Monday, May 21, 2007
சந்திரமுகி ரஜினி படமா?
2005 ஒரு கோடைக் காலக் காலைப் பொழுதில் நெருக்கியடிக்கும் கும்பலில் நானும் ஒருவனாக நின்று ஆமாம் நின்ற படியே ரஜினிகாந்த் நடிப்பில் வெளிவந்த சந்திரமுகி படத்தின் முதல் காட்சிப் பார்த்து வெளியில் வந்தேன்...
என்னோடு படம் பார்த்து வெளியில் வந்த சிறுவர்களின் லக்க லக்க.. கோஷங்கள் படத்தின் வெற்றிக்கு கட்டியம் கூறுவதாக இருந்தாலும்..ரஜினியின் ரசிகர் கூட்டத்தில் ஒரு சாரார்க்கு சந்திரமுகி திருப்தியினை ஏற்படுத்தவில்லை என்பது நான் கண்கூடாகக் கண்ட உண்மை..
அதாவது இங்கு இந்தப் பதிவினைப் படிக்கும் மிஸ்டர்.பொதுஜனம் ஒரு விஷ்யத்தைக் கருத்தில் கொள்ளவேண்டும்..
ரஜினி என்ற நடிகருக்கு இருக்கும் ரசிகர்கள் இருவகைப் பட்டவர்கள்.. ரஜினியைத் திரையில் பார்த்து தலைவா என்றழைக்கும் கூட்டம் ஒன்று... திரைக்கு வெளியிலும் ரஜினியைத் தலைவராய் ஏற்று கொண்டவர்கள் இன்னொருக் கூட்டம்..
காலம் காலமாய் ரஜினிகாந்த இந்த இரண்டுக் கூட்டங்களையும் தன் படங்களின் மூலம் திருப்திப் படுத்தி வந்ததன் பயனாய் இருக் கூட்டமும் சேர்ந்து அவரை சூப்பர் ஸ்டார் என்ற உச்சப் பட்ச அந்தஸ்தில் 25 ஆண்டுகளுக்கும் மேலாக வைத்துக் கொண்டாடி வந்தார்கள்.
90களில் ரஜினிகாந்த தன்னையுமறியாமல் தன் படங்களில் பிரயோகித்த பஞ்ச் டயலாக்கள் மூலம் இந்த இரண்டாவது கூட்டத்தின் எதிர்பார்ப்புகளையும் ஆர்வங்களையும் அளவுக்கு அதிகமாய் வளர்த்து விட்டார்..ஒரு கட்டத்தில் திரைக்கு வெளியேயும் ரஜினியின் சூப்பர் ஸ்டார் அந்தஸ்து விரிய ஆரம்பித்தது இந்த இரண்டாம் வகைக் கூட்டத்தை அளவுக்கு அதிகமாய் வலுப் பெற செய்தது.
இது ரஜினியின் தனிப்பட்ட விருப்பமா? தானாய் அமைந்ததா அது தனி விவாதம்..
அண்ணாமலை.. ரஜினியின் திரை உலக வாழ்க்கையில் ஒரு திருப்புமுனை... பாட்சா ரஜினியை மட்டுமின்றி ரஜினியின் இரண்டாம் ( இங்கு இரண்டு என்பது தரம் பிரிப்பது அல்ல) வகை ரசிகர்களையும் அழைத்துச் சென்று விட்ட இடம் தமிழக அரசியல் போர்முனை... மாபெரும் இயக்கமான அதிமுகவைப் போர்கோலம் பூண்டு சந்திக்க வேண்டிய கட்டாயம்... ரஜினியை விட அவர் ரசிகர்கள் ஆர்வமாய் போரில் பங்குபெற்றனர்... ஆர்வம் மட்டுமே அடுத்து வந்தப் போர்களுக்கு ஆகாது என்பது ரஜினி ரசிகர்கள் கற்ற பாடம்...
