Monday, October 08, 2007

சங்கம் வழங்கும் விவாஜி - 7

பஜ்ஜி கடையில் உட்கார்ந்து பஜ்ஜி சாப்பிட்டுக் கொண்டிருக்கிறார்.

அப்போது விவாஜியின் மொபைல் அலறுகிறது...மொபைலை ஆன் செய்கிறார் விவாஜி...மறுமுனையில் வெட்டிகாரு பேசுகிறார்...

"ஏ விவாஜி.. என்ன பஜ்ஜி நல்லா இருக்கா?.... விவாஜி.. இப்போ நான் பீசா கார்னர்ல்ல இருக்கேன்..உங்காளு சிபி இப்போ என் கூட தான் இருக்கார்...அப்புறம் அவர் கூட அந்த அவ்வையார் ஸ்கூல் பொண்ணும் இருக்கு...................
என்னங்க விவாஜி ஹைபட்ஜெட் படம்ன்னு சொல்லிட்டு பஜ்ஜி கடை எல்லாம் நல்லாவா இருக்கு.. நாம் வேற உலக லெவல் ரிலீஸ் பண்றோம்.. ஒரு கே.எப்.சி...பீசா கார்னர்.. பர்கர் ஜாயின்ட்ன்னு போட்டாத் தானா கெத்து...அதுவுமில்லாம பஜ்ஜி கடையிலே ப்ரவுசிங் பெசிலிட்டி எல்லாம் கிடையாது அதான் நான் நீங்க சொன்ன லோகேஷனை மாத்திட்டேன்...வந்துச் சேருங்க...மீட் பண்ணுவோம்..."

"" விவாஜி சிரியஸ் ஆகிறார்.

விவாஜி பீசா கார்னர் போய் சேரும் போது சிபி அங்கே நயன் தாராவோடு உக்காந்து பஜ்ஜி சாப்பிட்டுகிட்டு இருக்காரு... விவாஜி அதைப் பார்த்தும் பாக்காத மாதிரி உள்ளே நுழைகிறார்..

"வாங்க விவாஜி...வாங்க... இவங்க எல்லாம் தமிழ் பதிவுலகின் டாப் டென் கும்மி பிளாகர்ஸ்... இவங்களை மீட் பண்ணுங்க..."

நமக்கு அறிமுகமான கும்மி பதிவர்கள் குசும்பன் தலைமையில் அணிவகுத்து உட்கார்ந்து இருக்கிறார்கள்.. குசும்பன் விவாஜியைப் பார்த்து குசும்புத் தனம் குறையாமல் ஹாய் விவ்..கூல் பட்டி.. என்கிறார்...

அதை எல்லாம் பெரிதாகக் கண்டுக்காத விவாஜி...

"ஹா..ஹாவென வெட்டிகாருவைப் பார்த்துச் சிரிக்கிறார்.... வெட்டிகாரு..ட்ராப்டல்ல இருக்க உன் பதிவு முதற்கொண்டு உன் எல்லாப் பதிவுக்கும் நீங்க கொடுத்த ஒரேக் கமெண்ட்டை கட் காப்பி பேஸ்ட் போட்டு ஆயிரம் ஆயிரமா ஓவர் லோட் பண்ணிட்டு இருக்கேன்.. பின்னூட்டம் வெயிட் தாங்காம உன் பதிவு கன்னாப் பின்னான்னு சும்மா கதருதுல்ல அப்படியே இந்த ஓவர் வெயிட்டைக் காரணம் காட்டி உயரெல்லையை நீ கன்னாபின்னான்னு தாண்டியிருக்கன்னு சொல்லி திரட்டி நிர்வாகத்துக்கு ஒரே மெயில் தட்டுனா உன் பதிவே அன் சப்ஸ்கிரைப் ஆயிடும்ங்கறேன்..நீ என்னன்னா பீசா கார்னர்ல்ல உக்காந்துப் பதிவர் சந்திப்பு பத்தி பேசிகிட்டு இருக்க...ஆமா வெட்டிச் செல்லம் நீ ஓண்ணும் காமெடி கீமெடி பண்ணல்லயே..."

விவாஜி... அதான் நான் சிபியைக் கடத்தி இங்கேக் கொண்டு வந்துட்டேனே...அப்புறம் எப்படி?

"கண்ணா வெட்டி... சிபி பத்தி உனக்குத் தெரியல்ல...எல்லாரும் 24 மணி நேரம் ஆன் லைன்ல்ல இருந்தா இவர் 25 மணி நேரம் ஆன் லைன்ல்ல இருப்பார்..."

"எப்படி?"

