Monday, February 26, 2007

ஏ இந்தா பருத்தி வீரன் பார்த்தோம்ல்ல



வணக்கம் மக்கா.

என்னத்தாச் சொல்ல நேத்து நாலு ஊரு சுத்தி படாதப் பட்டு சென்னைக்கு வர்றதுக்குள்ளே டப்பா டான் ஸ் ஆடிருச்சே.. இந்தப் பாடுப் பட்டக் கேப்ல்ல கும்பகோணம் விஜயா தியேட்டர்ல்ல உக்காந்துப் பாத்தப் படம் பருத்திவீரன்

ஏத்திக் கட்டுன கைலியும்.. மொரைப்புப் பார்வையும்.. வெட்டித் தனமா ஊரை ரவுண்ட் வர்றதுன்னு சண்டியர் வேடம் கட்டிகிட்டு நம்ம சிவக்குமார மைந்தன் சூர்யா தமையன் சோதிகாக் கொழுந்தனார் புது முகம் கார்த்தி முதல் கச்சேரி வச்சுருக்காப்பல்ல






ஏ கார்த்தி இதே கெட்டப்புல்ல வெட்டி ஆபிசரா உங்க அண்ணாச்சி சூர்யா பிதாமகன்ல்ல வெளுத்தது இன்னும் ஞாபகம் இருக்குப்பா நீ என்னப் புதுசா சவுண்ட் விட்டுரப் போறன்னு தியேட்டர் கூட்டம் (நானும் தான்) ஆவலாப் பாக்க..

ஆரம்பமே அம்புட்டு அலப்பரையைக் கொடுத்து என்டிரி ஆவுறார் கார்த்தி... ஒருத்தனைத் திருவிழாவில்ல கு****** குத்திப்போட.. அய்யயோ இது என்னடா தாமிரபரணி.. போக்கிரியில்லப் பார்த்த ரத்தமே.. மாசக்கணக்கா நம்ம சைவச் சாப்பாட்டுக்கு மாத்திருச்சு.. இனி நிரந்தரமா சைவச் சாப்பாட்டுக்கே மாத்திருவாய்ங்கப் போலிருக்கேன்னு யோசிக்கும் போது...

படம் காமெடியில் களைக் கட்டி கார்த்தி - சரவணன் (நந்தாவில்ல ராஜ்கிரண் மருமவனா வருவாரே) கூட்டணியில் பக்காக் கலாட்டாவ நகருது... நகைச்ச்வையில் அடக்கி வாசித்திருக்கும் கஞ்சா கருப்பு வரும் காட்சிகளில் தியேட்டரில் சிரிப்புச் சில்லறை சிதறுகிறது.

யதார்த்தமா நக்கலும் நையாண்டியுமாக நகரும் கதையில் இயக்குனர் அமீர் ப்ரியாமணியை (முத்தழகு) வைத்து ஒரு மெல்லியக் காதல் பின்னல் போடுகிறார்.. அந்தக் காதல் பின்னல் இறுக இறுக.. திரையில் கதையும் சூடுப் பிடிக்கிறது..

கருப்பு வெள்ளை பார்மேட்ல்ல, அழகியில் பார்த்தக் கதையை இன்னொரு வாட்டி பருத்திவீரனிலும் ரசிக்க ரசிக்கச் சொல்லுகிறார் அமீர். சிறு வயசுல்ல பூக்குற அந்தக் கன்னுக்குட்டிக் காதலை முத்தழகு மனத்திற்குள் பூட்டி வைத்து வளர்க்கும் விதத்தைக் கவிதையாய் சொல்லுகிறார் அமீர். அதே சமயம் பருத்திவீரன் முத்தழகை விட்டு விலகி நிற்பதாய் காட்டிக் கதையில் சுவாரஸ்யம் கூட்டுகிறார்.

வழக்கமான நம்ம கிராமத்துத் தமிழ் திரைப்படங்களில் காட்டப்படும் சாதி குடும்பப் பகை இதிலும் காதலுக்கு என்னா வில்லத்தனம் செய்யுது. வில்லத்தனம், கோக்குமாக்குத் தனம் என பருத்திவீரனின் தாய் தந்தை மரணத்திற்கு இன்னொரு பிளாஷ் பேக்.. பிளாஷ் பேக்ககளைக் கதையோடு நுழைத்து அலுக்காமல் சொல்லியிருக்கார் அமீர்.

படத்தின் மிகப் பெரிய பலம் நடிகர்களின் படு யதார்த்தமான நடிப்பு. மதுரை சார்ந்தப் பகுதிகளின் வாழ்க்கை முறையை ஓரளவுக்குச் சினிமாத்தனம் இல்லாமல் படம்பிடித்திருக்கிறார்கள். அந்த ஆரம்பப் பாடல் காட்சி மதுரை ஏரியாத் திருவிழாத் தோரணங்களைத் திரையில் கட்டும் முயற்சியாக மிளிர்கிறது. பலமாகக் கைத் தட்டல்களால் வரவேற்கப்படுகிறது.

