Friday, October 05, 2007

சங்கம் வழங்கும் விவாஜி - 6

விவாஜியும் சிபியும் சுரங்கப் பாதை வழியா அவ்வையார் ஆரம்ப பாடச் சாலைக்குப் போறாங்க...அங்கே நயந்தாரா வரவுக்காக காத்திருக்காங்க...

நயந்தாரா வரவும்...விவாஜி நேரா நயந்தாராகிட்டப் போறார்...

"இதோ பாருங்க... நீங்க வேலைத் தர்றணும்ன்னா இன்டர்வியூ பண்ணனும்ன்னு சொன்னீங்க.. நானும் குரூப்பாக் கிளம்பி வந்து இன்டர்வியூ பண்ணலாம்ன்னு உங்க வீட்டுக்கு வந்தேன்... பர்ஸ்ட் ரவுண்ட் இன்டர்வியூ அங்கே முடிஞ்சது... செகண்ட் ரவுண்ட் இன்டர்வியூக்கு எங்க ஆபிஸ்க்கு உங்களை என் ஆபிஸ்க்கு கூட்டிட்டு வரச்சொல்லி இவரை(சிபி) அனுப்பினோமே நீங்க ஏன் வர்றல்ல?"

"இல்லையே.. இந்த அங்கிள் என்னைக் கூட்டிட்டு ஆபிஸ் போனாங்களே.. அங்கே கேன்டீன்ல்ல.. பிரைட் நட்ஸ்...பாயில்ட் நட்ஸ்...ப்ரூட் நட்ஸ்.. எல்லாம் வாங்கிக் கொடுத்தாங்க... கேன்டீன்ல்ல வெயிட் பண்ன வச்சுட்டு.. நீங்க எங்கேயோ வெளியே போயிட்டதாச் சொல்லி திருப்பிக் கூட்டிட்டு வந்து விட்டுட்டாங்க...எங்க அண்ணன் ஸ் ஜொ.பா, தம்பி எல்லாம் கூட வந்தாங்களே இன்ட்ரவியூக்கு.."

விவாஜி பொங்கி சிபியைப் பார்க்க....பேக் கிரவுண்ட்ல்ல சிபிபிபி சேட்டா... சேச்சி சைட்டா... ஒதுங்கு கொயிட்டா.... விவாஜி பைட்டா பாட்டு ஒலிக்குது....

"இருக்கட்டும் அந்த அங்கிள் மேல கோபப்படாதீங்க... நான் எப்படியும் உங்க வேலையை ஏத்துக்க மாட்டேன்.. என்னால முடியாது.."

"ஏன்?"

"சொன்னா நீங்க வருத்தப்படுவீங்க"

"உஹாஹா... இந்த விவாஜியா வருத்தமா.. வ.வா,ச தெரியுமா.. சரி விடுங்க ஊருக்கே தெரியும்...சொல்லுங்க என்னக் காரணமா இருந்தாலும் ஓ.கே"

"அது உங்க பிளாக் பேர் சொல்லுங்க"

"விவசாயி அதுக்கு என்ன?"

"அதான் எனக்குப் பிடிக்கல்ல..."

"ஏன்?"

"ஏன்னா நீங்க எழுதுறது தமிழ்..... எனக்கு தமிழ் படிக்கத் தெரியாது...ஊருக்கேத் தெரியும் நான் மலையாளம்ன்னு" நயந்தாரா எமோஷ்னாலச் சொல்ல...

சிபி சைடில் சைலண்ட்டாக லேப்டாப்பில் பிளாகர் அக்கவுண்டுக்குப் போய் ஒரு வடக்கன் வீரகர்த்தா அப்படின்னு ஒரு ஐடி ஓப்பன் பண்ணிகிட்டு இருக்கார்...

"ஏய் விவ்ஜி..அது ஷரியாக்கும்.. குட்டி பறையற சேதி வளர ஷ்ரியாக்கும்... உனிக்கு மலையாளம் அறியுல்லா... பின்னே..."

விவாஜி அனல பறக்கும் லுக் ஒன்றை சிபி மீது விடுகிறார்...

