அவ்வையார் ஆரம்ப பாடசாலைக்கு முன் விவாஜியின் டிராக்டர் வந்து நிற்கிறது... சிபி டிராக்டரில் இருந்து குதித்து இறங்குகிறார்.
"ஏய் அனானி என்ன மேன் இது... ரெக்ரூட்மென்ட் சொல்லி இங்கே கூட்டிட்டு வந்துருக்க...எல்லாம் சின்னக் குழந்தைங்கடா...வாட் டூ யூ திங்க்" விவாஜி பதறுகிறார்.
"விவாஜி வாசல்ல பாரு.. நல்லா பாரு.."
சிபி கைக்காட்டும் இடத்தில் ஒரு பாட்டி கடலை, பட்டாணி, சுண்டல், மாங்கா, எல்லாம் வித்துகிட்டு இருக்கு..
"பார்த்தீயா.. கை நிறைய சுண்டல்.. நீ கேட்ட கடலைப் பார்ட்டீ..என்னப் பார்ட்டீ இப்போ பாட்டியாயிடுச்சு உனக்கு ஓ.கேவா?"
"அட பாவி அனானி இந்த ரேஞ்சுக்கு என்னக் கலாயக்குறீயேடா..."
"பின்னே என்ன விவாஜி.. இன்னிக்கு பொண்ணுங்க எல்லாம் பீசா, பர்கர்,பாஸ்தா, ஸ்பெக்கிட்டின்னு ஜாயின்ட்க்கு ஜாயின்ட் பாயின்ட் பண்ணிகிட்டு இருக்காளுக.. இந்த நேரத்தில்ல கடலை.. பட்டாணின்னு பேசுனா இப்படித் தான் ஆள் கிடைக்கும்.. நீ கேக்குற பொண்ணுங்க எல்லாம் கே.ஆர்.விஜயா காலத்தோட மலையேறிட்டாங்க..." சிபி பேசிகிட்டு இருக்கும் போதே பேக் கிரவுண்டில் ஒரு சுத்த தமிழ் வெண்பா பாட்டா ஒலிக்குது (உபயம்: கொத்தனார், வெண்பா வாத்தி மற்றும் வாஞ்சி நாதன் அய்யா)
"ஆகா நான் தேடுற கடலைப் பொண்ணு கிடைச்சுட்டா..."
"எங்கேஜி"
"அங்கேப் பாரு உன் தங்கச்சி"
பாட்டியிடம் ஒரு ரூபாய் கொடுத்து நாலு கடலைப் பொட்டலம் வாங்கிக் கொண்டிருக்கிறார் நயந்தாரா
"விவாஆஆஆஆஆஆஜி"
"சூ..சும்மா இரு அனானி..." விவாஜி நயந்தாரா பின்னால் போகிறார். சிபி கடும் டென்சன் ஆகிறார்.
"விவாஆஆஆஆஆஆஜி"
விவாஜி எதைப் பற்றியும் யோசிக்காமல் நயந்தாரா பின்னால் நடக்கிறார். கடுப்பான சிபி மொபைல் எடுத்து 100க்கு போன் போடுகிறார்.
விவாஜி அப்படியே நடந்து நயந்தாரா வீடு வரைக்கும் போகிறார்... சிபியும் கடும் வெறியோடு பின்னால் போகிறார்.. போற வழி எல்லாம் போலீஸ்க்கு வழி சொல்லிக் கொண்டே போகிறார்...
நயந்தாரா வீட்டு கதவை விவாஜி தட்டுகிறார்.
கதவைத் திறப்பது ஜொள்ளுபாண்டி....
"உங்களுக்கு என்ன வேணும்?"
"நாங்க தேடுஜாப்ஸ்.காம்ல்ல இருந்து வர்றோம்.. க்கு எங்க கிளையண்ட் கம்பெனியில்ல நல்ல வேலை இருக்கு அதான் கையோட அப்பாயின்ட்மெண்ட் ஆர்டர் கொண்டு வந்திட்டோம்...அதைக் கொடுக்கணும் அவங்களைக் கூப்பிடுங்க.." அப்படின்னு விவாஜி ஒரு பிட்டைப் போட.. சிபி கடும் டென்சன் ஆகிறார்.
