Wednesday, March 21, 2007

5 ஸ்டார்

என்னன்னு சொல்லுறது... இப்போ நம்ம வலையுலகத்துல்ல புதுசா ஒரு விளையாட்டு கொடிக் கட்டி பறக்குது..

அதாவது "நான் ஒரு மாதிரி" அப்படின்னு அவங்களைப் பத்தி அவங்களே பட்டியல் போட்டு ஊருக்கும் உலக்த்தும் தான் கொஞ்சம் கிறுக்குன்னு சொல்லமாச் சொல்லி உஷார்ன்னு தனக்குத் தானே சங்கு ஊதுறது தான் அந்த விளையாட்டோட ஸ்பெஷலாட்டி... இந்த விளையாட்டை ஆரம்பிச்ச புண்ணியவான் வாழ்க... பாருங்க நம்ம மக்களும் அசராம பதிவுல்லப் பட்டியலைப் போட்டு ப்ட்டயக் கிளப்பிகிட்டு இருக்காங்காயங்க...

பூராக் கிறுக்குப் பயக் கூட்டமா இல்ல இருந்திருக்கு .. இதுகக் கூடவா இம்புட்டு நாளும் நாம கும்மி அடிச்சிட்டு இருந்தோம்ன்னு நானும் நமட்டுச் சிரிப்பு சிரிச்சிகிட்டே எல்லாப் பதிவையும் படிச்சிகிட்டு இருந்தேன்..

நம்மளை எல்லாம் யாரும் கூப்பிடல்ல.. அப்படின்னா தேவ் நீ எல்லாம் தெளிவாத் திரியறன்னு அர்த்தம்.. இப்படி என்னிய நானே வேற பாராட்டிக்கிட்டேன்.

அப்போத் தான் ஹலோ.. அஞ்சு மட்டும் சொல்ல சொன்னதாலத் தான் உங்களைக் கூப்பிட யோசனை மத்தப் படி உங்களைத் தான் முதல்ல கூப்பிடணும்ன்னு மை பிரெண்ட் கொரலு கொடுக்க...

அதை எல்லாம் பொது வாழ்க்கையிலே பெருசா எடுத்துக்காமப் போயிகிட்டு இருந்தா.. நம்ம ஜி.ரா.. பின்மண்டையிலே சின்னதா ஒரு கொட்டு வைக்கற மாதிரி மெயில் அனுப்பி, அய்யா.. என்ன நீங்க ஒரு மாதிரி தானே.. ஒத்துகிட்டு எழுதுங்குறார்..

இது பரவாயில்ல.. அப்படின்னு ஜகஜமாப் போயிட்டு இருந்தா கொத்ஸ் அங்கிருந்து நம்ம மேலே கல்லை விட்டு எறிஞ்சுட்டு... எலேய்.. என்ன லுக்? வாய்யா வந்து உன் கிறுக்குத் தனத்தை ஊருக்குச் சொல்லிட்டுப் போயிரு.. அதிகம் இல்ல ஒரு அஞ்சு போதும்ங்க்றார்..

ஆகா என்னிய மாதிரியேத் தானே நீங்களூம்.. எங்கே உங்க கிறுக்குத் தனத்தை கெத்தா ஊருக்கு சொல்லுங்கண்ணா.. இதுக்கெல்லாம் பயப்படலாமான்னு நம்ம பாசமலர் தங்கச்சி இம்சை அரசியும் ஒரு போடு போட்டுருச்சு...

இனியும் தாமதிச்சா.. அவ்வளவு தான் எல்லாரும் கூப்பிட்டுருவாய்ங்க... அப்புறம் மொத்தப் பதிவுலகமும் பாராட்டும் ஒத்தைக் கிறுக்கனா மவுண்ட் ரோட்ல்ல பேனர்ல்ல நின்னு போஸ் கொடுக்க வேண்டியதாக் கூடப் போயிரும்ய்யா.. அதான் வந்துட்டேன்..

