Monday, October 22, 2007

சங்கம் வழங்கும் விவாஜி - 9வெட்டியும் அவர் கூட்டணியும் விவாஜியை ஒழிக்க பயங்கரமாய் திட்டம் போட்டுக் கொண்டிருந்த அதே நேரம் நம்ம விவாஜி நயந்தாராவைக் கூட்டிகிட்டு பொள்ளாச்சி சந்தையில் கடலை வாங்கி கையில் கொடுத்து அப்படியே வரப்பு ஓரமாய் நடந்துப் போய் கொண்டிருந்தார்...

"என்னம்மா இவ்வளவு தூரம் கூட்டிட்டு வந்து கையிலே கடலை எல்லாம் வாங்கிக் கொடுத்தும் எதுவும் பேசமா மவுனமா வர்ற...?" விவாஜி பீலிங்க்கா கேட்க...

"எனக்கு கடலை எல்லாம் போடத் தெரியாதுங்க... உங்களுக்கு தெரியாதா.. நான் தான் அதைப் பாட்டாவே சொல்லியிருக்கேனே..."

"என்னப் பாட்டு?"

"ஒரு வார்த்தைப் பேச ஒரு வருசம் காத்திருந்தேன்...." அப்படின்னு நயன் பாட...

"ம்ஹூம் ஒரு வார்த்தைக்கே ஒரு வருசம்ன்னா டூ மச்.. உனக்கு கடலைப் போட நான் சொல்லித் தர்றேன்... சும்மா எப்படி கடலைப் போடுறதுன்னு இப்போ படம் காட்டுறேன் பாரு...."

"எப்படி?" நயன் கன்னத்தில் கை வைத்துக் கேட்க

அப்படியே சீன் மாறுகிறது சீன் யு.எஸ்க்கு ஷிப்ட் ஆகிறது.....டிஜி கேம்..செல் கேம்...ஹேண்டி கேம்...எஸ்.எல்.ஆர்... இப்படி பல கேமராக்கள் ஜூம் இன் ஜூம் அவுட் ஆகி ஸ்கீரினை நிறைக்க.... விளக்கு எல்லாம் அணைந்து அணைந்து எரிய.... ஹெவி பி.ஜி.எம் கேட்கிறது...

The sky is so high...He is a camera guy...
Feeling no shy...u ask him why...
he is c to the v to the r...yo simply CVR

வலையுலகின் புரட்சி போட்டோகிராபர் சிவிஆர் கெட்டப்பில் விவாஜி கழுத்தில் கேமராவோடு நடந்து வர பின்னால் ஒலிக்கும் ராப் சாங் அலறுகிறது... அப்படியே பாட்டு தமிழுக்கு மாறுகிறது.....
பொத்தி வச்ச வேர்கடலை மொட்டு...பூத்திருச்சு வெக்கத்தை விட்டு...

அப்படியே அந்த வேர்க்கடலை மொட்டு விடுவதை இன்ச் பை இன்ச் பை இன்ச்சா படம் எடுக்கிறார் சிவிஆர் கெட்ட்ப்பில் இருக்கும் விவாஜி... அந்த கடலை உருவாகும் ஒவ்வொரு பருவத்தையும் படம் படமாக எடுத்துத் தள்ளுகிறார்... கூடவே நயந்தாராவும் இருக்கிறார்... இந்தப் போட்டோ செசன் முழுக்க பேக்கிரவுண்டில் அந்த பொத்தி வச்ச வேர்கடலை மொட்டு ஓடுகிறது..... பாட்டு முடியும் போது.... இந்த மாத பிட் புகைப்படப் போட்டிக்கானத் தலைப்பு கடலை அப்படின்னு க்ளிக்கிட்டு எஸ் ஆகிறார் சிம்பிளி சிவிஆர்...

அப்படியே நினைவுக்கு வரும் விவாஜி நயந்தாராவைப் பார்க்கிறார்.. இல்ல உனக்கு தெய்வீகமா எப்படி கடலைப் போடணும்ன்னு சொல்லித் தரவா...

"எப்படி?" நயந்தாரா விழிகளைப் படபடவென அடித்துக் கேட்கிறார்.