"அந்த ஒரு மணி நேரத்தை அடுத்த நாள் இட்ட இருந்து அட்வான்சா கடன் வாங்கி கேலண்டரையேக் கலாய்ப்பார்...ஹா...ஹா... இப்போ குளுகுளுன்னு ஏசி.. கையிலே பீசா ஓசி... நீயே யோசி...அக்கடச் சூடு"

சிபி கையில் பாம் டாப் வைத்து திரட்டி நிர்வாகத்துக்கு மெயில் வெட்டி பதிவை நீக்குமாறு மெயில் அனுப்பிகிட்டு இருக்கார்...அதே நேரம் கமுக்கமாய் புலி சிபி கையில் இருக்கும் பாம் டாப்பைப் பாயந்து பிடுங்குகிறான்.. அதைப் பார்த்த வெட்டிகாரு லைட்டா ஒரு ஸ்மைல் விட்டு விட்டு

"ஏ விவாஜி...வெட்டின்னா வெட்டி ஒட்டி போஸ்ட் போட்டு பின்னூட்டப் பொங்கல் வைக்கிறவன்னு நினைச்சியா.. போய் இணையத்துல்ல இருக்க ஒவ்வொரு பிளாகாப் போய் பாரு.. என் பதிவுக்கு எத்தனை லிங்க் இருக்குன்னு... கடலைப் போடுறதுல்ல எனக்கே சவால் விடுறீயா..." வெட்டி கோபத்தில் எகிற...

"வெட்டிகாரு.. சின்ன பையன்ங்க இவன்.. மலையாளத்துக்கும் தெலுங்குக்கும் வித்தியாசம் தெரியாத பையன்.. உங்க கொல்ட்டி போஸ்ட்க்குக் கூட இப்போத் தான் நல்லதொரு மலையாளப் பதிவுன்னு கமெண்ட் போட்ட்ருக்காப்பல்ல.. இவன் கூட எல்லாம் பேசி நீங்க டைம் வேஸ்ட் பண்ணாதீங்க.. நான் பாத்துக்குறேன்.." தனக்குக் கிடைத்தக் கேப்பில் கொடுத்த டயலாக்கோடு சேர்த்து சொந்த டயலாக்கும் பேசி விவாஜியைக் கலாயத்தான் புலி.

"புலி... இவன் பதிவுல்ல இருக்க போஸ்ட் எல்லாம் நம்ம பதிவுக்குப் போகணும்..இவன் பதிவுலகத்தை விட்டேப் போகணும்..."

ம்ம்ம் இந்த டாப் 10 பிளாகர்ஸ் கூட பதிவர் சந்திப்பு இல்லடா... இவங்க இப்போ உனக்கு கன்னாப்பின்னான்னு கும்மி பின்னூட்டம் போடப் போறாங்க அதை எல்லாம் பப்ளிஷ் பண்ணமுடியாமலே நீ பதிவுலகம் விட்டுப் போகப் போற...விவாஜி... இப்படி தனியா வந்து சிக்கிட்டியே விவாஜி அப்படின்னு புலி சிரிக்க...

விவாஜி பஜ்ஜியைக் கடிக்கிறார். கடிச்ச மீதி பஜ்ஜியை வானத்தில் எறிகிறார்.

"ஆகா விவாஜி பஞ்ச் டயலாக் பேசப் போறார் அதுக்குள்ளே கும்மியை ஸ்டார்ட் பண்ணுங்கடா" அப்படின்னு புலி சவுண்ட் கொடுக்க்.. கொலவெறியோடு கும்மி பதிவர்கள் விவாஜியை நோக்கி வருகிறார்கள்...

"பங்கு எல்லாம் மொத்தமாச் சேந்தாத் தான் கும்மி அடிக்கும்......" விவாஜி மொத்தமாக பறந்து பிசா கார்னர் மெயினை பிடுங்கி விடுகிறார்... கரண்ட் கட் ஆனதில் கும்மி பதிவர்களின் சிஸ்டங்கள் இருண்டுப் போகின்றன..

அப்படியே கிராபிக்ஸில் பீசா கார்னர் விலைப் பட்டியல் கம்ப்யூட்டர் ஸ்கீரினாக மாறுகிறது....எல்லாக் கும்மி பதிவர்களின் பிளாக்கும் தெரிகிறது....

"பங்கு எல்லாம் மொத்தமா வந்து தான் கும்மி அடிக்கும்.. ஆனா என்னைக்குமே சிங்கு ( சிங்கம்) சிங்கிளாவே சிங்கி அடிக்கும்"

ஒவ்வொரு பிளாக்கா ஓடி விவாஜி கொலவெறியோடு கமெண்ட் போடுகிறார்....பின்னூட்டம் வெள்ளம் போல் நிறைகிறது ஒவ்வொரு பதிவரும் கமெண்ட் பப்ளிஷ் பண்ண முடியாம பதிவுலகை விட்டே போறாங்க....