நக்கல்/நையாண்டி: எதுல்லயும் ஒரு நக்கல் நையாண்டித் தனம் நம்மக் கூட ஒட்டிகிட்டே திரியும்.. அதை நாட்டு மக்களுக்கு எடுத்துக் கொடுத்துறது நம்ம பழக்கம். இந்தப் பழக்கத்தாலே நமக்கு நிறைய நண்பர்கள் கிடைச்சது உண்மைன்னா.. இதே பழ்க்கத்தால என்னையும் அறியாமல் நண்பர்கள் மனத்தைக் காயப்ப்டுத்திடுறது கொடுமை... என்னப் பண்றது பொது வாழ்க்கையில் இதெல்லாம் ஜகஜம்ன்னு நம்ம நண்பர்கள் நம்ம மன்னிச்சு விட்டுட்டுப் போயிடுறாங்க அதுன்னாலே நானும் நக்கல் நையாண்டின்னு நல்லப் படியா ஓட்டிகிட்டு இருக்கேன்.

கூட்டம் கண்டா ஒதுங்குறது: தனியாப் பொறந்து வளர்ந்தாலோ என்னவோ.. கூட்டம்ன்னாலே நம்ம தெனாலி சொல்லவாரே அது மாதிரி மெத்தப் பயம் எமக்கு... தி.நகர் கடைவீதி கண்டால் பயம் எமக்கு.. பல்லவன் பஸ் கண்டால் பயம் எமக்கு.. பதிவர் கூட்டம் என்றால் அதினும் பயம் உமக்கு ( இது சகப் பதிவரின் கமெண்ட்ங்கோ) இந்தக் கூட்டத்துக்கெல்லாம் பயந்து பஸ் ஏறாம லைட் ஹவுஸ் டூ அடையார் வரை நடந்தே வந்து இருக்கேனாப் பாருங்களேன்..

சினிமாப் பாக்குறது: இப்படி ஒரு பொழப்பு எனக்கு... லைன் கட்டி படம் வந்தா க்யூ கட்டிப் பாத்து கோடம்பாக்கத்தை வாழ வைக்குறதா ஒரு எண்ணம்.. அது மட்டும் இல்லங்க எந்த ஊருக்குப் போனாலும் அந்த ஊர் தியேட்டர்ல்ல படம் பாத்துருவேன்,.. இப்படி உணர்ச்சி வசப்பட்டு கன்னடம், தெலுங்கு, மலையாளப் படமெல்லாம் பாத்துருக்கேன்னாப் பாருங்க.. சினிமா மேல பற்றா? இல்ல தியேட்டர் மேலயான்னு தெரியல்ல.. ஒரு தபா பெங்களூர்ல்ல நைட் ஷோ தனியாப் போயிட்டு தங்கியிருந்த நண்பன் வீட்டுக்கு வழியை மறந்துட்டு விடிய விடிய கோரமங்கலாவை பைக்ல்ல வளைய வந்து நாய் துரத்தி.. அதெல்லாம் ஒரு தனிக் கதைங்க..

ஊர் சுத்துறது: வெட்டியா இருந்தாலும் விறகோடு இருந்தாலும் ஊர் சுத்தறது நமக்குப் புடிச்சப் பொழப்பு... ஆக்சுவலா நம்ம கலர் காம்ப்ளெக்ஷன் கொறஞ்சுதுக்கௌ காரணமே அது தான்னு சின்னப் புள்ளயிலே எங்க அம்மா வருத்தப் படுவாங்க.. சரி இப்போ அதுக்குப் பிராயச்சித்தமா மலை மலையா நல்ல ஜில்லுன்னு இருக்க இடமாச் சுத்தி காம்ப்ளெக்ஷனை மாத்தலாம்ன்னு பார்த்தா.. ம்ஹும் ஆவறதில்ல.. சரி எது எப்படியோ.. ஊர் சுத்தற ஆசை மட்டும் நமக்குக் கொறையல்ல..