"எனக்கு மலையாளம் தெரியாது... நான் மலையாளத்துல்ல பிளாக் போடணும் அது தானே...பிளாகுறேன் மலையாளத்துல்ல எண்ணி 30 நாள்ல்ல பிளாகுறேன்... அப்படின்னு திரும்பி நடக்கிறார்...

"தம்பி உங்களுக்கு என்ன வேணும்?" கடலைக் கடைப் பாட்டி விவாஜியைக் கேக்க...

"ம்ம்ம் முப்பது நாட்களில் மலையாளம் புக்" அப்படின்னு டிராக்டரில் தாவி ஏறுகிறார்...சிபி நயனைப் பார்த்தப் படி பின்னால் வருகிறார்.

பின்னாடி ஒரு குடை யூரியா ஒரு குடை சேர்யா.. இரண்டு சேர்ந்தால் என் விவாசாய் ஏரியா அப்படின்னு பாட்டு ஒலிக்க விவாஜி மலையாளம் கத்துக்குற முயற்சிகளைக் காட்டுறோம்..

விடிய விடிய வீடியோவில்ல ஷகிலா நடிச்ச மலையாளப் படமாப் பாக்குறார்...அந்த மலையாள படம் எதுல்லயும் டயலாக்கே இல்ல...

விவாஜி ஆனாலும் விடாமல் பார்க்கிறார். சிபி சைடில் நின்னு சிரிக்கிறார்.

அடுத்து நாள் முழுக்க நாயர் கடையில் நின்னு டீ குடிக்கிறார்.... அவன் பேசுவதையே உன்னிப்பாக் கவனிக்கிறார்.

மலையாள பேப்பரை வச்சு தன் பெயரை எழுதிப் பார்க்கிறார் ஆக்சுவலா வரைந்து பார்க்கிறார்.

மொபைலில் கண்டபடி கேரளா நம்பர்களுக்கு எஸ்.டி.டி போட்டு பேசி அசிங்கமாத் திட்டு வாங்குகிறார்.

ஒரு ரூம்குள்ளே உட்கார்ந்து சத்தம் போட்டு 30 நாட்களில் மலையாளம் புக் வச்சு படிக்கிறார்.. ரூம் கதவு திறக்கவே இல்லை... டென்சன் ஆகி ஆபிஸில் பெனத்தலார், கோவியார், சிபி எல்லாரும் வந்து கதவைத் தட்டி விவாஜி..என்னப்பா ஆச்சி... வெளியே வாப்பான்னு கூப்பிட...

"ஒண்ணும் ஆகல்ல... இப்போ நான் கதவைத் திறந்துட்டு வெளியே வந்தா சும்மா மம்முட்டி மாதிரி இருப்பேன் பாருங்க.... அப்படின்னு கதவைத் திறக்கிறார்.. ஒரு வடக்கன் வீரகர்த்தா கெட்டப்பில் இருக்கிறார்.. கையில் லேப் டாப் வேற... மலையாளத்துல்ல பிளாக் வேற போட்டாச்சி இல்ல..."

நயன் படிச்சா சும்மா சிதறும்ல்ல.." அப்படின்னு விருட்டெனக் கிளம்புகிறார். சிபியும் கிளம்பி பின்னாலே போகிறார்..

அவ்வையார் ஆரம்ப பாடசாலையில் நயனைச் சந்திக்கிறார் விவாஜி.. விவாஜியின் கெட்டப் பார்த்து நயன் அப்படியே லைட்டா ரொமான்டிக் லுக் விட சிபி டென்சனாகிறார்...

பேக் கிரவுண்ட்டில் பாக்கெட்டில் இருந்த ஐ பாட் ஆன் பண்ணி பாட்டை ஒலிக்கச் செய்கிறார் விவாஜி....

ஒருபக்கம் பேச்சி.
ஒருபக்கம் சேச்சி..
ஒன்றாகச் சேர்ந்தால் என் ஆட்சி

அப்போ நான் தெக்கத்திப் பாண்டி..
இப்போ நான் மலபார் தெண்டி...
அப்ப நான் ஜொள்ளுத்தமிழன்...
இப்போ நான் மல்லுத் தமிழன்...
எப்பவும் வேளாண் தமிழன்...

