார்களே அது எப்படி? குடும்ப அரசியலை வ வா சங்கம் ஆதரிக்கிறதா?

4. மற்றவர்கள் என்பவர் யார் யார்? கச்சேரியாரின் பெயர் இதில் இடம் பெறாதது மர்மமாய் இருக்கிறது.

5. ஆப்பு வாங்க ராமைத் தயார்செய்வதற்கான முன்னோடியாகவே இக்கணிப்பு தோன்றுகிறது.

6. கச்சேரியார் தன் கட்சியில் என்ன வேண்டுமானாலும் செய்துகொள்ளட்டும். ஏன் எங்கள் உள்கட்சி விவகாரங்களில் தலையிட வேண்டும்?

நியாயஸ்தன் said...

பாவம்பா, ராம்

Anonymous said...

5. ஆப்பு வாங்க ராமைத் தயார்செய்வதற்கான முன்னோடியாகவே இக்கணிப்பு தோன்றுகிறது.
//

ரிபிட்டேய்


M

Anonymous said...

5. ஆப்பு வாங்க ராமைத் தயார்செய்வதற்கான முன்னோடியாகவே இக்கணிப்பு தோன்றுகிறது.
//

ரிபிட்டேய்


M

துர்கா|thurgah said...

//. ஆப்பு வாங்க ராமைத் தயார்செய்வதற்கான முன்னோடியாகவே இக்கணிப்பு தோன்றுகிறது.//

இப்பொ மட்டும் அவரு ஆப்பு வாங்கமாலா இருக்கார்??!

Anonymous said...

Thurga,
yarunga athu ramin appu vanghum MALA ?

Kamali

மஞ்சூர் ராசா said...

என்றாவது பதிந்தாலும் வலைப்பதிவராக நான் இருக்கிறேன். ஆனாலும் என்னிடம் கருத்துக்கேட்கப்படவில்லை. இது போலவே பலரிடமும். நண்பர் பெனாத்தலார் சொல்வது போல இது குடும்பத்திற்குள்ளெயே நடந்த கணிப்பு என்பது வெட்டவெளிச்சமாக தெரிகிறது.

இலவசக்கொத்தனார் said...

வைகைப் புயலான ராயலுக்கு மதுரையில் எவ்வளவு ஆதரவு எனப் போடாததுக்குக் காரணம் என்ன?

உம்ம கச்சேரிக்கு அங்க பிராஞ்ச் கூட கிடையாதே? அப்புறம் என்ன கவலை?

இலவசக்கொத்தனார் said...

மற்றபடி எல்லோருக்கும் தெரிந்த ஒரு விஷயமான - கைப்புள்ளையின் சங்க வாரிசு ராயல்தான் என்ற விபரம் தெரிவதற்காக இப்படி ஒரு சர்வே எடுத்ததுக்கான செலவு சங்க நிதியை தேவையில்லாத ஒரு வேலைக்கு செலவு செய்வதாக பொருளாளர் என்ற முறையில் உங்கள் மீது குற்றச்சாட்டு வந்துள்ளதே.

அதற்கு உங்கள் பதில் என்ன?

செந்தழல் ரவி said...

ராமுக்கு ஆப்பு வெக்குறதா முடிவு எடுத்துட்ட பிறகு அதை யாரால் மாற்ற முடியும் ?

கொடுங்க கைப்புள்ள பதவிய...நேம் ட்ரான்ஸ்பர் எல்லாம் கரீக்ட்டா இருக்கனும்...ஆமாம் சொல்லிட்டன்

இலவசக்கொத்தனார் said...

இந்த பெயர் மாற்றத்திற்கான முத்திரைத்தாள் கட்டணத்தைச் சங்கம் கட்டுமா? அல்லது போலி முத்திரைத்தாள்தானா?

இராம் said...

சங்கத்துக்காரவுங்களை கலாய்க்க அவங்க சங்கத்திலே இருக்கனும்? நீங்கத்தான் சங்கத்து விட்டு லீவுலே போயச்சாசே? அப்புறம் எதுக்கு இந்த விளம்பர பதிவு..???

