Tuesday, October 02, 2007

சங்கம் வழங்கும் விவாஜி - 2

கதைச் சொல்லி ஒரு நாள் ஆன நிலையில் அந்த போன் வந்துச்சு

லைன்ல்ல வந்தது சங்கத்து சிங்கம் தல கைப்புள்ளயே தான்..

"உன் கதையைப் படிச்சேன்.. ஆரம்பம் எல்லாம் அசத்தலாத் தான் இருக்கு.. எனக்கு பிடிச்சிருக்கு.. அதுவும் விவாஜிங்கற அந்த பேர் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு.. என் உதவி எதாவது தேவைன்னா டக்ன்னு சொல்லு கிளையண்ட் வந்து என்னைக் களைப் புடுங்க கழுத்துல்ல கிடக்க கார்டு கயித்தோட இழுத்துகிட்டு போறதுக்குள்ளேச் சொல்லு"

" நம்ம விவாஜியில்ல ஒரு முக்கிய ரோலுக்கு ஒரு முக்கியமான ஆளு வேணும் தலண்ணே.. உங்க செல்வாக்கைப் பயன் படுத்தி அவர் சம்மதம் வாங்கி தாங்க தலண்ணே.. "

"ஆகா அது என்ன ரோலு.. சொல்லு... விவாஜின்னு நீ படம் எடுக்குற அந்த ஒரே காரணத்துக்காகவே நானே நடிச்சித் தர்றேன் காசு கூட வேணாம்ய்யா"

"தலண்ணே.. அந்த ரோல் உங்களுக்கு செட் ஆகாது.. ரசிகர்கள் ஒத்துக்க மாட்டாங்களே"

"ஏன்? அப்படி என்ன ரோல் அது...? என் நடிப்புக்கு சவால் விடுற ரோல்..?" தலண்ணே போனிலே டென்சனாக

"தலண்ணே.. அது வில்லன் ரோல் தலண்ணே.."

"ஆமா சரி தான்.. நான் வில்லனா நடிச்சா நாடே நாகரீகம் கெட்டுப் போயிருமே... சரி யாரை வில்லனாப் போடப் போற.. நான் வேற ரெகமண்ட் பண்ணனும்ன்னு சொல்லுற.."

"தலண்ணே.. வில்லன் கேரக்டர் பேர் "வாரங்கல் வெட்டிகாரு" இப்போ உங்களுக்கு புரிஞ்சிருக்குமே.." நான் இழுக்க..

"அட என்னப்பா நீயு.. அவன் சாதுவான ஆள் ஆச்சே.. அவனை வில்லனா நினைச்சுக் கூடப் பாக்க முடியல்லயே.. அது மட்டுமில்லாம ஆந்திராவுல்ல அவன் ரேஞ்சு வேற ஆச்சேப்பா.. ஜனங்க ஒத்துக்குவாங்களா.. விவாஜிக்கு அவன் தம்பி மாதிரி இல்ல நம்ம மக்கள் மனசுல்ல அவன் இமேஜ் இருக்கு" தலண்ணே காரணம் எல்லாம் சொல்ல..

"தலண்ணே நான் கதையைச் சொல்லுறேன் நீங்களே அப்புறம் சொல்லுங்க "அப்படின்னு நான் இழுக்க

"ஓ.கே..சட்டுன்னு சொல்லு" அப்படின்னு தலண்ணே சிக்னல் கொடுக்க...

நம்ம கதையை பிளாஷ் பேக்ல்ல ஸ்டார்ட் பண்ணுறோம்.
அப்படியே கதைக்காக கோயம்பேடு பஸ் ஸ்டாண்ட் போறோம்...

அங்கே கோயம்புத்தூர்ல்ல இருந்து வர்ற பஸ் டாப்ல்ல செம ஸ்டைலா ஆரஞ்ச் பேண்ட் அப்புறம் கருப்பு சட்டை கூலிங் கிளாஸ் சகிதமா நம்ம விவாஜி வர்றார்.... அவரை வரவேற்க ஒரு பெரிய கூட்டமே நிக்குது...

