அப்ரேசல் முடிஞ்சு அவன் அவனுக்கு அல்வாவும் லட்டும் மிக்ஸரும் காரசேவும் இனிப்பு சேவும் ஏன் மக்ரூன் கூடக் கொடுத்தாய்ஙக... நமக்கும் கிடைச்சது எம்.ஜி.ஆருக்கு ஒரு புரட்சித் தலைவர் , கருணாநிதிக்கு ஒரு கலைஞர் ,ரஜினிக்கு ஒரு சூப்பர் ஸ்டார், கமலுக்கு ஒரு ஓலக நாயகன்...அந்த வரிசையிலே எனக்கும் கிடைச்சது ஒரு மெகாப் பட்டம்...என்னப் பட்டம்ன்னு கேக்குறீங்களா...
அதையும் சொல்லுறேன்.. ஜெர்மன் சோல்ஞ்சர்.. ஜெர்மன் ஷெப்பர்ட் தெரிஞ்சிருக்கும் உங்களுக்கு ஜெர்மன் சோல்ஜ்ர் புதுசா இருக்கும்.. போனப் பதிவைப் படிச்சீங்கன்னா பட்டக்காரணம் உங்களுக்கே விளங்கும்...
நாளொரு நக்கலும் பொழுதொரு அவமானமும் என ஹிட்லருக்கும் எனக்குமான உறவு நிலை உலகத்தின் விளிம்ம்புக்குச் சென்று சீர்கெட்டுச் சின்னாப்பின்னமாகச் சிக்கு விழுந்துப் போய் கொண்டு இருந்தது..
இதனால் செமக் கடுப்புக்குள்ளான நான் அந்த முடிவை எடுத்து.. அதை என் நண்பர்களிடமும் சொன்னனேன்.. மச்சான் ஸ் பேசாம ராஜினாமாக் கடித்ததுல்லக் கையெழுத்துப் போட்டுரலாம்ன்னு பாக்குறேன்டா இன்னொரு பொன்மாலைப் பொழுதில் நாயர் கடை டீ ஸ்டாலில் நான் என் உணர்ச்சிகளைக் கொந்தளிச்சு கொப்பளிச்சேன்.
எனக்கு ஒத்தடம் கொடுக்கற மாதிரி ஒரு ஆறுதலான அயோடக்ஸ் தடவுன வார்த்தைகள் பதிலா வரும்ன்னு நான் காத்திருந்தா.. சண்டாளர்கள் டைமிங்காக் கவுத்து கரையான் புத்துக்குள்ளேக் கையை விட்ட எபெக்ட்ல்ல எனக்கு பதில் சொன்னாங்க..
மாப்ளே நீ இப்படி ஒரு முடிவு எடுக்கலாமாடா.. நீ யாருடா வீரன்... ஒரு வீரன் இப்படி முடிவுப் பண்னக் கூடாதுடா.. போராடணும்.. அதுவும் நீ ஜெர்மன் சோல்ஜ்ர் ஆச்சு... குடிச்ச டீ தொண்டையிலே நின்னு குலுங்கி குலுங்கிச் சிரிச்சிட்டு வயித்துக்குள்ளேப் போச்சு... அந்த அளவுக்கு நக்கலுக்கு நையாண்டித்தனத்துக்கும் ஆளாக்கப்பட்டேன்.. யாரால்.. எல்லாம் அந்த ஹிட்லரின் மறு அவதாரத்தில்.. என்னைக் காப்பாற்ற ஒரு சர்ச்சில் வரமாட்டரான்ன்னு நான் தவிக்க ஆரம்பிச்சேன்...
சிரிங்கடா நல்லாச் சிரிங்க எல்லாத்துக்கும் ஒரு நாள் இருக்குடான்னு தமிழ் படம் பாத்து கெட்டுப்போன டயலாக் ஒண்ணை எடுத்துச் சொல்லிட்டு ஹிட்லர் போன் வர பாதி டீயை மடக்கென்று ஊற்றி கொண்டு கிளம்பினேன்.....
அதுக்கு அப்புறம் ஒரு நாள் டீம் மீட்டிங் வைச்சாங்க...
அன்னிக்கு பாய் கடை பிரியாணியும் அவிச்ச முட்டையும் தின்ன அசதி ஆளை அசத்த கொஞ்சம் கண் அசந்துட்டேன்.. படு பாவி பயர்...(என்ன இருந்தாலும் நமக்கு மேலதிகாரி மரியாதைக் குறைவாப் பேசப்பிடாது எனக்கு நானே வச்சுருக்க கொள்கை இது.. நானெல்லாம் ஒரு கொள்கை வீரன்ங்க...அதைப் பத்தி தனியா வேற பதிவு போடுறேன்)) அசிங்கப்படுத்திட்டார் என்னிய.... கிட்ட வந்து தட்டியிருந்தாக் கூட எழும்பி இருப்பேன்... விளங்காத பயர் போனைப் பண்ணி எழுப்புறார்... என் கிரகம் புடிச்ச நேரம் அன்னிக்குப் பார்த்து அவருக்குன்னு செட் பண்ணியிருந்த ரிங் டோன் WHO LET THE DOGS OUT???
