Thursday, March 29, 2007

ஆபிஸருக்கு இன்னிக்கு அப்ரேசல் - 3

ஒரு வாறாக பொழப்பைக் கத்துக்கிட்டு எதோ தக்கா புக்கான்னு வேலையைப் பாத்துகிட்டு இருந்த நேரம் நம்ம டேமேஜர் கொடுத்த இமசை இருக்கே அதைச் சொல்லி மாளாதுங்க...ஒரு தனி பொஸ்தகமே போடலாம்..

போன்ங்கற ஒரு பொருளை கிரகாம் பெல் கண்டுபிடிச்சதே இந்த கிரகம் பிடிச்ச டேமேஜர் என்னைய திட்டி திண்டாட வைக்கிறதுக்குத் தானோ நான் நினைச்ச நாட்கள் ஏராளம். இத்தனைக்கு அந்த ஆள் சீட்டுக்கும் என் சீட்டுக்கும் இருபது அடி தூரம் தான் இருக்கும்...

எந்த அள்வுக்கு வெறுப்பு ஏத்துவார்ன்னா... நான் பக்கத்துல்ல நின்னுகிட்டு இருந்தாக் கூட என் டெஸ்க்குப் போய் போனை எடுக்கச் சொல்லிட்டுப் போனைப் போடுவார்...மனுசனுக்கு நானும் மரியாதைக் கொடுத்துப் போனை எடுத்தா.. ரெண்டு ஒரு வார்த்தைப் பேசிட்டு.. ப்ளிஸ் கம் டூ மை கேபின் வீ நீட் டு டிஸ்கஸ்ன்னு ரேகிங் பண்ணுவார்...ஒரு மனுசன் எம்புட்டுத் தான் தாங்குவான்.. என்னத் தான் நான் கைப்புள்ளயின் தீவிர ரசிகனா இருந்தாலும்.. அப்பப்போ அந்த ஆளு மேல விருமாண்டி காளை மாதிரி மோதி முட்டி வச்சிரலாம்ன்னு தோணும் ஆனா முடியாது...

ஒருக்கா பின்னாடி ஓட்டல்ல எதோ புதுசா திங்குற ஐட்டம் ஒண்ணு போட்டுருக்காங்கன்னு எல்லாரும் எடுத்துச் சொல்லி ஆசைக் காட்ட அது எதோ ஒரு வியர்டு ஐட்டம் போலிருக்கும்.. பாதி தூக்கத்திலிருந்தக் கோழியைத் தட்டி எழுப்பி கழுத்தைத் திருகி கொழம்புல்லப் போட்டாய்ங்கப் போல.. அது விட்ட சாபமோ என்னவோ... தின்ன எனக்கு வயிறு விசில் அடிச்சு வில்லங்கமாகி வில்லுப்பாட்டாடிருச்சு..

மனுசன் அவஸ்தையிலே அவ்சரமாப் போய் உக்காந்து இருந்தா அங்கிட்டும் அந்த ஆள் போன்.. மொபைல் போன் வேற கூன்னு கூவுது.... முழு ரிங் விட்டுட்டு சும்மா இருந்தேன்.. மறுபடியும் அடிக்கிறார் அந்த ஆளு.. என்னை விட என் வயிறு பட்ட பிலீங் இருக்கே அதெல்லாம் பதிவுல்ல விவரிக்க முடியாத வேதனை...

சரின்னு பல்லைக் கடிச்சுகிட்டு... பாஸ் ஐ யாம் இன் டீப் டிஸ்டெரஸ்... அப்படின்னு ஆரம்பிச்சு நடந்த சம்பவம் துவங்கி நடந்துக்கொண்டிருக்கும் நிகழ்வு வரைக்கும் பயங்கர எமோஷனலாச் சொல்லி முடிக்கிறேம்... ஓகே ப்னிஷ் இட் பாஸ்ட் அன்ட் கம் வீ ஹேவ் எ மீட்டிங் இன் நெக்ஸ்ட் 5 மினிட்ஸ்ன்னு சொல்லுறார்...

