மறுநாள் விவாஜியும் அவர் கூட பெனத்தலார்,கோவியார் மற்றும் கடும் கடுப்போடு சிபி எல்லாரும் டிராக்டரில் நயந்தாரா வீட்டு முன் போய் இறங்குகிறார்கள்.
விவாஜி ஸ்டைலாக் கதவைத் தட்ட கதவைத் திறக்கிறவரைப் பார்த்து கலவரமாகிறார் விவாஜி.
"அண்ணன் எங்கே?" விவாஜி கேட்க
"நான் அண்ணன் இல்ல தம்பி" அவர் சொல்ல.
"ஓ நயனோடத் தம்பியா" அப்படின்னு சிபி கைகுலுக்க கிளம்ப
"இல்ல நயனுக்கு நான் அண்ணன்."
"குழப்பமாச் சொல்லு நீ அண்ணனா? தம்பியா?" விவாஜி விரலைச் சுத்திக் கேக்க..
"நான் அண்ணனா தம்பியாங்கறது இருக்கட்டும்..நீங்க யார்?"
"ஓ நாங்களா நாங்க இன்டர்வியூ பண்ண வந்துருக்கோம்.. உங்க எல்லாரையும் இன்டர்வியூ பண்ணி வேலைக் கொடுக்க வந்துருக்கோம்..வாங்க இன்டர்வியூ பண்ணலாம் வாங்க இன்டர்வியூ பண்ணலாம்" அப்படின்னு விவாஜி கலவர எபெக்ட் கொடுக்க..
"ஆஹா நீங்கத் தான் ஜாப் குரூப்பா.. உங்களால்ல நொந்து தான் ஜொ.பா. அண்ணன் என்னைத் துபாய்ல்ல இருந்து ஓடனே வரச் சொன்னாராமே... அண்ணனைப் பயங்கரமாக் கலாய்ச்சீங்களாமே..எங்கே என்னைக் கலாய்ங்கப் பாக்கலாம்?" அப்படின்னு தம்பி நிக்க...
"ச்சே பார்த்தா பாவமா இருக்கீங்க... அசப்புல்ல பாவனாவுக்கு ஒரு பெரிய தம்பி இருந்தா எப்படி இருப்பானோ அப்படியே இருக்க.. உன்னைப் போய் கலாய்க்கச் சொல்லுரீயேப் போப்பா.." சிபி சொல்லி விட்டு ஜன்னல் வழியா நயன் தெரிகிறாரா என எட்டிப் பார்க்க முயற்சிக்கிறார்.
"ஆகா எங்க அண்ணனை விட என்னை இன்னும் ஓவராக் கலாய்க்கிறீங்களா... போங்கடா" அப்படின்னு கோபத்துல்ல தம்பி கதவைச் சாத்துகிறார்.
செய்வதறியாது தவித்து நிற்கும் விவாஜி அன்ட் கோவை நோக்கி சாந்த முகத்தோடு அந்த மதிப்பிற்குரிய பதிவர் வருகிறார்.
"முருகா..இங்க என்னப் பிரச்சனை.. சொல்லுங்க முருகா" அப்படின்னு கேக்குறார்.. அந்தப் பதிவர் யார்ன்னு நான் சொல்லணுமா?
"சார்.. இவங்களுக்கு வேலைக் கொடுக்கலாம்ன்னு முடிவு பண்ணிட்டேன்...ஆனா இவங்க இன்டர்வியூ பண்ணாம எப்படி வேலைக் கொடுப்பீங்கன்னு கேட்டாங்க சரி...அப்படின்னு எங்க ஆபிஸ் மொத்தமும் கிளம்பி வந்திருக்கோம்.. வாங்க இன்டர்வியூ பண்ணலாம்ன்னா வர மாட்டேங்குறாங்க...இவர் பெனாத்தல் சுரேஷ்.. எங்க ஆபிஸ் சீனியர் மேனேஜர்.. இவர் கோவியார் எங்க ஆபிஸ்ல்ல இன்னொரு சீனியர் மேனேஜர்..."
"ஓ...அப்படியா செய்தி... யோய் ஜொ.பா.... பாருய்யா... உனக்கு வேலை கொடுக்க இல்ல வந்து இருக்கார்.. வெளியே வாய்யா..."
