Monday, June 22, 2009

விஜய்-கமல்-இலங்கை மற்றும் பல

நேத்து வரைக்கும் டிசம்பர் 12....இப்போல்ல இருந்து ஜூன் 22....

உங்களை எல்லாம் பாத்தா எங்களுக்குப் பாவமா இருக்கு....எதோ ஒரு பழைய துணியை வச்சு ஆட்டோவைத் தொடைச்சிட்டிருந்த ஆட்டோக்கார அண்ணாச்சி புதுசா ஆட்டோ வாங்குன மதுரைக் கார பயலைப் பாத்து சிரிச்சுட்டேச் சொன்னார்...

ஏனுங்கண்ணா....நானும் ஆட்டோ நீங்களும் ஆட்டோ... அப்புறம் என்னங்கண்ணா என்ன பாவம்ங்கறீங்க....மதுரைக்கார தம்பி பேட் பிடிக்கிற சச்சின் மாதிரி சிடுவெனக் கேட்டான்...

புது கொடி....ஆட்டோல்ல பொறந்த நாள் போஸ்ட் ஸ்டிக்கர்...மாலை...பாட்டு..சத்தியமா உங்களை எல்லாம் பாத்தாப் பாவமாத் தான் இருக்கு...

அருணாச்சலம் அண்ணே... இன்னிக்கு பொறந்த நாள் விழா இருக்கு... செம சுதியில்ல இருக்கோம்....வேணும்ன்னா பாருங்க.....இந்த ஆட்டோ எல்லாம் கொஞ்ச நாளைக்கு தான்.....அப்புறம்...கால்டாக்சி....அப்படி இப்படின்னு கலெக்ஷன் அள்ளிருவோம்ல்ல....அடுத்த ஜூன் 22ல்ல கட்சி...அதுக்கு அடுத்த ஜூன் 22ல்ல ஆட்சி...

சேம் டயலாக்.... ஆனா தேதி தான் வேற அந்த தேதி டிசம்பர் 12....இந்த தேதி ஜூன் 22....மறுபடியும் சொல்லுறேன் உங்களை எல்லாம் பாத்தா எனக்கு ரொம்ப ரொம்ப பாவமா இருக்கு....

அடப் போங்க அண்ணே...உங்க கிட்டப் பேசி நேரம் தான் வீணாவுது....மதுரை தம்பி ஆட்டோவில்ல கொடி பறக்க ( உன்னால் முடியும் அப்படின்னு கொடியில்ல எழுதியிருக்கு..) கில்லியா கிளம்பி....வில்லு கணக்கா சீறி போறான்...

நம்ம அருணாச்சலம் அண்ணன்...வண்டியைத் துடைச்சு துணியை புழிஞ்சு...வண்டி மேலே துணியைக் காயப் போடுறார்.... அந்த துணி பாத்த எதோ கொடி மாதிரி இருக்கு.....நீலம்...சிவப்பு... நடுவுல்ல ஸ்டார்.....நம்ம திருமா கொடியா....திருமா கொடியிலே ஸ்டார்குள்ளே உருவம் இருக்காதே...ஆனா இதுல்ல இருக்கே...உருவம் சிதைஞ்சுப் போய் சரியாத் தெரியல்ல...

அருணாச்சலம் அண்ணன்...ரேடியோவை போடுகிறார்.... எனக்கு ஒரு கட்சியும் வேணாம்...ஒரு கொடியும் வேணாம்.,.அட டாங்கு டக்கர டக்கர டக்கர டாங்... அப்படின்னு சூப்பர் ஸ்டார் பாட்டு ஓடுது.....அண்ணன் பெருமூச்சு விட்டுகிட்டே...மதுரை தம்பி போன ரூட்டை வெறிக்கிறார்..

அவார்ட் அவதாரம்....

நடிகர் சங்கம் போய் ரிஜிஸ்டர் பண்ணி சரியா மூணு மாசம் சந்தா கட்டுனா...கலைமாமணி அவார்ட் வீட்டுக்கே வந்துருமாமே அப்படியா..... எனக்குத் தெரிஞ்ச ஒரு நடிகர் சங்க புள்ளி கிட்ட கேட்டு அசிங்கமாத் திட்டு வாங்குனேன் ஒரு வாட்டி..அப்புறம் இந்த அவார்ட் பத்தி எல்லாம் அதிகம் டவுட்டு கேக்கறது இல்ல...ஆனாப் பாருங்க...இந்த வாரம் விஜய் அவார்ட் எல்லாம் பாத்து ஒரே டவுட் தான் போங்க...கிட்டத்தட்ட எல்லா விருதையும் கமலுக்கே கொடுத்தாங்க....அது சரி...அவர் ஒரு நல்ல நடிகர்.... நல்ல கலைஞர்... சகல கலா வல்லவர்....ஒத்துக்குறோம்....நல்லாத் தான் செஞ்சுக்காங்க அந்த மாபெரும் கலைஞனுக்கு மரியாதைன்னு நினைக்கும் போது தான் டவுட் வந்துச்சு... விருதைக் கமலுக்கு கொடுத்தது நம்ம இளைய தளபதி ....ஒரு வேளை விஜய் டிவி கமலை வச்சு காமெடி கீமெடி பண்ணிட்டாங்களோ....

கமல் மட்டும் காமெடியில்ல கம்மியா என்ன.... எனக்கும் விஜயை ரொம்ப பிடிக்கும் எவ்வளவு புடிக்கும்ன்னா என் கம்பெனியில்ல நடிக்க வைக்கற அளவுக்கு பிடிக்கும்ன்னு காமெடியில்ல பின்னிட்டார்...ஆமா ராஜ் கமல் பிலிம்ஸ்ல்ல தளபதி நடிச்சா ஹீரோ வேசம் தானே கொடுப்பாங்க... இல்ல அதுல்லயும் எதாவது கோக்கு மாக்கு இருக்குமா... ஒரே டவுட்டாப் போச்சு..

ராஜபக்சே டீமை சர்தாரி டீம் ஜெயிச்சுருச்சு..மன்மோகன் டீம் அடியோடு திரும்புச்சு...

இந்த வாட்டி உலக கோப்பையை பாத்த பாவத்துக்கு இந்தக் கோப்பையை நிரப்ப வேண்டியதாப் போச்சுன்னு ரெசசன்ல்லயும் கடன் வாங்கி கவலையைத் தொலைத்த நண்பனின் புலம்பல் இது...

வழக்கமா நம்ம ஆளுங்க வெளியூர் போய் விளையாடி கேவலப்பட்டு அடிவாங்கிட்டு ஊருக்கு வருவாங்க... இந்த வாட்டி போகும் போதே அவன் அவனுக்கு செம அடியாம்ல்ல..சேவாக் பட்ட அடியை தன்னோடு வச்சிக்கலாம்ன்னு நினைச்சிருக்கார்... படுபாவி கேரி கேர்ஸ்டன் கண்டுபிடிச்சு நாட்டுக்கே சொல்லிட்டார்... ஜாகிர்..தோணி....இன்னும் இரண்டு பேர்... போர்ட் கிட்டச் சொல்லியும்..போர்ட் போய் அடிவாங்கிட்டு வந்தா என்ன... அடிவாங்கிட்டே போனா என்ன...அதாவது நம்ம வினுசக்கரவர்த்தி சொல்லுறாப்புல்ல போத்திகிட்டு படுத்தா என்ன...படுத்துகிட்டுப் போத்துன்னா என்னன்னு நினைச்சு அனுப்பிட்டாங்க போல....

ராஜபக்சே டீமுக்கு பைனல்ஸ்ல்ல எந்த சீனாக் காரனோ இந்தியாகாரனோ உதவாமப் போக.... சர்தாரி டீம் சக்கப் போடு போட்டு சவுண்டா கப் அடிச்சுட்டுப் போயிட்டாங்க...

யப்பா சர்தாரி மக்கா... கப் குண்டு அடி படாம பாத்துக்கங்கப்பு...அடுத்த வருசமும் அதே கப் தான் வச்சு விளையாடணும்

படிச்சதுல்ல பிடிச்சது
கொஞ்சம் ரொமான்டிக்கா இருக்கட்டுமே...

என்ன வேதனை என் இரண்டு இதழ்களையும் கொண்டு உனக்கு ஒரு முத்தம் தானே தர முடிகிறது

தபூசங்கர்...

Thursday, June 18, 2009

டேடிஸ் டே - யார் டேடி நம்பர் 1

மதர்ஸ் டே கொண்டாட்டம் கொஞ்ச வருசத்துக்கு முந்தி தான் ஆரம்பிச்சதா நினைப்பிலிருக்கு...ஆனா மேலை நாடுகளில் எல்லாம் அதெல்லாம் பல காலமாய் இருக்கும் சமாச்சாரமாம்..இப்போ தந்தைகுலங்களுக்கும் ஒரு நாள் இருக்குன்னு தெரிய வ்ந்துருக்கு... இந்த வருசம் வட இந்திய இணையங்கள் எல்லாவற்றிலும் வாரணம் ஆயிரம் பீலிங்க்ஸா நிறைஞ்சு கிடக்கு....

எங்கு பார்த்தாலும் டேடி டேடி தான்.....

தமிழ் திரையுலகமும் தவமாய் தவமிருந்து... அபியும் நானும்..அப்படின்னு சமீபக் காலமாய் தந்தையர்களுக்கு தன்னாலே ஆன மரியாதையைக் கொடுத்து விட்டது...

தமிழ் பதிவுலகம் மட்டும் சும்மா இருந்தா எப்படி.... தமிழர்களுக்கு மிகவும் பிடித்த டேடிகளைப் போற்றி நாமளும் டேடிஸ் டே கொண்டாடலாம் வாங்க...
2016ல்ல நான் தான் டேடி நம்பர்.. அது வரைக்கும் தாடி நம்பர் 1...
இவர் டேடி நம்பர் 1 ஆகணும்ன்னு நம்மளை தெரு கோடியிலே நம்பர் 1 போக வெச்சுருவாரு போல இருக்கே...


இந்த டேடியை அடிச்சுக்க யாரும் இல்லங்கோவ்.... இவர் தான் உலகத் தமிழ் டேடிகளில்.....
.
.
.
.
டேடி நம்பர் 1 ......
.
.
.
.
.
.
.


ஓ.கே.. இப்போ தமிழ் கூறும் நல் பதிவுலகத்து பதிவர்களே வாசகர்களே... எல்லாரும் அவங்க அவங்க டேடிகளை வணங்கி வாழ்த்தி இனிதே டேடிஸ் டே கொண்டாடுங்க....
HAPPY DADDY's DAY!!!!!!

