Tuesday, February 27, 2007

பின்னூட்டத் தமிழுக்குக் கட்டாய ஓய்வு தேவையா?

மன்றத்துக் கண்மணிகளே...

கழகத்து ஆற்றலரசுகளே...

சங்கத்துச் சிங்கங்களே..

ஓ தமிழ் பதிவுலகமே...


தமிழுக்குச் சங்கம் வைத்து தமிழ் வளர்த்தான் பாண்டிய மன்னன்.. பதிவுகளுக்குப் பின்னூட்டங்கள் அளித்து தமிழ் வளர்த்தான் இணையத்தில் இலவசமாய் நம் அண்ணன்..

வேடிக்கைப் பார்க்க வந்தவரை எல்லாம் வாடிக்கையாளராக்கி பின்னூட்ட எண்ணிக்கையில் சாதனைகளைக் குவித்து அந்தச் சாதனைகளைத் தமிழ்த் தாயின் பாதங்களுக்குக் காணிக்கையாக்கியவன் நம் தலைவன்..

ஒன்றா.. ரெண்டா...சாதனைகளைப் பட்டியலிட பதிவுலக வரலாற்றுப் பக்கங்களில் காட்டாறாய் ஓடியவன்... கயித்தாறு மாவட்டத்தின் தமிழ் மைந்தன் நம் பின்னூட்ட நாயகன்..

சாதனை.. சாதனை..சாதனை.. என்று ஒன்றே லட்சியமாய் வாழ்ந்து வரும் நம் பாசப் புயலுக்கு இன்று சோதனை..

ஆம் தமிழ் குலக் கொழுந்துகளே... அலுவலக வாழ்க்கை என்ற நெருப்பாற்றில் நீந்தி.. வேலை என்ற பளுமிக்க பாறையைச் சுமந்து... உறக்கம் என்னும் அரக்கனை வென்று... இணையத்தில் பின்னூட்டம் என்ற பூந்தோட்டத்தை நேரம் பாராது.. காலம் பாராது.. கண் எனவும்... உயிர் எனவும்.. உடைமை எனவும்.. பாராட்டி சீராட்டி வளர்த்த எம் பின்னூட்டப் பேரரசுக்கு இன்று பேராபத்து...

பதிவுகள் போட்டு தேயந்த விரல்களுக்குச் சொந்தமான என் இனிய இணைய தமிழ் மக்களே..

பதிவுப் போட்டு பல மணி நேரமாகியும் பின்னூட்டப் பசியில் நீங்கள் தவித்த அந்த நேரங்களை நினைத்துப் பாருங்கள்.. பிளாகர் வந்தானா அன்று உங்களை வாழ வைக்க.. அவன் பதிவு போட இடம் மட்டுமே கொடுத்தான்.. உங்கள் பதிவுகளின் வறுமை நீக்கி அவை வாழ உதவியது என்ன???

பின்னூட்டங்களே..அந்த பின்னூட்டஙகளின் மறு அவதாரமாய் நம்மிடையே வாழ்ந்து வரும பின்னூட்டச் செம்மல் இன்று வேதனையில் வாட நாம் அமைதி காப்பது நியாமா?

அலுவலத்தில் தன் மேலதிகாரி கேட்டக் கேள்விக்குப் பதில் சொல்ல நம் அண்ணன் தாமித்தத் தருணங்கள் வரலாற்றில் நிகழ்ந்திருக்காலாம்.. ஆனால் ஓ தமிழ் பதிவுலகினமே நீ உள்குத்து.. வெளிகுத்து.. வெவகாரக் குத்து என்று விதவிதமாய் வில்லங்கமாய் கேட்டு வைத்த எந்தக் கேள்விக்குமே அண்ணன் டெட் லைன் தாண்டி பதில் அளித்தது உண்டா? சிந்தித்துப் பார்...

இந்தியக் கிரிக்கெட் வீரர்கள் அடிக்கும் ரன்களை விட எங்கள் அண்ணன் ஒவ்வொரு பதிவிலும் அடித்து ஆடி குவித்ததிருக்குக் கிடைத்தப் பரிசா இது.... இது தகுமா? பொறுக்கலாமா இந்த சோதனையை...

பின்னூட்டச் சாதனைகளைப் பதிவுலக காவல்துறை பின்னூட்டக் கயமை என்ற புதியப் பெயரிட்டு அதைக் கடும் குற்றமென அறிவித்து ஓடுக்க நினைத்த அந்தக் காலக்கட்டத்தைச் சற்றே திரும்பிப் பார் தமிழனிமே.. அண்ணனைக் காவல் துறை அடக்க முடிந்ததா.. ஒடுக்க முடிந்ததா..

ஓ தமிழினமே..

ஒன்று படு..

பின்னூட்டத் தமிழ் காப்போம்...