தளபதி சிபி படு ஸ்மார்ட்டா ஒயிட் அன்ட் ஒயிட் யூனிபார்ம்ல்ல நிக்குறார்.. அவரைச் சுத்தி ஒரு ஒயிட் அன்ட் ஒயிட்ல்ல ஒரு கும்பல் ஸ்மோக் எபெக்ட்ல்ல நிக்குது

"ஹாய்...ஹாய்...ஹாய்.. நான் தான் கோவி.கண்ணன்.. ச்சே சாரி ஆவி அண்ணன்.. எல்லாரும் விவாஜியைப் பாக்க வந்தீங்களா?" அப்படின்னு கேட்டுகிட்டே என்டிரி கொடுக்குறார் சிபி...

அங்கே பெனாத்தல் சுரேசும் கோவி.கண்ணனும் ( நிஜமான கோவி.கண்ணன் தான்) நிக்குறாங்க...சிபி நிஜமான கோவி.கண்ணனைப் பார்த்து லைட்டா ஜெர்க் ஆகிறார்.

"HI WE R THE RECRUITERS OF VIVAJI "அப்படின்னு பினாத்தலார் சொல்ல

"ஓ.."அப்படின்னு சிபி கூட வந்த ஓயிட் அன்ட் ஓயிட் கும்பல் சவுண்ட் விட...

ஆகா விவாஜியை வேலைக்குச் சேர்த்தவங்களைப் பார்த்ததுக்கே இந்த எபெக்ட்ன்னா விவாஜியைப் பார்த்தா என்னாகுமோன்னு சிபி சொல்ல.. விவாஜி வந்த பஸ் பிரேக் அடித்து விவாஜி பறந்து வருகிறார்...

வாவ் என ஓயிட் அன்ட் ஓயிட் கூட்டம் கத்துறாங்க...
சும்மா தியேட்டரே கதறுதுல்ல...சிபியைப் பார்த்து விவாஜி ஹே அனானி எப்படி இருக்க? அப்படின்னு கேக்க

யார் நான் அனானியா... அண்ணா நீன்னு கூப்பிடு அது தான் ஒனக்கு மரியாதை அப்படின்னு சொல்லுறார் சிபி..

"இவங்க எல்லாம் யார் மேன்?" அப்படின்னு விவாஜி கேக்க...

"இது ஆவி அண்ணாச்சி.. இது ஆவி அம்மணி..இது ஆவி அண்ணா, இது ஆவி தம்பி... "

"ஆக இதெல்லாம் அனானி தானே?" அப்படின்னு விவாஜி டபாய்க்கிறார்.


விவாஜியின் டிராக்டரில் விவாஜி, சிபி, மற்றும் விவாஜியின் புதிய கம்பெனி ரெக்ரூட்டர்ஸ் எல்லாரும் சேர்ந்து கிளம்புறாங்க.. மவுண்ட் ரோட்ல்ல ஷாட் வைக்கிறோம்

"விவாஜி இப்போ எல்லாம் கடலை போடுறது அல்ட்ரா மாடர்ன் ஆகிருச்சு நம்ம சென்னையிலே...மொபைல்... லாப்டாப்..பிராட் பேண்ட்.. இப்படி வேர்ல்ட் ரேஞ்சுக்குப் போயிட்டு இருக்கோம்.."


"IS IT COOL"

அப்போது தேனாம்பேட்டை எஸ் ஐ டி கல்லூரி வாசல் சிக்னலில் விவாஜியின் டிராக்டர் நிற்கிறது. அங்கே ஒரு விடலை பையன் பஸ்ல்ல இருக்கும் காலேஜ் பொண்ணு மேல பேப்பர் அம்பு விட விவாஜி பயங்கர பீலிங் ஆகிறார்.

"ம்ம் எஸ்.எம்.எஸ், எம்.எம்.எஸ்,வாய்ஸ் மெயில், இன்ட்ர் நெட், வயர்லெஸ் இப்படி கடலைப் போட என்னவெல்லாமோ வந்தாச்சு..ஆனா ஏழை மாணவர்கள் கடலைப் போட இன்னும் இந்த பேப்பர் ஏரோ தானே...அது இன்னும் மாறல்ல "

விவாஜி இறங்கிப் போய் அந்த பையனுக்கு தன்னுடைய மொபைல் போனை சும்மா தருகிறார்...அப்போ அதில் ஒரு மெசேஜ் வர் வைப்ரேட்டர் அடிக்கிறது....பையன் கையில் இருந்து செல் வைப்பரேட்டர் அதிர்ச்சியில் எகிறி விழப் போக அதை ஸ்டலா பிடிக்கும் நம்ம விவாஜி கேமராப் பார்த்து பஞ்ச் வைக்கிறார்

மெசெஜ் வந்தா சும்மா செல் எகிறுதுல்ல

அடுத்து சீன் அப்படியே கட் ஆகி ஒரு பதிவர் சந்திப்புக்கு போவுது...