Sunday, June 14, 2009

வீக் என்ட் டைம் பாஸ்

வருங்கால முதல்வர்(கள்) சினிமா

தோரணை தமிழ் சினிமா ரசிகனோட சொரணைக்கு இன்னொரு சவாலாம்... படம் பாத்தவங்க எல்லாம் பேசிக்குறாங்க..மாஸ் ஹீரோக்கள்..மன்னிக்கணும் வருங்கால ஜார்ஜ் கோட்டை கோமகன்கள் ( இதுக்கு தானே ஆசைப்படுறீங்க அழகேசர்களா) நடிச்ச படங்கள் எல்லாம் மொத்தமா மாவு கட்டு போட்டுகிட்டு படுத்த நிலையிலே...( அயன் விதி விலக்கு சூர்யா மாஸ் ஹீரோ லிஸ்ட்ல்ல இல்லங்கறது என் கருத்து) யதார்த்த படங்கள் பட்டயைக் கிளப்புது பாக்ஸ் ஆபிஸ்ல்ல...இந்த வருசத்தில்ல பாத்தீங்கன்னா... வெண்ணிலா கபடிக் குழு...யாவரும் நலம்...பசங்க ...இது எல்லாம் கோட்டைக்கு ரூட் போடாத படங்கள்...நல்லாவே இருந்துச்சு.... இந்த வருசம் தேர்தல்ன்னு மெகா படம் சம்மர் முழுக்க மெகா ரிலீஸ் ஆனதல்ல மக்கள் நம்ம கோடம்பாக்கத்து தளபதிகளைக் கவுத்துட்டாங்களோ என்னவோ....எப்படியும் நம்ம தளபதிகள் மனம் தளராமல் திரும்பி வருவாங்கங்கறது என் நம்பிக்கை.... நம்மளும் அவங்களை எல்லாம் கை விட்டுருவோமா என்ன....சோ ஆல் தளபதிஸ் கீப் கன்டினியூங்...

மோசர் பேர் டிவிடி

சினிமா ரசிகர்களுக்கு ஒரு நல்ல விசயம்... எக்கச்சக்கப் படங்கள் சல்லிசான விலையில்ல..தரமான பிரிண்ட் வேற...பழைய கருப்பு வெள்ளை காலத்துல்ல இருந்து தற்கால சுப்ரமண்யபுரம் வரைக்கும் அப்டேட் ஆகியிருக்கு இவங்க மூவி டேட்டா பேஸ்...தமிழனுக்கு.. சினிமாவும் கிரிக்கெட்டும் இரு பெரும் மதங்கள்..ஒரு சிலருக்கு ரஜினி டெண்டுல்கர் குலசாமின்னா... இன்னும் சிலருக்கு தோணி...அஜித் குலசாமி... இப்படி குல சாமிகள் பல... மோசர் பேருக்கு இந்த வெவரம் நல்லாத் தெரிஞ்சு இருப்பதால் தான்.. நம்ம தெரு முனை அண்ணாச்சி கடையிலே கூட டிவிடி வியாபாரம் ஆரம்பிச்சு இருக்காங்க....ஓடுதாண்ணு பொறுத்து இருந்து தான் பாக்கணும்.. ஆனா இது ஒரு நல்ல முயற்சி... இந்த வாரம் பொட்டிக் கடையிலே நமக்கு சிக்குன இரண்டு படம் கலைஞரின் பராசக்தி...இன்னொன்ணு பாலசந்தரின் பாமா விஜயம்...

இந்த வார டிவிடி வாட்ச்

கோதாவரின்னு ஒரு தெலுங்கு படம்...நம்ம கமல் பார்த்த முதல் நாளாய்ன்னு வே.விளையாடுல்ல உருகுவாரே அதே பொண்ணு தான்...இதுல்ல நாயகி...கதைன்னு சொல்லணும்ன்னா...வெள்ளைக்காரன் எடுத்த டைட்டானிக்கை கொஞ்சம் நம்ம ஊர் மசாலாப் போட்டு பக்குவமா பரிமாறுன்னா என்னக் கிடைக்குமோ அதான் கதை...கோதாவரி நதியிலே ஒரு படகு பயணத்துல்ல நடக்குற சுவாரஸ்யமான சம்பவங்களை மெல்லிய காதல் சேர்த்து ரசிக்கும் படி சொல்லியிருக்கார் இயக்குனர் சேகர் கம்முலா...இந்த இயக்குனர் ஒரு முன்னாள் சாப்ட்வேர் பார்ட்டி... இப்போ படம் எடுக்கப் போயிட்டதால ரெசசன்ல்ல இருந்து எஸ்கேப் ஆயிட்டார்...வீக் என்ட் மதியத்தை மனசுக்குப் புடிச்சவங்களைப் பக்கத்துல்ல வச்சுகிட்டே பார்த்தா...மாலை பொழுதில் ரொமான் ஸ்க்கு வாய்ப்பு உண்டு என ஜோசியம் தெரியாத மணவாடு நண்பன் ஒருத்தன் சொன்னான்..சேகர் கமுலாவின் ஆனந்த....ஹேப்பி டேஸ் ..போன்ற படங்களும் காதல் மனம் கொண்டவர்களுக்கு கண்டிப்பா பிடிக்கும் என்பதைக் கொசுறாச் சொல்லிக்கிறேன்..

மில்லியன் டாலர் கேள்வி...

பெரிய பிரதருக்கு தென் தமிழ்நாடு...அப்புறம் தில்லின்னு ஷேர் கொடுத்தாச்சு... அடுத்த பிரதருக்கு தமிழ்நாட்டையே கொடுத்தாச்சு...சிஸ்டருக்கு கூட தில்லியிலே ஒரு ஷேரா ராஜ்யசபையிலே இடம் கொடுத்தாச்சு... பேரனுக்கு கூட அமைச்சர்ன்னு அந்தஸ்து கொடுத்தாச்சு...

இதெல்லா இருக்க..இவங்க வீட்டுல்ல இன்னொரு லிட்டில் பிரதர் இருக்காராமே..பல பேருக்கு அவரை அதிகமாத் தெரியாது...ஆனாலும் அவர் ரொம்ப்ப்ப்ப்ப்ப்வே நல்லவரு போல இருக்கு...

டாடி டாடி அவனுக்கு அது கொடுத்த...இவனுக்கு இது கொடுத்த...அவளுக்கு அது கொடுத்த...எனக்கு என்னக் கொடுப்பன்னு கேக்கவே இல்லையா....இல்ல கேட்டது நமக்கு தெரியல்லயா... இதுவே மில்லியன் டாலர் கேள்வி..

படிச்சதுல்ல பிடிச்சது..

நண்பன் ஒருத்தன் அனுப்புன எஸ்.எம்.எஸ்
வெற்றி என்பது யாதெனின்.. ஒரு கையெழுத்து ஆட்டோகிராபாக மாறுவதே...

Sunday, June 07, 2009

ARCHIE+VERONICA-BETTY


ஒரு பதினைஞ்சு வயசுல்ல.... அமெரிக்கா அப்படிங்கற ஊரை ஹாலிவுட் படங்கள் மூலமாப் பாத்து தெரிஞ்சுகிட்டத விட ஒரு காமிக்ஸ் புத்தகம் மூலமாத் தான் நான் அதிகமா தெரிஞ்சுகிட்டேன்...

அந்த பெருமைக்குரிய காமிக்ஸ் புத்தகத்தின் பேர் ஆர்ச்சி... ஆரஞ்ச் மண்டை ஆர்ச்சி...மஞ்சள் நிற கூந்தலாள் பெட்டி கூப்பர்...பணக்கார அழகி வெரோனிக்கா லாட்ஜ்...அமெரிக்க டீன் ஏஜ் மக்களின் ஏகோபித்த பிரதிநிதிகளாக் கிட்டத் தட்ட அறுபது எழுவது வருசமா இருக்காங்க...

ரிவர்டேல்ன்னு ஒரு ஊர்... அதுல்ல ஒரு ஹஸ்கூல்..அதுல்ல படிக்கிற பசங்க..அவங்க வாழ்க்கை...அவங்க நட்பு.. விரோதம்..காதல்...மோதல்...கலாட்டா இது தான் அந்த காமிக்ஸின் அடிநாதம்

கதையின் நாயகன் ஆர்ச்சி...அசட்டுத் தனமான காதல் பையன் (ப்ளே பாய்)...அவனையே சுத்தி சுத்தி வரும் அடுத்த வீட்டு பொண்ணு மாதிரியான அழகான குண கொண்ட அம்சமான பொண்ணு பெட்டி கூப்பர்...அவளை அவ்வளவாக் கண்டுக்காம ஆர்ச்சி டாவடிக்கும் கோடீஸ்வர வீட்டு குமரி வெரோனிக்கா லாட்ஜ்...அவளுக்கு சைட்ல்ல ரூட் விடும் வில்லன் ரெஜி மேன்டில்.... ஆர்ச்சியின் அந்தரங்க நண்பன் சாப்பாட்டு ராமன் ஜக்ஹெட் ஜோன் ஸ்.... பள்ளியின் பயில்வான் பையன் பிக் மூசா...அவன் சைட் மிட்ஜ்.... படு புத்திசாலி மாணவன் டில்டன் டாய்லி... பள்ளி தலைமையாசிரியர் வெதர்பீ...ஆசிரியை மிஸ் கிரண்டி.... கான்டீன் கடைக்காரர் பாப் டேட்...


இவங்க எல்லாரும் தான் கதையின் பாத்திரங்கள்...இதை எல்லாம் படிச்ச காலத்துல்ல இதை மாதிரி நம்ம பள்ளிக் கூடம் இல்லையேன்னு ஏங்காத நாள் கிடையாது...அமெரிக்கான்னா இப்படித் தான் இருக்குமோன்னு நினைச்சு நினைச்சு பெருமூச்சு விட்டது உண்டு...

முக்கியமா அந்த பீச் காட்சிகள்... பில்லா நயந்தாரா எல்லாம் ஒதுங்கி நிக்கணும்...பெட்டியும் வெரோனிக்காவும் பிக்னி போட்டுகிட்டு வந்தா....ஒரே கிளுகிளு மயம் தான்...

ஆர்ச்சி அடிக்கடி வெரோனிக்காவிடம் பல்ப் வாங்குவதும்... பின் பெட்டி வந்து ஆறுதலாய் இருப்பது என அந்த முக்கோணக் காதல் அமெரிக்கா டீன் ஏஜ்களிடம் மட்டுமின்றி பல தலை முறை உலக டீன் ஏஜ் காமிக்ஸ் ரசிகர்களின் மனங்களைக் கொள்ளைக் கொண்ட ஒரு விசயம்..

அந்தக் காதல் நம்ம ஊர் சிந்துபாத் கன்னித்தீவு கதைக்கு ஈடாப் போயிட்டு இருந்தது...இதுல்ல பசங்க பக்கம் பாத்தீங்கன்னா..பாதி பேர் பெட்டி பக்கம்...இன்னும் கொஞ்சம் பேர் வெரோனிக்கா பக்கம்...

எப்படின்னா ஜொள்ளுக்கு வெரோனிக்கா... ஒரு இனிய சொல்லுக்கு பெட்டின்னு ரசிகர் பட்டாளமே உண்டு..

சைட் அடிச்சா வெரோனிக்கா மாதிரி ஒரு பிகரைத் தான் சைட் அடிக்கணும்ன்னு கனவு கூட கண்டதுண்டு...ப்ச் பலிக்கல்லங்கறது வேற் மேட்டர்..பட் கல்யாணம் குடும்பம்ன்னா பெட்டி மாதிரி பொண்ணு தான் ரைட்டுன்னு பீல் பண்ணதும் உண்டு...

