Wednesday, October 24, 2007

விவாஜி - கிளைமேக்ஸ்

கொத்ஸும் விவாஜியும் அடுத்து என்னச் செய்வது என ஆலோசிக்கிறார்கள்...

"இப்போ என் பெயர் பிளாக் லிஸ்ட் ஆயிடுச்சு... எனக்கு எந்தக் கம்பெனியும் வேலைத் தராது...என் பெயர் ரிபேர் ஆனாப் பரவாயில்ல...ஆனா நான் ஆரம்பிச்ச கடலைப் பதிவு திட்டம் அழியக் கூடாது கொத்ஸ் அதுக்காக நான் ஒரு முடிவு பண்ணிட்டேன்..அதுக்கு நீங்க தான் உதவணும்..."

விவாஜி சொன்னதைக் கேட்டு கொத்ஸ் ஆன் லைனில் பயங்கர பீல் ஆகிறார்.

அதற்கு பின் கொத்ஸ் அழைப்பின் பேரில் ரஷ்யாவில் இருந்து ஸ்பெஷல் மருத்துவர் ராமனாதன் வருகிறார். அவர் தலைமையில் ரஷ்ய நர்ஸ்கள் சிலரும் வருகின்றனர்.. கொத்ஸ் விக்கிப்பசங்கவில் போடுவதற்காக தயாரித்து வைத்த டெக்னிக்கல் பதிவு ஒன்றை மருத்துவரிடம் கொடுக்கிறார்..

"இந்த டெக்னிக் பேர் சி.பி.ஆர் அதாவது CURRENT PERSONALITY REORGANISATION தமிழ்ல்ல எல்லோருக்கும் புரியும் படி சொல்லணும்ன்னா கெட்டப் சேஞ்ச்.. அது படி தான் இப்போ நாம செய்யப் போறோம்..பட் அதுக்கு முன்னாடி விவாஜி இந்த கரண்ட் கம்பியைக் கொஞ்சம் க்ரிப்பாப் பிடிங்க...." கொத்ஸ் சுவிட் போடுகிறார்..கரண்ட் கன்னாபின்னாவெனப் பாஸ் ஆக விவாஜி டோட்டல் கெட்டப் மாறுகிறது...... அதன் பின் ரஷ்ய மருத்துவர் தன் வேலையைத் தொடங்குகிறார்..

வெட்டிகாரு ஜியைப் பாராட்டித் தள்ளுகிறார்..

"ஜி, இனிமே பதிவுலகத்துல்ல ஒரே ஜி அது நீ தான் ஜி... அந்த விவாஜி வேலைப் போயிருச்சு.."

"அவன் வேலைப் போயிருச்சு..பட் அந்த கடலை பதிவு புராஜக்ட் அப்படியேத் தானே இருக்கு..அதை ஒண்ணும் பண்ணமுடியாது போலிருக்கே...." ஜி சொல்ல.

"தலை மெயின்ல்ல கை வச்சுருச்சு...ச்சே மெயின் தலையே போயிருச்சு..இனி புராஜக்ட் ஊத்தி மூட வேண்டியது தானே...அந்த புராஜக்ட்ல்ல எந்த அளவுக்கு பக் போட முடியுமோ அந்த அளவுக்கு பக் போட்டு ரிப்போர்ட் கொடுத்து அலப்பரைக் கொடுப்போம்...."

அப்போது புலி பரபரப்பா உள்ளே வர்றார்..

"அய்யா இன்னொரு தலை வருதாம்ய்யா... பினாத்தலாரும் கோவியாரும் அந்தக் கடலை புராஜக்ட்டுக்கு இன்னொருத்தனைப் புடிச்சுப் போட்டுட்டாராம்..யாரோ அமெரிக்காவில்ல இருக்கானாம்..இன்னிக்கு ஜாயின் பண்ண வர்றானாம்.. கடலை புராஜக்ட்டோட முதல் மாடுயூல் ரீலிஸ் வேறயாம்...உங்களையும் கூப்பிடிருக்காங்க" மத்தியானம் டீம் லஞ்சும் உண்டுன்னு பினாத்தலார் சொன்னார்..." புலி குஷியாகச் சொல்ல..

புலி கன்பர்ம் ஆயிருச்சு.. நீ என் கட்சியே இல்ல.. இன்னிக்கு நீ வீட்டுல்லயே இரு உனக்கு நோ லஞ்ச்.

