Tuesday, March 27, 2007

நாங்க ஆபிஸர் ஆன கதை - 1

வேலைக் கிடைச்சுடுச்சு... படம் பேர் இல்லங்க... முதன் முதலா ஒரு கம்பெனியிலே இருந்து வேலைக்கான ஓலை வந்ததும் நான் தெரு தெருவாப் போய கூவாத குறையா சொன்ன டயலாக் இது...

உங்களுக்கும் முதன் முதலா ஒரு வேலைக் கிடைச்ச நேரத்துல்ல இதை மாதிரி நீங்களும் சொல்லியிருப்பீங்க... அப்புறம் நமக்குத் தெரிஞ்ச சொந்தம், பந்தம், பாசம், நேசம், படை பரிவாரம் எல்லாத்துகிட்டயும் சொல்லிட்டு வேலைக்குச் சேந்து ஆபிஸ்ங்கற ஆலயத்துக்குள்ளே நுழைஞ்சது ஒரு சுபயோக தினத்திலே...

நான் ஆபிசரா ஆபிஸ்க்குள்ளே நுழைஞ்ச அதே சமயம் நம்மளை மாதிரியே கோட்டும் சூட்டும் பூட்டும் மாட்டிகிட்டு ஒரு கும்பலே வந்து ஆபிஸை வெறிச்சி வெறிச்சிப் பார்த்துகிட்டு நின்னாய்ங்க...கலர் கலரா நாலைஞ்சுப் பிகர் வேற... ம்ம்ஹும்.. ஹாய் ஹ்லோ.. எல்லாம் சொல்லிக் கொஞ்ச நேரத்துல்ல அம்புட்டு பேத்துக்கு பிரண்ட் ஆயிட்டோம்..

நிதம் காலையிலே கலகலப்பாக் கிளம்பி ஆபிஸ்க்குப் போயிருவோம்..

ஏன்னு கேளுங்க...

அந்த முதல் கொஞ்ச நாள் இருக்கே ஆணி..கோணி..இதுக்கெல்லாம் மீனிங்க்கே தெரியாத பொற்காலம்.. அவங்க செலவுல்ல காலை மதியம் மாலைன்னு வகை வகையா அன்னம் தண்ணி கொடுத்து அவங்கக் காட்டுன அன்பு என்ன? அந்தப் பாசம் என்ன? ஹெச்.ஆர்ல்ல இருந்து ஒரு அக்கா வரும் பாருங்க அப்படி அன்பாப் பேசும்... நமக்கெல்லாம் உருகிரும்...

அப்புறம் ஒரு டீச்சர் அக்கா வருவாங்க... நாங்க வேலைக்குச் சேந்த அந்த நிறுவனத்தைப் பத்தி அருமையாப் படம் எல்லாம் போட்டு பாடம் எல்லாம் நடத்துனாங்க... நான் பாடம் நடக்கும் போது தூங்குனாக் கூடக் கண்டுக்க மாட்டாங்க.. இபப்டி ஒரு டீச்சர் நமக்கு பள்ளிக் கொடத்துல்ல கிடைக்காமப் போயிட்டாங்களேன்னு நான் பீலிங் ஆயிட்டேனாப் பாருங்களேன்... சோறு.. ஏ.சி ரூம் தூக்கம்ன்னு பழைய ராஜாக் காலத்து சுகபோக வாழ்க்கை...

ஒரு நாள் எங்க எல்லாரையும் ஒரு பஸ் வச்சு நம்ம மகாபலிபுரம் பக்கம் கூட்டிட்டுப் போய் ஸ்கூல் பிக்னிக் எல்லாம் ஞாபகப்படுத்திட்டாங்க..ஒரு நா முழுக்க ஒரே விளையாட்டு... கூத்து.. கும்மாளம்ன்னு பின்னி பெடல் எடுத்துட்டோம்... இது வாழ்க்கைடான்னு பேசி பேசிப் பூரிச்சு புளங்காகிதம் அடைஞ்சுட்டோம்...

எல்லாம் நல்லாத் தான் போயிகிட்டு இருந்தது... தீடிரென்னு டீச்சர் அக்கா ஒரு நாள் வந்து அந்த விசயத்தைச் சொல்லுற வரைக்கும்...

