Thursday, October 11, 2007

சங்கம் வழங்கும் விவாஜி - 8

விவாஜியை அந்த ப்ரவுசிங் சென்டர் மாடியில் கடலை வியாபாரி வேடத்தில் சந்திக்கிறார் சிபி.

"சிபி... இந்த இடம் சேப் தானே....?"

"கவலைப் படாதே விவாஜி... டோட்டலி சேப்.. ஜே.கே எங்க ஊர் பையன்..அவன் நடத்துற ப்ரவுசிங் சென்டர் இது...இங்கே அவ்வளவு சுலபத்தில்ல யாரும் ஐபி எல்லாம் ட்ராக் பண்ணமுடியாது... நீ உன் இஷ்ட்டத்துக்கு யார் கூட வேணுமோ எத்தனை ஐடி வேணும்ன்னாலும் வச்சு சேட் பண்ணலாம்...பின்னூட்டம் போடலாம்.. பின்னி எடுக்கலாம்.. இப்போத் தான் வெட்டியோட எல்லா ஐடியும் வேற உன் கைக்கு வந்துருச்சே... இனி உன் கடலைக் கனவு நனவாகிடும் விவாஜி... நனவாகிடும்..."

"இல்ல சிபி... தமிழ்நாட்டுல்ல மட்டும் இவ்வளவு கும்மி பதிவர்கள் மொக்கப் பதிவர்கள்ன்னு விடிய விடிய பதிவுகள்ல்ல கும்மி அடிச்சா... சிங்கப்பூர்... மலேசியா...அமெரிக்கா...அப்படின்னு ஒலகம் முழுக்க எத்தனை கும்மி பதிவர்கள் இருப்பாங்க..."

"விவாஜி துபாயை விட்டுட்டீயே...அங்கேத் தான் கும்மி டீமே இருக்கு.."

"ம்ம்ம் ஒரு பதிவர் கிட்டயே இத்தனைப் பதிவு.. இத்தனை ஐடி... இத்தனை ஆன்லைன் காண்டக்ட்ன்னு இருந்தா... இந்த மொத்தக் கும்ம்பி கேங்கையும் புடிச்சா எத்தனைப் பதிவு எத்தனைஐடி சிக்கும்...."

"விவாஜி நீ என் அடிமடியிலே கைவைக்குறீயே (மனசுக்குள் சிபி முனங்குகிறார்) சரி விவாஜி நீ என்னச் சொல்ல வர்ற?"

"நூறு இருநூறுன்னு இருந்த கும்மி இன்னிக்கு ஆயிரம் இரண்டாயிரம்ன்னு எங்கேயோப் போயிட்டு இருக்கு...கும்மி அடிக்கிறவங்க இன்னும் கும்மி அடிச்சிகிட்டே இருக்காங்க...ஒரு பின்னூட்டம் கூட கிடைக்காம சிங்கி அடிக்கிறவங்க சிங்கி அடிச்சிட்டேஇருக்காங்க...

THE GUMMIS GET GUMMIER..and the SINGIES GET SINGIER.....

"தமிழ்ல்ல பின்னூட்டங்களுக்குப் பிரச்சனை இல்ல சிபி... பின்னூட்டங்கள் எல்லாம் ஒரே இடத்துல்ல கும்மிங்கற பெயர்ல்ல போய் நிக்குது..." விவாஜி சிரியசாப் பேசிக் கொண்டே போகிறார்.

"நீ என்னப் பண்ணப் போற விவாஜி?"

"இதோ நாம கைப்பற்றுன எல்லா ஐடியையும் அமெரிக்காவுல்ல இருக்க என் நண்பர்கள் கிட்ட கொடுத்து அப்படியே உலகம் பூரா இருக்க அவஙக் நண்பர்கள்கிட்ட கொடுத்து அங்கங்கே இருந்து என் பதிவுல்ல பின்னூட்டம் போடச் சொல்லி சொல்லப் போறேன்..."