இப்போ எதுக்கு இந்த புராணம்ன்னு கேக்குறீங்களா... ஆண்டாண்டு காலமா இப்படியே தெய்வீக காதலர்களாக போயிட்டு இருந்த கதையிலே ஒரு முடிவு வரப் போகுதாம்... மேல் நாட்டு காமிக்ஸ் உலகமே ஆடி போய் கிடக்கு அதைக் கேட்டு...

ஆர்ச்சி கடைசியா லவ் எல்லாம் போதும்... சரி கண்ணாலம் பண்ணிக்கலாம்ன்னு முடிவு பண்ணிட்டாப்ப்ல்லயாம்..... அங்கே தான் ட்விஸ்டு... சரி நம்மாளு எப்படி தான் ஜொள்ளு மன்னனா இருந்தாலும் மேரேஜ் மேட்டர்ல்ல கரெக்ட்டான முடிவு எடுத்துடுவான்னு நினைச்சா... கவுத்துட்டாப்பல்ல..டோட்டல்லா கவுந்துட்டாப்பல்ல..

ஆர்ச்சி பணக்கார பந்தாக் குட்டி வேரோனிக்காவைக் கட்டிக்கப் போறானாம்.... ம்ம்ம் புத்திசாலித்தனமான முடிவுங்கறாய்ங்க நம்ம கூடக் காமிக்ஸ் படிச்ச பயல்வ பாதி பேர்... சொத்து பத்து கார் பங்களா..மாமனார் புண்ணியத்துல்ல நல்ல வேலைன்னு செட்டில் ஆயிடலாம்ன்னு ஆர்ச்சி சரியான முடிவு எடுத்துருக்கான்னு சொல்லுறாங்க...

ம்ம்ம் நான் என்ன சொல்லுறேன்னா...படையப்பாவுல்ல தலைவர் சொல்லுவாரே..பெண்கள்ல்ல சாத்வீகம்..ப்ரோசதகம்..பயனாகம்..இப்படி பல வகைன்னு...அதுல்ல நம்ம புள்ள பெட்டி சாத்வீகம்... அந்த புள்ள வெரோனிக்கா ப்ரோசதகம் வகை...பின்னாடி பயனாகமாவும் மாறலாம்...

சாத்வீகத்துக்கே சல்யூட் வச்சிருக்கலாம்....ஆனா என்னப் பண்ணுறது முடிவு வேற ஆயிடுச்சு,...வேற என்ன சொல்ல


HAPPY MARRIED LIFE ARCHIE N VERONICA... BETTY MAY U GET THE RIGHT GUY...

வீக் என்ட் கச்சேரி

போடா போடீ

முன்னாடி திருடா திருடின்னு ஒரு படம் வந்துச்சு... மன்மத ராசான்னு தனுசூம் சாயா சிங்கும் மதயானை ஆட்டம் போட்டு தமிழ்நாடே அதிரி புதிரி ஆச்சு...அதுல்ல பஸ்ல்ல ஒரு பாட்டு வரும் நாயகியும் நாயகனும் ஒருத்தரை ஒருத்தர் திட்டி தீக்குற மாதிரி ஒரு டூயட் வரும்....இப்போ அதே மாதிரி ஒரு பாட்டு எப்.எம்ல்ல எல்லாம் அதிருது....எக்ஸ்.க்யூஸ்.மீ மிஸ்டர்.கந்தசாமி....பாட்டு...சுசி கணேசன்...டி.எஸ்.பி (தேவி சிரி பிரசாத்)...சீயான் விக்ரம்..கூட்டணியில் கந்தசாமி பாட்டு எல்லாம் ஹாட் யூத் பீட்... அதுல்லயும் சுச்சி வாய்ஸ் செம குறும்ம்ம்ம்ம்புங்கோ... கொஞ்சம் நாளுக்கு செல்லுக்கு எல்லாம் புது ரிங்டோன்...போடா போடீ தான்


அடுத்த தளபதி

ஒருத்தர் அடுத்த சூப்பர் ஸ்டார்ன்னு கொஞ்ச நாள் முன்னாடி வரைக்கும் குறி வச்சிட்டு இருந்தார்...சூப்பர் அடுத்த புரட்சித் தலைவர்ன்னு அவர் மன்ற கண்மணிகள் கணக்கு பண்ணிட்டு இருந்தாங்க...அந்தக் கணக்கு ஆகாயம் பார்த்து விரல் போடும் கணக்காப் போனதுல்ல..கோடம்பாக்கத்து தளபதி சூ.ஸ்.பதவியை பை பாஸ் பண்ணிட்டு நேரா புன்னா தான்னா பதவிக்கு சமீபக் காலப் படங்களில் ரூட் போட்டது நாட்டுக்கே நல்லாத் தெரியும்..இந்தக் கேப்புல்ல புதுசா கிளம்புன மணவாடு தளபதி..பழைய ( ஆனா இளசு தான்) தளபதி சீட்டைத் துண்டு போட்டு பிடிக்க ட்ரை பண்ண ஆரம்பிச்சாட்டார் எல்லா விஷயத்துல்லயும் (!!!!????) எதுல்ல எட்டிப் பிடிச்சாரோ இல்லையோ அவரை மாதிரி தோரணையா வில்லு விடு குருவியைக் கவுக்கறதுல்ல சத்யம் ஆக முன்னேறிட்டார் பாஸ்

டிவிடி ரெய்டு...

இந்த வாரம் டென்சல் வாஷிங்டன் நடிச்ச மேன் ஆன் பயர் படம் பாத்தேன்...ஒரு பழைய கொலைகாரன்.. தற்காலக் குடிகாரன்..ஒரு சிறுமியைக் காக்கும் மெய்காப்பாளனாய் வேலைக்குச் சேர்கிறான்..எதிலும் ஒட்டு இன்றி உறவுமின்றி இருக்கும் அவன் அந்த சிறுமியின் அன்பால் மெல்ல மெல்ல ஈர்க்கப்பட்டு மீண்டும் வாழ்வதற்கான ஒரு காரணம் கண்டுகொள்கிறான்..அந்த நிலையில் சிறுமி கடத்தப் படுகிறாள்...கொல்லப்பட்டதாய் தகவல் வருகிறது...அதற்கு பின் பழிவாங்கும் படலத்தில் டென்சல் ருத்ர தாண்டவம் ஆடுவது தான் மிச்சக் கதை.... சும்மா சொல்லக் கூடாது மனுசன் பிச்சி உதறி இருககார்..அந்த சிறுமியின் நடிப்பும் அசத்தல்...

ஆங்கிலம் வேணாம்ன்னு சொல்லுறவங்க இதே படத்தோட அசத்தல் !!!??? இந்தி மற்றும் தமிழ் ரீமேக்களைப் பார்த்து நொந்துக் கொள்ளலாம்....(இந்தியில் அமிதாப் நடித்த அஜ்னபி.....தமிழில் அர்ஜூன் நடித்த ஆணை...)

படிச்சது....

பொறுமையா பைபிளைப் புரட்டுனப்போ கண்ணுல்ல பட்ட கருத்து...
நீங்கள் தீமையினால் வெல்லப்படாமல் நன்மையால் தீமையை வெல்லுங்கள்

Thursday, June 04, 2009

கலைஞர் - யார்?


முதல்ல முதல்வர் மு.கருணாநிதி அவர்களுக்கு 86ஆம் பிறந்த நாள் வாழ்த்துக்கள்...

இந்த மனிதரைப் போல் போராட்டங்களின் சாலைகளையோ...சோதனைகளின் வேதனைகளையோ..ஆட்சி அதிகார சாதனைகளையோ...ஒரு வாழ்க்கையில் கண்டவர்கள் மிகவும் சொற்பமானவரே...

பாராட்டு மழையில் எவ்வளவு நனைந்திருக்கிறாரோ அதே அளவு விமர்சன அம்புகளாலும் தாக்கப்பட்டிருக்கிறார்..

திருக்குவளை மைந்தனாக திராவிடம் பாசறை மாணாக்கனாக பெரியாரின் சீடனாக அறிஞர் அண்ணாவின் தம்பியாக பகுத்தறிவின் தீபமாக தன் வாழ்க்கையின் ஆரம்பத்தை நிறைத்தவர் கருணாநிதி...

தீந்தமிழை திரையில் எரிய விட்டு அந்த வெப்பத்தில் தமிழினத்தை உணர்வு கொள்ளச் செய்த திரைக்கதை ஆசான்..வசனச் சிற்பி மு.க.

இனப் போராளி..மொழி சூறாவளி....அடிமட்ட வர்க்கத்தின் கரகரப்பு குரலாக தமிழக அரசியல் அடி வானில் மெல்ல மெல்ல உதித்த உதய சூரியன்...தமிழ் தீவிரவாதி என தில்லியை கிலி கொள்ளச் செய்த தென்னாட்டு தமிழ் முரசு....

ஒரு தலைமுறை தமிழர்களின் இன முகவரிக்கு சொந்தக் காரர் கருணாநிதி என்றால் மிகையாகாது...

அண்ணனுக்குப் பின் ஆட்சி அதிகாரம் எனக் கைப்பற்ற தன் மதி செலுத்திய அரசியல் சாணக்கியர்..பகை பிளப்பதில் நுணக்கம் காட்டிய அரசியல் அறிஞன்...போராட்டப் பாதை விட்டு விலகி சமச் சீரோட்டப் பாதைக்குத் திரும்பிய புத்திசாலி...

முதலில் திமுகவின் வளர்ச்சிக்காக தன்னை அர்பணித்தார்..பின் திமுகவைத் தன் வாழ்வுக்காகவும் வளர்ச்சிக்காகவும் அர்பணித்தார்...

தலைமுறைகள் தாண்டியும் தேகம் தள்ளாடியும் சித்தம் தள்ளாடதவர்...கட்சி கொள்கை முழக்க ஒலிபெருக்கியாய் இருந்தது போய் கழகத் தலைவர் கொல்லைப் புறத்தை பெருக்கும் கருவியாய் மாற்றிய வித்தைக்காரர்...

முட்பாதைகளில் நடந்திருக்கிறார் ,,,உண்மை
நெருப்பாற்றில் நீந்தியிருக்கிறார்...உண்மை
கொடும் நாகங்களால் தீண்டப்பட்டிருக்கிறார்..உண்மை
கொடும் தடைகளைத் தாண்டியிருக்கிறார்..உண்மை

ஆனால் இந்த சுயமரியாதைக்காரர் இதை எல்லாம் செய்து எதை அடைந்திருக்கிறார்..எதை எல்லாம் இழந்திருக்கிறார்..எங்கு வந்து இருக்கிறார்...இதுவே மில்லியன் டாலர் கேள்வி...

இன்று கலைஞர் தலைவரா....அரசியல் வியாபாரியா....இல்லை தன் குடும்பத்திற்கு செய்ய வேண்டிய கடமையை சரி வர நிறைவேற்றிய ஒரு அன்புள்ள அப்பாவா.....