கீழே தான் எங்க ஆபிஸ் இருக்காம்.. நாங்க சாப்பிட்டு சாப்பிட்டு தூங்குன இடம் வந்து சும்மா ட்ரெயினிங் நடக்குற இடமாம்.. எங்களூக்கு நடந்தது இன்டக்ஷனாம்.. ( இஞ்ஜக்சன்ன்னு எங்காதுல்ல விழுந்தது.. இதுல்ல ஊசி வேறப் போடுவாங்களாமேன்னு பயந்துட்டேன்).. இவ்வளவு நாள் அவங்க நடத்துனப் பாடத்துல்ல இருந்து மறுநாள் டெஸ்ட் வைக்கப் போறேன்னு பெரிய குண்டு ஒண்ணைப் போட்டாங்க

என்னது டெஸ்ட்டா... இதை எல்லாம் நான் தூங்கும் போது தட்டி எழுப்பிச் சொல்லியிருக்கக் கூடாதா? ஒரு மாசமாத் தூங்குன கண்ணு கவலையிலேக் கலங்கிப் போயிருச்சு...

அடுத்ததா அவங்கச் சொன்னது கேட்டு மொத்தமும் நடுங்கியேப் போச்சு.. எதோ பாஸ் மார்க்காம் அதை எடுக்கல்லன்னா வேலையை விட்டுத் தூக்கி வீதியிலே விட்டுருவாங்களாம்...

இதைச் சொல்லும் போது அந்த டீச்சர் அக்கா எங்களைப் பார்த்து.. குறிப்பா என்னைப் பார்த்து நமுட்டுச் சிரிப்புச் சிரிச்சாங்க...

அடபாவிகளா... வேலைக்குப் போறேன்னு... எப்பவோ விட்டுப் போன உறவுக்கெல்லாம் வம்படியாப் போனைப் போட்டுச் சொல்லியிருக்கேனே.. இப்போ வேலைப் போச்சுன்னா.. அய்யகோ...

தூங்காதே தம்பி தூங்காதேன்னு பழைய எம்.ஜி.ஆர் பாட்டு எல்லாம் லேட்டா என் புத்தியிலே அலறுது.. பட் டூ லேட்..

ஒரு ஆபிஸரின் எதிர்காலமே ஆட்டம் காண ஆரம்பித்தது..

இன்னும் சொல்லுறேன்..

56 comments:

.:: மை ஃபிரண்ட் ::. said...

ஸ்டார் ரெண்டாவது நாளுக்கு முதல் வணக்கம்.. :-)

மனதின் ஓசை said...

நாந்தான் முதல் பின்னுட்டம் :-)

.:: மை ஃபிரண்ட் ::. said...

//மனதின் ஓசை said...
நாந்தான் முதல் பின்னுட்டம் :-) //

சாரி.. நான் மூனு நிமிடம் முந்திக்கிட்டேன்.. ;-)

.:: மை ஃபிரண்ட் ::. said...

//உங்களுக்கும் முதன் முதலா ஒரு வேலைக் கிடைச்ச நேரத்துல்ல இதை மாதிரி நீங்களும் சொல்லியிருப்பீங்க... //

நாமளே சொல்ல வேண்டாம்ன்னு இருந்தாலும் அவங்களே வந்து கேட்டு கேட்டு தெரிஞ்சுக்கிட்டு போறாங்களே!

//நம்மளை மாதிரியே கோட்டும் சூட்டும் பூட்டும் மாட்டிகிட்டு ஒரு கும்பலே வந்து //

கோட்டு ஓகே..
பூட்டு எதுக்கு?

.:: மை ஃபிரண்ட் ::. said...

//ஆணி..கோணி..இதுக்கெல்லாம் மீனிங்க்கே தெரியாத பொற்காலம்..//

அது ஒரு கனா காலம்.. :-)

//இஞ்ஜக்சன்ன்னு எங்காதுல்ல விழுந்தது.. //
தூக்க கலக்கத்துல இருந்தா இப்படி தப்பு தப்பாதான் கேக்கும்.. :-P

மனதின் ஓசை said...

////மனதின் ஓசை said...
நாந்தான் முதல் பின்னுட்டம் :-) //

சாரி.. நான் மூனு நிமிடம் முந்திக்கிட்டேன்.. ;-) //

மறுபடியும்??? தேவு.. இதில் ஏதொ சூழ்ச்சி இருக்கா மாதிரி தெரியுதே...மை ஃபிரண்ட் கிட்ட சொல்லிட்டுதான் பதிவு போடறியா நீ????

.:: மை ஃபிரண்ட் ::. said...