ரசிகர்களின் ஆர்வத்தை கட்டுப்படுத்த ரஜினி மேற்கொண்ட முயற்சியில் ஒன்று திரையில் தான் தோன்றுவதைக் குறைத்தது.. ஆனால் அது ரஜினி மீது ரஜினியின் போர்கோல ரசிகர்கள் அளவுக்கு பாசம் கொண்ட இன்னொரு பிரிவு ரசிகர்களை வாட்டியது... ரஜினி அவர்களுக்காக தன் ந்டிப்பைத் தொடர வேண்டியிருந்தது...
இரு தரப்பு ரசிகர்களையும் திருப்தி படுத்தும் விதமாக அவரால் பாட்சாவிற்கு அதாவது 1995ல் இருந்து 2002 வரை கொடுக்க முடிந்த படங்களின் எண்ணிக்கை வெறும் இரண்டு மட்டுமே
அருணாச்சல்ம் - 1997
படையப்பா - 1999
2002ல் ரசிகர்களுக்குத் தன் கருத்தைச் சொல்ல முயன்று எடுத்த பாபா ரசிகர்களைக் கடும் அதிருப்தியில் ஆழ்த்தியது.
இதற்கிடையிலும் ரஜினியின் பொது வாழ்க்கையில் அவரது ரசிகர்கள் பக்கபலமாய் நின்றனர்.. உதாரணம் 2002 ஆகஸ்ட் காவிரி போராட்டம்.. அங்கு திரண்ட ரசிகர் கூட்டம் அதற்கு சாட்சி... அங்கு வந்திருந்த ரசிகர் கூட்டம் திரைக்கு வெளியிலும் ரஜினியை தன் தலைவனாக அறிவித்தக் கூட்டம்...
இந்த நிலையில் 2005ல் ரஜினி நடித்த படம் சந்திரமுகி... முற்றிலும் தன் சூப்பர் ஸ்டார் இமேஜை உதறாவிட்டாலும் வழக்கமா விசில் பறக்கும் பஞ்ச் டயலாக்களை அறவே விட்டு... டிரேட் மார்க் சிக்ரெட்டை தவிர்த்து... விரல் அசைவு ஓசை எழுப்பும் மேஜிக் தவிர்த்து.. ஆர்ப்பாட்டமில்லாத கதை நாயகனாக ( கம்ர்ஷியல் தமிழ் சினிமா இலக்கணத்துக்கு உட்பட்டு சண்டை, டூயட் எல்லாம் இருந்தது) திரையில் தோன்றினார்... கிட்டத் தட்ட ரஜினியே பல ஆண்டுகளுக்கு முன் திரையில் நடித்த ஆயிரம் ஜென்மங்கள் கதாபாத்திரம் தான் சந்திரமுகியின் டாக்டர் சரவணன் கேரக்டரும்..
ரஜினியின் இந்த மாற்றம் அவருடைய திரை ரசிகர்களையும் வெகு ஜனங்களையும் வெகுவாகக் கவர்ந்தது.. தமிழக் மக்கள் குடும்பம் குடும்பமாகத் திரையரங்குகளை முற்றுகையிட்டு ..சந்திரமுகி வெற்றி வரலாறு படைத்தது அனைவரும் அறிவோம்...
ரஜினியின் எல்லாத் தரப்பு ரசிகர்களும் ரஜினி என்ற தனி மனிதனின் வெற்றியில் மகிழ்ந்தனர் ஆனாலும் சூப்பர் ஸ்டாருக்காகத் தெருவில் போர்கோலம் பூண்ட ரசிகர் பிரிவின் மனத்தில் லேசான நெருடல் இருந்தது நிஜம்...
அந்த நெருடலின் கேள்வி வடிவமே இந்தப் பதிவின் தலைப்பு... அப்படின்னா அடுத்தக் கேள்வி சிவாஜி ரஜினி படமா....? அடுத்து அதைப் பற்றியும் பேசுவோம் கொஞ்சம் கேப் விட்டு
Subscribe to:
Post Comments (Atom)
10 comments:
சந்திரமுகி தமிழ்ப்படமே! :))
ஒரிஜினலைப் பார்க்கும் பொழுது செய்யப்பட்ட மாற்றங்களைக் கருத்தில் கொண்டால் அது ரஜினி படமே.
