Tuesday, March 27, 2007

நானெல்லாம் பெரிய ரிப்போர்ட்டர்ங்க

நம்ம மனச்சாட்சிக்கு ரொம்பவும் கைவந்த கலை நம்மளைக் கண்டமேனிக்குக் கேள்வி கேட்டு வைக்கிறது தான்... நான் பதில் சொல்லாமத் தலையைக் கவுத்துப் போட்டு நின்னாலும் அது கேள்வி கேக்குறதை மட்டும் நிறுத்துறதா இல்ல... அது மட்டுமில்லா முதல் பதிவுல்ல நம்மப் பாசக்காரப் பய மனச்சாட்சியும் நம்மக் கூட ப்திவுல்ல வருவான்ன்னு வேறச் சொல்லி அவனை ஏகத்தும் ஏத்தி விட்டாச்சு... என்னப் பண்ணலாம்.. நம்ம மனச்சாட்சிக்கு கைவந்தக் கலையையேச் செய்யச் சொல்லிட்டோம்ல்ல...

இந்தா ஸ்டார் ரிப்போர்ட்டர்ன்னு கெட்டப் போட்டு விட்டாச்சு.. அது பாட்டுக்குக் கேள்விக் கேக்க கிளம்பிருச்சு.. மொதல்ல அந்த வெட்டிப்பயலைக் கேக்குறேன் பாரு கேள்வின்னு என் மெயில் ஐடியில்ல் இருந்து அவருக்கு மெயில் தட்டி அவரும் அதுக்கும் பதில் அனுப்ப... இந்தா இதைப் போடுன்னு என் சட்டையைப் பிடிச்சு கச்சேரியில்ல இடமும் வாங்கிட்டான்.உண்மையைச் சொல்லுங்க மத்தவங்க பதிவுகளை நீங்கப் படிக்கறது உண்டா? பதிவுகளை எந்த அடிப்படையிலே தேர்ந்தெடுத்து வாசிக்கிறீங்க... இல்ல சும்மா எல்லாப் பதிவுகளையும் படிப்பீங்களா?

வெட்டி: மத்தவங்க பதிவை படிக்காம எப்படிங்க நம்ம ஃபீல்ட்ல இருக்க முடியும்? கண்டிப்பா நிறைய படிப்பேன். இப்ப தான் நேரம் குறைவா கிடைக்குது.

முதல்ல பார்க்கறது தேன்கூடு அதிகம் பார்வையிடப்பட்ட பகுதிகள் தான். அப்பறம் தமிழ்மணம் வந்திடுவேன். தலைப்பு சுவாரசியமா இருந்தா படிப்பேன். இல்லைனா ஏதாவது ஒரு பதிவுல சுவாரசியமா பின்னூட்டம் போடறவங்க பதிவ படிப்பேன். அப்படியே எனக்கு போடறவங்க, பதிவரா இருந்தா அவுங்க பதிவையும் போய் ஒரு எட்டு பார்த்துட்டு பதிவு பிடிச்சிருந்தா ஒரு பின்னூட்டம் போட்டுட்டு வந்திடுவேன். எல்லா பதிவுகளையும் படிக்க முடியறதில்லை...


உங்கப் பதிவுகள் உங்களுக்காகவா இல்ல மக்களுக்காகவா? இல்ல கம்ப்யூட்டரும் கனெக்ஷ்னும் இருக்குங்கறதுக்காக கண்டப்படி கடமையாற்றிகிட்டு இருக்கீங்களா?

வெட்டி: வெறும் மேடை இருக்குனு ஒருத்தவன் எத்தனை நாள் பேசுவான்? சுத்தி நிக்க ஆள் இருந்தா தான் பேசுவான். மக்களுக்கு பிடித்ததை என்னால் எழுத முடிந்த அளவு எழுதுகிறேன். எனக்கும் ஈடுபாடு இருக்கற டாபிக்கா தான் பொதுவா எழுதுவேன். இது கோழி முட்டை கதை தான்.

பின்னூட்டங்கள் தான் ஒரு பதிவின் தர நிர்ணயக் கோல்ன்னு நினைக்கிறீங்களா? அந்தப் பின்னூட்டங்களை தக்க வச்சுக்கறதுக்காக என்ன வேணுமோ அதை எல்லாம் செய்யலாமா?