"இக்கடச் சூடு......"

சீன் அப்படியே மதுரைத் திருபரங்குன்றம் ஏரியாவுக்கு மாறுகிறது....
ஒன்றானவன்.... கே.பி.எஸ் குரலில் பாட்டு ஒலிக்க கே.ஆர்.எஸ் பக்தி பழமாகக் காட்சி தருகிறார். கிராபிக்சில் அப்படியே அவர் விவாஜியாக மாற....

மாதவிப் பொன்மயிலாள் தோகை விரித்தாள் பாட்டு ஒலிக்கிறது....ஸ்லோ டான்ஸாக ஆரம்பிக்கிறது.. அப்படியே தகதகவென ஆடவா சிவ சக்தி சக்தி என ஆடவா.. அப்படின்னு ஆவேசம் எடுத்து ஆடுகிறார் விவாஜி கூடவே நயன் தாராவும்.... இங்கே சிபியும் கனவில் வருகிறார்.. அவருக்கும் ஒரு க்ளோஸ் அப் ஷார்ட் வைக்கிறோம் அவர் காதில் இருந்து புகை கிளம்புகிறது...

இந்த ஷாட் முடியும் போது கே.ஆர்.எஸ் தோன்றி... கடலை என்பது சிற்றின்பமடா .. பதிவு போட்டு பின்னூட்டக் கும்மி என்பது பேரின்பம் என அறிவாயடா மானிடா அப்படினு பேசி ஒரு வேர்க்கடலை பொட்டலம் பிரித்துத் தூவி எஸ் ஆகிறார்..

அடுத்து என்ன ஸ்டைல் கடலை அப்படின்னு நயந்தாரா கேட்கும் முன்...

ஒரு நாய் ஸ்கீரீனில் தெரிகிறது... அது ஒருத்தரை வேகமாகத் துரத்த...அவர் ஓடுகிறார்.... பின்னால் பாட்டு அதிரடியாய் ஒலிக்கிறது....அவர் ஓடும் போது...கொரியா உங்களை வரவேற்கிறது என ஒரு போர்ட் தெரிய....அங்கே நம்ம செந்தழல் ரவி நின்னு திரும்பி பார்க்கிறார்... அப்படியே கிராப்பிக்ஸ்ல்ல நம்ம ரவி விவாஜியா மாற....கொரியன் பிகர்ஸ் கூட்டம் அவரைச் சுத்துப் போடுகிறார்கள்... கையில் போனோடு ஒரு பக்கம் இந்தியாவில் இருக்கும் கேர்ள் பிரண்ட்டோடு கடலைப் போட்டப் படி இன்னொரு பக்கம் நெட்டில் அகில உலக பிகர்களிடம் கடலையைக் கன்டினியூ செய்து கொண்டே.. கொரியப் பாட்டுக்கு கொரிய பிகர்களோடும் டான் ஸ் ஆடி அசத்துகிறார்....

இந்தப் பாட்டு முடியும் போது நயன்ந்தாராவைப் பார்த்து இப்போச் சொல்லு என்ன மாதிரி கடலை வேணும்ன்னு

"எனக்கு உங்ககிட்டப் புடிச்சதே... நீங்கப் பதிவுலகை விட்டு போறேன் போறேன்னு சொல்லி போடுவீங்களே அந்தக் கடலைத் தான்...அதே மாதிரி கடலை போடுங்க ப்ளீஸ்"

விவாஜி வேக வேகமாய் தன் பழையப் பதிவுகளை நோண்டி தான் இது வரை பதிவுலகை விட்டு போவதாய் போட்ட 26 சொச்சம் பதிவுகளையும் மீள்பதிவு செய்கிறார்...

தீ..தீ..தீ...கிளப்புறாங்க பீதி....தீ..தீ..தீ... பதிவுலகை விட்டுப் போற தேதி....
டிராக்டர் ஓட்டும் நாட்டு ராசாத் தான்..கடலைப் போடுவான் பேஷாத் தான்...
போட்டக் கடலைத் தீஞ்சா..டக்கால் டமீல்..டூமீல் டூமில் தான்.....