புது மொழிகள் கத்துக்கறது: ஓலகத்துல்ல உள்ள எல்லா மொழியையும் கத்துக்கணும்ன்னு பேராசை எல்லாம் இல்லாட்டியும்... வேத்து மொழித் தெரிஞ்சவப்ங்களைப் பார்த்தாப் போதும் பீலிங் ஆயிருவேன்... ப்ளீஸ் டீச் மீ யுவர் லாங்குவேஜ்ன்னு நச்சரிப்பேன்... ஓரளவு கத்துகிட்டு சீன் போடுறது நம்ம பழக்கம்... இதுல்ல நம்ம சீன் அடிக்கடி கிழியறது நாம சேத்து தைக்கறதும் வாடிக்கையாகிப் போன வேடிக்கைங்க...

ஸ்ப்பாடா அஞ்சு ஆச்சா.. இதெல்லாம் ஒரு ஸ்டார் வேல்யூ உள்ள குணங்கள்ன்னு உங்களுக்கு விளங்கியிருக்குமே.. இப்போ நம்ம பங்குக்கு ஒரு அஞ்சு பேரை இழுத்து விடுவோமா ஆட்டத்துக்கு..

1.இந்த வார ஸ்டார் நம்ம பெருசு
2.கவிதைக் காதலன் நந்தா
3.வலையுலக கலக்கல் சிந்தாநதி
4.குழப்பல் கலக்கல்ஸ் மதுரா
5.பாசக்கார மனதின் ஓசை.

இனி இவங்க ஆட்டத்தைப் பார்ப்போமா..

24 comments:

மனதின் ஓசை said...

//5.பாசக்கார மனதின் ஓசை.//

அடப்பாவி..பாசத்த இப்படி காட்டிட்டியே :-(

G.Ragavan said...

தேவ தேவ தேவாதி தேவ தேவப்பிரிய தேவாதி தேவே! பதிவைப் போட்டு நம்ம ஊர் மானத்தைக் கப்பல் ஏற்றிய (அல்லது இறக்கிய) உம்மைக் கண்டபடி உணர்ச்சி வசப்பட்டு பாராட்டத் தோன்றுகிறது. ஆனால்....நாதழுதழுப்பதால் பேச்சு வரவில்லை. ஆனாலும் கருத்தைச் சொல்லியே ஆக வேண்டுமல்லவா. இதோ வருகிறேன்.

1. ஒம்ம நக்கலையும் நையாண்டியையுந்தான் பதிவுலகமே அறியுமே. நம்ம மக்காக்கள் இதத் தூத்துக்குடித் திமிருலே-ம்பாங்க. அதெல்லாம் நமக்கு சர்வ சாதாரணம். இல்லையா?

2. கூட்டத்தக் கண்டாத்தானய்யா ஊட்டம் வரனம். இனிமே கூட்டத்துல குமிஞ்சிருங்க. அப்புறம் பாருங்க...என்ன நடக்குதுன்னு.

3. சினிமாக்கள். இதுல ஒரு விஷயம் சொல்லனும். சின்ன வயசுல நடந்தது. மூனாவது நாலாவது படிக்கிறப்போ இருக்கும். அப்ப தூத்துக்குடியில ஜோசப்புன்னு ஒரு தேட்டர் இருந்தது. ஊருல இருந்து நம்ம மச்சினரு வந்திருந்தாரு. வயசுல என்னைய விட மூத்தவரு. ராகவா...வால. சைக்கிள்ள உக்காருன்னு சொன்னாரு. உக்காந்தேன். நேரே ஜோசப்பு. ஏதோ தெலுங்கு டப்பிங் மாயாஜாலப்படம். அதுல தலைவிதிப்படிதான் நடக்கும்னு ஒரு வசனம். அப்படி மனப்பாடமா பதிஞ்சிருச்சு. வீட்டுக்கு வந்தா...சொல்லாமக் கொள்ளாமப் போனதுக்கு வசவு. இதெல்லாம் ஜகஜந்தானே! இப்பல்லாம் டிவிடி வெல கொறஞ்சிட்டதால டீவீடிகளா வாங்கிக் குவிக்கிறது. ஐதராபாத் வந்திருக்கிறதால நாலு தெலுங்குப் படம் வாங்கீருக்கேன். தான வீர சூர கர்ணா, மங்கமாவாரி மனவ்வாரு, ஜம்ப்பலக்கடி பம்ப்பா, நர்த்தனஷாலா அப்படீன்னு.