வெட்டி: அப்படியெல்லாம் இல்லைங்க... பின்னூட்டங்கள் நிச்சயமா தரத்தை நிர்ணயப்பதில்லை. ஆனா என்னை தொடர்ந்து எழுத வைத்தது/வைப்பது பின்னூட்டம் தான். அது ஒரு டானிக் மாதிரி. அதனால தான் தமிழ்மணத்துல உயிரெல்லைல எனக்கு விருப்பமில்லை. ஏதோ நல்லா ஓடறவன் காலை இழுத்து கட்டி வைக்கிற மாதிரி இருக்கு. போற போக்க பார்த்தா இது தான் நல்ல பதிவு. இதை தான் நீங்க படிக்கனும்னு சொன்னாலும் சொல்வாங்களோனு தோனுது.


உங்கப் பதிவுக்கு கிடைக்கும் பின்னூட்டங்கள் உங்கப் பதிவுகளுக்குக் கிடைக்கும் பின்னூட்டங்களா.. இல்லை உங்கள் நட்புக்கு உங்கள் நண்பர்கள் தரும் மரியாதையா?
வெட்டி: நான் நினைப்பது என் பதிவுக்கு கிடைக்கும் பின்னூட்டங்கள்னு தான்.என் பதிவுல பின்னூட்டம் போட்டு நண்பர்கள் ஆனவர்கள் தான் அதிக பேர்... நண்பர்களாகி பின்னூட்டம் போடறவங்க ரொம்ப குறைவு. ஏன்னா அவர்கள் சேட்லயும், தொலை பேசி உரையாடல்லயும் சொல்லிடறாங்க.

தமிழ்மணத்தில் கிசு கிசு பதிவுகள் அவசியமா? நம்ம சாம்பு, இரவு கழுகார் போன்றவற்றை சொல்லுகிறேன்.. அதைப் பத்தி உங்க கருத்து என்ன?

வெட்டி: அவசியம் தாங்க. படிக்க சுவாரசியமா இருக்குது இல்லை. ரொம்ப நல்லா ஆராய்ச்சி பண்றாங்க. அது அவுங்க ஏரியா ஆஃப் இண்ட்ரஸ்ட். பண்ணிட்டு போகட்டுமே. இன்னும் அதிகமா பண்ணா நல்லா இருக்கும். ஆனா யார் மனதையும் புண்படுத்த கூடாது.

வெட்டி பயலில் முக்கால் வாசி வெட்டிப் பேச்சு கால்வாசி எதோ பரவாயில்லைன்னு சொன்னா ஒத்துப்பீங்களா?

வெட்டி: மீதி கால்வாசி எப்படி எனக்கு தெரியாம போச்சு :-)
என் பதிவு பெரும்பாலும் ஆபிஸ்ல வேலை செஞ்சிக்கிட்டே இருக்கும் போது கிடைக்கும் ஒரு ஐந்து நிமிட ஓய்வு நேரத்தில் படித்து சிரிக்க தான். என்னுடைய பதிவு ஒருவரையாவது அவர் கவலையை ஒரு நிமிடமாவது மறக்க வைத்தால் போதும். யாரையும் திருத்த நான் பிறக்கவில்லை. நானே பல குறைகளை கொண்டவன்.

காதல் காதல்ன்னு உருகி கதை எழுதுறீங்களே.. காதல் கதைகளுக்கு அதிகம் வரவேற்பு இருப்பதாலா இல்லை உண்மையிலே நீங்கள் காதல் கட்சியா?

வெட்டி: சுத்தி நிறைய காதலர்களை பார்த்ததால வந்த வினையா இருக்கலாம். பாதி பேர் வீட்ல ஒரே பிரச்சனை வேற கேஸ்ட்ல பண்ணி வெச்சா சுத்தி இருக்கவங்க என்ன நினைப்பாங்கனுதான். பசங்க காதலிக்கறனு சொல்றவங்ககிட்ட பேசி பார்த்துட்டு கேரக்டர் ஒத்து வராதுனு கொஞ்சம் ஃபீல் பண்ணா பரவாயில்லை. எதையுமே விசாரிக்காம எதிர்க்கும் போது அந்த பசங்க படற கஷ்டத்த கூட இருந்து பார்த்ததால அந்த மாதிரி கதைகள் வருது. ஆனா நான் எழுதுன கதைகள்ல 50% கதைகள்ல கூட காதல் இருக்காது. ஒரு சில கதைகள்ல ஆண்-பெண் நட்போட முடிஞ்சிடும்.