வெட்டிகாரு வேகவேகமாக ஜியோடு கிளம்புகிறார்.

சீன் கட் பண்ணி அப்படியே ஷிப்ட் ஆகுது....

அதிரடி மீசிக் அலற... யோ..யோ.. என ராப் கதற....ரோட் ரோலர் ஒண்ணு ரோட்ல்ல ஹஸ்பீட்ல்ல வர்றத காடுறோம்... ரோட் ரோலர் மேல...சும்மா பள பளன்னு வழிச்சத் தலையோட... டெக்னாலஜி கெட்டப் சேஞ்ச்ல்ல நம்ம விவாஜி வர்றார்... அதைப் பார்த்ததும் மொத்தப் பதிவுலகமும் கொண்டாடுது...

நம்ம அபி பாப்பாவும் நட்ராஜ் தம்பியும் சூர்யா தம்பி, டெபி பாப்பா எல்லாரும் ஐ ஐ மொட்டை பொம்மை மொட்டை பொம்மை அந்த பொம்மை எங்களுக்கு வேணும்ன்னு அடம் பிடிக்குறாங்க...

மொட்டை விவாஜி ரோட் ரோலரைப் பிரேக் அடித்து நிறுத்தி அதிலிருந்து இறங்கி சிபி கையைக் குலுக்குகிறார்... கொத்ஸ், மருத்துவர் ராமனாதன். எல்லோரும் விவாஜியை வாழ்த்துகிறார்கள்...

"மீட் அவர் நியு பார்மர்....சாரி ட்ரான் ஸ்பார்மர்.... பார்மர் இது வெட்டி...." சிபி அறிமுகப் படுத்த...

"I LIKE IT VERY MUCH " அப்படின்னு விவாஜி சொல்லுறார்.

எதுங்க அப்படின்னு வெட்டி பவ்யமாக் கேக்க

"அதோ மூணாவது ரோவுல்ல நாலாவதா நிக்குதே அந்த குட்டியை... முடிஞ்சா அவங்க மெயில் ஐடி வாங்கி எனக்கு கொடுங்க" ஹா..ஹா.. அப்படின்னு கலாய்ச்சலாச் சிரிச்சிட்டு
ரோடு ரோலர் முன் ஏறும் முன்... கையில் ரெடியா வைத்திருந்த வெட்டிக் கொடுத்த பின்னூட்ட பிரிண்ட் அவட்டை நாலாய் மடித்து பின்னர் எட்டாய் மடித்து அதுக்கு அப்புறம் நேராக திறந்து வெட்டி கையில் கொடுத்து படிக்கச் சொல்லுகிறார்...அதே வேகத்தில்
மீண்டும் ரோலர் மேலயே ஏறிக்குறார்..

"யோவ் ஜி.. இவன் விவாஜியே தான்ய்யா... இதுல்ல பாருய்யா நான் போட்ட அதே பின்னூட்டம்..."

"பதிவுன்னா ஆராயக்கூடாது ..அதை அனுபவிக்கணும்.." எழுத்துக் கூட்டி படிக்கும் ஜி' ஆமாய்யா இது உங்க பின்னூட்டம் தான்..ஆனா விவாஜியை நீங்களும் நானும் சேர்ந்து தானே எம்.எம்.எஸ் அனுப்பி வேலையை விட்டுத் தூக்கணும்...அவர் வேலையைப் போனதை நான் கூட அவங்க ஆபிஸ் போய் ஒளிஞ்சு இருந்து பாத்தேனே..அப்புறம் எப்படிய்யா?"

"இல்ல கன்பர்ம்டா அவன் விவாஜி தான்ய்யா.. அங்கேப் பாருய்யா... பெரிய ஸ்கீரின்ல்ல அவன் போட்ட பதிவு நல்லாயிருக்கு அவனே பின்னூட்டம் போடுறான்.. என்னாலத் தாங்க முடியல்ல..."

ரோட் ரோலர் மேல் கையில் மைக்கொடு நிற்கும் விவாஜி பேசுகிறார்...