எப்படி சும்மா அதிருதுல்ல பாட்டு முடிந்ததும் பஞ்ச் அடிக்கிறார் விவாஜி..

ஆமா ஐ பாட் கொஞ்சம் பழசு..வால்யூம் ப்ராப்ளம்.. பேஸ் எபெக்ட் சரியில்ல... அதான் அதிருது... அப்படின்னு சிபி நயனிடம் கேப்பில் பேச்சுக் கொடுக்க... விவாஜி படு வேகமா.. லேப் டாப்பைத் திறக்கிறார்...

www.malabarmams.blogspot.com அப்படின்னு டைப் அடிக்கிறார்... அங்கே பிளாக் ஓப்பன் ஆவுது...நயன் தாரா போட்டோ ப்ளோஅப் ஒண்ணு தெரியுது...

"இந்தாங்க படிங்க... உங்களுக்காக நானே மலையாளத்துல்ல டைப் பண்ணுது..."

"நயன் தாரா அதைப் பார்த்துவிட்டு பேந்த பேந்த முழிக்கிறார்..

"என்னாச்சு.. உங்களுக்கு மலையாளமும் படிக்க வராதா?"

"அல்ல.. இது மலையாளம் அல்லா.. இது வேறாண்ணு." அப்படின்னு நயன் சொல்ல...

"என்னாது இது மலையாளம் இல்லையா...?" விவாஜி கோபமாய் திரும்பி சிபியைப் பாக்க..

"சாரி விவாஜி.. இது வெட்டிகாரு பிளாக்ல்ல இருந்த லிங்க் மூலமா ஓசியிலே டவுண்லோட் பண்ண ஆன் லைன் ஈ புக்... மலையாளம்ன்னு அட்டையிலே போட்டு உள்ளே முழுக்க முழுக்க தெலுங்கு அடைச்சு வச்சு உன்னை ஏமாத்திட்டாங்க விவாஜி..... உன்னை ஏமாத்திட்டாங்க.."

"ஹா..ஹா....நீ ஸ்டார் ஆவுற நாள் தெரிஞ்சுப் போச்சுன்னா...கும்மி எல்லாம் தூரமாப் போயிடும்...ஸ்டார் ஆவுறது முக்கியமில்ல எப்பவும் குமமாளமா கும்மி அடிக்கறது தான் முக்கியம்"

"விவாஜி இப்போ எதுக்கு இந்த டயலாக்"

"மெசேஜ் சொன்னேன் .. என் கிட்ட மெசேஜ் எதிர்பாக்குறாங்க..ஸ்டார் ஆவுறவங்க நிறைய பேர் கும்மிய நிறுத்திடுறாங்க.. நம்ம லக்கி கூட நிறுத்திட்டார்...அதுக்குத் தான் இந்த மெசெஜ் சொன்னேன்"

"அதை எதுக்கு சம்பந்தம் இல்லாம இப்போ சொன்ன?"
"இப்படி எக்குத் தப்பா சிக்கிட்டா வேற என்னப் பேசி சீனை நகத்துறது.. வெட்டிகாரு இந்த விவாஜி உங்களைச் சும்மா விட மாட்டான்.... " அப்படின்னு சொல்லி கையில் இருந்து முட்டாயை எதிரில் நிற்கும் சிபியின் மேல் எறிய அவர் குனிய..அது சுவத்தில் போய் மோதி உடைஞ்சு சிதற.. விவாஜி அந்த உடைஞ்ச் முட்டாயை டைவ் அடிச்சு பிடித்து வாயில் போடுகிறார்.

பேக்கிரவுண்ட் மியூசிக் அலறுகிறது...

"நீங்க எதுக்கு மலையாளம் எல்லாம் கத்துக்கணும் இப்படியே கோக்கு மாக்கா எதாவது பண்ணாலே போதுமே.. எனிக்கு அதுவே வளர இஷ்ட்டம் "அப்படின்னு நயன் சொல்ல....

"ஆகா.. சாச்சுட்டான்டா " என்ற சிபியின் கண்களில் கண்ணீர் பொங்கி வழிகிறது...