ஆங்கிலப் பதிவுகள் படிப்பது உண்டா? அதற்கும் தமிழ் பதிவுகளுக்கும் நீங்கள் காணும் வித்தியாசம் என்ன?

வெட்டி: நம்ம தமிழ் பசங்க எழுதற ஆங்கில பதிவுகளும் தங்கிலிஷ் பதிவுகளும் படிப்பதுண்டு. அவுங்க எதை பத்தியும் கவலைப்படாம ரொம்ப ஜாலியா எழுதறாங்க. அவுங்க வாழ்க்கைல நடக்குற சின்ன சின்ன இண்ட்ரஸ்டிங் விஷயத்தையும் சொல்றாங்க. ஏதோ டயரி படிக்கிற மாதிரி நல்லா இருக்கு. அங்க படிக்கிறப்ப ரொம்ப ரிலாக்ஸ்டா ஃபீல் பண்றேன்.

பதிவுகளில் பொறுப்பான சமுதாயக் கருத்துக்கள் கட்டாயம் இருக்க வேண்டும் என்று ஒரு நிலை வந்தால் உங்கள் முடிவு என்னவாக இருக்கும்?

வெட்டி: எனக்கு பொதுவா கட்டுப்பாடு பிடிக்காது. இந்த மாதிரி சட்டம் வந்தா நான் எழுதறத நிறுத்துறதுக்கு முன்னாடி படிக்கிறத நிறுத்திடுவேன். வாழ்க்கையில நகைச்சுவை முக்கியம். சும்மா சமுதாய கருத்து கருத்துனு மொக்கைய போட்டா சத்தியமா என்னால அரை மணி நேரம் கூட உக்கார முடியாது. ஊர் விட்டு ஊர் வந்திருக்கோம். பேசறதுக்கு கூட ஆள் இல்லைனு தான் வலைப்பதியறோம். கொஞ்சம் இளைப்பாற ஒரு இடம்னு தான் எனக்கு இது இருக்கு.
அப்ப உனக்கு இந்த சமுதாயத்து மேல அக்கறையில்லையானு கேட்டா, வெறும் வாய் சொல் வீரர்களை எனக்கு பிடிப்பதில்லை. நம்ம எ.அ.பாலா மாதிரியோ செந்தழல் ரவி மாதிரியோ ஃபீல்ட்ல இருங்கி செஞ்சா உண்மையா பாராட்டலாம். நாமும் நம்மால் இயன்றதை பண்ணலாம்.

பதிவுலகில் அரசியல் இருக்கா இல்லையா நேர்மையான பதில் சொல்லு?

வெட்டி: மனுஷனுங்க ரெண்டு பேர் சேர்ந்தாலே அரசியல் தானா உருவாகிடும். பதிவுலகில் அது எப்படி இல்லாம போயிடும்? கண்டிப்பா இருக்கு.

பெண்கள் ஆண்கள் பதிவுகள் என பதிவுலகில் தனித்தனிப் பார்வை தேவையா?
வெட்டி: எந்த மாதிரி கேக்கறீங்கனு புரியல. இப்ப அனுபவத்தை சொல்றாங்கனு பார்க்கும் போது கண்டிப்பா ரெண்டுத்துக்கும் வித்யாசம் இருக்கு. ஆனா சமுதாய கருத்துக்களை பேசும் போது தேவையில்லைனு நினைக்கிறேன்.

ஒரு நாலு முக்கிய பதிவர்களுக்கு ஆளுக்கு ஒரு கேள்விக் கேக்கச் சொன்னா யார் யார் கிட்ட என்னக் கேள்வி கேப்பீங்க... ஒரு கேள்வி நான்கு பேர் சொல்லுங்க?

வெட்டி:

பாபா : ஒரு நாளைக்கு எவ்வளவு மணி நேரம் தூங்குவீங்க?

இ.கொ : பின்னூட்டத்துக்க்கு பதில் சொல்றது ரொம்ப கஷ்டமா இல்லையா? அந்த நேரத்துல இன்னொரு பதிவு போட்டுடலாம்னு என்னைக்காவது தோன்றியிருக்கா?

கைப்புள்ள : உங்ககிட்ட பேசனதுல இருந்து நீங்க பெரிய புத்திசாலினு தெரியுது (நக்கல் இல்லைங்க. அண்ணன் நிஜமாலுமே ஜீனியஸ் தான்). உங்களை கிண்டல் பண்ணும் போது உங்களுக்கு கொஞ்சமாவது கஷ்டமா இருக்காதா???

