Sunday, April 01, 2007

ஜி.ராகவனின் கள்ளியிலும் பால் படிச்சீங்களா?

வீக் என்ட் எல்லாரும் ரிலாக்சாக் கால் கையை நீட்டிகிட்டு ஸ்டார் ரிப்போர்ட்டருக்குக் காத்துக் கிடப்பீங்கன்னு தெரியும்.. அதான் பந்த் அன்னிக்குக் கூடக் கடைச் சாத்தாமக் கடமை ஆத்தக் கிளம்பி வந்துட்டோம்... இந்த தடவை நம்மக் கிட்டச் சிக்குனவரு.. சும்மா பலமுக மன்னன்ங்க... மகரந்தம்ன்னு பதிவு பேர்.. ஆனா அண்ணாச்சி புகுந்து வராத ஏரியாவே கிடையாது...

இப்போ ரிசன்ட்டா.. நம்மாளு கள்ளியிலும் பால்ன்னு ஒரு தொடர் எழுதுனாரு... படா சுவராஸ்யமாக் கதைப் போச்சு... சொம்மா அந்தக் காலத்து பாலச்சந்தர் டைப் மேட்டர் கதை... கதையைப் படிச்ச ஓடனே.. அவர் கிட்டப் பேச ட்ரை பண்ணா.. அண்ணாச்சி பிசி பிசின்னு தான் லைன்ல்ல் வருது...
அப்பாலே எதோ தமிழ் மணம் புண்ணியத்துல்ல நாம வேற ஸ்டார் ரிப்போர்ட்டர் ஆயிட்டோமா.. அத்தோடு ஓலகப் புகழ் எல்லாம் வந்தவுடன அண்ணாச்சிக்கு மறுபடியும் போன் போட்டோம்.. அவர் இப்போவும் பிசி... பட்

இப்போ நான் ஸ்டார் ரிப்போர்ட்டர் ஸ்பீக்கீங்ன்னு தான் சொன்னேன்.. உங்களூக்காகவும் உங்க பேன் ஸ்க்காகவும் தாரளாமப் பேசலாமேன்னு ஜி.ரா சொல்ல.. அப்புறம் என்ன கேள்வியை எல்லாம் அடுக்கு அடுக்குன்னு அடுக்கிட்டோம் இல்ல... ஓவர் டூ ஜி.ரா..

கள்ளியிலும் பால் நிஜ வாழ்க்கைச் சம்பவங்களின் பிரதிபலிப்பா.. நேர்மையானப் பதில் தாருங்கள்?

பதில் : இல்லை. அதாவது எனக்குத் தனிப்பட்ட முறையில் தெரிந்த வகையில் இல்லை. ஆனால்....அனைவருக்கும் தெரிந்து மூன்று எடுத்துக்காட்டுகள் சொல்ல முடியும்.
1. விவியன் ரிச்சட்ஸின் குழந்தைக்குத் தாயார் யார்? தெரிந்ததுதானே.
2. கனிமொழியின் தாயார்...கனிமொழியின் தந்தைக்கு மனைவியா? துணைவியா?
3. ஜெயலலிதாவிற்கும் யாருக்கும் தெரியாமல் குழந்தை இருப்பதாகச் சொல்கின்றார்களே!
இன்னொன்று..இங்கு நான் குறிப்பிட்ட யாரையும் தனிப்பட்ட முறையில் தாக்குவதாகக் கருதக்கூடாது. அவரவர் வாழ்க்கைக்குத் தக்க முடிவை அவர்கள் எடுத்துக்கொண்டார்கள். அதற்கு அவர்களும் அவர்கள் குடும்பங்களுமே பொறுப்பு.

கள்ளியிலும் பால் கதையை நீங்கள் எழுதியதின் நோக்கம் என்ன? அந்த நோக்கம் நிறைவேறி விட்டதாக உணர்கிறீர்களா?

ம்ம்ம்ம் நோக்கம் நிறைவேறியதான்னு எனக்குத் தெரியாது. அதுல நான் சொல்ல வந்தது...ஒருவருடைய வாழ்க்கையை அவரே முடிவு செய்யும் பொழுது நாம் ஆதரிக்காவிட்டாலும் சரி...எதிர்க்கக்கூடாது என்பது அதில் நல்லது கெட்டதுகளை எடுத்துச் சொல்லலாம்..ஆனால் குறுக்கே விழுந்து தடுப்பதெல்லாம் டூ மச்

சரி கதைக்கு வருவோம்... சந்தியாவின் பாத்திரப் படைப்பில் நிறைய முரண்கள் தெரிகிறதே.. அவளை வெறும் உடல் பசி எடுத்த ஒரு பெண்ணாய் சித்தரித்து இருப்பது பெண்ணியவாதிகளிடம் உங்களுக்கு எதிர்ப்பைச் சம்பாதித்து தர வில்லையா? ஒரு வேளை அவர்கள் உங்கள் கதையைப் படிக்கவில்லையோ?

