Monday, October 29, 2007

தசாவாதாரம் ரீமேக்குக்கு ஏற்ற பதிவர் யாரு?

இன்னும் நீ விவாஜியை விடல்லயான்னு நீங்கக் கேக்கக் கூடாது...

இந்த நகைச்சுவை நக்கல் நையாண்டி தொடருக்குக் கிடைத்த வரவேற்பு என்னை மிகவும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியது அப்படிங்கறதைச் சொல்லிக்குறேன்... முதலில் இந்தத் தொடரின் ஆரம்ப அத்தியாயங்களை நான் சங்கம் பக்கத்தில் தான் எழுதினேன்...பின்னர் சங்கம் மொத்த விடுமுறைக்காக மூடப்பட்டது, நான் அலுவலகம் மாறியது எனப் பலக் காரணங்களால் அதைத் தொடர முடியாத ஒரு சூழ்நிலை ஏற்பட்டது...

அந்த நிலையிலும் நம்ம சங்கத்து சொந்தங்கள் விடாமல் எப்போய்யா விவாஜியை முடிக்கப் போறன்னு கொடுத்த நச்சரிப்பு (உண்மையில் அது தான் என்னைத் தொடர்ந்து எழுத வைத்தது) முக்கியமா இளா, பாலாஜி,ராஜ் ( ராஜ்ங்கற பெயர் யாருக்குச் சொந்தம்ன்னு கண்டுபிடிக்குறவங்கக் கண்டுபிடியுங்க), அப்புறம் ராம் தம்பி ஆகியோர் உசுப்புன உசுப்புல்லத் தான் இந்தத் தொடர் சாத்தியாமாச்சு.

பொதுவா நம்மை யாராவது நக்கல் அடிச்சா நம்ம எல்லாருக்கும் டென்சன் ஆவுறது வழக்கம்..தொடர்ந்து 10 வாரம் நக்கல் நையாண்டி பண்ண விட்டது பெரிய விசயம்ன்னாலும் அதிலும் பெரிய விசயம் .. யோவ் இந்த சிவாஜி ஸ்டில்ல விவாஜி ஸ்டில்லா மாத்திக் கொடுய்யான்னு நான் கேக்க இருக்க வேலைக்கு நடுவுல்ல அதையும் மாத்திக் கொடுத்தது.. விவாஜியின் முதல் ஸ்டில் வடிவமைத்தப் பெருமை நம்ம விவாஜியையேச் சேரும்... தாங்க்ஸ் இளா..

அடுத்து வந்த கிராபிக்ஸ் எல்லாம்...அந்த மொட்டை பாஸ் படங்களை எல்லாம் வடிவமைத்துக் கொடுத்தது... என்னுடைய கல்லூரி நண்பன் மூசா...அவன் இப்போ துபாயிலேத் தான் இருக்கான்..மச்சான் தேங்க்ஸ்டா...

அதுக்கு அப்புறம் இந்தத் தொடரில் நம்ம பதிவுலக மக்கள் பலரது பெயர்களை பயன்படுத்தி இருந்தேன்... சில மக்கள் நன்கு அறிமுகம் ஆனவர்கள் சிலர் அறிமுக இல்லாத நண்பர்கள்..அவங்கள்ல்ல எல்லாரும் இந்தப் பதிவுகளைப் படிச்சாங்களான்னு எனக்குத் தெரியாது ஆனா படிச்சவங்க யாரும் எதுவும் சொல்லல்ல... மாறாக வாழ்த்துன்னாங்க...

நான் குறிப்பிட்டதில் வாழ்த்திய நண்பர்களுக்கும் வாசித்த அன்பர்களுக்கும் என் நன்றிகள்...இந்த இடத்தில் கிடேசன் பார்க் மக்களுக்கு என் நன்றிகள்..அதிலும் குறிப்பாய் நண்பன் குசும்பனுக்கு ஸ்பெஷல் தேங்க்ஸ்.... அவ்வபோது தன் விமர்சனங்களை மறைக்காமல் வைத்து தொடரைச் சிறக்கச் செய்த பெருமை அவருக்கு உண்டு..

காமெடி நாயகனாக தொடர் முழுக்க வலம் வந்த இனிய நண்பர் பதிவுலகத் தளபதி சிபி தன்னை வைத்து நான் பண்ணிய காமெடியை ரசித்து வாழ்த்தியது...எதிர்மறை நாயகனாக தொடரில் ரணகளம் புரிந்த தம்பி பாலாஜியும் தொடரைப் பாராட்டியது விவாஜி தொடர்ல்ல சின்ன ரோல்ன்னாலும் அதை பின்னூட்டங்களிலே தன்னுடைய வழக்கமானப் பாணியில் டெவலப் செய்து அட்டகாசம் புரிந்த தம்பி சிவாவின் பங்களிப்பு என் மனம் தொட்ட விசயங்களாய் சொல்லுவேன்..

விவாஜியில்ல நாலு பாட்டுப் போட்டா நல்லாயிருக்கும்ன்னு நான் சொன்னதும் சேட்ல்ல உடனெ.. இந்தாய்யா பிடி பாட்டை...இந்தப் பாட்டுப் போதுமா...வேற வரி வேணுமாச் சொல்லுய்யா,,,அப்படின்னு பல்லேலக்கா பாட்டுக்கு வரி போட்டுக் கொடுத்த கவிமடத்தின் பிரதம சிஷ்யனும் அருமை நணபருமானப் பெனத்தலாரின் உதவியும் விவாஜியின் வெற்றிக்கு ஒரு காரணம் ஆச்சே.. அவரிடம் கேட்டு வாங்கிய சாகானா மெட்டு வரிகளை இந்தப் பதிவின் கடைசியில் பாருங்கள்....

என்னத் தான் நாம மாங்கு மாங்குன்னு எழுதுன்னாலும் அதை யாராவது படிச்சாத் தானே அதுக்கும் மதிப்பு...அந்த வகையிலே தொடரைத் தொடர்ந்து படிச்சி... சேட்ல்ல அதைப் பற்றிய கருத்துக்களையும் வாழ்த்துக்களையும் தொடர்ந்து முன வைத்த நண்பர்கள் சிவிஆர், மங்களூர் சிவா, ஆகியோர் கொடுத்த உற்சாகமும் விவாஜியைத் தொடர்ந்து எழுத வைத்தன...

பின்னூட்டங்களில் கலகலப்பு மூட்டிய சகோதிரிகள் ஃமை பிரண்ட், துர்கா, அனுசுயா, இம்சை அரசி இவங்களுக்கு நன்றி வைக்கல்லன்னா அந்தக் கொலவெறி படை என்னைச் சும்மா விடாது என்ற காரண்த்தினால் அவங்களுக்கும் நன்றி...

இந்தக் கதை விவாதத்தில் சென்னை ஆல்பர்ட் தியேட்டரில் ஒன்றிணைந்த சங்கத்து மக்களுக்கும் பதிவுலக மக்களுக்கும் இந்தத் தொடரை சமர்ப்பிக்கிறேன்....

இந்த ரீ மேக் காமெடிக் கலாச்சாரத்தைத் தொடர வேண்டும் என்பது என் ஆசை....அடுத்து ரீமேக் ஆகவிருப்பது ... தசாவதாரம்... யாரை வச்சு தசாவதாரம் ரீ மேக் பண்ணலாம் ஐடியாக் கொடுங்களேன்...

பினாத்தலாரின் கவி வரிகள்
"குஜாலா ஹிட்டு ஏறுதோ - உஜாலா நிறம் மாறுதோ
ஒரு விட்ஜட்டு டூப்ளிகேட் ஆகுதோ
அது ஹிட்ரேட்டை கூட்டி போகுதோ அடடா
மொக்கையோ கும்மியோ சூடான இடுகைகளோ
ஓராயிரம் பின்னூட்டம் பார்த்திடும் பூவல்லவா
நூறாயிரம் ஹிட்டையும் தாண்டிடும் பூவல்லவா.."

Wednesday, October 24, 2007

விவாஜி - கிளைமேக்ஸ்

கொத்ஸும் விவாஜியும் அடுத்து என்னச் செய்வது என ஆலோசிக்கிறார்கள்...

"இப்போ என் பெயர் பிளாக் லிஸ்ட் ஆயிடுச்சு... எனக்கு எந்தக் கம்பெனியும் வேலைத் தராது...என் பெயர் ரிபேர் ஆனாப் பரவாயில்ல...ஆனா நான் ஆரம்பிச்ச கடலைப் பதிவு திட்டம் அழியக் கூடாது கொத்ஸ் அதுக்காக நான் ஒரு முடிவு பண்ணிட்டேன்..அதுக்கு நீங்க தான் உதவணும்..."

விவாஜி சொன்னதைக் கேட்டு கொத்ஸ் ஆன் லைனில் பயங்கர பீல் ஆகிறார்.

அதற்கு பின் கொத்ஸ் அழைப்பின் பேரில் ரஷ்யாவில் இருந்து ஸ்பெஷல் மருத்துவர் ராமனாதன் வருகிறார். அவர் தலைமையில் ரஷ்ய நர்ஸ்கள் சிலரும் வருகின்றனர்.. கொத்ஸ் விக்கிப்பசங்கவில் போடுவதற்காக தயாரித்து வைத்த டெக்னிக்கல் பதிவு ஒன்றை மருத்துவரிடம் கொடுக்கிறார்..

"இந்த டெக்னிக் பேர் சி.பி.ஆர் அதாவது CURRENT PERSONALITY REORGANISATION தமிழ்ல்ல எல்லோருக்கும் புரியும் படி சொல்லணும்ன்னா கெட்டப் சேஞ்ச்.. அது படி தான் இப்போ நாம செய்யப் போறோம்..பட் அதுக்கு முன்னாடி விவாஜி இந்த கரண்ட் கம்பியைக் கொஞ்சம் க்ரிப்பாப் பிடிங்க...." கொத்ஸ் சுவிட் போடுகிறார்..கரண்ட் கன்னாபின்னாவெனப் பாஸ் ஆக விவாஜி டோட்டல் கெட்டப் மாறுகிறது...... அதன் பின் ரஷ்ய மருத்துவர் தன் வேலையைத் தொடங்குகிறார்..

வெட்டிகாரு ஜியைப் பாராட்டித் தள்ளுகிறார்..

"ஜி, இனிமே பதிவுலகத்துல்ல ஒரே ஜி அது நீ தான் ஜி... அந்த விவாஜி வேலைப் போயிருச்சு.."

"அவன் வேலைப் போயிருச்சு..பட் அந்த கடலை பதிவு புராஜக்ட் அப்படியேத் தானே இருக்கு..அதை ஒண்ணும் பண்ணமுடியாது போலிருக்கே...." ஜி சொல்ல.

"தலை மெயின்ல்ல கை வச்சுருச்சு...ச்சே மெயின் தலையே போயிருச்சு..இனி புராஜக்ட் ஊத்தி மூட வேண்டியது தானே...அந்த புராஜக்ட்ல்ல எந்த அளவுக்கு பக் போட முடியுமோ அந்த அளவுக்கு பக் போட்டு ரிப்போர்ட் கொடுத்து அலப்பரைக் கொடுப்போம்...."

அப்போது புலி பரபரப்பா உள்ளே வர்றார்..

"அய்யா இன்னொரு தலை வருதாம்ய்யா... பினாத்தலாரும் கோவியாரும் அந்தக் கடலை புராஜக்ட்டுக்கு இன்னொருத்தனைப் புடிச்சுப் போட்டுட்டாராம்..யாரோ அமெரிக்காவில்ல இருக்கானாம்..இன்னிக்கு ஜாயின் பண்ண வர்றானாம்.. கடலை புராஜக்ட்டோட முதல் மாடுயூல் ரீலிஸ் வேறயாம்...உங்களையும் கூப்பிடிருக்காங்க" மத்தியானம் டீம் லஞ்சும் உண்டுன்னு பினாத்தலார் சொன்னார்..." புலி குஷியாகச் சொல்ல..

புலி கன்பர்ம் ஆயிருச்சு.. நீ என் கட்சியே இல்ல.. இன்னிக்கு நீ வீட்டுல்லயே இரு உனக்கு நோ லஞ்ச்.

வெட்டிகாரு வேகவேகமாக ஜியோடு கிளம்புகிறார்.

சீன் கட் பண்ணி அப்படியே ஷிப்ட் ஆகுது....

அதிரடி மீசிக் அலற... யோ..யோ.. என ராப் கதற....ரோட் ரோலர் ஒண்ணு ரோட்ல்ல ஹஸ்பீட்ல்ல வர்றத காடுறோம்... ரோட் ரோலர் மேல...சும்மா பள பளன்னு வழிச்சத் தலையோட... டெக்னாலஜி கெட்டப் சேஞ்ச்ல்ல நம்ம விவாஜி வர்றார்... அதைப் பார்த்ததும் மொத்தப் பதிவுலகமும் கொண்டாடுது...

நம்ம அபி பாப்பாவும் நட்ராஜ் தம்பியும் சூர்யா தம்பி, டெபி பாப்பா எல்லாரும் ஐ ஐ மொட்டை பொம்மை மொட்டை பொம்மை அந்த பொம்மை எங்களுக்கு வேணும்ன்னு அடம் பிடிக்குறாங்க...

மொட்டை விவாஜி ரோட் ரோலரைப் பிரேக் அடித்து நிறுத்தி அதிலிருந்து இறங்கி சிபி கையைக் குலுக்குகிறார்... கொத்ஸ், மருத்துவர் ராமனாதன். எல்லோரும் விவாஜியை வாழ்த்துகிறார்கள்...

"மீட் அவர் நியு பார்மர்....சாரி ட்ரான் ஸ்பார்மர்.... பார்மர் இது வெட்டி...." சிபி அறிமுகப் படுத்த...

"I LIKE IT VERY MUCH " அப்படின்னு விவாஜி சொல்லுறார்.

எதுங்க அப்படின்னு வெட்டி பவ்யமாக் கேக்க

"அதோ மூணாவது ரோவுல்ல நாலாவதா நிக்குதே அந்த குட்டியை... முடிஞ்சா அவங்க மெயில் ஐடி வாங்கி எனக்கு கொடுங்க" ஹா..ஹா.. அப்படின்னு கலாய்ச்சலாச் சிரிச்சிட்டு
ரோடு ரோலர் முன் ஏறும் முன்... கையில் ரெடியா வைத்திருந்த வெட்டிக் கொடுத்த பின்னூட்ட பிரிண்ட் அவட்டை நாலாய் மடித்து பின்னர் எட்டாய் மடித்து அதுக்கு அப்புறம் நேராக திறந்து வெட்டி கையில் கொடுத்து படிக்கச் சொல்லுகிறார்...அதே வேகத்தில்
மீண்டும் ரோலர் மேலயே ஏறிக்குறார்..

"யோவ் ஜி.. இவன் விவாஜியே தான்ய்யா... இதுல்ல பாருய்யா நான் போட்ட அதே பின்னூட்டம்..."

"பதிவுன்னா ஆராயக்கூடாது ..அதை அனுபவிக்கணும்.." எழுத்துக் கூட்டி படிக்கும் ஜி' ஆமாய்யா இது உங்க பின்னூட்டம் தான்..ஆனா விவாஜியை நீங்களும் நானும் சேர்ந்து தானே எம்.எம்.எஸ் அனுப்பி வேலையை விட்டுத் தூக்கணும்...அவர் வேலையைப் போனதை நான் கூட அவங்க ஆபிஸ் போய் ஒளிஞ்சு இருந்து பாத்தேனே..அப்புறம் எப்படிய்யா?"

"இல்ல கன்பர்ம்டா அவன் விவாஜி தான்ய்யா.. அங்கேப் பாருய்யா... பெரிய ஸ்கீரின்ல்ல அவன் போட்ட பதிவு நல்லாயிருக்கு அவனே பின்னூட்டம் போடுறான்.. என்னாலத் தாங்க முடியல்ல..."

ரோட் ரோலர் மேல் கையில் மைக்கொடு நிற்கும் விவாஜி பேசுகிறார்...

"எனக்கு அதிகமாப் மைக் எல்லாம் பிடிச்சு பேசத் தெரியாது.. சைலண்ட்டா சைட்ல்ல நின்னு கடலைப் போடத் தான் தெரியும்..இந்தக் கடலைப் புராஜக்ட் இன்னிக்கு முதல் மாடுயூல் வந்துருச்சு..இதுன்னால உலக தமிழ் மக்கள் எல்லாம் கடலைத் தாண்டி கடலைப் போட முடியும்...இந்தப் புராஜக்ட்ல்ல என்ன பக் இருந்தாலும் என் கிட்டச் சொல்லுங்க... நான் பிக்ஸ் பண்றேன்.... அதுமட்டுமல்லாமல்...என் பிரண்ட் விவாஜி ஒரு பெரிய கடலை மன்னன்.. அவனைப் பதிவுலகம் விட்டு போக வச்சவங்களை நான் சும்மா விட மாட்டேன்..." அப்படின்னு பேசிட்டு ரோட் ரோலர்ல்ல இருந்து இறங்குகிறார்.

"சார் கொஞ்சம் நில்லுங்க... நீங்க் விவாஜியோடப் போலியோன்னு எங்களுக்கு டவுட்டா இருக்கு... தமிழ்மணத்துக்கு உங்களைப் பத்தி கம்பளையின்ட் கொடுக்கப் போறோம்.... " ஜி சொல்ல..

"ஹா,.....ஹா.... நான் விவாஜியோடப் போலியா.....வெரி பேட் ஜோக்... விவாஜி பதிவுலகத்தை விட்டுப் போயாச்சு..அவரைப் போக வச்சுட்டாங்க..."

"ஆமா விவாஜி பதிவுலகத்தை விட்டுப் போயிட்டார்..இது அதுக்கான சுட்டி" புலி தீடிரென விவாஜி பக்கம் வந்து நிற்கிறான்.

வெட்டி காரு டென்சனாக..

"அது மட்டுமல்லாமல் அதுக்கு நீங்கப் போட்டப் பின்னூட்டமும்... நான் போட்டப் பின்னூட்டமும் பிரிண்ட் அவுட்டா என் கையில்...."

"ய்ய்ய்ய்ய்ய்யா.. பதிவுலத்தை விட்டு ஒருத்தன் போறான்னு சொன்னா அதை யாரும் ஆராயக் கூடாது...அவன் பதிவுலகை விட்டு வெளியே போய் அனுபவிச்சுப் போறான்ன்னு விட்டுரணும்.." இது அனானியா நீங்கப் போட்டக் கமெண்டு...அதுக்கு கீழே ஏன் இப்படி? அப்படின்னு இன்னொரு அனானி காமெண்ட் நான் போட்டது..." புலி பேச பேச.. வெட்டி கோபத்தில் பொங்குகிறார்..

"அடப் பாவி ஆரம்பத்துல்ல இருந்தே நீ அவன் பக்கம் தானா?"

"பதிவுலக மக்களே நீங்களேச் சொல்லுங்க விவாஜிக்கு என்ன ஆச்சு?" புலி குரல் கொடுக்க.

'மீ த பர்ஸ்ட் புலி அண்ணா... விவாஜி பதிவுலகை விட்டேப் போயிட்டார்" ஃமைபிரண்ட் கைத் தூக்கி சொல்ல..

"ஆமா புலிண்ணா..விவாஜிண்ணா எந்தப் பதிவுக்கும் பின்னூட்டம் வராம பதிவுலகை விட்டேப் போயிட்டார்ண்ணா..." இம்சை அரசி எக்ஸ்ட்ரா சவுண்ட் விட...

"ஆமா..ஆமா..." அப்படின்னு எல்லாரும் கோரஸ் பாட.. வெட்டியும் ஜியும் சைலண்ட் ஆகிறார்கள்.

