என்னடா இது டிவியிலே வந்த நிகழ்ச்சியோட டைட்டிலைக் காப்பி அடிச்சுப் பதிவுப் போட்டுருக்கேன்ன்னு பாக்குறீயளா...
நம்ம ஊர்ல்ல நடக்குற கச்சேரி ஒண்ணு கிட்டத் தட்ட கிளைமாக்ஸ் நெருங்கிருச்சு.. அதுப் பத்தி நம்ம கச்சேரியில்ல கொடிக் கட்டல்லன்னா மக்கா நீங்க கோவிச்சுக்க மாட்டீயளா..
அதான் கட்டிட்டோம்ல்ல.. பாருங்க... நீங்களும் ஓங்க கருத்தைச் சொல்லுங்க..
தென்னாட்டின் மூத்த அரசியல் சாணக்கியரும் தன் வாழ் நாளில் பல அரசியல் சிக்கல்களுக்கு விடைக் கண்டவ்ருமான நம்ம பெரியவர் மதிப்பிற்குரிய கலைஞர் அய்யாவுக்குத் தான் இந்த டவுட் இப்போ...
கலக்கப் போவது யார்?
அசத்தப் போவது யார்?
உடன்பிறப்பே...
கொடி அசைத்து விட்டாயடா.. சூரியக் கிரீடம் சூட்டிக் கொள்ள இதோ யுத்தம்....போர் முடிவுக்கு வரும் வேளை..
இந்நேரம் கண் துஞ்சிவிடாதே கண்மணியே..
வெற்றி யாருக்கு?
ஏ. ஒன் இன்டியா ஒன் பிளான் புகழ் தயாநிதி மாறன்.
பி. சென்னை சங்கமம் புகழ் கவிஞர் கனிமொழி
சி. அஞ்சா நெஞ்சன் மதுரை மன்னர் கின்னஸ் புகழ் அண்ணன் அழகிரி..
டி. இந்நாள் உள்ளாட்சி. எந்நாளும் இளைஞர் கழகத் தளபதி மு.க.ஸ்டாலின்.
கச்சேரிக்கு வந்திருக்கும் மக்களே நீங்களும் உஙக் மொபைல் போன் எடுத்து உங்களுக்குப் பிடிச்ச ஆப்ஷனை ஏ அல்லது பி அல்லது சி அல்லது டி அப்பட்டின்னு டைப் பண்ணி எங்கே வேணுமோ அனுப்பி வைங்க...
இப்போதைக்கு அப்பீட் அப்புறமா ரிப்பீட்..
11 comments:
ippo enna sola vareenga?
அய்யோ சாமி கார்த்திக் நான் எதுவும் சொல்லல்லப்பா.. உனக்கு யார் பிடிக்குதோ அவங்களுக்கு நீ ஓட்டுப் போடு.. ஆனா ஒண்ணு ஆளுக்கு ஆள் கலக்கலாக் கச்சேரி பண்றாங்கப்பா :-)
நம்ம ஓட்டு என்றும் மார்க்ண்டேயனா இளைஞர் கழக தலைவரா இருக்கும் தளபதிக்கே!!
என்னுடைய ஓட்டு ஸ்டாலினுக்கே...!!!
செந்தழல் ரவி
ஒருத்தருக்கு ஓட்டு போட்டா மீதி மூனு பேரும் கோவிச்சுக்கிட்டு எனக்கு போன் பண்ணி ஒரே அன்பு தொல்லை பண்ணிடுவாங்க...அதுனால என்னோட option N (அதுதாங்க நயன்) :-)
என்னதான் மத்தியில அசத்துனாலும், நம்ம ஓட்டு என்னவோ, ஸ்டாலின நோக்கித்தான் போகுது...
மீள்பதிவு போடலாம்
போடலாம் ஆனாக் கச்சேரியைக் கொளுத்திர மாட்டாங்களே?
//நம்ம ஓட்டு என்றும் மார்க்ண்டேயனா இளைஞர் கழக தலைவரா இருக்கும் தளபதிக்கே!!
//
மிக்க நன்றி மணிகண்டன்!
உங்க அன்பு என்னை திக்குமுக்காட வைக்குது!
//போடலாம் ஆனாக் கச்சேரியைக் கொளுத்திர மாட்டாங்களே?
//
எனக்கென்னவோ கச்சேரி வெர்சன் 3 வருமோன்னு பயாமா இருக்கு!
மீள்பதிவு போடலாம
Post a Comment