சுரங்கப் பாதைக்குள் உட்கார்ந்து விவாஜி வெட்டிகாருவுக்கு வாய்ஸ் சாட் இன்வைட் அனுப்புகிறார்...

ஆன் லைன் வரும் வெட்டிகாரு.விடம்....

"கண்ணா உன்னோடப் பிளாக் ஓப்பன் பண்ணு பாக்கலாம்..."

அவசர அவசரமா ஓப்பன் பண்ண ட்ரைப் பண்ணுகிறார்.. பாஸ்வேர்ட் லாக்ட் என வருகிறது...

"கண்ணா...நேத்து நைட்.. உன் டூப்ளக்ஸ் பிளாட்.. லேப்டாப்.. இரண்டே பேர்.. உன் பாஸ் வேர்ட்டை ஹேக் பண்ணியாச்சு... இப்போ உன் ஜி மெயில் ஐடி, யாகூ ஐடி, பிளாகர் ஐடி, வேர்ட்பிரஸ் ஐடின்னு எல்லாத்தையும் எடுத்தாச்சு...தமிழ் மணத்துல்ல உன் பிளாக்கே தெரியாதே...."

வெட்டிகாரு தமிழ் மணம் பக்கம் திறக்கிறார்...

"உன் பதிவு உயரெல்லையை எல்லாம் தாண்டி எங்கேயோப் போயிடுச்சு... எப்படின்னு பாக்குறீயா..எல்லாம் நீ கொடுத்த ஒரு பின்னூட்டம் வச்சுத் தான்.. அதையே பண்ணி ஆயிரமாயிரமா உன் பிளாக்ல்ல் போட்டேன்....இப்போ ஓவ்ர் லோட் ஆகி உன் பிளாக் ஓப்பன் ஆகுறதே கஷ்ட்டமாயிடுச்சு....ஹா..ஹா..."

"யாருடா நீ"

"ஆறு பார்ட்டா கதையை ஒழுங்காப் படிக்காம இப்போக் கேக்குறீங்களே.. நான் தான் சிவாஜி ரீமேக் விவாஜிவோட ஹீரோடா....சும்மா அதிருதுல்ல"

"ஆமா போன் கனெக்ஷன் சரியில்ல.. வாய்ஸ் கொஞ்சம் அதிரத் தான் செய்யுது " பக்கத்தில் நின்று சிபி சிரியசாச் சொல்ல விவாஜி அவரை முறைக்கிறார்.

"ஹலோ வெட்டிகாரு... நல்லாக் கேளுங்க.. நீங்க அளவுக்கு மீறி வாங்குற பின்னூட்டத்துல்ல 50% எனக்குக் கொடுத்துருங்க...இல்லைன்னா நீங்கக் கொடுத்த ஒரே பின்னூட்டத்தைத் தொடர்ந்து உங்க பிளாக்ல்ல போட்டு உங்க பிளாக்கை மொத்தமா மூடிடுவேன்...அது மட்டும் இல்லாம.. உங்க ஜீடாக்.. யாகூ... ஸ்கைப்... எம்.எஸ்.என் .. ல்ல எல்லாம் இருக்க பிகர்கள் பாதி பேர் கிட்ட எனக்கு இன்ட்ரோ வேணும்... இல்லன்னா கமிஷனர் ஓடனே கிளம்பி எல்லா டீடெயில்ஸும் எடுத்துக்கிட்டு எதாவது ஒரு பஜ்ஜி கடைக்கு வாங்க..வர்றல்லன்னா... தொடர்ந்து பின்னூட்டம் போட்டுகிட்டே இருப்போம்.. அது மட்டும் இல்லாம அதே பின்னூட்டத்தை உங்க எல்லாக் கான்டாக்ட்ஸ்க்கும் அனுப்பிக்கிட்டே இருப்போம்.."

விவாஜி.....

வாங்க சார்...சும்மா பஜ்ஜி சாப்பிடலாம் அப்படின்னு விவாஜி சிரிக்கிறார்...

25 comments:

தம்பி said...

ഇതെല്ലാടത്തേം സ്തിരം കാഴ്ചയാണല്ലെ?

