Tuesday, May 08, 2007

எங்க ஆபிஸ் பருத்தி வீரன்

"ஏ சித்தப்பு.. புதுசா ஒரு பைய.. நம்ம ஆபிஸ்ல்ல ஜாவால்ல சேர்ந்து இருக்கான்.. பார்த்துப் பேசுனீயளா?"

"வரும் போது அப்பிராணியா வர்றாயங்க..
நாம உக்கார வச்சு இங்கிட்டு இருக்கது கூரான ஆணி.. அங்கிட்டு இருக்கது மொக்க ஆணி.. பாத்து பதவிசாப் புடுங்கணும்... விரல் வீங்கிரும்டான்னு நாலு நாளுச் சொல்லிக் கொடுத்தா.. புடுங்குன ஆணியை அஞ்சாவது நாள் அம்சமா நம்ம ஓவர் கோட்டுல்ல செருகிட்டு போயிரான்வே..
சரி நம்மூர்கார பைய நல்லாயிருக்கட்டும்ன்னு நான் வாழ்த்துறதும் வழக்கமாப் போயிருச்சு" சித்தப்புன்னு நாங்கச் செல்லமாக் கூப்பிடுற ஆறுமுகம் தன் கதையைச் சொல்லி எங்கக் கண்ணைக் கசக்குனார்.

"பயலுக்கு ஜாவாத் தெரியாதாம்... வேற எதோ பிளாட்பார்ம்ல்ல இருந்து இருக்கான்.. அதுல்ல மூணு வருசம் பின்னி பெடல் எடுத்தவனாம்" நியூஸ் நாதன் எடுத்துச் சொன்னான்.

"சென்ட்ரல் பிளாட்பார்ம், எக்மோர் பிளாட்பார்ம்ன்னு ரயில் பொட்டியில்ல வந்து இறங்குனவனை எல்லாம் கம்ப்யூட்டர் பொட்டி முன்னால உக்கார வச்சுரான்வ... அவனுக்கு கீ போர்ட் எங்கிருக்கு.. மவுஸ் எங்கிருக்குன்னு நான் சொல்ல வேண்டியிருக்கு..."

சித்தப்பு சொல்லிக் கொண்டிருக்கும் போதே..

ரகளையா மொபைல் போன்ல்ல டங்கா துங்கா சேலைக்காரி பாட்டை அலற விட்டுகிட்டு கையிலே லேப் டாப் (சித்தப்புக்கு லேப் ஆப்) அப்படின்னு ஒரு மார்க்கமா புதுப் பைய வந்து இறங்குனான் சீன்ல்ல.வந்தவன் லேப் டாப்பைச் சித்தப்பு மடியிலே வச்சுட்டு .... "கொஞ்சம் கண்டுக்காதீங்கன்னு" சொல்லிட்டு டேபிளைத் துடைச்சு தூசியை நாதன் முகத்தில்லத் தட்டி விட்டான்.

"என் மடி வலிக்குது.. லேப் டாப்பை எடுக்குறீயான்னு" சித்தப்பு ஈனஸ்வரத்துல்ல சவுண்ட் கொடுக்க...

"சாரி பாஸ்... வந்தோமா வேலைய ஆரம்பிச்சமோன்னு இருக்கணும்ன்னு பெரிய பாஸ் சொல்லிட்டார்.. இந்த வெட்டி அரட்டை, வீண்வம்பு பேசிகிட்டுத் திரியறவங்களோட வச்சுக்கவேக் கூடாதுன்னு இன்டர்வீயூல்ல சொல்லிட்டார்.. அதில்லயும் இங்கே முக்கியமாச் சித்தப்புன்னு ஒரு வெத்து கேரக்டர் திரியுதாமே.. அதுக் கூடக் கண்டிப்பா எந்த விஷ்யமும் இருக்கக் கூடாதுன்னு சொன்னார்.. ஆமா யார் பாஸ் அந்தச் சித்தப்பு..."

அவன் கேட்டதும் சித்தப்பு முகம் சிதறிப் போனத் தேங்காப் பீஸ் மாதிரி கதறிப் போச்சு...இருந்தாலும் டக்குன்னு சுதாரிச்சச் சித்தப்பு...