நாமக்கல் சிபி : அது ஏன் எந்த பதிவர் புதுசா ஆரம்பிச்சாலும் உங்களையே பிடிக்கறாங்க???
இனி ஓவர் டு வெட்டி அன்ட் ஸ்டார் ரிப்போர்ட்டர்...( மனச்சாட்சிப் பயலை அப்படித்தான் கூப்பிடணுமாம் கன்டிசனாச் சொல்லிட்டான்)

51 comments:

.:: மை ஃபிரண்ட் ::. said...

இன்னைக்கு நட்சத்திரத்தின் எல்லா பதிவுலேயும் நான்தான் முதல் கமேண்டு போட்டிருக்கேன். ;-)

ராம், இதுக்கெல்லாம் கோச்சுக்கப்படாது.. ஓகே? no crying.. :-)

இப்போ போய் இந்த போஸ்ட்டை படிச்சிட்டு வர்ரேன் :-)

.:: மை ஃபிரண்ட் ::. said...

எதுக்கும் safetyக்கு இன்னொன்னு:

இன்னைக்கு நட்சத்திரத்தின் எல்லா பதிவுலேயும் நான்தான் முதல் கமேண்டு போட்டிருக்கேன். ;-)

ராம், இதுக்கெல்லாம் கோச்சுக்கப்படாது.. ஓகே? no crying.. :-)

இப்போ போய் இந்த போஸ்ட்டை படிச்சிட்டு வர்ரேன் :-)

.:: மை ஃபிரண்ட் ::. said...

//உங்கப் பதிவுகள் உங்களுக்காகவா இல்ல மக்களுக்காகவா? //

நல்ல கேள்வி!!! கேட்டது உங்க மனசாட்சிதானே?

பதில் சொன்னது வெட்டியோட மனசாட்சியா?

.:: மை ஃபிரண்ட் ::. said...

//வெட்டி:

மக்களுக்கு பிடித்ததை என்னால் எழுத முடிந்த அளவு எழுதுகிறேன்.//

அதான் எழுதுறீங்களே தெலுங்கு படங்களை பத்தி! அப்படியே கொஞ்சம் சித்தார்த் பத்தியும் எழுதுங்க
:-)

இம்சை அரசி said...

present அண்ணா...

படிச்ச்ட்டு வரேன் இருங்க :)

.:: மை ஃபிரண்ட் ::. said...

பாபா யாரு?

.:: மை ஃபிரண்ட் ::. said...

//இனி ஓவர் டு வெட்டி அன்ட் ஸ்டார் ரிப்போர்ட்டர்...( மனச்சாட்சிப் பயலை அப்படித்தான் கூப்பிடணுமாம் கன்டிசனாச் சொல்லிட்டான்)//

பேரு ரொம்ப நீட்டா இருக்கு! சுருக்கிருவோமா?

இம்சை அரசி said...

அப்பாடி... சன் TVல ஒரு பேட்டி பாத்த ஃபீலிங்...

இராம் said...

/ராம், இதுக்கெல்லாம் கோச்சுக்கப்படாது.. ஓகே? no crying.. :-)//

உங்களுக்கு இன்னிக்கு வேலை இல்லேன்னு நினைக்கிறேன்....

வேற ஒன்னும் சொல்லுறதுக்கில்லை... ;)

இம்சை அரசி said...

எப்படி அண்ணா உங்களால மட்டும் இப்படி???

கேள்வி எல்லாம் செம சூப்பர்...

எவ்ளோ நாளா உக்காந்து யோசிச்சீங்க??? :))))))

இம்சை அரசி said...

வெட்டிபயலா? கெட்டிபயலா???

கெட்டிக்காரதனமா பதில போட்டுத் தாக்கியிருக்கறப்பு :)))

தேவ் அண்ணா n வெட்டி ரெண்டு பேருக்கும் வாழ்த்துக்கள் :)))))

இலவசக்கொத்தனார் said...

//ஒரு நாலு முக்கிய பதிவர்களுக்கு ஆளுக்கு ஒரு கேள்விக் கேக்கச் சொன்னா யார் யார் கிட்ட என்னக் கேள்வி கேப்பீங்க...//

யோவ் வெட்டி, அவரு நாலு முக்கிய பதிவர் அப்படின்னு சொல்லி இருக்காரு. இது என்னது சின்னப்புள்ளையாட்டும் எங்கிட்ட வந்து கேட்டுக்கிட்டு....