"சார் தான் கம்பெனி புராஜக்ட் மேனேஜர்" அப்படின்னு விவாஜி சிபியையும் சேர்த்துக் கொள்ள சிபி கொஞ்சம் கூல் ஆகிறார்.
"ஆமா எனக்கு தங்கச்சி இருக்குன்னு உங்களுக்கு எப்படித் தெரியும்?"
"அட என்ன அண்ணே.. உங்க முகத்தைப் பார்த்தாலே தெரியுதுண்ணே ஊர் முழுக்க உங்களுக்குத் தங்கச்சியா இருக்கும்ன்னு..." விவாஜி ஜொ.பாவைச் செல்லமாய் கிள்ள..
"இன்டர்வியூவா.. அது சரி.. ஆனா என் தங்கச்சிக்கு அப்பாயிண்ட்மெண்ட் ஆர்டர் எல்லாம் டூ மச்..என் தங்கச்சி அஞ்சாம் கிளாஸே இன்னும் பாஸ் பண்ணல்லயே...அப்புறம் எப்படி சார் அப்பாயிண்ட்மெண்ட் ஆர்டர் எல்லாம் .."
"இதென்ன பிரமாதம் .. எனக்கு முதல்ல அப்பாயிண்ட்மெண்ட் கிடைக்கும் போது.. நான் நாலாம் கிளாஸ் கூட முடிக்கல்ல.. " என விவாஜி ஒரு ப்ளோவுல்ல சொல்ல...
"என்னாது?" ஜொள்ளுபாண்டி ஜெர்க்காக..
"ஆமா ஆனா அப்பாயின்ட்மென்ட் கிடைச்சதும் இவர் 5, 6, 7,8,9,10, 11,12.. பி.இ, எம்.பி.ஏன்னு மள மளவென படிச்சு பாஸ் ஆயிட்டார்" அப்படின்னு சிபி குறுக்கு பதில் சொல்ல ஜொ.பா. குழம்புகிறார்.
"உங்க பேர் என்ன?" சிபி அடுத்தக் கேள்வியைக் கேக்க
"என் பெயர் ஜொள்ளுபாண்டி"
"ஆகா ஜொ.பா.. உங்க பேருக்கே எங்க கம்பெனியிலே ஒரு நல்ல வேலை இருக்கே... அப்பாயின்ட்மென்ட் ரெடி பண்ணிடுறோம்"ன்னு சொல்ல
"எனக்கு எதுக்கு வேலை நான் ஏற்கனவே நல்ல வேலையிலே தானே இருக்கேன்.."
"பரவாயில்ல சார்... அந்த வேலையை விடுங்க வாங்க சார் அப்பாயிண்ட் பண்ணலாம்" விவாஜி அடம் பிடிக்க...ஜொ.பா. குழம்பிய கேப்பில் சிபியும் , விவாஜியும் வீட்டுக்குள் நுழைகிறார்கள்.
உள்ளே நயந்தாராவை வரச் சொல்லி அப்பாயிண்ட்மெண்ட் ஆர்டர் என்ற பெயரில் லவ் லெட்டர் கொடுக்கிறார் விவாஜி.
அதைப் படித்து விட்டு நயந்தாரா பயங்கர டென்சன் ஆக பயங்கரமாக கத்தவும் போலீஸ் வரவும் சரியா இருக்கு...
போலீஸ் யார்ன்னு பாக்குதீயளா...நம்ம அண்ணாச்சி ஆசிப் மீரான் அவருக்கு அஸிடெண்ட்டா நம்ம பெங்களூர் மோகன் தாஸும் தான்.
போலீஸைப் பார்த்தவுடன் விவாஜியும் நம்ம சிபியும் பம்மி நிற்க...