"அதெல்லாம் இருக்கட்டும் நீங்க விவாஜி இல்லன்னா... நீங்க யார்?"ஜி கேட்டு விட்டு விவாஜியைப் பாக்க

"நானா... நான் தான்... விஸ்க் விஸ்க் என கையை காற்றில் அசைத்து கையில் ஒரு பிளேட் உப்புமாவை எடுத்து ஜியிடம் நீட்டி விட்டு உப்புமா பதிவு எல்லாம் படிச்சி இருக்கீங்களா.. உப்புமா கிண்ட ரவா வேணும்.. உப்புமா பதிவுன்னா அதுக்கு இந்த ரவாஜி வேணும்..."


"நீங்க ரவாஜிங்கறதுக்கு ஆதாரம் என்ன?"

"அக்கடச் சூடுரா... அது என் பிளாகர் ப்ரொபைல் ஐடி ரவாஜி@1819019101810918 எலிக்குட்டி பூனைக்குட்டி எதை வச்சு வேணும்ன்னாலும் சோதனை பண்ணிக்கலாம்... நெக்ஸ்ட் அது என் பிளாக் ADDRESS... நெக்ஸ்ட் அது தமிழ்மணத்துல்ல வர போற என் சூடான இடுகை..."

பெரிய ஸ்கீரீன்ல்ல எல்லாம் தெரிய.... வெட்டி மேலும் டென்சன் ஆகிறார்.

"ஆமா சூடான் இடுகைக்கு புலின்னா... சூடான இடுகைக்கு ரவாஜி..." புலி கிடைச்சக் கேப்பில் ஒரு பஞ்ச் டயலாக் பேசுகிறான். ( புலி கிளைமாக்ஸ்ல்ல உனக்கு வெயிட்டான ரோல்ன்னு கொடுத்த வாக்கைக் காப்பாத்திட்டோம்ல்ல)

வெட்டி படு டென்சனாக நிற்கிறார்.

"அப்போ ரவாஜி அந்த மூணாவது வரிசையில் இருந்த பிகருக்கு சைகை செய்து அழைக்கிறார்...அப்படியே அந்தப் பிகரோடு கைகோர்த்து வெட்டியோட கைகோர்த்து நடைப் போடுகிறார்.."

"யோவ் எல்லாம் ரைட் ஆனா இந்த லாஜிக் மெயின் பிச்சர்ல்ல இல்லையேய்யா.. நீ ரவாஜியாவே இரு.. ஆனா அதுக்கு கெட்டப்க்கு ஒரு பிகர் எல்லாம் ஓவர் சொல்லிட்டேன்" வெட்டி கோபமாய் சொல்ல...

"நயன் எங்கே?"

"லாங் ஷாட்ல்ல நயன் சிபியோடு வருகிறார்...
பேக் கிரவுண்ட்ல்ல..

"தமிழ்மணம் ஏரியா.. பதிவு போட வர்றீயா...
என்னோட என்னோட பின்னூட்டம் போட நீ ரெடியா...

நீ நாமக்கல் ஆளுடா
உன் நக்கல் ரொம்ப தூளுடா
என்னோட என்னோட கும்மி போடுடா..

அடியே அடியேய்..
நீ யாரை இப்போக் கலாய்ச்சுபுட்ட
சங்கத்தைக் கேளுடீ

சிபியே சிபியே...
நான் விவாஜிக்கு ஜோடிடா
இந்த ரீமேக்ல்ல

ஆத்தாடி ஆத்தா எதுக்கு கலாய்ப்பு
நான் பதிவுலக தளபதி
நீ என் செட்டப்பு

ஆத்தாடி ஆத்தா எதுக்கு கலாய்ப்பு
நான் பதிவுலக தளபதி
நீ என் செட்டப்பு

ஆத்தாடி ஆத்தா இந்த லொள்ளுக்கு
நீ பதிவுலக தளபதி
பிஞ்சுடும் பாரு என்னோட செருப்பு.
"யோவ் இங்கே என்ன நடக்குது?"

"நீ விரும்பறவங்களோடு கடலைப் போடுறதோடு.. உன்னை விரும்புறவங்களோட நீ கடலைப் போட்டாத் தான் கடலைக்கே மரியாதை..." ரவாஜி பயங்கரமான தத்துவம் சொல்ல....

"வாவ்." என அவருக்கு பக்கத்தில் இருக்கும் பிகர் கன்னத்தில் கை வைக்க... அந்த பிகர் நம்ம ஸ்ரேயான்னு அப்போத் தான் எல்லாருக்கும் தெரியுது...

"ஆங் அப்புறம்.... கண்ணா வெட்டி...இன்னொரு பஞ்ச் டயலாக் பாக்கி இருக்கு அதையும் சொல்லிடுறேன்... பதிவுலகைப் பொறுத்தவரை... டிராக்டர் ஏறி வந்து பொள்ளாச்சி சந்தையில்ல நின்னு நம்ம ஊர் பொண்ணுங்க கிட்ட கடலைப் போடுற விவாஜியும் நான் தான்... ஹாலிவுட் ஹவேஸ்ல்ல ஆள் இல்லாம நிக்குற ரோடு ரோலர்ல்ல ஏறி அங்கிட்டு இருக்க அல்ட்ரா மாட்ர்ன் கேர்ள்ஸ் கிட்ட கடலைப் போடுற ரவாஜியும் நான் தான்...சும்மா புரியுதுல்ல..."

ரவாஜி சொல்லிவிட்டு வேக வேகமாய் நடக்க.... அவரை வந்து தடுத்து நிறுத்துகிறார் மங்களூர் சிவா

"என்ன தலைவா பைட் இல்லாம கிளைமேக்ஸா.."

"சிவா இது பதிவு... சண்டை இல்லாத பதிவு வேணும்ங்கறது தான் இந்த விவாஜியின் விருப்பம் லட்சியம்... சோ இங்கே மட்டும் இல்லை எங்கேயும் சண்டை இருக்கக் கூடாது ஓ.கே......." என்று ஸ்டைலாய் கண்ணடித்து கையசைக்கிறார்..

ஸ்கீரினில் பெயர்கள் ஓட 2020ல் உலக கடலை மையம் திறப்பு விழாக் காட்சிகள் காட்டப் படுகின்றன.. துளசி டீச்சர் அப்புறம் நம்ம கண்மண் டீச்சர் எல்லாம் சிறப்பு விருந்தினர்களா வந்து கடலை மையத்தைத் திறந்து வைத்து விவாஜியை ஆசிர்வதிக்குறாங்க...

அந்த நிகழ்ச்சியில் நம்ம பாசமிகு சகோதிரிகள் அனுசுயா, மை பிரண்ட், இம்சையரசி, ஜி3, காயத்திரி எல்லாரும் பன்னீர் தெளித்து வந்தோரை வரவேற்கிறார்கள். நம்ம தங்கச்சி துர்கா சிறப்பு வீணைக் கச்சேரி நடத்துகிறார்.

வணக்கம்

Monday, October 22, 2007

சங்கம் வழங்கும் விவாஜி - 9



வெட்டியும் அவர் கூட்டணியும் விவாஜியை ஒழிக்க பயங்கரமாய் திட்டம் போட்டுக் கொண்டிருந்த அதே நேரம் நம்ம விவாஜி நயந்தாராவைக் கூட்டிகிட்டு பொள்ளாச்சி சந்தையில் கடலை வாங்கி கையில் கொடுத்து அப்படியே வரப்பு ஓரமாய் நடந்துப் போய் கொண்டிருந்தார்...

"என்னம்மா இவ்வளவு தூரம் கூட்டிட்டு வந்து கையிலே கடலை எல்லாம் வாங்கிக் கொடுத்தும் எதுவும் பேசமா மவுனமா வர்ற...?" விவாஜி பீலிங்க்கா கேட்க...

"எனக்கு கடலை எல்லாம் போடத் தெரியாதுங்க... உங்களுக்கு தெரியாதா.. நான் தான் அதைப் பாட்டாவே சொல்லியிருக்கேனே..."

"என்னப் பாட்டு?"

"ஒரு வார்த்தைப் பேச ஒரு வருசம் காத்திருந்தேன்...." அப்படின்னு நயன் பாட...

"ம்ஹூம் ஒரு வார்த்தைக்கே ஒரு வருசம்ன்னா டூ மச்.. உனக்கு கடலைப் போட நான் சொல்லித் தர்றேன்... சும்மா எப்படி கடலைப் போடுறதுன்னு இப்போ படம் காட்டுறேன் பாரு...."

"எப்படி?" நயன் கன்னத்தில் கை வைத்துக் கேட்க

அப்படியே சீன் மாறுகிறது சீன் யு.எஸ்க்கு ஷிப்ட் ஆகிறது.....டிஜி கேம்..செல் கேம்...ஹேண்டி கேம்...எஸ்.எல்.ஆர்... இப்படி பல கேமராக்கள் ஜூம் இன் ஜூம் அவுட் ஆகி ஸ்கீரினை நிறைக்க.... விளக்கு எல்லாம் அணைந்து அணைந்து எரிய.... ஹெவி பி.ஜி.எம் கேட்கிறது...

The sky is so high...He is a camera guy...
Feeling no shy...u ask him why...
he is c to the v to the r...yo simply CVR

வலையுலகின் புரட்சி போட்டோகிராபர் சிவிஆர் கெட்டப்பில் விவாஜி கழுத்தில் கேமராவோடு நடந்து வர பின்னால் ஒலிக்கும் ராப் சாங் அலறுகிறது... அப்படியே பாட்டு தமிழுக்கு மாறுகிறது.....
பொத்தி வச்ச வேர்கடலை மொட்டு...பூத்திருச்சு வெக்கத்தை விட்டு...

அப்படியே அந்த வேர்க்கடலை மொட்டு விடுவதை இன்ச் பை இன்ச் பை இன்ச்சா படம் எடுக்கிறார் சிவிஆர் கெட்ட்ப்பில் இருக்கும் விவாஜி... அந்த கடலை உருவாகும் ஒவ்வொரு பருவத்தையும் படம் படமாக எடுத்துத் தள்ளுகிறார்... கூடவே நயந்தாராவும் இருக்கிறார்... இந்தப் போட்டோ செசன் முழுக்க பேக்கிரவுண்டில் அந்த பொத்தி வச்ச வேர்கடலை மொட்டு ஓடுகிறது..... பாட்டு முடியும் போது.... இந்த மாத பிட் புகைப்படப் போட்டிக்கானத் தலைப்பு கடலை அப்படின்னு க்ளிக்கிட்டு எஸ் ஆகிறார் சிம்பிளி சிவிஆர்...

அப்படியே நினைவுக்கு வரும் விவாஜி நயந்தாராவைப் பார்க்கிறார்.. இல்ல உனக்கு தெய்வீகமா எப்படி கடலைப் போடணும்ன்னு சொல்லித் தரவா...

"எப்படி?" நயந்தாரா விழிகளைப் படபடவென அடித்துக் கேட்கிறார்.

"இக்கடச் சூடு......"

சீன் அப்படியே மதுரைத் திருபரங்குன்றம் ஏரியாவுக்கு மாறுகிறது....
ஒன்றானவன்.... கே.பி.எஸ் குரலில் பாட்டு ஒலிக்க கே.ஆர்.எஸ் பக்தி பழமாகக் காட்சி தருகிறார். கிராபிக்சில் அப்படியே அவர் விவாஜியாக மாற....

மாதவிப் பொன்மயிலாள் தோகை விரித்தாள் பாட்டு ஒலிக்கிறது....ஸ்லோ டான்ஸாக ஆரம்பிக்கிறது.. அப்படியே தகதகவென ஆடவா சிவ சக்தி சக்தி என ஆடவா.. அப்படின்னு ஆவேசம் எடுத்து ஆடுகிறார் விவாஜி கூடவே நயன் தாராவும்.... இங்கே சிபியும் கனவில் வருகிறார்.. அவருக்கும் ஒரு க்ளோஸ் அப் ஷார்ட் வைக்கிறோம் அவர் காதில் இருந்து புகை கிளம்புகிறது...

இந்த ஷாட் முடியும் போது கே.ஆர்.எஸ் தோன்றி... கடலை என்பது சிற்றின்பமடா .. பதிவு போட்டு பின்னூட்டக் கும்மி என்பது பேரின்பம் என அறிவாயடா மானிடா அப்படினு பேசி ஒரு வேர்க்கடலை பொட்டலம் பிரித்துத் தூவி எஸ் ஆகிறார்..

அடுத்து என்ன ஸ்டைல் கடலை அப்படின்னு நயந்தாரா கேட்கும் முன்...

ஒரு நாய் ஸ்கீரீனில் தெரிகிறது... அது ஒருத்தரை வேகமாகத் துரத்த...அவர் ஓடுகிறார்.... பின்னால் பாட்டு அதிரடியாய் ஒலிக்கிறது....அவர் ஓடும் போது...கொரியா உங்களை வரவேற்கிறது என ஒரு போர்ட் தெரிய....அங்கே நம்ம செந்தழல் ரவி நின்னு திரும்பி பார்க்கிறார்... அப்படியே கிராப்பிக்ஸ்ல்ல நம்ம ரவி விவாஜியா மாற....கொரியன் பிகர்ஸ் கூட்டம் அவரைச் சுத்துப் போடுகிறார்கள்... கையில் போனோடு ஒரு பக்கம் இந்தியாவில் இருக்கும் கேர்ள் பிரண்ட்டோடு கடலைப் போட்டப் படி இன்னொரு பக்கம் நெட்டில் அகில உலக பிகர்களிடம் கடலையைக் கன்டினியூ செய்து கொண்டே.. கொரியப் பாட்டுக்கு கொரிய பிகர்களோடும் டான் ஸ் ஆடி அசத்துகிறார்....

இந்தப் பாட்டு முடியும் போது நயன்ந்தாராவைப் பார்த்து இப்போச் சொல்லு என்ன மாதிரி கடலை வேணும்ன்னு

"எனக்கு உங்ககிட்டப் புடிச்சதே... நீங்கப் பதிவுலகை விட்டு போறேன் போறேன்னு சொல்லி போடுவீங்களே அந்தக் கடலைத் தான்...அதே மாதிரி கடலை போடுங்க ப்ளீஸ்"

விவாஜி வேக வேகமாய் தன் பழையப் பதிவுகளை நோண்டி தான் இது வரை பதிவுலகை விட்டு போவதாய் போட்ட 26 சொச்சம் பதிவுகளையும் மீள்பதிவு செய்கிறார்...

தீ..தீ..தீ...கிளப்புறாங்க பீதி....தீ..தீ..தீ... பதிவுலகை விட்டுப் போற தேதி....
டிராக்டர் ஓட்டும் நாட்டு ராசாத் தான்..கடலைப் போடுவான் பேஷாத் தான்...
போட்டக் கடலைத் தீஞ்சா..டக்கால் டமீல்..டூமீல் டூமில் தான்.....

பாட்டு ஒலிக்க விவாஜி சும்மா கன்னாபின்னாவென டான்ஸ் ஆடுகிறார்....
இதை எல்லாம் எம்.எம்.எஸ் ஆக்கி வெட்டிகாருவுக்கு சிபி அனுப்புகிறார்... அதைப் பார்க்கும் வெட்டி கடும் டென்சன் ஆகிறார்..

"ஓவரா ஆடுறான்ய்யா"

"ஆமாங்க விட்டா விஜய் டிவி ஜோடி நம்பர்ல்ல கூடப் போய் ஆடுவான் போலிருக்கு..." புலி சீரியசாச் சொல்ல.. வெட்டிகாரு புலியை முறைக்கிறார்..

"புலி எனக்கு ரொம்ப நாளாச் சந்தேகம்.. நீ என் கட்சியா... இல்ல விவாஜி கட்சியா..."

"என்னங்க இப்படிக் கேக்குறீங்க... இன்னும் ஒரு பார்ட் வரைக்கும் டைம் கொடுங்கச் சொல்லிடுறேன்"

"ம்ம்ம்.. அதிரடி வாலிபனைக் கூப்பிடுங்க..."

ஜி ஆன் லைனில் வருகிறார்.

"ஜி அமெரிக்காவில்ல என்னப் பண்ணுறே?"

"அட என்னங்க இதையேத் தான் சேட்ல்ல எல்லாரும் கேக்குறீங்க..செம போர்ண்ணே... வீட்டுல்ல ஒரே பொட்டித் தட்டி தட்டி போர் அடிச்சுப் போச்சு.. எல்லாரும் சோம்பேறி பசங்க.. ஊர் சுத்தவும் வர மாட்டேங்கறாங்க...."

"எனக்குத் தெரியும்...அதான் உனக்கு ஒரு வேலைத் தர்றேன்.."

வேலையைச் சொல்லிவிட்டு வெட்டிகாரு பயங்கரமாய் சிரிக்க...

"வெட்டிண்ணே இதெல்லாம் ஓர்க் அவுட் ஆகுமா...?" அப்படின்னு ஜி கேட்க...

"பதிவுலகைப் பொறுத்த வரி இந்த வெட்டி ஒண்ணைப் பத்திச் சொன்னா..அதை ஆராயக்கூடாது அனுபவிக்கணும்....புரியுதா சொன்னதைச் செய் சீக்கிரம் செய்.."

இவரும் பஞ்ச் வச்சிட்டார்ப்பா...ஆளுக்கு ஆள் ஏன் இப்படி பண்ணுறாங்க அப்படின்னு புலி பீலிங்காய் எதோச் சொல்ல ஆரம்பிக்கிறார். இதே நேரம் வெட்டியின் ஆலோசனைப் படி ஜி எம்.எம்.எஸை அகில உலக ஐடி கம்பெனிகளுக்கு அனுப்ப...விவாஜியின் பதிவு எல்லாக் நிறுவனங்களாலும் பிளாக் செய்யப்படுகிறது... அது மட்டுமல்லாமல் விவாஜியின் சொந்தக் கம்பெனியிலே அவருக்கு வேலைப் போகிறது...

அதே நேரம் சிபியும் விவாஜியும் சாலையோர டீக்கடையில் சந்திக்கின்றனர்.

"சிபி... ஒரு எம்.எம்.எஸ் வச்சு என்னைக் காலிப் பண்ணப் பாக்குறான் வெட்டி... கொஞ்சம் ஜாலியா ஒரு எக்ஸ்ட்ரா பீலிங்க்ல்ல நயனோட ஒரு குத்தாட்டம் போட்டுட்டேன்..அதை எந்த வீணாப் போனவனோ வீடியோ பண்ணி அவனுக்கு எம்.எம்.எஸ் ஆ அனுப்பியிருக்கான்..அதை வெட்டி என் மேனேஜருக்கு.. சி.இ.ஓ எல்லாருக்கும் அனுப்பிட்டான்...அது மட்டுமில்லாமல் எல்லா ஐடி கம்பெனிக்கும் அனுப்பிட்டான்... கொடுத்தப் புராஜக்ட்டை ஒழுங்காச் செய்யாம கூத்தடிக்கிறான்னு எனக்குக் கெட்டப் பெயராப் போயிடுச்சு..அதுல்லயும் எங்க கம்பெனியில்ல பாட்டுல்ல அந்த பின்னூட்டத்தை நான் என் பார்வையால ரிவர்ஸ் போக வைக்கிற கிராபிக்ஸ் பார்த்து ஓவர் டென்சன் ஆயிட்டாங்க..."

"விவாஜி மன்னிச்சுரு விவாஜி... கலாய்த்தல் திணைக்கு ரொம்ப நாளா மேட்டர் கிடைக்கல்ல அதுக்காகத் தான் இந்த வீடியோவை உனக்குத் தெரியாம எடுத்தேன்...அதை வச்சு வெட்டி வயித்தெரிச்சலைக் கிளப்பி கலாய்க்கலாம்ன்னு அவனுக்கு அனுப்புனேன்.. இப்படி ஆகிருச்சே..."

