அதை எடுக்கணும் படமா எடுக்கணும்...
**$%%..அதே காட்டணும் ஊருக்கே போட்டுக் காட்டணும்..
போடணும் அதுக்கு மியுசிக் ஹாரிஸ் ஜெயராஜ் போடணும்..
எனக்கு வேணும்.. ஜோ வேணும்.. இந்தப் படத்துல்லயும் ஜோ ஹிரோயினா வேணும்..
எடுக்குறோம்...எந்தப் படம் எடுத்தாலும் அதுல்ல க்ரைமை ஒரு கலக்கு கலக்குணும்..
நாம யார்ன்னு ஊருக்குக் காட்டணும்.. பயப்படணும் படம் பாக்க வர்றவன் எல்லாம் அலறணும் இந்தப் படத்துல்ல என்னக் க்ரைம் கதையோ அப்படின்னு அலறணும்....."
இதைக் காக்க காக்க வில்லன் ஜீவன் திரையில் பேசும் குரலில் ஸ்டைலில் படிக்கவும் (நம்ம கௌதம் வாய்ஸ் தான்)
AN EPISODE IN A MEDICAL REPRESENTATIVE'S LIFE..
வேலி தாண்ட நினைக்கும் வெள்ளாட்டுக்கு மஞ்சத் தண்ணி தெளிக்கப் படுவது தான் படத்தின் கதை.
அதாவது கண்ணாலாம் ஆன நம்ம நாட்டாமை அவர் தங்கமணியை விட்டுட்டு லைட்டா மனசு சிலிப் ஆகி புதுசா ஒரு வைரமணியைப் பார்த்து பீலிங் ஆகி அவ்ர் லைப் எப்படி வீலிங் ஆவுதுன்னு சொல்லியிருக்கார் கவுதம்.
முதல் பாதி சென்னையின் புறநகர் ரயில் பயணம்.. சரத் வீடு குடும்பம் என ஒரே விதமானக் காட்சியமைப்புகளில் சலிப்புத் தட்டுகிறது.. இதற்கிடையில் JUVENILLE DIABETES என்னும் மருத்துவச் சமாச்சாரம் வேறு தொட்டுக்கோ தொடைச்சுக்கோ ரேஞ்சுல்லச் சொல்லி கதையை பில்டப்பு பண்ணுறாங்க..
நம்ம சரத்க்கு இது புதுமையான வேடம்..அதாவது ஒரு நடுத்தர வயது குடும்பத் தலைவர் வேடம்.. கச்சிதமாய் பொருந்துகிறார். அதிக வசனங்கள் இன்றி அமைதியான நடிப்பின் மனத்தைக் கொள்ளைக் கொள்கிறார். ஆனாப் பாருங்க மனுசருக்கு ரொமான் ஸ் தான் பாடாய் படுத்துகிறது. பாடல்களில் இயந்திரத் தனமான அசைவுகளில் சரத் மீது நமக்கே பரிதாபம் வருகிறது.
சரத்தின் தங்கமணியாக புது முகம் ஆன்டிரியா.. அம்மணி அம்சமாத் தான் இருக்காக. முதல் படத்திலேயே அம்மாவா நடிச்சிருக்காங்க துணிச்சலா. கணவனே கண் கண்ட தெய்வம் என்று வாழும் பாத்திரம். சரத் ரூட் மாறி மீண்டும் திரும்பி வந்து சேரும் போது அவரிடம் இவர் தன் மனக்குமுறல்களைக் கொட்டும் காட்சியில் கவனிக்கப் படுகிறார்.
ஜோ.. இன்னோரு லக்க..லக்கவிற்கான முயற்சி... கரு கரு விழிகளால் பாடல் அவருக்காக எழுதப்பட்டது வீண் போக வில்லை. ஆரம்ப ரயில் காட்சிகள் காதல் தேவதையாகவும் போக.. போக.. ஜோ எடுக்கும் விசுவரூபம் ரசிக்கும் படி உள்ளது.
மிலிந்த் சோமன்.. படத்தின் சர்ப்ரைஸ் பேகேஜ்.. இன்னொரு பாண்டியா ( காக்க காக்க வில்லன் பாத்திரம்) கவுதம் பின்னணி வாய்ஸ். மிலிந்த் மிரட்டலான அலட்டல் இல்லா நடிப்பு. மனிதருக்கு கண்கள் ப்ளஸ்.