வாழ்க பின்னூட்டம்..
வளர்க பின்னூட்டம்...

வாழ்க பின்னூட்டப் பேரரசு தலைவர் இலவசக் கொத்தனார்

இவண்
அகில இந்திய பின்னூட்டச் சூப்பர் ஸ்டார் இலவசக் கொத்தனார் ரசிகர்கள் நற்பணி மன்றம்
தலைமை நிலையம்
கொட்டிவாக்கம்
சென்னை.


பிகு.எதுக்கு இவ்வள்வு சவுண்ட்ன்னுப் பாக்குறீங்களா...

பின்னே நம்ம தமிழ்மணத்துல்ல இனி 30க்கு மேலே பின்னூட்டம் வாங்குனா அந்தப் பதிவுகளுக்கு வாலியண்டிரி ரிடையர்மண்ட்டாம் ( கட்டாய ஓய்வுத் திட்டமாம்) அதாவது 30க்கு மேல பின்னூட்டம் வாங்குனா அந்தப் பதிவு தமிழ்மணத்துல்ல தெரியாதாம்..

நம் பின்னூட்டத் தமிழனின் பல இமாலயச் சாதனைகளுக்கு உதவ வேண்டியவரே அண்ணனின் சாதனைகளுக்கு அணைப் போடுவது போல் ஆகாதா.. என்ன சோதனை இது.. தாங்க முடியா வேதனை இது.... கண்ணீர் கொட்டுதடா... இதயம் வலிக்குதுடா தோழா....

இதுப் பற்றி தலைவர் என்னச் சொல்லுறார்ன்னா..

23 comments:

வெட்டிப்பயல் said...

இதனால எல்லாம் எங்க தலைவரோட பின்னூட்ட எண்ணிக்கை குறையாது ;)

அபி அப்பா said...

தலைவரோட "சோதனை முயற்சி"யில போய் குமுறி 300 அடிச்சு மூச்சுமுட்ட வைப்போம் வாருங்கள் தோழர்களே!!!!

Anonymous said...

மிக்க நன்று. ரசித்தேன்.

துளசி கோபால் said...

இன்னும் 27தான் இருக்கு

MyFriend said...

:-))

வாழ்த்துக்கள். ;-)

இராம்/Raam said...

ஹிம் என்னத்தை சொல்ல......

"பி.க" என்ற வார்த்தையை வலைப்பூ அகராதியிலே இருந்து எடுக்க வேண்டியது தான் :(

மாசிலா said...

இதோ தமிழ்மணத்திற்கு நான் எழுதிய கண்டன கடிதம் :

மாசிலா
Your comment is awaiting moderation.
February 27th, 2007 | 2:51 am
மிகவும் வருந்தத் தக்க முடிவு.

தமிழ் மணத்தில் கும்மி, அரட்டை என்கிற நோக்கத்தில் ஒரு சில பதிவர்கள், அதிலும் முக்கியமாக இளைஞர்கர் அவர்கள் முறையில் தமிழை வளர்த்து வந்தார்கள். உங்களது இந்த திடீர் முடிவால் துடிப்புள்ள அத்தமிழ் உள்ளங்களை புண்படுத்தி இருக்கிறிர்கள் என்பதனை அறிவீராக. தமிழ்மணத்தை நல்ல முறையில் நிர்வகிப்பது என்பது அதன் கருத்து சுதந்திரத்தை பறிப்பது என்பது அல்ல.

தமிழ்மணத்தை உயர்ந்த சிந்தனையாளர், ஒழுக்க சீலர்கள், இலக்கியவாதிகள் தங்களுடைய தனிப்பட்ட சொத்தாக ஆக்க நினைத்து செய்த சூழ்ச்சி இது.

இம்முடிவினை மறுபரிசீலனை செய்து பழைய படி தமிழ்மணத்தை அனைவரும் புழங்கும் அருமையான பூங்காவாக ஆக்கும்படி கேட்டுக்கொள்கிறேன்.
மாசிலா.

Anonymous said...

இதற்கெல்லாம் அசர மாட்டோம்...ஈசலாய் பறந்த பின்னூட்டங்களை தடுக்க நினைத்தால், வெட்டுக்கிளியாய் பதிவுகள் போடுவோம் என எச்சறிக்கிறோம்

Anonymous said...

30 பின்னூட்டம் இருக்கற பதிவிற்கு கட்டாய ஓய்வு...சரி!

பின்னூட்டமே இல்லாமல் அல்லலுறும் பதிவுகளுக்கு...

சேஞ்ச் & ரீப்ளேஸ்மண்ட் தான் உலகமய்மாக்களின் கட்டாய கொள்கை?

ஜி said...