"எதுக்கு விவாஜி?"

"அப்படி பண்ணா எனக்கு நானே பின்னூட்டம் போட்டேன்னு யாரும் சொல்லமுடியாது இல்ல.."

"விவாஜி எங்கேயோ போயிட்டியே"

"இப்போ நான் துபாய் போறேன் சிபி..."

"நான் வர்றல்ல"

"பரவாயில்ல.. என் உதவிக்கு நயன் தாரா வர்றாங்க.. நீங்க இங்கே என் தகவலுக்குக் காத்திருங்க..."

"விவாஜி கிடைக்குற கேப்புல்ல எல்லாம் என் ஹோப்புக்கு ஆப் வைக்குறீயே...."சிபி கண் கலங்குகிறார்.

அப்படியே கட் பண்ணி பிளைட் காட்டுறோம்...பிளைட் துபாய் ஏர்போர்ட் போய் சேருது... அங்கே நம்ம கிடேசன் பார்க் மக்கள் விவாஜியை மீட் பண்ண வர்றாங்க அவங்க கிட்ட விவாஜி பேசுறதை மியூசிக்கோடு காட்டுறோம்...

விவாஜி கூட குசும்பன், மின்னுது மின்னல், கோபி, அய்யனார், அபி அப்பா, எல்லாம் நின்னு போட்டோவுக்கு போஸ் கொடுக்குறாங்க...

அப்படியே சீன் கட் ஆகி மதுரைப் பக்கம் ஒரு குக்கிராமத்திற்கு போவுது... அங்கே ஒரு பெரும் கூட்டம் விவாஜியின் வரவுக்குக் காத்திருக்குது..

விவாஜி ஒரு புல்லட்டில் பறந்து வருகிறார்... கூட்டம் ஓ வெனக் கத்தறாங்க...

அந்த ஊர் ஆல மரத்தடியிலே ஒரு பெரிய வேட்டி கட்டித் தொங்க விட்டிருக்காங்க...அதுக்கு மேல விவாஜி கடலைப் பவுண்டேசன் பதிவர் முன்னேற்ற கழகம் அப்படின்னு போட்டிருக்கு...

விவாஜி வந்து நிற்க.. அந்த வேட்டியில் விவசாயி டாட் காம் தெரிகிறது....
பக்கத்தில் இன்னொரு பதிவு ஓப்பன் ஆகிறது..அதில் எந்த பதிவும் இல்லாமல் காலியாக இருக்கிறது..

"இங்கேப் பாருங்க... நான் சொல்ற படி கேட்டா இப்படி இருக்க உங்கப் பதிவு இப்படி ஆகிடும்..உங்களுக்கு நாங்களே பதிவு போட்டுத் தருவோம்.. அதுக்குப் பின்னூட்டமும் நாங்களேப் போட்டுத் தருவோம்...என்னச் சொல்லுறீங்க... பதிவு மூலமா நீங்க உலகம் முழுக்க கடலைப் போட நாங்க வழி செய்யறோம்"

அப்போது அங்கே தடதடன்னு சவுண்ட் கேக்க ஊரே அதிர நம்ம நாட்டாமை ஸ்யாம் வர்றாரு...

"ஏ நான் தூங்குன நேரமாப் பாத்து என் வேட்டியை அவுத்துட்டு ஓடி வந்தது மட்டுமில்லாம..அந்த வேட்டியை நான் பஞ்சாயத்து பண்ற ஆலமரத்தடிக்கு மேலேயே கட்டி என் ஊர்ல்ல படம் காட்டுறீயா... இந்த நாட்டாமைக்கு உன் படம் புடிக்கல்ல... யாருடா நீ?" ஆவேசமாகக் கத்துகிறார் நாட்டாமை...