நாகை சிவா said...

வெட்டியின் பேட்டிய்யா, அப்ப கண்டிப்பா வெட்டித்தனமா இருக்காது.
ஐ'ம் கம்மிங் இன்சைட்....

நாகை சிவா said...

//எல்லா பதிவுகளையும் படிக்க முடியறதில்லை...//

இதுல என் பதிவும் இருக்கா அப்படினு எனக்கு நீ பதில் சொல்லியே ஆகனும். இத்தன நாள் நீ என் பதிவ எல்லாம் படிக்குற, பின்னூட்டம் தான் போட மாட்டேங்குற நினைச்சேன். ஆனா நீ சொன்ன இந்த பதில பாக்கும் போது, எனக்கு படா டவுட் வருது....

எனக்கு இந்த உண்மை தெரிஞ்சே ஆகனும்...

நாகை சிவா said...

//ஏதோ டயரி படிக்கிற மாதிரி நல்லா இருக்கு.//

அடுத்தவங்க ப்ர்சனல் மேட்டரை படிக்கிறோம் என்ற குற்ற உணர்வு வருதா வெட்டி!!!

நாகை சிவா said...

//எந்த மாதிரி கேக்கறீங்கனு புரியல//

உண்மையிலே புரியலையா, இல்ல புரியாதா மாதிரி புரியல என்று சொல்லுறியா????

நாகை சிவா said...

//பாபா : ஒரு நாளைக்கு எவ்வளவு மணி நேரம் தூங்குவீங்க?//

அதானே!!!

//இ.கொ : பின்னூட்டத்துக்க்கு பதில் சொல்றது ரொம்ப கஷ்டமா இல்லையா? அந்த நேரத்துல இன்னொரு பதிவு போட்டுடலாம்னு என்னைக்காவது தோன்றியிருக்கா?//

பதிவு ஆயிரம் பேர் போடுவன்னய்யா, என்ன மாதிரி யாரால் பின்னூட்டம் போட முடியும் கேட்குறார் கொத்துஸ்

//கைப்புள்ள : உங்ககிட்ட பேசனதுல இருந்து நீங்க பெரிய புத்திசாலினு தெரியுது (நக்கல் இல்லைங்க. அண்ணன் நிஜமாலுமே ஜீனியஸ் தான்). உங்களை கிண்டல் பண்ணும் போது உங்களுக்கு கொஞ்சமாவது கஷ்டமா இருக்காதா???//

இப்படி சொல்லி கைப்புள்ள ய கலாய்ச்சிட்டல, இப்ப உனக்கு சந்தோஷம் தானே!

//நாமக்கல் சிபி : அது ஏன் எந்த பதிவர் புதுசா ஆரம்பிச்சாலும் உங்களையே பிடிக்கறாங்க???//

அது என்ன சிபி எல்லாருமே உங்கள இந்த கேள்வி கேட்குறாங்க...யாருமே உங்கள நம்ப மாட்டேன் அடம் பிடிக்குறாங்களே... அது ஏன்...

நாகை சிவா said...

//யோவ் வெட்டி, அவரு நாலு முக்கிய பதிவர் அப்படின்னு சொல்லி இருக்காரு. இது என்னது சின்னப்புள்ளையாட்டும் எங்கிட்ட வந்து கேட்டுக்கிட்டு.... //

ஒரு வேள அது "முக்கி"ய பதிவராக இருக்குமோ????

நாகை சிவா said...

//பாபா யாரு? //

பா.பா. யாரா? பா.பா வை தெரியாம பதிவுலகில் அதுவும் தமிழ் பதிவுலகில் அதுவும் தமிழ்மணத்தில் இருக்காங்களா? அப்படி இருக்கலாமா?

திரையுலகின் பாபா - ரஜினி

பதிவுலகின் பாபா - பாஸ்டன் பாலா

அவர் அங்க சூப்பர் ஸ்டார், இவரு இங்க.....

***பாபா - அக்கவுண்ட் நம்பர் தனி மெயிலில் அனுப்புறேன்.

நாகை சிவா said...

//அப்பாடி... சன் TVல ஒரு பேட்டி பாத்த ஃபீலிங்... //

சன் டிவில இவ்வளவு நல்ல பேட்டி எல்லாம் கூட போடுறாங்களா?