கதவு திறக்கப் பட நேரமாகிறது... நம்ம ஜி.ரா. விவாஜியைப் பார்த்து கேட்கிறார்...
"ஆமா என்ன வேலை கொடுக்கப் போறீய?"
"இது விவசாயம் சம்பந்தப் பட்ட வேலை....கிரவுண்ட் நட் டெக்னாலஜி..." விவாஜி பிஸ்து விட...
"அட விவசாயமா.. நம்ம தாமிரபரணி ஓரமா தூத்துக்குடியிலே பாக்காத விவசாயமா... திருச்செந்தூரானை வணங்கும் எனக்குத் தெரியாத விவசாயமா.. இதுக்குப் போய் அவன் வீட்டுக் கதவைத் தட்டுறீய...பழனியிலே ஒரு ஏக்கர் நஞ்சை... திருப்பரங்குன்றம் பக்கம் ஒரு ஏக்கர் புஞ்சைன்னு என் கிட்ட ரெண்டு ஏக்கர் வாங்க வந்து நம்மளை இன்டர்வியூ பண்ணலாம்... உங்க கிரவுண்ட் டெக்னாலஜியை நான் பண்ணுறேன் உங்களுக்கு..."
ஜி.ரா சொன்னதைக் கேட்டு சிபி நமுட்டுச் சிரிப்பு சிரிச்சுகிட்டு "விவாஜி சார் கிட்ட த் தான் 2 ஏக்கர் இருக்காமே பேசாம உன் கிரவுண்ட நட் டெக்னாலஜி வேலையை சார் கிட்டயே கொடுத்துருவோமா?"
"நோ... நோ.... பயத்தில் விவாஜி அலறிவிட்டு..
ஒரு ஆம்பளை இன்னொரு ஆம்பளைக் கூட கிரவுண்ட் நட்டா... அதர் ஆப்ஷன்ல்ல உங்களுக்கு ஆப் வைக்கிறேன் இருங்க சிபி அப்படின்னு சிபி காதில் மெல்ல சொல்லிட்டு..மறுபடியும் குரல் உயர்த்தி...
"இல்லங்கய்யா முதல்ல அவங்களுக்குத் தான் வேலை தர்றதாச் சொன்னோம்.. சோ அவங்களைத் தான் இன்டர்வியூ பண்ணனும்...மன்னிச்சுருங்க.." மறுபடியும் கதவைத் தட்டுகிறார் விவாஜி. சிபி செமக் கடுப்பில் நிற்கிறார்.
"சரி தம்பி...அங்கேயே போய் இன்டர்வியூ பண்ணுங்க... அவங்க வேலைக்கு ஒத்துக்கல்லன்னு என் கிட்ட வாங்க கிரவுண்ட் நட்டோ போல்ட் நட்டோ ஒரு இறுக்கு இறுக்கிறுவோம்.. நான் இருக்கேன் என் கிட்ட 2 ஏக்கர் இருக்கு மறந்துராதீங்க.. ஒண்ணு நஞ்சை.. இன்னொன்ணு புஞ்சை....."
"ஐயா சரிங்கய்யா" அப்படின்னு விவாஜி சொல்லும் போது... சிபியின் மொபைல் ரிங் ஆகுது...
சிபியின் முகம் மறுமுனையில் இருந்து வந்த செய்தி கேட்டு இறுகுகிறது...
"சிபி என்னாச்சு?" விவாஜி கேட்க...
"விவாஜி நாம மோசம் போயிட்டோம்ப்பா.. மோசம் போயிட்டோம்....." சிபி அழுதுக் கொண்டே சொல்ல..