என்னைக் கேட்டால் எல்லாமும் தான் என்று சொல்வேன்....எல்லாவற்றிலும் நிமிர்ந்து நின்றிருக்கிறார் கலைஞர்....ஆனால் எல்லாவற்றிலும் எல்லா நேரத்திலும் ஒரு சேர நிமிர முடியாத போது மிகவும் தவித்தும் போயிருக்கிறார்...

தமிழகத்தின் இந்த மூத்தப் பெரியவர் தமிழனித்திற்காக சாதித்தும் இருக்கிறார்.. சோதித்தும் இருக்கிறார்.

சாதனைகள் முற்பகுதியிலும் சோதனைகள் பிற்பகுதியிலும் நிறைந்திருப்பதே உண்மையான தமிழ் ஆர்வலர்களின் வேதனை...

Sunday, May 24, 2009

சுருளு மீசைக்காரனடி வேலுத்தம்பி

தமிழன் என்றொரு இனம் தனியே அவனுக்கு ஒரு குணமுண்டு...

பாடத்திலே படிச்சதா இல்ல பெரியவங்க சொல்லிக் கேட்டதான்னு ஞாபகம் இல்ல...ஆனா அப்படி ஒரு பெருமை தமிழ் சமூகத்துக்கு ஒரு காலத்தில் கட்டாயம் இருந்தது...காலப்போக்கில் தமிழினம் எப்படியெல்லாமோ போய் எங்கெல்லாமோ சாயந்து இன்று உலகத்திலே மிகவும் அதிகமான சகிப்புத் தன்மை கொண்ட ஒரு அற்புத இனமாக மாற்றம் கண்டு விட்டது...சகிப்புத் தன்மை என்றால் அப்படி ஒரு சகிப்புத் தன்மை...எருமை மாட்டிற்கு அடுத்தப் படியாக நம்மினம் தான் சகிப்பு தன்மைக்கு அர்த்தம் சொல்கிறது...

ராமன் ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும் எனக்கு ஒரு கவலை இல்லை.. நான் தாண்டா என் மனசுக்கு ராஜா.... திரையில் வந்த பாட்டே மொத்த தமிழ் இனத்தின் வாழ்க்கை முறையாகிப் போனது..சமூகம் சார்ந்த தமிழனின் வாழ்க்கை..குறுகிய வட்டத்திற்குள் அடைய ஆரம்பித்தது...ஊருக்காக வாழ்ந்த தமிழன்...தனக்காகக் கூட வாழத் தயங்கும் ஒரு காலகட்டத்தில் பிறந்தவர்கள் நாம்...ஆம் தமிழ இன்று மனத்திற்குள் மட்டுமே வீரன்... தன் மனத்தளவில் அவன் தான் ராஜா...அங்கு அவன் ஆட்சி செய்வான்...ராஜ்ஜியம் அமைப்பான்... பல வீரம் தீரம் நிறைந்த சாகசம் செய்வான்.... வீட்டின் உள்ளறைக்குள் பூட்டிக்கொண்டு உலகத் தலைவர்களை எல்லாம் நியாயம் விசாரிப்பான்...பொங்குவான்...புரட்சி செய்வான்...கதவுகள் திறந்து வீதிக்கு வரும் போதோ தலை குனிந்து கொள்வான்..தமிழன் என்ற அடையாளம் வெளியே தெரியாமல் பொத்திப் பார்த்துக் கொள்வான்..வேற்று மொழி மோகம்...அயல் நாட்டு ஆடை அலங்காரம்....தன் அடையாளங்கள் மொத்தத்தையும் தொலைத்து நிற்கிறான் இன்றைய தமிழன்...

தன் பணி தன் அன்றாடத் தேவைகளுக்கு பணம் பண்ணுவது மட்டுமே என சுருங்கி போய்விட்டது தமிழினம்...கலை இலக்கியம் ஆட்சி அதிகாரம் எனக் கோலோச்சிய இனமடா நம் தமிழினம் என எதாவது பள்ளியிலோ கல்லூரியிலோ எதாவது ஒரு தமிழ் ஆசான் பாடம் நடத்தினால் அதெல்லாம் தற்காலத் தமிழனுக்கு கொட்டாவியை மட்டுமே வரவழைக்கிறது...

தன் மற்றும் தன் குடும்பம் சார்ந்த பொருளாதாரப் பிரச்சனைகளே அவன் எண்ணங்களை இறுக்கி...வேகத்தைச் சுருக்கி...அவன் வாழ்க்கையைக் கருக்கி விட்டது...20களின் இறுதியிலே பெரும்பான்மையான தமிழின இளைஞர்கள் முதுமை எய்தி விடும் அவலம் நடந்தேறி கொண்டிருக்கிறது... தமிழின இளைஞனின் அதிகப் பட்ச லட்சியம் ஒரு கல்யாணம்..ஒரு குடும்பம்...அது நடந்தால் அவன் செட்டில் ஆகிவிட்டான் என்று அர்த்தம்...அதுவும் காதல் கல்யாணம் என்றால் அவன் அடுத்த தலைமுறையின் ஆதர்ச புருசன் ஆகிவிடுகிறான்...

அந்த தாக்கம் தான் நம் தமிழ் சினிமா ஹீரோக்கள் எல்லாரும் முதலில் காதல் நாயகர்களாகவே அறிமுகமாக காரணமோ என்னவோ...தன் கூட்டுக்குள் சுருங்கி போன தமிழன்...ஜன்னல் வழியே விழும் வெளிச்சமும் திரை வெளிச்சமே...அங்கிருக்கும் யதார்த்த வாழ்க்கை மீறிய பெரிய பிம்பங்களே அவனுக்கு ஆதர்ச அவதாரங்கள் என ஆண்டுகள் உருண்டு ஓடிக்கொண்டிருக்கின்றன...

வீரம் சார்ந்த விளையாட்டு...அறிவு சார்ந்த கலைகள்...சமூகம் சார்ந்த வாழ்க்கை...சுயமரியாதை சேர்ந்த உயர்பண்புகள்.. இது தானடா தமிழினம்..இப்படி வாழ்ந்தவனடா உன் மூப்பாட்டன் தமிழின பெரியோன்.. என தமிழனுக்கு அடித்துச் சொல்ல இன்று ஒரு குரல் இல்லை....

சேரன் சோழன் பாண்டியன் பல்லவன் ஆங்கிலேயனை எதிர்த்த பொம்மு வரை அப்படி தான் தமிழின குரல் ஒலித்து வந்தது.... ஏன் 50 களில் ஆரம்பத்தில் கூட அப்படி திராவிடக் குரல்கள் ஒலித்தன...காலப் போக்கில் அந்த கரும்சிவப்பு குரல்கள் தம் ஒலி அளவை குறைத்து தாள லயத்தை மாற்றி கொண்டு போன அவலம் தனிக்கதை...

சொல்ல வருவது என்னவென்றால் எத்தனையோ தமிழ் வீரர்களின் கதையைப் படித்திருக்கிறோம்...கேட்டிருக்கிறோம்...நம் தலைமுறையில் நமக்கு அருகிலே கேட்ட ஒரு வீரக் குரலுக்கு சொந்தக் காரன்...தன்னலம் பாராமல்...இன நலம் காக்க களம் கண்டவன்... போராட்டப் பயணத்தில் தினம் ஆயுளைச் செலவழித்தவன்...இன விடுதலைத் தேடலில் தன்னை முழுமையாக அர்பணித்தவன்.. தீவுத் தமிழனின் துயர் துடைக்க துப்பாக்கி ஏந்தியவன்...

அந்த வீரத் தமிழன் செய்த மொத்த செயல்களும் புனிதம் வாயந்தவை என இந்தப் பதிவில் நான் வக்காலத்து வாங்கவில்லை....சில பல ஏற்கதகாத விரும்ப முடியாத முடிவுகளும் அவன் தம் இயக்கப் பாதையில் இருப்பது கசப்பான உண்மையே

ஆனாலும் தமிழ் தமிழன் தமிழினம் என்னும் அடையாள மிச்சங்களை நெஞ்சோரம் கொஞ்சமாயினும் தேக்கி வைத்திருக்கும் எந்த ஒரு தமிழனுக்கும் எதோ ஒரு விதத்தில் அவனைக் கட்டாயம் பிடிக்கும்...

தலைகுனிவே வாழ்க்கையின் நியதி என வாழ பழகி விட்ட தற்கால தமிழினத்தில் இன எழுச்சி காண தலை உயர்த்திய ஒற்றை தமிழன் அவன்.... அவன் வேட்கை வென்றிருந்தால் இன்னும் ஒரு சில கோடி தமிழர்களின் தலையும் நிலையும் உயர்ந்திருக்கும்......

தற்காப்புக்காக தலை குனியலாம்.... தன்மானம் தொலைத்து எக்காலமும் பணியக் கூடாது என கொள்கை உறுதி கொண்ட அந்த வீரன் வேலு தம்பிக்கு என் சல்யூட் இந்தப் பதிவு

Friday, May 22, 2009

சென்னை சூப்பர் கிங்ஸ் VS டெல்லி டேர் டெவில்ஸ்

"சென்னை சூப்பர் கிங்ஸ்"



Vs

"டெல்லி டேர் டெவில்ஸ்"



இந்த அரசியல்ல...சாரி ஐ.பி.எல்ல.... பைனல்ஸ் நெருங்கிடுச்சு..... யார் ஜெயிக்கப் போறாங்கன்னு ஒரே டென்சனப்பா.... 20 - 20 ஆட்டம் ஒரு மூணு.... ஏழு ரன் ல்ல எல்லாம் தோக்குறாங்க...ஜெயிக்குறாங்க... பயபுள்ளக போடுற ஆட்டம் தாங்கல்ல... அவ்வளவு என்டர்டெயின்மென்ட் போங்க.....
எப்படியோ....டில்லி டேர் டெவில்ஸூம் சென்னை சூப்பர் கிங்ஸும் தான் கடைசியிலே மோதப் போறாய்ங்கன்னு நான் நினைக்கிறேன்.... அதுல்ல நம்ம சென்னை சூப்பர் கிங்ஸ் உருண்டு புரண்டு அழுது அடம் பிடிச்சாவது ஜெயிச்சுருவாங்கன்னு நம்புவோமாக....ஆமென்

Thursday, May 21, 2009

மூன்று எழுத்து...மூன்று எழுத்து...

கூட்டு மூன்று எழுத்து

ஓட்டு மூன்று எழுத்து

கட்சி மூன்று எழுத்து

ஆட்சி மூன்று எழுத்து

தில்லி மூன்று எழுத்து

சோனியா மூன்று எழுத்து

ராகுல் மூன்று எழுத்து

திமுக மூன்று எழுத்து

பதவி மூன்று எழுத்து

அப்பா மூன்று எழுத்து

மகன் மூன்று எழுத்து

மகள் மூன்று எழுத்து

தாத்தா மூன்று எழுத்து

பேரன் மூன்று எழுத்து

இல்லை மூன்று எழுத்து

அல்வா மூன்று எழுத்து

மூக்கு மூன்று எழுத்து

ஆப்பு மூன்று எழுத்து

முடிவு மூன்று எழுத்து

வெளியே மூன்று எழுத்து...