ஆச்சரியமா இருக்கே!!!!

வெட்டிப்பயல் said...

//.:: மை ஃபிரண்ட் ::. said...

பாபா யாரு? //

பாஸ்டன் பாலா :-)

வெட்டிப்பயல் said...

//இம்சை அரசி said...

வெட்டிபயலா? கெட்டிபயலா???

கெட்டிக்காரதனமா பதில போட்டுத் தாக்கியிருக்கறப்பு :)))//

இ.அரசி,
ரொம்ப நன்றிங்கோவ்

இலவசக்கொத்தனார் said...

//ஒரு வேள அது "முக்கி"ய பதிவராக இருக்குமோ????//

நானும் அந்த சன் டிவி செய்தி விளம்பரம் மாதிரி 'சேலத்தில் 'முக்கிய' நபர் கைது' அப்படிங்கற ரேஞ்சில் யோசிச்சுப் பார்த்தேன். ஆனா நமக்கு அந்தப் பிரச்சனை ஒண்ணும் இல்லை அது மட்டுமில்லாம இவருக்கு அதெல்லாம் எப்படித் தெரியும்?

ஐயாம் தி வொரீட்.

தம்பி said...

வழக்கமான பதிவு மாதிரி இல்லாம பதிவு ரொம்ப நல்லாவே இருக்குங்க போர்வாள்.

வெட்டி பதில்கள் அதை விட நல்லா இருக்கு.

சூப்பர் கான்செப்ட்.

ஐ ஆம் தி வெயிட்டிங் பார் அபி அப்பா உளறல்ஸ்.. :)))

வெட்டிப்பயல் said...

//இலவசக்கொத்தனார் said...

//ஒரு நாலு முக்கிய பதிவர்களுக்கு ஆளுக்கு ஒரு கேள்விக் கேக்கச் சொன்னா யார் யார் கிட்ட என்னக் கேள்வி கேப்பீங்க...//

யோவ் வெட்டி, அவரு நாலு முக்கிய பதிவர் அப்படின்னு சொல்லி இருக்காரு. இது என்னது சின்னப்புள்ளையாட்டும் எங்கிட்ட வந்து கேட்டுக்கிட்டு.... //

கொத்ஸ்,
ஏன் இந்த தன்னடக்கம்???
கொத்ஸ் எவ்வளாவு முக்கியமான பதிவர்னு எல்லாருக்கும் தெரியும் :-)

வெட்டிப்பயல் said...

//நாகை சிவா said...

//எல்லா பதிவுகளையும் படிக்க முடியறதில்லை...//

இதுல என் பதிவும் இருக்கா அப்படினு எனக்கு நீ பதில் சொல்லியே ஆகனும். இத்தன நாள் நீ என் பதிவ எல்லாம் படிக்குற, பின்னூட்டம் தான் போட மாட்டேங்குற நினைச்சேன். ஆனா நீ சொன்ன இந்த பதில பாக்கும் போது, எனக்கு படா டவுட் வருது....

எனக்கு இந்த உண்மை தெரிஞ்சே ஆகனும்... //

புலி,
உன் பதிவு கண்டிப்பா படிப்பேன்.
உன் பதிவ விட சில சமயம் பின்னூட்டம் ரொம்ப அட்டகாசமா இருக்கும். அதனால கண்டிப்பா மிஸ் பண்ணாம படிப்பேன்...

ஆனா பின்னூட்டம் நிறைய வந்தவுடனே இனிமே நம்ம ஆட்டத்தை ஆரம்பிக்க வேண்டாம்னு விட்டுடுவேன்...

அதுவும் இல்லாம நம்ம ரெண்டு பேர் வாயும் சும்மா இருக்காது. ரெண்டு பேரும் ஒருத்தர மாத்தி ஒருத்தர நக்கல் அடிச்சா நாடு தாங்காது ;)

கப்பி பய said...

சூப்பர்!! :)

துளசி கோபால் said...

ஏம்ப்பா மனசாட்சி, இது நல்ல வேலையா இருக்கே. பின்னூட்டத்துக்குப் பதில்
வெட்டியையே சொல்ல வச்சுடறதா? :-))))))

எப்படிய்யா............... எப்படி? இதான் 'உக்காந்து' யோசிக்கிறதா?

சந்தோஷ் aka Santhosh said...