இல்லை கண்டிப்பாக இல்லை. கதையைப் படிக்காமலலி்ருந்தார்கள் என்று நம்பவில்லை. ஆனால் பலர் கருத்துச் சொல்லத் தயங்கினார்கள். ஆண்கள் உட்பட என்னிடம் தனிப்பட்ட முறையில் கருத்துகளைச் சொன்னவர்களும் உண்டு

சந்தியாவின் அடிப்படைப் பிரச்சனை என்ன? அதுப் பற்றி கதையில் எந்த விதமான தகவ்லும் இல்லையே... WAS IT INTENTIONAL?

இல்லை. Not intentional. சந்தியாவிற்கு நான்கு இட்டிலி போதவில்லை. பத்து இட்டிலி சாப்பிடுகிறாள்.அவ்வளவுதான். அதுகூட பிரச்சனை என்று நான் கருதவில்லை. ஆகையால்தான் அதைப்பற்றி விளக்கிக்கொண்டிருக்கவில்லை.

திருமணத்திற்குப் பிறகு சந்தியாவும் சராசரி பெண்ணாய் செக்ஸ் உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்தி எழுந்துச் செல்வது போல் காட்டியதன் அர்த்தம் என்ன?

பதில்: திருமணத்திற்குப் பிறகு அவளுக்கு செக்ஸ் உணர்ச்சி எழக்கூடாதா? எழுந்தால் என்ன செய்து கொள்ளலாம் என்று அவள் கணவனோடு ஒப்புக்கொண்ட படிதானே செய்தாள். அதைச் சொல்லித்தானே சந்தியா திருமணத்திற்கு மறுத்தாள். ஆனாலும் தானும் அப்படித்தான் இருக்கப் போவதாகவும்...ஆகையால் சுதந்திரம் இருவருக்கும் உண்டு என்று ஒப்புக்கொண்டுதானே சரவணன் திருமணப் பேச்சையே எடுத்தான். ஆனால் இருவருமே....அந்தச் சுதந்திரத்தைத் தூக்கிப் போட வேண்டியதாகப் போயிற்று. அதற்குக் காரணம்...இருவருக்குமே அடிப்படையிலேயே ஒருவர் மீது ஒருவர் கொண்ட அன்பு. அடுத்தது குழந்தை.

கதையின் கடைசி அத்தியாயம், குறிப்பாக சந்தியா யாரோ முகம் தெரியாத ஒரு வாலிபனோடு நெருக்கம் காட்டுவதுமாய் அதுவும் இன்னொரு ஆணின் முன்னிலையில்.. இது பெண்களின் சுயமரியாதையை அவமதிக்கும் படியாக உள்ளதே?

இரண்டு ஆண்கள் இருக்கையில்..ஒரு பெண்...ம்ம்ம்....எல்லாப் பெண்களும் அப்படித்தான் என்று சொல்ல முடியாது. சந்தியாவிற்கு அது கடினமாக இல்லாத பொழுது...நமக்கென்ன அதுவுமில்லாமல்...அவளுக்கே தெரியாமல் ஒரு உறுத்தல் வருவதும் அப்பொழுதுதான்..ஆகையால் கதைக்கு அது தேவையானதே

பல பால் உறவுகளைச் சுட்டியிருப்பது இடைச்செருகலாகவும் பரபரப்புக்காக நுழைக்கப்பட்டதும் போல் தோன்றுகிறதே தவிர்த்திருக்கலாமோ?

பதில் : கண்டிப்பாகத் தவிர்த்திருக்கலாம். ஆனால் எழுதுகையில் அப்படி எழுத வேண்டுமென்று தோன்றியது. ஆனால் அப்படிப்பட்டவர்களும் இருக்கத்தானே செய்கிறார்கள்...என்று எண்ணி மாற்றவில்லை.

தனிப்பட்ட முறையில் சந்தியாவைப் பற்றி உங்கள் கருத்து என்ன?

