Thursday, March 01, 2007

சிவாஜி - இது எந்த ஊர்ங்கோ?


வணக்கம் மக்கா,

இன்னும் ஒரு வாரத்துல்ல சிவாஜி படத்துப் பாட்டெல்லாம் வரப் போகுது ..

இந்தக் கேப்ல்ல நமக்குக் கிடைச்ச ஸ்பெஷல் சிவாஜி படங்கள் உங்கள் பார்வைக்கு..


இந்த சூட்டீங் ஸ்பாட் எந்த நாடு எந்த நகரம் அப்படின்னு விவரம் தெரிஞ்சவங்க சொல்லுங்கப்பூ..

31 comments:

கார்த்திக் பிரபு said...

enaku innum konjam photos kidaicadhu anupava?

Unknown said...

தலைவர் படம் தாராளமா அனுப்புப்பா..

கைப்புள்ள said...

//இந்த சூட்டீங் ஸ்பாட் எந்த நாடு எந்த நகரம் அப்படின்னு விவரம் தெரிஞ்சவங்க சொல்லுங்கப்பூ...//

எனக்கென்னமோ இது வெளிநாட்டுல ஒரு வெளியூரா இருக்குமோன்னு சந்தேகமாவே இருக்குது.

Unknown said...

அதே டவுட்டுத் தான் தல எனக்கும்... ஆனா என் சந்தேகத்தை யாரும் தீத்து வைக்க மாட்டேங்குறாய்ங்களே.. நான் என்ன செய்ய?

வெட்டிப்பயல் said...

//எனக்கென்னமோ இது வெளிநாட்டுல ஒரு வெளியூரா இருக்குமோன்னு சந்தேகமாவே இருக்குது.//

எனக்கென்னவோ இது வெளி நாட்டுல இருக்குற உள்ளூரானு சந்தேகமா இருக்குது ;)

Unknown said...

ஆகா... நல்லாத் தெளிவாக் குரூப்பாக் கிளம்பி குழப்பி குழம்பு வைக்க கிளம்பிட்டாங்கய்யா.. கிளம்பிட்டாங்கய்யா..

இராம்/Raam said...

//எனக்கென்னமோ இது வெளிநாட்டுல ஒரு வெளியூரா இருக்குமோன்னு சந்தேகமாவே இருக்குது.//

எனக்கென்னவோ இது வெளி நாட்டுல இருக்குற உள்ளூரானு சந்தேகமா இருக்குது ;) //

போர்வாள்,

தல & இ.தள சொல்லுறமாதிரி அது ஒரு வெளிநாட்டிலே இருக்கிற ஊரிலே கொஞ்ச வெளியே அதாவது சிற்றூர்'ஆ இருக்குமின்னு நினைக்கிறேன்..... :)

Unknown said...

வாய்யா ராயலு நீ மட்டும் தான் குழம்புச் சட்டியிலே உப்புப் போடாமாத் தள்ளி நின்ன.. நீயும் போட்டாச்சா மெத்தச் சந்தோஷம்ய்யா:-)

கைப்புள்ள said...

//எனக்கென்னமோ இது வெளிநாட்டுல ஒரு வெளியூரா இருக்குமோன்னு சந்தேகமாவே இருக்குது.//

//எனக்கென்னவோ இது வெளி நாட்டுல இருக்குற உள்ளூரானு சந்தேகமா இருக்குது ;)//

//தல & இ.தள சொல்லுறமாதிரி அது ஒரு வெளிநாட்டிலே இருக்கிற ஊரிலே கொஞ்ச வெளியே அதாவது சிற்றூர்'ஆ இருக்குமின்னு நினைக்கிறேன்..... :)//

இந்த மாதிரி கும்மி அடிக்கிற பசங்களை ஆரம்பத்துலயே தலையில தட்டி வைக்கலைன்னா முப்பதைத் தாண்டிடுமப்பு. பாத்து பக்குவமா நடந்துக்க. சீக்கிரம் பியூஸ் புடுங்கி விட்டின்னா அவுட் ஆவாம பொழச்சிக்கலாம்.

Unknown said...

தல இதுக்குப் பேர் தான் கும்மியா.. பேர் கேட்டா அதை மட்டும் சொல்லாதீங்க.. ஆனா விளக்கமா வந்து அறிவுரை.. தெளிவுரை எல்லாம் சொல்லு நீயு... ஆமா இந்தப் பதிவு 30 வாங்குமா என்ன?

MyFriend said...

நான் பத்தாவ்து கமேண்ட்ஸ் போட்டுடுறேன்.. கவலைப்படாதிங்கப்ப்பு.. இன்னும் 20 இருக்கு உங்காளுக்கு. ;-)

MyFriend said...