சைலண்ட் மோட்ல்ல இருந்து செல்லமா பேச வேண்டிய போன் சங்கநாதமா ஒலிச்சு என்னைச் சங்காரம் பண்ணக் கிளம்பிருச்சு...
WHATS WRONG WITH U MAN? நீ ஒரு ஆபிசர் மாதிரியே பிஹெவ் பண்ண மாட்டேங்குற? ஒரு காலேஜ் பையன் மாதிரி கோமாளித் தனம் பண்ணிகிட்டு திரியுரன்னு வாய்ல்ல கஞ்சி காயச்சு நான் போதும் போதும்ன்னு கதறும் அளவுக்கு ஊத்து ஊத்துன்னு ஊத்திட்டார்... சுத்தி இருந்தப் பிகருங்க எல்லாம் கெக்கப் பிக்கன்னு சிரிச்சு நொந்தவனை நூடுல்ஸ் ஆக்கி தொங்கவிட்டிருச்சுங்க...
அத்தோட விட்டிருக்கலாம்...
இந்த வாரம் பார்ட்டி போலாம்ன்னு மேப் போட்டார் ஹிட்லர்... மேப்ல்ல எனக்குத் தான் ஆப் சொருகியிருக்குன்னு தெரியாம வலியப் போய் மேப்பை வாங்கி மூக்கு கிட்ட வச்சு உத்துப் பாத்தேன்.. WE WILL HAVE A DRINKS PARTY?
ஹேய் சோல்ஜர் வாட்ஸ் யுவர் பேவரிட் டிரிங்க் மேன்? என்னைச் சீண்டுறதே அந்தாளுக்குப் பொழப்பாப் போச்சு.. பசங்களும் பாசத்தைப் பொங்க விட்டு அன்பை வழியவிட்டாயங்க... எனக்குத் தெரிஞ்ச சோம பானம், சுராபானம் பிராண்ட்டை எல்லாம் நினைவில் கொண்டு வர கடும் முயற்சி செஞ்சிகிட்டு இருக்கும் போதே பயபுள்ள ஒருத்தன் போட்டு உடைச்சான்.... மால்ட்டோவா மம்மின்னு....
'HES A teetotaler BOSS '
அப்படின்னு நம்ம நல்லப் புள்ளத் தனத்தை எடுத்துச் சொன்னாயங்க...
வாட்... சரியானப் பச்சப் புள்ள மேன் நீ...GROW UP DUDE அப்படின்னு என் நல்லப் புள்ளத்தனத்தைச் சின்னப்புள்ளத்தனமா ஆக்கி அலங்கோலப்படுத்திட்டார் நம்ம ஹிட்லர் அண்ணன்.
மீட்டிங் முடிஞ்சுப் போச்சு..என் மானம் கப்பலேறிப் பல மைல் தூரம் போயிருச்சு....காரணம் ரைட்டோத் தப்போ மேல இருக்க அதிகாரி நம்மளைச் சின்னப்புள்ளன்னுச் சொன்னா அசிங்கம் இல்லயா.. அவமானம் இல்லையா...ஒரே பிலீங்க்ஸ் ஆப் இன்டியாவல நொந்துப் போயிட்டேன்.. இதுக்காகவது ஒரு முழு பாட்டில் பீர் விட்டுட்டு போய் அந்த ஆள் முன்னாடி நின்னு மைக் போட்டு ஏஏ.. ஹிட்லர் வெளியே வாய்யான்னு கூப்பிடலாம்ன்னு தோணுச்சு.. பட் நான் ஏற்கனவே சொன்னா மாதிரி நானெல்லாம் ஒரு பெரிய கொள்கை வீரன்...அதனால அமைதியாப் போயிட்டேன்... அடங்கிப் போயிட்டதா ஹிட்லர் மாதிரி நீங்களூம் தப்பு தப்பா நினைச்சுக்கக் கூடாது சொல்லிட்டேன்...
அதுக்கு அப்புறம், ஹிட்லர் ஆட்சி நமக்கும் பழகி கிட்டத்தட்ட ஹிட்லரின் நம்பிக்கைக்குரிய ஒரு தளபதியாவே காலம் என்னைக் கட்டாய மாற்றம் செய்தது எனக்கே ஆச்சரியமான விஷயம்..
இப்போ எல்லாம் அந்த ஆள் என்னிய என்னச் சொன்னாலும்...ஹே..ஹே.. குட் ஜோக் பாஸ்ன்னு வெக்கமே இல்லாம சிரிக்கிற அளவுக்கு சிரியசாக் கேரியர்ல்ல கவனமாயிட்டோம் இல்ல... ஆனாலும் அந்தச் சின்னப்புள்ள மேட்டர் மட்டும் மனசுல்ல ம்ஞ்சத்தூள் தூவி விட்டக் கணக்கா எரிஞ்சிகிட்டே இருந்தது...
அந்த மஞ்சத்துளை எடுத்து மசாலாவுல்ல போடுறதுக்குத் தோதா ஆபிசருக்கும் ஒரு கோல்டன் வாய்ப்பு வந்துச்சு... ஆமா அந்த ஹிட்லரை அடக்க ஒரு சர்சில் வந்தான்.. இந்த ஹிட்லரைக் கலாயக்க எனக்குக் கிறிஸ்துமஸ் ஒரு வாய்ப்பா வந்துச்சு.. வாய்ப்புன்னா வாய்ய்பு.. அம்புட்டு அருமையான வாய்ப்பு..