தேவ் | Dev said...

இங்கு வருகை தந்து கச்சேரி கருத்துக் கணிப்பினை மதித்து சங்கத்தின் அடுத்த வாரிசு ராம் அவர்களை முதலில் வாழ்த்திய துர்கா,தளபதி சிபி, முத்துக்குமரன்,தம்பி ஜி,அனானி, ஆகியோர்க்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள் பாராட்டுக்கள்

தேவ் | Dev said...

//ஆரம்பிச்சுட்டீங்களா?... //

ஆமா பர்ஸ்ட் வ.வா.சங்கம் அடுத்து ப.ம.க... அப்புறம் ப.கா.ச, அமுக... அப்படின்னு சர்வே தொடரும்

தேவ் | Dev said...

//சர்வே எடுத்து குடும்பத்தை பிரிக்க நினைக்கும் தேவ் அவர்களை நான் கண்ணடிக்கிறேன்:-)) //

இதுல்ல குடும்பம் எங்கய்யா வந்துச்சு? நல்லாப் போயிட்டு இருக்க கப்பலைக் கரைக்கு இழுக்கப் பாக்குறீயளே அபி அப்பா.. வெரி பேட்

தேவ் | Dev said...

//1. இந்தக் கருத்துகணிப்பு நடத்திய நிறுவனம் ஓசி பீல் சன் என்று கச்சேரியார் கூறுகிறார். அது உலகப்புகழ் பெற்றதல்ல . உலகப்புகழ் பெற்ற நிறுவனமான ஓசி பீலா சன்னுக்கு நெருக்கமாக போலியாகத் தயாரிக்கப்பட்ட நிறுவனமாகத் தெரிகிறது. //

இது அடிப்படையில் ஆதாரமற்ற குற்றச்சாட்டு... ஓசி பீல்சன் பீல் பண்ணிய கருத்துக் கணிப்பு மட்டுமே சென்னைக் கச்சேரியில் வரும் என்பதை உறுதியாகச் சொல்லிக்கொள்கிறோம்.

//2. கருத்துக்கணிப்பில் இடம்பெற்ற மக்களின் சாம்பிள் செட் என்ன? 1 நபரை வைத்து கணித்தால் புள்ளி சுத்தமாக எப்படி கணிக்க முடியும்?//

இப்படி எடக்கு மடக்காக் கேட்டா நாங்க பதில் சொல்லமாட்டோம் ஆமா... செட் ஆம் செட் என்னப் பெரிய சேவிங் சாம்பிள் செட்... இது பத்திரிக்கைச் சுதந்திரத்தைக் கேலிச் செய்ய முயலும் இடக்கானக் கேள்வி என்பதை மட்டும் மக்களுக்கு ஆணித் தரமாய் சொல்லிக் கொள்கிறோம்

தேவ் | Dev said...

//3. கணிப்பில் இடம்பெற்றவர்கள் அனைவரும் வ வா சங்க குடும்பத்துக்குள்ளேயே இருக்கிறார்களே அது எப்படி? குடும்ப அரசியலை வ வா சங்கம் ஆதரிக்கிறதா?//

சென்னைக் கச்சேரி சங்கம் சாரா பதிவு.. இதில் அரசியல் கலக்க நினைப்பது பெனத்தலாரின் விஷமத்தனம் இதை அகில உலக இணைய சர்வேயர்கள் சங்கம் கண்டப்படி கண்டிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.

//4. மற்றவர்கள் என்பவர் யார் யார்? கச்சேரியாரின் பெயர் இதில் இடம் பெறாதது மர்மமாய் இருக்கிறது.//

மற்றவர்களுக்கு விளக்கம் கேட்பது தமிழுக்கு நீங்கள் செய்யும் துரோகமில்லையா பெனத்தாலாரே..

கச்சேரியார் கட்சியறியார் என்பதை அறிந்தும் இப்படி நீங்கள் பேசுவது சிறுபிள்ளைத்தனம் அல்லவா

தேவ் | Dev said...