"ஆமா உனக்கு ஜாவாத் தெரியுமா?ன்னு" வம்படியாக் கேக்க

"தெரியாதுன்னு சொன்னா நீங்கச் சொல்லித் தரப் போறீங்களா.. எனக்கும் சேத்து நீங்கக் கோடு எழுதப் போறீங்களா.. எதுக்கு இந்தக் கேள்வி இன்ட்ர்வீயூல்ல ஆறு ரவுண்டு... மொக்கப் போட்டுத் தான் கூப்பிட்டாயங்க...இனியும் கேட்டாச் சொல்லமாட்டோம்ல்ல.. நாங்க மருதக் காரங்க தெரியுமில்ல... அதுவும் அழகர் கோயில் ஆளு நான்..." பயக் கெத்துக் கொத்தா ஜொலிக்க

மருதன்னு ஊர் பேர் சொன்னதும் சித்தப்பு முகம் தேங்காப் பால் ஊத்திக் கழுவுனாப்பல்ல அப்படி பளபளக்குது..

"நினைச்சேன்.. இம்புட்டு கெத்து நம்மூர்காரப் பயபுள்ளக்குத் தான் வரும்ன்னு... வா ராசா.. ஊர்ல்ல வையைல்ல தண்ணி இருக்கா.. அழகர்சாமி ஆத்துல்ல இறங்குனதுக்குப் போனீயா... ஜிகர்தண்டாக் குடிச்சு எம்புட்டு வருசமாச்சு.. "அப்படியே ஒரு பாசமலரைக் கோர்த்து சித்தப்பு அவன் கழுத்தில்லே சூட்டிச் செட்டில் ஆயிட்டார்.

அப்புறம் என்ன ஒரே வாரத்துல்ல சித்தப்புவும் அவனும் பக்கா ஜமாவாயிட்டாங்க... கிட்டத்தட்ட நம்ம பருத்திவீரன் கார்த்தியும், சரவணனும் மாதிரி...

போன வாரம் ஒரு நாள்.. மேனேஜர் கேக்குறார்

"ஏன் ஆறுமுகம்... உங்க டீம் மேட் பார்த்தி ஓர்க்ல்ல ஓ,கே தான் .. ஆனா பொண்ணுங்கக் கிட்ட ஓவரா வழியறது.. அப்புறம் ஆபிஸ்ல்ல சேட்டிங்ன்னு ராங்க்காப் போயிட்டு இருக்காரே.. அவரோட டீம் சீனியர் மெம்பர் ஆச்சே கொஞ்சம் சொல்லக்கூடாதா? ந்னு யதார்த்தாமக் கேட்க..

அவன் எங்கே சார் கேக்குறான்.. நான் கூட நிறையத் தடவைச் சொல்லிட்டேன்..

அப்படியா?

ஆமா சார்.. நீ இப்படி பொண்ணுங்களோட ஓவராப் பேசிகிட்டுத் திரிஞ்சா கண்டப் பயலும் வயிர் எரிஞ்சு உன் வேலைக்கே உலை வச்சுரப் போறான் பாருன்னும் சொல்லிட்டேன் பைய கேக்க மாட்டேன்னு வம்படியாத் திரியுறான் அப்படின்னு அடக்கமாப் பதில் சொல்லி தனக்கு தானே சொந்தச் செலவுல்ல சூ வச்சுகிட்டார் சித்தப்பு.

அடுத்துச் சும்மா இருந்த நம்ம சித்தப்புவை சிந்தனைச் செய்ங்கன்னு இப்படி கிளறி விட்டான் பருத்திவீரன்

"சித்தப்பூ எப்படியாவது ஒரு தரமாவது ஆன் சைட் போயிரணும் சித்தப்பு.".

" ஏன்டா இங்கிட்டு என்னக் கொறச்சல்?"