"சிபி என்னாச்சு சொல்லுங்க அப்படின்னு விவாஜி பயங்கர எமோஷ்னலாக் கேட்க ( இந்த இடத்தில் தியேட்டரே விவாஜி கூட சேர்ந்து எமோஷனல் ஆவுது)
"விவாஜி நாம ஆரம்பிச்ச பிளாக்கை பிளாகர் பீட்டாவுக்கு மாத்திட்டாங்களாம்ப்பா.... நாம் இதுவரைக்கும் போட்ட மொக்க கடலை எல்லாம் இப்போ படிக்கறவங்களுக்கு கட்டம் கட்டமாத் தான் தெரியுதாம்ப்பா... உன்னோட மொத்த உழைப்பும் இப்போ கட்டம் கட்டமாப் போச்சேப்பா"
"என்ன சிபி விளையாடுறாங்களா... அப்படி இப்படி கஷ்ட்டப் பட்டு... என்னவெல்லாமோ பண்ணி ஒரு பிளாக் ஓப்பன் பண்ணா... இப்போ டக்குன்னு பீட்டாவுக்கு மாத்திட்டோம்ன்னா என்ன அர்த்தம்...பேட்டாவால அடிப்பேன்....ஒவ்வொரு விட்ஜட் பண்ணது.. பின்னூட்டம் போட்டது எல்லாம் என்னப் பண்றது...."
"சிபி நீங்க பிளாகருக்கு மெயில் போடுங்க.... கேளுங்க... இது வரைக்கும் போட்ட பதிவு.. பின்னூட்டம் ... சைட் பார்ல்ல பண்ண டெக்ரேட்டிவ் விஜிட்ஸ் எல்லாம் எங்கேப் போச்சுன்னு கேளுங்க..."
"கேட்டேன் விவாஜி... அதுக்கு அவன் நான் பிளாகர் இல்லை.. அதெல்லாம் பழைய கோஷ்ட்டி...இப்போ நான் பீட்டா பிளாகர் புது பார்ட்டி... நிறைய செலவு பண்ணி புது புது பீச்சர் எல்லாம் இன்ட்ரோ பண்ணியிருக்கோம்... நீங்களும் புதுசாத் தான் எல்லாம் பண்ணனும் அப்படின்னு சொல்லுறான்...CO(A)ST OF POLITICS (read with malayalam accent) ஜாஸ்தியாடுச்சுன்னு வேற பஞ்ச் அடிக்கிறான விவாஜி..."
விவாஜி அப்படியே பிலீங்க்கா உட்காருகிறார்.
"அது மட்டுமில்ல விவாஜி.. புது பீட்டா பிளாகருக்கு பாராட்டு எல்லாம் தெரிவிச்சு வெட்டிகாரு உன்னையே கவுக்கணும்ன்னே.. பதிவு எல்லாம் போட்டு மெயில் எல்லாம் அனுப்பியிருக்கார்... எல்லாரையும் பீட்டாவுக்கு மாத்தி உன்னைப் பிளாக்குக்கு டாட்டா காட்ட வைக்கப் போறார் விவாஜி"
அப்போது சல்லென்று கார் ஒன்று வந்து நிற்க அதில் இருந்து வெட்டியும் புலியும் இறங்குறாங்க...
"அய்யோ என்ன விவாஜி இப்படி ஆயிருச்சு...உங்க பிளாக் இப்போ வெறும் கட்டம் கட்டமாத் தான் தெரியுதாம்.. நீங்க ரெக்ரூட்மெண்ட் பண்றேன்னு இங்கே வந்தப்போ எல்லாரும் பீட்டாவுக்கு மாறி உங்களைக் கவுத்துட்டாங்களாமே...இப்போ என்னப் பண்ணப் போறீங்க விவாஜி...."
விவாஜி எழுந்து இடுப்பில் கை வைத்து ஸ்டைல் காட்டுகிறார்...கையில் ஒரு பப்பிள் கம் எடுத்து வானத்தை நோக்கி போடுகிறார்..
"ம்ம் விவாஜி... என்னப் பண்ணப் போறீங்க விவாஜி...செல் பில் ஏறுனாலும் பரவாயில்லன்னு போன்ல்ல கடலைப்போடப் போறீங்களா.. இல்ல சிக்கனமா எஸ்.எம்.எஸ் அனுப்பி வறுக்கப் போறீங்களா..இல்ல இதெல்லாம் வேணாம்ன்னு மறுபடியும் ஆபிஸ்ல்ல ஒழுங்கா வேலைச் செய்யப் போறீங்களா....ஆனா அதுக்கு எல்லாம் முன் அனுபவம் வேணுமே.. உங்களுக்கு அது இல்லையே
நான் ஒரு வேலை சொல்லவா... பேசாம அனானியா மாறி பின்னூட்டம் போடுங்க... பீட்டா பிளாகர்ல்ல நீங்க போடுறதுக்குன்னு நான் ஒரே ஒரு பின்னூட்டம் தர்றேன்.. இதை அப்படியே கட் காப்பி பண்ணி எல்லாருக்கும் போட்டு பொழைச்சுக்கோங்க.....