//5. ஆப்பு வாங்க ராமைத் தயார்செய்வதற்கான முன்னோடியாகவே இக்கணிப்பு தோன்றுகிறது.//

இது மக்கள் தீர்ப்பு தம்பி ராம் மக்கள் மனம் கொண்டார்.. மக்கள் கருத்துக் கணிப்பில் தம்பி ராம் மீது கொண்ட பாசத்தினையும் நம்பிக்கையையும் வெளிப்படுத்தி உள்ளனர். அவர் எத்தனை ஆப்புக்களையும் தாங்கி அட்லாஸ்களுக்கு அட்லாஸக திகழ்வார் என நம்புகின்றனர். இதில் சந்தேகமான உள்குத்துக்கள் எழுப்புவது அபத்தமான வாதம்.

//6. கச்சேரியார் தன் கட்சியில் என்ன வேண்டுமானாலும் செய்துகொள்ளட்டும். ஏன் எங்கள் உள்கட்சி விவகாரங்களில் தலையிட வேண்டும்? //

கச்சேரி தன் கடமையைச் செய்கிறார்.. அவ்வளவே இதில் கோபம் எதற்கு


ஸ்ப்ப்பாஆஆ.. சர்பத் எங்கே? பெனாத்தல்ஸ் இத்தோட நிறுத்திக்குவோம் அது தான் உங்களுக்கு எனக்கு படிக்கறவங்களுக்கும் நல்லது...

தேவ் | Dev said...

வாங்க நியாயஸ்தன், கமலி நீங்க எல்லாரும் ராம் தம்பிக்குச் சப்போர்ட் தானே

தேவ் | Dev said...

//என்றாவது பதிந்தாலும் வலைப்பதிவராக நான் இருக்கிறேன். ஆனாலும் என்னிடம் கருத்துக்கேட்கப்படவில்லை. இது போலவே பலரிடமும். நண்பர் பெனாத்தலார் சொல்வது போல இது குடும்பத்திற்குள்ளெயே நடந்த கணிப்பு என்பது வெட்டவெளிச்சமாக தெரிகிறது.
//

தல,

இந்தக் கருத்துக் கணிப்பு மிஸ் பண்ணிட்டீங்கன்னா நோ ப்ராப்ளம் அடுத்து நம்ம ப.ம.க கருத்துக் கணிப்புக்கு கரெக்ட்டா வந்துருங்க... அதுக்காக இப்படி எல்லாம் கோபப்படக் கூடாது... ஓ.கே

தேவ் | Dev said...

//வைகைப் புயலான ராயலுக்கு மதுரையில் எவ்வளவு ஆதரவு எனப் போடாததுக்குக் காரணம் என்ன? //

வைகைப் புயல் தலக் கைப்புள்ளக்கு மாமன்னன் 12ம் புலிக்கேசி புல் மனத்தோடு வாழ்த்திக் கொடுத்த பட்டம் அதை அதற்குள் டிரான் ஸ்பர் செய்து உள்கட்சி பூசல் செய்ய விழையும் உங்கள் சதியை நாட்டுக்கு கச்சேரி கட்டாயம் எடுத்துச் சொல்ல வேண்டி வரும்.... ( மருதைக் கேள்வியைக் கேட்டச் சாக்குல்ல கொத்ஸ் சிக்குனார் இல்ல சிக்குனார் இல்ல)

//உம்ம கச்சேரிக்கு அங்க பிராஞ்ச் கூட கிடையாதே? அப்புறம் என்ன கவலை? //

மக்கள் நெஞ்சங்களில் பிராஞ்ச், ரூட், ப்ரூட் , பிளவர் என ஒரு நிரந்தர ட்ரியாக கச்சேரி வளர்ந்திருப்பதை அறியாதவர் போல் கொத்ஸ் பேசுவது ஏனோ?

தேவ் | Dev said...