பாட்டு ஒலிக்க விவாஜி சும்மா கன்னாபின்னாவென டான்ஸ் ஆடுகிறார்....
இதை எல்லாம் எம்.எம்.எஸ் ஆக்கி வெட்டிகாருவுக்கு சிபி அனுப்புகிறார்... அதைப் பார்க்கும் வெட்டி கடும் டென்சன் ஆகிறார்..

"ஓவரா ஆடுறான்ய்யா"

"ஆமாங்க விட்டா விஜய் டிவி ஜோடி நம்பர்ல்ல கூடப் போய் ஆடுவான் போலிருக்கு..." புலி சீரியசாச் சொல்ல.. வெட்டிகாரு புலியை முறைக்கிறார்..

"புலி எனக்கு ரொம்ப நாளாச் சந்தேகம்.. நீ என் கட்சியா... இல்ல விவாஜி கட்சியா..."

"என்னங்க இப்படிக் கேக்குறீங்க... இன்னும் ஒரு பார்ட் வரைக்கும் டைம் கொடுங்கச் சொல்லிடுறேன்"

"ம்ம்ம்.. அதிரடி வாலிபனைக் கூப்பிடுங்க..."

ஜி ஆன் லைனில் வருகிறார்.

"ஜி அமெரிக்காவில்ல என்னப் பண்ணுறே?"

"அட என்னங்க இதையேத் தான் சேட்ல்ல எல்லாரும் கேக்குறீங்க..செம போர்ண்ணே... வீட்டுல்ல ஒரே பொட்டித் தட்டி தட்டி போர் அடிச்சுப் போச்சு.. எல்லாரும் சோம்பேறி பசங்க.. ஊர் சுத்தவும் வர மாட்டேங்கறாங்க...."

"எனக்குத் தெரியும்...அதான் உனக்கு ஒரு வேலைத் தர்றேன்.."

வேலையைச் சொல்லிவிட்டு வெட்டிகாரு பயங்கரமாய் சிரிக்க...

"வெட்டிண்ணே இதெல்லாம் ஓர்க் அவுட் ஆகுமா...?" அப்படின்னு ஜி கேட்க...

"பதிவுலகைப் பொறுத்த வரி இந்த வெட்டி ஒண்ணைப் பத்திச் சொன்னா..அதை ஆராயக்கூடாது அனுபவிக்கணும்....புரியுதா சொன்னதைச் செய் சீக்கிரம் செய்.."

இவரும் பஞ்ச் வச்சிட்டார்ப்பா...ஆளுக்கு ஆள் ஏன் இப்படி பண்ணுறாங்க அப்படின்னு புலி பீலிங்காய் எதோச் சொல்ல ஆரம்பிக்கிறார். இதே நேரம் வெட்டியின் ஆலோசனைப் படி ஜி எம்.எம்.எஸை அகில உலக ஐடி கம்பெனிகளுக்கு அனுப்ப...விவாஜியின் பதிவு எல்லாக் நிறுவனங்களாலும் பிளாக் செய்யப்படுகிறது... அது மட்டுமல்லாமல் விவாஜியின் சொந்தக் கம்பெனியிலே அவருக்கு வேலைப் போகிறது...

அதே நேரம் சிபியும் விவாஜியும் சாலையோர டீக்கடையில் சந்திக்கின்றனர்.

"சிபி... ஒரு எம்.எம்.எஸ் வச்சு என்னைக் காலிப் பண்ணப் பாக்குறான் வெட்டி... கொஞ்சம் ஜாலியா ஒரு எக்ஸ்ட்ரா பீலிங்க்ல்ல நயனோட ஒரு குத்தாட்டம் போட்டுட்டேன்..அதை எந்த வீணாப் போனவனோ வீடியோ பண்ணி அவனுக்கு எம்.எம்.எஸ் ஆ அனுப்பியிருக்கான்..அதை வெட்டி என் மேனேஜருக்கு.. சி.இ.ஓ எல்லாருக்கும் அனுப்பிட்டான்...அது மட்டுமில்லாமல் எல்லா ஐடி கம்பெனிக்கும் அனுப்பிட்டான்... கொடுத்தப் புராஜக்ட்டை ஒழுங்காச் செய்யாம கூத்தடிக்கிறான்னு எனக்குக் கெட்டப் பெயராப் போயிடுச்சு..அதுல்லயும் எங்க கம்பெனியில்ல பாட்டுல்ல அந்த பின்னூட்டத்தை நான் என் பார்வையால ரிவர்ஸ் போக வைக்கிற கிராபிக்ஸ் பார்த்து ஓவர் டென்சன் ஆயிட்டாங்க..."