//இதை எல்லாம் நான் தூங்கும் போது தட்டி எழுப்பிச் சொல்லியிருக்கக் கூடாதா?//

உங்களுக்குள்ள தூங்கிட்டு இருக்குற மிருகத்தை (சிங்கத்தை) தட்டி எழுப்ப வேண்டாம்ன்னுதான் விட்டுட்டாங்க போல.. ;-)

.:: மை ஃபிரண்ட் ::. said...

//மறுபடியும்???//

ஏதோ படத்தோட பேருதானே சொல்றீங்க??

//இதில் ஏதொ சூழ்ச்சி இருக்கா மாதிரி தெரியுதே...//

அப்படின்னா? இந்த பச்சை பிள்ளைக்கு வாயில நீங்க விரலை வச்சாகூட கடிக்க தெரியாது.. :-P

//மை ஃபிரண்ட் கிட்ட சொல்லிட்டுதான் பதிவு போடறியா நீ???? //

அண்ணணோட போஸ்ட்டுக்கு தங்கச்சி முன்னுக்கு வந்து நிக்கலைன்னா எப்படி? அவர் சொல்லாட்டினாலும் நாங்க வந்துடுவோம்ல.. :-)

வெட்டிப்பயல் said...

//மனதின் ஓசை said...

////மனதின் ஓசை said...
நாந்தான் முதல் பின்னுட்டம் :-) //

சாரி.. நான் மூனு நிமிடம் முந்திக்கிட்டேன்.. ;-) //

மறுபடியும்??? தேவு.. இதில் ஏதொ சூழ்ச்சி இருக்கா மாதிரி தெரியுதே...மை ஃபிரண்ட் கிட்ட சொல்லிட்டுதான் பதிவு போடறியா நீ???? //

ரிப்பீட்டே!!!

அபி அப்பா said...

அட அநியாய ஆபீஸரே! முதல்ல மைஃபிடண்ட் கிட்ட சொல்லிட்டு பதிவ போடுவதை கண்டிக்கிறேன். முதல் பின்னூட்டம் நா போடலாம்ன்னு இருந்தேன். போச்சே..போச்சே:-))

இராமநாதன் said...

//..ஒரு நா முழுக்க ஒரே விளையாட்டு... கூத்து.. கும்மாளம்ன்னு பின்னி பெடல் எடுத்துட்டோம்... இது வாழ்க்கைடான்னு பேசி பேசிப் பூரிச்சு புளங்காகிதம் அடைஞ்சுட்டோம்...//
:))))))

கடாவுக்கு மாலை மரியாதை செய்யுறாப்புல செஞ்சுருக்காங்க போலிருக்கு. அப்புறம் வெட்டினாங்களா இல்லியான்னு நாளைக்கு வருமா?

தமிழிணையத்தின் புரட்சி இயக்கமாம் பமக வின் விடிவெள்ளி, நம்பிக்கை நட்சத்திம் கூடுதல் சிறப்பாய் தமிழ்மண நட்சத்திரமும் ஆனது கண்டு வாழ்த்துகளையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

.:: மை ஃபிரண்ட் ::. said...

எல்லாருக்கும் பொறமை தேவ் அண்ணா..

அபி அப்பா, அரை மணி நேரம் லேட்டா வந்துட்டு முதல் பின்னூட்டம் போடனும்ன்னா எப்படி? ;-)

மனதின் ஓசை said...

//அப்படின்னா? இந்த பச்சை பிள்ளைக்கு வாயில நீங்க விரலை வச்சாகூட கடிக்க தெரியாது.. :-P//

பச்சை பிள்ளைக்கு வாயில விரலை வச்சாகூட கடிக்க தெரியாதுன்னு யார் சொன்னது? என் பையன் வாயில என் பொண்டாட்டி கைய வச்சி கடி வாங்கினது/அவஸ்தைபட்டது எனக்குத்தான் தெரியும்.

//அண்ணணோட போஸ்ட்டுக்கு தங்கச்சி முன்னுக்கு வந்து நிக்கலைன்னா எப்படி? அவர் சொல்லாட்டினாலும் நாங்க வந்துடுவோம்ல.. :-)
//
தேவு, கொடுத்து வச்சவன்யா நீ.

மனதின் ஓசை said...

//உங்களுக்குள்ள தூங்கிட்டு இருக்குற மிருகத்தை (சிங்கத்தை)//

நல்ல வேளை.. என்ன மிருகம்றதையும் சொல்லிட்டிங்க :-)))

//எல்லாருக்கும் பொறமை தேவ் அண்ணா..//
இதப்பாருடா..