//மற்றபடி எல்லோருக்கும் தெரிந்த ஒரு விஷயமான - கைப்புள்ளையின் சங்க வாரிசு ராயல்தான் என்ற விபரம் தெரிவதற்காக இப்படி ஒரு சர்வே எடுத்ததுக்கான செலவு சங்க நிதியை தேவையில்லாத ஒரு வேலைக்கு செலவு செய்வதாக பொருளாளர் என்ற முறையில் உங்கள் மீது குற்றச்சாட்டு வந்துள்ளதே.

அதற்கு உங்கள் பதில் என்ன? //

குற்றம் சாட்டப்படுவதும் பின்னர் நிரபராதி (நான்) நிதி தேவன் சபையில் குற்றம் அற்றவன் என நிருபீக்கப் பட்டு விடுதலையாவ்தும் வாடிக்கை தானே கொத்ஸ்.....

தேவ் | Dev said...

//ராமுக்கு ஆப்பு வெக்குறதா முடிவு எடுத்துட்ட பிறகு அதை யாரால் மாற்ற முடியும் ?

கொடுங்க கைப்புள்ள பதவிய...நேம் ட்ரான்ஸ்பர் எல்லாம் கரீக்ட்டா இருக்கனும்...ஆமாம் சொல்லிட்டன்//

பொது குழு கூட்டியாச்சாம் இல்ல... அதுல்ல அதுப் பத்தி எல்லாம் பேசி முடிவுக்கும் வந்தாச்சாம். :)))

இலவசக்கொத்தனார் said...

//வைகைப் புயல் தலக் கைப்புள்ளக்கு மாமன்னன் 12ம் புலிக்கேசி புல் மனத்தோடு வாழ்த்திக் கொடுத்த பட்டம் //

அவரு புல் மனதோடு இருக்கும் போது குடுத்தாரா? மப்பு கலைஞ்ச உடனே அதை வாபஸ் வாங்கிக்கிட்டாரு. அடுத்தா நாள் புல் ஆகும் போது பக்கத்தில் ராயல் இருந்திச்சா. அதை அவரு கிட்ட குடுத்துட்டாரு. இந்த வரலாறு கூட தெரியாத சின்ன பசங்க கிட்ட பேச வேண்டிய நிலமை எனக்கு வந்திருச்சே. மக்கள், நீங்களே சொல்லுங்க. அரண்மணையில் ராயல் இருக்க சான்ஸ் அதிகமா அல்லது கைப்ஸா?

//அதை அதற்குள் டிரான் ஸ்பர் செய்து உள்கட்சி பூசல் செய்ய விழையும் உங்கள் சதியை நாட்டுக்கு கச்சேரி கட்டாயம் எடுத்துச் சொல்ல வேண்டி வரும்.... //

இந்த பட்டம் பரிசு எல்லாம் சங்கத்தின் தல என்ற முறையில் கிடைத்தது. ரிட்டயர் ஆகிட்டுப் போகும் போது எடுத்துக்கிட்டுப் போக முடியாது. மக்கள்ஸ் எல்லாம் அடுத்த தல ராயல்தான்னு சொல்லியாச்சே. அப்புறம் இந்த பட்டமெல்லாம் அவருதுதானே. ஒரு வேளை அவர் வரக்கூடாதுன்னு நீர் எதாவது சதி பண்ணறீரா?

//( மருதைக் கேள்வியைக் கேட்டச் சாக்குல்ல கொத்ஸ் சிக்குனார் இல்ல சிக்குனார் இல்ல)//

ஆக மொத்தம் கேட்ட கேள்விக்கு பதிலைக் காணும். இதுல இது வேற!!

இலவசக்கொத்தனார் said...

//மக்கள் நெஞ்சங்களில் பிராஞ்ச், ரூட், ப்ரூட் , பிளவர் என ஒரு நிரந்தர ட்ரியாக கச்சேரி வளர்ந்திருப்பதை அறியாதவர் போல் கொத்ஸ் பேசுவது ஏனோ?//

மனதில் இடம் அப்படின்னு என்னான்னு தெரியாதா ராசா? கச்சேரிக்கு மனதில்தான் இடம் அப்படின்னு நீயே ஒத்துக்கிட்டா சரிதான்.