"விவாஜி மன்னிச்சுரு விவாஜி... கலாய்த்தல் திணைக்கு ரொம்ப நாளா மேட்டர் கிடைக்கல்ல அதுக்காகத் தான் இந்த வீடியோவை உனக்குத் தெரியாம எடுத்தேன்...அதை வச்சு வெட்டி வயித்தெரிச்சலைக் கிளப்பி கலாய்க்கலாம்ன்னு அவனுக்கு அனுப்புனேன்.. இப்படி ஆகிருச்சே..."

'தெரியுதுய்யா ஆரம்பத்துல்ல இருந்தே நீ என் பக்கமா இல்ல அவன் பக்கமான்னு எனக்கு டவுட் இருந்துச்சு அது கன்பர்ம் ஆயிருச்சு.."

"இல்ல விவாஜி அப்படி எல்லாம் தப்பா நினைக்காதே"

"யோவ் நான் நயந்தாரா கூட ஆடுற மாதிரி வீடியோ இருந்தாக் கூட என் ஆபிஸ்ல்ல எதாவது பேசி சமாளிச்சுருவேன்...ஆனா வேற பிகர் இல்ல தெரியுது... கோவியாரும்..பினாத்தாலாரும் உன் புராஜக்ட் விட்டுட்டு வேற புராஜக்ட்ல்ல போகஸ் பண்ணுறீங்க அதுனாலத் தான் உங்களை வேலையை விட்டுத் தூக்குறோம்ன்னு சொல்லிட்டாங்க..."

"ஏன்ய்யா அப்படி பண்ண...?"

"சாரி விவாஜி நான் கிராபிக்ஸ்ல்ல கொஞ்சம் வீக்... கோர்ஸ் போலாம்ன்னு இருக்கேன்..சின்னதா ஒரு டெக்னிக்கல் பால்ட் ஆயிருச்சுப்பா"

"சாரி விவாஜி இப்போ என்னப் பண்ணப் போறே.. உன் கனவெல்லாம் அவ்வளவு தானா?"

இல்ல..இந்த விவாஜி தோக்க மாட்டான்.....என் கிட்ட இருக்க ஒரு பின்னூட்டத்தை வச்சே என் ஆட்டத்தை நான் கன்டினியூ பண்ணப் போறேன்....

"எப்படி விவாஜி?"

விவாஜி லேப் டாப் திறந்து ELAVASAM.BLOGSPOT.COM அப்படின்னு டைப் அடிக்கிறார்...

அவ்வளவு தான் அப்படியே பின்னூட்டப் புயல் கிளம்புது.... சும்மா கிராபிக்ஸ்ல்ல புயலைக் காட்டுறோம்....அந்தப் புயலுக்கு நடுவே நம்ம விவாஜி அவரோடு ஒரு பின்னூட்டத்தைப் போல்ட் பண்ணிப் போடுறார்...

"என்ன விவாஜி பண்ணுற?"

"சிபி கண்ணா.. இங்கே பிளாக் போடுற நிறைய பேர் 10 பின்னூட்டம் வந்தாலே பதில் சொல்ல டைம் இல்லன்னு எஸ் ஆயிடுவாங்க... ஆனா இப்போ நான் பின்னூட்டம் போட்டு இருக்கது என் நண்பர் பின்னூட்டப் புயலாருக்கு...ஆயிரக் கணக்கானப் பின்னூட்டம் வந்தாலும் ஒவ்வொரு பின்னூட்டத்துக்கும் பதில் சொல்லுவார்ய்யா என் நண்பர்.. என் பின்னூட்டம் பாத்துட்டு எனக்கு உதவி பண்ண வருவார் பார்.." என்று சொல்லிவிட்டு ஜிடாக் ஒப்பன் பண்ணி உக்காந்து இருக்கிறார்..