ഇവിടെ കാര്‍ വെറുതെ പുറത്തിട്ടിട്ടു പോകാം. വി ഐ എന്‍ നമ്പര്‍ വെച്ച് ട്രാക്ക് ചെയ്യാന്‍ പറ്റുന്നതു കൊണ്ട് ഒരുത്തനും തിരിഞ്ഞു നോക്കില്ല.. എന്നാല്‍ സൈക്കിള്‍ പുറത്തു വെച്ചാല്‍ എപ്പോ കൊണ്ടോയീ‍ന്നു ചോദിച്ചാ മതി.

தம்பி said...

ഈഷ്വാ പറഞ്ഞു: “വിപ്ലവകാരികള്‍ എവിടെയാണ് ആക്രമിക്കുകയെന്നറിയുന്നവര്‍ക്കഭിനന്ദനം. അവര്‍ക്ക്‌ സാവധാനം അവരുടെ രാജകീയവകകള്‍ ഒരുമിച്ചുകൂട്ടുകയും വിപ്ലവകാരികളെത്തുമുമ്പ്‌ തയ്യാറാവുകയും ചെയ്യാം.”

தம்பி said...

അവര്‍ ഈഷ്വായോട്‌ പറഞ്ഞു: “വരൂ, നമുക്കിന്ന്‌ പ്രാര്‍ത്ഥിക്കാം, നമുക്കിന്നുപവസിക്കാം”

ഈഷ്വാ അരുളി: “എന്തു് പാപമാണ് ഞാന്‍ ചെയ്തിട്ടുള്ളത്‌? ഞാനെങ്ങിനെയാണ് കുറവുള്ളവനായിട്ടുള്ളത്‌? വരന്‍ മണിയറയുപേക്ഷിക്കുമ്പോള്‍ ജനം ഉപവസിക്കുകയും പ്രാര്‍ഥിക്കുകയും ചെയ്യട്ടെ”

மங்களூர் சிவா said...

good work.

CHUMMA ADHIRUTHU

மங்களூர் சிவா said...

//
தம்பி said...
അവര്‍ ഈഷ്വായോട്‌ പറഞ്ഞു: “വരൂ, നമുക്കിന്ന്‌ പ്രാര്‍ത്ഥിക്കാം, നമുക്കിന്നുപവസിക്കാം”

ഈഷ്വാ അരുളി: “എന്തു് പാപമാണ് ഞാന്‍ ചെയ്തിട്ടുള്ളത്‌? ഞാനെങ്ങിനെയാണ് കുറവുള്ളവനായിട്ടുള്ളത്‌? വരന്‍ മണിയറയുപേക്ഷിക്കുമ്പോള്‍ ജനം ഉപവസിക്കുകയും പ്രാര്‍ഥിക്കുകയും ചെയ്യട്ടെ”

//
ஒரே கட்டம் கட்டமா தெரியுது. ஒருவேளை இதுதான் மலையாளமா ??

'தம்பி' ஏன் இந்த ரத்த வெறி

G.Ragavan said...

அடேங்கப்பா....மலையாள மனோரமாவோட கடந்த பத்து வருச இயர்புக்க ஒரே மூச்சுல படிச்ச எப்பக்டு வருதுய்யா...வருது.

ஆனா...வெட்டிப்பயலுக்கு இப்பிடி ஆப்பு வெச்சிட்டாரே விவாஜி. வெட்டி சுட்டியாவாரா? பொட்டியாவாரான்னு போகப்போகத்தான் தெரியும் போல.

அனுசுயா said...

//இப்படி எக்குத் தப்பா சிக்கிட்டா வேற என்னப் பேசி சீனை நகத்துறது.. //

சூப்பர்ப் :)

அப்புறம் வெட்டி மேல ஏன் இந்த கொல வெறி. அவர்பாட்டுக்கு கதை தெலுங்கு கத்துக்கிட்டு ஏதோ எழுதி பொழைக்கிறாரு அது பொறுக்கலயா :)

அவ்வவ்வ்வ

வித்யா கலைவாணி said...

தம்பி said...

ഇതെല്ലാടത്തേം സ്തിരം കാഴ്ചയാണല്ലെ?

