Wednesday, March 28, 2007

அம்மா... உங்க பையன் இப்போ ஆபிஸர் - 2

டெஸ்ட்க்கு தேதி குறிச்சுட்டு டீச்சர் அக்காப் போயிட்டாங்க... பரீட்சைக்கு பாடம் படிக்கல்லன்னா பராவாயில்ல,,, பாடமே தெரியல்லன்னா.. அடக் கொக்கமக்கா.. என்னய்யா பண்றது...?

இருந்த ஒரு ராத்திரியும் யோசனையிலே கழிஞ்சுப் போச்சு... பேசாம நாமளே பேப்பரைப் போட்ட்டுருவோமா

அவங்களா நீ பெயில்ன்னு சொல்லி துரத்தி விட்டா அசிங்கம்... ஆனா அதுக்கு முந்தி நாமளாக் கிளம்புனா... ஆ சிங்கம் ஒன்ணு பொறப்பட்டதேன்னு பில் டப்பு எல்லாம் கொடுக்கலாம்ன்னு கணக்குப் போட்டுகிட்டு இருந்தேன்..

பொழுதும் விடிஞ்சிருச்சு... சுரத்தையே இல்லாமா வீட்டுல்ல நாலு இடலியை முழுங்கிட்டு பைக்கைப் பத்திகிட்டுடை எல்லாம் இறுக்கி கட்டிகிட்டுப் போய் இறங்குனேன்...நம்ம பங்காளிகளும் நம்மக் கூட தூங்கி வழிஞ்ச மீதி சிங்கங்கள் தான்.. நம்மளை மாதிரியே பீதியிலே பல வித பீலிங்க்ல்ல நின்னாய்ங்க... பெண் சிங்கங்களாவது பொறுப்பா இருப்பாங்கன்னு பார்த்தா அவிங்க கிட்டத்தட்ட கண்ணீரும் கம்பலையுமா நிக்குறாங்க...

ஏன் தேவ் நமக்கெல்லாம் வேலைப் போயிருமோ ஒரு சகோதரி சந்தேகம் கேட்ட நேரம் என் அடி வயித்துல்ல எலி ஓடுன மாதிரி இருந்துச்சு..

இருந்தாலும் பொண்ணுக்கு தைரியம் சொல்லுறது ஒரு ஆண்மகனுக்கு அழகல்லவான்னு சும்மா கிலோ கணக்குல்ல தைரியத்தை அள்ளி விட்டேன்.. இருந்த மொத்த தைரியத்தையும் ஊருக்குக் கொடுத்துட்டு உக்காந்து இருந்தேன்...

கழுதைப் பிட் அடிச்சாவது பாஸ் பண்ணலாம்ன்னு பார்த்தா ஒருத்தர் கையிலும் பாடம் பத்திய சின்ன க்ளு கூட இல்ல.. நம்ம நாயகம்ன்னா நம்மக் கூட சேந்தாங்க எல்லாம் நடு நாயகமா இருக்காங்களே ஒரு சின்ன சந்தோசம்...அந்தப் பரீட்சை ஒரு அக்னி பரீட்சையா அமைஞ்சது,, கேள்விகள் மட்டும் தெரிந்த எனக்கு விடைகள் எந்தத் திசையில் இருக்குன்னுத் தெரியாமல் என் மூளையைக் கசக்கி பிழிந்துப் பதில்கள் எழுதுனேன்..

மிஸ்டர்.பீன் பார்க்கும் ஆர்வம் உள்ளவர்கள் பீன் பரீட்சை எழுதும் பகுதி பார்த்தீருப்பீங்கன்னு நினைக்கிறேன்.. கிட்டத் தட்ட எங்க பேட்ச்ல்ல் 23 பேரும் பீன் மாதிரியேத் தான் பரீட்சை எழுதுனோம்..

அந்தப் பரீட்சை விடைத் தாள் என் கையிலே கிடைச்சா வ,வா.சங்கத்துல்ல பதிவாப் போடுறேன் பார்த்து படித்து மகிழுங்க... அவ்வளவு தமாஸ் அது...