சிவாஜி பற்றி பார்க்காமல் என்ன சொல்ல? பார்க்காமலேயே விமர்சனம் அதுவும் 1024 விமர்சனங்கள் எழுத நான் என்ன பெனாத்தலாரா?
தேவ்,
முதலிலே படம் தியேட்டருக்கு வந்து சேரட்டும்.... அப்புறம் டிசைட் பண்ணலாம்...
ஹி ஹி
தலைவா..
அடுத்த ரஜினி வாழ்க்கை வரலாறுக்கு நீங்க தான் ஆசிரியரா? நல்லா விரிவா அலசிருக்கீங்க.. :)
சந்திரமுகி எங்க ஜோ படமாச்சே!.. ;)
//பார்க்காமலேயே விமர்சனம் அதுவும் 1024 விமர்சனங்கள் எழுத நான் என்ன பெனாத்தலாரா? //
இது ப.ம.கவின் கொள்கைப் புயல் பெனத்தலார் மீது வீசப் படும் குற்றச்சாட்டா?
(அப்பாடா கொளுத்திப் போட்டாச்சுங்கோ)
//தேவ்,
முதலிலே படம் தியேட்டருக்கு வந்து சேரட்டும்.... அப்புறம் டிசைட் பண்ணலாம்...
ஹி ஹி //
ஜூன் 15 கண்டிப்பா படம் வந்துரும்.. கண்டிப்பா.. நிச்சயமா... போதுமா
//
அடுத்த ரஜினி வாழ்க்கை வரலாறுக்கு நீங்க தான் ஆசிரியரா? நல்லா விரிவா அலசிருக்கீங்க.. :) //
ஆகா கடல்ங்க அவர்.. நான் சும்மாக் கரையிலே நின்னு அலைகளின் ஆரவாரம் பாத்து ஆன்னு ஆச்சரியப்படுறேன் அவ்வளவே
//சந்திரமுகி எங்க ஜோ படமாச்சே!.. ;)//
ஜோவும் சந்திரமுகியில் நடித்திருந்தார் அல்லவா?
அதாவது சந்திரமுகி படத்தில ரஜினியில்ல யார் நடிச்சிருந்தாலும் கண்டிப்பா ஓடி இருக்கும் காரணம் கதை மற்றும் ஜோ நடிப்பு. இதுல ரஜினி என்ன பண்றாருனு எனக்கு தெரியல. அதே மாதிரி ஒரு விசயத்த குறைந்த செலவுலயோ அல்லது இருக்கறத வெச்சு அட்ஜஸ்ட் பண்ணி செஞ்சு பெஸ்ட்னு பேர் வாங்குனாதான் அதிசயம். அத விட்டுட்டு இருக்கறதுலயே பெஸ்ட் விசயங்கள ஒன்னு சேர்த்து ஒரு பொருள உருவாக்கி அது வெற்றியடைஞ்சிடுச்சுனு கொண்டாடறது ஒரு விசயமே இல்ல. தமிழகத்தின் மிகப்பெரிய நிறுவனம் தயாரிப்பு, சிறந்த இயக்குநர் இயக்கம், உலகின் முண்ணனி இசையமைப்பாளர் இசை அதுபோக எல்லா விசயங்களிலும் (மேக்கப், உடை) எல்லாதுலயும் சிறந்த நிறுவனங்களின் தயாரிப்பு. இப்டி எல்லா பெஸ்ட்டும் ஒன்னு சேர்ந்தா அந்த பொருள் ஓரளவுக்காவது பெஸ்ட்டாதான் இருக்கும். இதுல குறிப்பிட்ட ஒருத்தரோட பங்கு என்னனு எனக்கு தெரியலீங்க.அவர் சிறந்த நடிகர்தான் ஒத்துக்கிறேன் எப்போனா முன்னேறாதா காலத்துல குறைந்த பொருள் செலவுல தன்னுடைய நடிப்பு, சொந்த ஸ்டைல் இதெல்லாம் காட்டி நடிச்சு ஹிட் கொடுத்தப்ப நல்ல நடிகர்தான் ஒத்துக்கிறேன். இப்பவும் ஒரு பெயர் தெரியாத நிறுவனத்தில புது இயக்குநர் இயக்கத்துல வெறும் கதை மற்றும் அவரோட நடிப்ப மட்டும் நம்பி நடிச்சு புகழ் அடைஞ்சா ரொம்ப சந்தோசம் அத விட்டுட்டு எதுக்கு இவ்ளோ விளம்பரம் மற்றும் செலவுகள்னு புரியல. அப்புறம் இன்னொரு விசயம் சாதாரண நடிகர் பிரசாந்த் செலவு பண்ணி சிறந்த நிறுவனங்கள் சேர்ந்து தயாரிச்ச ஜீன்ஸ்கூட நல்லாதான் இருந்துச்சு.