4.5. ஊர் சுத்துறது ரொம்பவும் பிடிக்கும். பல நாடுகளுக்கும் போகனும். பல மொழிகளைக் கேக்கனும்னு ஆசை. நிறைவேறிக்கிட்டுதான் இருக்கு.

இலவசக்கொத்தனார் said...

//பூராக் கிறுக்குப் பயக் கூட்டமா இல்ல இருந்திருக்கு .. இதுகக் கூடவா இம்புட்டு நாளும் நாம கும்மி அடிச்சிட்டு இருந்தோம்ன்னு நானும் நமட்டுச் சிரிப்பு சிரிச்சிகிட்டே எல்லாப் பதிவையும் படிச்சிகிட்டு இருந்தேன்..//

ஒரு தலைவன் வார்த்தையை தன் வார்த்தையாகவே போட்டுக்கிட்டேயா. கண்ணுல தண்ணி வருது. இருக்கட்டும்.

நான் நினைச்சங்கள்ள ஒருத்தரே ஒருத்தர்தான் உன் லிஸ்டில். உன்னை புரிஞ்சுக்கவே முடியலையே.

இலவசக்கொத்தனார் said...

என்ன ரொம்ப உணர்ச்சிவசப்பட்ட மாதிரி தெரியுது. உம்மளை நகைச்சுவையா எழுதச் சொன்னா இப்படி ட்ரையா எழுதிப் புட்டீங்களே.....

நம்ம கிறுக்குத்தனங்கள் பத்தி ஒண்ணும் சொல்லலையே....

வல்லிசிம்ஹன் said...

அதினும் பயம் உமக்கு ( இது சகப் பதிவரின் கமெண்ட்ங்கோ) இந்தக் கூட்டத்துக்கெல்லாம் பயந்து பஸ் ஏறாம லைட் ஹவுஸ் டூ அடையார் வரை நடந்தே வந்து இருக்கேனாப் பாருங்களேன்..
இதுதான் சூப்பர். இப்படி ஒரு ஃபோபியா இருக்குனு தெரியாமப் போச்சே:-)

இம்சை அரசி said...

நக்கல்/நையாண்டி

ஹி... ஹி... சொல்லவே வேணாம் அண்ணா. எங்களுக்கு நல்லாவே தெரியும்... டி.ஆர்-ஐ வச்சு பரட்டை அரங்கம் நடத்தினவர்தான நீங்க...

கூட்டம் கண்டா ஒதுங்குறது

இது சரியில்ல அண்ணா... நம்ம தல கூட இருந்துட்டு இப்படியெல்லாம் சொல்லலாமா??

சினிமாப் பாக்குறது

சம்பளத்துல பாதி இதுக்குதான் போகுது போல???

ஊர் சுத்துறது

இதுல நான் உங்க கட்சி. எனக்கும் ஊர் சுத்தறதுனா ரொம்ப பிடிக்கும் :)

புது மொழிகள் கத்துக்கறது

சாரி அண்ணா. எனக்கும் இதுக்கும் ரொம்ப தூரம். நான் ஹிந்தி கத்துக்கிட்ட கதையதான் உக்காந்து வில்லுப்பாட்டா பாடினேனே. ஹ்ம்ம்ம்...