அது என்னன்னு கேக்குறீங்களா.. சொல்லுறேன்.. அதுக்கு நீங்களும் தயார் ஆக வேணாமா
இந்தக் கிறிஸ்துமஸ் பண்டிகைங்கறது பரிசுகள் கொடுத்து ஒருத்தரை ஒருத்தர் மகிழ்ச்சி அடைய வைக்கிற பண்டிகை.. கொடுப்பது இதன் சிறப்பு... இந்தப் பண்டிகைக் காலத்தில் வெளிநாட்டினர் ஒரு விளையாட்டு விளையாடுவாங்க அந்த விளையாட்டுக்கு பேர் கிறீஸ் மாம் .. கிறிஸ் சைல்ட்
இதைப் பத்தி கூகிளாண்டவரைக் கேட்டாக் கண்டிப்பா பக்கம் பக்கமா விளக்கம் கொடுப்பார்... எங்க ஆபிசும் மேற்கத்திய மக்களை வச்சு பொழைக்கிற ஆபிஸ் தானே... நாங்களூம் அந்த விளையாட்டை விளையாடணும்ன்னு எங்க ஹெ.எச் ஆர் அக்கா ( அக்காவை அதுக்குள்ளே மறந்து இருக்க மாட்டீங்கன்னு நம்புறேன்) வந்து ரூல்ஸ் எல்லாம் சொல்லி உசுப்பேத்தி விட்டாயங்க...
அதாவது சீட்டு எழுதி ஒரு பொட்டியிலே போடுவாங்க.. நம்ம பேர் எல்லாம் சீட்ல்ல இருக்குமாம்.. நம்ம எடுக்குற சீட்ல்ல யார் பேர் வருதோ நமக்குக் குழந்தை அந்தக் குழந்தைக்கு நாம் தான் அம்மா.. அம்மா பரிசு கொடுக்கணும் குழந்தையை ஊக்குவிக்கணும் ஒரு வாரம் இந்த விளையாட்டு நட்க்கும்
சரியா கிறிஸ்துமஸ்கு மொத நாள் யார் யாருக்குப் புள்ளன்னு தெரிஞ்சிரும்.. ஒரு வாரமும் யார் கிட்ட இருந்துப் பரிசு வருதுன்னு தெரியாம மெயின்டெயின் பண்ணனும் அந்த த்ரில் தான் விளையாட்டின் சிறப்பு...
இதைச் சொன்னது தான் தாமதம் அவன் அவன் தான் டாவடிக்கிற பொண்ணு தனக்கு குழந்தையா வர்ணும் கவர் பண்ணனும்ன்னு படா திட்டம் எல்லாம் போட ஆரம்பிச்சுட்டானுங்க... நாத்திகன் கூட சாமி கும்பிட்டு பயபக்தியாச் சீட்டு எடுத்தான்...
நானும் சீட்டு எடுத்தேன் நல்ல வேளை ஹிட்லர் பேர் இல்ல.... நமக்கு இந்த விளையாட்டு எல்லாம் அவ்வளவு சுவரஸ்யமா இல்ல..,. எதோ வந்த பேருக்கு எதாவது செய்வோம்ன்னு சீட்டை மடிச்சு வைச்சுட்டு பொட்டியைத் தட்ட ஆரம்பிச்சேன்...
நம்ம பைய ஒருத்தன் அவன் ரூட் விடுற பொண்ணு பேர் தான் சீட்ல்ல வரணும்ன்னு சிட்டியில்ல இருக்க எல்லா மதத்துக் கோவிலுக்கும் வேண்டிகிட்டு சீட் எடுத்தும் சிலிப் ஆயிருச்சு...ஒரு ரிட்டையர் ஆக வேண்டிய மாமா பேர் அவனுக்கு வந்துருச்சு...ஆனாலும் அவன் பீல் ஆகல்ல..
அவனை நான் காரணம் கேட்டேன்.. மாப்பூ இருந்தாலும் என்னடா.. நான் அவளுக்கு கிப்ட் கொடுப்பேன்.. அவளுக்கு அவ கிறிஸ்மாம் யார்ன்னு தெரியாதுல்ல... நான் கிப்ட் மூலமா என் காதலைச் சொல்லிருவேன்டா எனக்கு நம்பிக்கை இருக்குன்னு சொன்னான்...
அந்த ஆசிர்வதிக்க நிமிடம் என் மூளையிலே மின்னல் வெட்டிச்சு... அட அட ராசா என்ன ஒரு ஐடியாடா... என் நெஞ்சுல்ல மால்ட்டோவா வார்த்தடான்னு அவனை உச்சி மோந்தேன்..
என்னடான்னு அவன் கேட்டான்.. நீங்களும் கேப்பீங்க தெரியுது...
பதினாறு வயதினிலே பரட்டை மாதிரி உக்காந்துகிட்டு சொன்னேன்...