"எனக்கு அதிகமாப் மைக் எல்லாம் பிடிச்சு பேசத் தெரியாது.. சைலண்ட்டா சைட்ல்ல நின்னு கடலைப் போடத் தான் தெரியும்..இந்தக் கடலைப் புராஜக்ட் இன்னிக்கு முதல் மாடுயூல் வந்துருச்சு..இதுன்னால உலக தமிழ் மக்கள் எல்லாம் கடலைத் தாண்டி கடலைப் போட முடியும்...இந்தப் புராஜக்ட்ல்ல என்ன பக் இருந்தாலும் என் கிட்டச் சொல்லுங்க... நான் பிக்ஸ் பண்றேன்.... அதுமட்டுமல்லாமல்...என் பிரண்ட் விவாஜி ஒரு பெரிய கடலை மன்னன்.. அவனைப் பதிவுலகம் விட்டு போக வச்சவங்களை நான் சும்மா விட மாட்டேன்..." அப்படின்னு பேசிட்டு ரோட் ரோலர்ல்ல இருந்து இறங்குகிறார்.

"சார் கொஞ்சம் நில்லுங்க... நீங்க் விவாஜியோடப் போலியோன்னு எங்களுக்கு டவுட்டா இருக்கு... தமிழ்மணத்துக்கு உங்களைப் பத்தி கம்பளையின்ட் கொடுக்கப் போறோம்.... " ஜி சொல்ல..

"ஹா,.....ஹா.... நான் விவாஜியோடப் போலியா.....வெரி பேட் ஜோக்... விவாஜி பதிவுலகத்தை விட்டுப் போயாச்சு..அவரைப் போக வச்சுட்டாங்க..."

"ஆமா விவாஜி பதிவுலகத்தை விட்டுப் போயிட்டார்..இது அதுக்கான சுட்டி" புலி தீடிரென விவாஜி பக்கம் வந்து நிற்கிறான்.

வெட்டி காரு டென்சனாக..

"அது மட்டுமல்லாமல் அதுக்கு நீங்கப் போட்டப் பின்னூட்டமும்... நான் போட்டப் பின்னூட்டமும் பிரிண்ட் அவுட்டா என் கையில்...."

"ய்ய்ய்ய்ய்ய்யா.. பதிவுலத்தை விட்டு ஒருத்தன் போறான்னு சொன்னா அதை யாரும் ஆராயக் கூடாது...அவன் பதிவுலகை விட்டு வெளியே போய் அனுபவிச்சுப் போறான்ன்னு விட்டுரணும்.." இது அனானியா நீங்கப் போட்டக் கமெண்டு...அதுக்கு கீழே ஏன் இப்படி? அப்படின்னு இன்னொரு அனானி காமெண்ட் நான் போட்டது..." புலி பேச பேச.. வெட்டி கோபத்தில் பொங்குகிறார்..

"அடப் பாவி ஆரம்பத்துல்ல இருந்தே நீ அவன் பக்கம் தானா?"

"பதிவுலக மக்களே நீங்களேச் சொல்லுங்க விவாஜிக்கு என்ன ஆச்சு?" புலி குரல் கொடுக்க.

'மீ த பர்ஸ்ட் புலி அண்ணா... விவாஜி பதிவுலகை விட்டேப் போயிட்டார்" ஃமைபிரண்ட் கைத் தூக்கி சொல்ல..

"ஆமா புலிண்ணா..விவாஜிண்ணா எந்தப் பதிவுக்கும் பின்னூட்டம் வராம பதிவுலகை விட்டேப் போயிட்டார்ண்ணா..." இம்சை அரசி எக்ஸ்ட்ரா சவுண்ட் விட...

"ஆமா..ஆமா..." அப்படின்னு எல்லாரும் கோரஸ் பாட.. வெட்டியும் ஜியும் சைலண்ட் ஆகிறார்கள்.

"அதெல்லாம் இருக்கட்டும் நீங்க விவாஜி இல்லன்னா... நீங்க யார்?"ஜி கேட்டு விட்டு விவாஜியைப் பாக்க

"நானா... நான் தான்... விஸ்க் விஸ்க் என கையை காற்றில் அசைத்து கையில் ஒரு பிளேட் உப்புமாவை எடுத்து ஜியிடம் நீட்டி விட்டு உப்புமா பதிவு எல்லாம் படிச்சி இருக்கீங்களா.. உப்புமா கிண்ட ரவா வேணும்.. உப்புமா பதிவுன்னா அதுக்கு இந்த ரவாஜி வேணும்..."