//தலைவர் படம் தாராளமா அனுப்புப்பா.. //

thalaivar padam visidila vawthuduccha???

G.Ragavan said...

இந்த எடம்..மலேசியாவுல இருக்குற புத்ரஜயா.

Unknown said...

எல்லாரும் பின்னூட்டம் மட்டும் போட்டீங்க பாருங்கய்யா ஜி.ரா..கேள்விக்குப் பதிலைக் கரெக்ட்டாச் சொல்லியிருக்கார். தாங்க்ஸ் ஜி.ரா.

இலவசக்கொத்தனார் said...

தேவு,

வெளியூரில் இருக்கும் சிற்றூரிலேயே இம்புட்டுப் பெரிய பில்டிங்கெல்லாம் இருந்துச்சுன்னா, அங்க இருக்கற பெரிய ஊர்கள் எப்படி இருக்கும்? :))

Unknown said...

குழம்புல்ல உப்பு அள்ளிப் போட்டாயங்க நம்ம மக்க.. நம்ம தலைவரை உப்பளத்துக்கேக் கூட்டிப் போய் உக்கார வச்சு கரண்டி கொடுத்து என் கையாலேக் குழம்பைக் கிளற வைக்குறாரே... இது என்னக் கலாட்டா?

MyFriend said...

///இந்த எடம்..மலேசியாவுல இருக்குற புத்ரஜயா.//

I'm 200% sure. இது புத்ராஜாயா இல்லை. ஏன்.. இது மலேசியாவே இல்லை.. ;-)
இரண்டாவது படத்தில் தெரியும் காரின் நம்பர் ப்லேட் பாருங்க.. மலேசியாவில் ப்லேட்கருப்பிலும், எழுத்து வெள்ளையில் மட்டுமே இருக்கும்.. இது மஞ்சல் கருப்பில் இருக்குது..

முதலாவது படத்தை பாருங்கள்.. வெள்ளை வேனை zoom செய்யுங்கள்.. அதில் N.Y. City Callன்னு எழுதியிருக்கு. இது New York-ஆக இருக்க சான்ஸ் கொஞ்சம் அதிகம்ன்னு நினைக்கிறேன்.. ;-)

MyFriend said...

தசாவதார ஷூட்டிங் மட்டும்தான் மலேசியாவில் நடந்தது.. சிவாஜி யுனீட் இங்கே வந்ததாய் நியூஸ் இல்லையே??

Anonymous said...

N.Y City in USA , Correct

Unknown said...

N.Y City,USA

G.Ragavan said...

// தேவ் | Dev said...
எல்லாரும் பின்னூட்டம் மட்டும் போட்டீங்க பாருங்கய்யா ஜி.ரா..கேள்விக்குப் பதிலைக் கரெக்ட்டாச் சொல்லியிருக்கார். தாங்க்ஸ் ஜி.ரா. //

அவசரப்படாதீக தேவ். விடை தப்பாம். மை ஃபிரண்டும் சிங்கை நாதனும் சொல்லீருக்காங்க. புத்ராஜாயாவுல ஒரு மசூதி இருக்குது. அது பக்கத்துல இந்த மாதிரி எடவெளி இருக்குது. இங்குட்டிருந்து அங்குட்டுப் பாத்தா இப்பிடித்தான் தெரிஞ்சது. அதுவுமில்லாம அங்க இருக்குற ஒரு பாலத்துலதான் நெறைய வெளம்பரங்க எடுக்குறாங்க. அதுனால அப்படி நெனச்சு சொன்னேன்.

இலவசக்கொத்தனார் said...

சரி, மேட்டருக்கு வருவோம். முதலில் இது பதில் தெரியணுமுன்னு கேட்ட கேள்வியா அல்லது சும்மா அடுத்தவன் என்ன உளறப் போறான்னு போட்டு வாங்கற விஷயமான்னு தெரியலை. பயமாவே இருக்கு, இருந்தாலும் பதில் சொல்லறேன்.

படம் - 1

இடதுகைப் பக்கம் பாதியாய் தெரியும் பெரிய கட்டடம் வந்துங்க கோல்டுமேன் சாக்ஸ் நிறுவனத்தாரின் கட்டடம். இதுதான் நியூஜெர்ஸியிலேயே உயரமான கட்டடம். 9/11க்கு பின் நியூயார்க் நகரிலிருந்து பல நிறுவனங்கள் ஜெர்ஸி சிட்டி என்ற இந்த இடத்திற்கு புலம் பெயர்ந்தன.