"எலேய் என்னலே இது.. செத்த மூதிகளா.. ஒரு பொட்டபுள்ளையை மூக்கும் முழியுமாப் பாத்துற பிடாதே.. ஓடனே லவ் லெட்டரைத் தூக்கிட்டு வந்துறுவீயளா.... உங்க வயசு கோளாரைச் சரி பண்ணத் தான் வீக் புல்லா லொள்ளு வீக் என்ட் ஜொள்ளுன்னு நாங்க வேற சிறப்பு சேவை எல்லாம் செய்துகிட்டு வர்றோம்ல்லா.. எதுக்கு இப்படி அப்பாவி புள்ளயளை வம்பழுக்கிய... ஏப்பூ மோகனா இவனுவளை உன் டிவி.எஸ் பின்னாலே கட்டி ஸ்டேஷனுக்கு கூட்டிட்டு போ.. நான் அந்த புள்ளகிட்ட ஒரு நாலு வார்த்தை ஆறுதல் சொல்லிட்டு வாரேன்னு" நயந்தாரா பக்கம் அண்ணாச்சி போக... மோகன் தாஸ் அங்கேயே நிற்கிறார்.
அடுத்தக் காட்சி போலீஸ் ஸ்டேஷன்...
கம்பிக்குப் பின்னால் விவாஜியும் சிபியும் நிற்க... படு ஸ்டைலாக நம்ம பெனத்தாலாரும் கோவியாரும் உள்ளே வர்றாங்க...
"யார் சார் இங்கே இன் ஸ்பெக்டர்.. யார் சார் எங்க விவாஜியை அரெஸ்ட் பண்ணது..?"
பெனத்தலார் கேக்குறார்.
"யாருவே அங்கன நின்னு பெனத்தறது.. இங்கண வாரும்வே... என்னடே பிரச்சன.. ஸ்டேசன்ல்ல வந்து சத்தம் போடுதீரு.." அண்ணாச்சி எழுந்து வருகிறார்
"சார் இவர் விவாஜி ரொம்ப நல்லவர்...அமெரிக்காவுக்கும் எல்லாம் இங்கிலீஸ்ல்ல விவசாயம் பண்ணவர்..கிரவுண்ட் நட் பிரேக்கிங் டெக்னாலஜியில்ல விர்ஜினியா யுனிவர்சிட்டியிலே டாக்டர் பட்டத்துக்கு அப்ளை பண்ணியிருக்கார்...என்னோட அனுபவச் சிதறல்கள்ல்ல இவரை மாதிரி ஒரு திறமைசாலியை நான் பார்த்ததே இல்ல..."
"அனுபவச் சிதறலா.. அடங்குடா மவனே...." அண்ணாச்சி கொஞ்சம் கோபப்பட..
"ரைட்டு... அதே தான் கிரவுண்ட் நட் டெக்னாலஜியிலே இவரை அடங்குடா மவனேன்னு நிறைய பேர் அடக்கப் பாத்தாங்க ஆனாலும் இவர் அடங்கல்ல...அவ்வளவு ஜீனியஸ்..விவாஜி... இது அவர் மெயில் அட்ரஸ், இது அவர் பிளாக் அட்ரஸ், இது அவர் வெப் அடரஸ்..."
"பெனத்தலார் சார்..IT IS A MISTAKE அந்த லெட்டர் நான் எழுதவே இல்ல.. டூ அட்ரஸ்ல்ல அவங்க பேர் போட்டிருந்துச்சு அதான் கொடுக்கப் போனேன்...அதுல்ல சின்னக் குழப்பமாகி போலீஸ் அங்கிள் எங்களை அரெஸ்ட் பண்ணிட்டார்..."
ஆசிப் அண்ணாச்சி லெட்டரைப் பிரித்துப் படிக்கிறார்.. கீழே அன்புடன் சிம்பு அப்படின்னு எழுதி அதுக்கும் கீழே அஞ்சு விரலோடு ரேகையும் கை நாட்டா இருப்பதைச் சொல்கிறார்...