ஹாரிஸ் பாடல்கள் தியேட்டருக்குக் கூட்டம் அழைத்து வரும் விசிட்டிங் கார்ட் இந்தப் படத்துக்கு. வழக்கமான கௌதம் - ஹாரிஸ் - தாமரைக் கூட்டணியில் இந்த் முறை இன்னொரு புதுமுகம் ரோகிணி.. ஒரு பாடல் எழுதியிருக்கிறார். நிறைவு. ஹாரிஸ் பின்னணி இசையிலேக் கொஞ்சம் கவனம் சேர்த்திங்கண்ணா நல்லாயிருக்கும்.. படம் பாக்குறவங்க காது பொழைக்கும். பாடல்காட்சிகளின் படமாக்கலில் கௌதம் பழைய படங்களின் பிடியில் இருந்துக் கொஞ்சம் வெளியே வாங்க ப்ளிஸ்
குறைவானப் பாத்திரங்கள்.. அளவானச் செலவு.. போட்டக் காசுக்கு நிச்சயம் லாபம் என்ற கணக்கில் வெளிவந்திருக்கும் படம்.
சரத்துக்கு இந்தப் படம் ஒரு திருப்புமுனை.. கௌதம்க்கு இது JUST ANOTHER அக்மார்க் கௌதம் டெம்ளேட் படம்..
நம்ம மருத்துவர் ராமனாதன் பார்வையில் பச்சைக் கிளி முத்துச்சரம்.
28 comments:
பாண்டியா பாணியில் கௌதமின் உணர்வுகளை சொன்ன முதல் சில வரிகள் சூப்பர் :) வெறும் கொலை, மிரட்டலா எடுக்காம மின்னலே மாதிரி எடுத்தா நல்லா இருக்கும்..படத்தோட வில்லன் getupகளையும் இவர் மாற்றணும்..
Pachai Kili Muthucharam
.... Based on....
Derailed (2005)
Advertising executive Charles Schine is just another Chicago commuter who regularly catches the 8:43 A.M. train to work. But the one day he misses his train and meets Lucinda Harris, his life is changed forever. Lucinda is charming, beautiful and seductive. Despite the fact that each are married with children, their attraction to one another is magnetic. Lunch dates quickly become cocktails after work, and before long, Charles and Lucinda's infatuation leads them to a hotel room. Their seemingly perfect affair goes terribly awry when LaRoche, a brutal stranger, breaks into their room and holds them at gunpoint. This once illicit liaison turns into a nightmare more dangerous and violent than either could have ever imagined. Charles' life soon becomes filled with deception, blackmail, violence and crime. Unable to confide in his wife or speak to the police, Charles finds himself trapped in a world he doesn't recognize, with no trace of the life he once knew.
Production Status: Released
Genres: Drama and Thriller
Running Time: 1 hr. 50 min.
Release Date: November 11th, 2005 (wide)
MPAA Rating: R for strong disturbing violence, language and some sexuality.
Production Co.: Patalex V Productions, di Bonaventura Pictures, Inc.
Studios: The Weinstein Company , Miramax Films
U.S. Box Office: $36,020,063
Filming Locations: London, England
Chicago, Illinois, USA
Joliet Correctional Center, Chicago, Illinois, USA
Produced in: United States
இதெல்லாம் இருக்கட்டும். இந்த படத்துக்கும் வாத்தியார் பாட்டுக்கும் என்ன சம்பந்தம்? அதைச் சொல்லுங்கப்பா!
//பாண்டியா பாணியில் கௌதமின் உணர்வுகளை சொன்ன முதல் சில வரிகள் சூப்பர் :) //
நன்றி ரவிசங்கர்
//வெறும் கொலை, மிரட்டலா எடுக்காம மின்னலே மாதிரி எடுத்தா நல்லா இருக்கும்..படத்தோட வில்லன் getupகளையும் இவர் மாற்றணும்.. //
கரெக்ட்ங்க ரவி.. கௌதம் புரிஞ்சுகிட்டு தன்னோட ல்ல இருந்து வெளியே வந்தா அவருக்கும் நல்லது படம் பாக்கறவ்ஙக்ளுக்கும் நல்லது.
தேவ் பார்ட்னர்.. சூப்பர் விமர்சனம்.
படம் ரெம்ப இறுக்கமாயிருந்துச்சு. பொழுதுபோக்கெல்லாம் இல்ல.
derailed அப்பட்டமா காப்பி பண்ணியிருக்கார்.