மாப்பூ ஹிட்லருக்கு நான் கிப்ட் கொடுக்கறதா முடிவு பண்ணிட்டேன்டா.... இந்த ஒரு வாரமும் நான் கொடுக்கிற கிப்ட்ல்ல மவனே ஹிட்லரை அப்படி கலாய்க்கிறேன் பாருன்னு.. வீரப்பா ரேஞ்சுல்ல சிரிச்சேன்... அப்புறம் வெயிட்டீஸ் ...டூமாரோ முடிச்சுக்குவோமா.... ஏன்னா நட்சத்திர சீசன் க்ளோஸ் ஆகப் போகுதுல்ல
76 comments:
me firstuuu???
me seconduuu
me thirduu
my friend... where r u???
மை ஃபிரெண்ட் என்னாச்சு???
இன்று நாந்தான் செகண்டு மக்கா..:-)
பார்த்துக்கோங்க
(நன்றி மை ஃபிரண்ட்)
Regards,
கோபிநாத்
எல்லாருக்கும் வணக்கம்..
வாழ்த்துக்கள் கோபி. :-)
வெட்டி, இன்னைக்கு மனதின் ஓசையாருக்கு இடம் கொடுக்கலாம்ன்னு வேய்ட் பண்ணிணேன். நீங்க முந்திக்கிட்டீங்க..
சரி, நாளைக்காவ்து அவருக்கு கொடுப்போம். :-)
இன்னைக்கு,
1stuu - வெட்டியண்ணா
2nduu- கோபியண்ணா
3rduu- .:: மை ஃபிரண்ட் ::.
4thuu - ??
சாரிங்க மை ஃபிரண்ட்,
ட்ராஃபிக் ஜேம்ல மாட்டிக்கிட்டேன். நான் நாளைக்கு முயற்சி செய்யுறேன்..
regards,
மனதின் ஓசை
:-(
@மனதின் ஓசை,
பரவாயில்லைங்க..
நாளைக்கு முயற்சி செய்யுங்க.. ;-)
So, நாலாவது இடம் இன்னைகு மனதின் ஓசை.. :-)
//மனதின் ஓசை said...
:-( //
ஆஹா உங்களுக்கு விட்டு கொடுத்து தான் வெயிட் பண்றாங்கனு எனக்கு தெரியாதுங்க... சாரி.. என்னுடைய முதல் கமெண்டை நீங்க போட்டதா வெச்சிக்கலாம் :-)
//வெட்டி, இன்னைக்கு மனதின் ஓசையாருக்கு இடம் கொடுக்கலாம்ன்னு வேய்ட் பண்ணிணேன். நீங்க முந்திக்கிட்டீங்க..
சரி, நாளைக்காவ்து அவருக்கு கொடுப்போம். :-)
//
மை ஃபிரண்ட், என்னோட n/w வேகத்துக்கு எல்லாரும் சேர்ந்து விட்டு கொடுத்தால்தான் முடியும் :-)
வாழ்த்துக்கள் வெட்டி.
யோவ் வெட்டி..நேத்து எங்கய்யா போன? உன்ன மை ஃபிரண்ட் அவமானப்படுத்திட்டங்க. என்னான்னு கேளு..
//மனதின் ஓசை said...
யோவ் வெட்டி..நேத்து எங்கய்யா போன? உன்ன மை ஃபிரண்ட் அவமானப்படுத்திட்டங்க. என்னான்னு கேளு..
//
என்னது இது? புது கதையா கட்டுறீங்க????
வெட்டி அதற்கெல்லாம் அசர மாட்டார்.. :-)
Enna sinapulaithanamairuku na motha na rendunu, potti thattura velaiya vuttutu pathiva potta athukku pinnotatha kanum.
:(
//ஆஹா உங்களுக்கு விட்டு கொடுத்து தான் வெயிட் பண்றாங்கனு எனக்கு தெரியாதுங்க... //
நேத்து சும்ம விளட்டுக்கு சொல்றாங்கன்னு நினச்சேன்..நெஜந்தான் போலிருக்கு. நன்றி மை ஃபிரண்ட்.
//சாரி.. என்னுடைய முதல் கமெண்டை நீங்க போட்டதா வெச்சிக்கலாம் :-) //
:-)) வெட்டி, இப்படி எல்லாரும் பாசக்கார பயல்களா இருக்கிங்களே.
சரி..நம்ம ஊர் பய இல்ல..அதான்.:-)) சின்னசேலம் தெரியுமா?
வணக்கம் மை ஃபிரண்ட்..
//சரி, நாளைக்காவ்து அவருக்கு கொடுப்போம். :-)
//
நாளைக்கு (வீக் எண்டுல) நான் பதிவு பக்கமே வரது கஷ்டம்.. அதனால நீங்கலே புகுந்து விளையாடுங்க. ஓகேவா?
சரி, கொஞ்சம் பதிவ படிசிட்டு வரேன்..
//என்னது இது? புது கதையா கட்டுறீங்க???? //
எப்படீங்க இப்படி அப்பாவி மாதிரி பேசறீங்க..
என்னய்யா உயிரைவிட்டு எழுதுன பதிவை யாரும் சட்டையே பண்ணாம
1,2,3,4 ஆட்டம் ஆடறாங்க?
பேசாம இவுங்களுக்கு கிறிஸ் மம் ஆயிடவேண்டியதுதானே?
எதுக்கும் கொஞ்சம் ஸ்மைலி போட்டுக்கறேன்.