பருத்திவீரனின் சித்தப்பாவாக வரும் சரவணன் இப்படி எல்லாம் நடிப்பாரா? எளிமையான நடிப்பால் மனதில் இடம் பிடிக்கிறார்.

ப்ரியாமணி.. நிச்சயமாய் பருத்திவீரன் இவருக்கு ஒரு திருப்புமுனை.. அந்தப் பொன்ணு அப்படி கலக்கியிருக்கு. காதலை பொத்தி வைத்து மருகுவதும், காதலனிடம் போட்டு உடைத்துப் பொங்குவதும், காதலுக்காய் பெற்றோரிடம் மல்லுக்கு நிற்பதும் என கனமானப் பாத்திரம் நல்லாவே செஞ்சுருக்கார். மேக்கப் இல்லாமல் கிராமத்து முத்தழகாய் மனங்களை அள்ளுகிறார்.

பொன்வண்ணன் ப்ரியாமணியின் தந்தையாக வருகிறார். வழக்கமானக் காதலுக்கு எதிர் பார்ட்டியாய் வில்லத்தனம் பண்ணும் பாத்திரம். தாயாக வரும் பெண்மணி, பருத்தி வீரனின் பாட்டியாக வரும அம்மா எல்லாம் நடிச்சுருக்காங்கன்னு சொல்ல முடியாது. படு யதார்த்தமாய் தங்கள் பாத்திரஙகளைச் செய்திருக்கிறார்கள்.

யுவன் கதைக் களத்தோடு இசையைப் பயணிக்க வைத்துள்ளார்.. அறியாத வயசு.. பாடலில் ராஜாவின் குரல் நம்மைக் காற்றில் மிதக்க விடுகிறது. குத்துப் பாடல்களில் மண் வாசனை தூக்குகிறது.

தினேஷ் நடனத்துக்கு ரொம்பவே மெனக்கெட்டு இருக்கிறார். அது காட்சிகளில் நன்றாகவேத் தெரிகிறது. தியேட்டர் மொத்தமும் குத்துப் பாட்டுக்களின் போது கார்த்தியோடும் கிராமியக் கலைஞர்களோடும் சேர்ந்து ஆடுகிறதுன்னாப் பாத்துக்கோங்க.. மதுரையின் பொட்டல் காடுகளை வெண்திரையில் ஒரு கவித்துவமான அழகோடு படைத்திருக்கும் அமீருக்கும் கேமிராமேனுக்கும் ஸ்பெஷல் சபாஷ்

இயக்குனர் அமீர் மௌனம் பேசியதே, ராம் படங்களுக்குப் பின் தந்திருக்கும் நல்ல படம் பருத்திவீரன்.. படததை விட நம்ம தமிழ் சினிமாவுக்கு ஒரு கலக்கலான அறிமுகமாய் கார்த்தியைத் தந்திருக்கார் அதுக்காக அவருக்கு ஒரு தேங்க்ஸ்

மொதல்ல கேட்டா மாதிரி சிவக்குமார் ரெண்டாவது மயன் கார்த்தி என்னத் தான் பண்ணியிருக்கார்ன்னு பாப்போம்ன்னு வந்தவங்களுக்கு கார்த்தி கொடுக்கும் பதில்

என்ன மாப்பூகளா.. இந்த சவுண்டு போதுமா.. இன்னும் கொஞ்சம் வேணுமா?


நடிப்பிலும், மக்களை குதுகாலபடுத்துவதிலும் ஒரு கலைஞனாய் முதல்


படத்திலே நல்ல மார்க் எடுத்துத் தேறுகிறார் கார்த்தி...

கார்த்தி - ப்ரியாமணி - சரவணன் நடிப்புக்காக பருத்திவீரன் நிச்சயம் பேசப்படும்.


எல்லாம் சரி மக்கா.. பருத்தி வீரன் படம் பாக்காமா விட்டுருராதீங்கய்யா படு சூப்பர்ன்னு சொல்லலாம் நினைக்கையிலே அந்தக் கிளைமாக்ஸ் தான் படத்தின் மிகப் பெரிய நெருடல்...

திணிக்கப் பட்ட சோகமாய் முடிகிறது படம்...




கிளைமேக்ஸ் கொலை மேக்ஸ் ஆக மாறுவதால் பருத்திவீரன் முடிந்து வெளியே வரும் போது இயக்குனர் அமீர் மீது கோபம் வருகிறது.. எரிச்சல் ஏறுகிறது...

இது தான் அமீர் எதிர்பார்க்கும் வெற்றியோ?