"ஓ...நோ நாட் சிம்பு " அப்படின்னு நயன் கோபமாச் சொல்ல...அந்தச் சாக்குல்ல விவாஜி நயன் பக்கம் போயிடுறார்...மயக்கம் போடப் போன நயனைத் தாங்கிப் பிடிக்க ட்ரை பண்ண நயன் உஷாராகி சேரில் உட்கார...விவாஜி பிலீங்க் ஆகிறார். அதைப் பார்த்து சிபி லேசா சிரிக்க...
"ஆமா நயன் உங்களுக்கு சி ல்ல ஆரம்பிக்கற பேர் இருக்கவங்களைக் கண்டாலே பிடிக்காது கரெக்ட்டான்னு சிபியின் தலையில் இடி வைப்பதாய் பேச... சிபி கொஞ்சமும் கூச்சமின்றி நயனிடம் சென்று உங்களுக்கு சி தானே பிடிக்காது ... என் பேர் பித்தானந்தா... நீங்க பித்துன்னு செல்லமாக் கூப்பிடுங்க... நைஸ் டூ மீட் யூ எனக் கை குலுக்குகிறார்...
நயன் டக்கெனக் கையை உதறி விட்டு..
"யார் சார் நீங்க....உங்க பேர் என்ன?" அப்படின்னு கேக்க...
அப்பாடா... இதுக்குத் தான் இவ்வளவு நேரம் காத்திருந்தேன்.. எங்கே பஞ்ச் டயலாக் சொல்ல வாய்ப்பே இல்லாமப் போயிடுமோன்னு பயந்துப் போயிட்டேன்...
"பேரைக் கேட்டாச் சும்மா அதிரும் இல்ல... நீங்க அதிர்ச்சித் தாங்க மாட்டீங்க அதுன்னால நான் சொல்ல மாட்டேன்...ஹா...ஹா... அக்கடச் சூடு அப்படின்னு விவாஜி விரலைச் சுற்றுகிறார்... ஜெயில் கம்பி எல்லாம் வளைந்து நெளிந்து கிராபிக்ஸ்ல்ல விவாஜி - த பார்மர் அப்படின்னு தெரியுது...
நயன் ஒரு நிமிடம் அப்படியே மயங்கினாலும் சுதாரித்துக் கொண்டு.. இருந்துட்டுப் போங்க.. நீங்க விவாஜியாவே இருங்க..ஆனா உங்க கம்பெனியில்ல எல்லாம் என்னால வேலை செய்ய முடியாது...
"ஏன்?"
"அய்யோ அதெல்லாம் எப்படிங்க ஒரு இன்டர்வியூ கூட இல்லாம ஒரு வேலை... அதெல்லாம் முடியாது"
ஓடனே...பாக்கெட்டில் இருந்த தேன் முட்டாயை எடுத்து சீலிங்ல்ல அடித்து தன் வாயில் போடும் விவாஜி....
"YES U R RIGHT...இன்டர்வியூ இல்லாம வேலைக்குச் சேர முடியாது கரெக்ட்... அப்படின்னா நான் உங்களை இன்டர்வியூ பண்ணனும்... இந்த வாரம் சனிக்கிழ்மை பதினோரு மணிக்கு உங்க வீட்டுக்கு உங்களை இன்டர்வியூ நானும் என் ஹெச்.ஆர் டீமும் வந்து இன்டர்வியூ பண்ணுறோம்... ஓ.கே...COOL..."
"எப்பவுமே ஆம்பளைங்க தான் பாவம் அண்ணாச்சி.. ஒரு ஆம்பிளைக்காவது இப்படி வீடு தேடி வேலை வந்து இருக்கா... பொம்பளைங்க எல்லாம் கொடுத்து வச்சவங்க... "அப்படினு ஒரு குரல் வந்த திசையில் ஸ்டைலாய் நின்னது மோகன் தாஸ்...