(தலண்ணே இங்கே ஸ்பெஷல் ரோல் பண்ணுறார்.. அவர் கூடவே நம்ம கிடேசன் பார்க் மக்களும் ஸ்பெசல் அப்பியரன்ஸ் தர்றாங்க)

"ஏன் விவாஜி கோயம்புத்தூர் விட்டு இங்கே வந்துருக்கீங்களே.. என்னப் பண்ணப் போறீங்க?" பெனத்தலார் கேட்கிறார்

"அது ஒண்ணும்ல்ல கிராமம் கிராமமா போய் கடலை வளர்த்து சாகுபடி பண்ணியாச்சு. இனிமே சென்னையிலேத் தான் வங்கக் கடலைப் பாத்துகிட்டே கடலைப் போடப் போறேன்... இனி வேற எங்கேயும் போக மாட்டேன்"

"ஏன் விவாஜி இது வரைக்கும் ஒரு ஆறு கோடி கடலைப் போட்டிருப்பீயா?" சிபி கேக்குறார்..

""இல்லை அதுல்ல ஒரு பத்துக் கொறைச்சுக்கோ"

தமிழ்ல்ல கடலை போட முடியாதுங்கறது இல்ல..இங்கே யாரும் சரியாக் கடலைப் போடுறது இல்ல அதான் பிரச்சனை..அதுக்காக எதாவது செய்யணும்ன்னு தான் நான் வந்துருக்கேன்... வெள்ளைக்காரனைப் பாருங்க விதம் விதமா கடலைப் போடுறான்.. இந்திக்காரனும் அவன் பங்குக்கு பக்காவாக் கடலைப் போடுறான். ஆனா நாம இன்னும் கடலைப் போடுறவனைப் பார்த்து பொங்கி பொங்கியே பொழப்பைக் கெடுத்துகிட்டு இருக்கோம்.. அது மாறணும்.." அப்படின்னு நம்ம விவாஜி மைக் பிடித்து பேசும் அதே நேரம் பயங்கர கெட்டப்புல்ல ஆந்திரா மடிப்பு வேஸ்ட்டி கட்டிகிட்டு ஒருத்தர் உள்ளே வர்றார்...

"விவாஜி இது தான் வாராங்கல் வெட்டிகாரு.. பெரிய பதிவர்.. இவருக்கு பிளாக் ஸ்பாட் வேர்ட்பிரஸ் அப்படின்னு எக்கச்சக்கப் பதிவு இருக்கு... ரொம்ப பெரிய கை.. பதிவு சைஸ்க்கு பின்னூட்டமே போடுற அளவுக்கு முக்கியமான புள்ளி " அப்படின்னு சிபி விவாஜிக்கு வெட்டிகாருவை அறிமுகம் செய்து வைக்கிறார்.


"அய்யோ அவர் மிகையாச் சொல்லுறார்..நான் வெறும் வெட்டிப் பயல் தாங்க..ஓட்டணும்ன்னு அவரே என் பெயர் கூட 'காரு' சேத்துச் சொல்லிக் கலாய்க்கிறார்.. உங்களுக்கு என்ன உதவி வேணுமோ கேளுங்க நானே செய்யுறேன்.."

வெட்டிகாரு கையை மடக்கி கும்பிட பக்கத்தில் நிற்கும் புலிக்குட்டி படு பவ்யமாய் ஒரு கார்டை நீட்டுகிறார் அதில் vettttipayal.blogspot.com, vettipayaal.wordpress.com... etc அப்படின்னு நிறைய இருக்கு. விவாஜி அதை வாங்கிப் பாக்கெட்டுக்குள் வச்சிக்குறார்.