:-))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))
//நேத்து சும்ம விளட்டுக்கு சொல்றாங்கன்னு நினச்சேன்..நெஜந்தான் போலிருக்கு. நன்றி மை ஃபிரண்ட்.//
:-)
//நாளைக்கு (வீக் எண்டுல) நான் பதிவு பக்கமே வரது கஷ்டம்.. அதனால நீங்கலே புகுந்து விளையாடுங்க. ஓகேவா?//
சரி. ஓகே.. அப்போ நாந்தான்.. ;-)
//எப்படீங்க இப்படி அப்பாவி மாதிரி பேசறீங்க.. //
அதுதானே உண்மை மனதின் ஓசையாரே! ;-)
//துளசி கோபால் said...
என்னய்யா உயிரைவிட்டு எழுதுன பதிவை யாரும் சட்டையே பண்ணாம
1,2,3,4 ஆட்டம் ஆடறாங்க?
//
எல்லாரும் திரும்பி போய் பதிவ படிச்சிட்டு வருவோம்.. ஹ்ம்ம்.. கிளம்புங்க.. இங்கே கும்மியடிச்சு அடிச்சு.. படிக்கிறதுக்கு ஒரு பதிவு இருக்குன்னே மறந்துபோச்சு.. ஹீஹீ..
வழக்கம் போலவே நல்லா கொண்டு போற தேவ். அப்ரேசல் முடிவு என்னான்னு சொல்லவே இலல்யே.. பட்டம் மட்டும்தான் கிடைச்சுதா?
//என் கிரகம் புடிச்ச நேரம் அன்னிக்குப் பார்த்து அவருக்குன்னு செட் பண்ணியிருந்த ரிங் டோன் WHO LET THE DOGS OUT???//
நீ ஊமை குசும்பந்தான்யா.. வேணும்னே வச்சுட்டு ஒன்னும் தெரியாதவன் மாதிரி குந்திகிட்டு இருந்திருப்ப..
மீட்டுங்குல தூங்குன தேவே(கவுடாவே) :-) இதெல்லாம் சரியில்லைங்க. :-))))) who let the dogs out..wow..wow...wow...
இந்த வெளையாட்டு புதுமையா இருக்கே. இத எனக்கு யாரும் சொல்லித்தரலையேய்யா! எங்க பழைய ஆப்பீசுல floor decoration competitionனு வெப்பாங்க. தீபாவளிக்கு phool jaadiனு கொண்டாடுவாங்க. ஆனா கிருத்துமஸ்சுன்னா லீவு குடுத்து சும்மா விட்டுருவாங்க. ஆக....இட்லருக்கு பரிசு குடுத்தீங்க..என்ன குடுத்தீங்கன்னு அடுத்த பதிவுல படிச்சிக்கிறேன்.
//WHATS WRONG WITH U MAN? நீ ஒரு ஆபிசர் மாதிரியே பிஹெவ் பண்ண மாட்டேங்குற? ஒரு காலேஜ் பையன் மாதிரி கோமாளித் தனம் பண்ணிகிட்டு திரியுரன்னு வாய்ல்ல கஞ்சி காயச்சு நான் போதும் போதும்ன்னு கதறும் அளவுக்கு ஊத்து ஊத்துன்னு ஊத்திட்டார்... சுத்தி இருந்தப் பிகருங்க எல்லாம் கெக்கப் பிக்கன்னு சிரிச்சு நொந்தவனை நூடுல்ஸ் ஆக்கி தொங்கவிட்டிருச்சுங்க...
//
இப்படியெல்லாம் ஆகியும் நீ அங்கேயே இருந்திருக்கன்னா என்ன காரணம்?
அட..நீதான் எதுக்கும் பதில் சொல்லப்போறதில்ல இல்ல.. உன்கிட்ட கேள்வி கேக்குறது இனி வேஸ்ட்.
ரொம்ப சுவாரசியமா இருக்கு தேவ்!
:))
உங்களைப் போயி பச்சைப் புள்ளைன்னு சொல்லிட்டாரா!
சோகத்துல எனக்கே ரெண்டு பீர் அடிக்கலாம்னு தோனுதே!
//பேசாம இவுங்களுக்கு கிறிஸ் மம் ஆயிடவேண்டியதுதானே? //
டீச்சர்..பதிவ நல்லா படிச்சீங்களா?? மம் ஆனா பத்தாது.. பரிசு தரனும்.. என் அட்ரஸ் அனுப்பவா??
க்றிஸ்மா க்றிஸ்சைல்ட் வச்சி இப்படி ஒரு சதியா! நல்லாருக்குபா.. என்னாச்சுன்னு தெரிஞ்சிக்க ஆவல்.. நாளைக்கு பந்த் அது இதுன்னு கடையடைக்க மாட்டீங்களே?!