"என்னச் சித்தப்பு இப்படி கேக்குறீங்க? எத்தன நாள் தான் இவளுகளுக்கு ஜிமிக்கி, ஸ்டிக்கர் பொட்டு, ரிங்ன்னு நம்ம வாடிப்பட்டி சந்தையிலே வாங்கியாந்ததை ... HEY I BOUGHT THIS FOR U WHEN I WENT TO DUBAI LAST VACATION... MY MOM GOT THIS FOR U FROM HER TRIP TO SPAIN அப்படின்னு பரோட்டாப் போடறது..

போனத் தரம் நம்ம ஊர் தெரு முக்குல்ல பத்து ரூவா பாசி மணியை முப்பது நிமிசம் பேரம் பேசி மூன்று ரூவாவுக்குக் கேட்டு இனி என் மூஞ்சியிலேயே முழிக்காதேன்னுச் சொல்லி அஞ்சு ரூவாக்கு கையிலே கொடுத்தான் நம்ம மூக்கன்..

அதேப் பாசியை கிப்ட் ராப் பண்ணி.. அந்த பஞ்சாப் பானுவுக்கு எங்க அண்ணன் ஆன் சைட்க்கு லண்டன் போனப்போ உனக்க்காக நான் சொல்லி வாங்குனதுன்னுக் கொடுத்தப்போ மைல்ட்டா டவுட் ஆயிட்டா.. இனியும் ஆட்டயப் போட முடியாது..

சோ ஆன் சைட் போறோம் அங்க சிவத்த சிவத்த குட்டப் பாவடப் போட்டக் குட்டிகளாப் பார்த்து நம்ம பில்டப்பு போட்டு வாழ்றோம்.. அடி வாங்குனாலும் அவக கையாலே அடி வாங்கணும் அது தான் என் சித்தப்பு என் லட்சியம்..மனுசப் பிறவின்னா ஒரு லட்சியம் வேணாமாச் சித்தப்பு"

சித்தப்புப் பேசக் கூட முடியாம கண்ணு கலங்கி நிக்க.. ஆன் சைட் போறதுக்கு இப்படி ஒரு காரணமா..அப்படின்னு நாங்களும் மலைக்க

"சித்தப்பூ எங்கச் சித்தி பையன் போன வருசம் ஜெர்மனிக்குப் போயிருக்கான்.. அங்கே இந்தியாக்காரப் பயபுள்ளன்னு சொன்ன உடனே.. ஏ...YOU FROM LAND OF ELEPHANTS
அப்படின்னு பொண்ணுங்க, பயல்வ,கூடவே அம்மணிகளும், அய்யாக்களும், லைன் கட்டி கதைக் கேட்க.. திருச்செந்தூர் கோயில் யானைத் தவிர வேறு யானையைப் பாக்காத பய மண்டையிலே பல்பு எரிஞ்சிருக்குப் பாருங்க...

எஸ் எஸ் YOU KNOW OUR COUNTRY ELEPHANT COUNTRY.. EVERY HOUSE HAS 3-4 ELEPHANTS..MY HOUSE HAS 6 ELEPHANTS.. I GO SCHOOL COLLEGE IN ELEPHANT... MY DAD GO OFFICE IN ONE ELEPHANT.. MY MOM GOES VEGETABLE MARKET IN ONE ELEPHANT...ITS FUN U KNOW அப்படின்னு அடிச்சு விட்டுருக்கான்..ம்ஹும் கூட்டத்துல்ல இருந்த பொண்ணு ஒருத்தி அவன் விட்ட ரீலை நம்பி அவன் கன்னத்துல்ல பச்சக்ன்னு ஒரு உம்மா வேறக் கொடுத்துட்டா.... தொடர்ந்து பல உம்மாக்கள் ... பைய பாக்க எலிபேண்ட் மாதிரி இருந்துகிட்டு அந்த ரவுசு பண்ணியிருக்கான்.. அன்னிக்கு முடிவானது தான் லட்சியம்.. ஆன் சைட் போய் அட்லீஸ்ட் ஒரு உம்மாவது வாங்கமா நான் ஐ,டி பீல்ட்ல்ல இருந்து ரிட்டையர் ஆக மாட்டேன்னு...

