Monday, October 29, 2007

தசாவாதாரம் ரீமேக்குக்கு ஏற்ற பதிவர் யாரு?

இன்னும் நீ விவாஜியை விடல்லயான்னு நீங்கக் கேக்கக் கூடாது...

இந்த நகைச்சுவை நக்கல் நையாண்டி தொடருக்குக் கிடைத்த வரவேற்பு என்னை மிகவும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியது அப்படிங்கறதைச் சொல்லிக்குறேன்... முதலில் இந்தத் தொடரின் ஆரம்ப அத்தியாயங்களை நான் சங்கம் பக்கத்தில் தான் எழுதினேன்...பின்னர் சங்கம் மொத்த விடுமுறைக்காக மூடப்பட்டது, நான் அலுவலகம் மாறியது எனப் பலக் காரணங்களால் அதைத் தொடர முடியாத ஒரு சூழ்நிலை ஏற்பட்டது...

அந்த நிலையிலும் நம்ம சங்கத்து சொந்தங்கள் விடாமல் எப்போய்யா விவாஜியை முடிக்கப் போறன்னு கொடுத்த நச்சரிப்பு (உண்மையில் அது தான் என்னைத் தொடர்ந்து எழுத வைத்தது) முக்கியமா இளா, பாலாஜி,ராஜ் ( ராஜ்ங்கற பெயர் யாருக்குச் சொந்தம்ன்னு கண்டுபிடிக்குறவங்கக் கண்டுபிடியுங்க), அப்புறம் ராம் தம்பி ஆகியோர் உசுப்புன உசுப்புல்லத் தான் இந்தத் தொடர் சாத்தியாமாச்சு.

பொதுவா நம்மை யாராவது நக்கல் அடிச்சா நம்ம எல்லாருக்கும் டென்சன் ஆவுறது வழக்கம்..தொடர்ந்து 10 வாரம் நக்கல் நையாண்டி பண்ண விட்டது பெரிய விசயம்ன்னாலும் அதிலும் பெரிய விசயம் .. யோவ் இந்த சிவாஜி ஸ்டில்ல விவாஜி ஸ்டில்லா மாத்திக் கொடுய்யான்னு நான் கேக்க இருக்க வேலைக்கு நடுவுல்ல அதையும் மாத்திக் கொடுத்தது.. விவாஜியின் முதல் ஸ்டில் வடிவமைத்தப் பெருமை நம்ம விவாஜியையேச் சேரும்... தாங்க்ஸ் இளா..

அடுத்து வந்த கிராபிக்ஸ் எல்லாம்...அந்த மொட்டை பாஸ் படங்களை எல்லாம் வடிவமைத்துக் கொடுத்தது... என்னுடைய கல்லூரி நண்பன் மூசா...அவன் இப்போ துபாயிலேத் தான் இருக்கான்..மச்சான் தேங்க்ஸ்டா...

அதுக்கு அப்புறம் இந்தத் தொடரில் நம்ம பதிவுலக மக்கள் பலரது பெயர்களை பயன்படுத்தி இருந்தேன்... சில மக்கள் நன்கு அறிமுகம் ஆனவர்கள் சிலர் அறிமுக இல்லாத நண்பர்கள்..அவங்கள்ல்ல எல்லாரும் இந்தப் பதிவுகளைப் படிச்சாங்களான்னு எனக்குத் தெரியாது ஆனா படிச்சவங்க யாரும் எதுவும் சொல்லல்ல... மாறாக வாழ்த்துன்னாங்க...

நான் குறிப்பிட்டதில் வாழ்த்திய நண்பர்களுக்கும் வாசித்த அன்பர்களுக்கும் என் நன்றிகள்...இந்த இடத்தில் கிடேசன் பார்க் மக்களுக்கு என் நன்றிகள்..அதிலும் குறிப்பாய் நண்பன் குசும்பனுக்கு ஸ்பெஷல் தேங்க்ஸ்.... அவ்வபோது தன் விமர்சனங்களை மறைக்காமல் வைத்து தொடரைச் சிறக்கச் செய்த பெருமை அவருக்கு உண்டு..

