Saturday, March 31, 2007

சூப்பர் ஸ்டாருக்கு ஒரு கச்சேரி.

ஸ்டார்ன்னு ஒரு வாரம் கொடுத்துருக்காங்க,,, நாம விசில் அடிக்கிற ஸ்டார் பத்திச் சொல்லல்லன்னா எப்படி... லேட்டாப் போட்டாலும் தலைவருக்கு லேட்டஸ்ட்டா போட்டுருக்கோம் பாருங்க கச்சேரியை...

எளிமை

நடிகனின் இலக்கணத்தைத் திரையில் மட்டுமன்றி திரைக்கு வெளியிலும் முறியடித்தவர். வழுக்கைத் தலை... வெள்ளைத் தாடி... இயல்பான் உடைகள்... அட இவரு நம்மாளு என்று சொல்ல வைத்த விஷயங்கள்

இறை நம்பிக்கை

தன்னோட வெற்றியைத் தனக்குன்னு கொண்டாடமல் இறைவனின் பாதம் சமர்ப்பிக்கும் அந்த குணம்.மதவாதியோன்னு நினைக்கத் தோன்றினாலும்... மதம் என்பதோடு மனதோடு என்று இவர் எப்போதோச் சொன்னதாக ஞாபகம்...

விடாமுயற்சி

அம்பதைஞ்சு வயசு ஆட்டம் கிளோஸ்... பாபாவின் டிராமா பணால்... முடிஞ்சுப் போச்சுன்னு முழுசா மூச்சடைக்க எழுதி ரஜினிங்கற பெயரெ இனி அச்சில் ஏறாதுன்னு சபதமேடுக்காத தமிழ் ஊடகங்கள் ஊதி முடித்த நேரம் மூன்று முகம் சந்திரமுகமாய் அரிதாரம் பூசி தன் தொழிலில் தான் இன்னும் சோர்ந்துப் போகவில்லை என நிருபித்தது...


போராட்டக் குணம்

வானம் உயர்ந்து இருக்கும் வரைத் தான் மதிப்பு...கொஞ்சம் இறங்குனாலும் அவ்வளவு தான்.. ஆள் ஆளுக்கு இழுத்து விளையாடுவாங்க.. இன்னும் கொஞ்சம் போனா காலுக்கு கீழேப் போட்டு மிதிச்சு விளையாடுவாங்க.. அப்படித்தான் 'ஓடிப் போடா உன் ஊரு'க்குன்னு சொல்லாமல் சொன்னாங்க...காவிரி பிரச்சனையிலே கழுத்தை நெறிக்கப் பார்த்தாங்க. இந்தாளு கொஞ்சமும் அசராமல் தனி மனிதனா மேடை ஏறுன அந்த தில்... அந்தப் போராட்டக்குணம் அது தான் அவரை இது வரைக் கூட்டிட்டு வந்து இருக்கோ? இருக்கலாம்!

கடின உழைப்பு

உழைப்பு இதில்லாம விசில் அடிச்சுகிட்டு இருந்த மனுஷன் அதாங்க கண்டக்டர் இத்தனை விசில்களுக்கு உரிமைக் கொண்டாட முடியுமா?

புடிக்காதவங்கப் படிச்சிட்டுத் திட்டி எழுதத் தான் போறீங்க.. அது முக்கியம் இல்லீங்க... பிடிக்காதவனும் படிக்கணும் நினைக்கிறான் பாருங்க அது ..அது தாங்க.. அந்த ஆளூ.... அடிச்சுப் பட்டயக் கிளப்புறார் டோய்.

31 comments:

.:: மை ஃபிரண்ட் ::. said...

வணக்கம்

.:: மை ஃபிரண்ட் ::. said...

இது என்ன?

சூப்பர் ஸ்டாருக்கே வியர்டு 5 ஆ??

.:: மை ஃபிரண்ட் ::. said...