21 comments:
சூப்பரு. . . . . . .
அடுத்த பதிவு எப்போ. . .?
வாங்க வெங்கட்ராமன் , அடுத்தப் பதிவை நாளைக்கேப் போட்டுருவோம்... :)
""அட என்ன அண்ணே.. உங்க முகத்தைப் பார்த்தாலே தெரியுதுண்ணே ஊர் முழுக்க உங்களுக்குத் தங்கச்சியா இருக்கும்ன்னு..." விவாஜி ஜொ.பாவைச் செல்லமாய் கிள்ள.."
அம்புட்டு நல்லவராய்யா அந்த ஜொள்ளு பாண்டி!!!
தேவ் செம கலக்கல்:)
//குசும்பன் said...
""அட என்ன அண்ணே.. உங்க முகத்தைப் பார்த்தாலே தெரியுதுண்ணே ஊர் முழுக்க உங்களுக்குத் தங்கச்சியா இருக்கும்ன்னு..." விவாஜி ஜொ.பாவைச் செல்லமாய் கிள்ள.."
அம்புட்டு நல்லவராய்யா அந்த ஜொள்ளு பாண்டி!!!
தேவ் செம கலக்கல்:)
//
அய்யோ குசும்பன் அவர் அநியாயத்துக்கு நல்லவர்ங்க.. நயந்தாராவுக்கு இன்னொரு அண்ணனும் இருக்கார் அவரும் வருவார் பாருங்க...
//
விவாஜி அப்படியே நடந்து நயந்தாரா வீடு வரைக்கும் போகிறார்... சிபியும் கடும் வெறியோடு பின்னால் போகிறார்.. போற வழி எல்லாம் போலீஸ்க்கு வழி சொல்லிக் கொண்டே போகிறார்...
நயந்தாரா வீட்டு கதவை விவாஜி தட்டுகிறார்.
கதவைத் திறப்பது ஜொள்ளுபாண்டி....
//
//
"ஆமா எனக்கு தங்கச்சி இருக்குன்னு உங்களுக்கு எப்படித் தெரியும்?"
"அட என்ன அண்ணே.. உங்க முகத்தைப் பார்த்தாலே தெரியுதுண்ணே ஊர் முழுக்க உங்களுக்குத் தங்கச்சியா இருக்கும்ன்னு..
//
ப்ப்பாஆஆஆண்ண்ண்ண்ண்ண்டீஈஈஈஈஈஈஈஈஈ
தேவ் இதெல்லாம் நல்லா இல்லை சொல்லிட்டேன்
/உபயம்: கொத்தனார், வெண்பா வாத்தி மற்றும் வாஞ்சி நாதன் அய்யா)//
அடப்பாவிகளா, வாஞ்சியையும் விட்டு வைக்கலையா?
கடைசியில் எங்க தலை மட்டும் நம்ம சாலமன் பாப்பைய்யா ரேஞ்சுக்கு உருளட்டும், உன்னை என்ன பண்ணறேன் பாரு!! :))
:))
anna naanum paakuren neega mathavangalaiye kindal pannuringa.ungalai eppo kindal panna pooringa?
sibi annavuku nayanthara kidaikalaina avaru overa feel pannuvar.paavam sibi anna.
jollu pondy sisters ah?itha ketta avaru enna aavar?ellarum paavam anna.Next post neega entry aaganum.sollithen.
/"ஆமா நயன் உங்களுக்கு சி ல்ல ஆரம்பிக்கற பேர் இருக்கவங்களைக் கண்டாலே பிடிக்காது கரெக்ட்டான்னு சிபியின் தலையில் இடி வைப்பதாய் பேச... சிபி கொஞ்சமும் கூச்சமின்றி நயனிடம் சென்று உங்களுக்கு சி தானே பிடிக்காது ... என் பேர் பித்தானந்தா... நீங்க பித்துன்னு செல்லமாக் கூப்பிடுங்க... நைஸ் டூ மீட் யூ எனக் கை குலுக்குகிறார்.../
ஹாஹா.... சூப்பர்... :)
:)))))
:-D
சூப்பரு!!!