//அபி அப்பா, அரை மணி நேரம் லேட்டா வந்துட்டு முதல் பின்னூட்டம் போடனும்ன்னா எப்படி? ;-)
//
அதானே?

மனதின் ஓசை said...

தேவு.. பதிவ இப்பதான் படிச்சேன்.:-)

எல்லாம் சரிதான்.. ஆனா எல்லாரையும் அக்கா ஆக்கிட்டியே.. அம்புட்டு நல்லவனாடா நீ?

.:: மை ஃபிரண்ட் ::. said...

//என் பையன் வாயில என் பொண்டாட்டி கைய வச்சி கடி வாங்கினது/அவஸ்தைபட்டது எனக்குத்தான் தெரியும்.
//

உண்மைய சொல்லுங்அ மதின் ஓசையே. கடி வாங்கியது நீங்கதானே! ஹீஹீஹீ..

மனதின் ஓசை said...

நல்ல நடை தேவ்.. அப்புரம் என்ன ஆச்சு? சீக்கிரம் அடுத்த பதிவ போடு..(மை பிரண்ட் கிட்ட சொல்லாம)

மனதின் ஓசை said...

// எதோ பாஸ் மார்க்காம் அதை எடுக்கல்லன்னா வேலையை விட்டுத் தூக்கி வீதியிலே விட்டுருவாங்களாம்...//

இதையெல்லாம் நாங்க காலேஜ்லயே பாத்துட்டோம்.. யுனிவர்சிட்டி எக்ஸாமுக்கு முன்னாடி ஒரு பரிச்சை வைப்பாங்க.. அதுல எல்லா பாடத்துலயும் பாஸ் மார்க் வாங்கினாதான் யுனிவர்சிட்டி எக்ஸாம் எழுத முடியும்னு பயமுறுத்தியெல்லாம் பார்த்தாங்க.. நடக்குமா?

.:: மை ஃபிரண்ட் ::. said...

//சீக்கிரம் அடுத்த பதிவ போடு..(மை பிரண்ட் கிட்ட சொல்லாம) //

:-P

என்னுடைய ப்ரவுஸரில் இன்னைக்கு கச்சேரி வலையை மூடுவதே என்று ஒரு தீர்மாணத்துல இருக்கேன். ;-)

.:: மை ஃபிரண்ட் ::. said...

//என்னுடைய ப்ரவுஸரில் இன்னைக்கு கச்சேரி வலையை மூடுவதே என்று ஒரு தீர்மாணத்துல இருக்கேன். ;-)//

sorry.. typing error.. supposed to be மூடுவதே இல்லை.. ;-)

மனதின் ஓசை said...

//உண்மைய சொல்லுங்அ மதின் ஓசையே.//
அத அப்புரம் சொல்றேன்.. ஏன் என் பேர இப்படி நீங்க கடிச்சி குதர்றீங்க?

//கடி வாங்கியது நீங்கதானே!//
அவள ஹாஸ்பிடலுக்கு கூட்டிகிட்டு அலைஞ்சதுக்கு பேசாம நானே கடி வாங்கி இருக்கலாம்.

// ஹீஹீஹீ//
ஹீஹீஹீ!!!

நாகை சிவா said...

//உங்களுக்கும் முதன் முதலா ஒரு வேலைக் கிடைச்ச நேரத்துல்ல இதை மாதிரி நீங்களும் சொல்லியிருப்பீங்க... //

இல்லயே.... தன்னடக்கம் வேணும்ண்ணன், அப்படி எல்லாம் ஆடப்பிடாது....

//கலர் கலரா நாலைஞ்சுப் பிகர் வேற... //

உனக்கு நாலு, அஞ்சா அண்ணன், நான் இது மாதிரி சேர்ந்தப்ப என் கூட 3 தான். அதுல ஒன்னு ஆண்ட்டி....

நாகை சிவா said...

// சோறு.. //

அதுவும் என்ன வேணும் நம்மள கேட்டு அதையே ஆர்டர் பண்ணும் ரொம்ப நல்ல மனுசுங்க அவங்களுக்கு....

//ஒரு ஆபிஸரின் எதிர்காலமே ஆட்டம் காண ஆரம்பித்தது..//

ஆட்டம் மட்டும் தானா? பாட்டு, கொண்டாட்டம் எல்லாம் கிடையாதா?