முப்பதைத் தாண்டும் பதிவுகளுக்கு ஓய்வு கொடுக்கும் இவர்கள், பின்னூட்டம் ஒன்று கூட பெறாத பதிவுக்கு முப்பதைப் பெறுவதற்காகவாவது முயற்சி செய்வார்களா??

என்னவென்று சொல்வது இந்தச் சோதனையை...

கொலை வாளினை எடுடா...
கமெண்ட் பலப்பல போடுடா...

Syam said...

30 பின்னூட்டத்துக்கு மேல் இருந்தால் கட்டாய ஓய்வா...என்னாது இது சிறுபிள்ள தனமா... :-)

Boston Bala said...

:))

Anonymous said...

விடிஞ்சதா மூஞ்சி கழுவினமா இல்லே தமிழ்மணத்துல கண்ணிலே பட்ட நாப்பது பதிவுக்கு ப்ளாக்குக்கு நாலு லீட்டர் கணக்குல விளக்கெண்ணை பின்னூட்டக்கும்மிக்கு கைகொடுக்கும் கையா(ளா)னோமாங்கிற மெண்டாலிட்டி ஒழிந்தாலே இந்த ப்ராப்ளம் ஸால்வ்ட்.
விளக்கெண்ணைக்கும்மி விருதுக்குப் போராடும் து** **ல், யோ** - **ஸ், மு.******ன் மக்கள்ஸின் கோரிக்கைய செவிமடுத்து ஆவன செய்வார்களா?

கதிர் said...

இதுல ஒரே நன்மை என்னன்னா
நம்மளோட பதிவு தமிழ்மணத்துல தெரியலன்னு வெச்சிக்கோங்க முப்பதுக்கு மேல கமெண்டு வந்துடுச்சி அதனாலதான் தெரியமாட்டேங்குதுன்னு பீலா விட்டுக்கலாம்.

:))

கதிர் said...

முப்பது கமெண்டே ஓவரா நினைக்கறவங்களுக்கு நான் சொன்னது.
நாங்கள்லாம் அந்த லெவல்லதாம்யா இருக்கோம்.

கதிர் said...

இதனால கொத்சை மட்டும் கட்டம் கட்டப்படுவதை எதிர்க்கிறேன். என்னவோ இதுக்கெல்லாம் காரணம் அவர்தான் என்பது போல இந்த பதிவு தெரிவிப்பதால்.

ஏதோ நம்மாள முடிஞ்சது. :))

Santhosh said...

//தமிழ் மணத்தில் கும்மி, அரட்டை என்கிற நோக்கத்தில் ஒரு சில பதிவர்கள், அதிலும் முக்கியமாக இளைஞர்கர் அவர்கள் முறையில் தமிழை வளர்த்து வந்தார்கள். உங்களது இந்த திடீர் முடிவால் துடிப்புள்ள அத்தமிழ் உள்ளங்களை புண்படுத்தி இருக்கிறிர்கள் என்பதனை அறிவீராக. தமிழ்மணத்தை நல்ல முறையில் நிர்வகிப்பது என்பது அதன் கருத்து சுதந்திரத்தை பறிப்பது என்பது அல்ல.//
மாசிலா,
This is a big joke. பின்னூட்டம் மூலம் எப்படி தமிழ்வளரும். 30க்கு மேல் பின்னூட்டம் பெறும் பதிவுகள் பெரும்பாலும் ஜல்லியாகவே இருக்கும். "நீ ஊருக்கு போனியா எப்படி இருந்தது" இதுலயா தமிழ் வளரும். நல்ல காமெடி சார் உங்க கூட.

Anonymous said...

//ஆம் தமிழ் குலக் கொழுந்துகளே... அலுவலக வாழ்க்கை என்ற நெருப்பாற்றில் நீந்தி.. வேலை என்ற பளுமிக்க பாறையைச் சுமந்து... உறக்கம் என்னும் அரக்கனை வென்று... //



தமிழ்மனத்தின் இந்த அணுகுமுறை தவறானது என்பது என் எண்ணம்.

//30க்கு மேல் பின்னூட்டம் பெறும் பதிவுகள் பெரும்பாலும் ஜல்லியாகவே இருக்கும்.//

ஒரு சில பதிவுகள் அப்படி இருக்கலாம்.. ஆனால் நல்ல விவாதங்கள் உள்ள பதிவுகள் அனைத்திலும் உள்ள பின்னுட்டங்கள் 30தை விட அதிகம்..அவை கவனிக்கப்படாமல் போக வாய்ப்புண்டு இதனால்.. தவறான வழியை தேர்ந்தெடுத்துள்ளார்கள்.

Manathin osai

Santhosh said...

