Tuesday, February 06, 2007

வாரான் வர்றான் வர்றான்லே... தாமிரபரணி

பிராத்தனா திரையரங்கம் நாலாவது வாரமும் கூட்டம் நிரம்பி வழியுது... இந்த வாரம் நாங்கப் பார்த்து பரவ்சப்பட்டு பீலிங் ஆனப் படம் தாமிரபரணி...



"டேய் மாப்ளே என்னடா இது...இந்தப் பைய வர்ற வேகத்தைப் பாத்தா ட்ரெயினை அரிவாளை வச்சு ஒர்ர்ரே போடா போட்டுருவான் போல இருக்கு... புதுமை புதுமைன்னு நம்ம கோலிவுட் மக்க அப்படி எதாவது பண்ணியிருப்பாங்களோ"

தாமிரபரணி படத்தின் ஓப்பனிங்க் சீனில் விஷால் ரயில் ஓடப் போட்ட தண்டவாளத்தில் அரிவாளைத் தீட்டி அல் டாப்பாக் கிளம்புறதைப் பார்த்து நம்மக் கூட வந்த நண்பன் பச்சபுள்ள பயந்தேப் போயிட்டான். நான் கூட அவன் சொன்ன மாதிரி எதுவும் வில்லங்கம் இருக்குமோன்னு மிரண்டு திரையேப் பார்த்துகிட்டு இருக்கேன்.

டக்குன்னு ட்ரெயின் நிக்குது.. ஆகா.. அடுத்து ட்ரெயினை எட்டி உதைக்கப் போறானா... அப்படி எல்லாம் ஹரி (அவர் தாங்க இயக்கம்) ரூம் போட்டு சிந்திச்சுருப்பாரோன்னு பயங்கரமான எண்ணம் எல்லாம் மனசுல்ல ஓட ஆரம்பிச்சு தியேட்டர் எக்ஸிட் எங்கேன்னு துழாவ ஆரம்பிச்சுட்டேன்.

ஆங்.. தாமிரபரணி.. விஜயின் இடத்தைப் பிடிக்க விஷால் எடுத்திருக்கும் அடுத்த முயற்சி..(ஆமாங்க விஜய் தான் இப்போ ரஜினி ஆயிட்டார் இல்ல). படத்தில் கதை இருக்கற மாதிரி தான் இருக்கு.. ஒரு வேளை எனக்கு தெரியல்லயோ என்னவோ..

குடும்பப் பகை..மாமன் - மருமகன் பாசம், அண்ணன் - தங்கை உருக்கம், கணவன் - மனைவி பிணக்கு, அத்தை மகன் காதல் இப்படி உறவுகளின் சென்டிமெண்ட் குழம்பை ஊற்றி ரசிகர்களுக்கு தாமிரபரணி சோறு ஊட்ட முயற்சித்திருக்கிறார் இயக்குநர் ஹரி.

விஷால் ஆக்ஷ்ன் ஹீரோ அங்கீகாரம் பெற்றுவிட்டார். கொடுத்த ரோலை நல்லாவே செய்து இருக்கிறார். தமிழ் சினிமா நட்சத்திர நாயகன் என்னவெல்லாம் செய்ய வேண்டுமோ அதை எல்லாம் செய்கிறார். சண்டைக் காட்சியோடு அறிமுகம், உடனே ஒரு பாட்டு, அப்புறம் விறைப்பா வம்புக்கும் தும்புக்கும் போவது, நாயகியோடு மோதுவது, நண்பர்களோடு கும்மி.. அப்புறம் இடைவேளைக்கு மேல கொஞ்சமாய் நடிக்க முயல்வது, தியாகியாவ்து என சாமி அதே பழைய டெம்ளெட்.. நேத்து வந்த பிளாக் மட்டையெல்லாம் கூட பீட்டாவுக்கு மாறிடுச்சு.. கோலிவுட் மக்கா நீங்க எப்போய்யா டெம்ளெட்டை மாத்தப் போறீங்க..