"நீங்க ரவாஜிங்கறதுக்கு ஆதாரம் என்ன?"

"அக்கடச் சூடுரா... அது என் பிளாகர் ப்ரொபைல் ஐடி ரவாஜி@1819019101810918 எலிக்குட்டி பூனைக்குட்டி எதை வச்சு வேணும்ன்னாலும் சோதனை பண்ணிக்கலாம்... நெக்ஸ்ட் அது என் பிளாக் ADDRESS... நெக்ஸ்ட் அது தமிழ்மணத்துல்ல வர போற என் சூடான இடுகை..."

பெரிய ஸ்கீரீன்ல்ல எல்லாம் தெரிய.... வெட்டி மேலும் டென்சன் ஆகிறார்.

"ஆமா சூடான் இடுகைக்கு புலின்னா... சூடான இடுகைக்கு ரவாஜி..." புலி கிடைச்சக் கேப்பில் ஒரு பஞ்ச் டயலாக் பேசுகிறான். ( புலி கிளைமாக்ஸ்ல்ல உனக்கு வெயிட்டான ரோல்ன்னு கொடுத்த வாக்கைக் காப்பாத்திட்டோம்ல்ல)

வெட்டி படு டென்சனாக நிற்கிறார்.

"அப்போ ரவாஜி அந்த மூணாவது வரிசையில் இருந்த பிகருக்கு சைகை செய்து அழைக்கிறார்...அப்படியே அந்தப் பிகரோடு கைகோர்த்து வெட்டியோட கைகோர்த்து நடைப் போடுகிறார்.."

"யோவ் எல்லாம் ரைட் ஆனா இந்த லாஜிக் மெயின் பிச்சர்ல்ல இல்லையேய்யா.. நீ ரவாஜியாவே இரு.. ஆனா அதுக்கு கெட்டப்க்கு ஒரு பிகர் எல்லாம் ஓவர் சொல்லிட்டேன்" வெட்டி கோபமாய் சொல்ல...

"நயன் எங்கே?"

"லாங் ஷாட்ல்ல நயன் சிபியோடு வருகிறார்...
பேக் கிரவுண்ட்ல்ல..

"தமிழ்மணம் ஏரியா.. பதிவு போட வர்றீயா...
என்னோட என்னோட பின்னூட்டம் போட நீ ரெடியா...

நீ நாமக்கல் ஆளுடா
உன் நக்கல் ரொம்ப தூளுடா
என்னோட என்னோட கும்மி போடுடா..

அடியே அடியேய்..
நீ யாரை இப்போக் கலாய்ச்சுபுட்ட
சங்கத்தைக் கேளுடீ

சிபியே சிபியே...
நான் விவாஜிக்கு ஜோடிடா
இந்த ரீமேக்ல்ல

ஆத்தாடி ஆத்தா எதுக்கு கலாய்ப்பு
நான் பதிவுலக தளபதி
நீ என் செட்டப்பு

ஆத்தாடி ஆத்தா எதுக்கு கலாய்ப்பு
நான் பதிவுலக தளபதி
நீ என் செட்டப்பு

ஆத்தாடி ஆத்தா இந்த லொள்ளுக்கு
நீ பதிவுலக தளபதி
பிஞ்சுடும் பாரு என்னோட செருப்பு.
"யோவ் இங்கே என்ன நடக்குது?"

"நீ விரும்பறவங்களோடு கடலைப் போடுறதோடு.. உன்னை விரும்புறவங்களோட நீ கடலைப் போட்டாத் தான் கடலைக்கே மரியாதை..." ரவாஜி பயங்கரமான தத்துவம் சொல்ல....

"வாவ்." என அவருக்கு பக்கத்தில் இருக்கும் பிகர் கன்னத்தில் கை வைக்க... அந்த பிகர் நம்ம ஸ்ரேயான்னு அப்போத் தான் எல்லாருக்கும் தெரியுது...

