Thursday, May 03, 2007

மணிரத்னத்தின் இரவல் சிந்தனைகள்


முந்தா நேத்து மே தினம் அன்னிக்கு கொளுத்துற வெயில்ல வீட்டுல்ல உக்காந்து எப்படி போக்குறதுன்னு யோசிக்கும் போது நண்பன் ஒருத்தன் கொடுத்த டி.வி.டி கையிலே சிக்கியது.

ONCE UPON A TIME IN AMERICA...அப்படிங்கறது படம் பேர். 1984ல்ல வெளிவந்திருக்கு. படம் கிட்டத் தட்ட மூணே முக்கால் மணி நேரம் ஓடுச்சு. அமெரிக்காவின் அந்தக் காலத்து அதாவது 1930கள் கட்டத்தில் கொடி கட்டி பறந்த பேட்டைப் பிஸ்தாக்களின் வாழ்க்கையைச் சொல்லும் கதை..

இந்த படம் ஒரு கொசுவர்த்தி சுத்தும் ஸ்டைலில் சொல்லப்படும் கதையை உள்ளடக்கியது..

ஆமாங்க.. 1930களில் புருக்ளின் பகுதியில் சுற்றித் திரியும் யூதச் சிறுவர்கள் சிறு சிறு குற்றங்களில் ஈடுபட்டு பின் அமைப்பு ரீதியான குற்றம் புரியும் அளவிற்கு வளர்கிறார்கள்.. இந்த வளர்ச்சியை மிகவும் இயல்பாய், எளிமையாய், ஆர்ப்பாட்டமின்றி தெளிந்த நீரோடைப் போலச் சொல்லிக்கொண்டேப் போகிறார் இயக்குனர்.

சிறுவர் குழுவில் ஆரம்பத்தில் மொத்தம் நான்கு பேர், நூடுல்ஸ், மேக்ஸ், பேட்சி, காக் ஐ, மற்றும் டோம்னிக்.. இதில் டாம்னிக் சின்னஞ்சிறு பால்கன்.. அந்த ஏரியா தாதாவோடு ஏற்படும் மோதலில் டோம்னிக் கொல்லப்படுகிறான். இதற்கு பழித் தீர்க்க நூடுல்ஸ் அதே இடத்தில் ஏரியா தாதாவையும் ஒரு போலீஸ்காரரையும் அங்கேயே கத்தியால் குத்திக் கொல்கிறான். சிறை வாசம் முடிந்து இளைஞனாய் திரும்பும் நூடுல்ஸ் சகாக்களின் வளர்ந்த குற்ற அமைப்பின் தலைவன் ஆகிறான்.

மேக்ஸ் நூடுல்ஸ் இடையே மலரும் நட்பு அதன் ஆழம் என்று அழகாய் கதை செதுக்கப்பட்டிருக்கிறது. மேக்ஸ்க்கும் நூடுல்ஸ்க்கும் தொழில் ரீதியாக் ஏற்படும் சிறு சிறு மன வேறுபாடுகள் பின்னர் மேக்ஸ் விட்டுக்கொடுத்து இறங்கி வருவது என நட்புக் கோட்டை தெளிவாகக் கட்டப்படுகிறது.

கடகியில் காதலும் உண்டு, சிறுவர்களின் குற்றங்களில் நேரடியாக ஈடுபடாவிட்டாலும் அவர்களுக்கு உறுதுணையாக இருக்கும் பேக்கிரிக் கடைக்கார பையன் மோ... அவனுக்கு ஒரு தங்கை. நன்றாக பாடுவாள், ஆடுவாள்.. நூடுல்ஸ்க்கும் அவளுக்கும் இடையே ஒரு அழகிய காதல் கவிதையாய் நகர்கிறது. வலியில் முடிகிறது.