வெட்டிகாரு தன் லேப் டாப் திறந்து ஒரு பின்னூட்டத்தை விவாஜி மெயில் ஐடிக்கு தட்டுகிறார்...தட்டி விட்டு நக்கல் சிரிப்பு சிரிச்சுட்டு கிளம்புகிறார்.
சிபி கண்டபடி எமோஷ்னல் ஆகி "விவாஜி உனக்கு இந்த பிளாக் கடலை எதுவும் வேணாம் நீ ஊருக்கேப் போயிரு....போயிரு விவாஜி"அப்படின்னு அழுவுறார்.
"நான் போயிட்டா நைசா நயந்தாராவைத் தட்டிக்கலாம்ன்னு கணக்குப் போடுறீயா நான் போக மாட்டேன் சிபி" மனசுக்குள் விவாஜி சொல்லுகிறார்
சிபி நான் முடிவு பண்ணிட்டேன்.. இப்போ கீழே விழுற பப்பிள்கம் உங்க வாயிலே விழுந்தாச் சங்கப் பாதை...என் வாயிலே விழுந்தாச் சுரங்க பாதை...
சரி பப்பிள்கம்மைப் போடு என சிபி வாயைத் திறக்க...
ஏற்கனவே போட்டாச்சு அக்கடச் சூடு...விவாஜி காட்டும் இடத்தில்.. பப்பிள்கம் வானத்தை இடித்து ( கிராபிக்ஸ் தான்) கீழே வேகமா வருகிறது... விவாஜி வாயையும் சிபி வாயையும் எடிடி பண்ணி மாத்தி மாத்திக் காட்டுறோம்...
கடைசியா.. மூடுன வாயை விவாஜி திறக்க... பப்பிள்கம் அவர் வாயில் விழுகிறது..ஒரு கையால் சிபி வாயை மூடும் விவாஜி ஆடியன் ஸ் பார்த்து சொல்லுகிறார்... இனி சுரங்கப் பாதை தான்.. அப்படின்னு
சூவோ மான்க்கோ சூவோ மான்கோ... சூசோசயங்....சூசோயங்க்.. அப்படின்னு பயங்கர பிஜிஎம்.. விவாஜியை போகஸ் பண்ணுறோம்.. பப்பிள்கம் மெல்லும் போது பிரீஸ் பண்ணி இடைவேளை போடுறோம்..
அவுட் ஆப் போகஸ்ல்ல... சிபி தலைக்கு மேல ஒரு வார்த்தை பேச ஒரு வருசம் காத்திருந்தேன்...சாங்க் வரியெல்லாம் ஜம்பல் ஆகி ஓடுது.....
GO GRAB UR POP CORN
33 comments:
ஏம்பா நானும் கதை முச்சூடும் படிக்கிறேன். எஸ்.பி.பி பாடும் இண்ட்ரோ பாட்டு எங்க? நடுவில் தமிழ்க் கலாச்சாரத்தில் வரும் குத்துப்பாட்டு எங்க? அந்த குத்துப் பாட்டுக்கு ஆடப் போறது யாரு? மொத ஹாப்ல அட்லீஸ்ட் ஒரு கனவுப் பாட்டாவது வேண்டாமா?
சங்கப் பாதை.. சுரங்கப் பாதை.. சூப்பரு
மீ த ஃபர்ஸ்டு!
ஹாஹா..... படிச்சிட்டு கண்ணை மூடுனா விஷ்வலா தெரியுது.... :))
ஹா ஹா ஹா சூப்பர் காமெடிங்க. உண்மையிலேயே கலக்கல்தான். படிச்சிட்டு விழுந்து விழுந்து சிரிச்சேன். ஒடம்பெல்லாம் ஒரே அடி.
சூப்பரு!!!