ஆனாலும் கேட்ட கேள்விக்கு பதில் வரலையே....

இலவசக்கொத்தனார் said...

//குற்றம் சாட்டப்படுவதும் பின்னர் நிரபராதி (நான்) நிதி தேவன் சபையில் குற்றம் அற்றவன் என நிருபீக்கப் பட்டு விடுதலையாவ்தும் வாடிக்கை தானே கொத்ஸ்.....//

எல்லாரும் நீதி தேவன் கிட்ட போகும் போது நீர் மட்டும் நிதிதேவன் கிட்ட போறீரே, அப்பவே தெரியுது உம்ம லட்சணம்.

//நிருபீக்கப் பட்ட//

ஐய்யய்யோ, என்ன இது நேஷனல் லேங்குவேஜ் ஆப் தமிழ் பிளாக்ஸ்ல பேசறீங்க. வேண்டாம்ப்பூ.

அபி அப்பா said...

//தேவ் | Dev said...
//சர்வே எடுத்து குடும்பத்தை பிரிக்க நினைக்கும் தேவ் அவர்களை நான் கண்ணடிக்கிறேன்:-)) //

இதுல்ல குடும்பம் எங்கய்யா வந்துச்சு? நல்லாப் போயிட்டு இருக்க கப்பலைக் கரைக்கு இழுக்கப் பாக்குறீயளே அபி அப்பா.. வெரி பேட்//

தேவ்! நல்லா கவனிங்க, நான் கண்டிக்கலை, கண்ணடிக்கிறேன்ன்னு தான் சொன்னேன்:-)))

பொன்ஸ்~~Poorna said...

'மதுரை வீரன், பெங்களூர்த் தங்கம், சங்கம் கண்ட சிங்கம் அண்ணன் ராயல் ராம் வாஔஔஔழ்க!!'
என்று சொல்லத் தான் வந்தேன்.

ஆனா, அடுத்து பாகச, அமுக, எல்லாம் இழுக்கிறதா பேச்சு அடிபடுறதப் பார்க்கிறப்போ,

'வ.வா.சவின் ஆரம்பத்திலிருந்தே சேவை செய்து வரும் குங்குமம் கண்ட குத்துவிளக்கு, தாய்க்குலத்தின் தீராத ஆதரவு பெற்ற தென்பாண்டிச் சிங்கம், ஆராய்ச்சித் திலகம் ஜொள்ளுபாண்டியார் மனம் வருந்துமாறு சென்னையில் கூட அவருக்கு ஒரு சீட்டு கூட ஒதுக்காததற்கு என் தீவிர கண்டனங்களைப் பதிந்து கொண்டு வடை பெறுகிறேன்..'

வாழ்க பாண்டியின் புகழ்! வளர்க அவரின் தமிழ்த் தொண்டு..!! ;)

சந்தோஷ் aka Santhosh said...

எலேய் ராயலு கலக்கிப்பூட்டேலே. ஆப்புக்களை வாங்க எரியா வாரியா எப்பலே வரே?

ulagam sutrum valibi said...

ஏன் அப்பு,
இங்கே த.மு.க ன்னு தலை சிறந்த கழகம் ஒன்னு இருக்கிறது உமது கண்ணுக்கு தெரியவில்லையா? அல்லது இருட்டடைப்பு செய்கிரீர்களா? இது கண்டிக்கப் படவேண்டியது!!!

ulagam sutrum valibi said...

ஏன் அப்பு,
இங்கே த.மு.க ன்னு தலை சிறந்த கழகம் ஒன்னு இருக்கிறது உமது கண்ணுக்கு தெரியவில்லையா? அல்லது இருட்டடைப்பு செய்கிரீர்களா? இது கண்டிக்கப் படவேண்டியது!!!

வெட்டிப்பயல் said...

//நாமக்கல் சிபி said...