'என்னக் கொடுமை சரவணன்' புகழ் பிரபு விஷாலுக்குத் தாய் மாமனாக வருகிறார். நதியா அவரது மனைவி. ஆச்சி மனோரமா பிரபுவின் தாய். ரோகிணி பிரபுவின் தங்கையாக வருகிறார். இது ஒரு குடும்பம். இதற்கு எதிர் வரிசையில் விஜயகுமார், நாசர் வில்லன் அணியாக வருகிறார்கள்.

ஆச்சி... மனோரமா ஆச்சி முடியல்ல... ஒவ்வொரு வாட்டியும் நீங்க் சவுண்ட் கொடுத்து அழும் போதும் தியேட்டர் ஸ்பீக்கர் மேல பல பேர் கோவத்தோடு பார்வையை செலுத்தறது நல்லாவா இருக்கு.. போது விட்டுருங்க.. எங்களை விட்டுருங்க.. உங்களுக்கு ஓய்வு தேவை. எங்களுக்கு உங்ககிட்ட இருந்து விடுதலை தேவை.

விஜயகுமார்..நாசர்... என்னத்தச் சொல்ல.. திறமை இருக்க நடிகர்கள்.. பொழப்புக்காகத் தான் இப்படி வேஷங்களை ஒத்துக்குறாங்களோன்னு நினைக்கத் தோணுது.

ஆகாஷ், நிழல்கள் ரவி ஆகியோரும் வந்துப் போகிறார்கள்.

கதாநாயகி புது முகம் பானு பளிச் அறிமுகம். ஒரளவுக்கு நடிக்கவும் வருது பொண்ணுக்கு. பொழைச்சுக்கும். கஞ்சா கருப்பு காமெடி சில் இடங்களில் சிரிப்பு.. மற்ற இடங்களில் கழுத்தறுப்பு. கிரேன் மனோகர், டாப் 10 ஆர்த்தி வரும் காமடி காட்சிகள் ரசிக்கும் படி உள்ளன.



இசை யுவன் ஷங்கர் ராஜாவாம்... வாரான்.. வர்றான் வர்றான்லே.. அப்படின்னு ஆரம்பிச்சு.. கருப்பான கையால என்னைப் புடிச்சான்னு பழையப் பக்தி பாட்டை ரிமிக்ஸ் பண்ணிட்டு காணாமப் போயிடுறார்..

தூத்துக்குடி மாவட்டத்தைத் திரையில் காட்டியதற்காக தூத்துக்குடிகாரர்கள் ஹரியைத் தாராளமாய் பாராட்டலாம்.

அது எல்லாம் சரி வசனம் எழுதுன மகானை அப்படியே பொங்கப் பானையிலே வ்ச்சுப் பொங்கிப் போடணும்...ஹரி சாமி.. எப்படி இப்படி எல்லாம் உங்களால முடியுது..

உதாரணம்...

"விஜயகுமார் பிரபுவைப் பார்த்து கேட்கும்.. பாசம் மிகுதின்னா பொஞ்சாதிக்குப் பதிலாத் தங்கச்சிக் கூட படுத்துருவீயோன்னு..."

இது போல 'A'டாகூடா வசனங்கள் 'A'ராளம்.. தவிர்த்திருக்கலாம்

மொத்ததில் மக்கா படம் பாத்துட்டு இது சொத்த... அது மொக்கன்னு நான் என்னக் கரைச்சல் கொடுத்தாலும் படம் பட்டயக் கிளப்புதாம் வசூல்ல.. விஷால் தாராளமாய் தாமிரபரணியின் வெற்றியைக் கொண்டாடலாம்..

ஆங்.. சுத்தமாப் பொழுது போகல்லன்னா கண்டிப்பா நீங்களூம் ஒரு தரம் பாக்கலாம்..

22 comments:

theevu said...

படம் பார்க்க கூடியதாகவிருக்கிறது.அரிவாளோடு திரிந்தாலும் ஒரு கையை மட்டும்தானே எடுக்கிறார்..எனவே வன்முறை குறைவு:)

ஜொள்ளுப்பாண்டி said...