அப்புறம், ஒரு சமயம் வலைப்பதிவில் கிறிஸ்மா கிறிஸ்சைல்ட் விளையாடினா எப்படி இருக்கும்னு யோசிச்சிட்டிருந்தேன்... யார் அனானி பின்னூட்டம் போட்டாங்கன்னு கண்டுபிடிக்கணும்.. இப்படி ஏதாவது செய்யலாம்.. ஆனா, விளையாட்டெல்லாம் இல்லாமலே நம்மாளுங்க பூந்து வெளாடுறாங்க.. :)
//அப்புறம், ஒரு சமயம் வலைப்பதிவில் கிறிஸ்மா கிறிஸ்சைல்ட் விளையாடினா எப்படி இருக்கும்னு யோசிச்சிட்டிருந்தேன்... யார் அனானி பின்னூட்டம் போட்டாங்கன்னு கண்டுபிடிக்கணும்.. //
இது கூட நல்லா இருக்கே.. பொன்ஸ், இதுக்கு ஒரு பிராஜக்ட் பிளான் ரெடி பண்ணுங்க.. டிசைன் ஆரம்பிச்சிடலாம் :-))))))
கதை suspense தாங்கல.தண்ணீ அடிக்கலைன்னா சின்ன புள்ளதானமா?கும்மி இவ்வளவு சீக்கிரம் ஆரம்பித்து விட்டீர்களா பாச மலர்களே !!!
பயல் என்பதை மரியாதையாக பயர் என்று சொல்வார்களா?தேவ் அண்ணாவிடம் தமிழ் கத்துக்கனும்
அட அநியாய ஆபிஸருங்களானு தேவு இந்தப் பின்னூடப் போட்டிக்குத்தான் தலைப்பு வைத்திருப்பாரோ?
வெட்டி உன் பின்னூட்டத்திலும் கொல்டிவாடை!
இப்பொழுதே கும்மிக்கு அச்சரம் போட்டமாதிரித் தெரியுது!
நேற்றைய பதிவிற்க்கு சென்று பதிவிற்க்குச் சம்பந்தமான ஒரேஒரு பின்னூட்டம் மட்டும் போட்டுவிட்டு வந்துவிடுகிறேன்
(அப்போ இந்தப் பதிவிற்கான பின்னூட்டம்???)
தேவு ! என்ன ஆச்சு? அதுக்குள்ள மட்டுருத்தலை நீக்கியாச்சு! பதிவு என்ன கஷ்டப் பட்டுப் போட்டாலும் பாசக்கார பயலுக கும்மி மட்டுமே அடிப்பானுக எதுக்கு மட்டுருத்தல் பன்னனும்னு விட்டுட்டியா மக்கா?
ஆராவது இருக்கீங்க்ளா?? இன்னும் ஒரு நாலடிச்சி சிங்கத்த குகைக்குள்ள தள்ளிடலாம்...
ஃபிரண்ட், வெட்டி, சரா, இம்சை அரசி எல்லாம் எங்க போனீங்க??????
//மனதின் ஓசை said...
ஆராவது இருக்கீங்க்ளா?? இன்னும் ஒரு நாலடிச்சி சிங்கத்த குகைக்குள்ள தள்ளிடலாம்...
//
ஓசையாரே நான் இருக்கின்ரேன்! ஆளைக்கவுக்குறதுனாதான் நமக்கு அதிக இஷ்டமே! வாருங்கள் கவுத்திடலாம்!
சரி உம்மைப் பத்தி சொல்லும் ஓய்! நீங்க எந்த ஊரு! என்ன பண்ணுறீங்க?
ஓசை என்ன ஆச்சு? சும்மா போய்க்கிட்டு இருந்தவனை கையப் புடிச்சு கச்சேரிக்குள்ள விட்டுட்டு நீங்க எஸ்கேப் ஆயிட்டிங்களா?
சரா.. வந்துட்டேன்.. இருன்க குகைகுள்ள தள்ளிட்டு பெசுவோம்
உள்ளே போ.
அடிச்சாச்சு அடிச்சாச்சு!
கருத்துக்கச்சேரிக் கதவுகள் மூடட்டும், கும்மிகள் வரவேற்கப்படுகின்றன!
சொல்லுங்க சரா.. நான் பெங்களூருல கனினி துறையில குப்பை கொட்டிகிட்டு இருக்கிர கோடானு கோடி பேர்ல ஒருத்தன். நீங்க?
//கருத்துக்கச்சேரிக் கதவுகள் மூடட்டும்,//
அது பாட்டுக்கும் திறந்து இருக்கடும் சரா.. அடுத்தவங்கள பத்தி கவலைப்படாமல் நாம நம்ம கடமைய செய்வொம்
//கும்மிகள் வரவேற்கப்படுகின்றன! //
ரெடி.. ஸ்டார்ட்.
நான் பிறந்து வளர்ந்தது பரமக்குடி! படித்ததும் நட்புவட்டமும் கோயம்புத்தூர்!
நாகர்கோவிலில் சொந்த நிறுவனம்.
ISP- to provide internet connection through wireless to engineering colleges and cafes(வயர் இல்லா தொலைத் தொடர்பின் மூலம் பொறியல் கல்லூரிகளுக்கும், பிற நிறுவனங்களுக்கும் இணைய சேவை வழங்குவது)
//அது பாட்டுக்கும் திறந்து இருக்கடும் சரா.. அடுத்தவங்கள பத்தி கவலைப்படாமல் நாம நம்ம கடமைய செய்வொம்//
சரியான கருத்து!
மற்ற நண்பர்களை இன்னும் காணலை , மாலை வரை மந்தநிலை இருக்கும் என நினைக்கின்ரேன்
சு.வி:- எனது கிராமம் பற்றிய பதிவைப் பற்றி நேற்று கூறியதற்க்குப் புரியவில்லை என்று சொன்னீர்கள்!