பரீட்சை முடிஞ்சு ஒரு வாரம் கழிச்சு... எதோ சேமினார் பிரசண்டேஷன்ன்னு மைக் முன்னால வலுக்கட்டாயமா ஏத்தி நிக்க விடடாயங்க... வாய்ல்ல வடை சுட்டு ஊருக்குக் கொடுக்கறது நமக்கு கை வந்தக் கலைங்கறதால.. கண்டமேனிக்கு வடையை வறுத்து பொரிச்சு அவிச்சு வந்திருந்தவங்களுக்குக் கொடுத்திட்டோம் இல்ல,,, வந்தவ்ங்களுக்கு நம்ம பேச்சு பிடிச்ச மாதிரி தான் இருந்தது...

வேலை போகாதுடோய்ன்னு மைல்டா மைண்ட் ரிலாக்ஸ் ஆனது அப்போத் தான்.. அதுக்கு அப்புறம் அந்த நிறுவனத்தில்ல நான் ஒன்றரை வருசம் வேலைப் பார்க்கும் வரை என் தேர்வு முடிவுகள் வரவே காணும்... நாங்களும் எதுக்கு ரிஸ்க்ன்னு டீச்சர் பக்கம் மறந்தும் கூட அந்தக் கேள்வியைக் கேக்குறது இல்ல..

இதுக்கெல்லாம் பொறவு எங்களை நாங்க வேலைச் செய்யற இடத்தைப் பார்க்க கூட்டிட்டுப் போனாங்க..அங்கிட்டு அவன் அவன் கொடுத்த லுக்ல்ல மறுபடியும் எனக்கு கிலி எடுக்க ஆரம்பிச்சது..

மருந்துக்குக் கூட சிரிக்க மாட்டேன்றானுவ... எதோ ரஷ்யா ராணுவத்துக்கு ஆள் எடுத்த மாதிரி முன்னால இருந்த கம்ப்யூட்டர் பாத்து மொறச்சி மொறச்சி பாக்குறான்வா... அதை தட்டுறானவ...

நான் சிரிச்சா.. நம்மளை எளப்பமா ஒரு லுக் வேற விடுறான்வ... கடுப்புக்களைக் கண்டப் படி கிளப்பிகிட்டு இருந்தான்வ.. இவன்வ கூட வேலைப் பாக்குறதுக்கு அந்தப் பரீட்சை ரிசல்டடைக் கேட்டு வாங்கிட்டு கேட்டுக்கு வெளியேப் போய் நாலு பேப்பர் பொறுக்கிப் பொழைக்கலாம் போலிருக்கேன்னு யோசிக்க வச்சிட்டான்வ..

ONJOB TRAINING ஆரம்பிச்சது.. அப்போத் தான் எனக்கு முற்பகல் நடந்த விசயங்களுக்குக் காரணம் எல்லாம் விளங்கிச்சு... ஒரு பெரிய கோணியை என் கையிலேக் கொடுத்து.. தம்பி தேவ் .. போய் தெவை இல்லாத எல்லா ஆணியையும் டக்குன்னு புடுங்கிட்டு வா பாப்போம்ன்னு ஒருத்தன் சொன்னான் ( பின்னாளில் அலுவலத்தில் வன் எனக்கு நெருங்கிய நண்பன் ஆந்து வேறு கதை)

ஆமாங்க தேவையில்லாத ஆணின்னு எப்படிங்க் அடையாளம் கண்டுபிடிக்கிறது?

தம்பி நாங்களும் ப்ர்ண்டஸ் படம் பாத்து இருக்கோம்ல்ல எங்க கிட்டவே நக்கலா.. போ போ.. போய் ஆணி புடுங்கு.. நீ புடுங்குறாது பூராவும் தேவை இல்லாத ஆணிதான்.. கோணியும் கையுமா அலைய விட்டான்வ...

டேய் இதுக்குத் தானாடா மூணு வேளை சோறு தூக்கம்ன்னு ஒரு மாசம் வாழ விட்டீங்களாடா.. ஆடு வெட்டுரதுக்கு முன்னாடி மஞ்சத் தண்ணி எல்லாம் ஊத்தி உசுப்பேத்தி தலையிலே ஒரே போடா போடுவாங்களே அது மாதிரியாடா அதுக்குப் பேர் தான் இன்டக்ஷ்னாடா.. விவேக் மாதிரி பொலம்பல்ஸாப் போச்சு..

காலையிலே இருந்து சாயங்காலம் போய் ராத்திரி வரைக்கும் சின்சியரா நானும் ஆணி எல்லாம் புடுங்கி கோணிக்குள்ளேப் போட்டுப் போய் கொடுத்தா.. அந்த மேனேஜர் என்னப்பா பூராவுமே தேவையான ஆணியாப் புடுங்கிட்டு வந்துருக்கே.. சரியில்லையே... ம்ம் ஒண்ணு பண்ணு இந்தா இதை எல்லாம் எங்கே புடுங்குனியோ அங்கேயேப் போய் அடிச்சுட்டு தேவை இல்லாத ஆணியை மட்டும் புடுங்கிட்டு வான்னு அசால்ட்டா சொல்லுவார்..