தேவ் உங்க விமர்சனம் நாளுக்கு நாள் பட்டையக்கெளப்புதுங்கோ! professional touch !!

இராம்/Raam said...

பொங்கலுக்கு வந்த மூணு படத்திலெ இது ஒன்னுதான் தேறுமின்னு சொன்னாய்ங்கே.... :)

Anonymous said...

what can we do?i thing this's our bad luck.

G.Ragavan said...

இந்தப் படத்துக்கு நான் விமர்சனம் எழுதனும்னு நெனச்சேன். நீங்க எழுதீட்டீங்க. அதுனால நான் வாபஸ் வாங்கிக்கிறேன். (நேரமில்லைன்னு வேற எப்படிச் சொல்றது)

இந்தப் படத்த நானும் பாத்துட்டேன். விஷால் ரெட்டி கதாநாயகனா நடிச்சிருக்காரு. ஆனா செய்றது முழுக்க வில்லத்தனம். ஆனா நடுவுல திருந்தீர்ரதால அவரு கதாநாயகரு. அப்பக் கடைசியில திருந்துற வில்லன்?

இந்தப் படத்துல எனக்குப் பிடிச்சது தூத்துக்குடி. வீட்டுல எல்லாருமாப் போய்ப் பாத்தோம். ஏ...ஒன்னோட ஸ்கூலு. ஒன்னோட காலேஜு. இந்தா...ரோச் பார்க்கு...சின்னக்கோயிலக் காமிக்கான். அது இதுன்னு தேட்டருக்குள்ள ஒரே கும்மரிச்சம். :-) அதுதான் சந்தோசம்.

இந்தப் படத்துல நல்லா நடிச்சவங்க மூனு பேரு. நதியாவும் ரோகிணியும் பிரபுவும். நதியாவே பேசுனாரா...இல்ல ஆள் வெச்சிப் பேசுனாங்களான்னு தெரியலை....ரொம்பப் பொருத்தம். தூத்துக்குடித் தமிழு ரொம்பத் திருத்தம்.

அதுலயும் ஏரோப்பிளேன் வெச்சுக்கிட்டுப் போகச் சொல்லுலேன்னு சொல்லும் போதும்....அண்ணே இவன் என்ன சொல்லுதான்....அப்படீங்குற வசனத்தப்பவும் நல்லாவே ரசிச்சேன். மனோரமா....ம்ம்ம்...என்ன சொல்றதுன்னு தெரியலை.

விஜயகுமார்....சுத்த போர். திரும்பத் திரும்ப ஒரே மாதிரி நடிக்கிற ஒரே நடிகர் அவராத்தான் இருக்கனும். நாசரை நினைச்சாத்தான் வருத்தமா இருக்கு. நிழல்கள் ரவிக்குப் படத்துல ஒரே ஒரு வசனந்தான். "அது என்னோட தங்கச்சி". ஐயோ பாவம்.

கதாநாயகி....மேக்கப் சரியாப் போடலைன்னு தெளிவாத் தெரியுது. ஆனா ஓரளவுக்கு நீங்க சொன்னாப்புல நடிக்க வருது. அக்செப்டேடு.

இசை....இரைச்சல். யுவன் சங்கர் ராஜா தான் ஒரு trend setter இல்லை. trend followerன்னு இப்பவாவது புரிஞ்சுக்கனும். பாட்டெல்லாம்...வாரான் வாரான்லே மட்டும் ஓகே ரகம். கற்பூர நாயகியே பாட்டை இப்படித் திரித்தது..கொடுமையான காப்பி. இது மாதிரி வேறு யாரும் செய்ததேயில்லை என்று சொல்லவில்லை. ஆனால் அவர்கள் இன்ஸ்பிரேஷனில் செய்வார்கள். எ.கா என் மனது ஒன்றுதான் என்று ஒரு பாடல். ஒரு ஆடும் பொம்மையில் இசை வரும். அதை அடிப்படையா வெச்சி மெல்லிசை மன்னர் செஞ்சிருப்பாரு. இசைஞானியும் ஏறுமயில் ஏறிவிளையாடும் திருப்புகழை மாங்குயிலே பூங்குயிலேன்னு அழகா மாத்தீருப்பாரு. இசைப்புயலும் நாத விந்து கலாதி திருப்புகழை என் வீட்டுத் தோட்டத்தில்னும் முத்தைத் தரு பத்தித் திருப்புகழை வெற்றிக் கொடி கட்டுன்னும் மாத்தீருப்பாரு. ஆனா இப்பிடி காப்பியடிக்கலை.