பருத்திவீரனின் ஆவேசம் சித்தப்புவையும் தொற்றி கொண்டது தான் துரதிர்ஷ்ட்டம்.. கல்யாணம் ஆகி இரண்டு புள்ளக்கு அப்பன் ஆகிட்ட சித்தப்புவும் இப்போ வெள்ளைக்கார முத்தம் அப்படின்னு பாட்டு பாடிகிட்டுத் திரியுறார்...

மக்களே இதெல்லாம் எங்கே போய் முடியுமோ?

42 comments:

உங்கள் நண்பன் said...

எனக்கென்னமோ அந்த சித்தப்பூ நீ தான்னு தோனுது! மறந்திடாத இந்த அப்ரண்டீச கையோட கூட்டீட்டுப் போய்,வெள்ளக்காரிக கிட்ட வாயோட நெறையா வாங்கிக் கொடுத்து அனுப்பி வை! சரியா?

அன்புடன்...
சரவணன்.

உங்கள் நண்பன் said...

mee first-னு சொல்லுமே அந்த அக்கா எங்கே?

இம்சை அரசி said...

:)))

பருத்தி வீரன் 2nd partஆ???

நல்லாயிருக்கு அண்ணா :)

Veyilaan said...

தேவ்

ஆன் சைட் - ஏதோ ஐடி மக்களின் மொழினு தெரியுது, என்னான்னு விளக்குனாப் பரவாயில்லை.

செந்தில் said...

super, good post, good competition to abi appa

Vino said...

Simply Superb!!!

Anonymous said...

//பருத்திவீரனின் ஆவேசம் சித்தப்புவையும் தொற்றி கொண்டது தான் துரதிர்ஷ்ட்டம்.. கல்யாணம் ஆகி இரண்டு புள்ளக்கு அப்பன் ஆகிட்ட சித்தப்புவும் இப்போ வெள்ளைக்கார முத்தம் அப்படின்னு பாட்டு பாடிகிட்டுத் திரியுறார்...//

ஜொள்ளுங்க எப்பொழுதும் ஜொள்ளுங்க தான்.கல்யாணம் ஆனாலும் மாற்ற முடியுமா?

மனதின் ஓசை said...

ஆபிஸர் சித்தப்பூ ஆன கதையோட இந்த பகுதி நல்லா இருக்குதுப்பா....

மனதின் ஓசை said...

//ஜொள்ளுங்க எப்பொழுதும் ஜொள்ளுங்க தான்.கல்யாணம் ஆனாலும் மாற்ற முடியுமா? //

பாவம் தேவு..இப்படி தனி மனித தாக்குதல் செய்யாதீங்க அனானி..

Anonymous said...

//உங்கள் நண்பன் said...
எனக்கென்னமோ அந்த சித்தப்பூ நீ தான்னு தோனுது! மறந்திடாத இந்த அப்ரண்டீச கையோட கூட்டீட்டுப் போய்,வெள்ளக்காரிக கிட்ட வாயோட நெறையா வாங்கிக் கொடுத்து அனுப்பி வை! சரியா?//

சரா இது நல்லா இல்லை.எங்க அண்ணாவை பார்த்து இப்படி பட்ட அப்பட்டமான குற்றசாட்டு.அவர் அண்ணியிடம் மட்டும்தான் ஜொள்ளு விடுவார் ;-)

ஜி said...

ஆஹா தேவ்.. வாழ்த்துக்கள்... எங்க போறீங்க? எப்போ போறீங்க??

தேவ் | Dev said...

//எனக்கென்னமோ அந்த சித்தப்பூ நீ தான்னு தோனுது! மறந்திடாத இந்த அப்ரண்டீச கையோட கூட்டீட்டுப் போய்,வெள்ளக்காரிக கிட்ட வாயோட நெறையா வாங்கிக் கொடுத்து அனுப்பி வை! சரியா?//

கதையச் சொன்னாக் கேட்டுக்கோணும் கேரக்டரை ஆராயக்கூடாது ஆமா.. சரா சதா சரவெடி கொளுத்தி என் சட்டைப் பைக்குள்ளே போட்டேத் தீருவேன்னு அலையிறீயே ஏன் ஒனக்கு எம் மேல இம்புட்டு பாசவெறி...:))))

தேவ் | Dev said...