விவாஜி ஸ்கீரினில் கொத்ஸ் ஆன் லைன் எனக் காட்டுகிறது...

விவாஜி ஹாய் பட்டி கூல் என டைப் அடிக்க.....

மறுபக்கம் ஹாய் விவ்....டெல் மீ என்கிறார் கொத்ஸ்...

விவாஜி - கிளைமாக்ஸ் அடுத்து DONT MISS IT

34 comments:

.:: மை ஃபிரண்ட் ::. said...

//அப்படியே சீன் மாறுகிறது சீன் யு.எஸ்க்கு ஷிப்ட் ஆகிறது.....டிஜி கேம்..செல் கேம்...ஹேண்டி கேம்...எஸ்.எல்.ஆர்... இப்படி பல கேமராக்கள் ஜூம் இன் ஜூம் அவுட் ஆகி ஸ்கீரினை நிறைக்க.... விளக்கு எல்லாம் அணைந்து அணைந்து எரிய.... ஹெவி பி.ஜி.எம் கேட்கிறது...//

இது படிகும்போதே நெனச்சேன்..

//The sky is so high...He is a camera guy...
Feeling no shy...u ask him why...
he is c to the v to the r...yo simply CVR//

இவர்தான்னு. :-))

.:: மை ஃபிரண்ட் ::. said...

//பாட்டு முடியும் போது.... இந்த மாத பிட் புகைப்படப் போட்டிக்கானத் தலைப்பு கடலை அப்படின்னு க்ளிக்கிட்டு எஸ் ஆகிறார் சிம்பிளி சிவிஆர்...
///

இங்கேயும் தன்னோட கடமையை மறக்காமல் வேலையை ஆரம்பிச்சுட்டார்.. :-))))

.:: மை ஃபிரண்ட் ::. said...

//இங்கே சிபியும் கனவில் வருகிறார்.. அவருக்கும் ஒரு க்ளோஸ் அப் ஷார்ட் வைக்கிறோம் அவர் காதில் இருந்து புகை கிளம்புகிறது...//

ஐ.. வடிவேலு.. :-))

.:: மை ஃபிரண்ட் ::. said...

//விவாஜி - கிளைமாக்ஸ் அடுத்து DONT MISS IT//

ஆஹா.. இதுதான் க்ளைமேக்ஸ்ன்னு சொல்லி யாரோ ஏமாத்திட்டாங்க இந்த சின்ன பிள்ளையை.. :-(

அனுசுயா said...

//ஆஹா.. இதுதான் க்ளைமேக்ஸ்ன்னு சொல்லி யாரோ ஏமாத்திட்டாங்க இந்த சின்ன பிள்ளையை.. :-(//

me too My friend :(

அனுசுயா said...

கடைசிவரைக்கும் விட மாட்டீங்களாட்ட இருக்குதே கடலைய. கடைசியா விவாஜி கடலை யூனிவர்சிட்டி ஆரம்பிக்க போராரு பாருங்க

மங்களூர் சிவா said...

//
..தீ..தீ...கிளப்புறாங்க பீதி....தீ..தீ..தீ... பதிவுலகை விட்டுப் போற தேதி....
டிராக்டர் ஓட்டும் நாட்டு ராசாத் தான்..கடலைப் போடுவான் பேஷாத் தான்...
போட்டக் கடலைத் தீஞ்சா..டக்கால் டமீல்..டூமீல் டூமில் தான்.....
//
//
இல்ல..இந்த விவாஜி தோக்க மாட்டான்.....என் கிட்ட இருக்க ஒரு பின்னூட்டத்தை வச்சே என் ஆட்டத்தை நான் கன்டினியூ பண்ணப் போறேன்....

"எப்படி விவாஜி?"

விவாஜி லேப் டாப் திறந்து ILAVASAM.BLOGSPOT.COM அப்படின்னு டைப் அடிக்கிறார்...
//
ம் ஒருத்தரும் மிச்சம் இல்ல எல்லாரையும் வாரியாச்சு.