காமெடி நாயகனாக தொடர் முழுக்க வலம் வந்த இனிய நண்பர் பதிவுலகத் தளபதி சிபி தன்னை வைத்து நான் பண்ணிய காமெடியை ரசித்து வாழ்த்தியது...எதிர்மறை நாயகனாக தொடரில் ரணகளம் புரிந்த தம்பி பாலாஜியும் தொடரைப் பாராட்டியது விவாஜி தொடர்ல்ல சின்ன ரோல்ன்னாலும் அதை பின்னூட்டங்களிலே தன்னுடைய வழக்கமானப் பாணியில் டெவலப் செய்து அட்டகாசம் புரிந்த தம்பி சிவாவின் பங்களிப்பு என் மனம் தொட்ட விசயங்களாய் சொல்லுவேன்..

விவாஜியில்ல நாலு பாட்டுப் போட்டா நல்லாயிருக்கும்ன்னு நான் சொன்னதும் சேட்ல்ல உடனெ.. இந்தாய்யா பிடி பாட்டை...இந்தப் பாட்டுப் போதுமா...வேற வரி வேணுமாச் சொல்லுய்யா,,,அப்படின்னு பல்லேலக்கா பாட்டுக்கு வரி போட்டுக் கொடுத்த கவிமடத்தின் பிரதம சிஷ்யனும் அருமை நணபருமானப் பெனத்தலாரின் உதவியும் விவாஜியின் வெற்றிக்கு ஒரு காரணம் ஆச்சே.. அவரிடம் கேட்டு வாங்கிய சாகானா மெட்டு வரிகளை இந்தப் பதிவின் கடைசியில் பாருங்கள்....

என்னத் தான் நாம மாங்கு மாங்குன்னு எழுதுன்னாலும் அதை யாராவது படிச்சாத் தானே அதுக்கும் மதிப்பு...அந்த வகையிலே தொடரைத் தொடர்ந்து படிச்சி... சேட்ல்ல அதைப் பற்றிய கருத்துக்களையும் வாழ்த்துக்களையும் தொடர்ந்து முன வைத்த நண்பர்கள் சிவிஆர், மங்களூர் சிவா, ஆகியோர் கொடுத்த உற்சாகமும் விவாஜியைத் தொடர்ந்து எழுத வைத்தன...

பின்னூட்டங்களில் கலகலப்பு மூட்டிய சகோதிரிகள் ஃமை பிரண்ட், துர்கா, அனுசுயா, இம்சை அரசி இவங்களுக்கு நன்றி வைக்கல்லன்னா அந்தக் கொலவெறி படை என்னைச் சும்மா விடாது என்ற காரண்த்தினால் அவங்களுக்கும் நன்றி...

இந்தக் கதை விவாதத்தில் சென்னை ஆல்பர்ட் தியேட்டரில் ஒன்றிணைந்த சங்கத்து மக்களுக்கும் பதிவுலக மக்களுக்கும் இந்தத் தொடரை சமர்ப்பிக்கிறேன்....

இந்த ரீ மேக் காமெடிக் கலாச்சாரத்தைத் தொடர வேண்டும் என்பது என் ஆசை....அடுத்து ரீமேக் ஆகவிருப்பது ... தசாவதாரம்... யாரை வச்சு தசாவதாரம் ரீ மேக் பண்ணலாம் ஐடியாக் கொடுங்களேன்...

பினாத்தலாரின் கவி வரிகள்
"குஜாலா ஹிட்டு ஏறுதோ - உஜாலா நிறம் மாறுதோ
ஒரு விட்ஜட்டு டூப்ளிகேட் ஆகுதோ
அது ஹிட்ரேட்டை கூட்டி போகுதோ அடடா
மொக்கையோ கும்மியோ சூடான இடுகைகளோ
ஓராயிரம் பின்னூட்டம் பார்த்திடும் பூவல்லவா
நூறாயிரம் ஹிட்டையும் தாண்டிடும் பூவல்லவா.."

68 comments:

Baby Pavan said...

நான் தான் பர்ஸ்ட்டு....

இராம்/Raam said...

/இந்தக் கதை விவாதத்தில் சென்னை ஆல்பர்ட் தியேட்டரில் ஒன்றிணைந்த சங்கத்து மக்களுக்கும் பதிவுலக மக்களுக்கும் இந்தத் தொடரை சமர்ப்பிக்கிறேன்..../


ஹி ஹி.... Making of the விவாஜி நான் எழுதுறேன்.. :)

நாகை சிவா said...

ஆல்பர்ட் தியேட்டரில் மட்டும் அல்ல, பதிவர் பட்டறையில் நடந்த விவாத்தையும் சேர்க்கனும்...

நாகை சிவா said...

//"தசாவாதாரம் ரீமேக்குக்கு ஏற்ற பதிவர் யாரு?"//

இது என்ன கேள்வி இது...