மேக்ஸின் பெரும் கனவுகளால் கலக்கமுறும் நூடுல்ஸ் மேக்ஸைக் காப்பாற்ற எடுக்கும் ஒரு முடிவு மேக்ஸ், பேட்சி, காக் ஐ ஆகியோரது வாழ்க்கையை முடிக்கும் வீபரீதத்தில் முடிகிறது. நூடுல்ஸ் அந்த விபரீதத்திற்கு தானேக் காரண்ம் என்ற குற்ற மனத்தைச் சுமந்தப் படி அந்த ஊரை விட்டு வெளியேறுகிறான். 35 ஆண்டுகள் கழித்து நூடுல்ஸை அதே ஊருக்கு மறுபடியும் ஒரு விழாவுக்கான அழைப்பிதழ் அழைத்து வருகிறது...

நூடுல்ஸ் மட்டுமல்லாமல் பார்வையாளர்களையும் திடுக்கிட வைக்கும் திருப்பங்களைத் தந்து படம் முடிகிறது...

இதை பற்றி மேலும் விவரிக்காமல் விடுகிறேன்.. ஒரு வேளை நீங்க யாராவது இந்தப் படம் பார்க்க விருப்பப்பட்டால் பார்த்து அறிந்துக் கொள்ளுங்கள் மற்றவர்களுக்கு மொத்தக் கதையும் இங்கே ஆங்கிலத்தில் படிக்கக் கிடைக்கும்.

படத்தின் முக்கிய பாத்திரம் நூடுல்ஸ் வேடத்தில் ராபர்ட் டி நிரோ அசத்தியிருக்கிறார். அவரது நண்பன் மேக்ஸ் வேடத்தில் வரும் ஜேம்ஸ் வுட்ஸ்ம் சொல்லும் படி செய்த்திருக்கிறார். நூடுல்ஸின் காதலியாய் வரும் எலிசபெத் மெக்கவுன் நல்ல தேர்வு. அதே பாத்திரத்தின் சிறுவயது பெண் அழகு.

படத்தை இயக்கியிருப்பவர் செர்கியோ லியோனே. படத்தின் சிறப்பம்சம் ஒளிபதிவு.. கண்களை உறுத்தாத காலமாற்றங்களை இயல்பாக கண் முன் நிறுத்தும் ஒளிபதிவு. இசையைப் பற்றி கட்டாயம் சொல்ல வேண்டும்.. மெல்ல ரம்யமான இசை. கட்டிப் போடுகிறது.

அமெரிக்க குற்றவுலக வாழ்க்கையை அருமையாக பதிவு செய்திருக்கும் ஒரு படம் இது என்றால் மிகையாகாது.

இந்தப் படம் பார்க்கும் வரை நாயகன் படத்தை மணியால் எப்படி இப்படி எல்லாம் சிந்தித்து செதுக்க முடிந்தது என நான் எண்ணி எண்ணி வியந்தக் காலங்கள் உண்டு.. அதற்கானப் பதில் இந்தப் படம் பார்த்தப் பிறகு எனக்கு கிடைத்து விட்டது..I AM SURE MANI IS A LOT INSPIRED BY SERGIO LEONE's ONCE UPON A TIME IN AMERICA

எதோ ஒரு சோம்பலான விடுமுறை நாளில் என்னச் செய்யலாம் என யோசித்தீர்களானால் I SUGGEST U WATCH THIS MOVIE

38 comments:

Anonymous said...

//சிறுவர் குழுவில் ஆரம்பத்தில் மொத்தம் நான்கு பேர், நூடுல்ஸ், மேக்ஸ், பேட்சி, காக் ஐ, மற்றும் டோம்னிக்.. //

கணக்கு வாத்தியார் பேரை காப்பாத்துங்கப்பா!!!

Unknown said...

படம் பாருங்க அப்போக் கணக்குப் புரியும்.. ஆரம்பத்தில் நான்கு தான்... ஒண்ணு எக்ஸ்ட்ரா அது கணக்குல்ல வராது.. புரியுதா பாஸ்...:)

கானா பிரபா said...

சந்தோஷ் சிவன் தான் எடுக்கவிருக்கும் டெரரிஸ்ட் கதையைச் சொல்ல மணி சார் முந்திக்கொண்டு உயிரே எடுத்திருந்தார். இரண்டையும் பார்த்தேன் பெரிதாக வித்தியாசமில்லை.