//இதெல்லாம் இருக்கட்டும். இந்த படத்துக்கும் வாத்தியார் பாட்டுக்கும் என்ன சம்பந்தம்? அதைச் சொல்லுங்கப்பா!//
கொத்தனார். படத்துக ஒரு பச்சைக்கிளி (மனைவி), ஒரு முத்துச்சரம்... இதனாலத்தான் ஜோவுக்கு அத்தன முத்துமாலையெல்லாம் போட்டு விட்டிருக்காரா? Great fashin sense.
சிவா சிவலிங்கம் உங்கள் வருகைக்கும் தருகைக்கும் நன்றி. மிகவும் விவரமானத் தகவல் சொல்லியிருக்கீங்க அதுக்கு ஒரு ஸ்பெஷல் நன்றிங்க.. அடிக்கடி நம்ம கச்சேரிக்கு வாங்கய்யா..
//இதெல்லாம் இருக்கட்டும். இந்த படத்துக்கும் வாத்தியார் பாட்டுக்கும் என்ன சம்பந்தம்? அதைச் சொல்லுங்கப்பா!
//
இது கேள்வித் தலைவ்ரே.. இப்போ நம்ம கருப்பு எம்.ஜி.ஆர் கட்சி எல்லாம் ஆரம்பிச்சு சூடு கிளப்பி சூரியனுக்கு ஜூரம் கொடுத்துட்டார் இல்ல ( இங்கே சூரியன்னா உதய சூரியன் இல்ல) அதுனால்ல நம்ம சரத் சிம்பாலிக்கா டைட்டில்ல நாட் வச்சு நகர்றார்.. மீதி விவரம் விருது நகர் மாநாட்டுக்கு வீறு கொண்டு விரைந்து வாங்க.. புரியும்.. என்ன ஏதாச்சும் விளங்கிச்சா தலைவ்ரே.. அரசியல் எல்லாம் நமக்கு ஏம்பா?
:-)
மதுராவோட பதிவை வைத்து பி.ஹெச்.டி செய்யலாம் என்று இருக்கேன். நீங்கள் உதவவேண்டும்
:))))))))))))))
//தேவ் பார்ட்னர்.. சூப்பர் விமர்சனம்.
படம் ரெம்ப இறுக்கமாயிருந்துச்சு. பொழுதுபோக்கெல்லாம் இல்ல.//
நன்றி பார்ட்னர்
கரெக்ட் வாரக் கடைசியைக் கொஞசம் ஜாலியாக் கழிக்கலாம்ன்னு தியேட்டருக்குப் போறவங்களுக்கு ஏமாற்றம் தான் மிஞ்சும் பார்ட்னர்
//derailed அப்பட்டமா காப்பி பண்ணியிருக்கார்.//
ஆமா சிறில் நம்ம சிவா அதுப் பத்திய தகவலைப் பின்னூட்டத்திலேப் போட்டிருக்கார் பாருங்க.. ஆமா நீங்க DERAILED பார்த்தீங்களா.. ரெண்டையும் பார்த்தா எது பெஸ்ட்ன்னு தோணுது?
//கொத்தனார். படத்துக ஒரு பச்சைக்கிளி (மனைவி), ஒரு முத்துச்சரம்... இதனாலத்தான் ஜோவுக்கு அத்தன முத்துமாலையெல்லாம் போட்டு விட்டிருக்காரா? Great fashin sense.//
படம் கௌதம் தான் எடுத்தாரா இல்ல அவுட் சோர்ஸ் பண்ணிட்டாரான்னு ஒரு டவுட் வருது எனக்கு?
//:-) //
வாங்க கலாபாரதி படத்தை நினைச்சுச் சிரிக்கிறீங்களா நான் போட்ட விமர்சனம் படிச்சுச் சிரிக்கிறீங்களா ஒண்ணும் புரியல்ல..
//மதுராவோட பதிவை வைத்து பி.ஹெச்.டி செய்யலாம் என்று இருக்கேன். நீங்கள் உதவவேண்டும்
:)))))))))))))) //
இது என்னங்க தமாஸ் ... !!!!
சீன் பை சீ டீரெயில்ட் தான், ஆனால் டீரெயில் ஆகாம நச்சுனு எடுத்துருக்காரு கௌதம்.
வில்லனுக்காக கௌதம் பேசரது இதுவே கடைசியா இருந்தா அவருக்கும் நல்லது, நமக்கும் நல்லது :)
ஜோதிகா, கலக்கல்ஸ், சரத் மனைவியா வரவங்களும் சூப்பர்.