தேவ் | Dev said...

மை பிரெண்ட் , மனதின் ஓசையாரே உங்கச் சண்டை ஓஞ்சுப் போச்சா.. உங்களை நம்பி கல்லாவை நான் இன்னும் திறந்து வச்சுக்கிட்டு உக்காந்து இருக்கேன்ப்பா.. மதியம் உணவு இடைவேளைக்குப் பொரவு ஒருக்கா வாங்க.. அபி அப்பாவை வேற வம்புக்கு இழுத்துருக்கீங்க.. பாவம் அவ்ரே டைகர் டாக் ஷோல்ல டவுன் ஆன பிலீங்ல்ல இருக்கார்...:-)

.:: மை ஃபிரண்ட் ::. said...

// நான் இது மாதிரி சேர்ந்தப்ப என் கூட 3 தான். அதுல ஒன்னு ஆண்ட்டி....//

ஆஹா. என்ன வருத்தம்பா உனக்கு!!!

.:: மை ஃபிரண்ட் ::. said...

//இப்படி நீங்க கடிச்சி குதர்றீங்க?//

கடிச்சு குதற நான் கண்மணி அக்கவோட ச்சுப்ரமணியும் இல்ல.. அபி அப்பாவோட டைகரும் இல்லை.. ஹீஹீ.. ஓ.. மறந்துட்டேன்! கோபியோட சோனியும் இல்லை.. ஹாஹாஹா..

//அவள ஹாஸ்பிடலுக்கு கூட்டிகிட்டு அலைஞ்சதுக்கு பேசாம நானே கடி வாங்கி இருக்கலாம்.//

:-)))

தேவ் | Dev said...

//கடாவுக்கு மாலை மரியாதை செய்யுறாப்புல செஞ்சுருக்காங்க போலிருக்கு. அப்புறம் வெட்டினாங்களா இல்லியான்னு நாளைக்கு வருமா?//

அந்தக் கதைப் பெரும் கதையாச்சே.. கடைசி முயற்சியா வெட்ட வச்சிருந்த கத்தியைக் களவாண்டுரலாம்ன்னு அமோகமாத் திட்டம் எல்லாம் தீட்டிட்டோம்ன்னாப் பாருங்களேன்

//தமிழிணையத்தின் புரட்சி இயக்கமாம் பமக வின் விடிவெள்ளி, நம்பிக்கை நட்சத்திம் கூடுதல் சிறப்பாய் தமிழ்மண நட்சத்திரமும் ஆனது கண்டு வாழ்த்துகளையும் தெரிவித்துக்கொள்கிறேன். //

அவ்வ்வ்வ்வ்வ் யப்பா காவிரி தண்ணிக்கெல்லாம் கஸ்ட்டப்படாதீங்க.. இந்தா என் கண்ணுல்ல வர்ற தண்ணியை அணைக் கட்டி யூஸ் பண்ணிக்கங்கப்பா... அண்ணே என்னிய என்னவெல்லாம் சொல்லிடீங்க.....என்னத் தவம் நான் செய்தேன் இம்புட்டு பாசமழையிலே நனைஞ்சு நிக்க...

.:: மை ஃபிரண்ட் ::. said...

//உங்கச் சண்டை ஓஞ்சுப் போச்சா.. //

இது சண்டையில்லைப்பா.. ice breaking session.. இப்பதானே ஒருவருக்கொருவர் introduce ஆகிக்கிட்டு இருக்கோம்!

நான் சொல்றது சரிதானே மனதின் ஓசை? (இப்போ கரெக்ட்டா எழுதியிருக்கேனா உங்கள் பேரை?)

//பாவம் அவ்ரே டைகர் டாக் ஷோல்ல டவுன் ஆன பிலீங்ல்ல இருக்கார்//

:-)))
தேவண்ணே, ஸ்பெஷல் ரிப்போட்டர்கிட்ட சொல்லி இதை பத்தியும் கேக்க சொல்லுங்க.. ;-)

மனதின் ஓசை said...

//மை பிரெண்ட் , மனதின் ஓசையாரே உங்கச் சண்டை ஓஞ்சுப் போச்சா.. //

ம்ம்.. மை பிரெண்ட் இன்னும் கேட்ட கேள்விகெல்லாம் பதில் சொல்லல.. சொல்லட்டும்..