டிபிஆர்.ஜோசப் said...

மணிரத்தினம் தன்னை ஏதோ அறிவுஜீவி என்று காட்டிக்கொண்டாலும் அவருடைய படங்களில் அதிகம் இத்தகைய காப்பிகள்தான். ஆனால் என்ன காப்பியடிக்கறதையும் நல்லாவே செய்வார்.

அதான் அவருக்கு மத்தவங்களுக்கும் உள்ள வித்தியாசம்.

Unknown said...

வாங்க கானா பிரபா, நான் இன்னும் டெரரிஸ்ட் படம் பார்க்கல்ல.. உயிரே கூட பிரச்சனைகளை அழுத்தமாய் பேசவில்லை என்பதே என் கருத்து.. மணிரத்னம் தனி மனித வரலாறுகளை வியாபார ரீதியாகச் சுவைப்பட சொல்லுபவர் என்பது என் எண்ணம். எ.கா. நாயகன், குரு....இன்னும் தொடரும்

Unknown said...

ஜோ சார், அவர் அறிவு ஜீவியாக வியாபாரக் காரணங்களுக்காகச் சித்தரிக்கப் படுகிறாரோ என நான் நினைக்கிறேன்... சொன்னா மாதிரி காப்பி அடிச்சு அதையும் சிறப்பாச் செய்ய அறிவு கண்டிப்பா வேணும் அது நம்ம மணிகிட்டே நிறையவே இருக்கு

Anonymous said...

kamal's voice modulation in naayagan is similar to marlon brando's in godfather.

storyline is also same.i thought mani copied godfather into naayagan. too many inspirations it seems.

CVR said...

மணியின் 90% படங்கள் எல்லாம் "inspired" தான்!!
அதுவும் நாயகன் எல்லாம் "very highly inspired by Godfather" :-)

Ayyanar Viswanath said...

தேவ்

நாயகன் படம் காட்ஃபாதரின் தமிழ் வடிவம்..பெரும்பாலான எல்லா காட்சிகளும் பொருந்தி வரும்..தலை கோதும் மேனரிசம் ..கட்டைக்குரல்..மகன் இறந்து போவது ன்னு எல்லா காட்சிகளும் அப்படியே சுட்டதுதான்..பாராட்டப்பட வேண்டிய விஷயம் என்னன்னா கமல் மார்லன் பிராண்டோ அளவுக்கு நடிச்சிருப்பார்

இரவல் சிந்தனைதான் என்றாலும் சிந்தனையே இல்லாத தமிழ் சினிமாவில் இரவலாவது இருக்கேன்னு சந்தோஷப்பட்டுக்க வேண்டியதுதான்

உங்கள் நண்பன்(சரா) said...

//எ.கா. நாயகன், குரு....இன்னும் தொடரும்//

சொக்கா சொன்ன போ!இன்னும் தொடரும்ல இருவர்-ஐயும் சேத்துக்கோ டைரக்டரு! நீயோ ஒரு டைரக்டரு!நீ சொன்னா எல்லாம் கரிகிட்டாதாம்பா இருக்கும்,

ஆமா! நீ சங்கத்துல இருந்து வெளகிட்டனு நம்ம பயக சொல்லுறானுக உண்மையா? இரு எதுக்கும் சங்கத்துப் பக்கத்துக்குப் போயிட்டுவரேன்! அது மட்டும் உண்மையா இருந்துச்சு மெய்யலுமே நான் அழுதுடுவேன்,
அவ்வ்வ்(இங்கிருந்தே ஆரம்பிச்சிக்கிட்டுப் போறேன்!)


அன்புடன்...
சரவணன்.

Anonymous said...

Hi,
I can give list of movies which we people amzed about the stories and acting. I would say that many kamal's movies are inspiration of hollywood and western movies. I amazed the story lines untill i started to watch hollywood or western movies. Still i would appreciate the people like mani, kamal etc for showing different stories. here is the list
Raaja paarvai - Butterflies are free
Enakkul Oruvan - Reincarnation of peter proud
Indiran chandran - moon over parador
thenali - what about bob
naala damayanthi - green card
sathi leelavathi - she-devil
planes, trains& automobiles - Anbe Shivam
Guna - Zero

i did not accept one thing from indian writers or movie makers. They claim that the story belongs to them.