//பருத்தி வீரன் 2nd partஆ???

நல்லாயிருக்கு அண்ணா :)//

நிதம் நாலுப் பார்ட் நடக்குது எங்க ஆபிஸ்ல்ல எழுத முடியல்ல அவ்வளவு ரகளை

தேவ் | Dev said...

//தேவ்

ஆன் சைட் - ஏதோ ஐடி மக்களின் மொழினு தெரியுது, என்னான்னு விளக்குனாப் பரவாயில்லை. //

ம்ம்ம் சுலபம்.. ஆப் ஷோர்ன்னா.. இங்கிட்டு உள்ளூர்ல்ல ஆப்புன்னு அர்த்தம்.. ஆன் சைட்.. ஆணி புடுங்க அசலூர்க்கு அனுப்புறாங்கன்னு அர்த்தம்..

உள்ளூர் ஆபிசர் அசலூர் போனா ஆன் சைட்ன்னு சொல்லுவாங்க.. ரைடங்களா வெயிலான்

தேவ் | Dev said...

//super, good post, good competition to abi appa //

என்னது போட்டியா அதுவும் அபி அப்பாக் கூடவா அய்யோ....

அபி அப்பாவை எல்லாம் சமாளிக்கலாம் ஆனா அந்த பாப்பா ம்ஹூம் நினைச்சாலே கண்ணைக் கட்டுது சாமி...

ABHI PAAPA DUN BELIEVE THIS SENTHIL UNCLE I AM UR BEST CHITTAPPAA OK

தேவ் | Dev said...

//Simply Superb!!! //

Thanks Vino

தேவ் | Dev said...

//ஜொள்ளுங்க எப்பொழுதும் ஜொள்ளுங்க தான்.கல்யாணம் ஆனாலும் மாற்ற முடியுமா? //

ம்ம் ஜொள்ளுவை நல்லாத் தெரிஞ்ச யாரோ சொல்லுற மாதிரி இருக்கு.. யாருங்க நீங்க?

தேவ் | Dev said...

//ஆபிஸர் சித்தப்பூ ஆன கதையோட இந்த பகுதி நல்லா இருக்குதுப்பா....//

தப்பு ஹமீத் இது ஒரு சித்தப்பு ஆபிஸர் கதை.. மாத்திச் சொல்லப்பிடாது ஆமா

தேவ் | Dev said...

//பாவம் தேவு..இப்படி தனி மனித தாக்குதல் செய்யாதீங்க அனானி..//

ஹமீது... அவங்க ஜொள்ளுப் பத்திச் சொல்லுறாங்க நீ எதுக்கு என்னையக் கோத்து விடுற...
?

தேவ் | Dev said...

//சரா இது நல்லா இல்லை.எங்க அண்ணாவை பார்த்து இப்படி பட்ட அப்பட்டமான குற்றசாட்டு.அவர் அண்ணியிடம் மட்டும்தான் ஜொள்ளு விடுவார் ;-) //

அடுத்தவன் கதையைக் கூறுப் போட்டு குருப்பாக் கும்மி அடிக்கணும்ன்னா என்ன சந்தோசம்ய்யா.. ம்ம் செய்ங்க நல்லா செய்ங்கம்மா

தேவ் | Dev said...

//ஆஹா தேவ்.. வாழ்த்துக்கள்... எங்க போறீங்க? எப்போ போறீங்க?? //

ஜீ தம்பி நீ வேற பீதியைக் கிளப்பாதே.. இருக்கற ஆணிக்கு நான் வீட்டுக்குப் போறதே பெரும்பாடா இருக்கு இதுல்ல அசலூர் போறது எல்லாம்...... too distant a dream

இராம் said...

அடபாவமே, ஆபிசிலே இப்பிடியெல்லாம் நடக்குமா??? :)

சீக்கிரமே வெளிநாட்டுக்கு போறேன்னு சொல்லிக்கிட்டு இருந்துக்கீங்களே??? இதுதான் காரணமா??? :)

தேவ் | Dev said...