இந்தப் பதிவைப் படித்து அனைவரும் அட்லீஸ்ட் வெளியே இருந்தாவது பதிவுக்கு ஆதரவு தர வேண்டுகிறோம்...

நாளையே கூட இந்தப் பதிவின் உட்பொருட்கள் மாற்றி அமைக்கப்படலாம் என இப்போதே கூறி கொள்கிறேன்...

ஏனென்றால்... மாற்று என்பது மூன்று எழுத்து....மூன்று எழுத்து...மூன்று எழுத்து...

Sunday, May 17, 2009

சற்று முன் கிடைத்தப் படங்கள் - 2



சகோதிரி மேடம்.. 7ம் போயிருச்சு... வைகோ கூட ஒண்ணு தேத்திட்டார்... அந்த ராஜ்ய சபா கணக்குல்ல ஒண்ணு கொடுத்தீங்கன்னா..அதை வச்சு என் பொழப்பை ஓட்டிருவேன்..ப்ளீஸ்
சசி நான் நிரம்ப டிஸ்டர்ப் ஆகி இருக்கேன்.. இந்தக் கூட்டணி பசங்களை எல்லாம் கேட்டுக்கு வெளியேவே நிறுத்தி கேட்டைச் சாத்து...

Saturday, May 16, 2009

மொத்தமாக வென்றது அதிமுக தான்

கருத்துக் கணிப்புகளை மீறி திமுக கூட்டணி இந்த நாடாளுமன்றத்தில் வென்றது வரலாறு ஆகிவிட்டது....தமிழகத்தில் உண்மையில் வென்றிருப்பது யார் என ஆழமாக யோசித்துப் பார்த்தால்...மறுக்கமுடியாத உண்மை தெரிய வரும்....ஆம் அதிமுக தான் வென்றிருக்கிறது.....

தென் மண்டலப் பொறுப்பாளராக பொறுப்பேற்ற பின் அஞ்சா நெஞ்சன் அண்ணன் அழகிரி சொன்ன சொல் என்ன....
தென் மண்டலத்தில் திமுக நிச்சயம் ஜெயிக்கும்.....சொன்னதைச் செய்தும் காட்டி விட்டார்...

வட தமிழ்நாட்டில் குறிப்பாக திமுகவின் கோட்டையாம் தென்சென்னையில் பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் திமு கழக வேட்பாளர் மண்ணைக் கவ்வியது போலவோ...திருவள்ளூரில் திமு கழகம் வீழ்ந்தது போலவோ... கொங்கு மண்டலத்தின் கரூரில் முக்கிய வேட்பாளர் தோல்வி கண்டதைப் போலவோ தென்மண்டலத்தில் திமுக எங்கும் மூக்கு உடைபடவில்லை... சும்மா நெஞ்சை நிமிர்த்தி நிற்கிறது திமுக தென்மண்டலத்தில்... மதுரையில் அழகிரியும் சாதனை வெற்றி பெற்றுள்ளார்...

அதான் சொல்லுறோம் மொத்த வெற்றி பெற்றிருப்பது அழகிரி திமுக தானே.... அதாங்க அதிமுகன்னு கமுக்கமாச் சொன்னோம்..


வெற்றி பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள்...அப்படியே மக்களுக்கும் எதாவது நல்லது செய்யுங்க மக்கா..நல்லா இருப்பீங்க...

முடிவுகள் தமிழக நிலவரம்

தற்சமயம் வெளிவந்திருக்கும் முடிவுகளின் ஆரம்ப அறிகுறிகள் திமுக அணிக்கு வெற்றி முகம் இருப்பதை தெரிவித்தாலும் காங்கிரஸ் கட்சிக்கு இறங்கு முகத்தையே காட்டுகிறது...

ஈரோட்டில் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன்...சிவகங்கையில் ப.சிதம்பரம்...தேனியில் ஆருண்...திருச்சியில் சாருபாலா தொண்டைமான்..மயிலாடுதுறையில் மணி சங்கர் அய்யர் சேலம் தங்கபாலு...கோவை பிரபு ஆகியோர் பின் தங்கியே உள்ளனர்...

பா.ம.கவைப் பொறுத்த வரை உற்சாகடைய எந்த ஒரு காரணமும் இப்பொது வரை இல்லை என்றே சொல்ல வேண்டும்

மதிமுக ஈரோட்டில் உற்சாகம் அடைந்தாலும்.... விருது நகரில் எழுச்சி பெற வில்லை என்பதே இப்போதைய நிலை....

வி.சி..சிதம்பரத்தில் வெற்றி முகம்...

சென்னையின் மூன்று தொகுதிகளிலும் திமுக முன்னிலை

தேமுதிக பாராளுமன்ற கணக்கைத் திறப்பதற்கான ஒரு அறிகுறியும் இதுவரை தெரியவில்லை

நடிகர்கள் ஜே.கே.ரீத்தீஷ், நெப்போலியன் ராமனாதபுரம் மற்றும் பெரம்பலூரில் முன்னணி

மு.க. அழகிரி சுமார் 20 ஆயிரம் ஓட்டுக்கள் முன்னிலை

புதுச்சேரியில் காங் முன்னிலை

ஆரணி கிருஷ்ணசாமி முன்னிலை..மத்திய அமைச்சர்கள் பழனிமாணிக்கம், ஆ.ராசா முன்னிலை

திமுக டி.ஆர்.பாலு பின்னடைந்து மிகக் குறைந்த வாக்கு வித்தியாசத்தில் தற்சமயம் முன்னணி

கன்யாகுமரியில் திமுக முன்னணி

தென்சென்னை அதிமுக முன்னிலை

கரூர் அதிமுக தம்பித்துரை முன்னணி

திருப்பூர் அதிமுக முன்னணி

பா.ம.க போடியிட்ட அனைத்து தொகுதிகளிலும் பின்னடைவு

திமுக கூட்டணி - 28 அதிமுக கூட்டணி - 12

1.வட சென்னை - டி.கே.எஸ்.இளங்கோவன் ( திமுக)
2.மத்திய சென்னை - தயாநிதி மாறன் (திமுக)
3.திரு பெரும்புதூர் - டி.ஆர்.பாலு ( திமுக )
4.கன்யாகுமரி - ஹெலன் டேவிட்சன்( திமுக)
5.தூத்துக்குடி- ஜெயதுரை ( திமுக)
6.நீலகிரி - ஆ.ராசா (திமுக)
7.பெரம்பலூர் - நெப்போலியன் (திமுக)
8.மதுரை - மு.க.அழகிரி (திமுக)
9.ராமநாதபுரம் - ஜெ.கே.ரித்தீஷ் (திமுக)
10.நாமக்கல் - காந்திசெல்வன் (திமுக)
11.கள்ளக்குறிச்சி - ஆதி சங்கர் (திமுக)
12.நாகப்பட்டினம் - ஏ.கே.எஸ்.விஜயன் (திமுக)
13.கிருஷ்ணகிரி - சுகவனம் (திமுக)
14.தருமபுரி- தமிழ்செல்வன் (திமுக)
15.அரக்கோணம் - ஜெகத்ரட்சகன் (திமுக)
16.தஞ்சாவூர் - பழனிமாணிக்கம் (திமுக)
17.திருவண்ணாமலை - வேணுகோபால் (திமுக)

18.சிதம்பரம் - திருமாவளவன் ( விசி)

19.விருது நகர் - மாணிக் தாக்கூர் ( காங்)
20.திண்டுக்கல் - சித்தன் ( காங்)
21.தேனி - ஆருண் (காங்)
22.சிவகங்கை - ப.சிதம்பரம் (காங்)
23.திருநெல்வேலி - ராமசுப்பு (காங்)
24.காஞ்சிபுரம் - விசுவநாதன் (காங்)
25.ஆரணி- கிருஷ்ணசாமி (காங்)
26.கடலூர் - கே. எஸ்.அழகிரி (காங்)
27.புதுச்சேரி - நாராயணசாமி (காங்)

28.வேலூர்- அப்துல் ரகுமான் - (முலீக்)


29.தென் சென்னை - சிட்லபாக்கம் ராஜேந்திரன் ( அதிமுக)
30.விழுப்புரம்- எம்.ஆனந்தன் ( அதிமுக)
31.திருவள்ளூர் - வேணுகோபால் (அதிமுக)
32.சேலம் - செம்மலை ( அதிமுக)
33.திருச்சி- குமார் (அதிமுக)
34.பொள்ளாச்சி - சுகுமார் (அதிமுக)
35.கரூர் - மு.தம்பிதுரை ( அதிமுக)
36.திருப்பூர்- சிவசாமி (அதிமுக)
37.மயிலாடுதுறை - ஓ.எஸ்.மணியன் (அதிமுக)

38.ஈரோடு - கணேசமூர்த்தி ( மதிமுக)

39.தென்காசி - லிங்கம் - (கம்யூ)
40.கோவை - நட்ராஜ் (கம்யூ)

Friday, May 15, 2009

திமுக கூட்டணிக்கே அதிக இடங்கள்

வழக்கமான தேர்தல்கள் போல அல்லாமல் எந்த ஒரு அலையும் இல்லாமல் ஆழமாம அமைதியாக இந்த பொதுத் தேர்தல் நடந்து முடிந்திருக்கிறது...தமிழகத்தில் இந்த முறை இன்னார் தான் வெல்வார் என உறுதியாக கூற முடியாத படி இரண்டு கழகங்களும் சம பலத்தோடு களம் கண்டு மோதி முடித்துள்ளன...

திமுக தன் சொந்த வாக்கு வங்கி பலம்...ஒரளவு கூட்டணி வாக்கு வங்கியின் துணை பலம்..மற்றும் ஏராள தாரள வைட்டமின் 'ப' கொண்டு களம் சந்தித்த தேர்தல் இது..திமுகவைப் பொறுத்த வரை இந்த தேர்தல் ஒரளவு விசேஷமானது..கழகத் தலைவர் கலைஞர் பெரிதும் பிரச்சாரத்திற்கு சென்று உடன்பிறப்புக்களை உற்சாகப்படுத்த முடியாத ஒரு சூழல்..திமுக்வின் எதிர்காலத் தலைவர் எனப் பல காலமாக இளவரசராக வலம் வரும் தளபதி மு.க.ஸ்டாலின் பெருமளவு பிரச்சாரப் பாரம் மட்டுமன்றி களகண்காணிப்பிலும் ஈடுபட்டுள்ள தேர்தல் இது...அவருக்கு இது ஒரு சவால் எனவே கூறலாம்.. கலைஞரின் மதுரை மைந்தன் அழகிரி கட்சியில் ஒரு முக்கிய பொறுப்பேற்ற பின் சந்திக்கும் முதல் தேர்தல்...திமுகவைப் பொறுத்தவரை கலைஞருக்கு அடுத்த தலைமுறை முன்னின்று சந்திக்கும் அதி சவாலானத் தேர்தல் இது...சிங்கத்தின் வாரிசுகளின் திறன் வெளிப்பட வேண்டிய தேர்தல் இது...