நன்றாக வாய் வலிக்க சிரித்தேன்!!! :-D
//இலவசக்கொத்தனார் said...
ஏம்பா நானும் கதை முச்சூடும் படிக்கிறேன். எஸ்.பி.பி பாடும் இண்ட்ரோ பாட்டு எங்க? நடுவில் தமிழ்க் கலாச்சாரத்தில் வரும் குத்துப்பாட்டு எங்க? அந்த குத்துப் பாட்டுக்கு ஆடப் போறது யாரு? மொத ஹாப்ல அட்லீஸ்ட் ஒரு கனவுப் பாட்டாவது வேண்டாமா?//
தலீவரே.. பாட்டுக்கு மிசீக் கம்போசிங் இன்னும் முடியல்ல தலீவரே...மீசிக்கு முன்னாடி பாட்டுக் கட்டச் சொல்லி நம்ம வலையுலக ஆல் கவிஞர்ஸ் அசோசியேஷ்னுக்கு மனு வேற கொடுத்துருக்கோம்... துபாய கவி மடத்துல்ல வேற சொல்லி வச்சிருக்கோம்.. அப்புறம் பாட்டுக்கு செட் போட ஒரு பக்கம் ஆர்ட் டீம் உழைச்சுக்குனுகீது... நம்ம கேமிராக் கவிஞர் சிவிஆர் வேற அமெரிக்கால்ல நல்ல லோகேசன் பார்த்துச் சொல்லுறேன்னு சொல்லியிருக்கார்.. அதான் டிலே WAITESS pls
//ILA(a)இளா said...
சங்கப் பாதை.. சுரங்கப் பாதை.. சூப்பரு//
நம்ம கப்பி உருகுவே ஸ்டைல்ல சுரங்கப் பாதை செட்டிங் போட்டுக் கொடுக்கப் போறார் அதுல்ல தான் பைட் எல்லாம் எடுக்கப் போறோம்.
//நாமக்கல் சிபி said...
மீ த ஃபர்ஸ்டு!//
வாங்க வாங்க.. ஆனா பர்ஸ்ட் ஜஸ்ட் மிஸ் நம்ம தலைவர் கொத்ஸ் அந்த பெருமையைத் தட்டிட்டாரு...
NEXT TIME Be the firstu ok
//இராம்/Raam said...
ஹாஹா..... படிச்சிட்டு கண்ணை மூடுனா விஷ்வலா தெரியுது.... :))//
ஆல்பட் தியேட்டர்ல்ல நம்ம எல்லாம் குரூப்பா உக்காந்து விசுவலாப் பார்த்து யோசிச்ச மேட்டர் தானே மக்கா :))))
//ஹா ஹா ஹா சூப்பர் காமெடிங்க. உண்மையிலேயே கலக்கல்தான். படிச்சிட்டு விழுந்து விழுந்து சிரிச்சேன். ஒடம்பெல்லாம் ஒரே அடி.//
நன்றி நன்றி ஜி.ரா..
//CVR said...
சூப்பரு!!!
நன்றாக வாய் வலிக்க சிரித்தேன்!!! :-D//
நன்றி சிவிஆர்
அட்டகாசம். கலக்கிட்டீங்க.
//என் கிட்ட 2 ஏக்கர் இருக்கு மறந்துராதீங்க.. ஒண்ணு நஞ்சை.. இன்னொன்ணு புஞ்சை....."//
முத்திரை வசனம், போங்க!
Super.Keep continue
அட நம்ம ஜிராவயும் விடலயா? முருகா காப்பாத்துப்பா :)
விவாஜி சுரங்க பாதைல எப்போ விழ போறாருன்னு வெயிட்டிங் :)
கடைசியா இருக்கறது என்ன பாட்டு என்ன மொழிங்க ஒன்னியும் புரியல :(
தேவ் ரொம்ப கலக்கலா எழுத்ட்டு வற்றீங்க
//
ஏம்பா நானும் கதை முச்சூடும் படிக்கிறேன். எஸ்.பி.பி பாடும் இண்ட்ரோ பாட்டு எங்க? நடுவில் தமிழ்க் கலாச்சாரத்தில் வரும் குத்துப்பாட்டு எங்க? அந்த குத்துப் பாட்டுக்கு ஆடப் போறது யாரு? மொத ஹாப்ல அட்லீஸ்ட் ஒரு கனவுப் பாட்டாவது வேண்டாமா?