யோவ் நான் என்ன அஞ்சப்பர்ல்ல உக்காந்து நெஞ்செலும்பு சூப் வாங்கி சப் கொட்டி குடிச்சிகிட்டு இருக்கேன்னா சொன்னேன்.... என்ன நிலைமையிலே இருக்கேன் வெக்கம் எல்லாம் விறகாக் கட்டி வித்துட்டு உங்கிட்டச் சொன்னா.. ப்னீஷ் இட் பாஸ்ட்ன்னு சொல்லுறீயேன்னு.... அதுக்கு அப்புறம் விவரம் கேக்காதீங்க...

ஒண்ணே ஒண்ணு இப்படி ஒரு நிலைமையிலே தான் என் மொபைல்ல அந்த ஆள் பேரை 'ஹிட்லர்'அப்படின்னு மாத்தி வச்சேன்....

அதுக்கு அப்புறம் அந்த ஆள் கால் எப்போ வந்தாலும் .. என் மொபைல்ல ஹிட்லர் காலிங் அப்படின்னு தெரியும் பாருங்க அதைப் பாக்கும் போதெல்லாம் எனக்கு ஒரு அல்ப சந்தோஷம்...
இந்த ஹிட்லர் விவகாரம் ஒரு நாள் டீக் கடையிலே நம்ம சகாக்களுக்கும் தெரிய வந்துச்சி.. நமக்கு ஒரு தனி மரியாதைக் கிடைக்க ஆரம்பிச்சது...

அதாவது டீக் கடையிலே நிக்கும் போது அந்த ஆள் கால் வந்துச்சு...

"மாப்பூ யாருடா ஹிட்லர் காலிங்..." பசங்க கேக்க..

"எல்லாம் டேமேஜர் தான் " அப்படின்னு ஆரம்பிச்சு அதன் பின் கதைச் சுருக்கத்தை ஒரு வழியா ஒரு மசாலா டீ.. ரெண்டு கீரை வடைக்கு ஊடே சொல்லி முடித்தேன்...சகாக்களும் அதை ஆதரித்து தீர்மானம் நிறைவேற்றி என்னை உசுப்பு உசுப்புன்னு ஏத்தினதிலே... வெறும் ஹிட்லரா இருந்தவரை..
"தி லிவிங் ஹிட்லரா" மாத்தி மெருகு ஏத்திட்டேன்...

ஹிட்லரின் அராஜகம் நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக் கூடிக்கிட்டேத் தான் போச்சே தவிர குறையவே இல்லை..

ஆப்ரேசல் ஆப்ரேசலுன்னு ஒரு விஷப் பரீட்சை ஒரு நன்னாளில் நிச்சயிக்கப் பட்டது.. நமக்கு அது தான் முதல் அனுபவம்... தனியா ரூம் போட்டு நம்மை நாறடிக்கப் போறாங்கன்னு தெரியாத அப்பாவி பருவம் அது... நல்லா சீவி சிங்காரிச்சு... சென்ட் எல்லாம் அடிச்சு.. ஒரு தடவைக்கு ரெண்டு தடவை தேயச்ச சட்டை எல்லாம் போட்டுகிட்டு கிளம்பிப் போனோம்ல்ல ஆபிஸ்க்கு....

உள்ளே போறவன் எல்லாம் பிரியாணி சாப்பிட பெல்ட்டை லூஸ் பண்ணி விட்டுகிட்டு போற மாதிரி போயிட்டு வரும் போது தீ மிதிச்ச கவுண்டமணி மாதிரி முகத்தை வச்சிகிட்டு வந்தாயங்க...

சாயங்காலம் ஆச்சு.. கடைசியா நான்....

நானும் டேமேஜரும் மட்டும் பாக்கி...

டேமேஜர் ஆப் வச்சு ஆப் வச்சு டயர்ட்டா ஆயிட்டார்.. மனுஷன் கொஞ்சம் எக்ஸ்ட்ரா கடுப்போட இருக்கார்...