//புடிக்காதவங்கப் படிச்சிட்டுத் திட்டி எழுதத் தான் போறீங்க.. அது முக்கியம் இல்லீங்க... பிடிக்காதவனும் படிக்கணும் நினைக்கிறான் பாருங்க அது ..அது தாங்க.. அந்த ஆளூ.... அடிச்சுப் பட்டயக் கிளப்புறார் டோய்.
//

ச்சீச்சீ.. அந்த கெட்ட பழக்கமெல்லாம் எங்களுக்கில்ல... ஸ்டார் போஸ்ட்டுல கும்மிக்கு மட்டுமே இடம்.. ;-)

துர்கா|thurgah said...

paasa malar my friend..ellathalaiyum neegathaan first ah?

உங்கள் நண்பன் said...

தமிழ்மண ஸ்டார்
சூப்பர் ஸ்டார் பத்தி எழுதுகிறதே!
அடடே ஆச்சர்யக்குறி!
ஒன்னுக்குகீழ ஒன்னு
கவிஜ கவிஜ

Anonymous said...

பிழைக்க தெரியாத வரா இருக்கீரே...

தலைவரை பத்தி தப்பா பேசின தாம்ப இங்க கூட்டம் கூடுது.

கடைசி பண்ச் சூப்பர்...தலைவர் ரேன்சுக்கு இருக்கே.

ரசிகணா ...நானும் ஆஜர்.

துளசி கோபால் said...

கும்மிக் கூட்டம் எங்கே?

கொட்டுங்கடி கொட்டுங்கடி

குமிஞ்சு குமிஞ்சு கொட்டுங்கடி.....:-))))

உங்கள் நண்பன் said...

நண்பர்களே! ஒன்னு சொல்லுறேன் அப்படினு சொல்லீட்டு தம்பி மாதிரி 1 சொல்லி மொக்கை போட வரலை!.

உண்மையாகவே ஒருவிசயம்!
இன்று மாலை ஊருக்குப் போகின்றேன், எப்படியும் வருவதற்க்கு 3 நாட்கள் அல்லது 1 வாரம் ஆகலாம், அதுவரை கும்மியில் எந்தவித குறையும் இல்லாமல் ஆடிச்சு ஆடுங்க!


அன்புடன்...
சரவணன்.

-L-L-D-a-s-u said...

அவர் தைரியசாலி என்றால் அவர் ஏன் நல்ல படங்களில் நடிக்க நடுங்குகிறார்?

பாபா படம் பெங்களூரில் ரிலீஸ் ஆகவேண்டுமென்று , ராஜ்குமார் காலில் விழுந்தவர்தானேயா உங்க தைரியசாலி .

ரசிகர்கள் தானே காசை இழப்பார்கள் என்று தெரிந்திருந்தும், த்யேட்டர்களில் கண்டமேனி விலை உயர்த்தலாம் என்பதை வரவேற்றவர்தானே அவர்..

தைரியலக்ஷிமி --வெட்கமே இல்லாமல் சொன்னதுதானே

அரசாங்கம் மாறும் போது மாறும் காக்கைகளின் தலைவரான அண்டங்காக்கை தானே அதுஐயோ, காவிரிப்போராட்டம் என்று மட்டும் தயவுசெய்து சொல்லாதீர்கள் சார்.. அது சினிமாக்காரர்களின் ஈகோ போராட்டம். காவிரிப்பிரச்சினை முடிந்துவிட்டதா என்ன?

சரி சார், என்னுடைய பதிவை படித்தீர்களா?

பி.கு : மற்றபடி, உங்களுடைய நகைச்சுவைப் பதிவுகளுக்கு நான் ரசிகன் ..

உங்களுடைய நட்சத்திர வாரப் பதிவுகள் எல்லாம் நல்ல அறுசுவை விருந்து .. இந்தப்பதிவை சொல்லவில்லை .:)

Cheers!

உங்கள் நண்பன் said...

//துளசி கோபால் said...
கும்மிக் கூட்டம் எங்கே?