நம்ம செட்லே

அழகானவன்

நாகை சிவா said...

அறிவானவன்

நாகை சிவா said...

பெண்களின் உள்ளம் கவர்ந்த கள்வன்

நாகை சிவா said...

தேடல் பசி கொண்டவன்

நாகை சிவா said...

இது போன்ற ஏகப்பட்ட வனை கொண்ட
கயவன் கப்பி தான்

அவனை விட்டுட்டு வேற யாரையும் வச்சு படத்தை எடுத்து விடுவீங்களா...

எடுக்க தான் விட்டு விடுவோமா...

தேவ் | Dev said...

//Baby Pavan said...
நான் தான் பர்ஸ்ட்டு....//

வாங்க வாங்க... நீங்க தான் பர்ஸ்டு.. :)))

தேவ் | Dev said...

//இராம்/Raam said...
/இந்தக் கதை விவாதத்தில் சென்னை ஆல்பர்ட் தியேட்டரில் ஒன்றிணைந்த சங்கத்து மக்களுக்கும் பதிவுலக மக்களுக்கும் இந்தத் தொடரை சமர்ப்பிக்கிறேன்..../


ஹி ஹி.... Making of the விவாஜி நான் எழுதுறேன்.. :)//

எல்லாத்தையும் எழுதணும்.. சிவா கேட்டிருக்கப் படி பதிவர் பட்டறையில நடந்த கதை விவாதத் தொடர்ச்சியையும் புகைப்படத்தோட எழுதணும் !!!

தேவ் | Dev said...

//நாகை சிவா said...
ஆல்பர்ட் தியேட்டரில் மட்டும் அல்ல, பதிவர் பட்டறையில் நடந்த விவாத்தையும் சேர்க்கனும்...//

அதை எல்லாம் நம்ம ராம் தம்பி எழுதறதாச் சொல்லிட்டான்.. மேக்கிங் ரைட்ஸ் அவனுக்குக் கொடுத்தாச்சு !!!

தேவ் | Dev said...

இது என்ன கேள்வி இது...

நம்ம செட்லே

அழகானவன்

அறிவானவன்

பெண்களின் உள்ளம் கவர்ந்த கள்வன்

இது போன்ற ஏகப்பட்ட வனை கொண்ட
கயவன் கப்பி தான்

அவனை விட்டுட்டு வேற யாரையும் வச்சு படத்தை எடுத்து விடுவீங்களா...

எடுக்க தான் விட்டு விடுவோமா...//

அவன் ஆல் ரெடி "அழகிய தமிழ் மகனுக்கு" கமிட் ஆயிட்டான் வில்லன் எல்லாம் கூட படத்துக்கு கமிட் ஆயிட்டாங்கப்பா...அதுவும் நம்ம சங்கம் பிலிம்ஸ் தயாரிப்பு தான் :))

கோபிநாத் said...

ஆஹா ஆஹா தசாவாதாரம், அழகிய தமிழ் மகன்...கலக்குங்கண்ணே..;))

மங்களூர் சிவா said...

இந்த பதிவென்ன 'மேக்கிங் ஆப் விவாஜி'யா.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பொண்ணு எடுத்துச்சே மேக்கிங் ஆப் சிவாஜின்னு அதுமாதிரியா??

மங்களூர் சிவா said...

//
இது என்ன கேள்வி இது...

நம்ம செட்லே

அழகானவன்

அறிவானவன்

பெண்களின் உள்ளம் கவர்ந்த கள்வன்

இது போன்ற ஏகப்பட்ட வனை கொண்ட
கயவன் கப்பி தான்

அவனை விட்டுட்டு வேற யாரையும் வச்சு படத்தை எடுத்து விடுவீங்களா...

எடுக்க தான் விட்டு விடுவோமா...//

புலி கப்பிகூட என்ன பிரச்சனை??

பேசி தீர்த்துக்கங்க!!

அவ்வ்வ்வ்வ்

J K said...

ATM-க்கு வாழ்த்துக்கள் கப்பி...

J K said...

தசாவாதாரத்துக்கு சீக்கிரம் மேக்கப் டெஸ்டெல்லாம் முடிங்கப்பா....

J K said...

//ஹி ஹி.... Making of the விவாஜி நான் எழுதுறேன்.. :)//

வாழ்த்துக்கள் ராயல் அண்ணே!...

ILA(a)இளா said...