"கூல்... அவர் தான் பார்மர் F for FUNNY A for ACTION R for ROWDY M for MASS E for ENTERTAINER R for சிபி சொல்லி முடிக்கும் முன் விவாஜி பாய்ந்து R for ROMANTIC என்று சொல்லிவிட்டு ரொமான்டிக் லுக் ஒன்று கொடுக்கிறார் அதுக்கு க்ளோஸ் அப் வைக்கிறோம்.

நெறுத்துறா உன்ற கிட்ட ஏ.பி.சி.டி....படிக்க வர்றல்லடா இந்த நாட்டாமை..நாயம்டா..நார்மைடா..நாட்டமைடா..தினமும் என்னைக் கவனிடா.. என்று நாட்டாமைக் கண்டப்படி பீல் ஆக...

"நாட்டாமை நோ டென்சன்.. அங்கேப் பாருங்க ஸ்டார் ரூம் இருக்கு.. உங்கப் பிரச்சனை எதுவா இருந்தாலும் அங்கேப் போய் பேசுங்க...அங்கே குசும்பர்ன்னு என் நண்பரும் அவர் நண்பர்களும் உங்களை நல்லாக் கவனிச்சுப்பாங்க...கூடவே சிபியும் வருவார்ன்னு சொல்லி அனுப்புகிறார்"

உள்ளேப் போன நாட்டாமை கண்ணெல்லாம் கலங்கி தலை முடியெல்லாம் நட்டுகிட்டு நிக்க வருகிறார்.

"பார்மர் என்னோட வேட்டி எல்லாம் உங்களுது..எந்த மரம் வேணும்ன்னாலும் கட்டிப் படம் காட்டுங்க..கடலைப் போடுங்க.. ஆனா அந்த ஆளை மட்டும் வச்சு என்னைக் கலாய்க்கச் சொல்லாதீங்க..." நாட்டாமை கைக் காட்டும் இடத்தில் குசும்பன் குறும்பாய் நிற்கிறார்..

"அப்படி என்னங்க கலாய்ச்சார்?" கூட்டத்தில் இருந்து சவுண்ட் வர..

"ஒண்ணுமில்ல பார்மர்..எல்லாம் நம்ம ஸ்டார் ரூம் ரூல்ஸ் படித் தான் நடந்துகிட்டோம்.. நம்ம நாட்டாமை கையிலே ஒரு லேப் டாப் கொடுத்து தினமும் மூணு பதிவு போடச் சொன்னோம்... ஆனா அவர் பதிவு எழுத ஆரம்பிக்கறதுக்கு முன்னாடியே குசும்பன் பின்னூட்டக் கும்மியை ஆரம்பிச்சுட்டார்... அதுல்லயும் நீங்க எழுதப் போகிறது நல்ல பதிவு.. படித்து விட்டு கருத்துச் சொல்கிறேன் அப்படின்னு போட்டக் கமெண்ட் பார்த்து நாட்டாமை அழவே ஆரம்பிச்சுட்டார்... அப்புறம் மலேசியா மை ஃபிரண்டுக்குப் போன் போட்டு அவங்க வேற வந்து மீ த பர்ஸ்ட்டு. மட்டும் சொல்லிட்டுப் போக... பாவம் நாட்டாமை பதிவே எழுதமா.. தமிழ் மணத்துல்ல பின்னூட்டத் திரட்டியிலே அவர் பதிவு வர ஆரம்பிச்சுடுச்சு...." மின்னல் சிரித்துக் கொண்டேச் சொல்ல

"எஸ்.. இது தான்... இப்படித் தான் நடக்கணும் குசும்பா...அளவுக்கு அதிகமாகப் பின்னூட்டம் வாங்குற எல்லாப் பதிவர்களுக்கும் இதே மாதிரி கலாய்ப்பு நடக்கணும்...."