இந்தக் கருத்துக் கணிப்பு முடிவுகளை நான் மனதார வரவேற்கிறேன்!

மக்கள் தீர்ப்பு! மகேசன் தீர்ப்பு! //

ரிப்பீட்டே!!!

கோபிநாத் said...

ஆப்புகள் ராம்...ச்சீ...வாழ்த்துக்கள் மாப்பி ;))

Syam said...

ராயலுக்கு மஞ்ச தண்ணி ஊத்தி மாலை போட்டுட்டீங்க.....:-)

பெருசு said...

சங்கத்தின் மூத்த குடிமகன்? என்ற முறையில் ராயலுக்கு ஒரு ராயல்சல்யூட் அனுப்பி வைக்கிறேன்.

மென்மேலும் ஆப்புகளை வாங்கி
சங்கத்தின் பேரையும் பெருமையையும் கட்டிக்காப்பாத்த வேண்டுமாய் ராயலை
கேட்டுக் கொள்கிறேன்.

ரெடி ஸ்டார்ட் ம்ஜிக்.

ulagam sutrum valibi said...

எங்க புள்ளைக்கு அவ்வளவு மவுசு
அது தான் கருத்து கணிப்பு எல்லாம்.
அங்கு என்ன பொசுங்கர வாசம் வருது.

கீதா சாம்பசிவம் said...

முதல்லே நிரந்தரத் தலைவ(லி)வியான என்னைக் கேட்காமல் கருத்துக் கணிப்பு நடத்தியதே தப்பு. அதுக்கு அப்புறம் வெளியிடும்போதாவது ஒரு வார்த்தை சொல்லி இருக்க வேண்டும். அதுவும் சொல்லலை. இப்போக் கருத்துக் கணிப்பு வெளியிட்டு ஒரு அப்பாவி ஆன எப்போதும் ரஞ்சிதமான நினைப்புடன் இருக்கும் ராயலின் அப்பாவித் தனத்தைப் பயன்படுத்தி பகைமையைத் தூண்டுவதை வன்மையாகக் கண்டிக்கிறேன். :))))))))))))))))))))))))))))

கீதா சாம்பசிவம் said...

என் பக்கம் அபி அப்பா, அபி அம்மா, அபி பாப்பா, டைகர் என்று ஒரு பட்டாளமே தயார் நிலையில் இருக்கிறது என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன். :D

தேவ் | Dev said...

//இந்த பெயர் மாற்றத்திற்கான முத்திரைத்தாள் கட்டணத்தைச் சங்கம் கட்டுமா? அல்லது போலி முத்திரைத்தாள்தானா? //

போலிகளை கச்சேரி என்றும் ஆதரித்தது கிடையாது...

கட்டணம் சங்கத்தின் உள்விவகாரம் அது குறித்து முடிவு எடுக்கவேண்டிய அதிகாரம் சங்கப் பொதுக்குழுவினைச் சாரும்...

தேவ் | Dev said...

//சங்கத்துக்காரவுங்களை கலாய்க்க அவங்க சங்கத்திலே இருக்கனும்? நீங்கத்தான் சங்கத்து விட்டு லீவுலே போயச்சாசே? அப்புறம் எதுக்கு இந்த விளம்பர பதிவு..??? .//

ஆகா சின்னத் தல இன்னும் அதிகாரம் உங்களிடம் முழுசா வரவே இல்லை... அதுக்குள்ளே பத்திரிக்கையாளர்கள் மீது கோபம் கொள்ளக் கூடாது.. அமைதி அமைதி...

தேவ் | Dev said...

//தேவ்! நல்லா கவனிங்க, நான் கண்டிக்கலை, கண்ணடிக்கிறேன்ன்னு தான் சொன்னேன்:-))) //

ஆகா இப்போத் தான் உண்மையாவேக் குடும்பத்துக்குள்ளே குழப்பம் வரப் போகுதுய்யா :((((:))))))

தேவ் | Dev said...