ഇവിടെ കാര്‍ വെറുതെ പുറത്തിട്ടിട്ടു പോകാം. വി ഐ എന്‍ നമ്പര്‍ വെച്ച് ട്രാക്ക് ചെയ്യാന്‍ പറ്റുന്നതു കൊണ്ട് ഒരുത്തനും തിരിഞ്ഞു നോക്കില്ല.. എന്നാല്‍ സൈക്കിള്‍ പുറത്തു വെച്ചാല്‍ എപ്പോ കൊണ്ടോയീ‍ന്നു ചോദിച്ചാ മതി.
எங்க ctrl+c அடிச்சு ctrl+v அடிச்சீங்க

CVR said...

another ROFL post!!!
//
விடிய விடிய வீடியோவில்ல ஷகிலா நடிச்ச மலையாளப் படமாப் பாக்குறார்...அந்த மலையாள படம் எதுல்லயும் டயலாக்கே இல்ல...

விவாஜி ஆனாலும் விடாமல் பார்க்கிறார். சிபி சைடில் நின்னு சிரிக்கிறார்.////

awesome!! :-D

நாகை சிவா said...

//மலையாள பேப்பரை வச்சு தன் பெயரை எழுதிப் பார்க்கிறார் ஆக்சுவலா வரைந்து பார்க்கிறார்.//

:)))

தம்பி உன்னோட கொல வெறி புரியுது.... பாவனாவின் பெரிய தம்பியா உன்னை ஆக்கினதில் எனக்கு கூட வருத்தம் தான்.. என்ன பண்ணுறது.. உன்னைய பங்காளினு கூப்பிட முடியாமா மச்சான் என்று கூப்பிடும்படி ஆகிடுச்சு... எல்லாம் காலம் செய்யும் கோலம்ய்யா... விடு.. விடு...

தேவ் | Dev said...

வாய்யா தம்பி, மூணு கமெண்டும் எனக்கும் கட்டம் கட்டமாத் தான் தெரியுது.. சரி கதையை ஒழுக்கமா அடுத்தக் கட்டத்துக்கு நகத்தச் சொல்லுறீயோன்னு யோசிச்சிகிட்டு இருந்தப்போ கப்பி தான் கட்டம் எல்லாம் மலையாள சொல்லாட்டம்ன்னு எடுத்துச் சொல்லி விளக்குனான்..

என்னச் சொல்ல வர்றங்கறதைக் கொஞ்சம் விளக்கமாத் தமிழ்ல்ல சொன்னா நாட்டு மக்களுக்கு நலன் பயக்கும்ல்லா சொல்லுப்பா !

தேவ் | Dev said...

//மங்களூர் சிவா said...
good work.

CHUMMA ADHIRUTHU//

நன்றி சிவா

தேவ் | Dev said...

//மங்களூர் சிவா said...
//
தம்பி said...
അവര്‍ ഈഷ്വായോട്‌ പറഞ്ഞു: “വരൂ, നമുക്കിന്ന്‌ പ്രാര്‍ത്ഥിക്കാം, നമുക്കിന്നുപവസിക്കാം”

ഈഷ്വാ അരുളി: “എന്തു് പാപമാണ് ഞാന്‍ ചെയ്തിട്ടുള്ളത്‌? ഞാനെങ്ങിനെയാണ് കുറവുള്ളവനായിട്ടുള്ളത്‌? വരന്‍ മണിയറയുപേക്ഷിക്കുമ്പോള്‍ ജനം ഉപവസിക്കുകയും പ്രാര്‍ഥിക്കുകയും ചെയ്യട്ടെ”

//
ஒரே கட்டம் கட்டமா தெரியுது. ஒருவேளை இதுதான் மலையாளமா ??

'தம்பி' ஏன் இந்த ரத்த வெறி//

சிவா கரெக்ட்டா கண்டுபிடிச்சுடீங்க... 100 மார்க் போங்க..அது மலையாளமே தான்...

அது கொலவெறி எல்லாம் இல்லங்க.. ஒரு அண்ணனா தம்பி தன் கடமையைச் செய்துகிட்டு இருக்காருங்க...