சீக்கிரம் க்ளைமேக்ஸ் போடுங்க

வெய்ட்ட்டிங்

அனுசுயா said...

//கே.ஆர்.எஸ் தோன்றி... கடலை என்பது சிற்றின்பமடா .. பதிவு போட்டு பின்னூட்டக் கும்மி என்பது பேரின்பம் என அறிவாயடா மானிடா அப்படினு பேசி ஒரு வேர்க்கடலை பொட்டலம் பிரித்துத் தூவி எஸ் ஆகிறார்//

Superb :)

Anonymous said...

//The sky is so high...He is a camera guy...
Feeling no shy...u ask him why...
he is c to the v to the r...yo simply CVR//


feeling no SHY ah?yaaru CVR ah?CVR WHYYYYY?kettuten


/.//பாட்டு முடியும் போது.... இந்த மாத பிட் புகைப்படப் போட்டிக்கானத் தலைப்பு கடலை அப்படின்னு க்ளிக்கிட்டு எஸ் ஆகிறார் சிம்பிளி சிவிஆர்...//

hahaha..CVR ku imbuthu kadamai veriya?

சிங்கம்லே ACE !! said...

பதிவுலகில இருக்க அத்தனை பேருக்கும் ஒரு ரோல் கொடுத்திருக்கீங்க.. CVR, KRS, செந்தழல் கற்பனை சூப்பர்..

வாழ்த்துக்கள்..

Anonymous said...
This comment has been removed by a blog administrator.
Anonymous said...

//ஜி அமெரிக்காவில்ல என்னப் பண்ணுறே?"
//

naan solluren.avaru satiyama aani pudungalaiyam :D vera ennamo pannurar nu ellarum sonnanga.athu ennanu naan oru post pottu solluren

Anonymous said...

//இந்த ஷாட் முடியும் போது கே.ஆர்.எஸ் தோன்றி... கடலை என்பது சிற்றின்பமடா .. பதிவு போட்டு பின்னூட்டக் கும்மி என்பது பேரின்பம் என அறிவாயடா மானிடா அப்படினு பேசி ஒரு வேர்க்கடலை பொட்டலம் பிரித்துத் தூவி எஸ் ஆகிறார்//


ussss...intha KRS anna thathuvam engeyuma??ithu ellam thaanga mudiyalaiyeeee

Anonymous said...

//நிறைய பேர் 10 பின்னூட்டம் வந்தாலே பதில் சொல்ல டைம் இல்லன்னு எஸ் ஆயிடுவாங்க... ஆனா இப்போ நான் பின்னூட்டம் போட்டு இருக்கது என் நண்பர் பின்னூட்டப் புயலாருக்கு...ஆயிரக் கணக்கானப் பின்னூட்டம் வந்தாலும் ஒவ்வொரு பின்னூட்டத்துக்கும் பதில் சொல்லுவார்ய்யா என் நண்பர்.. என் பின்னூட்டம் பாத்துட்டு எனக்கு உதவி பண்ண வருவார் பார்.." //


athu ennamo unmaithaai.enna irunthalum koths mathiri yaarala 300 comments vanthalum reply panna mudiyum :D

Anonymous said...

//விவாஜி வேக வேகமாய் தன் பழையப் பதிவுகளை நோண்டி தான் இது வரை பதிவுலகை விட்டு போவதாய் போட்ட 26 சொச்சம் பதிவுகளையும் மீள்பதிவு செய்கிறார்...
//

32 illaiya :D
anna unga kannuku thaappu

CVR said...

எப்பவும் போல கலக்கி போட்டீங்க தல!!
ROFL post!!! B-)

ஜி said...

அட்டகாசம்... அதுவும் சிவிஆர வாருனது செம கலக்கல்.... :))

ஜி said...

அண்ணா... ஏனுங்கணா.. நாம சேட்ல பேசுனதெல்லாம் அப்படியே போட்டுத் தாக்கிட்டீங்க... நல்ல வேளை அன்னைக்கு நான் கொஞ்சம் தெளிவா இருந்ததால நெறைய ஒளறாம இருந்தேன்... :))

ஜி said...