நாகை சிவா said...

//நான் நினைச்சங்கள்ள ஒருத்தரே ஒருத்தர்தான் உன் லிஸ்டில். உன்னை புரிஞ்சுக்கவே முடியலையே. //

தேவ் ஒரு புரியாத புதிர் அப்படினு அடுத்த பதிவு போடுங்க கொத்துஸ்...

நாகை சிவா said...

//இந்தக் கூட்டத்துக்கெல்லாம் பயந்து பஸ் ஏறாம லைட் ஹவுஸ் டூ அடையார் வரை நடந்தே வந்து இருக்கேனாப் பாருங்களேன்..//

ஏதோ தனியா நடந்து வந்த மாதிரி பிலிம் காட்டுறீர், கூட வந்தவங்களை பற்றியும் சொல்லுங்க....நானா சொன்னா நல்லா இருக்காது சொல்லிட்டேன்.

நாகை சிவா said...

//ஊர் சுத்துறது ரொம்பவும் பிடிக்கும். பல நாடுகளுக்கும் போகனும். பல மொழிகளைக் கேக்கனும்னு ஆசை. நிறைவேறிக்கிட்டுதான் இருக்கு.//

பாக்குறது, கேட்குறது வரைக்கும் ஒகே, ஆனா அத கத்துக்கனும் என்னும் போது லைட்டா இல்ல நல்லாவே இடிக்குது...

Syam said...

//ஊருக்கும் உலக்த்தும் தான் கொஞ்சம் கிறுக்குன்னு சொல்லமாச் சொல்லி உஷார்ன்னு தனக்குத் தானே சங்கு ஊதுறது தான் அந்த விளையாட்டோட ஸ்பெஷலாட்டி//

நக்கலு? :-)

மு.கார்த்திகேயன் said...

எங்க போனாலும் இந்த டேக்-தான் ஆட்டிபடைக்குது போல

முதல் முறை இங்கே, தேவ்..

நகைச்சுவையா எழுதியிருக்கீங்க தேவ்.. நல்லா இருக்குங்க

தேவ் | Dev said...

பாசம் வெளியேக் காட்டித் தான் தெரியணுமா மனதின் ஓசையாரே :-)

சீக்கிரம் நீ எவ்வளவு பெரிய கிறுக்கன்ங்கறதை வந்து ஊருக்குச் சொல்லுவீயா அதை விட்டுட்டுப் பீலிங் ஆயிகிட்டு...செ சின்னப் புள்ளத்தனமால்ல இருக்கு

வெட்டிப்பயல் said...

//பூராக் கிறுக்குப் பயக் கூட்டமா இல்ல இருந்திருக்கு .. இதுகக் கூடவா இம்புட்டு நாளும் நாம கும்மி அடிச்சிட்டு இருந்தோம்ன்னு நானும் நமட்டுச் சிரிப்பு சிரிச்சிகிட்டே எல்லாப் பதிவையும் படிச்சிகிட்டு இருந்தேன்..//

கூட்டத்துல முக்கியமான ஆளே நீங்க தான்... அது மறந்து போச்சா??/

எனக்கு கூட்டம்னா ரொம்ப பிடிக்கும். மீதி எல்லா கேரக்டரும் ஒத்து போகுது.

ஆனா எனக்கு யாரையும் நக்கல் பண்ணவே வராது. சின்ன வயசுல இருந்தே அவ்வளவு அமைதி...

வெட்டிப்பயல் said...

//
ஏதோ தனியா நடந்து வந்த மாதிரி பிலிம் காட்டுறீர், கூட வந்தவங்களை பற்றியும் சொல்லுங்க....நானா சொன்னா நல்லா இருக்காது சொல்லிட்டேன்.//

புலி,
இதுதான் மேட்டரா???

யூ டூ போர்வாள்???