"இப்படி எல்லாம் கலாய்க்க நீங்க யார்? எங்க நாட்டாமைக்கு ஊரெல்லாம் செல்வாக்கு அவர் பதிவு போடப் போறார்ன்னு தெரிஞ்சாலே எல்லாரும் வந்து பின்னூட்டம் போடுவாங்க..இதுன்னாலே உங்களுக்கு என்ன" கூட்டத்தில் முத்துக்காளை மாதிரி ஒருத்தர் கேட்கிறார்.

"அய்யா..உங்க நாட்டாமை மாதிரி ஆளுங்களால நல்ல பதிவு போடுறவங்களுக்குப் பின்னூட்டமே கிடைக்காமப் போற வாய்ப்பு இருக்கு... ஏன் நீயே கூட போடுற பதிவுக்கு பின்னூட்டம் வராமப் போயிடும்...அதான் சொல்லுறேன்... அளவுக்கு மீறி பின்னூட்டம் போட்டா அது தப்புன்னு"

"விவாஜி விவாஜி... எங்கேப் பாத்தாலும் விவாஜி.... சிவாஜி படம் பாக்காத பதிவர் கூட இருக்கலாம் ஆனா விவாஜி படிக்காதப் பதிவரே இல்லன்னு ஊரே பேசுற அளவுக்கு பேமஸ் ஆயிட்டான்... "

"ஆமாங்க வெட்டிகாரு...நான் பாட்டுக்கு எதோ கட் காப்பி பேஸ்ட் பதிவு போட்டு பின்னூட்டத்தை அள்ளிகிட்டு இருந்தேன்..அதுக்கும் ஆப்பு வச்சுட்டான்" ஒரு மொக்கப் பதிவர் பிலீங் விட

"அரசியலுன்னு சொல்லி எல்லாக் கட்சிக்கு ஆதரவா தலா ஒரு பதிவு வச்சு பட்டயக் கிளப்பிகிட்டு இருந்தேன்.. இப்போ எல்லா ஐடியும் அவன் கையிலே...." ஒரு அரசியல் பதிவர் தன் வருத்தத்தைச் சொல்ல...

"பேசாம நீங்க அவனைக் கடலைப் போட விட்டிருக்கலாம்.. இப்போ அவனைச் சீண்டி தமிழ்மணத்துல்ல ஸ்டாராவே ஆக்கிட்டீங்க... ஒரு பெரிய குமபலே அவன் கூட இருக்க.. இப்போ நான் உங்கக் கூட மட்டும் தான் கடலைப் போட முடியும் போலிருக்கு.. அதுக்கும் லாகின் ஐடி வேணும்... எந்த ஐடி ஓப்பன் பண்ணாலும் வந்து கலாய்ச்சே அந்த ஐடி பாஸ்வேர்ட்டைப் புடுங்கிட்டுப் போக கூடவே ஒரு குரூப்பே வ்ச்சிருக்கான்..."

"சும்மா பேசிப் பயன் இல்ல...அய்யா போட்டரலாமா?" புலிக் கேட்க

"ஆமாடா இப்படித் தான் போனத் தடவைக் கேட்டே நானும் கிட்டத் தட்ட அப்படின்னு சொன்னேன்.. நீ என்னப் பண்ண..அவன் கூட போய் உக்காந்து அவனோடு சேந்து முழுசா மூணு மணி நேரம் கடலைப் போட்டுட்டு வந்து போட்டுட்டேன் சொல்லி போனஸ் வேறக் கேட்ட...கொன்னுடுவேன் ராஸ்கல் உன்னை.."

எல்லாரும் மௌனமாக வெட்டிகாரு சொல்கிறார்...

"பொம்மரிலு...போக்கிரி...அத்தடு...ஒக்கடு..."

"என்னங்க ஆச்சி உங்களூக்கு?" புலிக் கேட்க

"அந்த டிவிடி எல்லாம் வேணும்...அதை எல்லாம் பாத்து விவாஜிக்கு ஒரு வழி பண்ண ஐடியா பண்ணப் போறேன்... விவாஜி...ஓதரவா..... நின்னே ஓதரவா....." வெட்டி ஆவேசமாக எழுகிறார்...