ofcourse athu Jo padam..rajini oru main character avlovay..
@ anushya
I guess you have missed a vital point in your argument. I agree that Rajini used to act with new directors and producers in 80s and early 90s. Now, he does not act under the new directors. For example, if we want to construct a house with the cost of Rs.5 lakhs. What we do? We approach a certified engineer for approved a plan. Then we use mason (mastri) for constructing the house. Since the budget of the project is small and stake holders (users) are small, we really not need a big construction company. On the other hand, if government plans to construct a national highway with the cost of thousands of crores, they go with technically and financially strong team like L&T etc. They usually call for technical and financial bid. Because, the project deals with high budget and more stake holders (users-public). It is the same in rajinkanth movies. Now the cost of the movie is high and viewers (across the world) are more. So he has to go with technically adept people who has proven track record and well established production house who does not have financial problem. However, at the end, the movie has to sell under the brand name of Rajini kanth. It is like the manufacturers of FMCG (Fast moving consumer goods) are small scale industries, but the product is sold under the name of HLL. Because HLL has established name and end product will be as per the technical specification of HLL. So the consumer has faith on the product.
Neenga solara padi partha, Taj mahala katinathu shajahan illa…. Kothnaruthaaan ra mathi irruku….
In addition,
Chandramukhi kandipaga nalla kathai amzam ulla padam, yearu ndaithalum oodi irrukalam ……. AAana 156 theaters la NOOR naal ooda kudiya padama, Bangalore la 100 naal padam ooduchu.where already “aptha mithra” ran 365 days….. Krealavula 100 naal oduchu where mani chitra thazh wasr hit ….it ran 100 days about 50 theaters in andhra…. if any actor other than rajinkanth act in this movie, will it create this record…. So, here the brand name of rajini shines.
The bottom line is to provide best product, we need best people.
Sorry if I hurt you personally anywhere in this message, forgive me.
Selva
சந்திரமுகி கண்டிப்பாக ரஜினி படம் அல்ல. அது ஜோதிகா படம். நன்றாக ஓடும் என்று தெரிந்த ஃபார்முலாவில் ரஜினி ஃபார்முலாவைத் தெளித்து வெற்றி கொண்ட படம். சந்திரமுகியின் வெற்றிக்கு ஜோதிகா பெரிய காரணம். ரஜினிக்குப் பதிலாக அதில் விஜய், அஜீத் என்று ஃபார்முலா கதாநாயகர்கள் யாரைப் போட்டிருந்தாலும் ஓடியிருக்கும்.
ஆயிரம் ஜென்மங்கள் பலவகைகளில் சந்திரமுகியை விட சிறந்த படம். இயக்கம், திரைக்கதை, இசை என்று அடுக்கிக் கொண்டே போகலாம்.
இதில் இன்னொரு தகவல் சொல்லவா...ஆயிரம் ஜென்மங்கள், சந்திரமுகி..இரண்டுமே மலையாளத்திலிருந்து தமிழுக்கு வந்தவை. யக்ஷகானம் என்ற படம் ஆயிரம் ஜென்மங்களானது. மணிசித்ரதாழு சந்திரமுகியானது. ஆனால் இரண்டுமே பெரிய வெற்றிப்படங்கள்.
Post a Comment