"ஆங் அப்புறம்.... கண்ணா வெட்டி...இன்னொரு பஞ்ச் டயலாக் பாக்கி இருக்கு அதையும் சொல்லிடுறேன்... பதிவுலகைப் பொறுத்தவரை... டிராக்டர் ஏறி வந்து பொள்ளாச்சி சந்தையில்ல நின்னு நம்ம ஊர் பொண்ணுங்க கிட்ட கடலைப் போடுற விவாஜியும் நான் தான்... ஹாலிவுட் ஹவேஸ்ல்ல ஆள் இல்லாம நிக்குற ரோடு ரோலர்ல்ல ஏறி அங்கிட்டு இருக்க அல்ட்ரா மாட்ர்ன் கேர்ள்ஸ் கிட்ட கடலைப் போடுற ரவாஜியும் நான் தான்...சும்மா புரியுதுல்ல..."

ரவாஜி சொல்லிவிட்டு வேக வேகமாய் நடக்க.... அவரை வந்து தடுத்து நிறுத்துகிறார் மங்களூர் சிவா

"என்ன தலைவா பைட் இல்லாம கிளைமேக்ஸா.."

"சிவா இது பதிவு... சண்டை இல்லாத பதிவு வேணும்ங்கறது தான் இந்த விவாஜியின் விருப்பம் லட்சியம்... சோ இங்கே மட்டும் இல்லை எங்கேயும் சண்டை இருக்கக் கூடாது ஓ.கே......." என்று ஸ்டைலாய் கண்ணடித்து கையசைக்கிறார்..

ஸ்கீரினில் பெயர்கள் ஓட 2020ல் உலக கடலை மையம் திறப்பு விழாக் காட்சிகள் காட்டப் படுகின்றன.. துளசி டீச்சர் அப்புறம் நம்ம கண்மண் டீச்சர் எல்லாம் சிறப்பு விருந்தினர்களா வந்து கடலை மையத்தைத் திறந்து வைத்து விவாஜியை ஆசிர்வதிக்குறாங்க...

அந்த நிகழ்ச்சியில் நம்ம பாசமிகு சகோதிரிகள் அனுசுயா, மை பிரண்ட், இம்சையரசி, ஜி3, காயத்திரி எல்லாரும் பன்னீர் தெளித்து வந்தோரை வரவேற்கிறார்கள். நம்ம தங்கச்சி துர்கா சிறப்பு வீணைக் கச்சேரி நடத்துகிறார்.

வணக்கம்

43 comments:

மங்களூர் சிவா said...

//
"I LIKE IT VERY MUCH " அப்படின்னு விவாஜி சொல்லுறார்.

எதுங்க அப்படின்னு வெட்டி பவ்யமாக் கேக்க

"அதோ மூணாவது ரோவுல்ல நாலாவதா நிக்குதே அந்த குட்டியை
//
//
சூடான் இடுகைக்கு புலின்னா... சூடான இடுகைக்கு ரவாஜி..."
//
//
"தமிழ்மணம் ஏரியா.. பதிவு போட வர்றீயா...
என்னோட என்னோட பின்னூட்டம் போட நீ ரெடியா...

நீ நாமக்கல் ஆளுடா
உன் நக்கல் ரொம்ப தூளுடா
என்னோட என்னோட கும்மி போடுடா..

அடியே அடியேய்..
நீ யாரை இப்போக் கலாய்ச்சுபுட்ட
சங்கத்தைக் கேளுடீ

சிபியே சிபியே...
நான் விவாஜிக்கு ஜோடிடா
இந்த ரீமேக்ல்ல

ஆத்தாடி ஆத்தா எதுக்கு கலாய்ப்பு
நான் பதிவுலக தளபதி
நீ என் செட்டப்பு

ஆத்தாடி ஆத்தா எதுக்கு கலாய்ப்பு
நான் பதிவுலக தளபதி
நீ என் செட்டப்பு
//
தேவ் சூப்பரப்பு
கலக்கிபுட்ட போ!!

//
"என்ன தலைவா பைட் இல்லாம கிளைமேக்ஸா.."
//
அதுதானே ??

//
தங்கச்சி துர்கா சிறப்பு வீணைக் கச்சேரி நடத்துகிறார்.
//
வீடியோ பாத்தாச்சா???

இராம்/Raam said...

/"இல்ல கன்பர்ம்டா அவன் விவாஜி தான்ய்யா.. அங்கேப் பாருய்யா... பெரிய ஸ்கீரின்ல்ல அவன் போட்ட பதிவு நல்லாயிருக்கு அவனே பின்னூட்டம் போடுறான்.. என்னாலத் தாங்க முடியல்ல..."//


செம குத்துடா சாமியோவ்...... :)

இராம்/Raam said...