கொட்டுங்கடி கொட்டுங்கடி

குமிஞ்சு குமிஞ்சு கொட்டுங்கடி.....:-))))
//

நண்பர்களே டீச்சரே வந்து கூப்புட்டாச்சு! இன்னும் என்ன தாமதம் நல்லா அடிச்சு ஆடுங்க!மக்கா! விரைவில் மீண்டும் சந்திக்கலாம்!

உங்கள் நண்பன் said...

//உங்களுடைய நட்சத்திர வாரப் பதிவுகள் எல்லாம் நல்ல அறுசுவை விருந்து .. இந்தப்பதிவை சொல்லவில்லை .:)
//

நண்பரே சரியாகச் சொல்லும் அறுசுவையா? இல்லை அறுவைசுவையா?

-L-L-D-a-s-u said...

கொஞ்சம் சொல்ல மறந்துவிட்டேன்..

காவிரிப்பிரச்சினை முடிந்துவிட்டதா என்ன? இன்று என்ன புடுங்குகிறார்கள் .
இவர்கள் ஒன்றும் புடுங்கவேண்டாம் . அப்ப செய்த கூத்து ஈகோ போராட்டம்தான் என்பதை இரு அணியினரும் சொல்லி , மன்னிப்பு கேட்க கடமைப்பட்டுள்ளார்கள் . தமிழர்கள் கேணையர்கள் என்பதை அறிந்த இவர்களை புரியாமல்,நான் அவர்கள் நினைப்பது சரியென் கேணயாக நடந்துகொண்டிருக்கிறோம்..

உங்கள் கும்மிக்கிடையே வந்ததற்கு மன்னிக்கவும்..உங்க கும்மியை தொடரலாம்

இலவசக்கொத்தனார் said...

ஷ்டாரு, நீதான் எல்லா சூப்பர் ஷ்டாருக்கும் ரசிகன் எனச் சொல்லிக்கறாங்களே!! நெசமாவாஆ?

-L-L-D-a-s-u said...

மன்னிக்கவும், லிங்க் தவறானது .
இதை படிக்கவும்

இலவசக்கொத்தனார் said...

ஆமாம், இந்த ஆப்பீஸர் (ஆப்பு+ ஈசர் இல்லைங்க!) கதை என்ன ஆச்சு? அப்படியே தொங்கலில் விட்டுட்டீங்களே.

.:: மை ஃபிரண்ட் ::. said...

//துர்கா|thurgah said...
paasa malar my friend..ellathalaiyum neegathaan first ah?
//

இல்லங்க.. எல்லாத்துலேயும் நான் ஃபர்ஸ்ட்டு இல்லைங்க.. யாரோ உங்களுக்கு தப்பான தகவல்கள் தர்றாங்க போல.. :-(

.:: மை ஃபிரண்ட் ::. said...

//உங்கள் நண்பன் said...
தமிழ்மண ஸ்டார்
சூப்பர் ஸ்டார் பத்தி எழுதுகிறதே!
அடடே ஆச்சர்யக்குறி!
ஒன்னுக்குகீழ ஒன்னு
கவிஜ கவிஜ
//

நண்பா..
உன் கவுஜ
கவுஜ
கவுஜ
சூப்பர்..

[இதுவும் கவுஜதானோ?]

.:: மை ஃபிரண்ட் ::. said...

//துளசி கோபால் said...
கும்மிக் கூட்டம் எங்கே?

கொட்டுங்கடி கொட்டுங்கடி

குமிஞ்சு குமிஞ்சு கொட்டுங்கடி.....:-))))
//

டீச்சர் ஆள் பத்தல.. உங்க மாணவர்களை கூட்டிட்டு வாங்க.. ;-)

.:: மை ஃபிரண்ட் ::. said...

@உங்கள் நண்பன் said...


//உண்மையாகவே ஒருவிசயம்!
இன்று மாலை ஊருக்குப் போகின்றேன், எப்படியும் வருவதற்க்கு 3 நாட்கள் அல்லது 1 வாரம் ஆகலாம், அதுவரை கும்மியில் எந்தவித குறையும் இல்லாமல் ஆடிச்சு ஆடுங்க! //

யப்பா.. ஆட்டத்துல ஒரு கை குறையுமே! எப்படி நண்பா???

