Tuesday, February 13, 2007

தலைவரே இவிங்க உங்களை விடமாட்டாங்க


சொய்ங்க்ன்னு பறக்குது பாரு விமானம்....

அதுல்ல வேலைப் பாக்குற ஆபிசர் ஒருத்தன் தான் நம்மூர் அம்மாவைக் கண்ட மானமா ஏசிட்டானாம்..

அப்படியாண்ணே என் ரத்தம் கொதிக்குதுண்ணே..அவனை..

ஆமாடாப் படிச்ச எனக்கும் ரத்தம் கொதிச்சுப் போச்சி.. எம்புட்டு இருந்தா அப்படி பேசி இருப்பான்..

கரெக்ட்ண்ணே.. அவனை எல்லாம் நிக்க வச்சு நாக்கு தள்ளூற மாதிரி நாலு கேள்விக் கேட்டு மன்னிப்புக் கேட்க் வைக்கணும்ண்ணே..

அந்த ஆபிசர் யார்ண்ணே விவரம் சொல்லுங்க.. வெளிநாடு போற நம்ம அம்புட்டு இந்தியக் கூட்டத்தையும் கூட்டி கையெழுத்து இயக்கம் நடத்தி நம்ம பவர் என்னன்னு அவனுக்குக் காட்டிருவோம்ண்ணே..

செய்யலாமே.. அந்த ஆபிசர் பேர் கூட அந்தப் பத்திரிக்கையிலே இருந்துச்சே..

கொடுங்கண்ணே..அவரைப் பத்தி மொத்த டீடெயிலையும் நம்ம பத்திரிக்கைக் காரங்கப் போட்டுட்டாங்களாண்ணே..

அவரைப் பத்திப் போட்டா யார் படிப்பா

பொறவு யாரைப் பத்திண்ணே போட்டிருக்காங்க..

நம்ம சூப்பர் ஸ்டார் ரசினியப் பத்தில்லா போட்டுருக்காங்க..

அண்ணே அந்த லுப்தான்சா விமானக் கம்பெனியிலே நம்ம தலீவருக்கும் பங்கு இருக்காண்ணே..

அதெல்லாம் இல்ல டா

பொறவு.. சூப்பர் ஸ்டார் இந்திய விமானப் பயணிகள் மக்கள் இயக்கம் எதாவுது சைட்ல்ல ஆரம்பிச்சுட்டாரேண்ணே

ஏலே டவசர்பாண்டி .. நக்கல் வேண்டாம்... வாங்கி வீங்கிறப் போற.. அவர் நடிக்க சிவாசி படத்துக்கு ஷுட்டீங் போக அமெரிக்காவுக்குப் பிளைட் ஏற மனுசனும் அதே வரிசையில்ல நின்னு இருக்கார்...

புரியல்லண்ணே..

உனக்கெல்லாம் எல்லாம் விளங்கிருச்சுண்ணா நம்ம நாடும் விளங்கிருமேல்ல... இந்தா அந்த ஆளு என்னச் செஞ்சாலும் செய்யாட்டியும் அதை எழுதி அவர் படத்தை ஒன்ணைப் போட்டா பத்திரிக்கையும் விக்கும் அதைப் படிச்சுப் போட்டு நாலு பேர் திட்டுவான்.. இன்னும் நாப்பது பேர் ஏன்டா தலைவரை திட்டுனன்னு சண்டைக்குப் போவான்.. நமக்கும் பொழுது போவும்ல்லா..

அண்ணே நீங்க தலீவரை வச்சு காமெடி கீமெடி பன்ணல்லயே.. நான் டென்சன் ஆயிருவேன்னு சொல்லிருங்கண்ணே..