/ஸ்கீரினில் பெயர்கள் ஓட 2020ல் உலக கடலை மையம் திறப்பு விழாக் காட்சிகள் காட்டப் படுகின்றன.. துளசி டீச்சர் அப்புறம் நம்ம கண்மண் டீச்சர் எல்லாம் சிறப்பு விருந்தினர்களா வந்து கடலை மையத்தைத் திறந்து வைத்து விவாஜியை ஆசிர்வதிக்குறாங்க...///

ஹாஹா... அல்டிமேட்... :)

Anonymous said...

தங்கச்சி துர்கா சிறப்பு வீணைக் கச்சேரி நடத்துகிறார்.
//


nooo ..ennaku veenai vasika theriyathu.vendumna act kodukurathuna ok ;) kudave naalu peru veenai vasikanum.appothaan naan vasikira mathiri act vudalam

Anonymous said...

//நீ விரும்பறவங்களோடு கடலைப் போடுறதோடு.. உன்னை விரும்புறவங்களோட நீ கடலைப் போட்டாத் தான் கடலைக்கே மரியாதை..." ./.

ithu ji annakita irunthu sutta lines thaane ;))

நாகை சிவா said...

விவாஜி - ரவாஜி....

அருமை...

எனக்கு வெயிட்டா ரோலா தான் கொடுத்து இருக்கீங்க....

ஆனா ஜோடி போடாமா விட்டுட்டீங்களே தல..

அத கூட நான் தாங்கிப்பேன்... ஆனா ரவாஜிக்கு ஸ்ரேயாவை கோத்து விட்டதையும் சிபிக்கு நயனோட டூயட் வச்சதையும் தான் என்னால தாங்க முடியல...

நாகை சிவா said...

சூடான் இடுக்கை
சூடான இடுக்கை...

டைமிங்கா ரைமிங்கா

அடிங்குறாங்கய்யா....

அனுசுயா said...

கலக்கல்ஸ் தேவ். கடைசிவரைக்கும் அதே ட்ராக்க மெயின்டெய்ன் பண்ணியிருக்கீங்க குட் :)

அனுசுயா said...

//அந்த நிகழ்ச்சியில் நம்ம பாசமிகு சகோதிரிகள் அனுசுயா, மை பிரண்ட், இம்சையரசி, ஜி3, காயத்திரி எல்லாரும் பன்னீர் தெளித்து வந்தோரை வரவேற்கிறார்கள்//
அவ்வ்வ் எங்களுயும் விடலயா ? கெளரவ வேடத்துல நடிச்சதுக்கு இன்னும் பேமெண்ட் வரவே இல்ல :)

வித்யா கலைவாணி said...

கிளைமாக்ஸ் சூப்பர். அதை விட இது
//में जा राहा हूँ, बाथ में आवुंगा //

.:: மை ஃபிரண்ட் ::. said...

//கொத்ஸ் சுவிட் போடுகிறார்..கரண்ட் கன்னாபின்னாவெனப் பாஸ் ஆக விவாஜி டோட்டல் கெட்டப் மாறுகிறது......//

கரண்ட் ஷாக்ல முடியெல்லாம் கொட்டிடுச்சா?? ஐயோ பாவம். :-)))

.:: மை ஃபிரண்ட் ::. said...

//இல்ல கன்பர்ம்டா அவன் விவாஜி தான்ய்யா.. அங்கேப் பாருய்யா... பெரிய ஸ்கீரின்ல்ல அவன் போட்ட பதிவு நல்லாயிருக்கு அவனே பின்னூட்டம் போடுறான்.. என்னாலத் தாங்க முடியல்ல..."//

:-))))

.:: மை ஃபிரண்ட் ::. said...

//"அடப் பாவி ஆரம்பத்துல்ல இருந்தே நீ அவன் பக்கம் தானா?" //

:-)))

.:: மை ஃபிரண்ட் ::. said...

//"ஆமா சூடான் இடுகைக்கு புலின்னா... சூடான இடுகைக்கு ரவாஜி..." //

சூப்பர். ;-)

குசும்பன் said...