அதற்கான சுட்டி http://unkalnanban.blogspot.com/2006/08/blog-post_115570806362340979.html, நேரம்கிடைக்கும் போது படித்துப் பார்க்கவும்.அதில் தான் தங்களின் 24% பற்றி குறிப்பிட்டுள்ளேன்
//நான் பிறந்து வளர்ந்தது பரமக்குடி! படித்ததும் நட்புவட்டமும் கோயம்புத்தூர்!//
:-) பரமகுடிதானே திரு.கமல் அவர்களின் சொந்த ஊர்? கொயம்பத்தூர் - எனக்கு மிக பிடித்த ஊர்.
//நாகர்கோவிலில் சொந்த நிறுவனம்.//
வாழ்த்துக்கள்.
//ISP- to provide internet connection through wireless to engineering colleges and cafes(வயர் இல்லா தொலைத் தொடர்பின் மூலம் பொறியல் கல்லூரிகளுக்கும், பிற நிறுவனங்களுக்கும் இணைய சேவை வழங்குவது) //
கடைசியில இப்படி கலாய்ச்சிட்டிம்ங்க பாத்தீங்களா... இன்கிலிபீஸ் கொஞ்சம் கொஞ்சம் தெரியுங்க :-)))))
ஓசை உங்களைக் கலாய்போனா!? அது சும்மா டமாசுக்கு !
சரி அடுத்த பின்னூடம் 50 இந்தமுறை நன் உங்களுக்கு விட்டுத் தருகிறேன், அடிச்சிக்கோங்க!
அடிச்சாச்சா? 50?
ஹி ஹி ... தெரியும் நீங்க அடிக்க மாட்டீங்கனு அதான் உங்க பெயரைச் சொல்லி நான் அடிச்சுட்டேன்! நாம 2 பேருதான் இருக்கின்றோம், நண்பர்கள் மாலையில் தான் வருவார்கள் என நினைக்கின்றேன், நானும் சிறிது நேரன் கழித்து வர்ர்ரேன்
சரா.. சாப்பிட கூப்பிடராங்க.. நீங்க சாப்டாச்சா? அரை மணியில் வந்துவிடுகிறேன்.. அதுக்குள்ள யாராவது வராங்களான்னு பார்ப்போம்.
//ஹி ஹி ... தெரியும் நீங்க அடிக்க மாட்டீங்கனு //
உங்களுக்கும் தெரிஞ்சி போச்சா :-)))
//அதான் உங்க பெயரைச் சொல்லி நான் அடிச்சுட்டேன்! //
சந்தோஷம்.. கரக்டா பேர சொன்னிங்க இல்ல??
ஆனா இப்படி அடிச்சேன் அடிச்சேன்னு சொல்றது கொஞ்சம் பயமா இருக்கு..அதுவும் என் பெர சொல்லி அடிச்சேன்னு வேற சொல்றீங்க.. பிரச்சினை ஏதும் வராதில்ல?
//நண்பர்கள் மாலையில் தான் வருவார்கள் என நினைக்கின்றேன், நானும் சிறிது நேரன் கழித்து வர்ர்ரேன் //
ம்ம்ம்.. மாலை நேரம் கும்மி நேரம்னு ஒதுக்கி வச்சி இருக்கங்க போல..
நண்பா,
நன்றாக எழுதி இருக்கிறாய்..கிராமத்தை சுற்றிப்பார்த்த உணர்வு.. விரிவாக பின்னூட்டம் போட்டு இருக்கிறேன். பார்க்கவும்.
//நானும் சிறிது நேரன் கழித்து "வர்ர்ரேன்"//
என்னாய்யா DTS எபக்ட்ல வரேன்கிற??
//நண்பா,
நன்றாக எழுதி இருக்கிறாய்..கிராமத்தை சுற்றிப்பார்த்த உணர்வு.. விரிவாக பின்னூட்டம் போட்டு இருக்கிறேன். பார்க்கவும்.
//
மனதின் ஓசை பார்த்தேன், நன்றி!உம்முடைய பெயர் போடாமல் ஏன் anonymous?
//மனதின் ஓசை பார்த்தேன், நன்றி!உம்முடைய பெயர் போடாமல் ஏன் anonymous? //
அட போய்யா.. அந்த பின்னுட்டம் போடறதுகுள்ள நொந்து போய்ட்டேன்.. 5,6 தடவ error வந்துடுச்சு/.அதான் அனானியா போட்டு பாத்தேன்...உடனே ஒத்துக்குச்சு.. நீதான் ஏதோ பன்னி வச்சிருக்கரன்னு நினைக்கிறேன்.. ஏன்யா?
அங்கேயே போன பின்னுட்டம் போட்டது நான்தான்னு சொல்லி இன்னொரு பின்னூட்டம் போட பார்த்தேன்.. அப்போ அனானியா கூட விடல..சரின்னு சண்ட போடறத விட்டுட்டேன்.