'தெரியுதுய்யா ஆரம்பத்துல்ல இருந்தே நீ என் பக்கமா இல்ல அவன் பக்கமான்னு எனக்கு டவுட் இருந்துச்சு அது கன்பர்ம் ஆயிருச்சு.."

"இல்ல விவாஜி அப்படி எல்லாம் தப்பா நினைக்காதே"

"யோவ் நான் நயந்தாரா கூட ஆடுற மாதிரி வீடியோ இருந்தாக் கூட என் ஆபிஸ்ல்ல எதாவது பேசி சமாளிச்சுருவேன்...ஆனா வேற பிகர் இல்ல தெரியுது... கோவியாரும்..பினாத்தாலாரும் உன் புராஜக்ட் விட்டுட்டு வேற புராஜக்ட்ல்ல போகஸ் பண்ணுறீங்க அதுனாலத் தான் உங்களை வேலையை விட்டுத் தூக்குறோம்ன்னு சொல்லிட்டாங்க..."

"ஏன்ய்யா அப்படி பண்ண...?"

"சாரி விவாஜி நான் கிராபிக்ஸ்ல்ல கொஞ்சம் வீக்... கோர்ஸ் போலாம்ன்னு இருக்கேன்..சின்னதா ஒரு டெக்னிக்கல் பால்ட் ஆயிருச்சுப்பா"

"சாரி விவாஜி இப்போ என்னப் பண்ணப் போறே.. உன் கனவெல்லாம் அவ்வளவு தானா?"

இல்ல..இந்த விவாஜி தோக்க மாட்டான்.....என் கிட்ட இருக்க ஒரு பின்னூட்டத்தை வச்சே என் ஆட்டத்தை நான் கன்டினியூ பண்ணப் போறேன்....

"எப்படி விவாஜி?"

விவாஜி லேப் டாப் திறந்து ELAVASAM.BLOGSPOT.COM அப்படின்னு டைப் அடிக்கிறார்...

அவ்வளவு தான் அப்படியே பின்னூட்டப் புயல் கிளம்புது.... சும்மா கிராபிக்ஸ்ல்ல புயலைக் காட்டுறோம்....அந்தப் புயலுக்கு நடுவே நம்ம விவாஜி அவரோடு ஒரு பின்னூட்டத்தைப் போல்ட் பண்ணிப் போடுறார்...

"என்ன விவாஜி பண்ணுற?"

"சிபி கண்ணா.. இங்கே பிளாக் போடுற நிறைய பேர் 10 பின்னூட்டம் வந்தாலே பதில் சொல்ல டைம் இல்லன்னு எஸ் ஆயிடுவாங்க... ஆனா இப்போ நான் பின்னூட்டம் போட்டு இருக்கது என் நண்பர் பின்னூட்டப் புயலாருக்கு...ஆயிரக் கணக்கானப் பின்னூட்டம் வந்தாலும் ஒவ்வொரு பின்னூட்டத்துக்கும் பதில் சொல்லுவார்ய்யா என் நண்பர்.. என் பின்னூட்டம் பாத்துட்டு எனக்கு உதவி பண்ண வருவார் பார்.." என்று சொல்லிவிட்டு ஜிடாக் ஒப்பன் பண்ணி உக்காந்து இருக்கிறார்..

விவாஜி ஸ்கீரினில் கொத்ஸ் ஆன் லைன் எனக் காட்டுகிறது...

விவாஜி ஹாய் பட்டி கூல் என டைப் அடிக்க.....

மறுபக்கம் ஹாய் விவ்....டெல் மீ என்கிறார் கொத்ஸ்...

விவாஜி - கிளைமாக்ஸ் அடுத்து DONT MISS IT

Wednesday, October 17, 2007

விவாஜியின் விசேஷசக் கெட்டப் பாருங்க

மக்களே தமிழ் பதிவுலகின் சமீப கால மெகா திரைக்காவியம் விவாஜி.. அந்தப் படம் பற்றிய செய்திகள் காட்டுத் தனமாய் பரவிக் கொண்டிருக்கும் நிலையில் அது பற்றி மேலும் ஒரு தகவல்..

சங்கம் பெரும் பொருட்செலவில் பதிவுலக சூப்பர் நட்சத்திரம் இளாஜி நடிக்க சூப்பர் இயக்குனர் தேவ் (கொஞ்சம் ஓவர்ன்னு நினைச்சா ப்ளீஸ் எக்ஸ்க்யூஸ் மீ) இயக்கத்தில் படு கலக்கலாய் வளர்ந்து வரும் படம் விவாஜி.

இந்தப் படத்திற்காக பதிவுலக மக்கள் காட்டும் உழைப்பு ஆதரவும் நாளுக்கு நாள் அதிகரித்து சும்மா அதிருதுல்ல

கடந்த சில நாட்களாக அலுவலகத்தில் வைக்கப் பட்ட அளவுக்கு மீறிய ஆப்புக்களைத் தாண்டிவிவாஜி மீண்டு அதி வேகமாய் வளர ஆரம்பித்து விட்டார்..

இந்தப் படத்தில் பதிவுலகமே அலறும் வகையான படு வித்தியாசமானக் கெட்டப்பில் நம்ம விவாஜி தோன்றுகிறாராம், ஆண்டிப்பட்டி முதல் அரிசோனா வரை அலப்பரை கொடுக்கப் போகும் அந்த விசேச கெட்டப்பின் தரிசனம் இதோ உங்களுக்காக....





Hey Viv...Cool Buddy...




Yo!!! Vivaji The Farmer....

பதிவு போட ஆரம்பிச்சா சும்மா அதிருதுல்ல!!!!!

எப்படி இருந்த நம்ம விவாஜி.. இப்போ எப்படி ஆயிட்டார் பாருங்க...

Thursday, October 11, 2007

சங்கம் வழங்கும் விவாஜி - 8

விவாஜியை அந்த ப்ரவுசிங் சென்டர் மாடியில் கடலை வியாபாரி வேடத்தில் சந்திக்கிறார் சிபி.

"சிபி... இந்த இடம் சேப் தானே....?"

"கவலைப் படாதே விவாஜி... டோட்டலி சேப்.. ஜே.கே எங்க ஊர் பையன்..அவன் நடத்துற ப்ரவுசிங் சென்டர் இது...இங்கே அவ்வளவு சுலபத்தில்ல யாரும் ஐபி எல்லாம் ட்ராக் பண்ணமுடியாது... நீ உன் இஷ்ட்டத்துக்கு யார் கூட வேணுமோ எத்தனை ஐடி வேணும்ன்னாலும் வச்சு சேட் பண்ணலாம்...பின்னூட்டம் போடலாம்.. பின்னி எடுக்கலாம்.. இப்போத் தான் வெட்டியோட எல்லா ஐடியும் வேற உன் கைக்கு வந்துருச்சே... இனி உன் கடலைக் கனவு நனவாகிடும் விவாஜி... நனவாகிடும்..."

"இல்ல சிபி... தமிழ்நாட்டுல்ல மட்டும் இவ்வளவு கும்மி பதிவர்கள் மொக்கப் பதிவர்கள்ன்னு விடிய விடிய பதிவுகள்ல்ல கும்மி அடிச்சா... சிங்கப்பூர்... மலேசியா...அமெரிக்கா...அப்படின்னு ஒலகம் முழுக்க எத்தனை கும்மி பதிவர்கள் இருப்பாங்க..."

"விவாஜி துபாயை விட்டுட்டீயே...அங்கேத் தான் கும்மி டீமே இருக்கு.."

"ம்ம்ம் ஒரு பதிவர் கிட்டயே இத்தனைப் பதிவு.. இத்தனை ஐடி... இத்தனை ஆன்லைன் காண்டக்ட்ன்னு இருந்தா... இந்த மொத்தக் கும்ம்பி கேங்கையும் புடிச்சா எத்தனைப் பதிவு எத்தனைஐடி சிக்கும்...."

"விவாஜி நீ என் அடிமடியிலே கைவைக்குறீயே (மனசுக்குள் சிபி முனங்குகிறார்) சரி விவாஜி நீ என்னச் சொல்ல வர்ற?"

"நூறு இருநூறுன்னு இருந்த கும்மி இன்னிக்கு ஆயிரம் இரண்டாயிரம்ன்னு எங்கேயோப் போயிட்டு இருக்கு...கும்மி அடிக்கிறவங்க இன்னும் கும்மி அடிச்சிகிட்டே இருக்காங்க...ஒரு பின்னூட்டம் கூட கிடைக்காம சிங்கி அடிக்கிறவங்க சிங்கி அடிச்சிட்டேஇருக்காங்க...

THE GUMMIS GET GUMMIER..and the SINGIES GET SINGIER.....

"தமிழ்ல்ல பின்னூட்டங்களுக்குப் பிரச்சனை இல்ல சிபி... பின்னூட்டங்கள் எல்லாம் ஒரே இடத்துல்ல கும்மிங்கற பெயர்ல்ல போய் நிக்குது..." விவாஜி சிரியசாப் பேசிக் கொண்டே போகிறார்.

"நீ என்னப் பண்ணப் போற விவாஜி?"

"இதோ நாம கைப்பற்றுன எல்லா ஐடியையும் அமெரிக்காவுல்ல இருக்க என் நண்பர்கள் கிட்ட கொடுத்து அப்படியே உலகம் பூரா இருக்க அவஙக் நண்பர்கள்கிட்ட கொடுத்து அங்கங்கே இருந்து என் பதிவுல்ல பின்னூட்டம் போடச் சொல்லி சொல்லப் போறேன்..."

"எதுக்கு விவாஜி?"

"அப்படி பண்ணா எனக்கு நானே பின்னூட்டம் போட்டேன்னு யாரும் சொல்லமுடியாது இல்ல.."

"விவாஜி எங்கேயோ போயிட்டியே"

"இப்போ நான் துபாய் போறேன் சிபி..."

"நான் வர்றல்ல"

"பரவாயில்ல.. என் உதவிக்கு நயன் தாரா வர்றாங்க.. நீங்க இங்கே என் தகவலுக்குக் காத்திருங்க..."

"விவாஜி கிடைக்குற கேப்புல்ல எல்லாம் என் ஹோப்புக்கு ஆப் வைக்குறீயே...."சிபி கண் கலங்குகிறார்.

அப்படியே கட் பண்ணி பிளைட் காட்டுறோம்...பிளைட் துபாய் ஏர்போர்ட் போய் சேருது... அங்கே நம்ம கிடேசன் பார்க் மக்கள் விவாஜியை மீட் பண்ண வர்றாங்க அவங்க கிட்ட விவாஜி பேசுறதை மியூசிக்கோடு காட்டுறோம்...

விவாஜி கூட குசும்பன், மின்னுது மின்னல், கோபி, அய்யனார், அபி அப்பா, எல்லாம் நின்னு போட்டோவுக்கு போஸ் கொடுக்குறாங்க...

அப்படியே சீன் கட் ஆகி மதுரைப் பக்கம் ஒரு குக்கிராமத்திற்கு போவுது... அங்கே ஒரு பெரும் கூட்டம் விவாஜியின் வரவுக்குக் காத்திருக்குது..

விவாஜி ஒரு புல்லட்டில் பறந்து வருகிறார்... கூட்டம் ஓ வெனக் கத்தறாங்க...

அந்த ஊர் ஆல மரத்தடியிலே ஒரு பெரிய வேட்டி கட்டித் தொங்க விட்டிருக்காங்க...அதுக்கு மேல விவாஜி கடலைப் பவுண்டேசன் பதிவர் முன்னேற்ற கழகம் அப்படின்னு போட்டிருக்கு...

விவாஜி வந்து நிற்க.. அந்த வேட்டியில் விவசாயி டாட் காம் தெரிகிறது....
பக்கத்தில் இன்னொரு பதிவு ஓப்பன் ஆகிறது..அதில் எந்த பதிவும் இல்லாமல் காலியாக இருக்கிறது..

"இங்கேப் பாருங்க... நான் சொல்ற படி கேட்டா இப்படி இருக்க உங்கப் பதிவு இப்படி ஆகிடும்..உங்களுக்கு நாங்களே பதிவு போட்டுத் தருவோம்.. அதுக்குப் பின்னூட்டமும் நாங்களேப் போட்டுத் தருவோம்...என்னச் சொல்லுறீங்க... பதிவு மூலமா நீங்க உலகம் முழுக்க கடலைப் போட நாங்க வழி செய்யறோம்"

அப்போது அங்கே தடதடன்னு சவுண்ட் கேக்க ஊரே அதிர நம்ம நாட்டாமை ஸ்யாம் வர்றாரு...

"ஏ நான் தூங்குன நேரமாப் பாத்து என் வேட்டியை அவுத்துட்டு ஓடி வந்தது மட்டுமில்லாம..அந்த வேட்டியை நான் பஞ்சாயத்து பண்ற ஆலமரத்தடிக்கு மேலேயே கட்டி என் ஊர்ல்ல படம் காட்டுறீயா... இந்த நாட்டாமைக்கு உன் படம் புடிக்கல்ல... யாருடா நீ?" ஆவேசமாகக் கத்துகிறார் நாட்டாமை...

"கூல்... அவர் தான் பார்மர் F for FUNNY A for ACTION R for ROWDY M for MASS E for ENTERTAINER R for சிபி சொல்லி முடிக்கும் முன் விவாஜி பாய்ந்து R for ROMANTIC என்று சொல்லிவிட்டு ரொமான்டிக் லுக் ஒன்று கொடுக்கிறார் அதுக்கு க்ளோஸ் அப் வைக்கிறோம்.

நெறுத்துறா உன்ற கிட்ட ஏ.பி.சி.டி....படிக்க வர்றல்லடா இந்த நாட்டாமை..நாயம்டா..நார்மைடா..நாட்டமைடா..தினமும் என்னைக் கவனிடா.. என்று நாட்டாமைக் கண்டப்படி பீல் ஆக...

"நாட்டாமை நோ டென்சன்.. அங்கேப் பாருங்க ஸ்டார் ரூம் இருக்கு.. உங்கப் பிரச்சனை எதுவா இருந்தாலும் அங்கேப் போய் பேசுங்க...அங்கே குசும்பர்ன்னு என் நண்பரும் அவர் நண்பர்களும் உங்களை நல்லாக் கவனிச்சுப்பாங்க...கூடவே சிபியும் வருவார்ன்னு சொல்லி அனுப்புகிறார்"

உள்ளேப் போன நாட்டாமை கண்ணெல்லாம் கலங்கி தலை முடியெல்லாம் நட்டுகிட்டு நிக்க வருகிறார்.

"பார்மர் என்னோட வேட்டி எல்லாம் உங்களுது..எந்த மரம் வேணும்ன்னாலும் கட்டிப் படம் காட்டுங்க..கடலைப் போடுங்க.. ஆனா அந்த ஆளை மட்டும் வச்சு என்னைக் கலாய்க்கச் சொல்லாதீங்க..." நாட்டாமை கைக் காட்டும் இடத்தில் குசும்பன் குறும்பாய் நிற்கிறார்..

"அப்படி என்னங்க கலாய்ச்சார்?" கூட்டத்தில் இருந்து சவுண்ட் வர..

"ஒண்ணுமில்ல பார்மர்..எல்லாம் நம்ம ஸ்டார் ரூம் ரூல்ஸ் படித் தான் நடந்துகிட்டோம்.. நம்ம நாட்டாமை கையிலே ஒரு லேப் டாப் கொடுத்து தினமும் மூணு பதிவு போடச் சொன்னோம்... ஆனா அவர் பதிவு எழுத ஆரம்பிக்கறதுக்கு முன்னாடியே குசும்பன் பின்னூட்டக் கும்மியை ஆரம்பிச்சுட்டார்... அதுல்லயும் நீங்க எழுதப் போகிறது நல்ல பதிவு.. படித்து விட்டு கருத்துச் சொல்கிறேன் அப்படின்னு போட்டக் கமெண்ட் பார்த்து நாட்டாமை அழவே ஆரம்பிச்சுட்டார்... அப்புறம் மலேசியா மை ஃபிரண்டுக்குப் போன் போட்டு அவங்க வேற வந்து மீ த பர்ஸ்ட்டு. மட்டும் சொல்லிட்டுப் போக... பாவம் நாட்டாமை பதிவே எழுதமா.. தமிழ் மணத்துல்ல பின்னூட்டத் திரட்டியிலே அவர் பதிவு வர ஆரம்பிச்சுடுச்சு...." மின்னல் சிரித்துக் கொண்டேச் சொல்ல

"எஸ்.. இது தான்... இப்படித் தான் நடக்கணும் குசும்பா...அளவுக்கு அதிகமாகப் பின்னூட்டம் வாங்குற எல்லாப் பதிவர்களுக்கும் இதே மாதிரி கலாய்ப்பு நடக்கணும்...."

"இப்படி எல்லாம் கலாய்க்க நீங்க யார்? எங்க நாட்டாமைக்கு ஊரெல்லாம் செல்வாக்கு அவர் பதிவு போடப் போறார்ன்னு தெரிஞ்சாலே எல்லாரும் வந்து பின்னூட்டம் போடுவாங்க..இதுன்னாலே உங்களுக்கு என்ன" கூட்டத்தில் முத்துக்காளை மாதிரி ஒருத்தர் கேட்கிறார்.

"அய்யா..உங்க நாட்டாமை மாதிரி ஆளுங்களால நல்ல பதிவு போடுறவங்களுக்குப் பின்னூட்டமே கிடைக்காமப் போற வாய்ப்பு இருக்கு... ஏன் நீயே கூட போடுற பதிவுக்கு பின்னூட்டம் வராமப் போயிடும்...அதான் சொல்லுறேன்... அளவுக்கு மீறி பின்னூட்டம் போட்டா அது தப்புன்னு"

"விவாஜி விவாஜி... எங்கேப் பாத்தாலும் விவாஜி.... சிவாஜி படம் பாக்காத பதிவர் கூட இருக்கலாம் ஆனா விவாஜி படிக்காதப் பதிவரே இல்லன்னு ஊரே பேசுற அளவுக்கு பேமஸ் ஆயிட்டான்... "

"ஆமாங்க வெட்டிகாரு...நான் பாட்டுக்கு எதோ கட் காப்பி பேஸ்ட் பதிவு போட்டு பின்னூட்டத்தை அள்ளிகிட்டு இருந்தேன்..அதுக்கும் ஆப்பு வச்சுட்டான்" ஒரு மொக்கப் பதிவர் பிலீங் விட

"அரசியலுன்னு சொல்லி எல்லாக் கட்சிக்கு ஆதரவா தலா ஒரு பதிவு வச்சு பட்டயக் கிளப்பிகிட்டு இருந்தேன்.. இப்போ எல்லா ஐடியும் அவன் கையிலே...." ஒரு அரசியல் பதிவர் தன் வருத்தத்தைச் சொல்ல...

"பேசாம நீங்க அவனைக் கடலைப் போட விட்டிருக்கலாம்.. இப்போ அவனைச் சீண்டி தமிழ்மணத்துல்ல ஸ்டாராவே ஆக்கிட்டீங்க... ஒரு பெரிய குமபலே அவன் கூட இருக்க.. இப்போ நான் உங்கக் கூட மட்டும் தான் கடலைப் போட முடியும் போலிருக்கு.. அதுக்கும் லாகின் ஐடி வேணும்... எந்த ஐடி ஓப்பன் பண்ணாலும் வந்து கலாய்ச்சே அந்த ஐடி பாஸ்வேர்ட்டைப் புடுங்கிட்டுப் போக கூடவே ஒரு குரூப்பே வ்ச்சிருக்கான்..."