அது மட்டுமில்லை நமக்கு ட்ரெயினிங் கொடுக்குற பங்குக்கு கிட்ட பையனுக்குச் சரியாச் சொல்லிக் கொடுப்பான்னு வேற அட்வைஸ்.. அப்புறம் என்ன கோணி, ஆணி.. புதுசாக் கையிலேச் சுத்தின்னு மறுநாள் பொழப்பு ஆரம்பம் ஆயிரும் அந்த மேனஜர் டார்ச்சர் தாங்க முடியாமப் போயிட்டு இருந்துச்சு

அதுக்கு நான் என்னப் பண்ணேன் தெரியுமா?

44 comments:

.:: மை ஃபிரண்ட் ::. said...

நட்சத்திர வாரத்தின் வெற்றிகரமான மூன்றாவது நாளில் வெற்றிகரமாக எல்லா பதிவுலேயும் முதல் பின்னூட்டம் அடித்து இதிலேயும் அடிக்கிறேன்.. :-)

சந்தோஷ் aka Santhosh said...

யப்பா இன்னிக்கு நான் தான் முதல்ல..:))

.:: மை ஃபிரண்ட் ::. said...

எங்கே என் கமேண்ட்டை காணோம்?

.:: மை ஃபிரண்ட் ::. said...

//சந்தோஷ் aka Santhosh said...
யப்பா இன்னிக்கு நான் தான் முதல்ல..:)) //

சந்தோஷ் ஐயா, இன்னைக்கும் நந்தான் ஃபர்ஸ்ட்டு. உங்களைவிட 2 நிமிட் முன்னுக்கு வந்துட்டேன். ஹீஹீ.. ;-)

.:: மை ஃபிரண்ட் ::. said...

//கிட்டத் தட்ட எங்க பேட்ச்ல்ல் 23 பேரும் பீன் மாதிரியேத் தான் பரீட்சை எழுதுனோம்//

அலார்ம் க்லாக், கலர் கலர் பேனா, ஆங்.. அப்புறம் அந்த பீன் பொம்மை.. இதெல்லாம் மறக்காம சட்டை பையில வச்சி எடுத்துட்டு போனீங்கன்னு சொல்லுங்க.. ;-)

சந்தோஷ் aka Santhosh said...

அய்யோ இன்னிக்கும் நான் மொதல்ல இல்லையா நெஞ்சு பொறுக்குதில்லையே. தேவு நாளைக்கு போஸ்டு போட்ட உடனே சொல்லுடே.. பிரண்டு யக்கா ஒரு நாள் விட்டு குடுக்குறது :))

.:: மை ஃபிரண்ட் ::. said...

//அந்தப் பரீட்சை விடைத் தாள் என் கையிலே கிடைச்சா வ,வா.சங்கத்துல்ல பதிவாப் போடுறேன் பார்த்து படித்து மகிழுங்க... அவ்வளவு தமாஸ் அது...//

me waitign for that postuu--:-D

//தம்பி நாங்களும் ப்ர்ண்டஸ் படம் பாத்து இருக்கோம்ல்ல எங்க கிட்டவே நக்கலா.. போ போ.. போய் ஆணி புடுங்கு.. நீ புடுங்குறாது பூராவும் தேவை இல்லாத ஆணிதான்..//

உங்க சீனியர்தான் கைபுள்ளவா? ic..

மணிகண்டன் said...

//அதுக்கு நான் என்னப் பண்ணேன் தெரியுமா?
//

அந்த மேனேஜர் மண்டைலயே நச்சுனு ஆணிய அடிச்சுட்டிங்களா :)

மனதின் ஓசை said...

ஓ..அடுத்த பதிவும் பொட்டாச்சா??
இங்கயும் கும்பி உண்டா??

மனதின் ஓசை said...

//உங்களைவிட 2 நிமிட் முன்னுக்கு வந்துட்டேன்//

என்னது.. முன்னுக்கு வந்துட்டீங்களா.. இவ்ளோ ஈஸியா முன்னுக்கு வரலாமா?தெரியாம போச்சே..எங்கப்பா முன்னுக்கு வாடா முன்னுக்கு வாடான்னு சொல்லிக்கிட்டே இருந்தாரு..