அப்படியே கொஞ்சம் வலது பக்கம் திரும்பினீங்கன்னா தலையில் ஒரு குச்சியோட பின்னாடி ஒரு கட்டடம் இருக்கு பாருங்க அதுதான் எம்பயர் ஸ்டேட் பில்டிங். அந்த காலத்திலேயே ஒரே வருஷத்துல இந்த கட்டடத்தை கட்டுனாங்களாம்பா.

இருக்கட்டும், இப்போ அப்படியே இரண்டாவது படத்துக்கு வரலாம். பின்னாடி அதிநவீன கட்டடங்கள், அப்புறமா ஒரு நதி, நதியின் இந்த கரையில் ஒரு பரந்த இடம். இதுதானேங்க லொகேஷன் அப்படின்னு டைரக்டர் சங்கரை கேட்ட அசிஸ்டெண்ட், இது மாதிரியான இடம் எனக்குத் தெரியும் அப்படின்னு கூட்டிக்கிட்டு வந்த இடம் - நியூஜெர்ஸி, அமெரிக்கா! நியூயார்க் நகரம் அப்படின்னு விடை சொன்னவங்க எல்லாம் தப்பு.

அந்த நவீன கட்டடங்கள் இருக்கறது என்னவோ நியூயார்க் நகரம்தான். நியுயார்க் நகரத்தின் டவுண்டவுண் (down down எல்லாம் இல்லைங்க, Down Town!) இந்த இடங்கள் இருக்கும் இடத்திற்குப் பெயர் உலக நிதி மையம் (World Financial Center). சுவர்த் தெரு (Wall Street) கூட இதுக்குப் பக்கம்தான். பல நிதி நிறுவனங்களின் செயல் அலுவலகங்கள் இருக்கும் இடம் இது.

இடது பக்கம் தலையில் பச்சைத் தொப்பி போட்டு இரண்டு கட்டடங்கள் இருக்கு பாத்தீங்களா, அதுக்கு பின்னாடிதான் (கொஞ்சம் சைடில்) உலக வர்த்தக மையம் (World Trade Center) இருந்தது.

அதுலேர்ந்து அப்படியே கொஞ்சம் முன்னாடி வந்தீங்கன்னா, நீல பட்டை போல் தெரிவதுதான் ஹட்சன் நதி. (Hudson River). நியூயார்க், நியூஜெர்ஸி மாநிலங்களின் எல்லைக்கோடா இருக்கு. நியூயார்க் நகரில் வேலை பார்க்கும் பலர் நியூஜெர்ஸியில்தான் வசிக்கிறார்கள். இந்த நதியின் மேல் செல்லும் பாலங்கள், அடியில் செல்லும் சுரங்கங்கள் (Tunnels) மற்றும் நதியில் செல்லும் படகுகள் மூலமாகத்தான் இவர்கள் நியூயார்க் நகரை அடைய முடியும். காலை மாலை நேரங்களில் மிகவும் நெரிசலாகிவிடும் குப்பிக்கழுத்துகள் (Bottle Necks) இவை.

சரி, அப்படியே நதியை கடந்து இந்தாண்டை பக்கம் வந்தீர்களானால் நீங்கள் வருவது நியூஜெர்ஸி மாநிலம். இந்த பரந்த வெட்டை வெளியானது இங்கு இருக்கும் சுதந்திர மாநில பூங்காவின் (Liberty State Park) ஒரு பகுதி. இங்கு இருக்கும் படகுத் துறையில் இருந்து சுதந்திர தேவியின் சிலை இருக்கும் தீவிற்குச் செல்ல முடியும். நியூயார்க் நகரின் அடையாளமாக இருக்கும் சுதந்திர தேவியின் சிலை இருக்கும் தீவு நியூஜெர்ஸிக்கு சொந்தமானது என்ற தகவல் உங்களுக்குத் தெரியுமா?

ஆக, டூரிஸ்ட் கைட் மாதிரி இம்புட்டு நேரம் பேசினதுக்கு அப்புறம் முடிவு என்னான்னா, தலைவர் இருப்பது மலேசியாவும் இல்லை, நியூயார்க்கும் இல்லை. நியூஜெர்ஸியின் லிபர்ட்டி ஸ்டேட் பார்க் என்பதே சரியான விடை.

இங்க வராருன்னு சொல்லியிருக்க மாட்டீங்களாப்பா? போயி பாத்திருப்போமில்ல!

ராஜநாகம் said...

எனக்கென்னமோ இது விவேகானந்தர் தெரு, அஞ்சாம் குறுக்குச்சந்து மாதிரி தெரியுது.

Unknown said...

மை பிரெண்ட், சிங்கைநாதன்,அனானி, திருச்செங்கோடு உங்கள் வருகைக்கும் தகவல் பகிர்வுக்கும் நன்றி..