அவர் போனதும்... மியூசிக் அலறுது...அப்பா என்னப்பா இது விவாஜி இருக்க ஊர்ல்ல இப்படி கச்சாம்புச்சான்னு பாட்டு சுசீலா அம்மா பாடுன்ன பாட்டைப் போடுங்க அப்படின்னு ஒரு கொரலு பாரத்தா ஜி.ரா நிக்குறார்...

சுசிலா அம்மா பாட்டு ஸ்டார்ட் ஆகி அப்படி ரீமிக்ஸ்ல்ல... பாட்டு பட்டையக் கிளப்புது...


(பாட்டுல்ல பார் ஏ சேஞ்ச் நம்ம சிபி நயந்தாராவோடு ஒரு பல்லவிக்கு பக்காவா குத்துப் போடுறார்)

இதுக்கு அப்புறம் நம்ம விவாஜி வெட்டிகாருவைச் சந்திக்கப் போறார்...
அங்கே....உதவி கேட்டுப் போன விவாஜியை உக்கார வைக்கிற வெட்டி டேபிள்ல்ல ஒரு இன்டர்னேஷ்னல் எபெக்ட்க்காக பில் கிளிண்டனும் ஹிலாரியும் இருக்க போட்டோவை வைக்கிறோம்... பின்னாடி பெரிய சைஸ்ல்ல தலண்ணே கைப்புள்ளவோட போட்டோவையும் வைக்கிறோம்

"இந்தாங்க விவாஜி.. இது உங்க ஜிடாக் ஐடி...அப்புறம் இது ஆர்குட் ஐடி...இது யாஹூ ஐடி... எல்லாம் நானே உக்காந்து உங்களுக்காக கிரியேட் பண்ணிட்டேன்.. இதுல்ல போய் லாகின் பண்ணி ஆரம்பிச்சீங்கன்னா உங்க கடலை கடல் தாண்டி கலகலன்னு கொடி கட்டும்"


"வெட்டிகாரு நாங்க பதிவு போட்டு பின்னூட்டக் கடலை போட வழி கேட்டா.. நீங்க வேற எதோ சொல்லுறீங்களே"ன்னு சிபி இழுக்க


"ம்ஹும் அதெல்லாம் சரி வராதுங்க.. நான் ரெண்டு பதிவு வச்சிருக்கேன் பிளாக்ஸ்பாட்ல்ல ஒண்ணு வேர்ட்பிரஸ்ல்ல ஒண்ணு..பிளாக்ஸ்பாடல்ல ஒரு பதிவுக்கு நூறுல்ல இருந்து நூத்தி இருவது பின்னூட்டம் வரைக்கும் வாங்குறேன்... வேர்ட்பிரஸ்ல்ல அம்பதுல்ல இருந்து தொண்ணூறு வரைக்கும் வாங்குறேன்... இப்போ நீங்களும் பதிவு பின்னூட்டம்ன்னு பங்கு போட வந்தா நான் என்னப் பண்றது..?" வெட்டிகாரு லைட்டான கோவம் காட்ட...

"பரவாயில்லங்க..நானே கடலைப் போட வழி பாத்துக்குறேன் " அப்படின்னு விவாஜி எழும்ப..

"இப்படி தான் இதுக்கு முன்னாடி பதிவு போடுறேன்னு.. பட்டையக் கிளப்புறேன்னு நிறைய பேர் வந்தாங்க.. அவங்களுக்கு எல்லாம் தெலுங்குல்லே பின்னூட்டம் போட்டு பீதியக் கிளப்பிட்டோம்ல்ல.." அப்படின்னு புலி பாய..

"மிரட்டுறீங்களா? இந்த விவாஜி கண்டிப்பா கடலைப் போடுவான்.. ஒரு நாளைக்கு மூணு பதிவு போட்டு முன்னூறு பின்னூட்டம் போட்டு கடலைப் போடுவான்.. நீ என்ன பண்ண முடியுமோ பண்ணு "

என்று வாசலில் இருக்கும் டிராக்டர் நோக்கி ஸ்லோ மோஷனில் போறார் விவாஜி கூட நம்ம சிபியும் போறார்...