//எல்லா பதிவுகளையும் படிக்க முடியறதில்லை...//
எலேய் தேவு இதை ஏன் கலருல போட்டு இருக்கே ஏதோ உள் குத்து இருக்குற மாதிரி இல்ல இருக்கு.
மத்தபடி வெட்டி கெட்டியா எஸ்கேப் ஆயிட்டாரு,

கோபிநாத் said...

எல்லாரும் உள்ளேன் ஐயா சொல்லிட்டு தான் பதிவையே படிக்கறாங்க அதனால......நானும் உள்ளேன் ஐயா போட்டுக்குறேன்

கோபிநாத் said...

\.:: மை ஃபிரண்ட் ::. said...
எதுக்கும் safetyக்கு இன்னொன்னு:\\

உங்க பாசத்துக்கு ஒரு அளவே இல்லையாம்மா ;-))))

கோபிநாத் said...

சூப்பர் ரிப்போர்ட் தேவ்
அட்டகாசமான கேள்விகள் ;-)))


\\வெட்டி: வெறும் மேடை இருக்குனு ஒருத்தவன் எத்தனை நாள் பேசுவான்? சுத்தி நிக்க ஆள் இருந்தா தான் பேசுவான்.\\

அட்ரா...அட்ரா...பின்னிட்ட மாப்பு.....
வெட்டி எல்லா பதில்களும் கலக்கலப்பா ;-)))

கோபிநாத் said...

\\பதிவுகலம் பற்றி விளாசுகிறார் அபி அப்பா....
பதிவுலகின் கவனம் ஈர்க்க வழிகள் சொல்லுகிறார்
செவ்வாய் மாலை கச்சேரிக்கு வாங்க... படியுங்க...\\

வந்துடுவோம்ம்ம்ம்ம்ம்ம்.....(அபி அப்பா பின்னிடுங்க)

அபி அப்பா said...

//ஐ ஆம் தி வெயிட்டிங் பார் அபி அப்பா உளறல்ஸ்.. :))) //

தம்பி! இருக்குடி உனக்கு:-))

அபி அப்பா said...

வெட்டிதம்பி!
என்னோட பதிவ படிப்பியா மாட்டியா பதில் சொல்லனும்:-))

அபி அப்பா said...

தேவ்! நல்ல கேள்விப்பா எல்லாம், சூப்பர். அதுக்கு வெட்டிதம்பி பதில் கலக்கல்!!!!

அபி அப்பா said...

"முக்கி"ய கொத்ஸ்! இப்போ எப்டி இருக்கு, பரவாயில்லயா?

வெட்டிப்பயல் said...

//நாகை சிவா said...

//ஏதோ டயரி படிக்கிற மாதிரி நல்லா இருக்கு.//

அடுத்தவங்க ப்ர்சனல் மேட்டரை படிக்கிறோம் என்ற குற்ற உணர்வு வருதா வெட்டி!!! //

புலி,
நமக்கெல்லாம் என்னைக்கு அது இருந்துச்சு???

அடுத்தவங்க டைரிய படிக்கறத விட ஒரு ஜாலியோ ஜிம்கானா இல்லை ;)

வெட்டிப்பயல் said...

//.:: மை ஃபிரண்ட் ::. said...

//வெட்டி:

மக்களுக்கு பிடித்ததை என்னால் எழுத முடிந்த அளவு எழுதுகிறேன்.//

அதான் எழுதுறீங்களே தெலுங்கு படங்களை பத்தி! அப்படியே கொஞ்சம் சித்தார்த் பத்தியும் எழுதுங்க
:-) //

ஏற்கனவே கொல வேறில அலையறாங்க. இது வேறயா???

வெட்டிப்பயல் said...

//நாகை சிவா said...

//எந்த மாதிரி கேக்கறீங்கனு புரியல//

உண்மையிலே புரியலையா, இல்ல புரியாதா மாதிரி புரியல என்று சொல்லுறியா???? //

புலி,
இதுக்கு நான் பின்னாடி பெருசா ஒரு போஸ்டே போடறேன்...

வெட்டிப்பயல் said...

// கோபிநாத் said...

சூப்பர் ரிப்போர்ட் தேவ்
அட்டகாசமான கேள்விகள் ;-)))


\\வெட்டி: வெறும் மேடை இருக்குனு ஒருத்தவன் எத்தனை நாள் பேசுவான்? சுத்தி நிக்க ஆள் இருந்தா தான் பேசுவான்.\\

அட்ரா...அட்ரா...பின்னிட்ட மாப்பு.....
வெட்டி எல்லா பதில்களும் கலக்கலப்பா ;-))) //

ரொம்ப டாங்கிஸ் கோபி...