நமக்குத் தெரிஞ்சது எல்லாம் இன்னும் கொஞ்சம் காலத்துக்கு நல்ல தமிழ் சினிமாவை ரசிக்கும் மக்களால் பருத்திவீரன் திரைப்படத்தின் கிளைமாக்ஸ் கட்டாயம் விவாதிக்கப் படும் எனபது தான்,,,

ரைட் இப்போ மீ ஜூட்ங்கோ..

29 comments:

மனதின் ஓசை said...

படம் பார்க்கும் ஆவலை தூண்டும் விமர்சனம்..

கார்த்திக் நன்றாக நடித்துள்ளார் என்பது மகிழ்ச்சி அளிக்கிறது.. மென்மேலும் பல திறமையான நடிகர்களும் நல்ல கதைகளும் வந்து தமிழ் படங்களின் தரம் உயர வேண்டும்.

MyFriend said...

கார்த்தி - பிரியா கலக்கியிருக்காங்கன்னு கேட்பதில் மகிழ்ச்சி..

அமீர் இந்த படத்துக்காக பட்ட கஷ்டங்கள் வெற்றியாக அமைந்தால் நன்று..

சூர்யா II ரெடி! அடுத்து சூர்யா கால்ஷீட் கிடைக்காதவங்க கார்த்தியிடம் போய் கியூ கட்டி நிக்கலாம். ;-)

மணிகண்டன் said...

விமர்சனங்களுக்காக வெயிட்டிங்.உங்க பதிவ படிச்சதும் சீக்கிரம் பார்க்கனும்னு தோனுது :))

Anonymous said...

Thanks....saw the film reading ur blog...:)

பொன்ஸ்~~Poorna said...

போகலாம்னு ஆசையாத் தான் இருக்கு.. ஆனா, நிறைய ரத்தம், சண்டைங்கிறீங்களே.. அதான் கொஞ்சம் பயமாவும் இருக்கு...

Thillakan said...

நான பார்க்க எதிர்பாத்திருக்கும் படம்
பகிர்வுக்கு நன்ர்றி

G.Ragavan said...

யய்யா! இதென்ன....எந்தப் படமும் விடுறதில்லையோ! இவருதான் சூரியாவோட தம்பியா? அண்ணன் அளவுக்கு இல்லைதான். (என்ன இருந்தாலும் நம்ம சூரியா ரசிகரு ஆச்சுங்களே)

படம் வந்துருச்சா! பாக்கனும். எங்க பெங்களூருல ஒன்னும் வர்ரதில்லையே! வந்தா பாக்கனும்.

Pot"tea" kadai said...

ஏப்பா டிவிடி ரிலீஸாயிடுச்சா?

Anonymous said...

தேவ்,

நாட்டுபுற குத்து பாட்டு ம்யூசிக் சூப்பர் தானே?

செமையா இருந்தது - லாப்டாப்புல MP3யா ஃபுல் வால்யூம்ல பெருவுல கேட்டு பாத்தது அந்த உருமி மேளம்... நீங்க சினிமா தியேட்டர்ல ஸ்டீரியோல வேற கேட்டீங்களா?

கலக்கலா இருந்திருக்குமே!

நாகை சிவா said...

//இந்தப் பாடுப் பட்டக் கேப்ல்ல கும்பகோணம் விஜயா தியேட்டர்ல்ல உக்காந்துப் பாத்தப் படம் பருத்திவீரன்//

எங்குட்டு போனாலும் அங்குட்டு ஒரு படத்தை பாக்குறதை ஒரு பொழப்பாவே வச்சு இருக்கீங்களா சாமி

நாகை சிவா said...

நீங்க சொல்லுறது வச்சி பாக்கும் போது படத்துக்கு இம்புட்டு நாளா கொடுத்துக்கிட்டு இருந்த பில்டப் வீண் போகல போல இருக்கு.

நாகை சிவா said...

மச்சி,

தரையிறக்கம் செய்ய ஆவணப்படுத்துங்கள். பாத்துப்புட்டு நானும் போடுறேண்டா விமர்சனம்

Anonymous said...
This comment has been removed by a blog administrator.
Venkatesh subramanian said...

kandipaka sariyana mudivuthan padathin mudivu yen athai sariyelai yenru solukirarkal yenru thariyavilai kathai padi paruthiveeran ondrum nalavan kedayathu avan thavarukal than avanuku antha mudivai theydi tharukirathu ila vetal avan padathil seiyum vesayankal yavum sari yenru akevidum yenave mudivu meka meka sariyanthai

Anonymous said...