ஆகான்னு பேச்சை அத்தோட நிறுத்திகிட்டு தினந்தந்தியிலே இன்னிக்கு வந்து இருக்க ரஜினி வரலாறு படிக்க ஆரம்பிச்சுட்டேன்.. போதுமா மக்கா மேட்டர்
ஆஹா கிளம்பிட்டாங்கய்யா கிளம்பிட்டாங்க...மைக்க நீட்டீட்டாங்க... இனிமே அட்லீஸ்ட் உன் மூச்சை ரெக்கார்ட் ப்ன்ணி அதுக்கு எபெக்ட் கொடுத்து எழுதி ஆட்டம் போடாம அடங்க மாட்டாங்க..
டவுட்டே இல்ல..எம்புட்டு அமைதியா நீ இருந்தாலும் இவிங்க உன்னை விடமாட்டாயங்க.... நீ பாக்குற ஏரியாவைக் கவர் பண்ணி அடுத்த கவர் ஸ்டோரி வரப் போகுது பார்.. ரஜினியின் பார்வை சரியா? தவறா? ரெடி ஜூட்

7 comments:

நாமக்கல் சிபி said...

//ரஜினியின் பார்வை சரியா? தவறா? //

:))

இலவசக்கொத்தனார் said...

//:))//

ரிப்பீட்டேய்!!

மனதின் ஓசை said...

தேவு,
சூப்பர்..

ஆனா தூங்கறவன எழுப்பலாம்.. அந்த மாதிரி நடிக்கிறவன ஒன்னனும் பன்ன முடியாது..

திருந்த்தாத ஜென்மங்கள்.

Unknown said...

வாழ்ந்தாலும் ஏசும், தாழ்ந்தாலும் ஏசும். வையகம் இதுதானடா:-))

Anonymous said...

//நீங்களும் மறுமொழியலாம்//

முடியாது.இப்ப என்னா பண்ணுவே...?

k4karthik said...

//இனிமே அட்லீஸ்ட் உன் மூச்சை ரெக்கார்ட் ப்ன்ணி அதுக்கு எபெக்ட் கொடுத்து எழுதி ஆட்டம் போடாம அடங்க மாட்டாங்க.. டவுட்டே இல்ல..//

பன்னாலும் பன்னுவய்ங்க... :))

Anonymous said...

விமான நிறுவனத்தின் கோரிக்கை நியாயமானதே. அடிக்கடி வெளியூர் பயணம் செல்பவர்களுக்கு இது நன்றாகத் தெரியும்.

1. பயண நேரத்திற்கு 72 மணித்துளிகள் முன்னதாக பயண நேரத்தை மாற்றினால் அபராத தொகை வசுலிக்கப் பட மாட்டாது. நாம் கோரும் விமானத்தில் இடம் இருந்தால் அபராதத் தொகை இல்லாமல் செல்லலாம்.

2. பயணம் துவங்கும் நாளில் பயணத்தை தகுந்த காரணமில்லாமல் தள்ளிப் போட்டால் டிக்கட் தொகை முழுவதும் அம்பேல்.

3. மேலே குறிப்பிட்ட நிகழ்சியில் பயண நாளில் பயணத் தேதியை தள்ளி வைக்க கோரியதால் தான் அவர்கள் மருத்துவச் சான்றுடன் வருமாறு கூறியுள்ளார்கள். மருத்துவச் சான்றுடன் வந்ததால் தான் $200 கட்டச் சொல்லி இருக்கிறார்கள் இல்லையென்றால் முழுத் தொகையும் கட்ட்ட வேண்டும்.

இது அடிகடி பயணம் செயும் எல்லோருக்கும் தெரியும். சில சமயம் விமானத்தில் இடம் இருந்தாலோ அல்லது Frequent Flier மெம்பராகவோ இருந்தாலோ அபராதத் தொகை வசுலிக்க மாட்டார்கள். இதற்கு மேலாளர் அனுமதி வேண்டும் (உள்ளுர் பயணத்திற்கு மட்டும்)

இது ரஜினிக்குத் தெரிந்து இருக்கும் ஆகவே தான் பணத்தைக் கட்டி விட்டு பின்னர் புகார் கொடுக்கும்படி கூறியுள்ளார்.

மேலும் US செல்லும் பயணிகளிடம் விமான நிறுவன ஊழியர்கள் அதிக மாக தகராறு செய்ய மாட்டார்கள் ஏனெனில் அவர்கள் அங்கு சென்றவுடன் போனில் புகார் செய்தாலே போதும் அந்தப் புகார் விசாரிக்கப்படும்

tamil10