பத்துக்குக்கும் மேல பிலாக் வெச்சு இருக்கிற மக்களாஇருந்தா நல்லா இருக்கும். சிபி, கொத்ஸ், பெனாத்தல் அல்லது ஜிரா என்னோட சாய்ஸ்

தருமி said...

அதிலையும் கெஸ்ட் ரோல் உண்டுதானே?!

இலவசக்கொத்தனார் said...

ராயலு, சீக்கிரம் போடப்பா.

குசும்பன் said...

விவாஜியின் முதல் ஸ்டில் வடிவமைத்தப் பெருமை நம்ம விவாஜியையேச் சேரும்... தாங்க்ஸ் இளா..///

அவ்வ்வ்வ்வ்வ் அம்புட்டு நல்லவரா இளா நீங்க:)

குசும்பன் said...

சின்ன ரோல்ன்னாலும் அதை பின்னூட்டங்களிலே தன்னுடைய வழக்கமானப் பாணியில் டெவலப் செய்து அட்டகாசம் புரிந்த தம்பி சிவாவின் பங்களிப்பு என் மனம் தொட்ட விசயங்களாய் சொல்லுவேன்.."

எதுக்கு சின்ன சின்ன ரோல்லில் நடிப்பாங்க அடுத்த படத்தில் ஹீரோ சான்ஸ் தருவீங்க என்ற ஆசையில் தான், அதுவும் இல்லாம கமல் படத்தை ரீமேக் செய்ய போறீங்க கமலுக்கு டூப்பா நடிக்கும் தகுதியும் அழகும் உள்ள ஒரே ஒருவர் நாகை சிவாதான்.

நாகை சிவா

நாகை சிவா

என்று சொல்லிக்கிறேன்!!!

கப்பி பய said...

விவாஜி மாதிரியே தசாவதாரம் ரீமேக்கும் பட்டையைக் கிளப்பட்டும்..அதுக்கு புலி தான் சரியான ஆளு..குசும்பன் சொல்றது தான் கரெக்டு :)))

வெட்டிப்பயல் said...

என்ன இது சின்னப்புள்ள தனமா கேள்வி கேட்டுகிட்டு???

பத்து அவதாரத்துக்கு மேல இருக்குற எங்க தள சிபி தான் அதுக்கு ஹீரோ...

பாயசம் கேட்பவன் said...

//பத்து அவதாரத்துக்கு மேல இருக்குற எங்க தள சிபி தான் அதுக்கு ஹீரோ...//

இதை நான் வழி மொழிகிறேன்!

பக்கத்து இலைக்காரன் said...

யோவ் வெட்டி!

ஏன்யா இந்த கொலைவெறி!

வாசகன் said...

சீக்கிரம் போடுங்க மேக்கிங் ஆப்பு விவாஜி !

ஆர்வமா இருக்கேன்!

முத்து வீரா said...

//அதுக்கு புலி தான் சரியான ஆளு..குசும்பன் சொல்றது தான் கரெக்டு :)))
//

கப்பியார் சொல்றதுதான் கரெக்ட்! கப்பியாரையே ஹீரோவா போடலாம்!

கைப்புள்ளை said...

நான் ஒருத்தன் இங்கே எதுக்கு இருக்கேன்! நீங்க பாட்டுக்கு சண்டை போட்டுக்குறீங்க!

நான் முடிவு பண்ணிச் சொல்லுவேன்!

சிபாரிசு said...

//தசாவாதாரத்துக்கு சீக்கிரம் மேக்கப் டெஸ்டெல்லாம் முடிங்கப்பா....//

ஜேகே வுக்கு வில்லன் ரோலெல்லாம் கூட வேண்டாம்!

சின்னதா ஒரு குணசித்திர வேடம் கொடுத்தா கூட போதும்!

தேவ் said...

ஃப்ரீ டைம்லே கொஞ்சம் கால் ஷீட் தரேன்!

என்னையவே ஹீரோவா போடுங்க!

லொள்ளுப் பாண்டி said...

//நான் ஒருத்தன் இங்கே எதுக்கு இருக்கேன்! நீங்க பாட்டுக்கு சண்டை போட்டுக்குறீங்க!
//

ம்! இன்னும் என்னப்பா வேணும்! தலையே சொல்லிட்டாரு! அவரு எதுக்கு இருக்காரு!

அவரையே ஹீரோவா போட்டுடலாம்!

செந்தழல் ரவி said...

எந்தப் பஞ்சாயத்தா இருந்தாலும் நான் தான் தீர்த்து வைப்பேன்!