//அங்கேயே போன பின்னுட்டம் போட்டது நான்தான்னு சொல்லி இன்னொரு பின்னூட்டம் போட பார்த்தேன்.. அப்போ அனானியா கூட விடல..சரின்னு சண்ட போடறத விட்டுட்டேன். //
பரவாயில்லை விடுங்க! கும்பிக்கு ஆள் ரெடியா? நட்சத்திரத்தின் புதியபதிவு ஒரு 40 ஐ தாண்டியதும் அங்கு வைக்கலாம், அதுவரை இங்கே, சரியா?
யோவ் தேவு! மருவாதியா மட்டுருத்தலை எடுத்துவிடு!
இங்கதான கும்மி அடிக்கிறோம், உன் புதியபதிவிலா அடித்தோம் எடுத்துவிடுயா!
தேவு! டெஸ்டிங்
வந்துட்டேன் வந்துட்டேன்....
யோவ் உம்ம வாழ்க்கைக் கதையைப் படிக்கும் போது எனக்கு கண்ணுல தண்ணியே வந்திருச்சய்யா. இதையெல்லாம் படிச்சா நியாயப்படி நீதான்யா கைப்புள்ளையா இருக்கணும். அந்தாளையும் காணும். பேசாம உம்மையே அந்த போஸ்டுக்கு அப்பாயிண்ட் பண்ணிடலாமா?
வாங்க இம்சை அக்கா!
தேவு மட்டுருத்தலை நீ இன்னமும் விடலையா? பதில் சொல்லுயா?
நன்றி தேவு! நமது வேண்டுகோளுக்கிணங்க அதிவேக கும்மிக்கு முக்கியத்துவம் கொடுத்து மட்டுறுத்தல் பண்ணாமல் அனுமதிக்கும் அண்ணன் தேவுக்கு நன்றி
விளையாட்டு புதுசா இருக்கே?
இதை இங்கேயும் ஃபாட்டோ பண்ணிட வேண்டியதுதான்!!! ;-)
நீங்க என்ன பரிசு கொடுத்தீங்கன்றது தெரிய ரொம்ப ஆவலா இருக்கு. ;-)
// வெட்டிப்பயல் said...
me firstuuu??? //
நீ தெலுங்கு என்பது தான் எல்லாருக்கும் தெரியுமே அப்புறம் ஏன் இல்லாத்துக்குfirstuuu, seconduuu, thriduuuu படம் காட்டிகிட்டு இருக்க
மை ஃபிரண்ட் நானும் போனாப் போகுதுனு இப்போதான் பதிவை படித்தேன்! பயபுள்ள நல்லாத் தான் எழுதியிருக்கான்! அதைப் பற்றீ விரிவா இனிமேல் தான் பேசனும்!
இன்னைக்கு ஏன் லேட்டு மக்கா?
புலி நானும் முதலிலேயே சொல்லீட்டேன், வெட்டி உன் பின்னூட்டத்திலும் கொல்டிவாடைனு!
ஏன்ய்யா இன்னிக்கு கூகிள் சாட்டில் பேச வேண்டியது எல்லாத்தையும் மனதின் ஒசையும், சரா வும் இங்க பேசிக்கிட்டு இருக்கீங்க...
என்ன அநியாயம் இது
//யோவ் உம்ம வாழ்க்கைக் கதையைப் படிக்கும் போது எனக்கு கண்ணுல தண்ணியே வந்திருச்சய்யா.//
இந்த சோகத்தை மனதில் கொண்டு நீங்களும் சிங்கிள் மால்ட் விக்ஸ்கிய கையில் எடுத்து விடாதீங்க ;-)
இது சரிப்படாது! இன்னும் 100 கூட அடிக்கலை அதுக்குள்ள மக்கள் யாரையும் காணொம்! நானும் வெளிநடப்புசெய்யலாம் என்றிருக்கின்றேன்!
தேவு அநியாய ஆபிசர் சூப்பர்மா. நல்லா ஜாலியா போயிட்டு இருக்கு.
//என் கிரகம் புடிச்ச நேரம் அன்னிக்குப் பார்த்து அவருக்குன்னு செட் பண்ணியிருந்த ரிங் டோன் WHO LET THE DOGS OUT???//
மாப்பி அது "who let the frog out" இல்ல?
\\.:: மை ஃபிரண்ட் ::. said...
இன்னைக்கு,
1stuu - வெட்டியண்ணா
2nduu- கோபியண்ணா
3rduu- .:: மை ஃபிரண்ட் ::.
4thuu - ??\\
தங்கச்சிக்கா.....ரொம்ப நன்றி ;-)))
\\உங்கள் நண்பன் said...
மை ஃபிரண்ட் நானும் போனாப் போகுதுனு இப்போதான் பதிவை படித்தேன்! பயபுள்ள நல்லாத் தான் எழுதியிருக்கான்! அதைப் பற்றீ விரிவா இனிமேல் தான் பேசனும்!
இன்னைக்கு ஏன் லேட்டு மக்கா?\\
சரா...கடைசியில எப்படியே பதிவை படிச்சிட்டிங்க போல ;-)))
ஹைய்யா...நான் 75ஆ
என்னபன்னுரதுங்க கோபி!
நம்பயலாப் போயிட்டான்! பாவம் கஷ்டப்பட்டு பதிவெல்லாம் வேற எழுதியிருக்கான், அதான் ஒன்னே ஒன்னு மட்டும் பதிவிற்காக!
Post a Comment