"சும்மா பேசிப் பயன் இல்ல...அய்யா போட்டரலாமா?" புலிக் கேட்க

"ஆமாடா இப்படித் தான் போனத் தடவைக் கேட்டே நானும் கிட்டத் தட்ட அப்படின்னு சொன்னேன்.. நீ என்னப் பண்ண..அவன் கூட போய் உக்காந்து அவனோடு சேந்து முழுசா மூணு மணி நேரம் கடலைப் போட்டுட்டு வந்து போட்டுட்டேன் சொல்லி போனஸ் வேறக் கேட்ட...கொன்னுடுவேன் ராஸ்கல் உன்னை.."

எல்லாரும் மௌனமாக வெட்டிகாரு சொல்கிறார்...

"பொம்மரிலு...போக்கிரி...அத்தடு...ஒக்கடு..."

"என்னங்க ஆச்சி உங்களூக்கு?" புலிக் கேட்க

"அந்த டிவிடி எல்லாம் வேணும்...அதை எல்லாம் பாத்து விவாஜிக்கு ஒரு வழி பண்ண ஐடியா பண்ணப் போறேன்... விவாஜி...ஓதரவா..... நின்னே ஓதரவா....." வெட்டி ஆவேசமாக எழுகிறார்...

"லக்கலக்கலக்கலக்க" அப்படின்னு புலி சவுண்ட் கொடுக்க...

யோவ் அது சந்திரமுகிய்யா... இங்கே நடக்கிறது சிவாஜி உல்ட்டாய்யா குழப்பமா இருங்கய்யா அப்படின்னு அந்த அரசியல் பதிவர் அதிகத்துக்கும் டென்சன் ஆகிறார்...

விவாஜி அடுத்த பகுதியில் முடியும்

Monday, October 08, 2007

சங்கம் வழங்கும் விவாஜி - 7

பஜ்ஜி கடையில் உட்கார்ந்து பஜ்ஜி சாப்பிட்டுக் கொண்டிருக்கிறார்.

அப்போது விவாஜியின் மொபைல் அலறுகிறது...மொபைலை ஆன் செய்கிறார் விவாஜி...மறுமுனையில் வெட்டிகாரு பேசுகிறார்...

"ஏ விவாஜி.. என்ன பஜ்ஜி நல்லா இருக்கா?.... விவாஜி.. இப்போ நான் பீசா கார்னர்ல்ல இருக்கேன்..உங்காளு சிபி இப்போ என் கூட தான் இருக்கார்...அப்புறம் அவர் கூட அந்த அவ்வையார் ஸ்கூல் பொண்ணும் இருக்கு...................
என்னங்க விவாஜி ஹைபட்ஜெட் படம்ன்னு சொல்லிட்டு பஜ்ஜி கடை எல்லாம் நல்லாவா இருக்கு.. நாம் வேற உலக லெவல் ரிலீஸ் பண்றோம்.. ஒரு கே.எப்.சி...பீசா கார்னர்.. பர்கர் ஜாயின்ட்ன்னு போட்டாத் தானா கெத்து...அதுவுமில்லாம பஜ்ஜி கடையிலே ப்ரவுசிங் பெசிலிட்டி எல்லாம் கிடையாது அதான் நான் நீங்க சொன்ன லோகேஷனை மாத்திட்டேன்...வந்துச் சேருங்க...மீட் பண்ணுவோம்..."

"" விவாஜி சிரியஸ் ஆகிறார்.

விவாஜி பீசா கார்னர் போய் சேரும் போது சிபி அங்கே நயன் தாராவோடு உக்காந்து பஜ்ஜி சாப்பிட்டுகிட்டு இருக்காரு... விவாஜி அதைப் பார்த்தும் பாக்காத மாதிரி உள்ளே நுழைகிறார்..

"வாங்க விவாஜி...வாங்க... இவங்க எல்லாம் தமிழ் பதிவுலகின் டாப் டென் கும்மி பிளாகர்ஸ்... இவங்களை மீட் பண்ணுங்க..."

நமக்கு அறிமுகமான கும்மி பதிவர்கள் குசும்பன் தலைமையில் அணிவகுத்து உட்கார்ந்து இருக்கிறார்கள்.. குசும்பன் விவாஜியைப் பார்த்து குசும்புத் தனம் குறையாமல் ஹாய் விவ்..கூல் பட்டி.. என்கிறார்...

அதை எல்லாம் பெரிதாகக் கண்டுக்காத விவாஜி...

"ஹா..ஹாவென வெட்டிகாருவைப் பார்த்துச் சிரிக்கிறார்.... வெட்டிகாரு..ட்ராப்டல்ல இருக்க உன் பதிவு முதற்கொண்டு உன் எல்லாப் பதிவுக்கும் நீங்க கொடுத்த ஒரேக் கமெண்ட்டை கட் காப்பி பேஸ்ட் போட்டு ஆயிரம் ஆயிரமா ஓவர் லோட் பண்ணிட்டு இருக்கேன்.. பின்னூட்டம் வெயிட் தாங்காம உன் பதிவு கன்னாப் பின்னான்னு சும்மா கதருதுல்ல அப்படியே இந்த ஓவர் வெயிட்டைக் காரணம் காட்டி உயரெல்லையை நீ கன்னாபின்னான்னு தாண்டியிருக்கன்னு சொல்லி திரட்டி நிர்வாகத்துக்கு ஒரே மெயில் தட்டுனா உன் பதிவே அன் சப்ஸ்கிரைப் ஆயிடும்ங்கறேன்..நீ என்னன்னா பீசா கார்னர்ல்ல உக்காந்துப் பதிவர் சந்திப்பு பத்தி பேசிகிட்டு இருக்க...ஆமா வெட்டிச் செல்லம் நீ ஓண்ணும் காமெடி கீமெடி பண்ணல்லயே..."

விவாஜி... அதான் நான் சிபியைக் கடத்தி இங்கேக் கொண்டு வந்துட்டேனே...அப்புறம் எப்படி?

"கண்ணா வெட்டி... சிபி பத்தி உனக்குத் தெரியல்ல...எல்லாரும் 24 மணி நேரம் ஆன் லைன்ல்ல இருந்தா இவர் 25 மணி நேரம் ஆன் லைன்ல்ல இருப்பார்..."

"எப்படி?"

"அந்த ஒரு மணி நேரத்தை அடுத்த நாள் இட்ட இருந்து அட்வான்சா கடன் வாங்கி கேலண்டரையேக் கலாய்ப்பார்...ஹா...ஹா... இப்போ குளுகுளுன்னு ஏசி.. கையிலே பீசா ஓசி... நீயே யோசி...அக்கடச் சூடு"

சிபி கையில் பாம் டாப் வைத்து திரட்டி நிர்வாகத்துக்கு மெயில் வெட்டி பதிவை நீக்குமாறு மெயில் அனுப்பிகிட்டு இருக்கார்...அதே நேரம் கமுக்கமாய் புலி சிபி கையில் இருக்கும் பாம் டாப்பைப் பாயந்து பிடுங்குகிறான்.. அதைப் பார்த்த வெட்டிகாரு லைட்டா ஒரு ஸ்மைல் விட்டு விட்டு

"ஏ விவாஜி...வெட்டின்னா வெட்டி ஒட்டி போஸ்ட் போட்டு பின்னூட்டப் பொங்கல் வைக்கிறவன்னு நினைச்சியா.. போய் இணையத்துல்ல இருக்க ஒவ்வொரு பிளாகாப் போய் பாரு.. என் பதிவுக்கு எத்தனை லிங்க் இருக்குன்னு... கடலைப் போடுறதுல்ல எனக்கே சவால் விடுறீயா..." வெட்டி கோபத்தில் எகிற...

"வெட்டிகாரு.. சின்ன பையன்ங்க இவன்.. மலையாளத்துக்கும் தெலுங்குக்கும் வித்தியாசம் தெரியாத பையன்.. உங்க கொல்ட்டி போஸ்ட்க்குக் கூட இப்போத் தான் நல்லதொரு மலையாளப் பதிவுன்னு கமெண்ட் போட்ட்ருக்காப்பல்ல.. இவன் கூட எல்லாம் பேசி நீங்க டைம் வேஸ்ட் பண்ணாதீங்க.. நான் பாத்துக்குறேன்.." தனக்குக் கிடைத்தக் கேப்பில் கொடுத்த டயலாக்கோடு சேர்த்து சொந்த டயலாக்கும் பேசி விவாஜியைக் கலாயத்தான் புலி.

"புலி... இவன் பதிவுல்ல இருக்க போஸ்ட் எல்லாம் நம்ம பதிவுக்குப் போகணும்..இவன் பதிவுலகத்தை விட்டேப் போகணும்..."

ம்ம்ம் இந்த டாப் 10 பிளாகர்ஸ் கூட பதிவர் சந்திப்பு இல்லடா... இவங்க இப்போ உனக்கு கன்னாப்பின்னான்னு கும்மி பின்னூட்டம் போடப் போறாங்க அதை எல்லாம் பப்ளிஷ் பண்ணமுடியாமலே நீ பதிவுலகம் விட்டுப் போகப் போற...விவாஜி... இப்படி தனியா வந்து சிக்கிட்டியே விவாஜி அப்படின்னு புலி சிரிக்க...

விவாஜி பஜ்ஜியைக் கடிக்கிறார். கடிச்ச மீதி பஜ்ஜியை வானத்தில் எறிகிறார்.

"ஆகா விவாஜி பஞ்ச் டயலாக் பேசப் போறார் அதுக்குள்ளே கும்மியை ஸ்டார்ட் பண்ணுங்கடா" அப்படின்னு புலி சவுண்ட் கொடுக்க்.. கொலவெறியோடு கும்மி பதிவர்கள் விவாஜியை நோக்கி வருகிறார்கள்...

"பங்கு எல்லாம் மொத்தமாச் சேந்தாத் தான் கும்மி அடிக்கும்......" விவாஜி மொத்தமாக பறந்து பிசா கார்னர் மெயினை பிடுங்கி விடுகிறார்... கரண்ட் கட் ஆனதில் கும்மி பதிவர்களின் சிஸ்டங்கள் இருண்டுப் போகின்றன..

அப்படியே கிராபிக்ஸில் பீசா கார்னர் விலைப் பட்டியல் கம்ப்யூட்டர் ஸ்கீரினாக மாறுகிறது....எல்லாக் கும்மி பதிவர்களின் பிளாக்கும் தெரிகிறது....

"பங்கு எல்லாம் மொத்தமா வந்து தான் கும்மி அடிக்கும்.. ஆனா என்னைக்குமே சிங்கு ( சிங்கம்) சிங்கிளாவே சிங்கி அடிக்கும்"

ஒவ்வொரு பிளாக்கா ஓடி விவாஜி கொலவெறியோடு கமெண்ட் போடுகிறார்....பின்னூட்டம் வெள்ளம் போல் நிறைகிறது ஒவ்வொரு பதிவரும் கமெண்ட் பப்ளிஷ் பண்ண முடியாம பதிவுலகை விட்டே போறாங்க....

எல்லாம் முடிந்தப் பின் களைப்பான விவாஜி திரும்பி பார்க்கிறார்... அங்கே சிபியையும் நயன் தாராவையும் காணவில்லை....

அதே சமயம் அவர் எப்பவோ மேலேத் தூக்கி எறிந்த பஜ்ஜி மறுபடியும் கீழே சூடா வருது.. அதை ஸ்டைலா கடித்துக் கொண்டே நடக்கிறார் விவாஜி...

பின்னால் பாட்டு ஒலிக்கிறது...

ஹே விவாஜி... விவாஜி...
பதிவு போட்டா ஹாட்டு தான்டா
மொக்கன்னாலும் ஹிட்டு தான்டா..
பாதி பதிவு பிட்டுத் தாண்டா...
சேத்துபுட்டான் ஒரு செட் தாண்டா..

கடலைப் போட்டா கிங் தாண்டா
கடலைத் தாண்டி தங்குவாண்டா
மொபைல் ஆல்வேஸ் ரிங்கு தாண்டா
ஆபிஸ் போனா தூங்குவாண்டா
கேள்விக் கேட்டா சங்கு தாண்டா..

ஹே விவாஜி விவாஜி..

பாட்டு பீட்டுக்கு ஏத்தவாறு விவாஜி நடக்கிறார்...

Sunday, October 07, 2007

விவாஜி எக்ஸ்க்ளூசிவ் போட்டோ

இதுவரை உலக பத்திரிகைகளில் வெளிவராத விவாஜி எக்ஸ்க்ளூசிவ் புகைப்படம் உங்களுக்காக!!



காலேஜு ரோடும் கடலை வறுத்ததும் மறந்து போகுமா..
ஆஹா தூதுவிட்ட நண்பனின் தொம்சமான முதுகும் ஆறிப்போகுமா?

அந்தக் குட்டிச்சுவரு.. காலங்காலை பஸ் ஸ்டேண்டு..

போலீஸ் துரத்திய ரோடு.. அண்ணங்காரன் அடிச்ச மேடு..

லுக்கு லுக்கு லுக்கு விட்ட ஸ்கூல்வாசல்
கல்லு கல்லு கல்லு தப்பிச்ச காலேஜ்..

பல்லு பல்லு பல்லு உடைச்ச பார்ட்டிங்க
கிள்ளு கிள்ளு கிள்ளு கிள்ளின டீச்சர்கள்..

தள்ளு தள்ளு தள்ளு தள்ளிய நண்பர்கள்..
ஜொள்ளு ஜொள்ளு ஜொள்ளு விட்ட காலங்கள்..

மனதில் நிற்கிற எல்லாம் ஜொள் ஜொள் ஜொள்..

கடலேலக்கா கடலேலக்கா காலேஜுக்கா ஸ்கூலுக்கா ஆன்ஸைட்டுக்கா வேலைக்கா பெஞ்சுக்கா!

கடலேலக்கா கடலேலக்கா மகாப்ஸுக்கா ஈஸிஆருக்கா டிஸ்கோவுக்கா மாயாஜாலுக்கா பீச்சுக்கா..

பாடல் வரிகள் நன்றி: பினாத்தலார்

Friday, October 05, 2007

சங்கம் வழங்கும் விவாஜி - 6

விவாஜியும் சிபியும் சுரங்கப் பாதை வழியா அவ்வையார் ஆரம்ப பாடச் சாலைக்குப் போறாங்க...அங்கே நயந்தாரா வரவுக்காக காத்திருக்காங்க...

நயந்தாரா வரவும்...விவாஜி நேரா நயந்தாராகிட்டப் போறார்...

"இதோ பாருங்க... நீங்க வேலைத் தர்றணும்ன்னா இன்டர்வியூ பண்ணனும்ன்னு சொன்னீங்க.. நானும் குரூப்பாக் கிளம்பி வந்து இன்டர்வியூ பண்ணலாம்ன்னு உங்க வீட்டுக்கு வந்தேன்... பர்ஸ்ட் ரவுண்ட் இன்டர்வியூ அங்கே முடிஞ்சது... செகண்ட் ரவுண்ட் இன்டர்வியூக்கு எங்க ஆபிஸ்க்கு உங்களை என் ஆபிஸ்க்கு கூட்டிட்டு வரச்சொல்லி இவரை(சிபி) அனுப்பினோமே நீங்க ஏன் வர்றல்ல?"

"இல்லையே.. இந்த அங்கிள் என்னைக் கூட்டிட்டு ஆபிஸ் போனாங்களே.. அங்கே கேன்டீன்ல்ல.. பிரைட் நட்ஸ்...பாயில்ட் நட்ஸ்...ப்ரூட் நட்ஸ்.. எல்லாம் வாங்கிக் கொடுத்தாங்க... கேன்டீன்ல்ல வெயிட் பண்ன வச்சுட்டு.. நீங்க எங்கேயோ வெளியே போயிட்டதாச் சொல்லி திருப்பிக் கூட்டிட்டு வந்து விட்டுட்டாங்க...எங்க அண்ணன் ஸ் ஜொ.பா, தம்பி எல்லாம் கூட வந்தாங்களே இன்ட்ரவியூக்கு.."

விவாஜி பொங்கி சிபியைப் பார்க்க....பேக் கிரவுண்ட்ல்ல சிபிபிபி சேட்டா... சேச்சி சைட்டா... ஒதுங்கு கொயிட்டா.... விவாஜி பைட்டா பாட்டு ஒலிக்குது....

"இருக்கட்டும் அந்த அங்கிள் மேல கோபப்படாதீங்க... நான் எப்படியும் உங்க வேலையை ஏத்துக்க மாட்டேன்.. என்னால முடியாது.."

"ஏன்?"

"சொன்னா நீங்க வருத்தப்படுவீங்க"

"உஹாஹா... இந்த விவாஜியா வருத்தமா.. வ.வா,ச தெரியுமா.. சரி விடுங்க ஊருக்கே தெரியும்...சொல்லுங்க என்னக் காரணமா இருந்தாலும் ஓ.கே"

"அது உங்க பிளாக் பேர் சொல்லுங்க"

"விவசாயி அதுக்கு என்ன?"

"அதான் எனக்குப் பிடிக்கல்ல..."

"ஏன்?"

"ஏன்னா நீங்க எழுதுறது தமிழ்..... எனக்கு தமிழ் படிக்கத் தெரியாது...ஊருக்கேத் தெரியும் நான் மலையாளம்ன்னு" நயந்தாரா எமோஷ்னாலச் சொல்ல...

சிபி சைடில் சைலண்ட்டாக லேப்டாப்பில் பிளாகர் அக்கவுண்டுக்குப் போய் ஒரு வடக்கன் வீரகர்த்தா அப்படின்னு ஒரு ஐடி ஓப்பன் பண்ணிகிட்டு இருக்கார்...

"ஏய் விவ்ஜி..அது ஷரியாக்கும்.. குட்டி பறையற சேதி வளர ஷ்ரியாக்கும்... உனிக்கு மலையாளம் அறியுல்லா... பின்னே..."

விவாஜி அனல பறக்கும் லுக் ஒன்றை சிபி மீது விடுகிறார்...

"எனக்கு மலையாளம் தெரியாது... நான் மலையாளத்துல்ல பிளாக் போடணும் அது தானே...பிளாகுறேன் மலையாளத்துல்ல எண்ணி 30 நாள்ல்ல பிளாகுறேன்... அப்படின்னு திரும்பி நடக்கிறார்...

"தம்பி உங்களுக்கு என்ன வேணும்?" கடலைக் கடைப் பாட்டி விவாஜியைக் கேக்க...

"ம்ம்ம் முப்பது நாட்களில் மலையாளம் புக்" அப்படின்னு டிராக்டரில் தாவி ஏறுகிறார்...சிபி நயனைப் பார்த்தப் படி பின்னால் வருகிறார்.

பின்னாடி ஒரு குடை யூரியா ஒரு குடை சேர்யா.. இரண்டு சேர்ந்தால் என் விவாசாய் ஏரியா அப்படின்னு பாட்டு ஒலிக்க விவாஜி மலையாளம் கத்துக்குற முயற்சிகளைக் காட்டுறோம்..

விடிய விடிய வீடியோவில்ல ஷகிலா நடிச்ச மலையாளப் படமாப் பாக்குறார்...அந்த மலையாள படம் எதுல்லயும் டயலாக்கே இல்ல...

விவாஜி ஆனாலும் விடாமல் பார்க்கிறார். சிபி சைடில் நின்னு சிரிக்கிறார்.

அடுத்து நாள் முழுக்க நாயர் கடையில் நின்னு டீ குடிக்கிறார்.... அவன் பேசுவதையே உன்னிப்பாக் கவனிக்கிறார்.