//அடபாவமே, ஆபிசிலே இப்பிடியெல்லாம் நடக்குமா??? :)

சீக்கிரமே வெளிநாட்டுக்கு போறேன்னு சொல்லிக்கிட்டு இருந்துக்கீங்களே??? இதுதான் காரணமா??? :) //

ராம் தம்பி... நீயும் கூட உங்க ஆபிஸ்ல்ல ஒரு பருத்திவீரன்னு பேச்சு அடிபடுது.. உண்மையா....

Anonymous said...

//ராம் தம்பி... நீயும் கூட உங்க ஆபிஸ்ல்ல ஒரு பருத்திவீரன்னு பேச்சு அடிபடுது.. உண்மையா.... //

உண்மை தெரிஞ்சுகிட்டே தெரியாதது போல எப்படி அண்ணா கேள்வி கேட்டக முடியுது உங்களால்?

Anonymous said...

//அடுத்தவன் கதையைக் கூறுப் போட்டு குருப்பாக் கும்மி அடிக்கணும்ன்னா என்ன சந்தோசம்ய்யா.. ம்ம் செய்ங்க நல்லா செய்ங்கம்மா //

உண்மையைத்தானே சொன்னேன் அண்ணா!இதுக்கு ஏன் எப்படி புலம்புறீங்க.நீங்க அண்ணியை மட்டும்தானே ஜொள்ளு விடுறீங்கன்னு சொன்னேன்.

இராம் said...

//ராம் தம்பி... நீயும் கூட உங்க ஆபிஸ்ல்ல ஒரு பருத்திவீரன்னு பேச்சு அடிபடுது.. உண்மையா.... //

எங்க ஆபிஸிலே நிறைய ஓப்பனிங்ஸ் இருக்குண்ணே :)

சீக்கிரமே வாங்க! எங்களுக்கும் சித்தாப்பூ இல்லாதே குறை தீரும்... :)


//உண்மை தெரிஞ்சுகிட்டே தெரியாதது போல எப்படி அண்ணா கேள்வி கேட்டக முடியுது உங்களால்?//

தோடா..... சிங்கப்பூரிலே இருந்து FBI ஏஜெண்ட் இவங்க.....

புலனாய்ச்சு சொல்லுறாங்களாம் :))

Anonymous said...

//தோடா..... சிங்கப்பூரிலே இருந்து FBI ஏஜெண்ட் இவங்க.....

புலனாய்ச்சு சொல்லுறாங்களாம் :)) //

:-(
தேவ் அண்ணாதான் இதை சொன்னார்.அண்ணா சொன்னால் சரியாக இருக்கும் என்று ஒரு நம்பிக்கை ராம் அண்ணா ;-)

செந்தழல் ரவி said...

///தோடா..... சிங்கப்பூரிலே இருந்து FBI ஏஜெண்ட் இவங்க.....
///

சிங்கப்பூரை அமெரிக்காவுல சேர்த்துட்டாங்களா ? இல்லை மங்கூஸ் மூஞ்சிக்காரனுங்க அமெரிக்க எப்.பி.ஐ நிறுவனத்தை Sing டாலர்ஸ் கொடுத்து இட்டாந்துட்டானுங்களா ? எப்படி சிங்கப்பூருல எப்.பி.ஐ. வரும் ?

ஒரு மண்ணும் விளங்களையே சாமியோவ்...

(இருந்தாலும் இருக்குமோ ? )

நாமக்கல் சிபி: (பேக்ரவுண்டில்)இராமை கலாய்க்கறதுன்னா கிளம்பிருவீங்களே...இப்பல்லாம் கைப்புள்ளையை விட்டுட்டு இராமைத்தான் அதிகமா கலாய்க்கிறீங்க...

ஆப்புரைசல்ல கீ..பர்பார்மன்ஸ்..ஏரியா செட்பண்ணாங்களா இல்லையா ?

Syam said...