"லக்கலக்கலக்கலக்க" அப்படின்னு புலி சவுண்ட் கொடுக்க...

யோவ் அது சந்திரமுகிய்யா... இங்கே நடக்கிறது சிவாஜி உல்ட்டாய்யா குழப்பமா இருங்கய்யா அப்படின்னு அந்த அரசியல் பதிவர் அதிகத்துக்கும் டென்சன் ஆகிறார்...

விவாஜி அடுத்த பகுதியில் முடியும்

30 comments:

இலவசக்கொத்தனார் said...

முடிக்காதே. 10 பாகம் வர வேண்டிய படத்தை 9 பாகங்களில் முடிக்காதே!!! :))

இராம்/Raam said...

சூப்பரு.... :))

வெட்டிப்பயல் said...

பட்டையை கிளப்பறாரு விவாஜி...

ILA(a)இளா said...

//ஆமாடா இப்படித் தான் போனத் தடவைக் கேட்டே நானும் கிட்டத் தட்ட அப்படின்னு சொன்னேன்.. நீ என்னப் பண்ண..அவன் கூட போய் உக்காந்து அவனோடு சேந்து முழுசா மூணு மணி நேரம் கடலைப் போட்டுட்டு வந்து போட்டுட்டேன் சொல்லி போனஸ் வேறக் கேட்ட...கொன்னுடுவேன் ராஸ்கல் உன்னை.."//

இதைப் படிச்சுட்டு என் கிளையண்ட் என்ன பிரச்சினைன்னு கேக்க வந்துட்டாருபா

ILA(a)இளா said...

//ஆமாடா இப்படித் தான் போனத் தடவைக் கேட்டே நானும் கிட்டத் தட்ட அப்படின்னு சொன்னேன்.. நீ என்னப் பண்ண..அவன் கூட போய் உக்காந்து அவனோடு சேந்து முழுசா மூணு மணி நேரம் கடலைப் போட்டுட்டு வந்து போட்டுட்டேன் சொல்லி போனஸ் வேறக் கேட்ட...கொன்னுடுவேன் ராஸ்கல் உன்னை.."//

இதைப் படிச்சுட்டு என் கிளையண்ட் என்ன பிரச்சினைன்னு கேக்க வந்துட்டாருபா

CVR said...

AWESOME!!!
Ultimate ROFL series!!

//THE GUMMIS GET GUMMIER..and the SINGIES GET SINGIER.....///
LOL!!!!!!


Rock on!! B-)

CVR said...

indha thodarin maaperum vetriyai otti anna DEV inrilirndhu "padhivulaga crazy mohan" enru azhaikkappaduvaar!!! :-D

நாகை சிவா said...

ஹஹஹஹஹாஆஆஆஆ...

R - Romantic என்பதை நினைச்சு நினைச்சு சிரிக்கிறேன் சாமிகளா....


நடத்துங்க நடத்துங்க... கச்சேரி களைகட்டுது...

குசும்பன் said...

"THE GUMMIS GET GUMMIER..and the SINGIES GET SINGIER....."

செம காமெடி!!!

குசும்பன் said...

"ஆமாடா இப்படித் தான் போனத் தடவைக் கேட்டே நானும் கிட்டத் தட்ட அப்படின்னு சொன்னேன்.. நீ என்னப் பண்ண..அவன் கூட போய் உக்காந்து அவனோடு சேந்து முழுசா மூணு மணி நேரம் கடலைப் போட்டுட்டு வந்து போட்டுட்டேன் சொல்லி போனஸ் வேறக் கேட்ட...கொன்னுடுவேன் ராஸ்கல் உன்னை.."


புலி அய்யோ அய்யோ உன்னை இப்படி அடிச்சு காயவிட்டு இருக்காரு:))))))))))))))))))

அனுசுயா said...