//உங்களை நம்பி கல்லாவை நான் இன்னும் திறந்து வச்சுக்கிட்டு உக்காந்து இருக்கேன்ப்பா.. //

எலேய்.. இது உன் பதிவுதானே.. எதுக்கும் பதில் சொல்லவே இல்ல? மொதல்ல அத சொல்லுவே..

தேவ் | Dev said...

//உனக்கு நாலு, அஞ்சா அண்ணன், நான் இது மாதிரி சேர்ந்தப்ப என் கூட 3 தான். அதுல ஒன்னு ஆண்ட்டி....//

ஏன் சிவா அந்த மூணு பேரும் உங்கூட வேலைச் செய்ய மாட்டேன்னு ஒரே வாரத்துல்லக் கிளம்பிட்டாங்களாமே உண்மையா?

மனதின் ஓசை said...

//அபி அப்பாவை வேற வம்புக்கு இழுத்துருக்கீங்க.. //

:-) என்னது ..ஏதோ வார்னிங் கொடுக்கர மாதிரி இருக்கு?

//பாவம் அவ்ரே டைகர் டாக் ஷோல்ல டவுன் ஆன பிலீங்ல்ல இருக்கார்...:-) //

அய்யய்யோ...அப்டியா??

தேவ் | Dev said...

//அட அநியாய ஆபீஸரே! முதல்ல மைஃபிடண்ட் கிட்ட சொல்லிட்டு பதிவ போடுவதை கண்டிக்கிறேன். முதல் பின்னூட்டம் நா போடலாம்ன்னு இருந்தேன். போச்சே..போச்சே:-)) //

உங்களுக்கு நான் பதில் சொல்லலாம்ன்னு நினைக்கிறதுக்குள்ளே பாருங்க நம்ம பாசமலர் பொங்கிருச்சு :-)

நாகை சிவா said...

//நாந்தான் முதல் பின்னுட்டம் :-) //

//சாரி.. நான் மூனு நிமிடம் முந்திக்கிட்டேன்.. ;-) //

யாரு முதல் வராங்க அப்படிங்குறது முக்கியம் இல்ல, கடைசியில் யாரு நின்னு ஆடி முதல வராங்க அப்படிங்குறது தான் முக்கியம்....

;-)))))))))

.:: மை ஃபிரண்ட் ::. said...

//எலேய்.. இது உன் பதிவுதானே.. எதுக்கும் பதில் சொல்லவே இல்ல? மொதல்ல அத சொல்லுவே.. //

சபாஷ்! சரியான கேள்வி.. ;-)

.:: மை ஃபிரண்ட் ::. said...

//யாரு முதல் வராங்க அப்படிங்குறது முக்கியம் இல்ல, கடைசியில் யாரு நின்னு ஆடி முதல வராங்க அப்படிங்குறது தான் முக்கியம்....//

இந்த "கடைசி" இடம் நிரந்தரமில்லைப்பா.. அதே போல் அந்த "முதல்" இடமும் நிரந்தரமில்லை புலி.. நாளைக்கே நீ முதல்ல வரலாம். :-)
இல்லைன்னா மனதின் ஓசை மூனு நிமிடத்துல முதல் இடம் தட்டிட்டு போலாம்.. இல்லைன்னா அபி அப்பா டைகர் மேலே சவாரி செய்து முதல் இடம் வரலாம். :-)))

இராம் said...

அண்ணே,

இதேமாதிரி தான் என்னையும் போட்டு பாடா படுத்த ஆரம்பிச்சிடானுக........

இன்னும் எழுதுங்க...:))

இராம் said...

தேவ்ண்ணே,

நம்ம தங்கச்சிக்கா உயரெல்லை தாண்ட வைக்கனுமின்னே கங்கணம் கட்டிக்கிட்டு இருக்காங்கன்னு நினைக்கிறேன்??

:)

தேவ் | Dev said...

எலேய் மனதின் ஓசை அதாம் என் பாசக்காரத் தங்கச்சி பாஞ்சு பாஞ்சுப் பதிலைப் போட்டுத் தாக்குது இல்ல.. உனக்கு என் தங்கச்சியைப் பார்த்து பயம் அதான் பம்முற..

தங்கச்சி நீ கலக்கும்மா :-)

நாகை சிவா said...

//ஏன் சிவா அந்த மூணு பேரும் உங்கூட வேலைச் செய்ய மாட்டேன்னு ஒரே வாரத்துல்லக் கிளம்பிட்டாங்களாமே உண்மையா? //

இது எல்லாம் ரொம்ப சொல்லிட்டேன்...