எல்லாம் முடிந்தப் பின் களைப்பான விவாஜி திரும்பி பார்க்கிறார்... அங்கே சிபியையும் நயன் தாராவையும் காணவில்லை....

அதே சமயம் அவர் எப்பவோ மேலேத் தூக்கி எறிந்த பஜ்ஜி மறுபடியும் கீழே சூடா வருது.. அதை ஸ்டைலா கடித்துக் கொண்டே நடக்கிறார் விவாஜி...

பின்னால் பாட்டு ஒலிக்கிறது...

ஹே விவாஜி... விவாஜி...
பதிவு போட்டா ஹாட்டு தான்டா
மொக்கன்னாலும் ஹிட்டு தான்டா..
பாதி பதிவு பிட்டுத் தாண்டா...
சேத்துபுட்டான் ஒரு செட் தாண்டா..

கடலைப் போட்டா கிங் தாண்டா
கடலைத் தாண்டி தங்குவாண்டா
மொபைல் ஆல்வேஸ் ரிங்கு தாண்டா
ஆபிஸ் போனா தூங்குவாண்டா
கேள்விக் கேட்டா சங்கு தாண்டா..

ஹே விவாஜி விவாஜி..

பாட்டு பீட்டுக்கு ஏத்தவாறு விவாஜி நடக்கிறார்...

16 comments:

CVR said...

//கடலைப் போட்டா கிங் தாண்டா
கடலைத் தாண்டி தங்குவாண்டா
மொபைல் ஆல்வேஸ் ரிங்கு தாண்டா
ஆபிஸ் போனா தூங்குவாண்டா
கேள்விக் கேட்டா சங்கு தாண்டா..
///

LOL!!!!!
sema comedy sense thala ungalukku!!!
adicchu kelappureenga!!
eppavum pola migavum rasitthu paditthean indha odugaiyai!!!!

Rock on!! B-)

நாகை சிவா said...

அல்லாருக்கும் அம்புட்டு டயலாக் கொடுத்துட்டு எனக்கு மட்டும் இரண்டு வரி கொடுத்தா என்ன அர்த்தம்.. அதான் கொஞ்சம் எக்ஸ்ட்ரா பிட் போட வேண்டியது ஆச்சு...

அதை தவிர எனக்கு விவாஜிக்கும் எந்த ஒரு தனிப்பட்ட பிரச்சனையும் இல்லைனு நான் சொன்னா அதை எல்லாரும் நம்பனும் சொல்லிட்டேன்...

ILA(a)இளா said...

பாட்டு சூப்பரு

vidhya said...

//அந்த ஒரு மணி நேரத்தை அடுத்த நாள் இட்ட இருந்து அட்வான்சா கடன் வாங்கி கேலண்டரையேக் கலாய்ப்பார்//
...ஹா...ஹா.

G.Ragavan said...

அடா அடா அடா என்ன திட்டம் என்ன திட்டம். இப்பிடித்தான் இருக்கனும் திட்டம்னா.

வெட்டி...நீ மாட்டிக்கிட்ட...இனிமே ஒன்னால ஒன்னும் பண்ண முடியாது.

மங்களூர் சிவா said...

//அந்த ஒரு மணி நேரத்தை அடுத்த நாள் இட்ட இருந்து அட்வான்சா கடன் வாங்கி கேலண்டரையேக் கலாய்ப்பார்//

//கடலைப் போட்டா கிங் தாண்டா
கடலைத் தாண்டி தங்குவாண்டா
மொபைல் ஆல்வேஸ் ரிங்கு தாண்டா
ஆபிஸ் போனா தூங்குவாண்டா
கேள்விக் கேட்டா சங்கு தாண்டா..
//

கலக்கல் தேவ்

இந்த பாட்டு நீங்களே எழுதினதா??

சூப்பர்... சூப்பர்....

இராம்/Raam said...

ஹாஹா சூப்பரு.... :))

அன்னிக்கு ஆல்பட் தியேட்டரு'லே நம்ம பக்கத்திலே உட்கார்ந்தவங்க இதை படிச்சா சிரி சிரி'ன்னு சிரிப்பாங்க..... அன்னிக்கு நாமே அங்க செஞ்சமாதிரி... :))

அனுசுயா said...

//பங்கு எல்லாம் மொத்தமா வந்து தான் கும்மி அடிக்கும்.. ஆனா என்னைக்குமே சிங்கு ( சிங்கம்) சிங்கிளாவே சிங்கி அடிக்கும்//

Superb punch :)

தேவ் | Dev said...