இப்ப என்ன பிரச்சினை! ஹீரோ வேணும் அவ்வளவுதானே!

சரி! போனாப் போவுது! நானே அந்த ரோலைச் செஞ்சிடறேன்!

செந்தழல் ரவி ரசிகர் மன்றம்,
குசும்புப் பிரிவு

கோவி.கண்ணன் said...

"தசாவாதாரம் ரீமேக்குக்கு ஏற்ற பதிவர் யாரு?"//

தேவ்,

எட்டு மாதத்திற்கு முன்பே கதை திரைகதை வசனம் எல்லாம் ரெடியாச்சு
பகுதி 1*/
பகுதி 2*/
பகுதி 3*/
பகுதி 4*/

என்னோட கதையைத்தான் படமாக எடுத்திருக்காங்க. நான் கேஸ் போடப் போகிறேன்
:)

OSAI Chella said...

ha ha, great serial posts. some how i loved the whole serial... but didnt post my comments!lol! Cheers! En choice CVR thaan hero unga padathula! aamaa heroin yaarunga? ( vivakaarama kelvi kekkalainna chella vukku head bust aakividumla! Raaam thambi ennqa solraan! appadiye avanukkum oru role kuduthurunga... appadiye enakku oru villain role. Kattaayam Rape seen varumulla unga padathula!?

தேவ் | Dev said...

மங்களூர் சிவா said...
//
இது என்ன கேள்வி இது...

நம்ம செட்லே

அழகானவன்

அறிவானவன்

பெண்களின் உள்ளம் கவர்ந்த கள்வன்

இது போன்ற ஏகப்பட்ட வனை கொண்ட
கயவன் கப்பி தான்

அவனை விட்டுட்டு வேற யாரையும் வச்சு படத்தை எடுத்து விடுவீங்களா...

எடுக்க தான் விட்டு விடுவோமா...//

புலி கப்பிகூட என்ன பிரச்சனை??

பேசி தீர்த்துக்கங்க!!

அவ்வ்வ்வ்வ்//

மங்களூர் சிவா - புலி சிவா புது நாட் ஒண்ணு தாட்டா ஓடுது ராசா... டெவலப் பண்ணிருவோமா :-)

தேவ் | Dev said...

//மங்களூர் சிவா said...
இந்த பதிவென்ன 'மேக்கிங் ஆப் விவாஜி'யா.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பொண்ணு எடுத்துச்சே மேக்கிங் ஆப் சிவாஜின்னு அதுமாதிரியா??//

சிவா அந்த வேலையை நம்ம ராம் பண்ணப் போறார் வெயிட் அன்ட் சீ.. டோன்ட் மிஸ் இட் :-)

தேவ் | Dev said...

//கோபிநாத் said...
ஆஹா ஆஹா தசாவாதாரம், அழகிய தமிழ் மகன்...கலக்குங்கண்ணே..;))//

கலக்கிருவோம் கோபி கால்ஷீட்டை ரெடியா வச்சிக்கோ:-)

தேவ் | Dev said...

//J K said...
ATM-க்கு வாழ்த்துக்கள் கப்பி...//

வாழ்த்துக்கள் கேட்டக் கப்பி கண்டிப்பா உனக்கும் ஒரு ரோல் கொடுக்கச் சொல்லிட்டார் ஜே.கே :-)

தேவ் | Dev said...

//J K said...
தசாவாதாரத்துக்கு சீக்கிரம் மேக்கப் டெஸ்டெல்லாம் முடிங்கப்பா....//

தீபாவளி முடியட்டும் மேக்கப் போட்டு டெஸ்ட் எல்லாம் பண்ணிருவோம் :-)

தேவ் | Dev said...

//J K said...
//ஹி ஹி.... Making of the விவாஜி நான் எழுதுறேன்.. :)//

வாழ்த்துக்கள் ராயல் அண்ணே!...//

சும்மா வாழ்த்துக்களை அள்ளி விட்டுகிட்டு இருந்தா என்ன அர்த்தம் ஒத்தாசைப் பண்ணுய்யா:-)

மங்களூர் சிவா said...

//
மங்களூர் சிவா - புலி சிவா புது நாட் ஒண்ணு தாட்டா ஓடுது ராசா... டெவலப் பண்ணிருவோமா :-)
//

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்

//
மேக்கிங் ஆப் சிவாஜின்னு அதுமாதிரியா??//

சிவா அந்த வேலையை நம்ம ராம் பண்ணப் போறார் வெயிட் அன்ட் சீ.. டோன்ட் மிஸ் இட் :-)
//

ராம் சீக்கிரம். வெய்ட்டிங்

தேவ் | Dev said...