மு.கார்த்திகேயன் said...

நம்ம தலைவரை பத்தி நல்லா சொன்னப்பா தேவ்..

மு.கார்த்திகேயன் said...

கும்மி அடிக்கிற இடத்துலயெல்லாம் மை பிரண்ட் இருக்காங்களே..

மு.கார்த்திகேயன் said...

தேவ், ஒவ்வொரு பாயிண்டும் நச்.. இந்தியா டுடே கூட இந்த்வில் சிறந்த மனிதர்கள்ல நம்ம தலைவரை 23வது இடத்துல வச்சிருக்கு.. இதுல மேட்டர் என்னென்ன, போன வருஷம் அவர் இருந்தது 29வது இடதுல..

விடாமுயற்சி..போராட்டகுணம்.. கடின உழைப்பு..

Vicky said...

// பிடிக்காதவனும் படிக்கணும் நினைக்கிறான் பாருங்க அது ..அது தாங்க.. அந்த ஆளூ.... அடிச்சுப் பட்டயக் கிளப்புறார் டோய்.

நச் :)

மற்றபடி வழக்கமான கமெண்டுகளுக்காக எதிர்பார்க்கிறேன் ;)

இராமநாதன் said...

சூப்பர் ஸ்டாருக்காக நடக்கும் கச்சேரியில் ஒரு உள்ளேன் ஐயா!

வாஜி வாஜி! சிவாஜீஈஈஈஈஈஈ.....

சந்தோஷ் aka Santhosh said...

//கும்மிக் கூட்டம் எங்கே?

கொட்டுங்கடி கொட்டுங்கடி

குமிஞ்சு குமிஞ்சு கொட்டுங்கடி.....:-))))//
ஏய் ஏய் ஏய் டீச்சரே சொல்லிட்டாங்க. start music கும்மியடிக்கலாம் எல்லாம் வாங்கப்பா.

தம்பி said...

உலகத்துக்கே ஒரு சூரியன் தான் அது ரஜினிதான் என்பதை ஆணித்தரமாக சொல்லியிருக்கீறார் தேவ்.

தம்பி said...

//ஏய் ஏய் ஏய் டீச்சரே சொல்லிட்டாங்க. start music கும்மியடிக்கலாம் எல்லாம் வாங்கப்பா. //

கும்மி அடிக்க வர சொல்லிட்டு நீ எங்கய்யா போனீர்??

நாமக்கல் சிபி said...

//தமிழ்மண ஸ்டார்
சூப்பர் ஸ்டார் பத்தி எழுதுகிறதே!
அடடே ஆச்சர்யக்குறி!
ஒன்னுக்குகீழ ஒன்னு
கவிஜ கவிஜ
//

சூப்பர் கவுஜ!
தலைவா நீ கலக்கு!

நாமக்கல் சிபி said...

நட்சத்திர வாரத்தில் சூப்பர் ஸ்டாருக்கு இடம் இல்லையா! அதுவும் நம்ம தேவ் நட்சத்திர வாரத்தில் னு யோசிச்சிகிட்டே இருந்தேன்.

கலக்கிட்டீங்க!

G.Ragavan said...

தேவ், நீங்கள் ரஜினி ரசிகர் என்று தெரியும். அந்த வகையில் நட்சத்திர வாரத்தில் இந்தப் பதிவு போட்டிருக்கின்றீர்கள். ஆனால் சொல்ல வந்த கருத்துகளோடு முழுமையாகவே ஒத்துப் போக முடியவில்லை. இதை என்னுடைய கருத்தாக மட்டும் எடுத்துக்கொள்ளவும். அட...உங்களுக்கு எதுக்குய்யா டிஸ்கிளைமரு! :-)

Anonymous said...

tibia money tibia gold tibia item runescape money runescape gold tibia money tibia gold runescape gold runescape accounts tibia gold tibia money runescape money runescape gp buy runescape gold tibia gold tibia item buy runescape money runescape gold runescape items tibia money tibia gold

tamil10