துளசி கோபால் said...

எல்லாருக்கும் ஆணி மேலே என்ன இவ்வளவு காதல்? நான் முந்தி நீ முந்தின்னு போட்டி போட்டுக்கிட்டு
ஓடிவராங்க இங்கே! அப்படி என்னதான் ரேஷன்லே போடறீங்க? சக்கரையா இல்லே பாமாயிலா?

போட்டும். பீனோட புதுப்படம் இங்கே நாலைக்கு ரிலீஸ். 'பீன் ஆன் ஹாலிடே.' ட்ரெய்லர் சிரிப்பா இருக்கு:-))))

மனதின் ஓசை said...

மை ஃபிரண்ட்,
உங்க பேர எப்படி எழுதரதுன்னு சொல்லுங்க.. "ஃ" எப்படி போடறது? நான் ஒவ்வொரு தடவையும் காப்பி பேஸ்ட் பன்ன வேண்டியதா இருக்கு..

மனதின் ஓசை said...

நண்பர்களே,
கொஞ்சம் கை கொடுத்தீங்கன்னா போன பதிவுல 500 அடிச்சிடலாம்..

மனதின் ஓசை said...

//நானும் ஆணி எல்லாம் புடுங்கி கோணிக்குள்ளேப் போட்டுப் போய் கொடுத்தா.. அந்த மேனேஜர் என்னப்பா பூராவுமே தேவை இல்லாத ஆணியாப் புடுங்கிட்டு வந்துருக்கே.. சரியில்லையே... ம்ம் ஒண்ணு பண்ணு இந்தா இதை எல்லாம் எங்கே புடுங்குனியோ அங்கேயேப் போய் அடிச்சுட்டு தேவை இல்லாத ஆணியை மட்டும் புடுங்கிட்டு வான்னு அசால்ட்டா சொல்லுவார்..//
?????????????

மனதின் ஓசை said...

//ட்ரெய்லர் சிரிப்பா இருக்கு:-)))) //

பீன் படமில்ல...நிச்சயமா படமும் சிரிப்பாத்தான் இருக்கும்..தைரியம பாக்கலாம். :-)

வெட்டிப்பயல் said...

தொடர் நல்லா போயிட்டு இருக்கு...

உங்கள் நண்பன் said...

//இருந்த மொத்த தைரியத்தையும் ஊருக்குக் கொடுத்துட்டு உக்காந்து இருந்தேன்...//

இம்புட்டு நல்லவனா நீ?

// என் மூளையைக் கசக்கி பிழிந்துப் பதில்கள் எழுதுனேன்..//

எதுக்கு இந்தப் பீலா? உனக்குத்தான் அது இல்லைனு எல்லாருக்குமே தெரியுமே?( சிரிப்பான் இல்லை சீரியசான பின்னூட்டம்)


அன்புடன்...
சரவணன்.

உங்கள் நண்பன் said...

//"ஃ" எப்படி போடறது? நான் ஒவ்வொரு தடவையும் காப்பி பேஸ்ட் பன்ன வேண்டியதா இருக்கு..
//

எனக்கு சில எழுத்துக்களுக்கு அந்தத் தொல்லை இருந்தது, இப்பொழுது எல்லாம் சரி ஆயாச்சு

q என்ற ஆங்கில எழுத்துத் தான் ஃ சரியா மனதின் ஓசை

//மனதின் ஓசை said...
ஓ..அடுத்த பதிவும் பொட்டாச்சா??
இங்கயும் கும்பி உண்டா??
//

கும்பி இல்லை கும்மி, கும்பி கும்பினு போட்டு புலிப்பாண்டிய கோவப் படுத்தாதீங்க!
முதல் 50 பின்னூடங்கள் பதிவைப் பற்றியே அதன் பிறகு தான் ஆட்டம் ஆரம்பம், இன்னைக்கு என்ன டார்கெட்னு இப்போ வர ஃபிக்ஸ் பண்ணலை, டார்கெட் மாலை நேர ஆணியைப் பொருத்தது.

மனதின் ஓசை said...

//எதுக்கு இந்தப் பீலா? உனக்குத்தான் அது இல்லைனு எல்லாருக்குமே தெரியுமே?( சிரிப்பான் இல்லை சீரியசான பின்னூட்டம்)//

ரிப்பீட்டே..