படம் மொத்தத்துல சுமார்தான். ஆனா வந்த படங்கள்ள கொஞ்சமாச்சும் பாக்குற மாதிரி இருக்கிறது இதுதான். ஒரு வாட்டி பாக்கலாம்.

(கடைசியா ஒரு செய்தி. கஞ்சா கருப்பு இப்பிடியே போனா....காஞ்ச கருப்பா மாறீருவாருன்னு சொல்லுங்க.)

Venkatesh subramanian said...

ater waste padam nama alunka epathan thiruntha poranukalo thariyala

ஜி said...

எனக்கு என்னவோ இந்த படம் புடிச்சிப் போச்சுப்பா.. ஒரு விசயம் என்கூரூ :)))) அடுத்தது இத பாக்குறதுக்கு முன்னாடி ஆள்வாரும், போக்கிரியும் பாத்தேன்.... அதான் :)))

ஜி said...

// இராம் said...
பொங்கலுக்கு வந்த மூணு படத்திலெ இது ஒன்னுதான் தேறுமின்னு சொன்னாய்ங்கே.... :) //

அந்த மூனு படத்துல இது ஒன்னுதான்...

Unknown said...

//ஒரு கையை மட்டும்தானே எடுக்கிறார்..எனவே வன்முறை குறைவு:) //

:)))

Unknown said...

//தேவ் உங்க விமர்சனம் நாளுக்கு நாள் பட்டையக்கெளப்புதுங்கோ! professional touch !!
//

பாண்டி தம்பி..இப்படி எல்லாம் சொல்லி சொல்லியே நானும் ஒரு படம் விடாமப் பார்த்து நொந்துப் போயிட்டு இருக்கேன்..:(

Unknown said...

//பொங்கலுக்கு வந்த மூணு படத்திலெ இது ஒன்னுதான் தேறுமின்னு சொன்னாய்ங்கே.... :) //

ராயலு நீ கேள்விப்பட்டது கரெக்ட் தான்.. இதுவே இப்படின்னா அப்போ மத்தது எல்லாம் எப்படின்னு பாத்துத் தான் தெரிஞ்சுக்கணுமா என்ன?

Unknown said...

//what can we do?i thing this's our bad luck. //

நீங்களும் இந்தப் படம் பார்த்தீங்களா.. நீங்க பேட் லக்ன்னு சொல்லுறீங்க.. நம்ம நண்பர் ஒருத்தர் எதோ ரேடியோல்ல நடத்துன போட்டியிலே வின் பண்ணி அதிர்ஷ்ட்டசாலியால்ல இந்தப் படத்துக்குப் போனாரு..

Unknown said...

//இந்தப் படத்துக்கு நான் விமர்சனம் எழுதனும்னு நெனச்சேன். நீங்க எழுதீட்டீங்க. அதுனால நான் வாபஸ் வாங்கிக்கிறேன். (நேரமில்லைன்னு வேற எப்படிச் சொல்றது)//

உங்களூக்குன்னு நம்ம பதிவுலக் மக்கள் ஒதுக்கிய படம் வீ யில் ஆரம்பித்து மி யில் முடியும் வீராச்சாமி என்ற திரைக்காவியம்.. அது மட்டும் நீங்க விம்ர்சனம் எழுதினாப் போதும் மத்ததை நாங்கப் பாத்துக்குறோம்.

Unknown said...

