Monday, May 07, 2007

வாஜி வாஜி சிவாஜி - ரஜினி ரசிகர்களின் வரவேற்பு

சிவாஜி - இந்த வருடத்தின் மிகப் பெரிய எதிர்பார்ப்பு..

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் ஷ்ங்கர் இயக்கத்தில் ஏவி.எம் தயாரிப்பில் வெளிவர இருக்கும் திரைப்படம்...

பாடல்கள் வெளிவந்த நிலையில்.. இன்னும் படத்தின் வெளியீட்டு நாள் குறித்தான எந்த திடமானத் தகவலும் இல்லை.. ஆனாலும் மே 17 பாஸ் பரிவாரங்களோடு பரிவட்டம் கட்ட வருவதாய் செய்திகள் கசிந்த வண்ணம் உள்ளன.

தலைவர் படமென்றால் விளம்பரங்கள் பொங்கி வழியும் ஆனால் பெரிய பட்ஜெட் படமென்பதாலோ இல்லை ஷங்கரின் தாமதத்தால் ஏற்பட்ட மனத்தாங்கலினாலோ ஏவி.எம் சிவாஜிக்கு அதிக விளம்பரம் கொடுக்கவில்லை என்பது ரஜினி ரசிகர்களின் கருத்து..

ஏவி.எம் கொஞ்சம் அசந்தா என்ன நம்ம ரசிக கண்மணிகள் களத்தில் உற்சாகமாக் குதிச்சிட்டாங்க.. கூடவே சில வர்த்தக நிறுவனங்களும் நம்ம பாஸ் வரவேற்புக்குத் தோரணம் கட்டி கலக்கிட்டாங்க..

சென்னையின் பல்வேறு பகுதிகளிலும் சிவாஜி டிஜிடல் விளம்பர போர்ட்கள் மன்ற மக்களால் அதிக அளவில் வைக்கப் பட்டு வருகின்றன... வேறு எந்தப் படத்திற்கும் இல்லாத அளவுக்கு வரும் முன்னே இந்தப் படத்திற்கு இப்படி கலக்கல் ஆரம்ப்பம்... அது தான் ரஜினி...

அந்தப் படங்கள் உங்கள் பார்வைக்கு

அண்ணா நகர் பகுதியில் சிவாஜி வெளியீடை முன்னிட்டு வைக்கப்பட்டிருக்கும் பேனரும் ரசிகர்களின் கொண்டாட்டங்களும்


கோடம்பாக்கம் பகுதியில் ஒரு சிவாஜி வரவேற்பு பேனர்


சிவாஜி வெளியீடு முன்னிட்டு பயணியர் நிழல் குடைச் சீரமைப்பு.


லேண்ட் மார்க் வைத்திருக்கும் சிவாஜி பேனர்


கோக் விளம்பரங்களில் சிவாஜி
படங்கள் நன்றி SIMPLE SUNDAR -RAJINIFANS.COM
இது மலேசியாத் திரையரங்குகளில் வைக்கப் படவிருக்கும் சிவாஜி வரவேற்பு பேனர்.

கடைசியாக் கிடைத்தத் தகவல் சிவாஜி மே 26 அன்று வெள்ளித் திரைகளில் வெளிச்சம் பரப்புமாம்

10 comments:

.:: மை ஃபிரண்ட் ::. said...

நானே நானே!
நானே
ஃபர்ஸ்ட்டூ.. :-D

.:: மை ஃபிரண்ட் ::. said...

மலேசிய திரையரங்குகளில் இப்படி சிம்பள் பேன்னரா?

ம்ம்.. இன்னும் டவுன் ஏரியாவுக்கு போகலை.. போனால் இப்படியெல்லாம் இருக்கான்னு பார்த்து சொல்றேன்.

.:: மை ஃபிரண்ட் ::. said...

இதையெல்லாம் கரேக்ட்டா செய்யுங்க்க.. அங்Kஏ செதுக்கலில் பக்கம் 78 மட்டும் மிஸ்ஸிங்.. :-(

Anonymous said...

இந்த நாடும் நாட்டு மக்களும் நாசமாய் போவார்கள்

anand said...

தேவ் நான் rajinifans.com member உங்க பதிவுகள் எல்லாம் super பாராட்டுக்கள் anand

Raja Shanmugam said...

தேதிய மாத்துங்க தல ஏவிம் 31 தேதி தான் சொல்லிபுட்டாங்க

தேவ் | Dev said...

ராஜா தேதியையும் மாத்தியாச்சு தலைவருக்கு சோக்காக் கட் அவுட்டும் வச்சாச்சு... மே 31 வருக தலைவர் தரிசன்ம் பெறுக....

உய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய் சும்மா விசில் ப்ராக்டீஸ்

Raja Shanmugam said...

///ராஜா தேதியையும் மாத்தியாச்சு தலைவருக்கு சோக்காக் கட் அவுட்டும் வச்சாச்சு... மே 31 வருக தலைவர் தரிசன்ம் பெறுக.. //

சூப்பரு அப்பு .அதைவிட மொட்டைதலை கெட்டப் கட் அவுட்டும் சூப்பர் இது கெட்டப் பார்க்கவே சீக்கிரம்(டிக்கட் கிடைத்தால்) படத்துக்கு போகனும் ..

Anonymous said...

tibia money tibia gold tibia item runescape money runescape gold tibia money tibia gold runescape gold runescape accounts tibia gold tibia money runescape money runescape gp buy runescape gold tibia gold tibia item buy runescape money runescape gold runescape items tibia money tibia gold

Anonymous said...

tibia money tibia gold tibia item runescape money runescape gold tibia money tibia gold runescape gold runescape accounts tibia gold tibia money runescape money runescape gp buy runescape gold tibia gold tibia item buy runescape money runescape gold runescape items tibia money tibia gold

tamil10