மலையாள பேப்பரை வச்சு தன் பெயரை எழுதிப் பார்க்கிறார் ஆக்சுவலா வரைந்து பார்க்கிறார்.

மொபைலில் கண்டபடி கேரளா நம்பர்களுக்கு எஸ்.டி.டி போட்டு பேசி அசிங்கமாத் திட்டு வாங்குகிறார்.

ஒரு ரூம்குள்ளே உட்கார்ந்து சத்தம் போட்டு 30 நாட்களில் மலையாளம் புக் வச்சு படிக்கிறார்.. ரூம் கதவு திறக்கவே இல்லை... டென்சன் ஆகி ஆபிஸில் பெனத்தலார், கோவியார், சிபி எல்லாரும் வந்து கதவைத் தட்டி விவாஜி..என்னப்பா ஆச்சி... வெளியே வாப்பான்னு கூப்பிட...

"ஒண்ணும் ஆகல்ல... இப்போ நான் கதவைத் திறந்துட்டு வெளியே வந்தா சும்மா மம்முட்டி மாதிரி இருப்பேன் பாருங்க.... அப்படின்னு கதவைத் திறக்கிறார்.. ஒரு வடக்கன் வீரகர்த்தா கெட்டப்பில் இருக்கிறார்.. கையில் லேப் டாப் வேற... மலையாளத்துல்ல பிளாக் வேற போட்டாச்சி இல்ல..."

நயன் படிச்சா சும்மா சிதறும்ல்ல.." அப்படின்னு விருட்டெனக் கிளம்புகிறார். சிபியும் கிளம்பி பின்னாலே போகிறார்..

அவ்வையார் ஆரம்ப பாடசாலையில் நயனைச் சந்திக்கிறார் விவாஜி.. விவாஜியின் கெட்டப் பார்த்து நயன் அப்படியே லைட்டா ரொமான்டிக் லுக் விட சிபி டென்சனாகிறார்...

பேக் கிரவுண்ட்டில் பாக்கெட்டில் இருந்த ஐ பாட் ஆன் பண்ணி பாட்டை ஒலிக்கச் செய்கிறார் விவாஜி....

ஒருபக்கம் பேச்சி.
ஒருபக்கம் சேச்சி..
ஒன்றாகச் சேர்ந்தால் என் ஆட்சி

அப்போ நான் தெக்கத்திப் பாண்டி..
இப்போ நான் மலபார் தெண்டி...
அப்ப நான் ஜொள்ளுத்தமிழன்...
இப்போ நான் மல்லுத் தமிழன்...
எப்பவும் வேளாண் தமிழன்...

எப்படி சும்மா அதிருதுல்ல பாட்டு முடிந்ததும் பஞ்ச் அடிக்கிறார் விவாஜி..

ஆமா ஐ பாட் கொஞ்சம் பழசு..வால்யூம் ப்ராப்ளம்.. பேஸ் எபெக்ட் சரியில்ல... அதான் அதிருது... அப்படின்னு சிபி நயனிடம் கேப்பில் பேச்சுக் கொடுக்க... விவாஜி படு வேகமா.. லேப் டாப்பைத் திறக்கிறார்...

www.malabarmams.blogspot.com அப்படின்னு டைப் அடிக்கிறார்... அங்கே பிளாக் ஓப்பன் ஆவுது...நயன் தாரா போட்டோ ப்ளோஅப் ஒண்ணு தெரியுது...

"இந்தாங்க படிங்க... உங்களுக்காக நானே மலையாளத்துல்ல டைப் பண்ணுது..."

"நயன் தாரா அதைப் பார்த்துவிட்டு பேந்த பேந்த முழிக்கிறார்..

"என்னாச்சு.. உங்களுக்கு மலையாளமும் படிக்க வராதா?"

"அல்ல.. இது மலையாளம் அல்லா.. இது வேறாண்ணு." அப்படின்னு நயன் சொல்ல...

"என்னாது இது மலையாளம் இல்லையா...?" விவாஜி கோபமாய் திரும்பி சிபியைப் பாக்க..

"சாரி விவாஜி.. இது வெட்டிகாரு பிளாக்ல்ல இருந்த லிங்க் மூலமா ஓசியிலே டவுண்லோட் பண்ண ஆன் லைன் ஈ புக்... மலையாளம்ன்னு அட்டையிலே போட்டு உள்ளே முழுக்க முழுக்க தெலுங்கு அடைச்சு வச்சு உன்னை ஏமாத்திட்டாங்க விவாஜி..... உன்னை ஏமாத்திட்டாங்க.."

"ஹா..ஹா....நீ ஸ்டார் ஆவுற நாள் தெரிஞ்சுப் போச்சுன்னா...கும்மி எல்லாம் தூரமாப் போயிடும்...ஸ்டார் ஆவுறது முக்கியமில்ல எப்பவும் குமமாளமா கும்மி அடிக்கறது தான் முக்கியம்"

"விவாஜி இப்போ எதுக்கு இந்த டயலாக்"

"மெசேஜ் சொன்னேன் .. என் கிட்ட மெசேஜ் எதிர்பாக்குறாங்க..ஸ்டார் ஆவுறவங்க நிறைய பேர் கும்மிய நிறுத்திடுறாங்க.. நம்ம லக்கி கூட நிறுத்திட்டார்...அதுக்குத் தான் இந்த மெசெஜ் சொன்னேன்"

"அதை எதுக்கு சம்பந்தம் இல்லாம இப்போ சொன்ன?"
"இப்படி எக்குத் தப்பா சிக்கிட்டா வேற என்னப் பேசி சீனை நகத்துறது.. வெட்டிகாரு இந்த விவாஜி உங்களைச் சும்மா விட மாட்டான்.... " அப்படின்னு சொல்லி கையில் இருந்து முட்டாயை எதிரில் நிற்கும் சிபியின் மேல் எறிய அவர் குனிய..அது சுவத்தில் போய் மோதி உடைஞ்சு சிதற.. விவாஜி அந்த உடைஞ்ச் முட்டாயை டைவ் அடிச்சு பிடித்து வாயில் போடுகிறார்.

பேக்கிரவுண்ட் மியூசிக் அலறுகிறது...

"நீங்க எதுக்கு மலையாளம் எல்லாம் கத்துக்கணும் இப்படியே கோக்கு மாக்கா எதாவது பண்ணாலே போதுமே.. எனிக்கு அதுவே வளர இஷ்ட்டம் "அப்படின்னு நயன் சொல்ல....

"ஆகா.. சாச்சுட்டான்டா " என்ற சிபியின் கண்களில் கண்ணீர் பொங்கி வழிகிறது...

சுரங்கப் பாதைக்குள் உட்கார்ந்து விவாஜி வெட்டிகாருவுக்கு வாய்ஸ் சாட் இன்வைட் அனுப்புகிறார்...

ஆன் லைன் வரும் வெட்டிகாரு.விடம்....

"கண்ணா உன்னோடப் பிளாக் ஓப்பன் பண்ணு பாக்கலாம்..."

அவசர அவசரமா ஓப்பன் பண்ண ட்ரைப் பண்ணுகிறார்.. பாஸ்வேர்ட் லாக்ட் என வருகிறது...

"கண்ணா...நேத்து நைட்.. உன் டூப்ளக்ஸ் பிளாட்.. லேப்டாப்.. இரண்டே பேர்.. உன் பாஸ் வேர்ட்டை ஹேக் பண்ணியாச்சு... இப்போ உன் ஜி மெயில் ஐடி, யாகூ ஐடி, பிளாகர் ஐடி, வேர்ட்பிரஸ் ஐடின்னு எல்லாத்தையும் எடுத்தாச்சு...தமிழ் மணத்துல்ல உன் பிளாக்கே தெரியாதே...."

வெட்டிகாரு தமிழ் மணம் பக்கம் திறக்கிறார்...

"உன் பதிவு உயரெல்லையை எல்லாம் தாண்டி எங்கேயோப் போயிடுச்சு... எப்படின்னு பாக்குறீயா..எல்லாம் நீ கொடுத்த ஒரு பின்னூட்டம் வச்சுத் தான்.. அதையே பண்ணி ஆயிரமாயிரமா உன் பிளாக்ல்ல் போட்டேன்....இப்போ ஓவ்ர் லோட் ஆகி உன் பிளாக் ஓப்பன் ஆகுறதே கஷ்ட்டமாயிடுச்சு....ஹா..ஹா..."

"யாருடா நீ"

"ஆறு பார்ட்டா கதையை ஒழுங்காப் படிக்காம இப்போக் கேக்குறீங்களே.. நான் தான் சிவாஜி ரீமேக் விவாஜிவோட ஹீரோடா....சும்மா அதிருதுல்ல"

"ஆமா போன் கனெக்ஷன் சரியில்ல.. வாய்ஸ் கொஞ்சம் அதிரத் தான் செய்யுது " பக்கத்தில் நின்று சிபி சிரியசாச் சொல்ல விவாஜி அவரை முறைக்கிறார்.

"ஹலோ வெட்டிகாரு... நல்லாக் கேளுங்க.. நீங்க அளவுக்கு மீறி வாங்குற பின்னூட்டத்துல்ல 50% எனக்குக் கொடுத்துருங்க...இல்லைன்னா நீங்கக் கொடுத்த ஒரே பின்னூட்டத்தைத் தொடர்ந்து உங்க பிளாக்ல்ல போட்டு உங்க பிளாக்கை மொத்தமா மூடிடுவேன்...அது மட்டும் இல்லாம.. உங்க ஜீடாக்.. யாகூ... ஸ்கைப்... எம்.எஸ்.என் .. ல்ல எல்லாம் இருக்க பிகர்கள் பாதி பேர் கிட்ட எனக்கு இன்ட்ரோ வேணும்... இல்லன்னா கமிஷனர் ஓடனே கிளம்பி எல்லா டீடெயில்ஸும் எடுத்துக்கிட்டு எதாவது ஒரு பஜ்ஜி கடைக்கு வாங்க..வர்றல்லன்னா... தொடர்ந்து பின்னூட்டம் போட்டுகிட்டே இருப்போம்.. அது மட்டும் இல்லாம அதே பின்னூட்டத்தை உங்க எல்லாக் கான்டாக்ட்ஸ்க்கும் அனுப்பிக்கிட்டே இருப்போம்.."

விவாஜி.....

வாங்க சார்...சும்மா பஜ்ஜி சாப்பிடலாம் அப்படின்னு விவாஜி சிரிக்கிறார்...

Thursday, October 04, 2007

சங்கம் வழங்கும் விவாஜி - 5

மறுநாள் விவாஜியும் அவர் கூட பெனத்தலார்,கோவியார் மற்றும் கடும் கடுப்போடு சிபி எல்லாரும் டிராக்டரில் நயந்தாரா வீட்டு முன் போய் இறங்குகிறார்கள்.

விவாஜி ஸ்டைலாக் கதவைத் தட்ட கதவைத் திறக்கிறவரைப் பார்த்து கலவரமாகிறார் விவாஜி.

"அண்ணன் எங்கே?" விவாஜி கேட்க

"நான் அண்ணன் இல்ல தம்பி" அவர் சொல்ல.

"ஓ நயனோடத் தம்பியா" அப்படின்னு சிபி கைகுலுக்க கிளம்ப

"இல்ல நயனுக்கு நான் அண்ணன்."

"குழப்பமாச் சொல்லு நீ அண்ணனா? தம்பியா?" விவாஜி விரலைச் சுத்திக் கேக்க..

"நான் அண்ணனா தம்பியாங்கறது இருக்கட்டும்..நீங்க யார்?"

"ஓ நாங்களா நாங்க இன்டர்வியூ பண்ண வந்துருக்கோம்.. உங்க எல்லாரையும் இன்டர்வியூ பண்ணி வேலைக் கொடுக்க வந்துருக்கோம்..வாங்க இன்டர்வியூ பண்ணலாம் வாங்க இன்டர்வியூ பண்ணலாம்" அப்படின்னு விவாஜி கலவர எபெக்ட் கொடுக்க..

"ஆஹா நீங்கத் தான் ஜாப் குரூப்பா.. உங்களால்ல நொந்து தான் ஜொ.பா. அண்ணன் என்னைத் துபாய்ல்ல இருந்து ஓடனே வரச் சொன்னாராமே... அண்ணனைப் பயங்கரமாக் கலாய்ச்சீங்களாமே..எங்கே என்னைக் கலாய்ங்கப் பாக்கலாம்?" அப்படின்னு தம்பி நிக்க...

"ச்சே பார்த்தா பாவமா இருக்கீங்க... அசப்புல்ல பாவனாவுக்கு ஒரு பெரிய தம்பி இருந்தா எப்படி இருப்பானோ அப்படியே இருக்க.. உன்னைப் போய் கலாய்க்கச் சொல்லுரீயேப் போப்பா.." சிபி சொல்லி விட்டு ஜன்னல் வழியா நயன் தெரிகிறாரா என எட்டிப் பார்க்க முயற்சிக்கிறார்.

"ஆகா எங்க அண்ணனை விட என்னை இன்னும் ஓவராக் கலாய்க்கிறீங்களா... போங்கடா" அப்படின்னு கோபத்துல்ல தம்பி கதவைச் சாத்துகிறார்.

செய்வதறியாது தவித்து நிற்கும் விவாஜி அன்ட் கோவை நோக்கி சாந்த முகத்தோடு அந்த மதிப்பிற்குரிய பதிவர் வருகிறார்.

"முருகா..இங்க என்னப் பிரச்சனை.. சொல்லுங்க முருகா" அப்படின்னு கேக்குறார்.. அந்தப் பதிவர் யார்ன்னு நான் சொல்லணுமா?

"சார்.. இவங்களுக்கு வேலைக் கொடுக்கலாம்ன்னு முடிவு பண்ணிட்டேன்...ஆனா இவங்க இன்டர்வியூ பண்ணாம எப்படி வேலைக் கொடுப்பீங்கன்னு கேட்டாங்க சரி...அப்படின்னு எங்க ஆபிஸ் மொத்தமும் கிளம்பி வந்திருக்கோம்.. வாங்க இன்டர்வியூ பண்ணலாம்ன்னா வர மாட்டேங்குறாங்க...இவர் பெனாத்தல் சுரேஷ்.. எங்க ஆபிஸ் சீனியர் மேனேஜர்.. இவர் கோவியார் எங்க ஆபிஸ்ல்ல இன்னொரு சீனியர் மேனேஜர்..."

"ஓ...அப்படியா செய்தி... யோய் ஜொ.பா.... பாருய்யா... உனக்கு வேலை கொடுக்க இல்ல வந்து இருக்கார்.. வெளியே வாய்யா..."

கதவு திறக்கப் பட நேரமாகிறது... நம்ம ஜி.ரா. விவாஜியைப் பார்த்து கேட்கிறார்...

"ஆமா என்ன வேலை கொடுக்கப் போறீய?"

"இது விவசாயம் சம்பந்தப் பட்ட வேலை....கிரவுண்ட் நட் டெக்னாலஜி..." விவாஜி பிஸ்து விட...

"அட விவசாயமா.. நம்ம தாமிரபரணி ஓரமா தூத்துக்குடியிலே பாக்காத விவசாயமா... திருச்செந்தூரானை வணங்கும் எனக்குத் தெரியாத விவசாயமா.. இதுக்குப் போய் அவன் வீட்டுக் கதவைத் தட்டுறீய...பழனியிலே ஒரு ஏக்கர் நஞ்சை... திருப்பரங்குன்றம் பக்கம் ஒரு ஏக்கர் புஞ்சைன்னு என் கிட்ட ரெண்டு ஏக்கர் வாங்க வந்து நம்மளை இன்டர்வியூ பண்ணலாம்... உங்க கிரவுண்ட் டெக்னாலஜியை நான் பண்ணுறேன் உங்களுக்கு..."

ஜி.ரா சொன்னதைக் கேட்டு சிபி நமுட்டுச் சிரிப்பு சிரிச்சுகிட்டு "விவாஜி சார் கிட்ட த் தான் 2 ஏக்கர் இருக்காமே பேசாம உன் கிரவுண்ட நட் டெக்னாலஜி வேலையை சார் கிட்டயே கொடுத்துருவோமா?"

"நோ... நோ.... பயத்தில் விவாஜி அலறிவிட்டு..
ஒரு ஆம்பளை இன்னொரு ஆம்பளைக் கூட கிரவுண்ட் நட்டா... அதர் ஆப்ஷன்ல்ல உங்களுக்கு ஆப் வைக்கிறேன் இருங்க சிபி அப்படின்னு சிபி காதில் மெல்ல சொல்லிட்டு..மறுபடியும் குரல் உயர்த்தி...

"இல்லங்கய்யா முதல்ல அவங்களுக்குத் தான் வேலை தர்றதாச் சொன்னோம்.. சோ அவங்களைத் தான் இன்டர்வியூ பண்ணனும்...மன்னிச்சுருங்க.." மறுபடியும் கதவைத் தட்டுகிறார் விவாஜி. சிபி செமக் கடுப்பில் நிற்கிறார்.

"சரி தம்பி...அங்கேயே போய் இன்டர்வியூ பண்ணுங்க... அவங்க வேலைக்கு ஒத்துக்கல்லன்னு என் கிட்ட வாங்க கிரவுண்ட் நட்டோ போல்ட் நட்டோ ஒரு இறுக்கு இறுக்கிறுவோம்.. நான் இருக்கேன் என் கிட்ட 2 ஏக்கர் இருக்கு மறந்துராதீங்க.. ஒண்ணு நஞ்சை.. இன்னொன்ணு புஞ்சை....."

"ஐயா சரிங்கய்யா" அப்படின்னு விவாஜி சொல்லும் போது... சிபியின் மொபைல் ரிங் ஆகுது...

சிபியின் முகம் மறுமுனையில் இருந்து வந்த செய்தி கேட்டு இறுகுகிறது...

"சிபி என்னாச்சு?" விவாஜி கேட்க...

"விவாஜி நாம மோசம் போயிட்டோம்ப்பா.. மோசம் போயிட்டோம்....." சிபி அழுதுக் கொண்டே சொல்ல..

"சிபி என்னாச்சு சொல்லுங்க அப்படின்னு விவாஜி பயங்கர எமோஷ்னலாக் கேட்க ( இந்த இடத்தில் தியேட்டரே விவாஜி கூட சேர்ந்து எமோஷனல் ஆவுது)

"விவாஜி நாம ஆரம்பிச்ச பிளாக்கை பிளாகர் பீட்டாவுக்கு மாத்திட்டாங்களாம்ப்பா.... நாம் இதுவரைக்கும் போட்ட மொக்க கடலை எல்லாம் இப்போ படிக்கறவங்களுக்கு கட்டம் கட்டமாத் தான் தெரியுதாம்ப்பா... உன்னோட மொத்த உழைப்பும் இப்போ கட்டம் கட்டமாப் போச்சேப்பா"

"என்ன சிபி விளையாடுறாங்களா... அப்படி இப்படி கஷ்ட்டப் பட்டு... என்னவெல்லாமோ பண்ணி ஒரு பிளாக் ஓப்பன் பண்ணா... இப்போ டக்குன்னு பீட்டாவுக்கு மாத்திட்டோம்ன்னா என்ன அர்த்தம்...பேட்டாவால அடிப்பேன்....ஒவ்வொரு விட்ஜட் பண்ணது.. பின்னூட்டம் போட்டது எல்லாம் என்னப் பண்றது...."

"சிபி நீங்க பிளாகருக்கு மெயில் போடுங்க.... கேளுங்க... இது வரைக்கும் போட்ட பதிவு.. பின்னூட்டம் ... சைட் பார்ல்ல பண்ண டெக்ரேட்டிவ் விஜிட்ஸ் எல்லாம் எங்கேப் போச்சுன்னு கேளுங்க..."