பதில்: அவள் ஒரு நல்ல பெண்

நம் சமூகத்தில் வாணிகளும் உண்டு.. சந்தியாக்களும் உண்டு... வாணிகளின் வாழ்க்கை முறை தான் சரி என்ற வாதத்தை எதிர்க்கிறீர்களா?

பதில்: இல்லை. நிச்சயமாக இல்லை. சந்தியாவிற்கு அவள் விரும்பிய வகையில் வாழ உரிமை உண்டு என்றால் வாணிக்கும் அந்த உரிமை உண்டு. தனி வீடு விரும்பிகள் தனிவீடு கட்டுகிறார்கள். அப்பார்ட்மெண்ட் விரும்பிகள் அப்பார்ட்மெண்ட் வாங்குகிறார்கள். அதற்கு அவர்களது பொருளாதாரச் சூழ்நிலையும் ஒரு காரணியாகிறது.

கதையின் முடிவை ஒரு குழந்தையின் கையில் கொடுத்து விட்டதன் நோக்கம் குடும்ப சென்டிமென்ட்டா?

பதில்: இல்லை. அவர்கள் இருவருக்குமே குடும்ப வாழ்க்கை புதிது. அதுவும்..அவர்கள் குடும்பத்திற்குள் நுழைந்ததே குழந்தையால்தான். தனக்கு ஒரு குழந்தை இருக்கிறது என்ற எண்ணமே....அவர்கள் மனதில் இந்த மாற்றத்தை உண்டாக்கி விட்டது. அவர்கள் அன்பற்றவர்களாக இருந்திருந்தால்..தூக்கிப் போட்டு விட்டு போயிருப்பார்கள். ஆனால்..அப்படியில்லையே.

ஜி.ரா.. பதிவுலகின் ஜென்டில்மேன் என்று ஒரு பட்டம் உள்ளது உங்களுக்குத் தெரியுமா? உங்கள் படைப்புகளின் வாயிலாக உங்களைப் படிப்பவர்களுக்கு நீங்கள் பொறுப்பானக் கருத்துக்கள் சொல்ல வேண்டும் என்ற கடமையை ஏற்றுகொள்கிறீர்களா?

பதில்: பதிவுலக ஜெண்டில்மேனா? நானா? :-) கிழிஞ்சது போங்க.கிண்டல் பண்ணவும் அளவு வேண்டாம்! கருத்துச் சொல்வது! அது அறிவாளிகளின் கடமை. அறிவு இருப்பதாகக் கருதுகிறவர்கள் சொல்கிறார்கள். என்னை அந்த வகையில் சேர்க்க வேண்டாம். மனதைப் பாதித்ததைச் சொல்லிக்கொண்டு போகிறேன். அதில் நல்லது எது கெட்டது எது என்பதைக் காலமும் பதிவுலகமும் தீர்மாணிக்கட்டும். தளும்பாமல் இருக்க நான் நிறைகுடம் அல்ல என்பதை மட்டும் உணர்ந்தவன் நான். ஆகையால்....அதீத எதிர்பார்ப்புகள் வேண்டாம். :-)

நாளை... ஏன் இன்றே சந்தியா போன்ற ஒரு பெண்ணை சந்திக்க நேர்ந்தால் உங்கள் ரியாக்ஷன் என்னவாக இருக்கும்?

பதில்: ஒரு ரியாக்ஷனும் இருக்காது. எப்படி இருக்கீங்க? சுந்தர் நலமா? சரவணன் நலமா என்று மட்டும் கேட்பேன்.

கடைசியா ஒரு கேள்வி... உண்மையைச் சொல்லணும்.. கள்ளியிலும் பால்.. சும்மா ஒரு பரபரப்புக்காக.. கவர்ச்சி கில்மாக்கள் கலந்து எழுதப்பட்டது என்பது தானே உண்மை...

பதில்: தெரியலை தேவ். ஆனா ஒன்னு உண்மை. பெண் சுதந்திரம் என்பதை ஆண் தரக்கூடாது. பெண்ணே எடுத்துக்கொள்ள வேண்டும் என்று நம்புகிறவன் நான். பொதுவில் எந்தச் சுதந்திரமும் அப்படித்தான். வேணுங்கிறவங்க எடுத்துக்கனும். அதே நேரத்துல அடுத்தவங்க சுதந்திரத்தையும் மதிக்கனும். அவ்வளவுதாங்க.

நன்றி ஜிரா.

18 comments:

இலவசக்கொத்தனார் said...