Selva

Anonymous said...

Sorry for the correction,

Guna is the inspiration of "Tie me up tie me down". I had red most of the movies stories. I also started to watch above listed movies. for instance, i watched thenal and what about bob back to back.

selva

Boston Bala said...

பார்க்க வேண்டும்.

Syam said...

SERGIO வ பாத்து மணி காப்பி அடிச்சாருன்னு சொன்னா நம்பற மாதிரியா இருக்கு....மணிய பாத்து SERGIO காப்பி அடிச்சிருக்காரு....:-)

மனதின் ஓசை said...

காப்பி அடிக்கட்டும்யா.. அது ஒன்னும் பெரிய தப்பில்ல. காப்பி இல்லன்னு சொன்னத்தான் (சின்ன)தப்பு..

மக்களுக்கு புதுசாவோ ரசிக்கும்படியோ இருந்தா போதும்யா...

மனதின் ஓசை said...

மக்களுக்கு என்னோட ஒரு சில பரிந்துரைகள்:

life is beautiful
Men of Honour
Godfather I & II
Meet the Parents
Sivaji the Boss

கொசுரு : தமிழன் படத்துல வர காமெடி எல்லாமே அப்பட்டமா "life is beautiful" படத்துல இருந்து காப்பியடிச்சது..

Unknown said...

//kamal's voice modulation in naayagan is similar to marlon brando's in godfather.

storyline is also same.i thought mani copied godfather into naayagan. too many inspirations it seems. //

You are right.. some call it copy.. but the directors and actors call it inspiration :)

Unknown said...

//மணியின் 90% படங்கள் எல்லாம் "inspired" தான்!!
அதுவும் நாயகன் எல்லாம் "very highly inspired by Godfather" :-) //


வாங்க சி.வி.ஆர்.. நாயகன் காட்பாதர் கதைன்னு ஊருக்கே தெரியும்.. ஆனா நாயகனின் ஆரம்பச் சின்ன வயது காட்சிகள் எங்கிருந்து வந்திருக்கும்ன்னு இந்தப் படம் பார்த்து தான் நான் தெரிஞ்சிகிட்டேன்:)

Unknown said...

//
இரவல் சிந்தனைதான் என்றாலும் சிந்தனையே இல்லாத தமிழ் சினிமாவில் இரவலாவது இருக்கேன்னு சந்தோஷப்பட்டுக்க வேண்டியதுதான் //

அய்யனார் இப்படி ஒரு சகிப்புத் தன்மை நம் ரசிகர்களிடம் தானாய் வளர்ந்துவிட்டதா இல்லை வலுக்கட்டாயமா வளர்க்கப்பட்டதான்னு ஒரு தனிப் பதிவே போடலாம் போல இருக்கே :)

Unknown said...

//சொக்கா சொன்ன போ!இன்னும் தொடரும்ல இருவர்-ஐயும் சேத்துக்கோ டைரக்டரு! நீயோ ஒரு டைரக்டரு!நீ சொன்னா எல்லாம் கரிகிட்டாதாம்பா இருக்கும், //

உண்மையான அசிஸ்டெண்ட் டைரைக்டர் நீ தான் நண்பா.. அடுத்து யாரை வச்சு கதை எடுக்கலாம் ஒரு ஒன் லைன் சொல்லு பாப்போம்.. ச்சே கேப்போம்.

Unknown said...

selava,

Thanks for the list.. i think we should discuss about kamal's movies in a separate post

Kamal is one great inspired actor :)

Unknown said...

//பார்க்க வேண்டும். //

கண்டிப்பா பாருங்க பாலா.. I am sure u wont Regret it :)

Unknown said...