//ILA(a)இளா said...
பத்துக்குக்கும் மேல பிலாக் வெச்சு இருக்கிற மக்களாஇருந்தா நல்லா இருக்கும். சிபி, கொத்ஸ், பெனாத்தல் அல்லது ஜிரா என்னோட சாய்ஸ்//

கொத்ஸ் ஹாலிவுட்ல்ல பிசி...

ஜி.ரா. சொந்த தயாரிப்புல்ல பிசி

பெனத்தலார் படம் எல்லாம் எடுக்கற மாதிரி இல்ல பாடம் எடுக்கப் போயிட்டார்...சோ அவங்க எல்லாம் கொஞ்சம் கஷ்ட்டம் தான் :-)


சிபி கிட்டப் பேச்சு வார்த்தை நடக்குது... பத்து ரோலுக்கும் பத்து நாயகி வேணுமாம் அதுல்லயும் பத்துப் பேருக்கும் ந வில்ல பேர் ஆரம்பிக்கணும்ன்னு கன்னாபின்னான்னு கண்டிஷன் போடுறார் என்னப் பண்ணலாம் சொல்லுங்க :-)

தேவ் | Dev said...

//தருமி said...
அதிலையும் கெஸ்ட் ரோல் உண்டுதானே?!//

சார் இது என்னக் கேள்வி முக்கியமான ரோலே இருக்கு :-)

தேவ் | Dev said...

தருமி சார் சொல்ல மறந்துட்டேன் மதுரை மீனாட்சி கோயில்ல நீங்க ஏறுர மாதிரி ஒரு சீனும் இருக்கு...:-)

தேவ் | Dev said...

//இலவசக்கொத்தனார் said...
ராயலு, சீக்கிரம் போடப்பா.//

ஆகா தலீவரே உங்க ஆர்வம் ராம் தம்பிக்குப் புரியணுமே :-)

தேவ் | Dev said...

//குசும்பன் said...
விவாஜியின் முதல் ஸ்டில் வடிவமைத்தப் பெருமை நம்ம விவாஜியையேச் சேரும்... தாங்க்ஸ் இளா..///

அவ்வ்வ்வ்வ்வ் அம்புட்டு நல்லவரா இளா நீங்க:)//

அவர் நல்லவர் வல்லவர் அப்படிங்கறது ஊருக்கேத் தெரியுமேங்கண்ணா

தேவ் | Dev said...

//குசும்பன் said...
சின்ன ரோல்ன்னாலும் அதை பின்னூட்டங்களிலே தன்னுடைய வழக்கமானப் பாணியில் டெவலப் செய்து அட்டகாசம் புரிந்த தம்பி சிவாவின் பங்களிப்பு என் மனம் தொட்ட விசயங்களாய் சொல்லுவேன்.."

எதுக்கு சின்ன சின்ன ரோல்லில் நடிப்பாங்க அடுத்த படத்தில் ஹீரோ சான்ஸ் தருவீங்க என்ற ஆசையில் தான், அதுவும் இல்லாம கமல் படத்தை ரீமேக் செய்ய போறீங்க கமலுக்கு டூப்பா நடிக்கும் தகுதியும் அழகும் உள்ள ஒரே ஒருவர் நாகை சிவாதான்.

நாகை சிவா

நாகை சிவா

என்று சொல்லிக்கிறேன்!!!//

சிவா உனக்கு எம்புட்டு சிபாரிசு பாருப்பா

தேவ் | Dev said...

//கப்பி பய said...
விவாஜி மாதிரியே தசாவதாரம் ரீமேக்கும் பட்டையைக் கிளப்பட்டும்..அதுக்கு புலி தான் சரியான ஆளு..குசும்பன் சொல்றது தான் கரெக்டு :)))//

சிவா பலமான சிபாரிசா இருக்கே...அதுவும் நீ சொன்ன அழகானவர்..அறிவாவானவர்..தேடல் உள்ளவர்...கள்வர்..கப்பியாரே சிபாரிசு பண்ணுறாரே :-)

தேவ் | Dev said...

//வெட்டிப்பயல் said...
என்ன இது சின்னப்புள்ள தனமா கேள்வி கேட்டுகிட்டு???

பத்து அவதாரத்துக்கு மேல இருக்குற எங்க தள சிபி தான் அதுக்கு ஹீரோ...//

ரைட் மாப்பி... ஆனா மேல விவாஜிக்குச் சொன்னப் பதிலைப் படிச்சுப் பாரு :-)

தேவ் | Dev said...