நாகை சிவா said...

//இந்த "கடைசி" இடம் நிரந்தரமில்லைப்பா.. //

யாருங்க சொன்னது, கல்லூரியில் நான் இருந்த(படித்த) மூன்று வருடங்களும் நான் "கடைசி" பெஞ்ச் தான்

சென்னையில் கம்பெனியில் வேலை பாக்கும் போது தினமும் "கடைசி"யாக வேலைக்கு வரும் ஒரே நபர் நான் தான்.

இங்கு பல நாட்கள் "கடைசி"யாக வீட்டிற்கு போகும் ஆள் நான் தான்.

எங்க வீட்டில் "கடைசி"யாக தூங்க போற ஆளும் நான் தான்.

"கடைசி"யாக எழுந்திருக்கும் ஆளும் நான் தான்.

எங்கள் கல்லூரியில் ஒவ்வொரு முறையும் "கடைசி"யாக பரீட்சை ஹாலுக்கு போனதும் நான் தான்.

நித்தமும் கல்லூரிக்கு "கடைசி"யாக உள்நுழையும் கோஷ்டியும் யாம் தான்.

.:: மை ஃபிரண்ட் ::. said...

புலி, ஜீன்ஸ் படத்துல ஒரு காட்சில ராஜு சுந்தரம் சொல்வது ஞாபகம் இருக்கா?
அது போல:

"கடைசி கடைசின்னு நீங்க நிறைய சொன்னதால் உங்களை ஆட்டத்திலிந்து நீக்கிவிட்டோம்"

ஹீஹீ..

மனதின் ஓசை said...

//இது சண்டையில்லைப்பா.. ice breaking session..//

அதான.. என்யா சண்டை மூட்டி விட பாக்குர?


//இப்பதானே ஒருவருக்கொருவர் introduce ஆகிக்கிட்டு இருக்கோம்! //
:-)

//நான் சொல்றது சரிதானே மனதின் ஓசை? (இப்போ கரெக்ட்டா எழுதியிருக்கேனா உங்கள் பேரை?)//

நீங்க சொன்னா கரிக்டுதானுங்கோ..

மனதின் ஓசை said...

//கடிச்சு குதற நான் கண்மணி அக்கவோட ச்சுப்ரமணியும் இல்ல.. அபி அப்பாவோட டைகரும் இல்லை.. ஹீஹீ.. ஓ.. மறந்துட்டேன்! கோபியோட சோனியும் இல்லை.. ஹாஹாஹா//

இவங்கெள்ளாம் நமக்கு பழக்கமில்லிங்கோவ்... சோ.. நோ கமென்ட்ஸ்..

மனதின் ஓசை said...

//யாரு முதல் வராங்க அப்படிங்குறது முக்கியம் இல்ல, கடைசியில் யாரு நின்னு ஆடி முதல வராங்க அப்படிங்குறது தான் முக்கியம்....//

புலி.. இதென்ன சிம்பு டயலாக்கெல்லாம் விட்டுகிட்டு.. சரி..அப்படி நீ என்னதான் நின்னு ஆடரேன்னு நானும் பாக்குறேன்..

மனதின் ஓசை said...

//எலேய் மனதின் ஓசை அதாம் என் பாசக்காரத் தங்கச்சி பாஞ்சு பாஞ்சுப் பதிலைப் போட்டுத் தாக்குது இல்ல.. உனக்கு என் தங்கச்சியைப் பார்த்து பயம் அதான் பம்முற..
//
பயமா... எனக்கா??.ஒருக்காலும் கிடையாது... ஒரு வேளை பயந்து ஓரமாய் போய் உட்கார்ந்து கொண்டு பின்னுட்டத்தை பப்ளிஷ் மட்டும் செய்யும் உனக்கு இருக்கலாம்..
(தேவு.. நீ ராங் ரூட்ல கூட்டிட்டு போவ பாக்குர..வேணாம் சொல்லிட்டேன்..)


//தங்கச்சி நீ கலக்கும்மா :-)//
அது சூப்ப்ரா கலக்கிட்டுதாம்பா இருக்குது..இதெப்படி??

.:: மை ஃபிரண்ட் ::. said...

//நம்ம தங்கச்சிக்கா உயரெல்லை தாண்ட வைக்கனுமின்னே கங்கணம் கட்டிக்கிட்டு இருக்காங்கன்னு நினைக்கிறேன்?? //

ராமு பையா, எத்தனை பின்னூட்டங்கள் போட்டாலும் நம் அஞ்சா நெஞ்சம் படைத்த அண்ணன் இந்த வாரம் முழுதும் மின்னிக்கிட்டேதான் இருப்பார். ;-)

.:: மை ஃபிரண்ட் ::. said...