ஆன் சைட் போய் அட்லீஸ்ட் ஒரு உம்மாவது வாங்கமா நான் ஐ,டி பீல்ட்ல்ல இருந்து ரிட்டையர் ஆக மாட்டேன்னு...//

அப்புடி சொல்லித்தாய்யா இந்த அப்புரானியயும் பிளைட் ஏத்தி விட்டாய்ங்க...இங்க வந்த அப்புறம் தான் தெரிஞ்சது அது எல்லாம் சினிமால மட்டும் தான்னு.....அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ் :-)

Raja Shanmugam said...

எனாமோ போங்க இரண்டு தடவ ஆன் சைட் கிடைச்சும் பாஸ்போர்டு இல்லாததல் விட்டு விட்டு, இங்கிட்டு இருகிறதே சொர்கம் தேதிகினு இருந்த என்ன இப்படி ஒரு மேட்டர சொல்லி கவுத்துபுட்டிங்களே ..மறுபடிய்ம் வாய்ப்பு சித்தபு முன்னாடி போய்டு வந்திடனும் ஹி ஹி ஹி !!!!

டக்ளஸ்ஸு said...

அங்கயும்மா!

சீக்கிரம் போங்கடா தூர இருந்தாலாச்சும் துயரத்த குடுக்காம இருக்கிங்களான்னு பாப்போம்

தேவ் | Dev said...

ராம் துர்கா ரெண்டு பேரும் வெறும் ஆபிஸர்ஸ் இல்லப்பா.... பெரிய புலனாய்ச்வு ஆபிஸர்ஸ் .. ம்ம்ம் என்னமாப் பேசிக்கிறாங்க?

தேவ் | Dev said...

//சிங்கப்பூரை அமெரிக்காவுல சேர்த்துட்டாங்களா ? இல்லை மங்கூஸ் மூஞ்சிக்காரனுங்க அமெரிக்க எப்.பி.ஐ நிறுவனத்தை Sing டாலர்ஸ் கொடுத்து இட்டாந்துட்டானுங்களா ? எப்படி சிங்கப்பூருல எப்.பி.ஐ. வரும் ?

ஒரு மண்ணும் விளங்களையே சாமியோவ்...//

இந்த வழ்க்கை நம்ம சி.பி.ஐ கையிலேக் கொடுத்து விசாரிக்கச் சொல்லிருவோமாச் சொல்லுங்க.. உண்மை வெளியே வரணும் ஆமா

தேவ் | Dev said...

//ஆன் சைட் போய் அட்லீஸ்ட் ஒரு உம்மாவது வாங்கமா நான் ஐ,டி பீல்ட்ல்ல இருந்து ரிட்டையர் ஆக மாட்டேன்னு...//

அப்புடி சொல்லித்தாய்யா இந்த அப்புரானியயும் பிளைட் ஏத்தி விட்டாய்ங்க...இங்க வந்த அப்புறம் தான் தெரிஞ்சது அது எல்லாம் சினிமால மட்டும் தான்னு.....அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ் :-) //

நாட்டாமை நீங்க இப்படி பேசலாமா பீல் பண்ணலாமா.. உங்களுக்குத் தெரிஞ்சது எல்லாம் நீதி.. நாயம். நார்மை.. ச்சே நேர்மை... இதெல்லாம் சிறுசா இப்போ வந்தப் பருத்தி வீரனுங்க மேட்டர்...

நீங்க அப்படி நீதி நேர்மை நாயம்ன்னு வாழுரதுன்னாலத் தான் நாங்க எல்லாம் உங்க பங்காளி ஓடி வந்து நீங்க தப்பு பண்ணிட்டதாச் சொன்னதை நம்பவே இல்ல.. :))))

தேவ் | Dev said...

//எனாமோ போங்க இரண்டு தடவ ஆன் சைட் கிடைச்சும் பாஸ்போர்டு இல்லாததல் விட்டு விட்டு, இங்கிட்டு இருகிறதே சொர்கம் தேதிகினு இருந்த என்ன இப்படி ஒரு மேட்டர சொல்லி கவுத்துபுட்டிங்களே ..மறுபடிய்ம் வாய்ப்பு சித்தபு முன்னாடி போய்டு வந்திடனும் ஹி ஹி ஹி !!!! //

கண்டிப்பா.. வாழ்த்துக்கள் ராஜா சண்முகம்... சித்தப்பு உங்களை ஆன் சைட்ல்ல சந்திப்பார்ய்யா

தேவ் | Dev said...