//பாயசம் கேட்பவன் said...
//பத்து அவதாரத்துக்கு மேல இருக்குற எங்க தள சிபி தான் அதுக்கு ஹீரோ...//

இதை நான் வழி மொழிகிறேன்!//

பாயாசம் கிடைச்சுதாங்கண்ணா:-)

தேவ் | Dev said...

//பக்கத்து இலைக்காரன் said...
யோவ் வெட்டி!

ஏன்யா இந்த கொலைவெறி!//

அண்ணா அந்த இலைக்காரனுக்கு நீங்க வேண்டியவராண்ணா.. லக்கி வந்து பஞ்சாயத்துப் பண்ணுங்க ப்ளீஸ்

தேவ் | Dev said...

//வாசகன் said...
சீக்கிரம் போடுங்க மேக்கிங் ஆப்பு விவாஜி !

ஆர்வமா இருக்கேன்!//

ஓவர் டூ ராம் :-)

தேவ் | Dev said...

//முத்து வீரா said...
//அதுக்கு புலி தான் சரியான ஆளு..குசும்பன் சொல்றது தான் கரெக்டு :)))
//

கப்பியார் சொல்றதுதான் கரெக்ட்! கப்பியாரையே ஹீரோவா போடலாம்!//

ஆகா கப்பிக்கும் சிவாவுக்கும் இல்ல போட்டி பரபரப்பா இருக்கு :)

தேவ் | Dev said...

//கைப்புள்ளை said...
நான் ஒருத்தன் இங்கே எதுக்கு இருக்கேன்! நீங்க பாட்டுக்கு சண்டை போட்டுக்குறீங்க!

நான் முடிவு பண்ணிச் சொல்லுவேன்!//

ஆகா தல உனக்கு அவதாரம் மட்டும் தானே பிடிக்கும் இது என்னப் புதுசாக் கிளம்பிட்ட?

தேவ் | Dev said...

//சிபாரிசு said...
//தசாவாதாரத்துக்கு சீக்கிரம் மேக்கப் டெஸ்டெல்லாம் முடிங்கப்பா....//

ஜேகே வுக்கு வில்லன் ரோலெல்லாம் கூட வேண்டாம்!

சின்னதா ஒரு குணசித்திர வேடம் கொடுத்தா கூட போதும்!//

இந்தச் சிபாரிசு கண்டிப்பாக ஏற்று கொள்ளப் படும்.

தேவ் | Dev said...

//தேவ் said...
ஃப்ரீ டைம்லே கொஞ்சம் கால் ஷீட் தரேன்!

என்னையவே ஹீரோவா போடுங்க!//

அட பாவிகளா எனக்குத் தெரியாம என் சவுண்ட் எனக்கேவா !!!!

We The People said...

//தசாவாதாரம் ரீமேக்குக்கு ஏற்ற பதிவர் யாரு?//

ஏங்க உங்க சங்கத்து ஆளுங்களையே போட்டா எப்படி, கொஞ்சம் கூட Relevantஆ உள்ள டோண்டு, லக்கி போன்ற தசாவதார பதிவர்களை வைத்து எடுங்கப்ப்பா ...

:)))))))))

தேவ் | Dev said...

//லொள்ளுப் பாண்டி said...
//நான் ஒருத்தன் இங்கே எதுக்கு இருக்கேன்! நீங்க பாட்டுக்கு சண்டை போட்டுக்குறீங்க!
//

ம்! இன்னும் என்னப்பா வேணும்! தலையே சொல்லிட்டாரு! அவரு எதுக்கு இருக்காரு!

அவரையே ஹீரோவா போட்டுடலாம்!//

அவரு இப்போ இந்திரலோகத்துல்ல தமிழ்செல்வியோட ஒரே பிசிப்பா

தேவ் | Dev said...

//செந்தழல் ரவி said...
எந்தப் பஞ்சாயத்தா இருந்தாலும் நான் தான் தீர்த்து வைப்பேன்!

இப்ப என்ன பிரச்சினை! ஹீரோ வேணும் அவ்வளவுதானே!

சரி! போனாப் போவுது! நானே அந்த ரோலைச் செஞ்சிடறேன்!

செந்தழல் ரவி ரசிகர் மன்றம்,
குசும்புப் பிரிவு//

ரவி கெட்டப்புல்லயும் கிளம்பியாச்சா :-)

தேவ் | Dev said...