"ஆமா சூடான் இடுகைக்கு புலின்னா... சூடான இடுகைக்கு ரவாஜி..." ///


செம கலக்கல், தள

குசும்பன் said...

"நம்ம தங்கச்சி துர்கா சிறப்பு வீணைக் கச்சேரி நடத்துகிறார்."

நம்ம குன்னங்குடி வைத்தியநாதனுக்கு அடுத்தபடியா வீனை வாசிப்பதில் துக்காதான் பெரிய ஆள் என்று ஊர் உலகமே பேசுதே அது உண்மை என்று இன்னைக்கு தெரிஞ்சுடுச்சி:)

குசும்பன் said...

எங்க சூடான் புலியை இப்படி ஜோடி இல்லாமல் அம்போன்னு விட்டதை வன்மையாக கண்டிப்பதோடு, அடுத்த அடுத்த பதிவிலும் ஜோடியோ இருக்க கூடாது என்ற வேண்டுகோளையும் வைக்கிறேன்.

சிங்கம்லே ACE !! said...

//CURRENT PERSONALITY REORGANISATION //

//"மீட் அவர் நியு பார்மர்....சாரி ட்ரான் ஸ்பார்மர்.... பார்மர் இது வெட்டி...." //

கற்பனை கரை புரண்டு ஓடுது :D :D

விவாஜி ரவாஜி சூப்பருங்கோ..

ILA(a)இளா said...

தேவ். இந்த 10 பகுதிக்காக நீங்க உழைச்ச உழைப்பு வீண் போகலை. செம கலக்கல் தொடர். இது ஒரு லொள்ளு சபா ரேஞ்சுல வந்த பதிவு. நீ எழுத்தாளன்யா..உன்னோட திறமைக்கு __/\__

இலவசக்கொத்தனார் said...

//"மீட் அவர் நியு பார்மர்....சாரி ட்ரான் ஸ்பார்மர்.... பார்மர் இது வெட்டி...." சிபி அறிமுகப் படுத்த...//

அதாவது The former farmer has become a new farmer or rather a transformer! இதுதானே சொல்ல வறீங்க.

நம்மளை ரகுவரன் ரேஞ்சுக்குப் போட்டாலும் வில்லனா ஆக்காம விட்டதுக்கு ரொம்ப நன்னிங்கண்ணா!!

CVR said...

Awesome series!!!

தொடர்ந்து consistent-a காமெடி தருவது எல்லாம் சாதாரண விஷயமல்ல!!!
செம திறமை அண்ணாத்த உங்களுக்கு!!
கலக்கிட்டீங்க!!
இன்னும் இது போல் பல நூறு தொடர்களை தர என் வாழ்த்துக்கள்!!! :-)

இம்சை அரசி said...

கலக்கல் அண்ணா... :)))

இம்சை அரசி said...

அது சரி... சிவாஜில எங்க கோடம்பாக்கம் ஏரியா பாட்டு வந்துச்சு?

இம்சை அரசி said...

ரவாஜி - :))))))))))

அட்டகாசம்...

எப்படி இப்டியெல்லாம் பேரு வைக்கறீங்க?

இம்சை அரசி said...

// அந்த நிகழ்ச்சியில் நம்ம பாசமிகு சகோதிரிகள் அனுசுயா, மை பிரண்ட், இம்சையரசி, ஜி3, காயத்திரி எல்லாரும் பன்னீர் தெளித்து வந்தோரை வரவேற்கிறார்கள். நம்ம தங்கச்சி துர்கா சிறப்பு வீணைக் கச்சேரி நடத்துகிறார்
//

சிறப்பு விருந்துக்கு நான் தான் சமையல் செய்வேனாம் :)))

இப்போ தான் ரெண்டு மூணு ரெசிப்பி கத்து வச்சிருக்கேன். டெஸ்ட் பண்ண ஆளு இல்ல ;)))

ஜி said...

:(((.... :)))

entha smiley ethukkunnu neengalu mudivu pannikonga

கப்பி பய said...

அல்டிமேட் அண்ணே...கலக்கிப்புட்டீங்க :))))

விவாஜி..சூப்பர் டூப்பர் ஹிட்டு :)))

வெட்டிப்பயல் said...

கலக்கல் பதிவு...

பத்து பகுதியும் காமெடி கொடுக்கறது சாதாரண விஷயம் இல்லை. சூப்பரா பண்ணியிருக்கீங்க...