//CVR said...
//கடலைப் போட்டா கிங் தாண்டா
கடலைத் தாண்டி தங்குவாண்டா
மொபைல் ஆல்வேஸ் ரிங்கு தாண்டா
ஆபிஸ் போனா தூங்குவாண்டா
கேள்விக் கேட்டா சங்கு தாண்டா..
///

LOL!!!!!
sema comedy sense thala ungalukku!!!
adicchu kelappureenga!!
eppavum pola migavum rasitthu paditthean indha odugaiyai!!!!

Rock on!! B-)//

நன்றி சிவிஆர்..

தேவ் | Dev said...

//நாகை சிவா said...
அல்லாருக்கும் அம்புட்டு டயலாக் கொடுத்துட்டு எனக்கு மட்டும் இரண்டு வரி கொடுத்தா என்ன அர்த்தம்.. அதான் கொஞ்சம் எக்ஸ்ட்ரா பிட் போட வேண்டியது ஆச்சு...

அதை தவிர எனக்கு விவாஜிக்கும் எந்த ஒரு தனிப்பட்ட பிரச்சனையும் இல்லைனு நான் சொன்னா அதை எல்லாரும் நம்பனும் சொல்லிட்டேன்...//

சிவா சொல்லிட்ட இல்ல கிளைமாக்ஸ்ல்ல உனக்கு மிகப் பெரிய வாய்ப்பு கொடுத்துருவோம் ஓ,கேவா:)))

தேவ் | Dev said...

//ILA(a)இளா said...
பாட்டு சூப்பரு//

நன்றி விவாஜி

தேவ் | Dev said...

//vidhya said...
//அந்த ஒரு மணி நேரத்தை அடுத்த நாள் இட்ட இருந்து அட்வான்சா கடன் வாங்கி கேலண்டரையேக் கலாய்ப்பார்//
...ஹா...ஹா.//

நன்றி வித்யா

தேவ் | Dev said...

//G.Ragavan said...
அடா அடா அடா என்ன திட்டம் என்ன திட்டம். இப்பிடித்தான் இருக்கனும் திட்டம்னா.

வெட்டி...நீ மாட்டிக்கிட்ட...இனிமே ஒன்னால ஒன்னும் பண்ண முடியாது.//

ஜி.ரா. வெட்டிகாருவை அவ்வளவு லேசா எடைப் போட்டுறாதீங்க... அவ்வளவு சீக்கிரம் எங்க வெட்டிகாரு அசரமாட்டாரு இன்னும் இருக்குல்லா

தேவ் | Dev said...

//மங்களூர் சிவா said...
//அந்த ஒரு மணி நேரத்தை அடுத்த நாள் இட்ட இருந்து அட்வான்சா கடன் வாங்கி கேலண்டரையேக் கலாய்ப்பார்//

//கடலைப் போட்டா கிங் தாண்டா
கடலைத் தாண்டி தங்குவாண்டா
மொபைல் ஆல்வேஸ் ரிங்கு தாண்டா
ஆபிஸ் போனா தூங்குவாண்டா
கேள்விக் கேட்டா சங்கு தாண்டா..
//

கலக்கல் தேவ்

இந்த பாட்டு நீங்களே எழுதினதா??

சூப்பர்... சூப்பர்....//

ஆமாங்க சிவா.. நம்ம விவாஜிக்குன்னு பிரத்யேகமா எழுதுனப் பாட்டு... பாராட்டுக்கு நன்றி சிவா.. உங்கப் பாராட்டு வச்சி பார்த்தா நான் இன்னும் நிறைய பாட்டு எழுதலாம்ங்குறீங்க... :)))

தேவ் | Dev said...

//இராம்/Raam said...
ஹாஹா சூப்பரு.... :))

அன்னிக்கு ஆல்பட் தியேட்டரு'லே நம்ம பக்கத்திலே உட்கார்ந்தவங்க இதை படிச்சா சிரி சிரி'ன்னு சிரிப்பாங்க..... அன்னிக்கு நாமே அங்க செஞ்சமாதிரி... :))//

நிச்சயமா ராம் அந்த ஆல்பட் தியேட்டர் அனுபவம் கண்டிப்பா ஒரு ஜாலியான அனுபவம் நம்ம விவாஜி கதை ஆரம்பம் ஆன இடமாச்சே...:))

தேவ் | Dev said...

//அனுசுயா said...
//பங்கு எல்லாம் மொத்தமா வந்து தான் கும்மி அடிக்கும்.. ஆனா என்னைக்குமே சிங்கு ( சிங்கம்) சிங்கிளாவே சிங்கி அடிக்கும்//

Superb punch :)//

நன்றி அனுசுயா :))

tamil10