//ஒரு சில பதிவுகள் அப்படி இருக்கலாம்.. ஆனால் நல்ல விவாதங்கள் உள்ள பதிவுகள் அனைத்திலும் உள்ள பின்னுட்டங்கள் 30தை விட அதிகம்..அவை கவனிக்கப்படாமல் போக வாய்ப்புண்டு இதனால்.. தவறான வழியை தேர்ந்தெடுத்துள்ளார்கள்.///
ஆரோக்கியமான விவாதம் எல்லாம் தமிழ்மணத்துல நடந்து ரொம்ப நாட்கள் ஆகுது. எதிர்கருத்து சொல்லவருபவர்களின் கருத்துக்கு பதில் சொல்லுவதை தவிர்த்து அவர்களின் ஜாதி முதல் கொண்டு பிற சொந்த வாழ்க்கை எல்லாம் வெளியே வரும்.

மாசிலா said...

சந்தோஷ்//"நீ ஊருக்கு போனியா எப்படி இருந்தது" இதுலயா தமிழ் வளரும். நல்ல காமெடி சார் உங்க கூட.//
வாங்க வாங்க சந்தோஷ்!
இன்றைக்கு தமிழ் சாகாமல் வாழ்ந்துகொண்டு இருப்பதற்கு அதன் இலக்கியமோ, தமிழ் அறிவாளிகளோ, தமிழ் சிந்தனாவாதிகளோ, தமிழ் புத்திசாலிகளோ காரணம் இல்லீங்க. குழைந்தையிலே இருந்து, வீட்டில், வெளியில், பள்ளியில், ஊரில், சேரிகளில், வேலை செய்யும் இடங்களில், நாடகம், கலைகள், திரைகள் ஆகிய இவர்களே இன்றும் தமிழ் சாகாமல் உயிருடன் வாழ்ந்து கொண்டிருப்பதற்கு பொறுப்பாளர்கள். கவிதைகள், இலக்கியங்கள், மத போதகங்கள் ஆகிய இவையெல்லாம் வீட்டிற்கு உதவா ஏட்டுச்சுரக்காய் அன்பரே. இவைகள் கொஞ்சம் தேவை எனினும் இவைகளே முழுத்தமிழ் ஆகிவிட முடியாது. தமிழ்மணத்தில் இருந்த சுதந்திர தமிழ் இப்போது சில கயவர்களால் சிறைபிடிக்கப் பட்டிருக்கிறது. அயல் நாடுகளுக்கு புலம்பெயர்ந்து இருக்கும் அநேக இளம் தமிழ் உள்ளங்கள் தம்மிட்டம் போல் மகிழ்ச்சியுடன் கலாய்த்துக் கொண்டும், கிண்டல்கள் செய்துகொண்டும் இணையம் மூலம் தங்களுக்கு தெரிந்த தமிழில் மகிழ்ச்சியுடன் வாழ்ந்தவர்களை புண்படுத்தி இருக்கிறது இப்புதிய சட்டம். துறை சார்ந்த வல்லுனர்கள் கூகளிலோ அல்லது யாஹூவிலோ போய் குழுக்கள் ஏற்படுத்தி தமிழ் பழகட்டுமே. யார் வேண்டாம் என சொன்னது?
நான் ஏற்க்னவே எழுதியதுபோல், பாசிச உணர்வு கொண்ட சில ஆதிக்க வெறியர்கள் தமிழ்மணத்தில் தலைதூக்க ஆரம்பித்து இருக்கின்றனர். எழுத்து மற்றும் கருத்து சுதந்திரத்தை நிர்வாகத்தோடு போட்டு குழப்பி தமிழ்மணத்தை ஊனமாக்கி இருக்கிறது இத்திட்டம். இது தேவை இல்லாத ஒன்று.

மாசிலா said...

மேலும் ஒரு கேள்வி!

இன்று பின்னூட்டங்களுக்கு அளவு வைத்திருப்பவர்கள், நாளை இடும் பதிவுகளுக்கே அளவு வைக்கமாட்டார்கள் என்பதற்கு என்ன உதரவாதம்?

Unknown said...

வந்து கருத்துச் சொன்ன அம்புட்டு மகாசனத்துக்கும் நம்ம நன்றிங்க... நல்ல தீர்வு கிடைக்கும் அது வரை நம்மக் கச்சேரிக்கு வழி தெரியும்ல்ல எல்லாரும் வந்துப் போங்க மக்கா..

நாமக்கல் சிபி said...

ஐயஹோ! என்ன இது! சில நாள் பதிவுலகில் கவனம் செலுத்தாதிருந்தேன்.

பின்னூட்டப் புயலாருக்கு வைத்த ஆப்பை அறிந்து அதிர்ச்சியுற்றேன்!

இதற்கு என் கண்டனத்தை தெரிவிக்கும் விதமாக நான் இங்கே இட எண்ணிய 30 க்கும் அதிகமான பின்னூட்டங்களை என் வலைப்பூவில் தனிப் பதிவுகளாக இடுகிறேன்.

tamil10