மனதின் ஓசை said...

//q என்ற ஆங்கில எழுத்துத் தான் ஃ சரியா மனதின் ஓசை//

சரிதான். ரொம்ப நன்றி சரவணா.

//கும்பி இல்லை கும்மி, கும்பி கும்பினு போட்டு புலிப்பாண்டிய கோவப் படுத்தாதீங்க!//

சரவணா.. புலி எங்கேயோ போய் படுத்து தூங்கிகிட்டு இருக்கு போல..வரட்டும்..பேசிக்கலாம்.

மனதின் ஓசை said...

பதிவு வழக்கம் போலவே அருமை தேவ்.

//அந்தப் பரீட்சை விடைத் தாள் என் கையிலே கிடைச்சா வ,வா.சங்கத்துல்ல பதிவாப் போடுறேன் பார்த்து படித்து மகிழுங்க... அவ்வளவு தமாஸ் அது...//

கொஞ்ச நாளைக்கு முன்னடி ஒரு விடைத் தாள் மடல்ல வந்துது..அது உன்னுதுதானா????

//நாங்களும் எதுக்கு ரிஸ்க்ன்னு டீச்சர் பக்கம் மறந்தும் கூட அந்தக் கேள்வியைக் கேக்குறது இல்ல..
//

இந்த மாதிரி ஆளுங்கள இன்டர்வியூ பன்னி எடுத்தது தெரிஞ்சா டீச்சர் வேலை போயிடும்னு பயந்துட்டங்களோ என்னவோ..

அபி அப்பா said...

// மனதின் ஓசை said...
ஓ..அடுத்த பதிவும் பொட்டாச்சா??
இங்கயும் கும்பி உண்டா??//

அது கும்பி இல்லை. கும்மி கும்மி கும்பி:-) ஊகூம் கும்பின்னே வச்சுகலாம்:-))

மனதின் ஓசை said...

ஸ்டாரு,
உன்னுடைய அன்பான வேண்டுகோளை ஏற்று பதிவ போட்டுட்டேன்..
எல்லாரும் அப்டிக்கா கொஞ்சம் பாருங்கப்பூ..
(கண்டுக்காத.. ஒரு சின்ன விளம்பரம்தேன்)

http://manathinoosai.blogspot.com/2007/03/blog-post_26.html

அபி அப்பா said...

ஆபீஸர், நல்லாவே நகருது தொடர், வெளுத்து கட்டவும்.(புலி! இந்த கமண்ட கலாய்ச்சா த்ரியும் சேதி):-))

மனதின் ஓசை said...

//அது கும்பி இல்லை. கும்மி கும்மி கும்பி:-) ஊகூம் கும்பின்னே வச்சுகலாம்:-))
//

எதுக்கும் அபி பாப்பாகிட்ட கேட்டு சொல்லுங்க.

மனதின் ஓசை said...

//வெளுத்து கட்டவும்//

சீய்.. தேவு என்ன தேவு இது? சரி இனியாவது வெளுத்து அத கட்டு..சரியா??

நாகை சிவா said...

மக்கா, நம்மள பாக்க பெரும் தலைகள் எல்லாம் படைய திரட்டிக்கிட்டு இன்னிக்கு வருது. அதுகள லைட்டா கண்டுக்கின அப்பால வரேன்

நாகை சிவா said...

//நண்பர்களே,
கொஞ்சம் கை கொடுத்தீங்கன்னா போன பதிவுல 500 அடிச்சிடலாம்.. //

கண்டிப்பா அடிக்குறோம், அதில் சந்தேகமே பட வேண்டாம் ஹமீது...

தேவ்க்காக இது கூட செய்யாட்டி எப்படி?

நாகை சிவா said...

//தொடர் நல்லா போயிட்டு இருக்கு... //

வெட்டி சிரிப்பான விட்டுட்டு பாரு!

இருந்தாலும் உனக்கு நக்கல் ரொம்பவே ஜாஸ்தி வெட்டி!

.:: மை ஃபிரண்ட் ::. said...

//அய்யோ இன்னிக்கும் நான் மொதல்ல இல்லையா நெஞ்சு பொறுக்குதில்லையே. //

சந்தோஷ், நாளை திரும்பவும் முயயற்சி செய்யவும். :-)

.:: மை ஃபிரண்ட் ::. said...