"ஆகா சூட்டைக் கிளப்புதே கதை... கிளையண்ட் மண்டை வேற முக்குல்ல தெரியுது.. வந்து நான் முழிக்க முழிக்க முன்னூறு கேள்வி கேப்பானே... சரி அது எம் பிரச்சனை உனக்கு எதுக்கு.. இந்தாப் பொடியா இதுவரைக்கும் ஓ.கே.. நாளைக்கு சாயங்காலம் வெள்ளி கிழமையாச்சா.. வெள்ளைக்கார கிளையண்ட்க்கு உள்ளூர் குவார்ட்டர் வாங்கி ஊத்திவிட்டுட்டு வந்துருறேன்.. மீதி கதையை விளக்கமாச் சொல்லு.... ஆன் ஒரு சின்னக் கரெக்ஷன்...."

தலண்ணே சொன்ன கரெக்ஷன் கீழே சேர்த்தாச்சு.... மீதி கதையை நாளைக்கும் சொல்லுவோம்....

இன்றைய பதிவில் அறிமுகம் ஆகும் சங்கத்து சிங்கங்கள் வெட்டி, சிபி, புலிக்குட்டி, மற்றும் பாசத்துக்குரிய நண்பர்கள் பெனத்தாலர், கோவி.கண்ணனுக்கு நன்றிகளோடு பதிவின் இந்தப் பகுதியினைச் சமர்பிக்கிறேன்.

கிடேசன் பார்க் மக்களுக்கு என் ஸ்பெஷல் நன்றிகள்.

போனப் பதிவில் அபி அப்பாவுக்கு சொல்ல மறந்த நன்றி இந்தப் பதிவில் சொல்லிக்குறேன்

தலண்ணே கைப்புள்ள அவர்களின் பேராசியோடு
சின்னத் தல ராயலாரின் உறுதுணையோடு

சங்கம் புரொடக்ஷ்ன்ஸ் பெருமையோடு வழங்கும்

விவாஜி - THE FARMER

9 comments:

இம்சை said...

Firstei

மங்களூர் சிவா said...

//
"இந்தாங்க விவாஜி.. இது உங்க ஜிடாக் ஐடி...அப்புறம் இது ஆர்குட் ஐடி...இது யாஹூ ஐடி... எல்லாம் நானே உக்காந்து உங்களுக்காக கிரியேட் பண்ணிட்டேன்.. இதுல்ல போய் லாகின் பண்ணி ஆரம்பிச்சீங்கன்னா உங்க கடலை கடல் தாண்டி கலகலன்னு கொடி கட்டும்"


"வெட்டிகாரு நாங்க பதிவு போட்டு பின்னூட்டக் கடலை போட வழி கேட்டா.. நீங்க வேற எதோ சொல்லுறீங்களே"ன்னு சிபி இழுக்க


"ம்ஹும் அதெல்லாம் சரி வராதுங்க.. நான் ரெண்டு பதிவு வச்சிருக்கேன் பிளாக்ஸ்பாட்ல்ல ஒண்ணு வேர்ட்பிரஸ்ல்ல ஒண்ணு..பிளாக்ஸ்பாடல்ல ஒரு பதிவுக்கு நூறுல்ல இருந்து நூத்தி இருவது பின்னூட்டம் வரைக்கும் வாங்குறேன்... வேர்ட்பிரஸ்ல்ல அம்பதுல்ல இருந்து தொண்ணூறு வரைக்கும் வாங்குறேன்... இப்போ நீங்களும் பதிவு பின்னூட்டம்ன்னு பங்கு போட வந்தா நான் என்னப் பண்றது..?" வெட்டிகாரு லைட்டான கோவம் காட்ட...
//

சூப்பரப்பு

இலவசக்கொத்தனார் said...

//ஸ்டைலா ஆரஞ்ச் பேண்ட் அப்புறம் கருப்பு சட்டை கூலிங் கிளாஸ் சகிதமா நம்ம விவாஜி வர்றார்.//

இது!! இதைத்தான் போன பதிவில் சொன்னேன். சரியாச் செஞ்ச பாரு.

ஆனா ஒரு டெக்னிக்கல் பாயிண்ட். வெட்டிக்கு 100 பின்னூட்டம் வரும் நேரத்தில் விவாஜி பதிவு போட்டா ஆளுக்குப் பாதின்னா ஆகும்? ரெண்டு பேரும் நம்ம பின்னூட்ட கயமைத்தன கிளாஸ் எல்லாம் அட்டெண்ட் பண்ணினா 100+100 = 300 என்று 300 பின்னூட்டமுல்ல விழும்?!!