ஆஹா இவ்ளோ சூப்பரா எப்டிதான் கலாய்க்கறீங்களோ நடத்துங்க நடத்துங்க.
//THE GUMMIS GET GUMMIER..and the SINGIES GET SINGIER//

என்ன ஒரு அருமையான தத்துவம் கிரேட். :)

புதுசா வலைப்பூ ஆரம்பிக்கறவங்க கண்டிப்பா இத படிக்கனும் அப்பதான் ப்ளாக் நிலவரம் தெரியும் அவங்களுக்கு. :)

G.Ragavan said...

விவாஜி என்பதன் பொருள் என்ன? தெள்ளத் தெளிவாச் சொல்றேன் கேட்டுக்கோங்க. வி என்றால் விவா குடித்த என்பதன் சுருக்கம். எவ்வளவு பெரிய கும்பால குடுத்தாலும் சுருக்கக் குடிச்சிருவாருங்குறதால சுருக்கமா வி. வா-ன்னா என்ன? வா என்று அழைப்பது. விவா குடிச்சிட்டு தெம்போட அழைப்பதுன்னு பொருள். அதோட முடியலையே. ஜின்னு ஒரு எழுத்து இருக்கே. பெயரின் முடிவில் வரும் எழுத்துக்கு அவ்வளவு மதிப்பு. ஜில்லென்று ஒரு கடலைக் கடல் அப்படீங்குறதுதான் ஜி. அதுதான் விவாஜி. திரும்பவும் சொல்றேன். விவா குடிச்சிட்டு தெம்போட வந்து ஜில்லென்று கடலை போடுகிறவர். அவர் கிட்ட வெட்டி மோதலாமா?

மங்களூர் சிவா said...

"THE GUMMIS GET GUMMIER..and the SINGIES GET SINGIER....."

wow!!!!!

.:: மை ஃபிரண்ட் ::. said...

இப்பத்தான் 8-வது பாகம் வரை படம் படித்து ரசிச்சேன்.

விவாஜி... வெச்சிட்டியே பஜ்ஜி( ஆப்பு)... இப்படி பண்ணினா நாங்க எங்கே போய் கும்முறதாம்??? :-)

சிங்கம்லே ACE !! said...

சூப்பரா காமெடி.. ரொம்ப நாளா காணாம போன நாட்டாமைய இழுத்து வந்து கலாய்ச்சிருக்கீங்க.. :D :D

தேவ் | Dev said...

//இலவசக்கொத்தனார் said...
முடிக்காதே. 10 பாகம் வர வேண்டிய படத்தை 9 பாகங்களில் முடிக்காதே!!! :))//

தலீவரே படம் எடுக்க ஆரம்பிச்சி மெகா சீரியல் ரேஞ்ச்சுக்கு நம்ம விவாஜி ஓடுதுன்னு மக்கள் பீல் பண்ணக் கூடாது பாருங்க...:)))

தேவ் | Dev said...

//இராம்/Raam said...
சூப்பரு.... :))//

நன்னி ராம் தம்பி

தேவ் | Dev said...

//வெட்டிப்பயல் said...
பட்டையை கிளப்பறாரு விவாஜி...//

தேங்க்யூ வெட்டி மாப்பி சார் :)))

தேவ் | Dev said...

//ILA(a)இளா said...
//ஆமாடா இப்படித் தான் போனத் தடவைக் கேட்டே நானும் கிட்டத் தட்ட அப்படின்னு சொன்னேன்.. நீ என்னப் பண்ண..அவன் கூட போய் உக்காந்து அவனோடு சேந்து முழுசா மூணு மணி நேரம் கடலைப் போட்டுட்டு வந்து போட்டுட்டேன் சொல்லி போனஸ் வேறக் கேட்ட...கொன்னுடுவேன் ராஸ்கல் உன்னை.."//

இதைப் படிச்சுட்டு என் கிளையண்ட் என்ன பிரச்சினைன்னு கேக்க வந்துட்டாருபா//

அமெரிக்காவில்ல ஆல்ரெடி விவாஜி பட்டயக் கிளப்புறார்ன்னு சொல்லுங்க...:))

தேவ் | Dev said...