ஜி,ரா. மீண்டும் வந்து விளக்கம் கொடுத்ததுக்கு நன்றி.. அந்த மலேசியா இடம் படமிருந்தா வலையேத்துங்களேன்.. இரண்டு இடத்துக்கும் உள்ள ஒற்றுமையைப் பார்த்துருவோம்.

கைப்புள்ள said...

//இடதுகைப் பக்கம் பாதியாய் தெரியும் பெரிய கட்டடம் வந்துங்க கோல்டுமேன் சாக்ஸ் நிறுவனத்தாரின் கட்டடம். இதுதான் நியூஜெர்ஸியிலேயே உயரமான கட்டடம். 9/11க்கு பின் நியூயார்க் நகரிலிருந்து பல நிறுவனங்கள் ஜெர்ஸி சிட்டி என்ற இந்த இடத்திற்கு புலம் பெயர்ந்தன//

கொத்ஸ் சொல்லறதை எல்லாம் கூட்டிக் கழிச்சிப் பாத்தா வெளிநாட்டுல இருக்கற வெளிநாடு தானோ?

Anonymous said...

Maduar bus standla irunthu kamraj university pora valia ulla Virattipathunu ninaikurane....

Unknown said...

ஏங்க விவரம் தெரிஞ்சிக்கப் போட்டப் பதிவு தான்ங்க இது...

கொத்ஸ் பதிவுக்கு பின்னூட்டத்திலே விளக்கப் பதிவுப் போட்டுருக்கீங்க..

அருமையான விளக்கம்ங்க.. உங்க ஊரைச் சுத்திப் பாத்த மாதிரியும் ஆச்சுங்க.. அட ஏற்கனவே நம்ம கச்சேரியிலே ஒரு பதிவேப் போட்டோமேங்க.. தலீவர் யு.எஸ் வர்றார்.. மக்கா உசார்ன்னு.. நீங்க பிசியா ஆணிப் பிடுங்கிட்டு ( அதாங்க அப்பப்போ நாம பாக்குற அலுவலக் வேலை) இருந்த வேகத்துல்ல இதை மிஸ் பண்ணிட்டீங்களா?

Unknown said...

//ராஜநாகம் said... எனக்கென்னமோ இது விவேகானந்தர் தெரு, அஞ்சாம் குறுக்குச்சந்து மாதிரி தெரியுது. //

எந்தப் புத்துல்ல இருந்து இப்படிக் கிளம்பியிருக்கீங்க நீங்க.. ஸ்ப்பாபாப்பா...

Unknown said...

கைப்பு சோலி முடிஞ்சது ராசா.. ஆமாய்யா அது வெளிநாட்டுல்ல இருக்க வெளிநாடே தான்.. நீ கூட்டவும் வேணாம் பெருக்கவும் வேணாம்.. ஆங் கழிக்கவும் வேணாம்..

அனானி.. இது மதுரப் பக்கமா இருக்கு.. நீ பார்த்த.. எப்படி இப்படி எல்லாம் கிளப்புறீங்க...

நல்லா இருங்கய்யா.. 30 ஆயிருச்சு.. ஆட்டயக் கலைச்சுரலாம்..

Anonymous said...

The spot he is standing is Liberty science park...the tall Glass building is Golman's 30 Hundson building (both are New Jersey). Across the Hudson river, Manhattan(New York).

ILA (a) இளா said...

////எனக்கென்னமோ இது வெளிநாட்டுல ஒரு வெளியூரா இருக்குமோன்னு சந்தேகமாவே இருக்குது.//

எனக்கென்னவோ இது வெளி நாட்டுல இருக்குற உள்ளூரானு சந்தேகமா இருக்குது ;) //

போர்வாள்,

தல & இ.தள சொல்லுறமாதிரி அது ஒரு வெளிநாட்டிலே இருக்கிற ஊரிலே கொஞ்ச வெளியே அதாவது சிற்றூர்'ஆ இருக்குமின்னு நினைக்கிறேன்..... :)//
இது ஒரு வெளிநாட்டுல நடந்த உள்நாட்டு படப்பிடிப்பு. வெளியூரில் இருந்த மக்கள் எல்லாம் உள்ளூர் வந்து உள்ளார மகிழ்ந்து போனாங்களாம்.

செய்தி: இது ஃபெப் மாதம் முதல் வாரம் புதரகத்துல நடந்த படப்பிடிப்பு.
டப்பிங் போய்ட்டு இருக்கு. ரஜினி பக்கம் முடிஞ்சுருச்சு, மத்தவங்க எல்லாம் பேசிட்டு இருக்காங்க. ஒரு குட்டி செய்தி: சிவாஜி எம்பி3 பாடலகள் போலீஸாரால் கண்காணிக்கப்படுகிறது.

tamil10