"வெல் தேவ்... வீ வில் கோ த்ரு யுவர் அப்ரேசல் வித் அ காபி"

காபி வித் அனு.. வந்தக் காலத்துக்கெல்லாம் முன்னாடி ந்டந்தது இது.... சொல்லிட்டு மௌசன் யாருக்கோ போன் பண்ண ட்ரைப் பண்ணிகிட்டே இருந்தார்.. போன் போகவே இல்லை...

"SEEMS LIKE SOME PROBLEM WITH MY MOBILE..CAN I USE UR MOBILE"

அப்படின்னு கேட்டார்...

நானும் ரொம்ப பவ்யமா "சொரிங்க ஆபிசர்" ன்னு முட்டியை மடக்கி போனை அவர் கையிலே கொடுத்தேன்.

அங்கிட்டு தான் விதி வில்லனா மாறி என்னை வம்புல்ல கோர்த்து விட்டு கிளாப் அடிச்சது..

"WAIT A MINUTE>> I WILL TRY CALLING U AND CHK IF MY MOBILE IS OK BEFORE I TRY ON UR PHONE"

இடது கையிலே என் போன்.. வலது கையிலே அவர் போனில் நம்பரைத் தட்டுறார்....நானும் படு ஸ்டைலா பவ்யமாப் போஸ் கொடுத்தப் படி மூஞ்சைச் சிரிச்ச மாதிரி வச்சுக்கிட்டு நிக்குறேன்...

அவர் கடைசி நம்பரை அழுத்தும் போது தான் என் மூளைக்குள்ளே மின்னல் வெட்டுது.... வெட்டி என்னப் பயன்.. என் போனிலே இடி விழ்ந்துருச்சு...

"தி லிவிங் ஹிட்லர் காலிங்ன்னு " மினுக்மினுக்குன்னு மொபைல் ஸ்கிரீன் டாலடிக்க... அந்தாளு முகத்துல்ல சுனாமி சுரண்டிட்டுப் போன எபெக்ட்

அந்த நிலையிலும் எனக்குச் சிரிப்பு வருது...அதே சமயம் அப்ரேசல் நினைப்புக்கு வர... சொ.செ.சூ அப்படின்னா என்னன்னு விளக்கம் புரியுது... இன்னும் இருக்கு சொல்ல.. கேக்க ரெடியா?

28 comments:

Santhosh said...

ஹைய்யா ஜாலி இன்னிக்கு நான் தான் பர்ஸ்டு. மை பிரண்டு அசந்த நேரம் கேப்புல ஆட்டோ விட்டாச்சி

வெட்டிப்பயல் said...

appa naan second..

MyFriend said...

அண்ணாவுக்கு காலை வணக்கம். :-)

சந்தோஷுக்கு காலை வணக்கம். :-)

Enjoy சந்தோஷ். இன்றைய நாள் உங்களுக்கு. :-)

Santhosh said...

பிரண்டு ரொம்ப நன்றிங்க உங்களுக்குத்தான் எம்முட்டு பெரிய மனசு :))

MyFriend said...

பார்ட்டா சந்தோசுக்கு வாய்ப்பு கொடுத்தா, கேப்புல வெட்டி புகுந்துட்டாரு!!!!!!

வெட்டிப்பயல் said...

போர்வாள்!!!

கலக்கல்... பாவம் அப்பறம் அந்த டேமேஜர் என்ன பண்ணாரு???

G.Ragavan said...

அடங்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்....என்னங்க இது...இந்த மொபைல்ல இந்த மாதிரி பட்டப் பேரு...செல்லப் பேரெல்ல்லாம் வெக்கக் கூடாதுய்யா! பிசினசு கார்டு அனுப்பும் போது அதுவும் கூடப் போகும். ஆனா....ஒரு நல்ல மேனேஜரா இருந்திருந்தா நீங்க ஏன் அப்படிக் கூப்பிடுறீங்கன்னு பொறுமையா கேட்டிருப்பாரு. ஆனா ஒங்க டேமேஜரு ரொம்ப நல்லவராத் தெரியுறாரு. அதுனால...அதுக்கப்புறம் என்ன நடந்ததுன்னு நீங்க சொல்லித் தெரிஞ்சிக்கிறோம்.