//AWESOME!!!
Ultimate ROFL series!!

//THE GUMMIS GET GUMMIER..and the SINGIES GET SINGIER.....///
LOL!!!!!!


Rock on!! B-)//

Thanks CVR.. அடுத்தப் பகுதியிலே உங்களுக்கு ஒரு சிறப்பு ரோல் இருக்குங்க.. கெஸ்ட் அப்பியரன்ஸ் :)))

தேவ் | Dev said...

//CVR said...
indha thodarin maaperum vetriyai otti anna DEV inrilirndhu "padhivulaga crazy mohan" enru azhaikkappaduvaar!!! :-D//

உங்க அன்புக்கு வர வர அளவே இல்லாம போயிட்டு இருக்கு என்னாலே அவ்வளவு தான் சொல்லமுடியும் அவ்வ்வ்வ்வ்வ்வ்வ் :)))))

தேவ் | Dev said...

//நாகை சிவா said...
ஹஹஹஹஹாஆஆஆஆ...

R - Romantic என்பதை நினைச்சு நினைச்சு சிரிக்கிறேன் சாமிகளா....


நடத்துங்க நடத்துங்க... கச்சேரி களைகட்டுது...//

நன்றி சிவா.. அடுத்து கண்டிப்பா விவாஜி டிவிடி ரிலீஸ் பண்ணிருவோம் என்ன ஓ.கே தானே

தேவ் | Dev said...

//குசும்பன் said...
"THE GUMMIS GET GUMMIER..and the SINGIES GET SINGIER....."

செம காமெடி!!!//

தாங்க்யூ குசும்பர் :))

தேவ் | Dev said...

//குசும்பன் said...
"ஆமாடா இப்படித் தான் போனத் தடவைக் கேட்டே நானும் கிட்டத் தட்ட அப்படின்னு சொன்னேன்.. நீ என்னப் பண்ண..அவன் கூட போய் உக்காந்து அவனோடு சேந்து முழுசா மூணு மணி நேரம் கடலைப் போட்டுட்டு வந்து போட்டுட்டேன் சொல்லி போனஸ் வேறக் கேட்ட...கொன்னுடுவேன் ராஸ்கல் உன்னை.."


புலி அய்யோ அய்யோ உன்னை இப்படி அடிச்சு காயவிட்டு இருக்காரு:))))))))))))))))))//

நம்ம புலி ஒரு உண்மை கலைஞன் இந்தக் காட்சிக்காக தினமும் நாலு மணி நேரம் கடலைப் போட்டு பிராக்டீஸ் பண்ணிகிட்டு இருக்கார்ன்னா பாருங்களேன் :)))

தேவ் | Dev said...

//அனுசுயா said...
ஆஹா இவ்ளோ சூப்பரா எப்டிதான் கலாய்க்கறீங்களோ நடத்துங்க நடத்துங்க.
//THE GUMMIS GET GUMMIER..and the SINGIES GET SINGIER//

என்ன ஒரு அருமையான தத்துவம் கிரேட். :)

புதுசா வலைப்பூ ஆரம்பிக்கறவங்க கண்டிப்பா இத படிக்கனும் அப்பதான் ப்ளாக் நிலவரம் தெரியும் அவங்களுக்கு. :)//

ஆகா நன்றிங்கோ.. புதுசா வர்ற மக்களும் விவாஜியின் ரசிகர்களாக மாற வழி சொல்லுறீங்களே.. மீண்டும் மீண்டும் நன்றிங்கோ

தேவ் | Dev said...