"கேட்டேன் விவாஜி... அதுக்கு அவன் நான் பிளாகர் இல்லை.. அதெல்லாம் பழைய கோஷ்ட்டி...இப்போ நான் பீட்டா பிளாகர் புது பார்ட்டி... நிறைய செலவு பண்ணி புது புது பீச்சர் எல்லாம் இன்ட்ரோ பண்ணியிருக்கோம்... நீங்களும் புதுசாத் தான் எல்லாம் பண்ணனும் அப்படின்னு சொல்லுறான்...CO(A)ST OF POLITICS (read with malayalam accent) ஜாஸ்தியாடுச்சுன்னு வேற பஞ்ச் அடிக்கிறான விவாஜி..."

விவாஜி அப்படியே பிலீங்க்கா உட்காருகிறார்.

"அது மட்டுமில்ல விவாஜி.. புது பீட்டா பிளாகருக்கு பாராட்டு எல்லாம் தெரிவிச்சு வெட்டிகாரு உன்னையே கவுக்கணும்ன்னே.. பதிவு எல்லாம் போட்டு மெயில் எல்லாம் அனுப்பியிருக்கார்... எல்லாரையும் பீட்டாவுக்கு மாத்தி உன்னைப் பிளாக்குக்கு டாட்டா காட்ட வைக்கப் போறார் விவாஜி"

அப்போது சல்லென்று கார் ஒன்று வந்து நிற்க அதில் இருந்து வெட்டியும் புலியும் இறங்குறாங்க...

"அய்யோ என்ன விவாஜி இப்படி ஆயிருச்சு...உங்க பிளாக் இப்போ வெறும் கட்டம் கட்டமாத் தான் தெரியுதாம்.. நீங்க ரெக்ரூட்மெண்ட் பண்றேன்னு இங்கே வந்தப்போ எல்லாரும் பீட்டாவுக்கு மாறி உங்களைக் கவுத்துட்டாங்களாமே...இப்போ என்னப் பண்ணப் போறீங்க விவாஜி...."

விவாஜி எழுந்து இடுப்பில் கை வைத்து ஸ்டைல் காட்டுகிறார்...கையில் ஒரு பப்பிள் கம் எடுத்து வானத்தை நோக்கி போடுகிறார்..

"ம்ம் விவாஜி... என்னப் பண்ணப் போறீங்க விவாஜி...செல் பில் ஏறுனாலும் பரவாயில்லன்னு போன்ல்ல கடலைப்போடப் போறீங்களா.. இல்ல சிக்கனமா எஸ்.எம்.எஸ் அனுப்பி வறுக்கப் போறீங்களா..இல்ல இதெல்லாம் வேணாம்ன்னு மறுபடியும் ஆபிஸ்ல்ல ஒழுங்கா வேலைச் செய்யப் போறீங்களா....ஆனா அதுக்கு எல்லாம் முன் அனுபவம் வேணுமே.. உங்களுக்கு அது இல்லையே

நான் ஒரு வேலை சொல்லவா... பேசாம அனானியா மாறி பின்னூட்டம் போடுங்க... பீட்டா பிளாகர்ல்ல நீங்க போடுறதுக்குன்னு நான் ஒரே ஒரு பின்னூட்டம் தர்றேன்.. இதை அப்படியே கட் காப்பி பண்ணி எல்லாருக்கும் போட்டு பொழைச்சுக்கோங்க.....

வெட்டிகாரு தன் லேப் டாப் திறந்து ஒரு பின்னூட்டத்தை விவாஜி மெயில் ஐடிக்கு தட்டுகிறார்...தட்டி விட்டு நக்கல் சிரிப்பு சிரிச்சுட்டு கிளம்புகிறார்.

சிபி கண்டபடி எமோஷ்னல் ஆகி "விவாஜி உனக்கு இந்த பிளாக் கடலை எதுவும் வேணாம் நீ ஊருக்கேப் போயிரு....போயிரு விவாஜி"அப்படின்னு அழுவுறார்.

"நான் போயிட்டா நைசா நயந்தாராவைத் தட்டிக்கலாம்ன்னு கணக்குப் போடுறீயா நான் போக மாட்டேன் சிபி" மனசுக்குள் விவாஜி சொல்லுகிறார்

சிபி நான் முடிவு பண்ணிட்டேன்.. இப்போ கீழே விழுற பப்பிள்கம் உங்க வாயிலே விழுந்தாச் சங்கப் பாதை...என் வாயிலே விழுந்தாச் சுரங்க பாதை...

சரி பப்பிள்கம்மைப் போடு என சிபி வாயைத் திறக்க...

ஏற்கனவே போட்டாச்சு அக்கடச் சூடு...விவாஜி காட்டும் இடத்தில்.. பப்பிள்கம் வானத்தை இடித்து ( கிராபிக்ஸ் தான்) கீழே வேகமா வருகிறது... விவாஜி வாயையும் சிபி வாயையும் எடிடி பண்ணி மாத்தி மாத்திக் காட்டுறோம்...

கடைசியா.. மூடுன வாயை விவாஜி திறக்க... பப்பிள்கம் அவர் வாயில் விழுகிறது..ஒரு கையால் சிபி வாயை மூடும் விவாஜி ஆடியன் ஸ் பார்த்து சொல்லுகிறார்... இனி சுரங்கப் பாதை தான்.. அப்படின்னு

சூவோ மான்க்கோ சூவோ மான்கோ... சூசோசயங்....சூசோயங்க்.. அப்படின்னு பயங்கர பிஜிஎம்.. விவாஜியை போகஸ் பண்ணுறோம்.. பப்பிள்கம் மெல்லும் போது பிரீஸ் பண்ணி இடைவேளை போடுறோம்..

அவுட் ஆப் போகஸ்ல்ல... சிபி தலைக்கு மேல ஒரு வார்த்தை பேச ஒரு வருசம் காத்திருந்தேன்...சாங்க் வரியெல்லாம் ஜம்பல் ஆகி ஓடுது.....

GO GRAB UR POP CORN

Wednesday, October 03, 2007

சங்கம் வழங்கும் விவாஜி - 4

அவ்வையார் ஆரம்ப பாடசாலைக்கு முன் விவாஜியின் டிராக்டர் வந்து நிற்கிறது... சிபி டிராக்டரில் இருந்து குதித்து இறங்குகிறார்.

"ஏய் அனானி என்ன மேன் இது... ரெக்ரூட்மென்ட் சொல்லி இங்கே கூட்டிட்டு வந்துருக்க...எல்லாம் சின்னக் குழந்தைங்கடா...வாட் டூ யூ திங்க்" விவாஜி பதறுகிறார்.

"விவாஜி வாசல்ல பாரு.. நல்லா பாரு.."

சிபி கைக்காட்டும் இடத்தில் ஒரு பாட்டி கடலை, பட்டாணி, சுண்டல், மாங்கா, எல்லாம் வித்துகிட்டு இருக்கு..

"பார்த்தீயா.. கை நிறைய சுண்டல்.. நீ கேட்ட கடலைப் பார்ட்டீ..என்னப் பார்ட்டீ இப்போ பாட்டியாயிடுச்சு உனக்கு ஓ.கேவா?"

"அட பாவி அனானி இந்த ரேஞ்சுக்கு என்னக் கலாயக்குறீயேடா..."

"பின்னே என்ன விவாஜி.. இன்னிக்கு பொண்ணுங்க எல்லாம் பீசா, பர்கர்,பாஸ்தா, ஸ்பெக்கிட்டின்னு ஜாயின்ட்க்கு ஜாயின்ட் பாயின்ட் பண்ணிகிட்டு இருக்காளுக.. இந்த நேரத்தில்ல கடலை.. பட்டாணின்னு பேசுனா இப்படித் தான் ஆள் கிடைக்கும்.. நீ கேக்குற பொண்ணுங்க எல்லாம் கே.ஆர்.விஜயா காலத்தோட மலையேறிட்டாங்க..." சிபி பேசிகிட்டு இருக்கும் போதே பேக் கிரவுண்டில் ஒரு சுத்த தமிழ் வெண்பா பாட்டா ஒலிக்குது (உபயம்: கொத்தனார், வெண்பா வாத்தி மற்றும் வாஞ்சி நாதன் அய்யா)

"ஆகா நான் தேடுற கடலைப் பொண்ணு கிடைச்சுட்டா..."

"எங்கேஜி"

"அங்கேப் பாரு உன் தங்கச்சி"

பாட்டியிடம் ஒரு ரூபாய் கொடுத்து நாலு கடலைப் பொட்டலம் வாங்கிக் கொண்டிருக்கிறார் நயந்தாரா

"விவாஆஆஆஆஆஆஜி"

"சூ..சும்மா இரு அனானி..." விவாஜி நயந்தாரா பின்னால் போகிறார். சிபி கடும் டென்சன் ஆகிறார்.

"விவாஆஆஆஆஆஆஜி"

விவாஜி எதைப் பற்றியும் யோசிக்காமல் நயந்தாரா பின்னால் நடக்கிறார். கடுப்பான சிபி மொபைல் எடுத்து 100க்கு போன் போடுகிறார்.

விவாஜி அப்படியே நடந்து நயந்தாரா வீடு வரைக்கும் போகிறார்... சிபியும் கடும் வெறியோடு பின்னால் போகிறார்.. போற வழி எல்லாம் போலீஸ்க்கு வழி சொல்லிக் கொண்டே போகிறார்...

நயந்தாரா வீட்டு கதவை விவாஜி தட்டுகிறார்.

கதவைத் திறப்பது ஜொள்ளுபாண்டி....

"உங்களுக்கு என்ன வேணும்?"

"நாங்க தேடுஜாப்ஸ்.காம்ல்ல இருந்து வர்றோம்.. க்கு எங்க கிளையண்ட் கம்பெனியில்ல நல்ல வேலை இருக்கு அதான் கையோட அப்பாயின்ட்மெண்ட் ஆர்டர் கொண்டு வந்திட்டோம்...அதைக் கொடுக்கணும் அவங்களைக் கூப்பிடுங்க.." அப்படின்னு விவாஜி ஒரு பிட்டைப் போட.. சிபி கடும் டென்சன் ஆகிறார்.

"சார் தான் கம்பெனி புராஜக்ட் மேனேஜர்" அப்படின்னு விவாஜி சிபியையும் சேர்த்துக் கொள்ள சிபி கொஞ்சம் கூல் ஆகிறார்.

"ஆமா எனக்கு தங்கச்சி இருக்குன்னு உங்களுக்கு எப்படித் தெரியும்?"

"அட என்ன அண்ணே.. உங்க முகத்தைப் பார்த்தாலே தெரியுதுண்ணே ஊர் முழுக்க உங்களுக்குத் தங்கச்சியா இருக்கும்ன்னு..." விவாஜி ஜொ.பாவைச் செல்லமாய் கிள்ள..

"இன்டர்வியூவா.. அது சரி.. ஆனா என் தங்கச்சிக்கு அப்பாயிண்ட்மெண்ட் ஆர்டர் எல்லாம் டூ மச்..என் தங்கச்சி அஞ்சாம் கிளாஸே இன்னும் பாஸ் பண்ணல்லயே...அப்புறம் எப்படி சார் அப்பாயிண்ட்மெண்ட் ஆர்டர் எல்லாம் .."

"இதென்ன பிரமாதம் .. எனக்கு முதல்ல அப்பாயிண்ட்மெண்ட் கிடைக்கும் போது.. நான் நாலாம் கிளாஸ் கூட முடிக்கல்ல.. " என விவாஜி ஒரு ப்ளோவுல்ல சொல்ல...

"என்னாது?" ஜொள்ளுபாண்டி ஜெர்க்காக..

"ஆமா ஆனா அப்பாயின்ட்மென்ட் கிடைச்சதும் இவர் 5, 6, 7,8,9,10, 11,12.. பி.இ, எம்.பி.ஏன்னு மள மளவென படிச்சு பாஸ் ஆயிட்டார்" அப்படின்னு சிபி குறுக்கு பதில் சொல்ல ஜொ.பா. குழம்புகிறார்.

"உங்க பேர் என்ன?" சிபி அடுத்தக் கேள்வியைக் கேக்க

"என் பெயர் ஜொள்ளுபாண்டி"

"ஆகா ஜொ.பா.. உங்க பேருக்கே எங்க கம்பெனியிலே ஒரு நல்ல வேலை இருக்கே... அப்பாயின்ட்மென்ட் ரெடி பண்ணிடுறோம்"ன்னு சொல்ல

"எனக்கு எதுக்கு வேலை நான் ஏற்கனவே நல்ல வேலையிலே தானே இருக்கேன்.."

"பரவாயில்ல சார்... அந்த வேலையை விடுங்க வாங்க சார் அப்பாயிண்ட் பண்ணலாம்" விவாஜி அடம் பிடிக்க...ஜொ.பா. குழம்பிய கேப்பில் சிபியும் , விவாஜியும் வீட்டுக்குள் நுழைகிறார்கள்.

உள்ளே நயந்தாராவை வரச் சொல்லி அப்பாயிண்ட்மெண்ட் ஆர்டர் என்ற பெயரில் லவ் லெட்டர் கொடுக்கிறார் விவாஜி.

அதைப் படித்து விட்டு நயந்தாரா பயங்கர டென்சன் ஆக பயங்கரமாக கத்தவும் போலீஸ் வரவும் சரியா இருக்கு...

போலீஸ் யார்ன்னு பாக்குதீயளா...நம்ம அண்ணாச்சி ஆசிப் மீரான் அவருக்கு அஸிடெண்ட்டா நம்ம பெங்களூர் மோகன் தாஸும் தான்.

போலீஸைப் பார்த்தவுடன் விவாஜியும் நம்ம சிபியும் பம்மி நிற்க...

"எலேய் என்னலே இது.. செத்த மூதிகளா.. ஒரு பொட்டபுள்ளையை மூக்கும் முழியுமாப் பாத்துற பிடாதே.. ஓடனே லவ் லெட்டரைத் தூக்கிட்டு வந்துறுவீயளா.... உங்க வயசு கோளாரைச் சரி பண்ணத் தான் வீக் புல்லா லொள்ளு வீக் என்ட் ஜொள்ளுன்னு நாங்க வேற சிறப்பு சேவை எல்லாம் செய்துகிட்டு வர்றோம்ல்லா.. எதுக்கு இப்படி அப்பாவி புள்ளயளை வம்பழுக்கிய... ஏப்பூ மோகனா இவனுவளை உன் டிவி.எஸ் பின்னாலே கட்டி ஸ்டேஷனுக்கு கூட்டிட்டு போ.. நான் அந்த புள்ளகிட்ட ஒரு நாலு வார்த்தை ஆறுதல் சொல்லிட்டு வாரேன்னு" நயந்தாரா பக்கம் அண்ணாச்சி போக... மோகன் தாஸ் அங்கேயே நிற்கிறார்.

அடுத்தக் காட்சி போலீஸ் ஸ்டேஷன்...

கம்பிக்குப் பின்னால் விவாஜியும் சிபியும் நிற்க... படு ஸ்டைலாக நம்ம பெனத்தாலாரும் கோவியாரும் உள்ளே வர்றாங்க...

"யார் சார் இங்கே இன் ஸ்பெக்டர்.. யார் சார் எங்க விவாஜியை அரெஸ்ட் பண்ணது..?"
பெனத்தலார் கேக்குறார்.

"யாருவே அங்கன நின்னு பெனத்தறது.. இங்கண வாரும்வே... என்னடே பிரச்சன.. ஸ்டேசன்ல்ல வந்து சத்தம் போடுதீரு.." அண்ணாச்சி எழுந்து வருகிறார்

"சார் இவர் விவாஜி ரொம்ப நல்லவர்...அமெரிக்காவுக்கும் எல்லாம் இங்கிலீஸ்ல்ல விவசாயம் பண்ணவர்..கிரவுண்ட் நட் பிரேக்கிங் டெக்னாலஜியில்ல விர்ஜினியா யுனிவர்சிட்டியிலே டாக்டர் பட்டத்துக்கு அப்ளை பண்ணியிருக்கார்...என்னோட அனுபவச் சிதறல்கள்ல்ல இவரை மாதிரி ஒரு திறமைசாலியை நான் பார்த்ததே இல்ல..."

"அனுபவச் சிதறலா.. அடங்குடா மவனே...." அண்ணாச்சி கொஞ்சம் கோபப்பட..

"ரைட்டு... அதே தான் கிரவுண்ட் நட் டெக்னாலஜியிலே இவரை அடங்குடா மவனேன்னு நிறைய பேர் அடக்கப் பாத்தாங்க ஆனாலும் இவர் அடங்கல்ல...அவ்வளவு ஜீனியஸ்..விவாஜி... இது அவர் மெயில் அட்ரஸ், இது அவர் பிளாக் அட்ரஸ், இது அவர் வெப் அடரஸ்..."

"பெனத்தலார் சார்..IT IS A MISTAKE அந்த லெட்டர் நான் எழுதவே இல்ல.. டூ அட்ரஸ்ல்ல அவங்க பேர் போட்டிருந்துச்சு அதான் கொடுக்கப் போனேன்...அதுல்ல சின்னக் குழப்பமாகி போலீஸ் அங்கிள் எங்களை அரெஸ்ட் பண்ணிட்டார்..."

ஆசிப் அண்ணாச்சி லெட்டரைப் பிரித்துப் படிக்கிறார்.. கீழே அன்புடன் சிம்பு அப்படின்னு எழுதி அதுக்கும் கீழே அஞ்சு விரலோடு ரேகையும் கை நாட்டா இருப்பதைச் சொல்கிறார்...

"ஓ...நோ நாட் சிம்பு " அப்படின்னு நயன் கோபமாச் சொல்ல...அந்தச் சாக்குல்ல விவாஜி நயன் பக்கம் போயிடுறார்...மயக்கம் போடப் போன நயனைத் தாங்கிப் பிடிக்க ட்ரை பண்ண நயன் உஷாராகி சேரில் உட்கார...விவாஜி பிலீங்க் ஆகிறார். அதைப் பார்த்து சிபி லேசா சிரிக்க...

"ஆமா நயன் உங்களுக்கு சி ல்ல ஆரம்பிக்கற பேர் இருக்கவங்களைக் கண்டாலே பிடிக்காது கரெக்ட்டான்னு சிபியின் தலையில் இடி வைப்பதாய் பேச... சிபி கொஞ்சமும் கூச்சமின்றி நயனிடம் சென்று உங்களுக்கு சி தானே பிடிக்காது ... என் பேர் பித்தானந்தா... நீங்க பித்துன்னு செல்லமாக் கூப்பிடுங்க... நைஸ் டூ மீட் யூ எனக் கை குலுக்குகிறார்...

நயன் டக்கெனக் கையை உதறி விட்டு..

"யார் சார் நீங்க....உங்க பேர் என்ன?" அப்படின்னு கேக்க...

அப்பாடா... இதுக்குத் தான் இவ்வளவு நேரம் காத்திருந்தேன்.. எங்கே பஞ்ச் டயலாக் சொல்ல வாய்ப்பே இல்லாமப் போயிடுமோன்னு பயந்துப் போயிட்டேன்...

"பேரைக் கேட்டாச் சும்மா அதிரும் இல்ல... நீங்க அதிர்ச்சித் தாங்க மாட்டீங்க அதுன்னால நான் சொல்ல மாட்டேன்...ஹா...ஹா... அக்கடச் சூடு அப்படின்னு விவாஜி விரலைச் சுற்றுகிறார்... ஜெயில் கம்பி எல்லாம் வளைந்து நெளிந்து கிராபிக்ஸ்ல்ல விவாஜி - த பார்மர் அப்படின்னு தெரியுது...

