Thursday, February 08, 2007

மாப்பிள்ளை ரஜினி ராம்கிக்கு வாழ்த்துக்கள்

என்னைத் தமிழ் வலையுலகுக்கு அழைத்து.. தமிழில் தட்டச்சப் பொறுமையாக வழி காட்டிய தமிழ் பதிவுலகின் முன்னோடியும், ரஜினி சப்தமா, சகாப்தமா, மு.க. போன்ற நூல்களை எழுதி எழுத்துலகில் தனக்கென ஒரு முத்திரை பதித்துக் கொண்டிருப்பவருமான அன்பு நண்பர்.. ரஜினி ராம்கி நாளை மணநாள் காண்கிறார்..

இந்த சந்தோஷமானத் தருணத்தில் மாப்பிள்ளை ராம்கியையும் மணமகளையும் மனமார வாழ்த்துகிறேன்..

இல்லறத்தில் இனிமைக் கண்டு எல்லா வளமும் பெற்று ஆல் போல் தழைத்துச் சீரோடும் சிறப்போடும் வாழ மணமக்களை வாழ்த்துக்கிறேன் ...

தலைவர் டச் இல்லாம வாழ்த்து நிறையுமா



இருக்கே....

"நூறு வருஷம் இந்த மாப்பிள்ளையும் பொண்ணும் தான்
பேரு விளங்க் இங்கே வாழனும்
சோலை வனத்து ஒரு சோடிக்குயில் போலத் தான்
காலம் முழுக்க சிந்துப் பாடணும்'


தலைவரின் முழு வாழ்த்தையும் கேட்க இங்கேச் சுட்டுங்க..

HAPPY MARRIED LIFE RAMKI !!!!

11 comments:

துளசி கோபால் said...

ஆமாமாம். பொழுது விடிஞ்சாக் கல்யாணம்.
மனம்போல வாழ்வு அமையட்டும்.

நல்லா இருங்கப்பா மணமக்களே.

சென்ஷி said...

வாழ்த்தில் நானும் பங்கு கொள்கிறேன்
வாழ்த்த அனைவரையும் அன்போடு அழைக்கிறேன்.



சென்ஷி

மணியன் said...

ரஜினி ராம்கி : திருமண வாழ்த்துக்கள்!!
அன்பும் அறனும் உடைத்தாய இல்வாழ்க்கை அமைந்து வளங்களும் மகிழ்ச்சியும் பெருக வாழ்வீராக !

Karthikeyan said...

மாப்பிள்ளை ராம்கியையும் மணமகளையும் மனமார வாழ்த்துகிறேன்..

அபி அப்பா said...

ரஜினி ராம்கி எல்லாவளமும் பெற்று வாழ வாழ்த்துக்கள்.
(மயிலடுதுறையில் எங்கே கல்யாணம்?)

மனதின் ஓசை said...

இனிமையான இல்வாழ்க்கை அமைய உளம்கனிந்த வாழ்த்துக்கள்

பினாத்தல் சுரேஷ் said...

இனிய நண்பர் ராம்கிக்கு இனிய திருமண வாழ்த்துகள். (நான் ரஜினிராம்கின்னு சொல்றதில்லஏன்னு ஒரு கொள்கை வச்சிருக்கேன்:-))

தேவ், அத்தனை வாழ்த்துகளையும் பண்டில் செய்து கொண்டு போய் சேர்த்துடுவீங்க இல்ல?

Unknown said...

இது வரை நம்ம மாப்பிள்ளையை வந்து வாழ்த்திய துளசி அக்கா, சென்ஷி, மணியன், கார்த்திக், அபி அப்பா, மனதின் ஓசை , பினாத்தலார் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள்

Unknown said...

//தேவ், அத்தனை வாழ்த்துகளையும் பண்டில் செய்து கொண்டு போய் சேர்த்துடுவீங்க இல்ல? //

நம் அனைவரது வாழ்த்துக்களும் நிச்சயம் மாப்பிள்ளைக்குப் பார்சல் செய்யப்படும் பினாத்தலாரே..

Unknown said...

அபி அப்பா said...
மயிலடுதுறையில் எங்கே கல்யாணம்?)

இன்று காலை ரஜினி ரசிகர் மன்ற தளபதி சத்யநாராயணா அவர்களின் தலைமையில் மயிலாடுதுறை வி.ஆர்.எஸ் திருமண மண்டபத்தில் திருமணம் நடைபெறுகிறது,

சுவாமி said...

வாழ்த்துக்கள் ராம்கி. பதிவே போடாத அளவுக்கா வெறுத்து போய்ட்டீங்க?
Very best wishes!

சுவாமி

tamil10