இந்தக் கருத்துக் கணிப்பினை சின்னத் தல ராயல் ராம் அவர்களின் முடி சூட்டு விழாவாக ஏற்று சின்னத் தல யை வாழ்த்திய சங்கத்தின் மூத்த குடிமகன் பெருசு, இளைய தளபதி வெட்டி, நாட்டாமை ஸ்யாம், பங்காளி சந்தோஷ், கிடேசன் பார்க் கோபி ஆகியோர்க்கு மனமார்ந்த நன்றிகள்

தேவ் | Dev said...

//'மதுரை வீரன், பெங்களூர்த் தங்கம், சங்கம் கண்ட சிங்கம் அண்ணன் ராயல் ராம் வாஔஔஔழ்க!!'
என்று சொல்லத் தான் வந்தேன். //

வருகைக்கு நன்றி :)

//ஆனா, அடுத்து பாகச, அமுக, எல்லாம் இழுக்கிறதா பேச்சு அடிபடுறதப் பார்க்கிறப்போ, //

கருத்துக் கணிப்பில் யாரையும் விட்டு விட முடியுமா?

//'வ.வா.சவின் ஆரம்பத்திலிருந்தே சேவை செய்து வரும் குங்குமம் கண்ட குத்துவிளக்கு, தாய்க்குலத்தின் தீராத ஆதரவு பெற்ற தென்பாண்டிச் சிங்கம், ஆராய்ச்சித் திலகம் ஜொள்ளுபாண்டியார் மனம் வருந்துமாறு சென்னையில் கூட அவருக்கு ஒரு சீட்டு கூட ஒதுக்காததற்கு என் தீவிர கண்டனங்களைப் பதிந்து கொண்டு வடை பெறுகிறேன்..'

வாழ்க பாண்டியின் புகழ்! வளர்க அவரின் தமிழ்த் தொண்டு..!! ;) //

அட என்ன பொன் ஸ் அக்கா, விவரம் தெரியாமப் பேசுறீங்க... தமிழ்நாட்டுக் கருத்துக் கணிப்பு மேட்டரைச் செவ்வனே செய்து முடித்து முடிவுகளை கச்சேரியிடம் ஓப்படைத்து விட்டு தானே பாண்டி பஹாமாஸ் தீவிற்கு விடுப்பில் சென்றுள்ளார்.. அது தெரியாம நீங்க கொளூத்திப் போடுறீங்க..:)))

தேவ் | Dev said...

//ஏன் அப்பு,
இங்கே த.மு.க ன்னு தலை சிறந்த கழகம் ஒன்னு இருக்கிறது உமது கண்ணுக்கு தெரியவில்லையா? அல்லது இருட்டடைப்பு செய்கிரீர்களா? இது கண்டிக்கப் படவேண்டியது!!!

//

வாங்க உலகம் சுற்றும் வாலிபி, த,மு,க கருத்துக் கணிப்பு தற்சமயம் நடந்துக் கொண்டிருக்கிறது.. விரைவில் முடிவுகள் வரும் அதுக்குள்ளே நோ டென்சன்

தேவ் | Dev said...

//முதல்லே நிரந்தரத் தலைவ(லி)வியான என்னைக் கேட்காமல் கருத்துக் கணிப்பு நடத்தியதே தப்பு. அதுக்கு அப்புறம் வெளியிடும்போதாவது ஒரு வார்த்தை சொல்லி இருக்க வேண்டும். அதுவும் சொல்லலை. இப்போக் கருத்துக் கணிப்பு வெளியிட்டு ஒரு அப்பாவி ஆன எப்போதும் ரஞ்சிதமான நினைப்புடன் இருக்கும் ராயலின் அப்பாவித் தனத்தைப் பயன்படுத்தி பகைமையைத் தூண்டுவதை வன்மையாகக் கண்டிக்கிறேன். :))))))))))))))))))))))))))))
//

அன்னையே ஆவேசம் வேண்டாம்...அமைதி.. தங்கள் விழி அசைந்தால் அந்த வேகம் தாங்காமல் எதிரிகளின் விதி முடிந்து விடும் என்பதை நாடறியாதா.. இந்தக் கருத்துக் கணிப்பு எல்லாம் சின்ன விசயம் என்று கருத்தில் கொண்டு தான் உலக ச்மாதானப் பயணத்தில் தங்கள் பொன்னான நேரத்தை வீணாக்கவில்லை.. தவறாக இருப்பின் மன்னியுங்கள்... ஆனால் டைகர் எல்லாம் டூ மச்... நான் தாங்க மாட்டேன் அன்னையே

தேவ் | Dev said...