//மை ஃபிரண்ட்,
உங்க பேர எப்படி எழுதரதுன்னு சொல்லுங்க.. "ஃ" எப்படி போடறது? //

மனதின் ஓசையாரே,

அது ரொம்ப ஈஸி. "Q" பட்டனை உங்க கீபோர்ட்டுல தட்டுனீங்கன்னா.. இதோ வந்துருச்சு "ஃ" :-D

.:: மை ஃபிரண்ட் ::. said...

//முதல் 50 பின்னூடங்கள் பதிவைப் பற்றியே அதன் பிறகு தான் ஆட்டம் ஆரம்பம், //

ரைட்டு.. இதை நான் ஆமோதிக்கிறேன் நண்பா. :-)

.:: மை ஃபிரண்ட் ::. said...

//கண்டுக்காத.. ஒரு சின்ன விளம்பரம்தேன்)//

மனதின் ஓசையாரே,

கச்சேரிக்கே கச்சேரியா? ;-)

Madura said...

ஆபீசர் ஆன போஸ்டு இரண்டும் இப்பத்தான் படிச்சேன் நட்சத்திரமானவரே ... கலக்கிட்டீங்க... "ஹீ ஹீ"ன்ன்னு சிரிச்சுக்கிட்டே இரண்டும் படித்து மிகவும் ரசித்தேன்!

லேட்டா வந்ததுக்கு மன்னிக்கவும் :) இருங்க எல்லாப் பக்கமும் போய் பாக்குறேன்!

G.Ragavan said...

கொஞ்சம் டல்லா இருந்த என்னைய இன்னைக்குச் சிரிக்க வெச்சது இந்தப் பதிவு. :-) நீங்க சொல்றதென்னவோ உண்மைங்க. ஆணி பிடுங்குறதுன்னா சும்மாவா? அடேங்கப்பா!

மனதின் ஓசை said...

//அது ரொம்ப ஈஸி. "Q" பட்டனை உங்க கீபோர்ட்டுல தட்டுனீங்கன்னா.. இதோ வந்துருச்சு "ஃ" //

ஃபிரண்ட்,
ஆல்ரெடி சரவணம் சொல்லி கொடுத்திடாரு..

(Q தட்டினா Qதான் வருது..q தட்டினாதான் ஃ வருது :)))

மனதின் ஓசை said...

//மனதின் ஓசையாரே,

கச்சேரிக்கே கச்சேரியா? ;-)
//

ஹி ஹி ஹி...

ஆமா..இங்க என்ன பன்றீங்க.. அங்அ 500 அடிச்சாச்சி..அடிச்சது நாந்தான்.தெரியுமில்ல.. :-))

இலவசக்கொத்தனார் said...

//இருந்த மொத்த தைரியத்தையும் ஊருக்குக் கொடுத்துட்டு உக்காந்து இருந்தேன்...//

இதுதான்யா பெஸ்ட் வரி. நல்லா சிரிச்சேன் காலங்கார்த்தால. நடத்து!!

Boston Bala said...

ரசித்துப் படித்தேன். தொய்வில்லாத தொடர்

Boston Bala said...

off-topic: உங்க ஹோம்பேஜ் வருவதற்கு ரொம்ப நேரம் எடுக்குதே... ஏனுங்க??

தேவ் | Dev said...

//off-topic: உங்க ஹோம்பேஜ் வருவதற்கு ரொம்ப நேரம் எடுக்குதே... ஏனுங்க??//

ஒரு வேளை நம்ம பின்னூட்ட விளையாட்டுக் காரணமா இருக்குமோ என்னவோ? KINDLY ADJUST

துர்கா|thurgah said...

மை ஃபிரண்ட் துளசி டீச்சர் கிட்ட இருந்து பின்னூட்ட நாயகி பட்டம் உங்கிட்ட வர போகுது...இப்படி நான் போகும் இடத்தில் எல்லாம் கலக்குறீங்களே!!

துர்கா|thurgah said...

//
ஒரு வேளை நம்ம பின்னூட்ட விளையாட்டுக் காரணமா இருக்குமோ என்னவோ? KINDLY ADJUST //

எல்லாம் இந்த மை ஃபிரண்ட் ஆரம்பிச்சது.
comment moderation gone cuz of her right?

Anonymous said...

tibia money tibia gold tibia item runescape money runescape gold tibia money tibia gold runescape gold runescape accounts tibia gold tibia money runescape money runescape gp buy runescape gold tibia gold tibia item buy runescape money runescape gold runescape items tibia money tibia gold

tamil10