கள அரசியல் சூழல் அறிந்தவர்கள்..தொடர்ந்து கவனிப்பவர்கள்...தளபதியின் இந்தத் தேர்தல் அணுகுமுறையை வெகுவாக பாராட்டவே செய்கிறார்கள்...திமுக உடன் பிறப்புக்களுக்கும் தளபதியின் இந்த் மாற்றம் தித்திப்பாகவே இருக்கிறது... மதுரைக்காரரின் உற்சாகமும் உத்வேகமும் பல இடைத்தேர்தல்கள் மூலம் நாடறிந்த செய்தி...

கனிமொழி, தயாநிதி என திமுகவின் இளைய முகங்கள் வெகு சிரத்தையாய் தேர்தல் களத்தில் வளைய வந்தது திமுகவின் தேர்தல் அணுகுமுறையை பெருவாரியாக மாற்றி அமைத்து இருந்தது...திமுகவின் வரலாறு அறியாத சென்னைத் தொகுதிப் பொறுப்பாளர்களுக்கு "ப" வைட்டமின் நல்ல முறையில் அளிக்கப்பட்டதாய் களத்தில் இருந்து வரும் செய்திகள் திமுகவின் வெற்றி வேட்கையை உறுதி செய்கிறது... வந்த வைட்டமின்கள் ஒரே இடத்தில் ஒதுக்கப்படாமல் ஓட்டுக்களாய் வடிவெடுக்க உடன்பிறப்புக்கள் உண்மையாகவே பல இடங்களில் உழைத்துள்ளனர்..

இலங்கைப் பிரச்சனை திமுகவிற்கு எதிரான ஒரு அஸ்திரமாக எதிரணியால் பயன்படுத்தப்பட்டாலும்..உண்மையில் அது தமிழக வாக்காளர்களில் பெரும் பகுதியினர் மத்தியில் ஒரு பெரிய விஷயமாகவே எடுபடவில்லை...

திமுகவுக்கு எதிராக அதிமுகவின் கூட்டணி பலம்...வாக்கு கணக்கு...பத்திரிக்கைகளின் பலமான ஆதரவு..அதுவும் குறிப்பாக வட இந்திய தொலைக்காட்சி மற்றும் இணையங்களின் ஆதரவு இல்லாத ஒரு நிலைமையை உருவகப்படுத்துவதாகத் தெரிகிறது...திமுக அரசின் பெரிய அளவில் அதிருப்தி இல்லை என்பதே உண்மை நிலவரம்...

திமுக தலைவர் கருணாநிதி மீதும் அவர் தம் குடும்ப அரசியல் மீதும் மக்கள் தனிப்பட்ட முறையில் வெறுப்பும் கோபமும் கொண்டிருப்பது உண்மை என்றாலும்..திமுக அரசின் செயல்பாடு குறித்த பெரிய அங்கலாய்ப்பு குரல்கள் கேட்கவில்லை என்பது உண்மை...

ஒரு கழகத்தின் மீது உள்ள திருப்தியில் இன்னொரு கழகத்தை ஆதரிக்கும் தமிழக மக்கள் இந்த முறை எந்த ஒரு பெரிய அதிருப்தியையும் சந்திக்காத நிலையில்...கலைஞர் மற்றும் அவர் குடும்பத்தினர் செய்யும் அரசியல் மீது கொண்டுள்ள கோபத்தை திமுக என்ற கட்சியின் மீதும் அது நடத்தி வரும் அரசு மீதும் காட்டுவார்களா என்பது பில்லியன் டாலர் கேள்வி...


நான் சொல்லுவது முரணாக கூட அமையலாம்..ஆனாலும் அதிக அளவில் ஓட்டுப் பதிவு...களத்தில் கடைசி நேரம் வரை ஓயாது திமுககார்கள் காட்டிய சுறுசுறுப்பு...இதை எல்லாம் வைத்து பார்த்தால் திமுக கூட்டணிக்கே அதிக இடங்கள் கிடைக்க வாய்ப்பு எனப் படுகிறது,,,,

எல்லா யூகங்களும் இன்னும் 12 மணி வரைத் தான் தாங்கும்.. நம்ம பங்குக்கும் கச்சேரி வைச்சாச்சு...

இனி முடிவுகளை எதிர்நோக்குவோம் பாஸு

Wednesday, May 13, 2009

எம்.ஜி.ஆர், என்.டி.ஆர்,விஜயகாந்த் மற்றும் சீரஞ்சீவி

நடிகர்கள் அரசியலுக்கு வருவதும் ஆட்சியை அசாத்தியமாகப் பிடிப்பதும் 70 களில் தென்னிந்தியாவில் மிகவும் எளிதாக இருந்த விஷயம்..குறிப்பாக தமிழகமும், ஆந்திரமும் சினிமா மோகத்தில் உச்சத்தில் இருந்த காலம் அது....தமிழ் நாட்டில் எம்.ஜி.ஆரும்...ஆந்திரத்தில் என்.டி.ஆரும் நிகழ்த்திய அந்த அரசியல் சாதனைகள் இன்றளவும் கோலிவுட்டிலும் தொலிவுட்டிலும் மேக்கப் போடும் பச்சா நடிகர்களுக்கு கூட ஒரு லட்சியாமாக அமைந்து பஞ்ச் டயலாக் மட்டுமே பேசி கோட்டையே எட்டிப் பிடிக்கலாம் என மனப்பால் குடிப்பது நிகழ்கால நிதர்சனம்..

அரசியலில் வென்ற நடிகர்கள் பட்டியலை விட தோற்றவர்கள் பட்டியலே மிகவும் நீளம்....திரைப்படங்கள் அந்த சமூகத்தின் பிரதிபலிப்பாக மக்கள் உணர்வுகளை உச்சரிப்பதாக அமைந்த காலக்கட்டங்களில் கதாநாயகர்கள் தலைவர்களாக உருவாக்கப்பட்டார்கள்...உருவானப் பின் தலைவர்களாக தங்களைத் தக்க வைத்துக் கொண்டார்கள்..எம்.ஜி.ஆர், என்.டி.ஆர், ஜெயலலிதா என அரிதாரம் பூசி பின் அரியணை ஏறிய அனைவருக்கும் இது பொருந்தும்

பின்னாளில் சினிமா வியாபாரம் மட்டுமே பிரதானம் என மாற்றம் கண்ட் பின் வந்த திரைக் கதாநாயகர்களுக்கு ரசிகர்கள் கூட்டம் அதிகமிருந்தாலும் அதை ஒரு அரசியல் சக்தியாக மாற்றுவது லேசுப்பட்ட காரியாமாக இல்லை... இந்தியாவிலே மிக அதிக அளவில் ரசிகர்களைக் கொண்ட ரஜினிகாந்த் கூட ஒரு கட்டத்தில் அரசியலோடு நெருங்கி வந்து பின் ஒதுங்கி போய்விட்டார்...

காலம் காலமாக அரசியல் களம் கண்டு உரம் பெற்ற கட்சிகள் இன்று தேர்ந்த கார்பரேட் நிறுவனங்கள் போல திறம்பட கிளை பரப்பி நிறுவகிக்கப் படுவதும்.. புதிதாக எதாவது ஒரு கட்சி களம் கண்டால் முளையிலே அதைக் கிள்ளி எறிய அவை பயன்படுத்தும் அஸ்திரங்களும் இன்றைய சூழலில் புதிய அரசியல் கட்சிகள் செல்வாக்கு பெறுவதை பெருமளவில் தடுத்து விடுகின்றன..

கிட்டத்தட்ட எல்லா பெரிய கட்சிகளுக்கும் மீடியா பலம் அதிக அளவில் இருக்கிறது...சினிமா என்னும் மீடியா மூலம் வெளிச்சம் கண்டு கோட்டை கனவுகள் காணும் நடிகர்களை ஆக்கவும் அழிக்கவும் வல்லமை படைத்தவைகளாக இந்தக் கட்சி மீடியாக்கள் உள்ளன...கட்சிகளின் முக்கிய புள்ளிகளே படத் தயாரிப்பாளர்களாக இருப்பதால் நடிகர்களை ஒரளவுக்கு கடிவாளம் போட்டே வைக்க அவர்களால் முடிகிறது

நடிகர்களாக ஜெயிக்கவே பலத்தரப்பட்ட மக்களின் ஆதரவை ஒரு நடிகன் பெற வேண்டியுள்ளது..அப்படி வென்றாலும் தற்காலத்தில் அதைத் தக்க வைக்க பெரிதும் போராட வேண்டியுள்ளது...முன் காலத்தில் ரசிகர் மன்றங்கள் மூலம் லோக்கல் வெளிச்சம் காண துடித்த பல இளந்தாரிகளை இன்று பல ஜாதிக் கட்சிகள் வளைத்துப் பிடித்து உள்ளன...நடிகனின் பின் பட ரிலீஸ்க்கு மட்டும் போகும் இந்த இளைஞர் கூட்டம் நிச்சயம் எதாவது ஒரு ஜாதிச் சங்கத்திலோ ஒரு அரசியல் கட்சியில் இளைஞரணியிலோ இருக்கிறார்கள்... மன்றங்கள் பணம் செலவழிக்கும் இடங்களாகவும் மற்றவை ஒரளவுக்கு வருமானம் கிடைக்கும் இடமாகவும் உள்ளன. அன்று எம்.ஜி.ஆர் ..என்.டி.ஆருக்கு கிடைத்த கண் மூடித் தனமான பக்தர்கள் இன்றைய விஜயகாந்துக்கும் சீரஞ்சிவிக்கும் இல்லை...

எம்.ஜி.ஆரை,என்.டி.ஆரை வெல்ல வைக்க வேண்டும் என அவர்களுக்காக உடல் பொருள் ஆவியை அர்பணித்து உழைக்க ஒரு பெரும் கூட்டம் தயாராக இருந்தது...அந்தக் கூட்டத்தை ஒரு கட்டமைப்புக்குள் கொண்டு வேலை வாங்கும் திறன் அந்த தலைவர்களுக்கு இருந்தது..கட்சி என்பது தங்கள் சினிமாக் கவர்ச்சியைத் தாண்டி பல விஷ்யங்களால் கட்டப்பட்டது என்ற உண்மையை உணர்ந்தவர்கள் அவர்கள்...சினிமாக் கவர்ச்சியை ஒரு பிரதான ஆயுதமாக பயன்படுத்தி கட்சியின் அடித்தளத்தை மாநிலமெங்கும் பலப்படுத்தினார்கள்..நம்பிக்கையான தளகர்த்தரகளை ஏற்படுத்தி களம் கண்டார்கள்..எதிரணியின் பலம் பலவீனம் கண்டு அதற்கு தக்க தங்களை மாற்றி கொண்டு போராடி வென்றார்கள்..

அதி முக்கியமாக தங்களுக்கு எனத் தனி அடையாளம் இருந்தது அவர்களிடம்..அந்த அடையாளததை பெருக்கி பலன் கண்டார்கள்..