//இதென்ன சிம்பு டயலாக்கெல்லாம் விட்டுகிட்டு.. சரி..அப்படி நீ என்னதான் நின்னு ஆடரேன்னு நானும் பாக்குறேன்.. //

சிம்பு ஏர்கனவே நயந்தாராவை தொலைச்ச வருத்ததுல இருக்காரு! அதுல நீங்க வேற அவரோட டயலாக்குலை அபேஸ் பன்றதுல அவரு டோட்டல் அப்ஸெட் ஆக போறாரு புலி.. :-)))

.:: மை ஃபிரண்ட் ::. said...

//அது சூப்ப்ரா கலக்கிட்டுதாம்பா இருக்குது..இதெப்படி?? //

தாங்க்ஸு.. ;-)

துளசி கோபால் said...

நட்சத்திர வாரத்துலே 'உயரெல்லை'யைக் கண்டுக்காம விட்டுறணுமுன்னு உங்களுக்கும்
தெரிஞ்சுபோச்சா? :-)))))

துளசி கோபால் said...

ஆமாம். கேக்க மறந்துபோச்சு. அது யாரு படத்துலே, கொலவெறியோட ப்லொக் எழுதுறது? :-)))

தேவ் | Dev said...

//நட்சத்திர வாரத்துலே 'உயரெல்லை'யைக் கண்டுக்காம விட்டுறணுமுன்னு உங்களுக்கும்
தெரிஞ்சுபோச்சா? :-))))) //

என்னப் பண்ணச் சொல்லுறீங்க துளசி அக்கா.. பாசம் என்பதற்கு எந்த எல்லையும் நிற்பதில்லையே...:-)

தேவ் | Dev said...

//ஆமாம். கேக்க மறந்துபோச்சு. அது யாரு படத்துலே, கொலவெறியோட ப்லொக் எழுதுறது? :-))) //என்ன அக்கா இப்படி கேட்டுட்டீங்க அவர் தான் நம்ம ஸ்டார் ரிப்போர்ட்டர்.. கோச்சுக்கப் போறார்..

மனதின் ஓசை said...

//யாருங்க சொன்னது, கல்லூரியில் நான் இருந்த(படித்த) மூன்று வருடங்களும் நான் "கடைசி" பெஞ்ச் தான்

சென்னையில் கம்பெனியில் வேலை பாக்கும் போது தினமும் "கடைசி"யாக வேலைக்கு வரும் ஒரே நபர் நான் தான்.

இங்கு பல நாட்கள் "கடைசி"யாக வீட்டிற்கு போகும் ஆள் நான் தான்.

எங்க வீட்டில் "கடைசி"யாக தூங்க போற ஆளும் நான் தான்.

"கடைசி"யாக எழுந்திருக்கும் ஆளும் நான் தான்.

எங்கள் கல்லூரியில் ஒவ்வொரு முறையும் "கடைசி"யாக பரீட்சை ஹாலுக்கு போனதும் நான் தான்.

நித்தமும் கல்லூரிக்கு "கடைசி"யாக உள்நுழையும் கோஷ்டியும் யாம் தான்//

யய்யா.. நீ ரோம்ப்ப்ப்ப பெரிய ஆளுதான்யா...பலப்பல பெருமைகளுக்கு சொந்தக்காரரா இருப்ப போலிருக்கே.. உன்னோட எல்லாம் போட்டி போட யாராலயும் முடியாது..

இலவசக்கொத்தனார் said...

அடுத்த பதிவைப் போடுப்பா. பாஸா இல்லை வழக்கம் போல அப்பீட்டான்னு தெரிஞ்சே ஆகணும்.

G.Ragavan said...

நல்லாத் தொடங்கீருக்கீருய்யா! இண்டக்குசன் முடிஞ்சதும் என்னாச்சு? அடுத்த பதிவைப் படிச்சுத் தெரிஞ்சுக்கிறேன்.

Anonymous said...

tibia money tibia gold tibia item runescape money runescape gold tibia money tibia gold runescape gold runescape accounts tibia gold tibia money runescape money runescape gp buy runescape gold tibia gold tibia item buy runescape money runescape gold runescape items tibia money tibia gold

tamil10