நயன் ஒரு நிமிடம் அப்படியே மயங்கினாலும் சுதாரித்துக் கொண்டு.. இருந்துட்டுப் போங்க.. நீங்க விவாஜியாவே இருங்க..ஆனா உங்க கம்பெனியில்ல எல்லாம் என்னால வேலை செய்ய முடியாது...

"ஏன்?"

"அய்யோ அதெல்லாம் எப்படிங்க ஒரு இன்டர்வியூ கூட இல்லாம ஒரு வேலை... அதெல்லாம் முடியாது"

ஓடனே...பாக்கெட்டில் இருந்த தேன் முட்டாயை எடுத்து சீலிங்ல்ல அடித்து தன் வாயில் போடும் விவாஜி....

"YES U R RIGHT...இன்டர்வியூ இல்லாம வேலைக்குச் சேர முடியாது கரெக்ட்... அப்படின்னா நான் உங்களை இன்டர்வியூ பண்ணனும்... இந்த வாரம் சனிக்கிழ்மை பதினோரு மணிக்கு உங்க வீட்டுக்கு உங்களை இன்டர்வியூ நானும் என் ஹெச்.ஆர் டீமும் வந்து இன்டர்வியூ பண்ணுறோம்... ஓ.கே...COOL..."

"எப்பவுமே ஆம்பளைங்க தான் பாவம் அண்ணாச்சி.. ஒரு ஆம்பிளைக்காவது இப்படி வீடு தேடி வேலை வந்து இருக்கா... பொம்பளைங்க எல்லாம் கொடுத்து வச்சவங்க... "அப்படினு ஒரு குரல் வந்த திசையில் ஸ்டைலாய் நின்னது மோகன் தாஸ்...

Tuesday, October 02, 2007

சங்கம் வழங்கும் விவாஜி - 3

விவாஜி உருவான கதையை உங்க கிட்ட சொல்லிகிட்டு இருக்கேன்... விவாஜி படத்துல்ல பாடல்கள் பட்டயக் கிளப்ப போறது உறுதி.. ஏன்னா படத்துல்ல பாட்டு எழுதப் போறது நம்ம கன்னாபின்னா கவிசாம்ராட் சிபி அவர்கள்.. சிபியார் ரெண்டு பாட்டு எழுதுறார்.. மத்தப் பாடல்களுக்கு கவி ஆல்ப்ஸ் அய்யனார் அவர்களிடமும், கவிதாயினி விமர்சன வித்தகி காயத்ரி அவர்களிடமும் பேச்சு வார்த்தை நடந்து வருகிறது.. இது தவிர சின்னத் தல ராமும் மதுரை தேனி மெயின் ரோட்டுல்ல ஒரு புளிய மரத்தடியிலே நின்டுகிட்டே ஒரு முக்கிய பாடலுக்கான வரிகளை யோசிச்சிட்டு இருக்கார்ங்கறதையும் சொல்லிடுறேன்...


கவிஞர்கள் எல்லாம் கதைக் கேக்க கிளம்பி வந்தாங்க... போன தடவை விட்ட இடத்திலே இருந்து அவங்க கிட்டக் கதையைச் சொன்னேன்.. நீங்களும் கேளுங்க.. வெட்டிகாரு கிட்ட சவால் விட்டுட்டு வெளியே வர்ற சிவாஜி கிட்ட அவர் கம்பெனி சீனியர்ஸ் ஒரு முக்கியமான புரொஜக்ட் தர்றாங்க... அதுக்கு ரொம்ப முக்கியமான ரெக்ரூட்மெண்ட் அசைன்மென்ட் விவாஜி மற்றும் சிபி கிட்டக் கொடுக்குறாங்க


ரெக்ரூண்ட்மெண்டுக்கு உலக அளவில் இருந்து பெண்கள் கூட்டம் குவிகிறது.. க்யூ கட்டி நிற்கிறார்கள்... விவாஜி அவங்களை எல்லாம் பாத்து மலைச்சு நிக்குறார்...


ஹேய் விவ் வி லவ் யூ என்று பல குரல்கள் கேட்கின்றன...

"யோவ் அனானி.. இங்கே என்னய்யா நடக்குது?"

"விவாஜி நீ ஸ்டார்ட் பண்ணப் போற ஆன் லைன் அக்ரி கல்சுர் புராஜக்ட்க்கு ஆல் கல்சுர் கேர்ஸ் ஆன் லைன்ல்ல நிக்குறாங்க நீ ஓ,கே சொல்லுற பொண்ணுக்கு ஓடனே அப்பாயிண்ட்மெண்ட் ஆர்டர் ரெடி பண்ணிட்டாப் போச்சி.. கமான் சூஸ் த கேண்டிடேட்."


"எஸ் விவாஜி.. உங்க அக்ரிகல்சுர் புரொஜக்ட் சொன்ன ஓடனே.. சும்மா அப்ளிகேஷன்ஸ் குவிஞ்சுப் போச்சு... என்னச் சொல்லுறீங்க" கோவியார் சொல்ல

"உங்க சாய்ஸ் விவாஜி" அப்படின்னு பெனத்தாலாரும் சொல்ல

"அய்யா..இது அக்ரி கல்சுர் புரொஜ்கட்.. எனக்கு வேண்டிய கல்சுர் டமில் கல்சுர்..சுத்தமானத் தமிழ்ல்ல கடலைப் போடத் தெரிஞ்சப் பொண்ணு... எஸ்.எம்.எஸ், மெயில், சேட்டிங்ன்னு எல்லாத்துல்லயும் தமிழ் தட்டும் பெண்"


"தமிழ் தட்டும் பெண்...ம்ம்ம்.... தல பாலா.... கேக்குதா விவாஜி விடுற சவுண்ட்... நீ தான் வந்து பதில் சொல்லணும் இதுக்கு" சிபி கிடைச்சக் கேப்பில் கிடா வெட்டுகிறார்,


இங்கே ஒரு பாட்டு வேணும் அப்படின்னு சிபி கிட்டச் சொல்லுறேன்.. அவர் நோட் பண்ணிக்குறார். அடுத்தாப்புல்ல... நம்ம விவாஜி தன் கடலைச் சேவையை தமிழ் கூறும் நல்லுகத்திற்கு கூற வழி தேடுகிறார்.. தமிழ் பதிவு வளர்ச்சி குறித்த விசயம் என்பதால் பேராசிரியர் தருமி அய்யாவைப் பார்த்துப் பேசும் படி அனுப்பி வைக்கிறார்கள்.. விவாஜியின் அதி ஆர்வமான புராஜக்ட் பற்றி கேட்டறியும் தருமி அய்யாவும் தன்னுடைய மாணவனைப் பார்த்து மேற்கொண்டு பேசும் படி விவாஜியிடம் சொல்லுகிறார்...மாணவனும் மாலையில் மதுரை தல்லாகுளம் பஸ் ஸ்டாண்டுக்கு வரும் படி சொல்லுகிறான் அங்கே அனைத்தையும் தெளிய தெளியப் பேசலாம் என்று சொல்லி அனுப்புகிறான்.

"ம்ம்ம் நீங்க பாரின்ல்ல இருந்து தானே வர்றீங்க... வரும் போது உங்க கூட வெள்ளைக்கார பிகர் எதாவது வந்து இருக்குமே....சாயங்காலம் வரும் போது முடிஞ்சா"

"டேய் இதெல்லாம் ஓவர்..." அப்படின்னு சிபி பொங்கும் போது

"இல்லைண்ணே அந்தப் பிகர் மெயில் ஐடி.. சேட் ஐடி அப்படி எதாவது கொண்டு வாங்கன்னு சொல்ல வந்தேன்"


"ஏனுங்க ஆபிசர் இப்போ உள்ளூர் பிகர் கூட எல்லாம் நீங்க கடலைப் போடறதை நிறுத்திட்டீங்களா"

"இல்லைண்ணே.. உள்ளூர்ல்ல ஒருத்தியும் சேட் எல்லாம் பண்ணுறதில்லைண்ணே... எல்.கே.ஜியிலே சேட்டிங் எல்லாம் முடிஞ்சுப் போயிருதுண்ணே.. என்னைய அவுட் ஆப் சிலபஸ்ன்னு சொல்லி சிலிப்பிட்டுப் போயிறாளுங்கண்ணே.."




அந்த மாணவர் யார்ன்னு உங்களுக்கெல்லாம் சொல்லணுமா என்ன? ஆங் அவரே தான் இவரு...சாயங்காலம் ஜிகர்தண்டாவை கலக்கி குடித்து விட்டு.. கொத்து பரோட்டாவுக்குச் சொல்லிவிட்டு

"விவாஜி சார்.. உங்கப் பதிவு மூலமா கடலைப் போடுற புராஜக்ட அவ்வளவு லேசான விசயம் இல்ல...புதுசா பதிவு போடணும்.. அதுக்கு டெம்ப்ளேட் ரெடி பண்ணணும்.. சுமார் 720 லைன் கோடு எழுதணும்... எழுதண கோடு தவிர கண்ட இடத்துல்ல களவாண்டு சுமார் 400 லைன் காப்பி பேஸ்ட் பண்ணனும்.. 300 விட்ஜிட் வைக்கணும்... 200 லிங்க் கொடுக்கணும்... 100 இடத்துல்ல டேக் பண்ணனும்.. 10 திரட்டியிலே சேர்க்கணும்... 5 சங்கத்துல்ல சேர்க்கணும்.. கும்மி அடிக்கணும்.. கும்மி பதிவர்தெய்வங்கள், மொக்க பதிவர் உபதெய்வங்கள், ஜல்லி பதிவர் குட்டி தெய்வங்கள்ன்னு பின்னூட்டம் வாங்கணும்... இதுக்கெல்லாம் மொத்தமா ஏற்பாடு பண்ணனும்.. "

"சின்னத் தல சார் நீங்க தான் அதுக்கெல்லாம் எப்படியாவது ஏற்பாடு பண்ணணும் சார்?"

"பண்ணிரலாம்.. இந்தப் பதிவு மூலமா எவ்வளவு கடலை போடலாம்ன்னும் இருக்கீங்க...?"

"ஒரு நாலாயிரம் கடலை"

"அதுல்ல ரெண்டு பர்சென்ட்.. நாப்பது கடலையை எனக்குக் கொடுத்துருங்க... உங்க வேலையை நான் முடிச்சுத் தந்துடுறேன்"


"உனக்கு எதுக்கு நான் கடலைத் தரணும்... நான் என்ன வங்கக் கடலை விலைக்கு வாங்கவா உன் பர்மிஷன் கேட்டேன்... ஏழைத் தமிழ் மக்கள் கடலைப் போடுறதுக்கய்யா...." விவாஜி பொங்கி எழுகிறார்.


"அண்ணே நீங்க ப்ரீயா கடலைப் போடுங்கண்ணே... போடச் சொல்லிக் கொடுங்கண்ணே.. நான் எல்லாம் இப்படி உங்க தயவுல்ல போட்டாத் தான்னே உண்டு..."

"அனானி.. அவன் கிட்ட கொடுத்த அந்த பாரின் பிகர் மெயில் ஐடியைத் திருப்பி வாங்குப்பா"

"இந்தாங்கண்ணே.. நீங்களே வச்சுக்கங்க... நான் ஆல் ரெடி அவங்களுக்கு என் லேப் டாப்புல்ல இருந்து ஏ.எஸ்.எல் ப்ளீஸ் அனுப்பிட்டேனே..."

"அட கண்றாவியே... இம்புட்டு வறண்ட தேசமாடா நீயு... போடா" என்று புறப்படுகிறார் விவாஜி.."


அடுத்து விவாஜி ஒவ்வொரு இடமாக அலைகிறார்..

"உங்களுக்கு தமிழ் டைப்பிங் தெரியுமா?"

"உங்க ப்ரவுசர் தமிழ் பாண்ட் சப்போர்ட் பண்ணாது போலிருக்கே"
"உங்க இன்டநெட் கனெக்ஷ்ன் சரியில்ல"

"உங்க கீ போர்ட்ல்ல கீ எல்லாம் சரி இல்ல"

"உங்களுக்கு HTML தெரியுமா? எதுக்கும் ஒரு கோர்ஸ் போயிருங்க..."

"உங்க பிளாக் டெம்ளெட் சரியாத் தெரியல்லயே"

"உங்க டெம்ளெட் இந்த விஜிட் எல்லாம் சப்போர்ட் பண்ணாது..எப்படி சேர்த்தீங்க?"

"ம்ம்ம் இந்தப் பதிவைத் திரட்டியிலே சேர்க்க நீங்க இந்தக் கோட் சேர்க்கணுமே"

விவாஜி ஒரு பதிவு இடுவதில் இருக்கும் மொத்தக் குழப்பங்களையும் கண்டு வெதும்பி நொந்து நூலாகி மறுபடியும் தல்லாக்குளம் பஸ் ஸ்டாண்டுக்கே வருகிறார்...

அங்கு மீண்டும் நம்ம மாணவன் விவாஜியைச் சந்திக்கிறார்...விவாஜி செலவில் அங்கு போண்டாக்களும் இடலி வடைகளும் பரிமாறப் படுகிறது...அவர் செலவில் செமக் கட்டு கட்டும் வ.வா.சங்கம் சார்ந்த பதிவர்கள்... விவாஜிக்கு வேண்டிய அனைத்து உதவிகளையும் செய்து பதிவு போட உதவி செய்கின்றனர்...

ஒரு பதிவு போட இவ்வளவு பாடு படணுமா? யோசிக்கிறார் விவாஜி...

அவருக்குப் பின்னால் வேளாண் தமிழன் விவாஜி ஆன் லைன் கடலை கல்வி மையம்.காம் மெல்ல கிராபிக்ஸ்ல் உதயமாகிறது...

விவாஜியின் பதிவு உதயம் ஆகும் செய்தி புலி மூலம் வெட்டியை எட்டுகிறது..


ஆனா இதுப் பத்தி எல்லாம் கவலைப் படாமல் நம்ம விவாஜி தன்னுடைய புராஜக்ட் ரெக்ரூமெண்ட் விசயமா பெங்க்ளூர் காலேஜ்க்கு பயணமாப் போறார்....

விவாஜியின் கதை இன்னும் வரும்....

சங்கம் வழங்கும் விவாஜி - 2

கதைச் சொல்லி ஒரு நாள் ஆன நிலையில் அந்த போன் வந்துச்சு

லைன்ல்ல வந்தது சங்கத்து சிங்கம் தல கைப்புள்ளயே தான்..

"உன் கதையைப் படிச்சேன்.. ஆரம்பம் எல்லாம் அசத்தலாத் தான் இருக்கு.. எனக்கு பிடிச்சிருக்கு.. அதுவும் விவாஜிங்கற அந்த பேர் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு.. என் உதவி எதாவது தேவைன்னா டக்ன்னு சொல்லு கிளையண்ட் வந்து என்னைக் களைப் புடுங்க கழுத்துல்ல கிடக்க கார்டு கயித்தோட இழுத்துகிட்டு போறதுக்குள்ளேச் சொல்லு"

" நம்ம விவாஜியில்ல ஒரு முக்கிய ரோலுக்கு ஒரு முக்கியமான ஆளு வேணும் தலண்ணே.. உங்க செல்வாக்கைப் பயன் படுத்தி அவர் சம்மதம் வாங்கி தாங்க தலண்ணே.. "

"ஆகா அது என்ன ரோலு.. சொல்லு... விவாஜின்னு நீ படம் எடுக்குற அந்த ஒரே காரணத்துக்காகவே நானே நடிச்சித் தர்றேன் காசு கூட வேணாம்ய்யா"

"தலண்ணே.. அந்த ரோல் உங்களுக்கு செட் ஆகாது.. ரசிகர்கள் ஒத்துக்க மாட்டாங்களே"

"ஏன்? அப்படி என்ன ரோல் அது...? என் நடிப்புக்கு சவால் விடுற ரோல்..?" தலண்ணே போனிலே டென்சனாக

"தலண்ணே.. அது வில்லன் ரோல் தலண்ணே.."

"ஆமா சரி தான்.. நான் வில்லனா நடிச்சா நாடே நாகரீகம் கெட்டுப் போயிருமே... சரி யாரை வில்லனாப் போடப் போற.. நான் வேற ரெகமண்ட் பண்ணனும்ன்னு சொல்லுற.."

"தலண்ணே.. வில்லன் கேரக்டர் பேர் "வாரங்கல் வெட்டிகாரு" இப்போ உங்களுக்கு புரிஞ்சிருக்குமே.." நான் இழுக்க..

"அட என்னப்பா நீயு.. அவன் சாதுவான ஆள் ஆச்சே.. அவனை வில்லனா நினைச்சுக் கூடப் பாக்க முடியல்லயே.. அது மட்டுமில்லாம ஆந்திராவுல்ல அவன் ரேஞ்சு வேற ஆச்சேப்பா.. ஜனங்க ஒத்துக்குவாங்களா.. விவாஜிக்கு அவன் தம்பி மாதிரி இல்ல நம்ம மக்கள் மனசுல்ல அவன் இமேஜ் இருக்கு" தலண்ணே காரணம் எல்லாம் சொல்ல..

"தலண்ணே நான் கதையைச் சொல்லுறேன் நீங்களே அப்புறம் சொல்லுங்க "அப்படின்னு நான் இழுக்க

"ஓ.கே..சட்டுன்னு சொல்லு" அப்படின்னு தலண்ணே சிக்னல் கொடுக்க...

நம்ம கதையை பிளாஷ் பேக்ல்ல ஸ்டார்ட் பண்ணுறோம்.
அப்படியே கதைக்காக கோயம்பேடு பஸ் ஸ்டாண்ட் போறோம்...

அங்கே கோயம்புத்தூர்ல்ல இருந்து வர்ற பஸ் டாப்ல்ல செம ஸ்டைலா ஆரஞ்ச் பேண்ட் அப்புறம் கருப்பு சட்டை கூலிங் கிளாஸ் சகிதமா நம்ம விவாஜி வர்றார்.... அவரை வரவேற்க ஒரு பெரிய கூட்டமே நிக்குது...

தளபதி சிபி படு ஸ்மார்ட்டா ஒயிட் அன்ட் ஒயிட் யூனிபார்ம்ல்ல நிக்குறார்.. அவரைச் சுத்தி ஒரு ஒயிட் அன்ட் ஒயிட்ல்ல ஒரு கும்பல் ஸ்மோக் எபெக்ட்ல்ல நிக்குது

"ஹாய்...ஹாய்...ஹாய்.. நான் தான் கோவி.கண்ணன்.. ச்சே சாரி ஆவி அண்ணன்.. எல்லாரும் விவாஜியைப் பாக்க வந்தீங்களா?" அப்படின்னு கேட்டுகிட்டே என்டிரி கொடுக்குறார் சிபி...

அங்கே பெனாத்தல் சுரேசும் கோவி.கண்ணனும் ( நிஜமான கோவி.கண்ணன் தான்) நிக்குறாங்க...சிபி நிஜமான கோவி.கண்ணனைப் பார்த்து லைட்டா ஜெர்க் ஆகிறார்.

"HI WE R THE RECRUITERS OF VIVAJI "அப்படின்னு பினாத்தலார் சொல்ல

"ஓ.."அப்படின்னு சிபி கூட வந்த ஓயிட் அன்ட் ஓயிட் கும்பல் சவுண்ட் விட...

ஆகா விவாஜியை வேலைக்குச் சேர்த்தவங்களைப் பார்த்ததுக்கே இந்த எபெக்ட்ன்னா விவாஜியைப் பார்த்தா என்னாகுமோன்னு சிபி சொல்ல.. விவாஜி வந்த பஸ் பிரேக் அடித்து விவாஜி பறந்து வருகிறார்...