//துர்கா|thurgah said...
//ஜி அமெரிக்காவில்ல என்னப் பண்ணுறே?"
//

naan solluren.avaru satiyama aani pudungalaiyam :D vera ennamo pannurar nu ellarum sonnanga.athu ennanu naan oru post pottu solluren
//

பாசமலரே... ஒய் திஸ் மர்டர் வெறி??? நாமெல்லாம் அப்படியா பழகிருக்கோம்... அவ்வ்வ்வ்வ்....

Anonymous said...

//பாசமலரே... ஒய் திஸ் மர்டர் வெறி??? நாமெல்லாம் அப்படியா பழகிருக்கோம்... அவ்வ்வ்வ்வ்....///

noooooo ji annnaaaaaaaaaaaaaaaaaa
sis gonna say abt ur social service.U r the real boss na..bachelor of social service.atha solla vanthen..i am ur sis anna..we all paasa malarkala

நாகை சிவா said...

நான் எந்த பக்கம் என்பதை அடுத்த பதிவுல சொல்லிடுவீங்கள ???

கொத்ஸ், சி.வி.ஆர்., இளா பதிவுலகை விட்டு போனது... சூப்பர் டச்....

இம்சை அரசி said...

சூப்பர் அண்ணா... எல்லாரையும் இழுத்து விட்டுட்டிங்க போல :)))

இம்சை அரசி said...

// The sky is so high...He is a camera guy...
Feeling no shy...u ask him why...
he is c to the v to the r...yo simply CVR
//

CVR-க்கு பாட்டு சூப்ப்ப்பர்ர்ர்ர்ர்.....


// பாட்டு முடியும் போது.... இந்த மாத பிட் புகைப்படப் போட்டிக்கானத் தலைப்பு கடலை அப்படின்னு க்ளிக்கிட்டு எஸ் ஆகிறார் சிம்பிளி சிவிஆர்...//

கடமை தவறாத CVR... :P

இம்சை அரசி said...

// ஜி அமெரிக்காவில்ல என்னப் பண்ணுறே?"
//

நந்தினி-ன்னு ஒரு பொண்ணை கரெக்ட் பண்ணின கதைதான் எல்லாருக்கும் தெரிஞ்சு போச்சே... உங்களுக்கு இன்னுமா தெரியலை??? ;)

கப்பி பய said...

:)))

பதிவுலக கிரேசி மோகன்.. கிளைமாக்ஸ் நெருங்க நெருங்க பட்டையக் கிளப்புது :))

ILA(a)இளா said...

வரிக்கு வரி ரசிச்ச பதிவு. எல்லாத்துக்கு கமெண்ட் போட்டா பதிவ விட பெரிசா போயிரும் :)
சூப்பரோஒ சூப்பர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்

Anonymous said...

//நந்தினி-ன்னு ஒரு பொண்ணை கரெக்ட் பண்ணின கதைதான் எல்லாருக்கும் தெரிஞ்சு போச்சே... உங்களுக்கு இன்னுமா தெரியலை??? ;)
//

appo geetha anni matter gone ah?che che..enna ji anna ippadi irrukinga :(

இராம்/Raam said...

/"எனக்கு உங்ககிட்டப் புடிச்சதே... நீங்கப் பதிவுலகை விட்டு போறேன் போறேன்னு சொல்லி போடுவீங்களே அந்தக் கடலைத் தான்...அதே மாதிரி கடலை போடுங்க ப்ளீஸ்"///


அல்டிமேட் காமெடி.... இதை படிச்சிட்டு கத்தி சிரிச்சு தொலைச்சிட்டேன்.... :))

Total ROTFl post.... :)

G.Ragavan said...

ம்ம்ம்ம்... அந்த சிவிஆர், கே.ஆர்.எஸ் வர்ர பாட்டுகள் சூப்பரப்பு.

அடுத்தது கிளைமாக்சா? அப்ப வேர்மாக்ஸ், தண்டுமாக்ஸ், இலைமாக்ஸ், பூமாக்ஸ், காய்மாக்ஸ், கனிமாக்ஸ் எல்லாம் எப்ப வரும்?

தேவ் | Dev said...

.:: மை ஃபிரண்ட் ::. said...