நல்ல படம்!
unga vimarsanam than ippo ella it company la yum fwd mail a varudha ..anupinadhau nan than
!!!
பாக்கலையே மக்கா! பாக்கனும்னு நெனச்சேன். ஆனா பாக்க விடாம வேல சுத்திச் சுத்தி அடிச்சி திரும்ப பெங்களூருக்கே திருப்பி அனுப்பிச்சிருச்சே! ஆனாலும் எப்படியாவது பாத்துருவேன்னு நெனைக்கிறேன். பாத்துட்டுப் பதிவு போடுறேன்.
ஒரு ஜங்க் மெயில் வந்துச்சே...படத்தோட கதைய பத்தி!
ஏதோ ஒரு ஆங்கில பட டி.வி.டி வாங்குனா, ஒரிஜினல் வெர்ஷனை பாத்துடலாம்ன்னு. Derailed-ன்னு நினைக்கிறேன்.
Derailed இன்னும் பாக்கல..
பச். முத் பாத்து derailed ஆகிட்டேன்,,
அவ்வளவு மோசமில்ல..நல்ல த்ரில்லர்.. ஆனா நீங்க சொன்னதுபோல வார இருதியில ..
வேஸ்ட்.
//படம் கௌதம் தான் எடுத்தாரா இல்ல அவுட் சோர்ஸ் பண்ணிட்டாரான்னு ஒரு டவுட் வருது எனக்கு?
//
:-)))
திரைவிமர்சனமெல்லாம் நச்சுன்னுதான் எழுதறீங்க... ஒரு படம் விடுறதில்லை போல:-)
டீரெய்ல்ட் பார்க்க முடியாம அரை மணி நேரத்தில நிறுத்திட்டேன். அப்படின்னா இதையும் பாக்கப்படாது போலிருக்கு... அப்பட்டமான காப்பின்னு போட்டுக்கொடுத்த அனைவருக்கும் நன்றி
அதுசரி, நீங்களும் சிறிலும் இன்னும் பார்ட்னர்ஸ்தானா? பூப்பறிக்க வருகிறோம் இன்னொரு தடவை நடத்தலாமான்னு யோசிக்க வச்சிட்டீங்க...
ரெடியா?
//unga vimarsanam than ippo ella it company la yum fwd mail a varudha ..anupinadhau nan than
!!! //
நன்றி கார்த்திக்... நம்ம விமர்சனம் அப்போ உலகம் சுத்தி வருதுன்னு சொல்லுற... !!!!:-)
//சீன் பை சீ டீரெயில்ட் தான், ஆனால் டீரெயில் ஆகாம நச்சுனு எடுத்துருக்காரு கௌதம்.//
அப்படிங்களா? நான் டீரெயில்ட் பார்க்கல்ல.. ஆனா எல்லோரும் அதேத் தான் சொல்லுறாங்க.. இந்தப் படம் வந்து அந்தப் படத்துக்கு மவுசு ஏறிடுச்சு..
//வில்லனுக்காக கௌதம் பேசரது இதுவே கடைசியா இருந்தா அவருக்கும் நல்லது, நமக்கும் நல்லது :)//
ரொம்பச் சரியாச் சொன்னீங்க சர்வேசன்... ஆனா கவுதம் விட மாட்டாரு.. இன்னும் பேசுவார்.. பேசணும்ப்பாரு...பேசிகிட்டேத் தான் இருப்பார்..
//ஜோதிகா, கலக்கல்ஸ், சரத் மனைவியா வரவங்களும் சூப்பர்.
நல்ல படம்! //
கொஞ்சம் காமெடி சேர்த்து இருந்தா .. கொஞ்சம் நீளம் குறைச்சிருந்தா நானும் சொல்லியிருப்பேன் நல்ல படம்ன்னு..:)
கருத்துக்களுக்கு நன்றி சர்வேசன் :-)
//பாக்கலையே மக்கா! பாக்கனும்னு நெனச்சேன். ஆனா பாக்க விடாம வேல சுத்திச் சுத்தி அடிச்சி திரும்ப பெங்களூருக்கே திருப்பி அனுப்பிச்சிருச்சே! ஆனாலும் எப்படியாவது பாத்துருவேன்னு நெனைக்கிறேன். பாத்துட்டுப் பதிவு போடுறேன். //
ஜீ.ரா.. நீங்க இன்னும் வீராச்சாமியே பென்டிங்.. மொதல்ல அதை முடிங்கய்யா டெட்லைன் நெருங்குது உமக்கு :-)
//ஒரு ஜங்க் மெயில் வந்துச்சே...படத்தோட கதைய பத்தி!