தேவ் | Dev said...

//G.Ragavan said...
அடேங்கப்பா....மலையாள மனோரமாவோட கடந்த பத்து வருச இயர்புக்க ஒரே மூச்சுல படிச்ச எப்பக்டு வருதுய்யா...வருது.

ஆனா...வெட்டிப்பயலுக்கு இப்பிடி ஆப்பு வெச்சிட்டாரே விவாஜி. வெட்டி சுட்டியாவாரா? பொட்டியாவாரான்னு போகப்போகத்தான் தெரியும் போல//

வாங்க ஜி.ரா., நம்ம விவாஜி டேலண்டுக்கு ஓவர் நைட்ல்ல இன்னும் ஒரு நாலைஞ்சு லாங்குவேஜ் சேர்த்து படிப்பாரே..அது உங்களுக்கு தெரியாதா மேட்டரா என்ன? :)))

வெட்டியை அவ்வளவு சீக்கிரம் விவாஜி ஒண்ணும் பண்ணிட முடியாது.. வெட்டி வருவார் இல்ல :))

தேவ் | Dev said...

//அனுசுயா said...
//இப்படி எக்குத் தப்பா சிக்கிட்டா வேற என்னப் பேசி சீனை நகத்துறது.. //

சூப்பர்ப் :)

அப்புறம் வெட்டி மேல ஏன் இந்த கொல வெறி. அவர்பாட்டுக்கு கதை தெலுங்கு கத்துக்கிட்டு ஏதோ எழுதி பொழைக்கிறாரு அது பொறுக்கலயா :)

அவ்வவ்வ்வ//

நன்றி அனுசுயா..

வெட்டி மேல கொலவெறியா... ஆகா அவரைப் பார்த்து எல்லாரும் நடுங்கிட்டு இருக்காங்க நீங்க வேற...:))))

தேவ் | Dev said...

//வித்யா கலைவாணி said...
தம்பி said...

ഇതെല്ലാടത്തേം സ്തിരം കാഴ്ചയാണല്ലെ?

ഇവിടെ കാര്‍ വെറുതെ പുറത്തിട്ടിട്ടു പോകാം. വി ഐ എന്‍ നമ്പര്‍ വെച്ച് ട്രാക്ക് ചെയ്യാന്‍ പറ്റുന്നതു കൊണ്ട് ഒരുത്തനും തിരിഞ്ഞു നോക്കില്ല.. എന്നാല്‍ സൈക്കിള്‍ പുറത്തു വെച്ചാല്‍ എപ്പോ കൊണ്ടോയീ‍ന്നു ചോദിച്ചാ മതി.
எங்க ctrl+c அடிச்சு ctrl+v அடிச்சீங்க//

வாங்க வித்யா கலைவாணி முதல் வரவு நல்வரவு ஆகுக...

தம்பி கேள்வி கேக்குறாங்கப் பாருங்க வந்து பதில் சொல்லுங்க:))

தேவ் | Dev said...

//another ROFL post!!!
//
விடிய விடிய வீடியோவில்ல ஷகிலா நடிச்ச மலையாளப் படமாப் பாக்குறார்...அந்த மலையாள படம் எதுல்லயும் டயலாக்கே இல்ல...

விவாஜி ஆனாலும் விடாமல் பார்க்கிறார். சிபி சைடில் நின்னு சிரிக்கிறார்.////

awesome!! :-D//

Thanks CVR !!!

தேவ் | Dev said...

//நாகை சிவா said...
//மலையாள பேப்பரை வச்சு தன் பெயரை எழுதிப் பார்க்கிறார் ஆக்சுவலா வரைந்து பார்க்கிறார்.//

:)))

தம்பி உன்னோட கொல வெறி புரியுது.... பாவனாவின் பெரிய தம்பியா உன்னை ஆக்கினதில் எனக்கு கூட வருத்தம் தான்.. என்ன பண்ணுறது.. உன்னைய பங்காளினு கூப்பிட முடியாமா மச்சான் என்று கூப்பிடும்படி ஆகிடுச்சு... எல்லாம் காலம் செய்யும் கோலம்ய்யா... விடு.. விடு...//

இதுக்கெல்லாம் தம்பி வந்து தமிழ்ல்ல பதில் சொல்லுவான் :)))

தம்பி said...