வாவ் என ஓயிட் அன்ட் ஓயிட் கூட்டம் கத்துறாங்க...
சும்மா தியேட்டரே கதறுதுல்ல...



சிபியைப் பார்த்து விவாஜி ஹே அனானி எப்படி இருக்க? அப்படின்னு கேக்க

யார் நான் அனானியா... அண்ணா நீன்னு கூப்பிடு அது தான் ஒனக்கு மரியாதை அப்படின்னு சொல்லுறார் சிபி..

"இவங்க எல்லாம் யார் மேன்?" அப்படின்னு விவாஜி கேக்க...

"இது ஆவி அண்ணாச்சி.. இது ஆவி அம்மணி..இது ஆவி அண்ணா, இது ஆவி தம்பி... "

"ஆக இதெல்லாம் அனானி தானே?" அப்படின்னு விவாஜி டபாய்க்கிறார்.


விவாஜியின் டிராக்டரில் விவாஜி, சிபி, மற்றும் விவாஜியின் புதிய கம்பெனி ரெக்ரூட்டர்ஸ் எல்லாரும் சேர்ந்து கிளம்புறாங்க.. மவுண்ட் ரோட்ல்ல ஷாட் வைக்கிறோம்

"விவாஜி இப்போ எல்லாம் கடலை போடுறது அல்ட்ரா மாடர்ன் ஆகிருச்சு நம்ம சென்னையிலே...மொபைல்... லாப்டாப்..பிராட் பேண்ட்.. இப்படி வேர்ல்ட் ரேஞ்சுக்குப் போயிட்டு இருக்கோம்.."


"IS IT COOL"

அப்போது தேனாம்பேட்டை எஸ் ஐ டி கல்லூரி வாசல் சிக்னலில் விவாஜியின் டிராக்டர் நிற்கிறது. அங்கே ஒரு விடலை பையன் பஸ்ல்ல இருக்கும் காலேஜ் பொண்ணு மேல பேப்பர் அம்பு விட விவாஜி பயங்கர பீலிங் ஆகிறார்.

"ம்ம் எஸ்.எம்.எஸ், எம்.எம்.எஸ்,வாய்ஸ் மெயில், இன்ட்ர் நெட், வயர்லெஸ் இப்படி கடலைப் போட என்னவெல்லாமோ வந்தாச்சு..ஆனா ஏழை மாணவர்கள் கடலைப் போட இன்னும் இந்த பேப்பர் ஏரோ தானே...அது இன்னும் மாறல்ல "

விவாஜி இறங்கிப் போய் அந்த பையனுக்கு தன்னுடைய மொபைல் போனை சும்மா தருகிறார்...அப்போ அதில் ஒரு மெசேஜ் வர் வைப்ரேட்டர் அடிக்கிறது....பையன் கையில் இருந்து செல் வைப்பரேட்டர் அதிர்ச்சியில் எகிறி விழப் போக அதை ஸ்டலா பிடிக்கும் நம்ம விவாஜி கேமராப் பார்த்து பஞ்ச் வைக்கிறார்

மெசெஜ் வந்தா சும்மா செல் எகிறுதுல்ல

அடுத்து சீன் அப்படியே கட் ஆகி ஒரு பதிவர் சந்திப்புக்கு போவுது...

(தலண்ணே இங்கே ஸ்பெஷல் ரோல் பண்ணுறார்.. அவர் கூடவே நம்ம கிடேசன் பார்க் மக்களும் ஸ்பெசல் அப்பியரன்ஸ் தர்றாங்க)

"ஏன் விவாஜி கோயம்புத்தூர் விட்டு இங்கே வந்துருக்கீங்களே.. என்னப் பண்ணப் போறீங்க?" பெனத்தலார் கேட்கிறார்

"அது ஒண்ணும்ல்ல கிராமம் கிராமமா போய் கடலை வளர்த்து சாகுபடி பண்ணியாச்சு. இனிமே சென்னையிலேத் தான் வங்கக் கடலைப் பாத்துகிட்டே கடலைப் போடப் போறேன்... இனி வேற எங்கேயும் போக மாட்டேன்"

"ஏன் விவாஜி இது வரைக்கும் ஒரு ஆறு கோடி கடலைப் போட்டிருப்பீயா?" சிபி கேக்குறார்..

""இல்லை அதுல்ல ஒரு பத்துக் கொறைச்சுக்கோ"

தமிழ்ல்ல கடலை போட முடியாதுங்கறது இல்ல..இங்கே யாரும் சரியாக் கடலைப் போடுறது இல்ல அதான் பிரச்சனை..அதுக்காக எதாவது செய்யணும்ன்னு தான் நான் வந்துருக்கேன்... வெள்ளைக்காரனைப் பாருங்க விதம் விதமா கடலைப் போடுறான்.. இந்திக்காரனும் அவன் பங்குக்கு பக்காவாக் கடலைப் போடுறான். ஆனா நாம இன்னும் கடலைப் போடுறவனைப் பார்த்து பொங்கி பொங்கியே பொழப்பைக் கெடுத்துகிட்டு இருக்கோம்.. அது மாறணும்.." அப்படின்னு நம்ம விவாஜி மைக் பிடித்து பேசும் அதே நேரம் பயங்கர கெட்டப்புல்ல ஆந்திரா மடிப்பு வேஸ்ட்டி கட்டிகிட்டு ஒருத்தர் உள்ளே வர்றார்...

"விவாஜி இது தான் வாராங்கல் வெட்டிகாரு.. பெரிய பதிவர்.. இவருக்கு பிளாக் ஸ்பாட் வேர்ட்பிரஸ் அப்படின்னு எக்கச்சக்கப் பதிவு இருக்கு... ரொம்ப பெரிய கை.. பதிவு சைஸ்க்கு பின்னூட்டமே போடுற அளவுக்கு முக்கியமான புள்ளி " அப்படின்னு சிபி விவாஜிக்கு வெட்டிகாருவை அறிமுகம் செய்து வைக்கிறார்.


"அய்யோ அவர் மிகையாச் சொல்லுறார்..நான் வெறும் வெட்டிப் பயல் தாங்க..ஓட்டணும்ன்னு அவரே என் பெயர் கூட 'காரு' சேத்துச் சொல்லிக் கலாய்க்கிறார்.. உங்களுக்கு என்ன உதவி வேணுமோ கேளுங்க நானே செய்யுறேன்.."

வெட்டிகாரு கையை மடக்கி கும்பிட பக்கத்தில் நிற்கும் புலிக்குட்டி படு பவ்யமாய் ஒரு கார்டை நீட்டுகிறார் அதில் vettttipayal.blogspot.com, vettipayaal.wordpress.com... etc அப்படின்னு நிறைய இருக்கு. விவாஜி அதை வாங்கிப் பாக்கெட்டுக்குள் வச்சிக்குறார்.


அவர் போனதும்... மியூசிக் அலறுது...அப்பா என்னப்பா இது விவாஜி இருக்க ஊர்ல்ல இப்படி கச்சாம்புச்சான்னு பாட்டு சுசீலா அம்மா பாடுன்ன பாட்டைப் போடுங்க அப்படின்னு ஒரு கொரலு பாரத்தா ஜி.ரா நிக்குறார்...

சுசிலா அம்மா பாட்டு ஸ்டார்ட் ஆகி அப்படி ரீமிக்ஸ்ல்ல... பாட்டு பட்டையக் கிளப்புது...


(பாட்டுல்ல பார் ஏ சேஞ்ச் நம்ம சிபி நயந்தாராவோடு ஒரு பல்லவிக்கு பக்காவா குத்துப் போடுறார்)

இதுக்கு அப்புறம் நம்ம விவாஜி வெட்டிகாருவைச் சந்திக்கப் போறார்...
அங்கே....உதவி கேட்டுப் போன விவாஜியை உக்கார வைக்கிற வெட்டி டேபிள்ல்ல ஒரு இன்டர்னேஷ்னல் எபெக்ட்க்காக பில் கிளிண்டனும் ஹிலாரியும் இருக்க போட்டோவை வைக்கிறோம்... பின்னாடி பெரிய சைஸ்ல்ல தலண்ணே கைப்புள்ளவோட போட்டோவையும் வைக்கிறோம்

"இந்தாங்க விவாஜி.. இது உங்க ஜிடாக் ஐடி...அப்புறம் இது ஆர்குட் ஐடி...இது யாஹூ ஐடி... எல்லாம் நானே உக்காந்து உங்களுக்காக கிரியேட் பண்ணிட்டேன்.. இதுல்ல போய் லாகின் பண்ணி ஆரம்பிச்சீங்கன்னா உங்க கடலை கடல் தாண்டி கலகலன்னு கொடி கட்டும்"


"வெட்டிகாரு நாங்க பதிவு போட்டு பின்னூட்டக் கடலை போட வழி கேட்டா.. நீங்க வேற எதோ சொல்லுறீங்களே"ன்னு சிபி இழுக்க


"ம்ஹும் அதெல்லாம் சரி வராதுங்க.. நான் ரெண்டு பதிவு வச்சிருக்கேன் பிளாக்ஸ்பாட்ல்ல ஒண்ணு வேர்ட்பிரஸ்ல்ல ஒண்ணு..பிளாக்ஸ்பாடல்ல ஒரு பதிவுக்கு நூறுல்ல இருந்து நூத்தி இருவது பின்னூட்டம் வரைக்கும் வாங்குறேன்... வேர்ட்பிரஸ்ல்ல அம்பதுல்ல இருந்து தொண்ணூறு வரைக்கும் வாங்குறேன்... இப்போ நீங்களும் பதிவு பின்னூட்டம்ன்னு பங்கு போட வந்தா நான் என்னப் பண்றது..?" வெட்டிகாரு லைட்டான கோவம் காட்ட...

"பரவாயில்லங்க..நானே கடலைப் போட வழி பாத்துக்குறேன் " அப்படின்னு விவாஜி எழும்ப..

"இப்படி தான் இதுக்கு முன்னாடி பதிவு போடுறேன்னு.. பட்டையக் கிளப்புறேன்னு நிறைய பேர் வந்தாங்க.. அவங்களுக்கு எல்லாம் தெலுங்குல்லே பின்னூட்டம் போட்டு பீதியக் கிளப்பிட்டோம்ல்ல.." அப்படின்னு புலி பாய..

"மிரட்டுறீங்களா? இந்த விவாஜி கண்டிப்பா கடலைப் போடுவான்.. ஒரு நாளைக்கு மூணு பதிவு போட்டு முன்னூறு பின்னூட்டம் போட்டு கடலைப் போடுவான்.. நீ என்ன பண்ண முடியுமோ பண்ணு "

என்று வாசலில் இருக்கும் டிராக்டர் நோக்கி ஸ்லோ மோஷனில் போறார் விவாஜி கூட நம்ம சிபியும் போறார்...

"ஆகா சூட்டைக் கிளப்புதே கதை... கிளையண்ட் மண்டை வேற முக்குல்ல தெரியுது.. வந்து நான் முழிக்க முழிக்க முன்னூறு கேள்வி கேப்பானே... சரி அது எம் பிரச்சனை உனக்கு எதுக்கு.. இந்தாப் பொடியா இதுவரைக்கும் ஓ.கே.. நாளைக்கு சாயங்காலம் வெள்ளி கிழமையாச்சா.. வெள்ளைக்கார கிளையண்ட்க்கு உள்ளூர் குவார்ட்டர் வாங்கி ஊத்திவிட்டுட்டு வந்துருறேன்.. மீதி கதையை விளக்கமாச் சொல்லு.... ஆன் ஒரு சின்னக் கரெக்ஷன்...."

தலண்ணே சொன்ன கரெக்ஷன் கீழே சேர்த்தாச்சு.... மீதி கதையை நாளைக்கும் சொல்லுவோம்....

இன்றைய பதிவில் அறிமுகம் ஆகும் சங்கத்து சிங்கங்கள் வெட்டி, சிபி, புலிக்குட்டி, மற்றும் பாசத்துக்குரிய நண்பர்கள் பெனத்தாலர், கோவி.கண்ணனுக்கு நன்றிகளோடு பதிவின் இந்தப் பகுதியினைச் சமர்பிக்கிறேன்.

கிடேசன் பார்க் மக்களுக்கு என் ஸ்பெஷல் நன்றிகள்.

போனப் பதிவில் அபி அப்பாவுக்கு சொல்ல மறந்த நன்றி இந்தப் பதிவில் சொல்லிக்குறேன்

தலண்ணே கைப்புள்ள அவர்களின் பேராசியோடு
சின்னத் தல ராயலாரின் உறுதுணையோடு

சங்கம் புரொடக்ஷ்ன்ஸ் பெருமையோடு வழங்கும்

விவாஜி - THE FARMER

விவாஜி - ரீ ரிலீஸ் - 1

சின்னத் தல ராயலாரின் நல்லாசியோடு சங்கம் புரொடக்ஷன்ஸ் வழங்கும்

விவாஜி - த பார்மர்

"கதையைச் சீக்கிரம் சொல்லுங்கண்ணே.. எங்க டேமேஜர் எந்நேரம் வேணும்ன்னாலும் வந்து என் டவுசரைக் கிழிப்பான்.. " சின்னத் தல கான் கால் போட்டுவிட, கதையோட ஓப்பனிங் சீனைச் சொல்ல ஆரம்பிச்சேன்..

எடுத்த உடனே.. அந்த ஆறாயிரம் பேர் வேலைப் பாக்குற சங்கம் டெக்னாலஜீஸ் ஆபிஸ் கேம்ப்ஸை டாப் ஆங்கிள்ல்ல காட்டுறோம்... பின்னாடி ஓன்னு மியூசிக்...

கேமராவை ஜூம் பண்றோம்..
அப்படியே ஒரு சிஸ்டம் ஷட் டவுண் ஆகுது..
மானிட்டர் ஆப் ஆகுது..
கனெக்ஷ்ன் ஓயர் எல்லாம் கழட்டுறாங்க..
நம்ம ஹீரோவை அப்படியே பிடிச்சி எழுப்பி கூட்டிட்டு போறாங்க...

கையைப் பிடிச்சுட்டு இழுத்துட்டுப் போகும் போது ஆபிஸ்ல்ல ஒரு ஒரு டிபார்மெண்ட்ல்ல இருந்தும் மக்கள் சவுண்ட் விடுறாங்க..

"அய்யோ எங்க பார்மர் எங்களுக்கு எல்லாம் மாசம் பத்தாயிரம் பேருக்கு கடலைப் போடுறது எப்படின்னு ஐடியா கொடுத்தாரே அவரைப் போய் இப்படி பிடிச்சுட்டுப் போறீங்களே"

"ஆறு வருசமா சேட்டிங்க்கெ இல்லாத எங்க ஆபிஸ்க்கு எங்க பார்மர் ஒரு வாரத்துல்ல சேட்டிங் சாப்ட்வேர் எல்லாம் டகால்டியா டவுண்லோட் பண்ணிக் கொடுத்தாரே"

"எங்க பார்மர்க்கு மட்டும் மறுபடியும் சிஸ்டம் கொடுக்கல்ல தமிழ் இணையமே மொக்கையாயிடும்.. ஜல்லி அள்ளி தெறிக்கும்...ஆமா" என சில இளைஞர்கள் ஆவேசப் படுகிறார்கள்.

"அவனை கொறைஞ்சப் பட்சம் பத்து மாசமாவது பெஞ்ச்ல்ல உக்கார வைக்கணும்ய்யா.. நான் சேட் பண்ண பிகரைக் கூட கிடைச்சக் கேப்ல்ல உஷார் பண்ணிட்டான்..." டாப் மேனேஜ்மென்T சொட்டை ஒண்ணு பார்மர் மீது எரிச்சல் கொள்கிறது.

"எஸ் எஸ் அவனை பெஞ்ச் விட்டு எழுப்பவே கூடாது... ஆன் சைட் பிகரை கூட அபேஸ் பண்ணிட்டான்..WE SHOULD NOT LEAVE HIM" இன்னொரு மேனேஜர் பக்க வாத்தியம் வாசிக்கிறார்.

அப்படியே சீன் பெஞ்ச்கு மூவ் ஆகுது...

அட்மின் கேபின் அங்கே நம்ம ஹீரோ நிக்குறார்...

அட்மின் எக்ஸ்கிட்டிவ் நம்ம பார்மரைப் பார்த்துக் கேக்குறார்...

பெயரு.... விவாஜி
தொழில்.. கடலைப் போடுறது...சாரி கோடு எழுதுறது...

அப்புறம் பெஞ்ச்ல்ல போய் உக்காராரு நம்ம பார்மர்.. அங்கே பக்கத்து பெஞ்ச்ல்ல நம்ம அபி அப்பா (கெஸ்ட் ரோல்)

"ஆமா நீ எதுக்குப் பெஞ்ச்க்கு வந்த.. பிராஜக்ட் முடிஞ்சு போச்சா?"

குனிந்தப் படி பார்மர் இல்லை என தலையை ஆட்டுகிறார்...

"அப்புறம் பெர்மான்ஸ் சரி இல்லையா?"

மறுபடியும் பார்மர் குனிந்த தலை நிமிராமல் இல்லை எனத் தலை ஆட்டுகிறார்.

"எதாச்சும் ட்ரெயினிங்கா...?"

அதற்கும் இல்லையெனத் தலையாட்டா அபி அப்பா கடுப்பாகி அப்புறம் என்ன இழவுக்குய்யா இங்கே வந்து குந்திகிட்டு இருக்கன்னு சவுண்டா கேக்க

பயங்கர மீசிக் இங்கேப் போடுறோம்....அப்படியே கேமராவை கன்னாபின்னான்னு ஆங்கிள் வச்சு தரையிலே இருந்து பார்மர் தலையைத் தூக்குறதை எமோஷனலாக் காட்டுறோம்...
பார்மர் சிரிச்சிகிட்டே சவுண்டா சொல்லுறார்....

வேலைச் செஞ்சேன்ய்யா

அடப் பாவமே வேலைச் செஞ்சா பெஞ்சா... அபி அப்பா எமோஷனலாக
மறுபடியும் பார்மர் சிரித்துக் கொண்டே சொல்லுறார்..

பார்மர்ன்னா விவசாயி.. இந்த விவசாயிக்குத் நல்லாத் தெரிஞ்ச வேலை.. கடலைச் சாகுபடி பண்ணுரது.. அதைச் செஞ்சேன்....

அப்படின்னு சொல்லிட்டு ஹா...ஹா...ஹா...ன்னு அவர் பாணியிலே சிரிக்குறார்

"இது தான் சின்னத் தல நம்ம படத்தோட ஓப்பனிங்.. ஓகேவான்னு" நான் பயந்துக் கேக்க...

சின்னத் தல கான் கால் லைன்ல்ல தமிழ் மணத்தின் உச்ச நட்சத்திரமே லைன்ல்ல வந்தார் அவர் குரலைக் கேட்டு நான் ஆடிப் போயிட்டேன்...

"ம்ம்ம் உன் ஓப்பனிங் எல்லாம் நல்லாத் தான் ஆனா பினிசிங் சரியா இருக்குமான்னு" அவர் கேக்க ....

"அண்ணே மீதி கதையையும் சொல்லுறேன் கேக்குறீயளா" அப்படின்னு கேட்டேன்...

"இப்போ நான் ரொம்ப பிசி பேஸ்கட் பால் பிராக்டீஸ்ல்ல இருக்கேன்.. டூமாரோ கால் பண்ணி கன்டினியூ பண்ணு" அப்படின்னு போனை வச்சிட்டார்...

அப்போ மீதியை நாளைக்குப் பாக்கலாமா இல்லை இத்தோட நிறுத்திக்குவோமா மக்களே நீங்களே சொல்லுங்க...

tamil10