//இந்தப் படத்த நானும் பாத்துட்டேன். விஷால் ரெட்டி கதாநாயகனா நடிச்சிருக்காரு. ஆனா செய்றது முழுக்க வில்லத்தனம். ஆனா நடுவுல திருந்தீர்ரதால அவரு கதாநாயகரு. அப்பக் கடைசியில திருந்துற வில்லன்?//

விஷால் ரெட்டி ?? சாதிப் பெயர் போடலாமான்னு இங்கிட்டு யாராவது வந்துக் கும்ம்பி அடிக்கப் போறாங்க.. சாமி :))

Unknown said...

//இந்தப் படத்துல எனக்குப் பிடிச்சது தூத்துக்குடி. வீட்டுல எல்லாருமாப் போய்ப் பாத்தோம். ஏ...ஒன்னோட ஸ்கூலு. ஒன்னோட காலேஜு. இந்தா...ரோச் பார்க்கு...சின்னக்கோயிலக் காமிக்கான். அது இதுன்னு தேட்டருக்குள்ள ஒரே கும்மரிச்சம். :-) அதுதான் சந்தோசம்.//

நானும் தாங்க நம்ம தூத்துக்குடியைத் திரையிலேப் பார்த்து பேரானந்தம் அடைஞ்சேன்.

Unknown said...

//இந்தப் படத்துல நல்லா நடிச்சவங்க மூனு பேரு. நதியாவும் ரோகிணியும் பிரபுவும். நதியாவே பேசுனாரா...இல்ல ஆள் வெச்சிப் பேசுனாங்களான்னு தெரியலை....ரொம்பப் பொருத்தம். தூத்துக்குடித் தமிழு ரொம்பத் திருத்தம்.

அதுலயும் ஏரோப்பிளேன் வெச்சுக்கிட்டுப் போகச் சொல்லுலேன்னு சொல்லும் போதும்....அண்ணே இவன் என்ன சொல்லுதான்....அப்படீங்குற வசனத்தப்பவும் நல்லாவே ரசிச்சேன். மனோரமா....ம்ம்ம்...என்ன சொல்றதுன்னு தெரியலை.

விஜயகுமார்....சுத்த போர். திரும்பத் திரும்ப ஒரே மாதிரி நடிக்கிற ஒரே நடிகர் அவராத்தான் இருக்கனும். நாசரை நினைச்சாத்தான் வருத்தமா இருக்கு. நிழல்கள் ரவிக்குப் படத்துல ஒரே ஒரு வசனந்தான். "அது என்னோட தங்கச்சி". ஐயோ பாவம்.

கதாநாயகி....மேக்கப் சரியாப் போடலைன்னு தெளிவாத் தெரியுது. ஆனா ஓரளவுக்கு நீங்க சொன்னாப்புல நடிக்க வருது. அக்செப்டேடு.

இசை....இரைச்சல். யுவன் சங்கர் ராஜா தான் ஒரு trend setter இல்லை. trend followerன்னு இப்பவாவது புரிஞ்சுக்கனும். பாட்டெல்லாம்...வாரான் வாரான்லே மட்டும் ஓகே ரகம். கற்பூர நாயகியே பாட்டை இப்படித் திரித்தது..கொடுமையான காப்பி. இது மாதிரி வேறு யாரும் செய்ததேயில்லை என்று சொல்லவில்லை. ஆனால் அவர்கள் இன்ஸ்பிரேஷனில் செய்வார்கள். எ.கா என் மனது ஒன்றுதான் என்று ஒரு பாடல். ஒரு ஆடும் பொம்மையில் இசை வரும். அதை அடிப்படையா வெச்சி மெல்லிசை மன்னர் செஞ்சிருப்பாரு. இசைஞானியும் ஏறுமயில் ஏறிவிளையாடும் திருப்புகழை மாங்குயிலே பூங்குயிலேன்னு அழகா மாத்தீருப்பாரு. இசைப்புயலும் நாத விந்து கலாதி திருப்புகழை என் வீட்டுத் தோட்டத்தில்னும் முத்தைத் தரு பத்தித் திருப்புகழை வெற்றிக் கொடி கட்டுன்னும் மாத்தீருப்பாரு. ஆனா இப்பிடி காப்பியடிக்கலை.