//அப்படியே சீன் மாறுகிறது சீன் யு.எஸ்க்கு ஷிப்ட் ஆகிறது.....டிஜி கேம்..செல் கேம்...ஹேண்டி கேம்...எஸ்.எல்.ஆர்... இப்படி பல கேமராக்கள் ஜூம் இன் ஜூம் அவுட் ஆகி ஸ்கீரினை நிறைக்க.... விளக்கு எல்லாம் அணைந்து அணைந்து எரிய.... ஹெவி பி.ஜி.எம் கேட்கிறது...//

இது படிகும்போதே நெனச்சேன்..

//The sky is so high...He is a camera guy...
Feeling no shy...u ask him why...
he is c to the v to the r...yo simply CVR//

இவர்தான்னு. :-))//

.:: மை ஃபிரண்ட் ::. said...
//பாட்டு முடியும் போது.... இந்த மாத பிட் புகைப்படப் போட்டிக்கானத் தலைப்பு கடலை அப்படின்னு க்ளிக்கிட்டு எஸ் ஆகிறார் சிம்பிளி சிவிஆர்...
///

இங்கேயும் தன்னோட கடமையை மறக்காமல் வேலையை ஆரம்பிச்சுட்டார்.. :-))))
//

கடமைத் தவறாத அந்த ஒரே விசயத்தாலேத் தானே அவர் புரட்சி போட்டோகிராபர்ன்னு கூப்பிடுறோம் :)))

தேவ் | Dev said...

//.:: மை ஃபிரண்ட் ::. said...
//இங்கே சிபியும் கனவில் வருகிறார்.. அவருக்கும் ஒரு க்ளோஸ் அப் ஷார்ட் வைக்கிறோம் அவர் காதில் இருந்து புகை கிளம்புகிறது...//

ஐ.. வடிவேலு.. :-))//

//.:: மை ஃபிரண்ட் ::. said...
//விவாஜி - கிளைமாக்ஸ் அடுத்து DONT MISS IT//

ஆஹா.. இதுதான் க்ளைமேக்ஸ்ன்னு சொல்லி யாரோ ஏமாத்திட்டாங்க இந்த சின்ன பிள்ளையை.. :-(//

ஏமாற்றம் எல்லாம் வேணாம் கிளைமாக்ஸ் பார்க்கவும்:)))

தேவ் | Dev said...

அனுசுயா said...
//ஆஹா.. இதுதான் க்ளைமேக்ஸ்ன்னு சொல்லி யாரோ ஏமாத்திட்டாங்க இந்த சின்ன பிள்ளையை.. :-(//

me too My friend :(

கடைசிவரைக்கும் விட மாட்டீங்களாட்ட இருக்குதே கடலைய. கடைசியா விவாஜி கடலை யூனிவர்சிட்டி ஆரம்பிக்க போராரு பாருங்க//

கொள்கையை அவ்வளவு சீக்கிரம் எங்க விவாஜி விட்டுருவாரா :)

தேவ் | Dev said...

//சிங்கம்லே ACE !! said...
பதிவுலகில இருக்க அத்தனை பேருக்கும் ஒரு ரோல் கொடுத்திருக்கீங்க.. CVR, KRS, செந்தழல் கற்பனை சூப்பர்..

வாழ்த்துக்கள்..//

உங்களையும் அடுத்தப் பதிவுல்ல சேத்துருவோம் :-)

தருமி said...

இந்தப் போட்டோ செசன் முழுக்க பேக்கிரவுண்டில் அந்த பொத்தி வச்ச வேர்கடலை மொட்டு ஓடுகிறது..... பாட்டு முடியும் போது.... இந்த மாத பிட் புகைப்படப் போட்டிக்கானத் தலைப்பு கடலை அப்படின்னு க்ளிக்கிட்டு எஸ் ஆகிறார் சிம்பிளி சிவிஆர்...//

SIMPLY SUPERB !!!!!!!!


//தன் பழையப் பதிவுகளை நோண்டி தான் இது வரை பதிவுலகை விட்டு போவதாய் போட்ட 26 சொச்சம் பதிவுகளையும் ...//

:)))))))))

tamil10