//அங்கயும்மா!

சீக்கிரம் போங்கடா தூர இருந்தாலாச்சும் துயரத்த குடுக்காம இருக்கிங்களான்னு பாப்போம் //

டக்ளஸ் அண்ணே ஆன் சைட் போனாலும் அங்கேயும் உங்க டீக் கடை இருக்கும்ல்ல... வந்து உக்காந்து பரோட்டா வங்கி தின்னுட்டு பொரளி பேசுவோம்ல்ல

Syam said...

//உங்க பங்காளி ஓடி வந்து நீங்க தப்பு பண்ணிட்டதாச் சொன்னதை நம்பவே இல்ல//

நல்ல வேள நீங்க நம்பிட்டீங்களோனு பயந்தே போய்ட்டேன்...

@பங்காளி, உனக்கு தண்ணிய போட்டா உண்மைய ஒளர்றதே வேலையா போச்சு :-)

G.Ragavan said...

தேவு...இங்க ஆன்சைட்டுன்னா பெரிய பெரிய ஆணி சைட்டய்யா....ஒவ்வொன்னா புடுங்கி முடிக்கிறதுக்குள்ள கையல்லாம் காப்பு காச்சுறும். அப்புறமெங்க country of elephants...country of snakesனு சொல்றது....பாத்துப் பதமா இருந்துக்கச் சொல்லுங்க சித்தப்புவ.

தேவ் | Dev said...

//@பங்காளி, உனக்கு தண்ணிய போட்டா உண்மைய ஒளர்றதே வேலையா போச்சு :-) //


உண்மைகள் உளறப்படுவதில்லை.. உளறல்கள் உண்மையாகினற்ன

அய்யோ தத்துவம் எல்லாம் வருதுங்க நாட்டூ... எல்லாம் உங்க ஆசி..

தேவ் | Dev said...

//தேவு...இங்க ஆன்சைட்டுன்னா பெரிய பெரிய ஆணி சைட்டய்யா....ஒவ்வொன்னா புடுங்கி முடிக்கிறதுக்குள்ள கையல்லாம் காப்பு காச்சுறும். அப்புறமெங்க country of elephants...country of snakesனு சொல்றது....பாத்துப் பதமா இருந்துக்கச் சொல்லுங்க சித்தப்புவ.//

ஜி.ரா . நம்ம சித்தப்பு கிட்ட நீங்கச் சொன்ன அம்புட்டையும் சொல்லிட்டேன்.. இப்போ எல்லாம் கையிலே உறையை அதான் கிளவுஸ் மாட்டிகிட்டு ஆணி புடுங்குறார்... விவரமா இருக்காராமா... ம்ம்ம் ஆகுதுன்னாப் பாப்போம்.

Raja Shanmugam said...

// மறுபடிய்ம் வாய்ப்பு சித்தபு முன்னாடி போய்டு வந்திடனும் ஹி ஹி ஹி !!!!

கண்டிப்பா.. வாழ்த்துக்கள் ராஜா சண்முகம்... சித்தப்பு உங்களை ஆன் சைட்ல்ல சந்திப்பார்ய்யா

//

ஹி ஹி
மறுபடிய்ம் வாய்ப்பு "வந்தால்!!" சித்தபு முன்னாடி போய்டு வந்திடனும்யா"

போன பின்னுட்டத்தில் "வந்தால்" என்ற வார்த்தை விடுபட்டுவிட்டது...

எனினும் உங்கள் வாழ்த்துக்களுக்கு நன்றி

Anonymous said...

tibia money tibia gold tibia item runescape money runescape gold tibia money tibia gold runescape gold runescape accounts tibia gold tibia money runescape money runescape gp buy runescape gold tibia gold tibia item buy runescape money runescape gold runescape items tibia money tibia gold

tamil10