இன்று களம் காணும் முக்கிய நடிகர்கள் விஜயகாந்த்..சீரஞ்சிவி...சினிமா வாழ்க்கையின் அந்தியக் காலத்தில் அரசியலுக்கு வந்தவர்கள்...திரை வாழ்க்கையில் முடிவுரை எழுதும் தருணத்தில் அரசியலில் அரிச்சுவடி படிக்க வந்திருக்கிறார்கள்..அவர்களோடு இருப்பது பெரும்பாலும் அவர் தம் சொந்தக் குடும்பத்தினர்...முக்கிய தளகர்த்தர்கள் எனப் பெரிதாக அவர்களால் யாரும் உருவாக்கப்படவில்லை...

போருக்கு போக ஆயுதம் இருந்தால் போதும் என்று நினைக்கிறார்கள்...ஆயுதத்தை சமயோசிதமாக இயக்கத் தெரிந்தவ்ர்களோ தெரிந்திருக்க வேண்டும் என்பதோ அவர்கள் கருத்திலேயே இல்லை..வேர்களை ஆழமாகப் பதிக்காமல் வெறும் கிளைகளைப் பரப்பி கவர்ச்சிப் பந்தல் போடும் வியாபாரிகளாகவே இவர்கள் உள்ளார்கள்.. அரசியலில் எந்தவொரு ஆசானிடமும் நேராகப் பாடம் படித்து அறியாதவர்கள்...போஸ்ட்ட்ர்களில் மட்டும் பெருந்தலைவர்களின் படம் போட்டு வெத்து சவுடால் விடுபவர்கள்...அரசியல் அடிப்படை தெளிவு பெற நேரம் கூட ஒதுக்க முடியாதவர்கள்..அரசியலில் பால பாடம் கூடப் படிக்காமல் நேராக தேர்வு வந்தால் கூட பரவாயில்லை பட்டமளிப்பு விழாவுக்குச் செல்ல்த் துடிப்பவர்கள்


அரசியலில் செல்வாக்கு எவ்வளவு முக்கியமோ அதற்கும் அதிகமாய் கட்டமைப்பும் முக்கியம்.. திறமையாய் களம் கண்டு சாதிக்கக் கூடிய தளகர்த்தர்கள் முக்கியம்... இவர்களோடு அதிகமாக இருப்பது...இவர் தம் சொந்தக் குடும்பத்தினரே...


இவர்களோடு இருக்கும் ரசிகர் பட்டாளம் வெற்றி கொண்டாட்டங்களில் பங்கு பெற மட்டுமே லாயக்கு ஆனவர்கள்... வெற்றிக்கு உழைக்க தயார் ஆனவர்களா என்பது மிகப் பெரிய கேள்வி குறி?

ரசிகர்கள் பலம் திரையரங்குகளில் வேண்டுமானால் வசூலை அள்ள போதுமானதாக இருக்கும்...அரசியல் தேர்தல் என வரும் போது போராட்டம்...கட்டமைப்பு... திடமான நடத்தை...அசாதரண வேகம்... அசாத்திய விவேகம்... இவை எல்லாம் முக்கியம்... இது இல்லாத பட்சத்தில்...அரசியலில் வென்ற நடிகர்கள் அல்ல,,,,வெல்ல முடியாதவர்களின் பட்டியலில் தான் இவர்கள் பெயரும் இடம் பெறும்...

தற்சமயத்தில் இவர்கள் செய்ய வேண்டியது சினிமாவுக்கும் யதார்த்தக்கும் உள்ள இடைவெளியை புரிந்து கொள்வது.... முடிந்த வரை அந்த இடைவெளியை சீர் செய்து தங்கள் அடுத்த கட்டப் பயணத்துக்கு தயார் ஆவது... அதைச் செய்ய இவர்கள் தவறும் பட்சத்தில் வெற்றி வெளிச்சம் காணக் கிடைக்காத இவர் தம் ரசிகர்கள் வெகு சீக்கிரமே கோலிவுட்டிலும் டொலிவுட்டிலும் காத்திருக்கிறார்கள் எத்தனையோ வருங்கால முதல்வர்கள்... அவர்களுக்கு விசில் அடிக்க அவசரமாய் கிளம்பி போய் விடுவார்கள்

சூரியனுக்கு இலை ஆதரவு




ஓட்டுப் போட்டாச்சா...

நம்ம அய்யா கோபாலபுரத்துல்ல ஓட்டுப் போட்டுட்டார்...அம்மாவும் ஓட்டுப் போட்டாச்சு....

சற்று முன் கிடைத்த அதிர்ச்சித் தகவலைச் சொல்லத் தான் இந்தப் பதிவு..தகவலைச் சொன்னது நம்ம புரட்சித் தலைவி அம்மாவே தான்....

எப்படி எப்படியோ பேசி என்ன மாதிரி எல்லாமோ கூட்டணி அமைச்சா...கடைசி நேரத்துல்ல் சைக்கிள் கேப்புல்ல ஒரு புதுக் கூட்டணி அமைஞ்சிருச்சாம்...

அதாவது பூத்க்கு போய் முக்கியமா தென்சென்னை ஏரியாவுல்ல... இலைக்கு ஓட்டு போட முடிவெடுத்து இலையிலே பொத்தானை அமுக்குனா சூரியன்ல்ல லைட் எரியுதாம்.....சின்னத்துக்குள்ள இப்படி ஒரு கூட்டணி அமைஞ்சுப் போனது அரசியல் வட்டாரத்துல்ல பெரும் பரபரப்பு ஏற்படும்ன்னு எதிர்பாக்குறாங்க...தேர்தல் முடிவை இந்த கூட்டணி பாதிக்குமோன்னு பதட்டம் நிலவுதாம்....

ஆக இலையை அமுக்குனா சூரியன் சிரிக்குதாம்.... சூரியனை அமுக்குனா என்ன ஆவுதுன்னு இன்னும் தெரியல்ல தெரிஞ்சதும் அப்டேட் பண்ணுறேன்....

போங்க பாஸ் போய் ஓட்டைப் போட்டுட்டு அடுத்த வேலையைப் பாருங்க...

Tuesday, May 12, 2009

சர சர சரத் கணக்கு



"என்றா கண்ணு... போன வாட்டி 800 சொச்சம்..... அது ஒரு தொகுதி..அதுவும் ஒரே ஒரு சட்ட மன்ற தொகுதியிலே இந்த நாட்டாமை கணக்கு...இப்போ நாடாளுமன்ற தொகுதி அதுவும் நிறைய தொகுதி...நாடளும் மக்கள் கட்சி கூட கூட்டு வேற வச்சிருக்கோம்...போஸ்ட்டர்ல்ல போட்டுருக்க நெம்பர் தெரியுதா கண்ணு...கூட்டிக் கழிச்சு அந்த நெம்பரை நாம வாங்கிரணும் கண்ணு அப்போத் தான் நாம நினைக்கிற மாதிரி இஸ்திரியை...அதான் கண்ணு வரலாறை திருப்பி எழுதணோம்... நாட்டாமைக்கு வாக்கு முக்கியம் கண்ணு....கணக்கு ....வாக்கை ஒழுங்கா கணக்கு பண்ணு....என்றா சம்முகம் எடுறா வண்டிய.... ம்ம் தேறுதல் தொடங்கட்டும் கண்ணு...."

மக்கா... பிரச்சாரம் எல்லாம் ஓஞ்சுப் போச்சு... இனிமே ஓட்டுப் போடுற பங்காளி டூ நாட்டாமை...நாட்டாமை டூ பங்காளி....

மறக்காம ஓட்டுப் போட்டுருங்க....ஜனநாயக கடமை அது..

கள்ளக்குறிச்சியில் தேர்"தலை" ராகம்



தட்டிப் பார்த்தேன் கொட்டாங்குச்சி
தலை நிக்குற தொகுதி கள்ளக்குறிச்சி
தேர்தல் தேதி வந்தாச்சி
எதிரி ஓடணும் தெறிச்சி
மறக்காம ஓட்டுப் போடுங்க அண்ணாச்சி....

வந்தாச்சு எலெக்சன்
சிம்பு தான் என் பர்ஸ்ட் சன்
திமுகன்னா ரைசிங் சன்
அதிமுகன்னா அம்மா டாமினேசன்
கேப்டனுக்கு நோ குவாலிப்பிகேசன்
நீங்க எல்லாம் இந்த நாட்டு சிட்டி சன்
மறக்காம ஓட்டு போட்டு பண்ணுங்க நல்ல செலக்சன்

ஏய் டண் டணக்க...டணுக்கு நக்க...டண் டணக்க...டணுக்கு நக்க....


VOTE IS YOUR RIGHT SO DONT MISS IT

சற்று முன் கிடைத்த படங்கள்












இந்தப் படங்கள் எல்லாம் பழசு தான்...ஆனா எனக்கு கொஞ்சம் நேரம் முன்னாடி தான் இணையத்துல்ல தேடும் போது கிடைச்சுதுங்கண்ணா.....

சினிமால்ல எல்லாம் பழைய படத்தை ரீமேக் பண்ணுறாங்க...அதை மாதிரி தான் இதுவும் அரசியல் ரீமேக் படம்....எப்படி...

சரி நாளைக்கு எல்லாரும் மறக்காமல் ஓட்டுப் போட்டுருங்க....அவங்க அவங்களுக்கு பிடிச்ச வேட்பாளருக்கு...நல்லது செய்வாங்கன்னு நம்புற வேட்பாளருக்கு.... ஓட்டு போடுங்க மறக்காதீங்க..

Thursday, April 30, 2009

GIANT ரோபோ

காலசட்டைப் போட்டக் காலத்திலே எல்லாம் நமக்கு இருந்த ஒரே தொலைக்காட்சி நம்ம தூர்தர்ஷ்ன் தான்...அப்போ எல்லாம் மிமிக்கிரி பண்ணுறவங்க மறக்காம சென்னைத் தொலைக்காட்சியை வச்சு ஒரு பிட் நகைச்சுவை போட மறந்தது இல்லை.... அதுவும் அந்த மாலை வேளையிலே ஒரு அஞ்சு ஆறு மணிக்கு ஒரு முட்டையும் அது சுத்தி இரண்டு உருளையும் ஒரு இசையோட வரும் பாருங்க.... தூர்தர்ஷன் லோகோ தான்...அதுக்கு பிறகு ஒரு வர்ணனையாளர் வருவார்... வணக்கம் நேயர்களே... சென்னைத் தொலைக்காட்சியின் இன்றைய மாலை ஒளிபரப்பு பேண்ட் 1 சேனல் 4ங்கில் இனிதே ஆரம்பம் ஆகிறது அப்படிம்பார்... இந்த அறிவிப்பை மிமிக்கிரி செய்யாத கலைஞர்களே அன்று கிடையாது....அன்னிக்கெல்லாம் தூர்தர்ஷன் மவுசு மவுசு தான்...

இன்னிக்கு புள்ளங்க எல்லாம் சுட்டி டிவி டோராவுக்கு எப்படி கிறங்கி கிடக்குதோ..அப்படி அந்த காலத்துல்ல நாங்களும் ரவுண்ட் கட்டிப் பார்த்த சில டிவி தொடர்கள் இருக்கு...அதை எல்லாம் பத்தி யோசிச்சப்போ..நம்ம சிறு வயசு ஹீரோ ஞாபகத்துக்கு வந்துட்டார்..