//
அடடா அடடா புல்லரிக்க வெக்கறீங்கன்னே!!
:))good one..but i prefer u come into action than direction.Because neegalum another super hero :P
anna neega next story la varanum,if not periya sandai pooduven.sollithen...no excuses.
காலேஜு ரோடும் கடலை வறுத்ததும் மறந்து போகுமா..
ஆஹா தூதுவிட்ட நண்பனின் தொம்சமான முதுகும் ஆறிப்போகுமா?
அந்தக் குட்டிச்சுவரு.. காலங்காலை பஸ் ஸ்டேண்டு..
போலீஸ் துரத்திய ரோடு.. அண்ணங்காரன் அடிச்ச மேடு..
லுக்கு லுக்கு லுக்கு விட்ட ஸ்கூல்வாசல்
கல்லு கல்லு கல்லு தப்பிச்ச காலேஜ்..
பல்லு பல்லு பல்லு உடைச்ச பார்ட்டிங்க
கிள்ளு கிள்ளு கிள்ளு கிள்ளின டீச்சர்கள்..
தள்ளு தள்ளு தள்ளு தள்ளிய நண்பர்கள்..
ஜொள்ளு ஜொள்ளு ஜொள்ளு விட்ட காலங்கள்..
மனதில் நிற்கிற எல்லாம் ஜொள் ஜொள் ஜொள்..
கடலேலக்கா கடலேலக்கா காலேஜுக்கா ஸ்கூலுக்கா ஆன்ஸைட்டுக்கா வேலைக்கா பெஞ்சுக்கா!
கடலேலக்கா கடலேலக்கா மகாப்ஸுக்கா ஈஸிஆருக்கா டிஸ்கோவுக்கா மாயாஜாலுக்கா பீச்சுக்கா..
காலேஜு ரோடும்..
கவிமடம் சார்பாக பினாத்தலார்
:)))
தெய்வமே...எங்கேயோ போயிட்டீங்க :))
சூப்பர்...
//"நான் போயிட்டா நைசா நயந்தாராவைத் தட்டிக்கலாம்ன்னு கணக்குப் போடுறீயா நான் போக மாட்டேன் சிபி" மனசுக்குள் விவாஜி சொல்லுகிறார்//
லக லக லக லக லக லக லக லக லக
//முகவை மைந்தன் said...
அட்டகாசம். கலக்கிட்டீங்க.
//என் கிட்ட 2 ஏக்கர் இருக்கு மறந்துராதீங்க.. ஒண்ணு நஞ்சை.. இன்னொன்ணு புஞ்சை....."//
முத்திரை வசனம், போங்க!//
வாங்க முகவை மைந்தன் உங்கள் முதல் வருகை நல்வருகை ஆகுக.. கருத்துக்கு நன்றி.. தொடர்ந்து நம்ம விவாஜியை ரசிக்குமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறேன்.
//சதுக்க பூதம் said...
Super.Keep continue//
வாங்க சதுக்கபூதம்
தாங்க்யூ,,, தொடர்ந்து வந்து விவாஜியை ரசியுங்கள்
//அனுசுயா said...
அட நம்ம ஜிராவயும் விடலயா? முருகா காப்பாத்துப்பா :)
விவாஜி சுரங்க பாதைல எப்போ விழ போறாருன்னு வெயிட்டிங் :)//
வாங்க அனுசுயா,
என்ன இப்படி சொல்லிட்டீங்க.. நம்ம விவாஜி எல்லாம் விழ மாட்டார்.. அவர் ஸ்ட்ராங்க்கா நிப்பார் :)))
//அனுசுயா said...
கடைசியா இருக்கறது என்ன பாட்டு என்ன மொழிங்க ஒன்னியும் புரியல :(//
அது விவாஜி தீம் மியூசிக்ங்க :))
//தேவ் ரொம்ப கலக்கலா எழுத்ட்டு வற்றீங்க
//
ஏம்பா நானும் கதை முச்சூடும் படிக்கிறேன். எஸ்.பி.பி பாடும் இண்ட்ரோ பாட்டு எங்க? நடுவில் தமிழ்க் கலாச்சாரத்தில் வரும் குத்துப்பாட்டு எங்க? அந்த குத்துப் பாட்டுக்கு ஆடப் போறது யாரு? மொத ஹாப்ல அட்லீஸ்ட் ஒரு கனவுப் பாட்டாவது வேண்டாமா?