அடுத்த பகுதியை சீக்கிரம் போடுங்க அண்ணாத்த!! :-)))
அஞ்சாங் கிளாஸ், தேன் முட்டாய் எல்லாம் செம கலாட்டா. ஆனாலும், சி'னாவுக்கு சி'னா போட்டு சிபிய தாக்குன இடம்தான் சூப்பரு.
சத்தியமாச் சொல்றேன்.....இது படத்த விடவும் நல்லாவே இருக்கு. போன வாரந்தான் டிவிடி பிரிண்ட்டை இறக்குமதி செஞ்சு பாத்தேன். படத்த வேக வேகமா ஓட்டி ஓட்டிப் பாக்க வேண்டியதா இருந்துச்சு. ஆனா இந்தப் பதிவு எவ்ளோ நல்லாருக்கு. விவாஜி சூப்பரப்பு.
//மங்களூர் சிவா said...
//
விவாஜி அப்படியே நடந்து நயந்தாரா வீடு வரைக்கும் போகிறார்... சிபியும் கடும் வெறியோடு பின்னால் போகிறார்.. போற வழி எல்லாம் போலீஸ்க்கு வழி சொல்லிக் கொண்டே போகிறார்...
நயந்தாரா வீட்டு கதவை விவாஜி தட்டுகிறார்.
கதவைத் திறப்பது ஜொள்ளுபாண்டி....
//
//
"ஆமா எனக்கு தங்கச்சி இருக்குன்னு உங்களுக்கு எப்படித் தெரியும்?"
"அட என்ன அண்ணே.. உங்க முகத்தைப் பார்த்தாலே தெரியுதுண்ணே ஊர் முழுக்க உங்களுக்குத் தங்கச்சியா இருக்கும்ன்னு..
//
ப்ப்பாஆஆஆண்ண்ண்ண்ண்ண்டீஈஈஈஈஈஈஈஈஈ
தேவ் இதெல்லாம் நல்லா இல்லை சொல்லிட்டேன்//
வாங்க சிவா... கதைக்கு அவசியம்ங்கறதாலத் தான் இப்படி ஒரு காட்சி வச்சிருக்கோம்... இடகி எல்லாம் நினைச்சு பீல் பண்ணக்கூடாது.. அண்ணன் ரோல்ல பாண்டி பெர்பாமன்சைக் கவனிங்க.. சும்மா அதிரும்ல்ல
///உபயம்: கொத்தனார், வெண்பா வாத்தி மற்றும் வாஞ்சி நாதன் அய்யா)//
அடப்பாவிகளா, வாஞ்சியையும் விட்டு வைக்கலையா?
கடைசியில் எங்க தலை மட்டும் நம்ம சாலமன் பாப்பைய்யா ரேஞ்சுக்கு உருளட்டும், உன்னை என்ன பண்ணறேன் பாரு!! :))//
வாங்க தலீவரே, வாஞ்சி சாருக்கும் வெல்கம் டூ பிளாக்ஸ் சொல்லிட்டோம் இல்ல...
சாலமன் பாப்பையா ரோலுக்கு வேற ஒரு வெயிட்டானத் தலயை பேசி வச்சிட்டோம் இல்ல.. அடுத்தப் பார்ட்ல்ல பார்த்தாத் தெரியப் போகுது :))
//:))
anna naanum paakuren neega mathavangalaiye kindal pannuringa.ungalai eppo kindal panna pooringa?
sibi annavuku nayanthara kidaikalaina avaru overa feel pannuvar.paavam sibi anna.