படம் மொத்தத்துல சுமார்தான். ஆனா வந்த படங்கள்ள கொஞ்சமாச்சும் பாக்குற மாதிரி இருக்கிறது இதுதான். ஒரு வாட்டி பாக்கலாம்.

(கடைசியா ஒரு செய்தி. கஞ்சா கருப்பு இப்பிடியே போனா....காஞ்ச கருப்பா மாறீருவாருன்னு சொல்லுங்க.) //

சுருக்கமா இங்கன ஒரு விமர்சனத்தைப் போட்டுட்டீங்க ஜி.ரா. நன்றிங்க

Unknown said...

//ater waste padam nama alunka epathan thiruntha poranukalo thariyala //

அவிங்களும் எடுக்கறதை நிறுத்த மாட்டாய்ங்க.. நாமளும் பாக்கறத நிறுத்த மாட்டோம்..

Unknown said...

//எனக்கு என்னவோ இந்த படம் புடிச்சிப் போச்சுப்பா.. ஒரு விசயம் என்கூரூ :)))) அடுத்தது இத பாக்குறதுக்கு முன்னாடி ஆள்வாரும், போக்கிரியும் பாத்தேன்.... அதான் :))) //

ஜி.. ஏலேய் மக்கா நீயும் நம்ம முத்து நகர் தானாலே..

ம்ம்ம் அப்புறம் ஆழ்வார் பாத்த புண்ணியவான்கள்ல்ல நீயும் ஒருத்தனா.. மகான் தான்ய்யா நீயு

Unknown said...

//அந்த மூனு படத்துல இது ஒன்னுதான்... //

ம்ம்ம் அது சரி..:)

G.Ragavan said...

// தேவ் | Dev said...
//இந்தப் படத்துக்கு நான் விமர்சனம் எழுதனும்னு நெனச்சேன். நீங்க எழுதீட்டீங்க. அதுனால நான் வாபஸ் வாங்கிக்கிறேன். (நேரமில்லைன்னு வேற எப்படிச் சொல்றது)//

உங்களூக்குன்னு நம்ம பதிவுலக் மக்கள் ஒதுக்கிய படம் வீ யில் ஆரம்பித்து மி யில் முடியும் வீராச்சாமி என்ற திரைக்காவியம்.. அது மட்டும் நீங்க விம்ர்சனம் எழுதினாப் போதும் மத்ததை நாங்கப் பாத்துக்குறோம். //

ஏன் இப்பிடி? என்ன பாவம் செஞ்சேன் நானு? நல்லவேளைக்கி பெங்களூர்ல தமிழ்ப்படங்கள் கெடையாது. காவிரியாத்தா காப்பாத்தீட்டா! :-)

வெட்டிப்பயல் said...

ஜி.ரா,
30நிமிடத்தில் ஓசூர் போய் விடலாம்...
அங்கே சென்று வீராச்சாமி பார்த்து விமர்சனம் போடவும்...

Unknown said...

G.Ragavan said... /ஏன் இப்பிடி? என்ன பாவம் செஞ்சேன் நானு? நல்லவேளைக்கி பெங்களூர்ல தமிழ்ப்படங்கள் கெடையாது. காவிரியாத்தா காப்பாத்தீட்டா! :-) //


// வெட்டிப்பயல் said...
ஜி.ரா,
30நிமிடத்தில் ஓசூர் போய் விடலாம்...
அங்கே சென்று வீராச்சாமி பார்த்து விமர்சனம் போடவும்... //

ஜி.ரா. காவிரியாத்தா உங்களைக் காப்பாத்துனாலும் கலைத் தாய் வெட்டியை அனுப்பி உங்களுக்கு வீராச்சாமி பாக்க அழைப்பு விடுக்குறாளே இப்போ என்னச் சொல்லுறீங்க?

tamil10