//
அடடா அடடா புல்லரிக்க வெக்கறீங்கன்னே!!//
நன்றி சிவா
//துர்கா|thurgah said...
:))good one..but i prefer u come into action than direction.Because neegalum another super hero :P
anna neega next story la varanum,if not periya sandai pooduven.sollithen...no excuses.//
நன்றி துர்கா:))
அடுத்த படம் அபி அப்பா இல்ல ஹிரோவா புக் ஆகி இருக்காரு :)
//பினாத்தல் சுரேஷ் said...
காலேஜு ரோடும் கடலை வறுத்ததும் மறந்து போகுமா..
ஆஹா தூதுவிட்ட நண்பனின் தொம்சமான முதுகும் ஆறிப்போகுமா?
அந்தக் குட்டிச்சுவரு.. காலங்காலை பஸ் ஸ்டேண்டு..
போலீஸ் துரத்திய ரோடு.. அண்ணங்காரன் அடிச்ச மேடு..
லுக்கு லுக்கு லுக்கு விட்ட ஸ்கூல்வாசல்
கல்லு கல்லு கல்லு தப்பிச்ச காலேஜ்..
பல்லு பல்லு பல்லு உடைச்ச பார்ட்டிங்க
கிள்ளு கிள்ளு கிள்ளு கிள்ளின டீச்சர்கள்..
தள்ளு தள்ளு தள்ளு தள்ளிய நண்பர்கள்..
ஜொள்ளு ஜொள்ளு ஜொள்ளு விட்ட காலங்கள்..
மனதில் நிற்கிற எல்லாம் ஜொள் ஜொள் ஜொள்..
கடலேலக்கா கடலேலக்கா காலேஜுக்கா ஸ்கூலுக்கா ஆன்ஸைட்டுக்கா வேலைக்கா பெஞ்சுக்கா!
கடலேலக்கா கடலேலக்கா மகாப்ஸுக்கா ஈஸிஆருக்கா டிஸ்கோவுக்கா மாயாஜாலுக்கா பீச்சுக்கா..
காலேஜு ரோடும்..
கவிமடம் சார்பாக பினாத்தலார்//
கவிமடத்திற்கு என் சிரம் தாழ்ந்த நன்றிகள் பினாத்தலாரே.. அருமை அருமை.. பின்னிட்டீங்க :))
அசத்தல்....
அடுத்த பதிவுக்கு ஜுட்
//நாகை சிவா said...
அசத்தல்....
அடுத்த பதிவுக்கு ஜுட்//
நன்றி சிவா
//கப்பி பய said...
:)))
தெய்வமே...எங்கேயோ போயிட்டீங்க :))//
கடமை ஆற்றும் போது நோ சில்லி பீலிங்க்ஸ் கப்பி மை பாய்
//J K said...
சூப்பர்...
//"நான் போயிட்டா நைசா நயந்தாராவைத் தட்டிக்கலாம்ன்னு கணக்குப் போடுறீயா நான் போக மாட்டேன் சிபி" மனசுக்குள் விவாஜி சொல்லுகிறார்//
வாய்யா ஜே,கே... ம்ம்ம் கிடைச்ச கேப்புல்ல நீங்களும் நம்ம சிபிக்கு கும்மி கொட்டுறீங்களா.. கலக்குங்க
லக லக லக லக லக லக லக லக லக//
//ஆல்பட் தியேட்டர்ல்ல நம்ம எல்லாம் குரூப்பா உக்காந்து விசுவலாப் பார்த்து யோசிச்ச மேட்டர் தானே மக்கா ..//
எல்லாரும் ரூம் போட்டுதான் யோசிக்கிறாங்க. நீங்க ஒரு படி மேலே .. இல்ல ... அதுக்கும் மேலே எங்கேயோ போய்ட்டீங்க
Post a Comment