இந்தக் கக்கூஸ் பத்திச் சொன்னீங்க பாருங்க. நமக்கும் ஒரு அனுபவம் இருக்கு. என்னவோ திடீர்னு வயித்தைக் கலக்குச்சு. நான் உக்காந்திருந்த மூனாவது மாடியில இருக்குற கழிப்பிடத்துக்குப் போனேன். முடிச்சிட்டு வெளிய வந்து பாத்தா யாரையும் காணோம். எல்லாரும் குய்யோ முய்யோன்னு ஓடுறாங்க. மைக்குல வேற "please leave the building immediately"ன்னு அறிவுப்பு. படிக்கட்டுகளைப் பயன்படுத்துங்கன்னு அறிவுரையும் கூட. உடனடியா உடனடியா அவங்க சொன்னாங்க. நான் பொறுமையா என்னோட பேப்பருக..அதுக இதுக..எல்லாத்தையும் பையில அள்ளிப் போட்டுக்கிட்டு மெதுவா கீழ எறங்கி வந்தா மொத்த ஆபீசும் வாசல்ல நின்னு ஆபீசப் பாத்துக்கிட்டு நிக்குது. எதுத்து இன்னொரு பெரிய ஆபீசு கண்ணாடி கண்ணாடியா வெச்சுக் கட்டிக்கிட்டிருந்தாங்க. அங்க வேலை பாத்தவங்களும் அப்படி வந்து நின்னாங்க. என்னடான்னு கேட்டா....லேசா நெலநடுக்கமாம். கண்ணாடியெல்லாம் தடதடன்னுச்சாம். அதான் அப்படீன்னு சொன்னாங்க. நான் எங்க இருந்தேன்னு கேட்டாங்க. சொல்லவா முடியும்! கம்முன்னு இருந்திட்டேன். நம்ம நண்பர்கள் ரெண்டு பேருக்குத்தான் எங்க இருந்தேன்னு தெரியும். அத வெச்சே என்னைய ரொம்ப நாளைக்கு ஓட்டுனாங்க.

MyFriend said...

டாப்பு..

நீங்க எழுதுன ஸ்டார் நீக் போஸ்ட்டுலேயே இதுதான் நம்பர் 1..

என்னன்னு சொல்ல. எல்லாமே சூப்பர்.
உங்க பக்கம் 78 ஸ்டெண்டர்ட்ல இது இருக்கு! :-)

மனதின் ஓசை said...

வந்தாச்சு.. பதிவ படிச்சிட்டு அடுத்த பின்னூட்ட்டம்..

சந்தோஷ், வாழ்த்துக்கள்.

மை ஃபிரண்ட், எப்படி சந்தோஷ விட்டிங்க?? கொஞ்சம் அசந்துட்டீங்களோ?

MyFriend said...

//மை ஃபிரண்ட், எப்படி சந்தோஷ விட்டிங்க?? கொஞ்சம் அசந்துட்டீங்களோ? //

அசருர மாதிரி நடிக்கிறதும் ஒரு டெக்னிக்தானே! :-D

நாளைக்கு உங்களுக்கே கேட்டாலும், இப்படிதான் ஒன்னுமே தெரியாததுபோல் லேட்டா வந்து கமேண்டு போட்டு உங்களை சந்தோஷப் பபடுத்துவேண். ஹீஹீஹீ..

மனதின் ஓசை said...

தேவ்..
யப்பா.. சிரிப்ப கன்ட்ரோல் பன்ன முடியலய்யா.. அருமை.. அருமை..
இதுதான் டாப்பு..

கேக்க ரெடியாவா? காத்துகிட்டு இருக்கோம்யா.. சீக்கிரம்

//ப்ளிஸ் கம் டூ மை கேபின் வீ நீட் டு டிஸ்கஸ்ன்னு ரேகிங் பண்ணுவார்...ஒரு மனுசன் எம்புட்டுத் தான் தாங்குவான்.. என்னத் தான் நான் கைப்புள்ளயின் தீவிர ரசிகனா இருந்தாலும்.. //

:-))))

மனதின் ஓசை said...