//SERGIO வ பாத்து மணி காப்பி அடிச்சாருன்னு சொன்னா நம்பற மாதிரியா இருக்கு....மணிய பாத்து SERGIO காப்பி அடிச்சிருக்காரு....:-) //


நாட்டாமைகாரரே என்னத் தீர்ப்பை இப்படி திருப்பிச் சொல்லிட்டீங்க... GOOD BAD UGLY படம் நம்ம மணியைப் பார்த்து தான் SERGIO எடுத்தாரா? :)))

Anonymous said...

Dev,
I really to not angry with any inspired movies are directors. but the one should not claim it as his story. It is really a plagiarism or copy or what ever we call it. Since we do not have proper act or regulation to describe the act of plagiarism or inspiration or copy, this problem will exist and people will continue to claim others story as their ones. Anyway, those movies are really good and we are enjoying it. After all movies are still classified under entertainment categeory.

Syam said...

//GOOD BAD UGLY படம் நம்ம மணியைப் பார்த்து தான் SERGIO எடுத்தாரா? :)))
//

ஹி...ஹி....Good Bad Ugly மட்டுமா எல்லா inglees படமும் நம்ம தமிழ் படத்த பாத்து காப்பிதான்...(அப்படித்தான் நம்ம இயக்குனர்கள் சொல்லிக்கறாங்க)....:-)

Santhosh said...

மாப்பி படம் பாத்துட்டு எப்படி இருக்குண்ணு சொல்றேன். எல்லாரு சொல்லி இருக்குற மாதிரி மணிரத்தினம் எடுத்த பெரும்பாலான படங்கள் காப்பி தான்.

Ayyanar Viswanath said...

/தமிழன் படத்துல வர காமெடி எல்லாமே அப்பட்டமா "life is beautiful" படத்துல இருந்து காப்பியடிச்சது../

மனதின் ஓசை ஒரு சின்ன திருத்தம் அது யூத் தமிழன் இல்லை

:)

Anonymous said...

/*வாங்க சி.வி.ஆர்.. நாயகன் காட்பாதர் கதைன்னு ஊருக்கே தெரியும்.. ஆனா நாயகனின் ஆரம்பச் சின்ன வயது காட்சிகள் எங்கிருந்து வந்திருக்கும்ன்னு இந்தப் படம் பார்த்து தான் நான் தெரிஞ்சிகிட்டேன்:)
*/


Yen nenga godfather-2 parthathu illaya

godfather1,2,3 combine pannithan mani'oda nayagan

மனதின் ஓசை said...

//மனதின் ஓசை ஒரு சின்ன திருத்தம் அது யூத் தமிழன் இல்லை//

அய்யனார்.. நன்றி..

Anonymous said...

ஆமாங்க, தளபதி படம் கூட மகாபாரதத்தைத் தழுவி எடுக்கப்பட்டதுதானாம் :-)))

Unknown said...

//Dev,
I really to not angry with any inspired movies are directors. but the one should not claim it as his story. It is really a plagiarism or copy or what ever we call it. Since we do not have proper act or regulation to describe the act of plagiarism or inspiration or copy, this problem will exist and people will continue to claim others story as their ones. Anyway, those movies are really good and we are enjoying it. After all movies are still classified under entertainment categeory.//


I am in total agreement with ur statement anony.. btw you could have mentioned your name in this comment :)

Unknown said...

//ஹி...ஹி....Good Bad Ugly மட்டுமா எல்லா inglees படமும் நம்ம தமிழ் படத்த பாத்து காப்பிதான்...(அப்படித்தான் நம்ம இயக்குனர்கள் சொல்லிக்கறாங்க)....:-) //
இங்கேத் தான் முக்கியமா ஒண்ணைக் கவனிக்கணும்... பக்கார்டீ அடிச்சுட்டுச் சொல்லுறாங்களா... இல்லா பக்காத் தெளிவாச் சொல்லுறாங்களான்னு நல்லாக் கவ்னிச்சு உங்கத் தீர்ப்பாஇ தீர்க்கமாச் சொல்லணும்ன்னு கேட்டுக்குரேன் நாட் அய்யா.

Unknown said...

//காப்பி அடிக்கட்டும்யா.. அது ஒன்னும் பெரிய தப்பில்ல. காப்பி இல்லன்னு சொன்னத்தான் (சின்ன)தப்பு..