கொத்ஸ்,

தலக் கைப்புள்ள என்றுமே நாடும் நகரம் காடு கரை சந்து பொந்து இன்டு இடுக்கு இப்படி எல்லா இடங்களிலும் செல்வாக்கு நிறைந்தவர்... அப்படிப்பட்ட தல மீது நீங்கள் சேறை வாரி இறைப்பது அழகா?

பெரியவர்கள் விலகி சிறியவர்கள் வாழ வழி காட்டும் அந்த உத்தமப் புத்திரனின் நற் புகழுக்கு களங்கம் கற்பிக்கும் வகையில் நீங்கள் தெரிவித்துள்ள கருத்துக்களுக்காக தமிழ் பதிவுலகம் உங்களை என்றுமே மன்னிக்காது.. ( ஸ்ப்ப்ப்ப்பா எப்படி?)

தேவ் | Dev said...

ம்ம்ம் மனதில் இடம் பிடிப்பது என்பது என்ன கோயம்பேட்டில் இருந்து புறப்படும் அரசு விரைவுப் பேரூந்தில் துண்டு போட்டு இடம் பிடிப்பது போல் சாதரண விஷ்யமா? தேவைப்பட்டால் இதற்கும் ஒரு கருத்துக் கணிப்பு நடத்தச் சென்னைக் கச்சேரி தயார் எனபதை தெரிவித்துக் கொள்கிறோம்...

கொத்தனார் இந்த் லட்சிய கருத்துக்கணிப்புகளை அலட்சியம் செய்வதன் மூலம் தமிழக வரலாற்றில் மாபெரும் பிழை செயதுக் கொண்டிருக்கிறார் எனபது டூமாரோ ஹ்ஸ்ட்டிரி ஸ்டூண்ட் படிக்க வேண்டி வரலாம் என்று எச்சரிக்கைச் செய்கிறேன்..

தேவ் | Dev said...

////குற்றம் சாட்டப்படுவதும் பின்னர் நிரபராதி (நான்) நிதி தேவன் சபையில் குற்றம் அற்றவன் என நிருபீக்கப் பட்டு விடுதலையாவ்தும் வாடிக்கை தானே கொத்ஸ்.....//

எல்லாரும் நீதி தேவன் கிட்ட போகும் போது நீர் மட்டும் நிதிதேவன் கிட்ட போறீரே, அப்பவே தெரியுது உம்ம லட்சணம்.

//நிருபீக்கப் பட்ட//

ஐய்யய்யோ, என்ன இது நேஷனல் லேங்குவேஜ் ஆப் தமிழ் பிளாக்ஸ்ல பேசறீங்க. வேண்டாம்ப்பூ.

//

கொத்தனாரே...

நீதி தேவன் மயங்கினாலும் நிதி தேவன் மயங்க மாட்டான்... நிதி தேவன் யாரேன்று இன்னுமா குழப்பமா? தனியாகக் கேளுங்கள் விவரம் சொல்லுகிறேன்..


அது சங்கக் காலத்து தமிழ் வழக்கு.. நக்கல் செய்ய வேண்டாம்..அதுக் குறித்த ஓலைச் சுவடிகளைக் காலம் வரும் போது வெளியிட சென்னைக் கச்சேரி தயாராகவே உள்ளது என்பதை உங்களிடம் இந்த நேரத்தில் உறுதிபடக் கூறி கொள்ளுகிறேன்..

tamil10