//என்னை விட என் வயிறு பட்ட பிலீங் இருக்கே அதெல்லாம் பதிவுல்ல விவரிக்க முடியாத வேதனை...//
நல்லா எழுதரய்யா...

//ஒண்ணே ஒண்ணு இப்படி ஒரு நிலைமையிலே தான் என் மொபைல்ல அந்த ஆள் பேரை 'ஹிட்லர்'அப்படின்னு மாத்தி வச்சேன்....//

அதுக்கு முன்னாடியே நீ மாத்தி இருந்தாலும் தப்பில்ல.

இலவசக்கொத்தனார் said...

//.அதுக்கப்புறம் என்ன நடந்ததுன்னு நீங்க சொல்லித் தெரிஞ்சிக்கிறோம்.//

ரிப்பீட்டேய்!

உங்கள் நண்பன்(சரா) said...

தேவு அருமையான நகைச்சுவைப் பதிவு மகா! பல இடங்களில் படிக்கும் போது சத்தம் போட்டு சிரிக்க வேண்டியாதப் போச்சு!

//ரெண்டு ஒரு வார்த்தைப் பேசிட்டு.. ப்ளிஸ் கம் டூ மை கேபின் வீ நீட் டு டிஸ்கஸ்ன்னு ரேகிங் பண்ணுவார்...//

இது டாப்பு!

//உள்ளே போறவன் எல்லாம் பிரியாணி சாப்பிட பெல்ட்டை லூஸ் பண்ணி விட்டுகிட்டு போற மாதிரி போயிட்டு வரும் போது தீ மிதிச்ச கவுண்டமணி மாதிரி முகத்தை வச்சிகிட்டு வந்தாயங்க...
//

ஏது! உன் பதிவப் படிச்சதும் எங்க முகம் போகுமே அதே மாதிரியா?:)))

அருமையான தொடர் வாழ்த்துக்கள் தேவு!,
ஃமைபிரண்ட் கண்டிப்பா உங்க பின்னூட்டம் தான் முதலா இருக்கும்னு நானும் எதிர்பார்த்தேன் , சந்தோஷிற்க்கு வாழ்த்துக்கள்!

//அசருர மாதிரி நடிக்கிறதும் ஒரு டெக்னிக்தானே//

ஃமை பிரண்ட் - மண் ஒட்டலை, அத்தைக்கு மீசை மொளச்சா சித்தப்பா,

அன்புடன்...
சரவணன்.

மனதின் ஓசை said...

//Enjoy சந்தோஷ். இன்றைய நாள் உங்களுக்கு. :-)///

ஏன்.. உங்களோட ஹிட்லர் (இன்னைக்காவது) ஆணி புடுங்க சொல்றாரா?

// நம்ம நண்பர்கள் ரெண்டு பேருக்குத்தான் எங்க இருந்தேன்னு தெரியும்.//
ராகவன்,
இப்ப எல்லாருக்கும் தெரியும் :-)))

மனதின் ஓசை said...

//நாளைக்கு உங்களுக்கே கேட்டாலும், இப்படிதான் ஒன்னுமே தெரியாததுபோல் லேட்டா வந்து கமேண்டு போட்டு உங்களை சந்தோஷப் பபடுத்துவேண். ஹீஹீஹீ..
//

இருந்தாலும் உங்களுக்கு இவ்வளவு நல்ல மனசு இருக்க கூடாது.... அவ்வ்வ்வ்...

நந்தா said...

//எந்த அள்வுக்கு வெறுப்பு ஏத்துவார்ன்னா... நான் பக்கத்துல்ல நின்னுகிட்டு இருந்தாக் கூட என் டெஸ்க்குப் போய் போனை எடுக்கச் சொல்லிட்டுப் போனைப் போடுவார்...மனுசனுக்கு நானும் மரியாதைக் கொடுத்துப் போனை எடுத்தா.. ரெண்டு ஒரு வார்த்தைப் பேசிட்டு.. ப்ளிஸ் கம் டூ மை கேபின் வீ நீட் டு டிஸ்கஸ்ன்னு ரேகிங் பண்ணுவார்...//


//அந்தாளு முகத்துல்ல சுனாமி சுரண்டிட்டுப் போன எபெக்ட்//

ஆஹா! இப்படித்தானா அசிங்கப் படறது வாழ்க்கைல. ஒரு க்ரூப்பாதான்யா அலையறாங்க.