//G.Ragavan said...
விவாஜி என்பதன் பொருள் என்ன? தெள்ளத் தெளிவாச் சொல்றேன் கேட்டுக்கோங்க. வி என்றால் விவா குடித்த என்பதன் சுருக்கம். எவ்வளவு பெரிய கும்பால குடுத்தாலும் சுருக்கக் குடிச்சிருவாருங்குறதால சுருக்கமா வி. வா-ன்னா என்ன? வா என்று அழைப்பது. விவா குடிச்சிட்டு தெம்போட அழைப்பதுன்னு பொருள். அதோட முடியலையே. ஜின்னு ஒரு எழுத்து இருக்கே. பெயரின் முடிவில் வரும் எழுத்துக்கு அவ்வளவு மதிப்பு. ஜில்லென்று ஒரு கடலைக் கடல் அப்படீங்குறதுதான் ஜி. அதுதான் விவாஜி. திரும்பவும் சொல்றேன். விவா குடிச்சிட்டு தெம்போட வந்து ஜில்லென்று கடலை போடுகிறவர். அவர் கிட்ட வெட்டி மோதலாமா?//

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ் ஜி.ரா... சீயர்ஸ் ..ச்சே டீயர்ஸ் கண்ணு கட்டுதுங்கோ.. எப்படி இப்படி எல்லாம் அசத்துறீங்களே தலைவா

தேவ் | Dev said...

//மங்களூர் சிவா said...
"THE GUMMIS GET GUMMIER..and the SINGIES GET SINGIER....."

wow!!!!!//

வாங்க சிவா.. உங்களைத் தான் ஆளைக் காணுமே.. எல்லாப் பகுதிக்கும் கரெக்ட்டா ஆஜர் ஆகிடுவாரேன்னு தேடிகிட்டு இருந்துட்டேன் .. வந்துட்டீங்க..நன்றி சிவா

தேவ் | Dev said...

//.:: மை ஃபிரண்ட் ::. said...
இப்பத்தான் 8-வது பாகம் வரை படம் படித்து ரசிச்சேன்.

விவாஜி... வெச்சிட்டியே பஜ்ஜி( ஆப்பு)... இப்படி பண்ணினா நாங்க எங்கே போய் கும்முறதாம்??? :-)//

வாம்மா தங்கச்சி.. நீயும் வந்து கதையிலே கலந்துக்கலாம்.. உன் பங்குக்கு விவாஜிக்கு ஒரு ரெண்டு பாட்டு எழுதிக் கொடு...பதிச்சுருவோம் :)))

தேவ் | Dev said...

//சிங்கம்லே ACE !! said...
சூப்பரா காமெடி.. ரொம்ப நாளா காணாம போன நாட்டாமைய இழுத்து வந்து கலாய்ச்சிருக்கீங்க.. :D :D//

வாங்க சிங்கம்.. நம்ம நாட்டாமை இப்போ அரசியல்ல பிசி ஆயிட்டார் போல.. :))))

அவர் எங்கேப் போய் ஒளிஞ்சிகிட்டாலும் பதிவுலகம் அவரை மறக்காதுங்க...

இதன் மூலம் அறிவிப்பது என்னவென்றால் நாட்டாமை எந்த மூலையில் இருந்தாலும் பதிவுலகம் திரும்புமாறு அழைக்கப் படுகிறார்.. அழைக்கப் படுகிறார்... படுகிறார்..

நாட்டாமைய்யா.. ஆலமரம் வாடுது....வெத்தல வதுங்குது.. சுண்ணாம்பு காயுது... வாங்க,,வாங்க... வாங்கிப் போட்டு துப்பிட்டு தீர்ப்புச் சொல்ல வாங்கய்யா

Anonymous said...

tibia money tibia gold tibia item runescape money runescape gold tibia money tibia gold runescape gold runescape accounts tibia gold tibia money runescape money runescape gp buy runescape gold tibia gold tibia item buy runescape money runescape gold runescape items tibia money tibia gold

tamil10