சனிக்கிழமை தோறும் சாயங்காலம் இந்திபடம் போடுவாங்களே அதுக்கு முன்னாடி இந்த தொடர் வரும்....தொடர் பேர் ஜெயண்ட் ரோபோ.....ஒரு ஜப்பான் கார சின்னப் பையன் அவன் பேர் ஜானி..அவன் கையிலே ஒரு வாட்ச் ஒண்ணு இருக்கும் ஆபத்து வரும் போது அந்த வாட்ச்சை அப்படி இப்படி திருகி... அந்த பையன் ஜெயண்ட் ரோபோ அப்படின்னு கூப்பிடுவான் பாருங்க...அப்ப நம்ம ரோபோ அண்ணாச்சி.. மெல்ல கண்ணு முழிச்சு...மெதுவா மேலுக்கு சோம்பல் எல்லாம் முறிச்சு...அங்கிட்டும் இங்கிட்டும் அசைஞ்சு அசைஞ்சு புறப்படுவார் பாருங்க...அப்படி ஒரு கெத்தாயிருக்கும்.... சில சமயம் ஜானி வேறு எங்கேயோ சிக்கிட்டு வாட்ச் வழியாக் குரல் கொடுக்கும் போது நம்ம ரோபோ சும்மா ராக்கெட் வேகத்துல்ல வானத்துல்ல தவ்வி பறக்குற அந்த ஸ்டைல் இருக்கு பாருங்க.... இயந்திர மனுசனுக்கு தீவாளி ராக்கெட் வேசம் கட்டுனாப்புல்ல பின்னாலே புகை கிளம்ப அட்டகாசம் பண்ணுவார்...

ஜானி பையன் வேண்டாதவங்க கிட்டச் சிக்குறதும் ரோபோ அவனை காப்பாத்தக் கிளம்புறதுன்னும் தூள் பறக்கும் தொடரின் ஒவ்வொரு பாகமும்...சில சமயம் ஜானி ரோபோவைக் காப்பாத்தறதும் நடக்கும்...ரோபோ எந்திரம் தான்னாலும் அதுக்கும் ஜானி பையனுக்கு நடுவில் ஒரு அற்புதமான நட்பு சிருஷ்ட்டிக்கப்பட்டிருக்கும்.. அந்த சென்டிமெண்ட் சின்னஞ்சிறு வயசுல்ல மனசை எவ்வளவு கலங்கடிச்சு இருக்கு தெரியுமா...அனுபவிச்சுப் பாத்தவங்க கண்டிப்பா ஒத்துப்பாங்க...

ஜானி வாட்ச்சை தொலைக்கும் போதெல்லாம்...அவன் ரோபோ கூட எப்படி பேசப் போறானோன்னு நமக்குப் பதறும்...அப்புறம் ரோபோவை அழிக்க வில்லன் கோஷ்ட்டி திட்டம் போட்டு ரோபோவைத் தாக்க கிளம்பும் போதெல்லாம் நமக்கு மனசு துடிக்கும்..

இது எல்லாம் வாரம் வாரம் நடக்கும்...ஒவ்வொரு வார முடிவிலும் ஜானியும் ரோபோவும் எப்படியாவது ஜெயிச்சுருவாங்க.... அதைப் பாத்துட்டு அப்படியே ஆனந்தமா தெருவில்ல விளையாடப் போயிருவோம்...

இணையத்துல்ல அங்கங்கே தேடுனதுல்ல சிக்குன நம்ம பாசத்துக்குரிய ஜெயன்ட் ரோபோ சாரின் படங்கள் உங்கள் பார்வைக்கு

Wednesday, April 29, 2009

தளபதிங்கற பட்டம் இருக்கே

முதல் டிஸ்கி: இது உள்ளாட்சித் துறை அமைச்சரும் திமுக முன்னணி தலைவருமான மு.க.ஸ்டாலின் அவர்களைப் பற்றிய பதிவு இல்லை.

ஒரு பட்டம்ங்கறது...ஒருத்தரோட சாதனையைப் பாத்து..இருப்பைப் பாத்து...நடப்பைப் பாத்து...கொடுக்கப் படும் ஒரு அந்தஸ்து...

நடிகர்கள்ல்ல வி.சி.கணேசன் என்ற நடிகர் மராட்டிய வீரனாய் மேடையில் வாழ்ந்த விதம் கண்டு அவருக்கு தகுதியான சிவாஜி என்னும் பட்டத்தை அளித்தார் ஒரு மாபெரும் திராவிட பெரியார்.. அதற்கு பின்னர் அவருக்கு கிடைத்த நடிகர் திலகம் என்னும் பட்டமும் அவருக்கு எத்தனைப் பொருத்தம் என்பது அவரது படங்களைப் பார்த்த அனைவரும் ஒத்து கொள்வார்கள்..

மருதூர் கோபாலன் ராமச்சந்திரன். என்றொரு நடிகர் தன் படங்களில் தொடர்ந்து திராவிடக் கருத்துக்கள் ஒலிக்க பாமரனுக்கும் அது புரியும் வகையில் கொண்டு சென்ற காரணத்தினால் "புரட்சி நடிகர்" என்பதைக் கூட ஏற்றுகொள்ளலாம்

இலட்சிய நடிகர் எஸ்.எஸ்.ஆர்...காதல் மன்னன் ஜெமினி கணேசன்..மக்கள் கலைஞர் ஜெய்சங்கர்...நடிகவேள் எம்.ஆர்.ராதா....இப்படி அந்த பட்டங்களுக்கு அன்றைய கலைஞர்கள் தகுதி படைத்தவர்களாக இருந்தனர்..அதற்கு பின் கலையுலகம் சமுதாயம் சார்ந்த நிலையில் இருந்து வசூல் சார்ந்த ஒரு நிலையை பிரதானமாகக் கொண்ட நேரத்தில் வந்த ரஜினிகாந்த சூப்பர் ஸ்டார் பட்டம் பெற்றது...கமல்ஹாசன் காதல் இளவரசன் பட்டம் பெற்றது ( கமல் பின்னாளில் கலை ஞானி என்ற பட்டத்தை கலைஞரால் பெற்றார்) அவை எல்லாமே பொருத்தமாகவே இருந்தது...

ஆனால் சமீபக் காலமாக...பட்டங்கள் என்றால் என்ன அப்படின்னு தெரியாத ஒரு கூட்டம் தலைதூக்கியதால் நடக்கும் கூத்துக்கள் தாங்க முடியவில்லை...

ஒவ்வொருத்தருக்கும் இருக்க பட்டத்தைக் கேட்டிங்கன்னா...ஆளுக்கு நாலு கார்கில் யுத்தம்...பம்பாய் தீவிரயுத்தம்...சீன யுத்தம் இப்படி பல யுத்தத்துல்ல முன்னால நின்னு முழுமூச்சா சண்டை போட்டிருப்பாங்களோன்னு சந்தேகமே வரும்..

இந்தச் சரித்திரமெல்லாம் ஊன்றிப் படிச்சீங்கன்னா... இல்லை குறைந்தப் பட்சமா சரித்திர நாவல்களைப் படிச்சாக் கூட போதும்....அப்படி படிக்கும் போது பழங்காலத்து மன்னர்கள் அவர் தம் படைத்தலைவர்கள் பத்தியும் ஒரளவுக்கு விசயங்கள் தெரிஞ்சுக்க முடியும்...தளபதி அப்படின்னா எவ்வளவு பெரிய பதவி...அதற்கு எவ்வளவு தகுதிகள் வேண்டும்...ம்ம் யோசிக்க் யோசிக்க பிரம்பிப்பாக இருக்கும்

அப்படியே அந்தக் காலத்துல்ல இருந்து திரும்பி இந்தக் காலத்துக்கு வந்தா....வகை வகையாக காரு...சரக்கடிக்க ரக ரகமா பல ரக பாரு....கம்பெனிக்கு கலர் கலரா பிகரு இப்படி வாழுற நம்ம கோடம்பாக்கத்துப் பையபுள்ளக இருக்காங்களே அவங்க கணக்குல்ல முக்காவாசிப் பேர் தளபதி தான்...

அந்த தளபதிங்கற வார்த்தைக்கு மட்டும் உயிர் இருந்தா... ஏகப்பட்டத் தடவை தற்கொலை பண்ணியிருக்கும்...பட்டமெல்லாம் கொடுக்குறவங்களால்ல வாங்குறவங்களுக்கு ஒரு மரியாதை இருந்தது ஒரு காலம் ஆனா இப்போ கொடுமையிலும் கொடுமை....

இரண்டு புள்ளைகளை அரையும் குறையுமா உடுத்த விட்டு அக்கம் பக்கம் வச்சுகிட்டு நாலு கும்மாங்குத்து பாட்டு... நடுவுல்ல நாலு பைட்டு....கிடைக்கிற கேப்ல்ல எல்லாம் விரலை...உசுப்பி உலுக்கு எடுத்து பஞ்ச் டயலாக்ன்னு முக்கால் இஞ்சுக்கு மேக்கப் போட்டுக்கிட்டு கேமரா முன்னாடி ரவுசு விடுறது அமவுண்ட் கொடுத்து விசில் அடிக்கும் குஞ்சுகள் மூலம் வீதிக்கு ஒரு போஸ்ட்டர் அரங்கம் தோறும் சொந்தச் செலவில் கட் அவுட் என அராத்து வேலைகளை கொஞ்சம் கூட கூச்சமின்றி வலம் வருவது தான் இன்றைய தேதியிலே தளபதி ஆகுறதுக்கு வேண்டிய அடிப்படை தகுதியாப் போச்சு...

தளபதின்னு சொன்னா மட்டும் போதாதுன்னு அதுக்கே இன்னொரு பட்டம் சேத்துக்குறாங்க....

இளைய தளபதி...சின்னத் தளபதி...புரட்சித் தளபதி....வீரத் தளபதி....இப்படி இந்த நிமிசம் வரைக்கும் தளபதிகள் லிஸ்ட் நீண்டுகிட்டே போகுது...ஒவ்வொரு வெள்ளியும் ஒரு புதுப் பட ரிலீஸ் போது ஒரு தளபதி உருவாகிக் கொண்டே இருக்கிறார்...இந்த அதி பயங்கர தீவிரவாதத் தாக்குதலுக்கு ஒரு முடிவே இல்லாமல் போயிட்டு இருக்கு..இந்த தீவிரவாதத்தை எல்லாம் ஒழிக்க ஒரு சிறப்பு படை அமைக்கற மாதிரி பெருகி வரும் தளபதிகள் தொல்லையை ஒழிக்க எதாவது ஒரு படை அமைச்சாத் தேவலாம் போலிருக்கு...

அந்தக் காலத்துல்ல பல போர்களுக்கு படைத் திரட்டி...வியூகம் வகுத்து.. நாடு கடந்து..நகரம் கடந்து...கடல் கடந்து... வீடு துறந்து...சொந்த விருப்பு வெறுப்பு துறந்து தேச நலன் பேண..இன மானம் காக்க... போர்கள் புரிந்த அந்த மெய் தளபதிகளின் ஆன்மா...இந்த டூபாக்கூர் தளபதிகளை மன்னிப்பார்களா... வேற என்னச் சொல்ல...

tamil10