//என்னச் சொல்ல வர்றங்கறதைக் கொஞ்சம் விளக்கமாத் தமிழ்ல்ல சொன்னா நாட்டு மக்களுக்கு நலன் பயக்கும்ல்லா சொல்லுப்பா !//

எங்களுக்கு தெரிஞ்சா சொல்ல மாட்டோமா?

களவாணி சொன்ன மாதிரிதான்.

தம்பி said...

//தம்பி உன்னோட கொல வெறி புரியுது.... பாவனாவின் பெரிய தம்பியா உன்னை ஆக்கினதில் எனக்கு கூட வருத்தம் தான்.. என்ன பண்ணுறது.. உன்னைய பங்காளினு கூப்பிட முடியாமா மச்சான் என்று கூப்பிடும்படி ஆகிடுச்சு... எல்லாம் காலம் செய்யும் கோலம்ய்யா... விடு.. விடு...//

தம்பி இது கதைதான். நிஜ சம்பவம் இல்ல. பொண்ணாவும் ஜோடியாவும் நடிக்கற மாதிரிதான் இதுவும்.

கொஞ்சம் தள்ளியே நில்லு.

தேவ் | Dev said...

//தம்பி said...
//என்னச் சொல்ல வர்றங்கறதைக் கொஞ்சம் விளக்கமாத் தமிழ்ல்ல சொன்னா நாட்டு மக்களுக்கு நலன் பயக்கும்ல்லா சொல்லுப்பா !//

எங்களுக்கு தெரிஞ்சா சொல்ல மாட்டோமா?

களவாணி சொன்ன மாதிரிதான்.//


ஆகா எதை உன்கிட்ட எதிர்பாக்குறோமோ அதை விட பெட்டராக் கொடுக்கறதே உனக்கு வழக்கமாப் போச்சு... கீப் இட் அப்...

ஆமா அது களவாணியா? கலைவாணியா? விளக்கம் தேவை...:)))

தேவ் | Dev said...

//தம்பி said...
//தம்பி உன்னோட கொல வெறி புரியுது.... பாவனாவின் பெரிய தம்பியா உன்னை ஆக்கினதில் எனக்கு கூட வருத்தம் தான்.. என்ன பண்ணுறது.. உன்னைய பங்காளினு கூப்பிட முடியாமா மச்சான் என்று கூப்பிடும்படி ஆகிடுச்சு... எல்லாம் காலம் செய்யும் கோலம்ய்யா... விடு.. விடு...//

தம்பி இது கதைதான். நிஜ சம்பவம் இல்ல. பொண்ணாவும் ஜோடியாவும் நடிக்கற மாதிரிதான் இதுவும்.

கொஞ்சம் தள்ளியே நில்லு.//

அருமையான பதில் தம்பி... இதன் மூலம் சகல பாவனைகளையும் உள்ளுக்குள் வைத்திருக்கும் ஒரு ஒப்பற்ற கலைஞன் நீ என்பதை உலகத்துக்கு சொல்லிவிட்டாய்.. அடுத்தப் படத்தில் இதை விட பெட்டரான ரோல் உனக்கு காத்திருக்கு... தயாராயிரு...

ILA(a)இளா said...

//ஆறு பார்ட்டா கதையை ஒழுங்காப் படிக்காம இப்போக் கேக்குறீங்களே//

செம கில்மாஆஆஆஆஆஆஆஆஆஆஆஆ. ரசிச்சேன், சிரிச்சேன், சிரிச்சுகிட்டே இருக்கேன்

ILA(a)இளா said...

சும்மா செதறுதுல்லே,
சும்மா கதறுதுல்லே//...

எல்லாம் அல்டிமேட் கலக்கல்ஸ்

Anonymous said...

tibia money tibia gold tibia item runescape money runescape gold tibia money tibia gold runescape gold runescape accounts tibia gold tibia money runescape money runescape gp buy runescape gold tibia gold tibia item buy runescape money runescape gold runescape items tibia money tibia gold

tamil10