jollu pondy sisters ah?itha ketta avaru enna aavar?ellarum paavam anna.Next post neega entry aaganum.sollithen.//
துர்காம்மா.. அண்ணன் ஒன்லி இயக்கம்.. நோ ஆக்டிங்.. அதுவும் நம்ம விவாஜி, சிபி, வெட்டி மாதிரி பெரிய பெரிய ஸ்டார்ஸ் இருக்க படத்துல்ல என்னோட என்டிரி எல்லாம் வேலைக்கு ஆவாது... அவங்க கேமரா முன்னாடி கலக்குவாங்க நான் கேமராவுக்குப் பின்னாடி நின்னு ஸ்டார்ட் ஆக்ஷ்ன் கேமரான்னு சவுண்ட் விடுறதோட சரிம்மா:)))
சிபிக்கு நயந்தாரா கிடைக்குறாங்களா இல்லையா இப்போ சொல்ல முடியாது.. படத்தை வாட்ச் பண்ணிகிட்டே வா உனக்கே தெரியும்...
நம்ம பாண்டி அண்ணன் கேரக்டர்ல்ல எப்படி பின்னி பெடல் எடுக்கப் போறாருன்னு படம் பாரு புரியும் :)))
//இராம்/Raam said...
/"ஆமா நயன் உங்களுக்கு சி ல்ல ஆரம்பிக்கற பேர் இருக்கவங்களைக் கண்டாலே பிடிக்காது கரெக்ட்டான்னு சிபியின் தலையில் இடி வைப்பதாய் பேச... சிபி கொஞ்சமும் கூச்சமின்றி நயனிடம் சென்று உங்களுக்கு சி தானே பிடிக்காது ... என் பேர் பித்தானந்தா... நீங்க பித்துன்னு செல்லமாக் கூப்பிடுங்க... நைஸ் டூ மீட் யூ எனக் கை குலுக்குகிறார்.../
ஹாஹா.... சூப்பர்... :)//
தாங்க்ஸ் ராம் தம்பி
//கப்பி பய said...
:)))))//
Kappi why laughing??? :)))
//:-D
சூப்பரு!!!
அடுத்த பகுதியை சீக்கிரம் போடுங்க அண்ணாத்த!! :-)))//
போட்டாச்சுங்கண்ணா
//ILA(a)இளா said...
அஞ்சாங் கிளாஸ், தேன் முட்டாய் எல்லாம் செம கலாட்டா. ஆனாலும், சி'னாவுக்கு சி'னா போட்டு சிபிய தாக்குன இடம்தான் சூப்பரு.//
வாங்க விவாஜி... நம்ம சிபி நேத்து அண்ணாநகர்ல்ல தொலைஞ்சுப் போன மேட்டர் உங்களுக்குத் தெரியுமா... நயன் தாரா வீட்டைத் தேடிப் போனதா தகவல் விசாரிங்க..:))
//G.Ragavan said...
சத்தியமாச் சொல்றேன்.....இது படத்த விடவும் நல்லாவே இருக்கு. போன வாரந்தான் டிவிடி பிரிண்ட்டை இறக்குமதி செஞ்சு பாத்தேன். படத்த வேக வேகமா ஓட்டி ஓட்டிப் பாக்க வேண்டியதா இருந்துச்சு. ஆனா இந்தப் பதிவு எவ்ளோ நல்லாருக்கு. விவாஜி சூப்பரப்பு.//
ஆகா ஜி.ரா. இதுக்கு மேல தான் உங்க என்ட்ரி... அதுக்கு அப்புறம் பாருங்க படம் இன்னும் பட்டயக் கிளப்பும்ங்கோ
//"எப்பவுமே ஆம்பளைங்க தான் பாவம் அண்ணாச்சி.. ஒரு ஆம்பிளைக்காவது இப்படி வீடு தேடி வேலை வந்து இருக்கா... பொம்பளைங்க எல்லாம் கொடுத்து வச்சவங்க... "அப்படினு ஒரு குரல் வந்த திசையில் ஸ்டைலாய் நின்னது மோகன் தாஸ்...//
ஆயிரம் மேட்டர்கள் சொல்ல இருந்தாலும், அழகான, டைமிங்கான உள்குத்து இந்த வரிகள் தான். :)
Post a Comment