ஏம்பா தேவு, என்ன சொன்னலும் கேட்க மாட்டேங்கிற. நேத்தும் இப்படித்தான், கேள்வியா கேட்காம ஒரு முடிவோட கேட்டா மாதிரி இருந்தது. இன்னைக்கும் பாரு, ஜிரா எவ்வள்வு பெரிய ஆளு. ஆன்மீகம் என்ன, இலக்கியம் என்ன, மயிலார் என்னன்னு எவ்வளவோ பரிமாணம். அந்த ஒரு கதைக்குள்ள அவரை கட்டிப் போட்டிருச்சு பாருங்க உங்க மனசாட்சி. நான் நேத்து சொன்னதைத்தான் இன்னைக்கும் சொல்லறேன். உம்ம மனசாட்சி உமக்கு குழி தோண்டுது. அதை நம்பாதே.

வெட்டிப்பயல் said...

naan seconduuuu

வெட்டிப்பயல் said...

தேவ் கேள்விகள் சூப்பர்... நீங்க நிஜமாலுமே ரிப்போர்ட்டரா கண்டினியூ பண்ணலாம்.

ஜி.ராவினுடைய பதில்கள் அருமையிலும் அருமை... மனதிலிருந்து வந்த வார்த்தைகள்.

MyFriend said...

கேள்விகளும் சூப்பர்.. பதில்கள் அதைவிட சூப்பர் அண்ணா. :-)

(இந்த வாரம் முடிய போகின்றது என்ற உண்மையை நினைத்தால் கவலையாக இருக்கு.. :-( )

நாமக்கல் சிபி said...

//பெண் சுதந்திரம் என்பதை ஆண் தரக்கூடாது. பெண்ணே எடுத்துக்கொள்ள வேண்டும் என்று நம்புகிறவன் நான்//

அருமையான பதில் ராகவன்.

சபாஷ்!

நாமக்கல் சிபி said...

//மனதிலிருந்து வந்த வார்த்தைகள். //

யார் மனதிலிருந்து? பாலாஜி. தேவ் மனசிலிருந்தா?

:))

நாமக்கல் சிபி said...

//நீங்க நிஜமாலுமே ரிப்போர்ட்டரா கண்டினியூ பண்ணலாம்.
//

வழிமொழிகிறேன்!

பள்ளிக் கூடத்தில கூட மத்த பசங்களைப் பத்தி இவருதான் மிஸ் கிட்டே அடிக்கடி ரிப்போர்ட் பண்ணுவாறாம். மிஸ் இவரோட பேரண்ட்ஸைக் கூப்பிட்டு ரிப்போர்ட் பண்ணுவாங்க!

இராம்/Raam said...

இராகவன்,

எல்லா கேள்விகளுக்கும் அழகாகவும் நிதானமாகவும் பதில் சொல்லியிருக்கீங்க :)

தேவ்'ண்ணே,

ஒரே வார்த்தையிலே சொல்லனுமின்னா "கலக்கல்" :)

துளசி கோபால் said...

// மை ஃபிரெண்ட்,

இந்த வாரம் முடிய போகின்றது என்ற உண்மையை நினைத்தால் கவலையாக இருக்கு.. :-( )//

எதுக்கு வீண் கவலை? கும்மியடிக்க வேற இடம் இல்லாமலா போயிரும்? :-))))

கோபிநாத் said...

தேவ்ண்ணே..

சூப்பர் ரிப்போர்ட்டர் நீங்க....நானும் கேட்க நினைத்த சில கேள்விகளை நீங்க கேட்டுயிருக்கீங்க ;-)))

ராகவன் சார்...
ராம்ண்ணே சொன்னது போல நிதானமாகவும், அருமையாகவும் இருக்கு உங்கள் பதில்.

Anonymous said...

Excellent reporting :)
However I think more faces of G.Ra could have been explored rather than restricting to one story
- my 0.02$ :)

நாமக்கல் சிபி said...

//எதுக்கு வீண் கவலை? கும்மியடிக்க வேற இடம் இல்லாமலா போயிரும்? :-))))//

அதானே!

Kannabiran, Ravi Shankar (KRS) said...

கேள்விகள் கேட்டே பேர் வாங்கும் புலவர்களும் இருக்கிறார்கள் என்று தானே ஒரு திரைப்படத்தில் வசனம் வரும்? :-)))

தேவ் என்பவர் இந்த வார நாயகன் மட்டும் அல்ல! கேள்வியின் நாயகனும் அவரே!
"உண்மையைச் சொல்லுங்க, பரபரப்புக்குத் தானே?" என்று பலமுறை அவரும், தன் முயற்சியில் சற்றும் மனம் தளராத விக்ராமாதித்தன் போல் அல்லவா கேட்டுக் கொண்டே இருக்கிறார்! சூப்பர்!