மக்களுக்கு புதுசாவோ ரசிக்கும்படியோ இருந்தா போதும்யா...//

செய்யறத தெளிவாச் செய்யச் சொல்லுறீங்களா மனதின் ஓசை

அதுவும் நியாயம் தான்.. கோழியைப் பார்த்துட்டு குரங்கு படம் வரையாம இருந்தாச் சந்தோசம்ங்குறீங்க..

Unknown said...

//மாப்பி படம் பாத்துட்டு எப்படி இருக்குண்ணு சொல்றேன். எல்லாரு சொல்லி இருக்குற மாதிரி மணிரத்தினம் எடுத்த பெரும்பாலான படங்கள் காப்பி தான். //

பாத்துட்டுச் சொல்லு மாப்பி :-)

Unknown said...

ம்ம்ம் வாங்க அய்யனார்.. சரியானத் தகவ்லுக்கு நன்றி இன்னொரு அற்புதமான படம்... யூத் கூட ஒரு அற்பத்தனமான படம்.. சாரி நாக்கு சுழன்றுப் போச்சு.. யூத் விஜய் ரசிகர்கள் பார்வையில் ஒரு அற்புதமான படமாம்

Unknown said...

//ஆமாங்க, தளபதி படம் கூட மகாபாரதத்தைத் தழுவி எடுக்கப்பட்டதுதானாம் :-))) //

ம்ம்ம் இது என்ன ஆங்கிலப் படம்ன்னு இன்னும் தெரியல்ல தெரிஞ்சவங்க ப்ளீஸ் சொல்லுங்களேன்..

Anonymous said...

"அஞ்சலி" படம் மாதிரியே இருக்கேன்னு நான் ஆன்னு அசந்து போய் பாத்தது "ஈ.டி" ஆனா படம் போக போக, அடேங்கப்பா, இந்த மாதிரி தீம்ல உள்ள குஷியான விஷ்யமெல்லாம் அஞ்சலி மாதிரி கருத்தாழமிக்க ஒரு தீம்ல கொண்டு வந்து கலக்கிட்டாரே தலைவர்னு, உள்ளம் உருகிப் போயிட்டேன்.

காட் ஃபாதர் அப்புறம் இந்த செர்கியோ படத்தில ஒரு சுயமரியாதை உள்ள முன்னேற துடிக்கும் விபச்சாரிய மதிச்சு ஹீரோ கல்யாணம் பண்றாங்களா என்ன?

நீங்க எல்லாரும் பேசிக்கிற மாதிரி, காப்பி அடிக்கிறதில்லையும் அற்புதமா அதை திரிச்சி ஆனந்தமா ஆழமான கருத்துக்களை சொல்றதுல மணி சார் மூளையே மூளைதான்!

Unknown said...

வாங்க மதுரா,

//காட் ஃபாதர் அப்புறம் இந்த செர்கியோ படத்தில ஒரு சுயமரியாதை உள்ள முன்னேற துடிக்கும் விபச்சாரிய மதிச்சு ஹீரோ கல்யாணம் பண்றாங்களா என்ன?//

நம் நாட்டில் நாம் கொண்டாடும் பல ஹீரோயிஸத்தனங்கள் அவர்கள் நாட்டில் வெகு யதார்த்தமான விஷ்யங்களாக இருக்கிறது... இதுவும் அப்படியே

//நீங்க எல்லாரும் பேசிக்கிற மாதிரி, காப்பி அடிக்கிறதில்லையும் அற்புதமா அதை திரிச்சி ஆனந்தமா ஆழமான கருத்துக்களை சொல்றதுல மணி சார் மூளையே மூளைதான்! //

கண்டிப்பா ஒத்துக்குறேன்.. ஒரு முக்கியமான டிஸ்கி பதிவுல்லப் போட்டிருக்கணும் ஆனா இங்கேப் போடுறேன்... இந்தப் பதிவு மணியின் திறமைகளைக் குற்ற்படுத்தும் நோக்கத்தில் எழுதப்பட்டது அல்ல...

tamil10