Nandha said...

ஹ்ம்ம்ம். நான் பாட்டுக்கு செவ்வனேன்னு ஒரு ஓரமா போய்க்கிட்டிருந்தேன். அது எப்படி நீ மட்டும் உருப்புட்டுடலாமான்னு சொல்லி இழுத்து விட்டுட்டீங்களே?

ஒருத்தனை கிறுக்கனாக்கிப் பார்க்கறதுல உங்களுக்கு எல்லாம் அப்படி என்னய்யா சந்தோஷம்?

கார்த்திக் பிரபு said...

endha light oue dev adhu?

கோபிநாத் said...

தேவ் என்னமா கிறுக்கி வச்சிருக்கிங்க உங்க கிறுக்கு தனத்தை எல்லாம் ;-)))

\\இந்தக் கூட்டத்துக்கெல்லாம் பயந்து பஸ் ஏறாம லைட் ஹவுஸ் டூ அடையார் வரை நடந்தே வந்து இருக்கேனாப் பாருங்களேன்.\

நம்பிட்டோம்.....எல்லோரும் நம்பிட்டோம்....சரி புலி ஏதோ சொல்லிட்டு போயிருக்கே அவுங்களை பத்தியும் கொஞ்சம் சொல்லறது ;-)

இராம் said...

ஹிம் வெட்டியா ஊர்சுத்துறதுயும் பொழுது போக்க சினிமாக்களுக்கு போறத பத்தியும் ஒரு பதிவா...:)

அண்ணே என்னையும் ஒருத்தன் இதைமாதிரி புலம்ப சொல்ல கூப்பிட்டுருக்கான்... :)

நம்மளை விட்டு இருக்கமாட்டானுக பாசக்காரய்ங்கே :)

துளசி கோபால் said...

வாய்யா கிறுக்கா. எப்படியோ 'ஜோதியில்' ஐக்கியமாயிட்டீர்:-)))))

ஆமா........லைட் ஹவுஸ் 'புள்ளி' யாரு?

அபி அப்பா said...

//வெட்டிப்பயல் said...

ஆனா எனக்கு யாரையும் நக்கல் பண்ணவே வராது. சின்ன வயசுல இருந்தே அவ்வளவு அமைதி//

பார்ரா:-)

விஜய டி.ஆரு ஆள் போட்டு தேடிகிட்டு இருக்கார் வட்டிதம்பி, இருக்குடி:-))

நளாயினி said...

உங்களட்டை நாளைக்கு வாறன்.இப்ப சுவிசிலை நேரம் இரவு 11. தூக்கம் வருது. நிலவு நண்பனோடை கன நேரம் கதைச்சதாலை இனி நோ ரைம். நாளைக்கு வேலைக்குப் போக வேணும். குட்டிச்சாத்தான்கள் வேறை 2 பேர் வீட்டிலை. ஓ கே நாளை இதே நேசரம் பேசலாம்.

கோபிநாத் said...

ஸ்டார்......வாழ்க...வாழ்த்துக்கள் ;-)))))))

.:: மை ஃபிரண்ட் ::. said...

தேவ் அண்ணே, மார்க் போட்டு போட்டு டயர்ட்டாச்சு!

உங்களுக்கு எதுக்கு மார்க்கு. நீங்கதான் ஏற்கனவே மின்னிட்டு இருக்கீங்களே!

அதனால் பொழச்சு போங்கன்னு விட்டுடறேன். ;-)

Nandha said...

இதோ எழுதிட்டேன்பா என்னுடைய கிறுக்குத்தனங்களை. இப்போ திருப்தியா? போங்க போய் இந்த பக்கத்துல இருக்கிற என்னுடைய கிறுக்குத்தனத்தை பார்த்து கைகொட்டி சிரிங்க போங்க....
http://nandhakumaran.blogspot.com/2007/03/blog-post_26.html

tamil10