இதைத்தான் தமிழ்ப்படத்தில் லாஜிக் பார்க்கக்கூடாதுன்னு சொல்றாங்களா? :P

தேவ் | Dev said...

//இம்சை said...
Firstei
//

வாங்க இம்சை.. இதான் நீங்க நம்ம கச்சேரிக்கு பர்ஸ்ட் தடவை வர்றீங்கன்னு நினைக்கிறேன்.. வாங்க வாங்க...:)))

தேவ் | Dev said...

//மங்களூர் சிவா said...
//
"இந்தாங்க விவாஜி.. இது உங்க ஜிடாக் ஐடி...அப்புறம் இது ஆர்குட் ஐடி...இது யாஹூ ஐடி... எல்லாம் நானே உக்காந்து உங்களுக்காக கிரியேட் பண்ணிட்டேன்.. இதுல்ல போய் லாகின் பண்ணி ஆரம்பிச்சீங்கன்னா உங்க கடலை கடல் தாண்டி கலகலன்னு கொடி கட்டும்"


"வெட்டிகாரு நாங்க பதிவு போட்டு பின்னூட்டக் கடலை போட வழி கேட்டா.. நீங்க வேற எதோ சொல்லுறீங்களே"ன்னு சிபி இழுக்க


"ம்ஹும் அதெல்லாம் சரி வராதுங்க.. நான் ரெண்டு பதிவு வச்சிருக்கேன் பிளாக்ஸ்பாட்ல்ல ஒண்ணு வேர்ட்பிரஸ்ல்ல ஒண்ணு..பிளாக்ஸ்பாடல்ல ஒரு பதிவுக்கு நூறுல்ல இருந்து நூத்தி இருவது பின்னூட்டம் வரைக்கும் வாங்குறேன்... வேர்ட்பிரஸ்ல்ல அம்பதுல்ல இருந்து தொண்ணூறு வரைக்கும் வாங்குறேன்... இப்போ நீங்களும் பதிவு பின்னூட்டம்ன்னு பங்கு போட வந்தா நான் என்னப் பண்றது..?" வெட்டிகாரு லைட்டான கோவம் காட்ட...
//

சூப்பரப்பு//

நன்றிங்க மங்களூர்காரரே

தேவ் | Dev said...

//இது!! இதைத்தான் போன பதிவில் சொன்னேன். சரியாச் செஞ்ச பாரு.

ஆனா ஒரு டெக்னிக்கல் பாயிண்ட். வெட்டிக்கு 100 பின்னூட்டம் வரும் நேரத்தில் விவாஜி பதிவு போட்டா ஆளுக்குப் பாதின்னா ஆகும்? ரெண்டு பேரும் நம்ம பின்னூட்ட கயமைத்தன கிளாஸ் எல்லாம் அட்டெண்ட் பண்ணினா 100+100 = 300 என்று 300 பின்னூட்டமுல்ல விழும்?!!

இதைத்தான் தமிழ்ப்படத்தில் லாஜிக் பார்க்கக்கூடாதுன்னு சொல்றாங்களா? :P
//

தலைவரே.. கேள்வியும் நீங்களே பதிலும் நீங்களேன்னு கலக்குறீங்களே...

மனதின் ஓசை said...

இது சூப்பர். கதையோட மையக்கருத்து அருமை. சமூதயத்துக்கு தேவையான ஒரு படம். :-)
மிச்சத்தையும் படிக்கிறேன்.

தேவ் | Dev said...

//இது சூப்பர். கதையோட மையக்கருத்து அருமை. சமூதயத்துக்கு தேவையான ஒரு படம். :-)
மிச்சத்தையும் படிக்கிறேன்.//

தேங்க்ஸ் நண்பா இது ஒரு கருத்துள்ள படம்ன்னு சொன்னதுக்கு அவார்ட் கிடைக்குறதுக்கு வழி இருக்குன்னு சொல்லு :-)

Anonymous said...

tibia money tibia gold tibia item runescape money runescape gold tibia money tibia gold runescape gold runescape accounts tibia gold tibia money runescape money runescape gp buy runescape gold tibia gold tibia item buy runescape money runescape gold runescape items tibia money tibia gold

tamil10