//மனதைப் பாதித்ததைச் சொல்லிக்கொண்டு போகிறேன்//

என்னை மிகவும் கவர்ந்த பதில்!!!

அபி அப்பா said...

////எதுக்கு வீண் கவலை? கும்மியடிக்க வேற இடம் இல்லாமலா போயிரும்? :-))))//


அய்யோ டீச்சர்! அது கும்மியில்லை, கும்பி:-) சந்தேகம் இருந்தா உஷா மேடம் கிட்டே கேட்கவும்:-))

அபி அப்பா said...

////பெண் சுதந்திரம் என்பதை ஆண் தரக்கூடாது. பெண்ணே எடுத்துக்கொள்ள வேண்டும் என்று நம்புகிறவன் நான்//

ஆம் ஜி.ரா, உண்மைதான். கொடுக்கும் இடத்தில் ஆண்வர்க்கம் இருப்பதாக இருந்தால் ஆணாதீக்கம் தீவிரமாய் கைகொட்டி சிரிப்பதாகவே அர்த்தம்."இந்த சுதந்திரம் நான் உனக்கு போட்ட பிச்சை, எப்போது வேனா திருப்பி எடுத்துப்பேன்"ங்கிற மாதிரியானது. சரியான பதில்கள். வாழ்த்துக்கள் ஜி.ரா! :-)

Anonymous said...

இதைப்படிச்சவுடனே போய் படிச்சுட்டு வந்தேன்.கதை சற்றே மாறுபட்ட கதை.ஒன்னு தெரியுது...ராகவன் சார் ஒரு திறந்த புத்தகம் போல என்று...அவர் பதிவைப் பார்த்தேன்..அனைத்து தலைப்பிலும் புகுந்து விளையாடி இருக்கார்.

தேவ் அண்ணா இந்த வாரம் முழுக்க ரசிச்சு படிச்சேன்...நல்ல இருந்தது

Anonymous said...

////பெண் சுதந்திரம் என்பதை ஆண் தரக்கூடாது. பெண்ணே எடுத்துக்கொள்ள வேண்டும் என்று நம்புகிறவன் நான்//

முயற்சி பண்ணினேன்.வந்த பதில் 'அடி' களைப் பார்த்து சற்றே அடிங்கி போக வேண்டியதாக போச்சு

G.Ragavan said...

ஆகா! தேவு...அப்படியே போட்டுட்டீரே! உண்மைதான் தேவ். கடந்த மாதம் காலில் றெக்கையைக் கட்டிக்கொண்டு பறந்த மாதம். அதனால்தான் பிசி பிசி. :-) அன்னைக்கு திடீர்னு சாட்டிங்குல வந்து கேள்விக்கணைகளைத் தொடுத்ததும் அப்ப என்ன தோணுச்சு அதச் சொல்லீட்டேன். செல கேள்விகள் விட்டுப் போச்சு. அத நீங்க மயிலார் கிட்ட அனுப்பியதால அதுக்கும் பதில் சொல்லியாச்சு. சொன்ன எந்த பதில்லயும் மறுதிருத்தம்னு எதுவும் செய்யலைன்னு உங்களுக்கே தெரியும்.

நண்பர்கள் அனைவரும் வைத்திருக்கும் மதிப்பிற்கு நன்றி பல. கள்ளியிலும் பால் கதையில் பல ஓட்டைகள் உண்டு. முதலில் அதைத் தொடர்ந்து உட்கார்ந்து எழுத முடியவில்லை. எப்பொழுது நேரம் கிடைக்கிறதோ அப்பொழுது எழுத நேர்ந்தது. ஆகையால் மறுபடித்தம் செய்து திருத்தம் செய்யக் கூட முடியவில்லை. அது கதையில் பல ஓட்டைகளையும் தொய்வையும் கொண்டு வந்து விட்டது. ஆனால் சொல்ல வந்ததைச் சொல்லிக் கொண்டே போனதால் கருத்து விட்டுப் போகவில்லை என்று கருதுகிறேன். அடுத்த முறை உங்கள் அனைவருக்கும் பிடித்த வகையில் சிறப்பாக எழுத முயல்கிறேன். நன்றி.

tamil10