//இன்னும் இருக்கு சொல்ல.. கேக்க ரெடியா? //
ஓ ரெடி. என்ன நடந்தாலும் சூனா பானா மீசையீல மண் ஒட்டலைன்னு போய்க்கிட்டே இருக்கறீங்க.

செ. நாகராஜ் - C. Nagaraj said...

பிரமாதம்னு நான் சொல்லியா தெரியணும், தூள் கிளப்பியிருக்கீங்க. உங்க thought ஆ திருடி தான் HARI advertisement nauக்ரி பண்ணியிருப்பானோ. Patent போட்டு வைச்சிருக்க கூடாதோ.

Mega serial rangeக்கு தொடரும் போட்டாச்சு, அடுத்த எபிசோட் எப்ப.

என் அனுமானம், உங்க டேமேஜர் "என்ன பற்றி சரியா புரிஞ்சி வச்சிருக்கே, நீ ரொம்ப நல்லவன்னு" சொல்லி A+ போட்டிருப்பார்

G.Ragavan said...

// மனதின் ஓசை said...

// நம்ம நண்பர்கள் ரெண்டு பேருக்குத்தான் எங்க இருந்தேன்னு தெரியும்.//
ராகவன்,
இப்ப எல்லாருக்கும் தெரியும் :-))) //

அட அதுனால என்னங்க. இப்ப அந்த நிறுவனத்துல நான் இல்லை. இது நடந்தது 2002. :-) அதுனால பிரச்சனையில்லை.

செ. நாகராஜ் - C. Nagaraj said...

Check the date for 29-03-07 it is showing 28-03-07

CVR said...

OMG
முதல் அப்ப்ரைசல் அன்னிக்கு இந்த கலாட்டாவா!!!
கதை ரொம்ப நல்லா போய்ட்ருக்கு தல!!
சீக்கிரம் கன்டின்யூ பண்ணுங்க!! :-)

Anonymous said...

//அது... நல்லா சீவி சிங்காரிச்சு... சென்ட் எல்லாம் அடிச்சு.. ஒரு தடவைக்கு ரெண்டு தடவை தேயச்ச சட்டை எல்லாம் போட்டுகிட்டு கிளம்பிப் போனோம்ல்ல ஆபிஸ்க்கு//

இந்த மாதிரி dating தான் போவங்க.ஆபிஸ்கும் இப்படிதானா?

Anonymous said...

//இன்னும் இருக்கு சொல்ல.. கேக்க ரெடியா?//

இல்லை கேக்க முடியாது.படிக்கதான் ரேடி.

Anonymous said...

பாச மலர்களே இங்கேயும் கும்பி அடிக்கவும்.இந்த வாரம் வந்த அனைத்து பதிவும் 100 தாண்ட வேண்டும்.

rv said...

சென்னைக்கச்சேரின்னா என்னன்னன இப்பதான் புரியிற மாதிரி இருக்கு.. :))

ரொம்பவே சூப்பர் பதிவு..

பினாத்தல் சுரேஷ் said...

எனக்கும் h for hitler a for arrogant r for rascal i for idiot தான் ஞாபகம் வந்தது.

நம்ம கிட்ட உள்ள நல்ல விஷயமே இந்த காமெடிதான். துன்பம் வரும் வேளையிலே சிரிச்சு சிரிச்சே பழக்கமாயிப் போச்சு :(

கலக்கல் காமடி தேவ்.. கண்டின்யூ

வானம்பாடி said...

அடா அடா அடா.. செம கலக்கலா எழுதியிருக்கீங்க! LOL

✪சிந்தாநதி said...

கலகலாக்கல்.....
:)))

tamil10