//கோவி.கண்ணன் said...
"தசாவாதாரம் ரீமேக்குக்கு ஏற்ற பதிவர் யாரு?"//

தேவ்,

எட்டு மாதத்திற்கு முன்பே கதை திரைகதை வசனம் எல்லாம் ரெடியாச்சு
பகுதி 1*/
பகுதி 2*/
பகுதி 3*/
பகுதி 4*/

என்னோட கதையைத்தான் படமாக எடுத்திருக்காங்க. நான் கேஸ் போடப் போகிறேன்
:)//

பாத்து கோவியாரே..ஏற்கனவே இப்படி ஒருத்தர் சொல்லி இப்போ பயங்கர மிரட்டல்ல சிக்கியிருக்காராம்... உசாராக் கேஸ் போடுங்க... ரீமேக்குக்கு நீங்க கேஸ் போட முடியாதே..ஏன்னா அதுல்ல தான் கதையே இருக்காது

தேவ் | Dev said...

//OSAI Chella said...
ha ha, great serial posts. some how i loved the whole serial... but didnt post my comments!lol! Cheers! En choice CVR thaan hero unga padathula! aamaa heroin yaarunga? ( vivakaarama kelvi kekkalainna chella vukku head bust aakividumla! Raaam thambi ennqa solraan! appadiye avanukkum oru role kuduthurunga... appadiye enakku oru villain role. Kattaayam Rape seen varumulla unga padathula!?//

Thanks Chella.

CVR already committed as camera man for dasavatharaam:-)

Raam thambikku illatha roleaa

Villain role ungalluku koduthruvom.. aanaa namma pathivu ellaam comedyaa thaan varuvaanga..comedy villain role okvaa MR RADHA paaniyileey !!!

தேவ் | Dev said...

//மங்களூர் சிவா said...
//
மங்களூர் சிவா - புலி சிவா புது நாட் ஒண்ணு தாட்டா ஓடுது ராசா... டெவலப் பண்ணிருவோமா :-)
//

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்

//

மேக்கிங் ஆப் சிவாஜின்னு அதுமாதிரியா??//

சிவா அந்த வேலையை நம்ம ராம் பண்ணப் போறார் வெயிட் அன்ட் சீ.. டோன்ட் மிஸ் இட் :-)
//

ராம் சீக்கிரம். வெய்ட்டிங்//

சிவா அழக் கூடாது... ஷூட்டீங் கிளம்பணும்ல்ல:-)

தேவ் | Dev said...

//We The People said...
//தசாவாதாரம் ரீமேக்குக்கு ஏற்ற பதிவர் யாரு?//

ஏங்க உங்க சங்கத்து ஆளுங்களையே போட்டா எப்படி, கொஞ்சம் கூட Relevantஆ உள்ள டோண்டு, லக்கி போன்ற தசாவதார பதிவர்களை வைத்து எடுங்கப்ப்பா ...

:)))))))))//

வாங்க ஜெய், லக்கிக்கு அருமையானக் கதை இருக்கு ஆனா ஒத்துக்குவாராத் தெரியல்ல...

எல்லாருக்கும் ஏத்த ரோல் வந்தாக் கண்டிப்பா அவங்களைப் போட்டு கண்டிப்பா பதிவு போடுவோம்...

காபி ஷாப் சம்பந்தமானப் ரீமேக்ன்னா கண்டிப்பா நீங்கத் தான் ஹீரோ :-)

We The People said...

//காபி ஷாப் சம்பந்தமானப் ரீமேக்ன்னா கண்டிப்பா நீங்கத் தான் ஹீரோ :-)//

ஏங்க என்னை வம்புக்கு இழுக்கறீங்க!!! ஏதோ நீங்க கேட்டீங்களேன்னு ஒரு ஐடியா தந்தேன் அதுக்காக என்னை வெச்சு "நாயர் ஷாப்"ன்னு படம் எடுத்துடுவீங்க போல இருக்கே :))

We The People said...

//லக்கிக்கு அருமையானக் கதை இருக்கு ஆனா ஒத்துக்குவாராத் தெரியல்ல...//

பாரதிராஜவின் "என் உயிர் தோழன்" தானே ;)

Anonymous said...

tibia money tibia gold tibia item runescape money runescape gold tibia money tibia gold runescape gold runescape accounts tibia gold tibia money runescape money runescape gp buy runescape gold tibia gold tibia item buy runescape money runescape gold runescape items tibia money tibia gold

tamil10