ஏதோ ஒரு ஆங்கில பட டி.வி.டி வாங்குனா, ஒரிஜினல் வெர்ஷனை பாத்துடலாம்ன்னு. Derailed-ன்னு நினைக்கிறேன். //
கரெக்ட் சீனு அதே படம் தான்.. நம்ம மக்கள்ஸ் எல்லாரும் சொல்லியிருக்காங்கப் பாருங்க..
//Derailed இன்னும் பாக்கல..
பச். முத் பாத்து derailed ஆகிட்டேன்,,
அவ்வளவு மோசமில்ல..நல்ல த்ரில்லர்.. ஆனா நீங்க சொன்னதுபோல வார இருதியில ..
வேஸ்ட். //
பார்ட்னர் டூ பார்ட்னர் கருத்து ஓத்துப் போவுது பார்ட்னர் சியர்ஸ்;-)
//திரைவிமர்சனமெல்லாம் நச்சுன்னுதான் எழுதறீங்க... ஒரு படம் விடுறதில்லை போல:-)//
டாங்க்ஸ் நிலாக்கா... உங்க நிலாச்சாரல்ல போடுற அளவுக்குத் தேறுமாக்கா..
படம் பாக்குரது தானே நம்ம பொழுதுபோக்கு.. பொறவு தமிழ் படமெல்லாம் யாரை நம்பி எடுக்குறாவ?
//டீரெய்ல்ட் பார்க்க முடியாம அரை மணி நேரத்தில நிறுத்திட்டேன். அப்படின்னா இதையும் பாக்கப்படாது போலிருக்கு... அப்பட்டமான காப்பின்னு போட்டுக்கொடுத்த அனைவருக்கும் நன்றி//
அந்தப் படம் அவ்வளவு கடியா.. பட் நம்ம தமிழ் படத்துல்ல பாட்டு நல்லாயிருக்குங்க..
//அதுசரி, நீங்களும் சிறிலும் இன்னும் பார்ட்னர்ஸ்தானா? பூப்பறிக்க வருகிறோம் இன்னொரு தடவை நடத்தலாமான்னு யோசிக்க வச்சிட்டீங்க...
ரெடியா? //
என்னக் கேள்வி இது கண்டிப்பாப் பண்ணுங்க... ஆமா செகண்ட் இன்னிங்க்ஸ் எங்களைச் சேத்துப்பீங்களா இல்ல புதுமுகங்கள் மட்டுமா?
//தப்பு நடக்குது.. எல்லா இடத்துல்லயும் தப்பு நடக்குது..
அதை எடுக்கணும் படமா எடுக்கணும்...
**$%%..அதே காட்டணும் ஊருக்கே போட்டுக் காட்டணும்..
போடணும் அதுக்கு மியுசிக் ஹாரிஸ் ஜெயராஜ் போடணும்..
எனக்கு வேணும்.. ஜோ வேணும்.. இந்தப் படத்துல்லயும் ஜோ ஹிரோயினா வேணும்..
எடுக்குறோம்...எந்தப் படம் எடுத்தாலும் அதுல்ல க்ரைமை ஒரு கலக்கு கலக்குணும்..
நாம யார்ன்னு ஊருக்குக் காட்டணும்.. பயப்படணும் படம் பாக்க வர்றவன் எல்லாம் அலறணும் இந்தப் படத்துல்ல என்னக் க்ரைம் கதையோ அப்படின்னு அலறணும்....."
இதைக் காக்க காக்க வில்லன் ஜீவன் திரையில் பேசும் குரலில் ஸ்டைலில் படிக்கவும் (நம்ம கௌதம் வாய்ஸ் தான்)//
hahaha...tats a good one dev!
//டாங்க்ஸ் நிலாக்கா... உங்க நிலாச்சாரல்ல போடுற அளவுக்குத் தேறுமாக்கா..
//
வொய் நாட்... லேசா அங்கங்க சின்னதா டச் அப் வேலை மட்டும் செய்யணும் - பெரும்பாலும் எழுத்துப் பிழை கரெக்ஷனாத்தானிருக்கும்
அனுப்புங்களேன் - அடுத்த விமரிசனத்தை
Post a Comment