தேவ் அண்ணே,

கலக்கல் விமர்சனம்ணே. நான் நேத்துதேன் பார்த்துட்டு ஒரு பதிவப் போட்டேன். இன்னிக்கு வந்து பாத்தா நீங்க ஒன்னு போட்டு கெளப்பியிருக்கீங்க. இங்க பாருங்க http://naanengiranaan.blogspot.com/2007/02/blog-post_25.html

இலவசக்கொத்தனார் said...

ஏம்பூ? ரொம்ப அடிதடியோ? பையனோட உக்காந்து பாக்கலாமா? அப்படி முடியாதுங்கறதுனாலையே தமிழ்ப்படம் பார்க்கவே முடியறது இல்லை.

ஜி said...

அருமையா விமர்சனம் பண்ணியிருக்கீங்க....
நீங்க சொன்ன அதே களைமேக்ஸ் சொதப்பலதான் என்னோட நண்பனும் சொன்னான்...

Syam said...

நல்ல விமர்சனம் தேவ்...பிரியா மணி நடிச்ச மடம் நல்லா இருக்குனு கேக்கறதுக்கு நல்லா இருக்கு :-)

Syam said...

சன் டிவி டாப் டென்ல ரெண்டு சீன் பார்த்தேன்...செம நக்கல்...நீங்க சொல்றது சரி தான் சரவணன் நல்லா பண்ணி இருக்காரு...பேசாம் இந்த மாதிரி வேசம் மட்டும் பண்ணிட்டு இருக்கலாம்...:-)

Syam said...

//தரையிறக்கம் செய்ய ஆவணப்படுத்துங்கள்//

@நாகை சிவா,

பங்கு..நானும் தேடிட்டு இருக்கேன்...எனக்கு தெரிஞ்சா சொல்றேன்....உனக்கு தெரிஞ்சா எங்களுக்கும் சொல்லு :-)

TBR. JOSPEH said...

ரொம்ப அழகா சொல்லியிருக்கீங்க தேவ்..

கிளைமேக்ஸ் கொலை மேக்ஸ் ஆக மாறுவதால் பருத்திவீரன் முடிந்து வெளியே வரும் போது இயக்குனர் அமீர் மீது கோபம் வருகிறது.. எரிச்சல் ஏறுகிறது...//

இதான் பிரச்சினையே.. படத்த பார்த்து ரசிச்சிட்டு க்ளைமாக்ஸ் சொதப்பிட்டா கோவந்தான் வரும்.. இருந்தாலும் படத்த பாக்கணுங்கற ஆர்வத்த தூண்டறா மாதிரி இருக்கு ஒங்க விமர்சனம்..

தாங்ஸ்..

சீனு said...

படம் பார்த்துட்டு வந்து படிக்குறேன்...

இராம்/Raam said...

தேவ்,

நல்ல விமர்சனம்... ஹிம் இங்கென தமிழ் படத்துக்கு இருக்கிற தடையை இன்னும் நீக்கலை... :(

Anonymous said...

itu varai naan paartha padangalileye
intha paruthi veeran thaan ennai romba paathicha padam.kandippa yellorum paarkka vendiya padam.
kaarthiyoda annan soorya apadinnu sollra kaalam tholivil illai yendru sollum allavukku kaarthi piramaatha padutyiyirukkar.
climax rapping scene will be trimed by the producer team.so don't worry this movie will be a super hit.

இராம்/Raam said...

பதிவை படிச்சு வேலை மெனக்கெட்டு பின்னூட்டம் போட்டவர்களுக்கு பதிலோ அல்லது நன்றியோ சொல்லாத போர்வாளை நான் கண்டிக்கிறேன்.... :)

Anonymous said...

அடக்கொடுமையே...

இன்னும் ரெண்டு தான் போடமுடியும்..

நான் பின்னூட்டம் போடவா, வேணாமா ?

உங்கள் நண்பன்(சரா) said...

மக்கா! நானும் அந்தப் படத்தை நேத்துதாம்லே பாத்தேன்,
நால்லாத்தேன் எடுதுருக்காய்ங்க!
என்ன,நீ சொன்னமாதிரி காடைசில ஆட்டய கலசுபுட்டாய்ங்க!
மனசே கஷ்டமா போய்டுச்சு மக்கா!

அன்புடன்...
சரவணன்.

Unknown said...

பருத்தி வீரன் விமர்சனத்திற்கு வந்து கருத்துச் சொன்ன 27 பேருக்கு ஒத்த வார்த்தையிலே நன்றி சொல்லுறேன்னு தப்பா நினைக்கப்பிடாது.. வேற வழி இல்ல.. 30 ஆயிருச்சுன்னு ஒதுங்காதீங்க வாங்க வாங்க..

Arunkumar said...

(முதல் முறை இங்கே...)

அருமையான விமர்சனம் தேவ் :-)
படத்த சீக்கிரம் பாக்கனும். தரையிரக்கம் செஞ்சிட்டு இருகக்கேன் :P

tamil10