ஆனா உங்களுக்குனு எந்த ரோலும் இல்லாம பண்ணிட்டீங்களே :-((

ஜொள்ளுப்பாண்டி said...

தேவ் அட அட அட எப்படி சொலறதுன்னே தெரியலை எப்படீங்க தேவ் எல்லா பகுதியும் இப்படி போட்டு பின்னறீங்க ?:))))

ச்சும்மா கலக்குதில்ல??!!! :))

அபி அப்பா said...

பத்தும் முத்து தேவ்! தொடர்ச்சியா இப்படி காமடி சரவெடி குடுப்பது ரொம்ப கஷ்டம்.கண்டிப்பா இந்த தொடர் 2007ன் மிக சிறந்த காமடி தொடர் என்பதில் மாற்று கருத்து இல்லை! வாழ்க தேவ்!! வாழ்த்துக்கள்ள். வேற என்ன சொல்றதுன்னு தெரியலை!

அபி அப்பா said...

என்ன ஒரு குறை! சிபிஐ ஆபீஸருக்கு தீபாவெங்கட்டை ஜோடியா போட்டு நல்ல டூயட் குடுத்திருக்கலாம்:-(((

நாமக்கல் சிபி said...

//சிபிக்கு நயனோட டூயட் வச்சதையும் தான் என்னால தாங்க முடியல//

யோவ் புலி! ஏன்யா இப்படி?

நாமக்கல் சிபி said...

//சிபிக்கு நயனோட டூயட் வச்சதையும் தான் என்னால தாங்க முடியல//

தலைவா! ஏன் இந்த கொலை வெறி?

ILA(a)இளா said...

தேவ்க்கு பேர் இல்லியா? அவர்தானே ஷங்கரு, சீ சீ "தேங்கரு"

மங்களூர் சிவா said...

//
அபி அப்பா said...
என்ன ஒரு குறை! சிபிஐ ஆபீஸருக்கு தீபாவெங்கட்டை ஜோடியா போட்டு நல்ல டூயட் குடுத்திருக்கலாம்:-(((
//
api appa ithellaam romba over andha deepa venkat kku

கோபிநாத் said...

அட்டகாசம் பண்ணிட்டிங்கண்ணே...கலக்கல் ;))

~பொடியன்~ said...

தேவ் அங்கிள்.. எனக்கு ஒரு ரோல் குடுக்க மாட்டேளா? எனக்கேத்த மாதிரி " வெயிட்டான":) ரோல் படத்துல இல்லியோ? :))

Kiran said...

I really liked ur post, thanks for sharing. Keep writing. I discovered a good site for bloggers check out this www.blogadda.com, you can submit your blog there, you can get more auidence.

தம்பி said...

ராவாஜி அருமையான பாஜி!

அண்ணே.
சிவாஜிய பத்து முறை பாத்திங்களோ இல்லையோ அத வச்சு பதிமூணு பதிவு போட்டுட்டிங்க. உங்க திறமையே திறமைண்ணே...
எங்கியோ போய்ட்டிங்க. :)

தருமி said...

செம ...

G.Ragavan said...

அடாடா...சிவிஆர் டெக்குனாலஜி..விவாஜி ரவாஜி...டிராக்டர் ரோலர்ஸ்... என்ன அருமையான எடுத்துக்காட்டுகள். ரொம்பவே நல்லாருக்கு. ஆனா விவாஜி இத்தோட முடியுதுன்னு நெனைக்கும் போதுதான் கயிட்டமா இருக்கு. விடாதீங்க. அடுத்து இப்பிடி இளிச்சவாயர் கிடைக்காமலா போயிரப் போறாரு...இழுத்துட்டு வாங்க கும்மீருவோம். :)

Anonymous said...

tibia money tibia gold tibia item runescape money runescape gold tibia money tibia gold runescape gold runescape accounts tibia gold tibia money runescape money runescape gp buy runescape gold tibia gold tibia item buy runescape money runescape gold runescape items tibia money tibia gold

Anonymous said...

tibia money tibia gold tibia item runescape money runescape gold tibia money tibia gold runescape gold runescape accounts tibia gold tibia money runescape money runescape gp buy runescape gold tibia gold tibia item buy runescape money runescape gold runescape items tibia money tibia gold

tamil10