வெட்டிப்பயல் said...

//அபி அப்பா said...

வெட்டிதம்பி!
என்னோட பதிவ படிப்பியா மாட்டியா பதில் சொல்லனும்:-)) //

உங்க போஸ்ட் முடிந்த அளவு படிப்பேன்... காமெடிங்கறதால கொஞ்சம் போர் அடிக்கும் போது படிக்கலாம்னு ஒரு சிலது வெயிட்டிங்...

உங்க போஸ்டையும் கண்மணி அக்கா போஸ்டையும் படிக்க சொல்லி நான் நிறைய பேருக்கு பரிந்துரைத்திருக்கிறேன்...

.:: மை ஃபிரண்ட் ::. said...

//ஏற்கனவே கொல வேறில அலையறாங்க. இது வேறயா??? //

அலைஞ்சா அலஞ்சுட்டு போகட்டும் வெட்டி.. என் உயிர் safe.. :-P

உங்களுக்கு வேணும்ன்னா ரென்Dஊ பாடிகார்ட்ஸ் hire பண்ணிக்கோங்க.. ;-)

அபி அப்பா said...

//முடிந்த அளவு படிப்பேன்... //

வெட்டிதம்பி! கடேசி பாரா மட்டுமா?;-))

நாகை சிவா said...

//புலி,
இதுக்கு நான் பின்னாடி பெருசா ஒரு போஸ்டே போடறேன்... //

ஐ'ம் இகர்லி வெயிட்ங் பார் தட்

;-))))))))))))

நாகை சிவா said...

//ஏற்கனவே கொல வேறில அலையறாங்க. இது வேறயா??? //

உன் மேல் கொல வெறியில் அலையும் களவாணி பய கூட்டம் ஏது என்று கூறு வெட்டி.

உன் போர்படை தளபதிகளான கப்பி, தம்பி, ஜி, கோபிநாத் போன்றவர்கள் எல்லாம் இதைக் கேட்டு துடித்து போய் என் தலைமையில் திரண்டு நிற்கின்றார்கள். உன் ஆணைக்காக தான் வெயிட்டிங்....

அபி அப்பா said...

//உன் மேல் கொல வெறியில் அலையும் களவாணி பய கூட்டம் ஏது என்று கூறு வெட்டி.//

நானில்லை:-)) 40 தாண்டியாச்சு வாங்கப்பா அடிச்சு ஆடுவேம்:-))

வெட்டிப்பயல் said...

//
உன் போர்படை தளபதிகளான கப்பி, தம்பி, ஜி, கோபிநாத் போன்றவர்கள் எல்லாம் இதைக் கேட்டு துடித்து போய் என் தலைமையில் திரண்டு நிற்கின்றார்கள். உன் ஆணைக்காக தான் வெயிட்டிங்....//

இன்னும் கொத்ஸ் மட்டும் தான் பாக்கி.. அவரையும் சேர்த்துக்கோ... மொத்த கூட்டத்து பேரும் இருக்கும்

Boston Bala said...

சிவா...

---***பாபா - அக்கவுண்ட் நம்பர் தனி மெயிலில் அனுப்புறேன்.---

தங்கள் வங்கி எண் வந்து சேர்ந்தது. ஆவன செய்திருக்கிறேன். பணம் வந்து சேர்ந்ததற்கு தகவல் சொல்லவும். :))

நாமக்கல் சிபி said...

//நாமக்கல் சிபி : அது ஏன் எந்த பதிவர் புதுசா ஆரம்பிச்சாலும் உங்களையே பிடிக்கறாங்க???
//

இதெல்லாம் வலைப் பதிவில் பிரபலம் அடைவதற்காக செய்யும் உத்தி!

எங்களைப் பத்தி நாங்களே வதந்திகளைக் கிளப்பி விட்டுக்குவோம்!
கண்டுக்காதீங்க பாலாஜி!

:))

Anonymous said...

tibia money tibia gold tibia item runescape money runescape gold tibia money tibia gold runescape gold runescape accounts tibia gold tibia money runescape money runescape gp buy runescape gold tibia gold tibia item buy runescape money runescape gold runescape items tibia money tibia gold

tamil10