Wednesday, March 07, 2007

உலகக் கோப்பைக்குப் போறோம் - பயிற்சி களம்

வணக்கம் மக்கா,

அணியின் சிறப்பு பயிற்சியாளர் நம்ம அணியைத் தாக்கி எழுதிய கடிதம் பற்றி கடுகளவும் கவலைப் படாத நம் பதிவுலக கிரிக்கெட் புலிகள் இரவு பகல் பாராது கடும் பயிற்சியில் ஈடுப்பட்டு வருகிறார்கள்.

பினாத்தாலாரின் கடிதத்திற்கு கண்டனம் தெரிவித்து நாள் ஒன்றுக்கு 40 (ஆமாங்க 40 தான் லிமிட்) கிலோவுக்கு குறையாமல் கண்டனக் கடிதங்கள் கிழக்காப்பிரிக்கா துவங்கி கீழ்பாக்கம் வரை அனைத்து இடங்களில் இருந்தும் குவிந்த வண்ணம் உள்ளன.

அதை எல்லாம் உடனுக்குடன் பழைய பேப்பர் கடையில் போட்டு பேரீச்சம் பழம் வாங்கி தின்று நம் வீரர்கள் தங்கள் உடம்பை இரும்பெனத் தயார் செய்த வண்ணம் உள்ளனர்.. 40 கிலோ உச்சவரம்பு அதிகரிக்கப்பட்டால் இன்னும் நிறைய பேரீச்சம் பழம் கிடைக்கும் என வீரர்களின் சிறப்பு ஆலோசனைக் கூட்டத்தில் பேசப்பட்டது...

பழையப் பேப்பருக்கு நெல்லிக்காய் கிடைக்குமா என கவலையோட விசாரித்தவர் நம் ஓப்பனிங் பேட்ஸ்மேன் வெட்டி பயல்..

பத்திரிக்கைக்கார்களும் புகைப்படக்காரர்களும் அணியினர் பயிற்சி செய்யும் மைதானத்தின் பக்கமே அனுமதிக்கப்படாத நிலையில் லண்டன் சன் பத்திரிக்கை ஆகாய மார்க்கமாய் தன் நிருபரை அனுப்பி நம் வீரர்கள் பயிற்சி செய்யுமிடத்தைப் புகைப்படம் எடுத்துள்ளனர். அதோடு நம் பயிற்சியாளர் க்ரேக் கைப்புள்ள குறைந்தப் பட்ச ஆடைகளில் கடும் பயிற்சிகளை நடத்திக் கொண்டிருந்ததையும் படம் பிடித்து விட்டனர். அந்தக் கவ்ர்ச்சி படம் எந்த நேரமும் இணையத்தில் வலம் வரலாம் உஷார்
நம் நாட்டாமை தலைமையில் சில வீரர்கள் அணியின் வெற்றிக்காக கொலச்சாமி கோயில்ல்ல பொங்கல் வைக்க அம்மிணிகள் சகிதமாக் கடந்த வாரம் பாண்டிச்சேரி பார்டர் வரை அவரது சேரியட்ட்ல்லப் போய் வந்து இருக்கிறார்கள்..

"என்றா நாயம்.. சுத்துப் பட்டுல்ல பத்துப் பேத்தை நிக்க வச்சுபுட்டு... என்ற கையிலே ஒத்த மட்டைய மட்டும் கொடுத்துபுட்டு .. ஒருத்தன் ஓடி ஓடி வந்து என் மொகரையப் பேக்கறேன் பாருன்னு வீசுறான்.. அந்தப் பயபுள்ளக்கு குறி வைக்க தெரியாம அங்கன இங்கன் பந்து போவுது.. மறுபடி மறுபடி பந்து வீசச் சொல்லி அவன் கிட்ட பந்தக் கொடுக்குறானுவ.. அட அவனால முடியல்லன்னு அடுத்தவன் கிட்டயும் கொடுக்குறான்வ.. ஆனாப் பாருங்க... ஒரே தடவ.. நான் பந்தை தடுக்காம விட்டேன்ய்யா.. பின்னால இருந்த குச்சி விழுந்துருச்சுன்னு.. என் கையிலே இருந்த மட்டையப் புடுங்கிட்டு... வெளியேப் போவச் சொல்லிட்டன்வ... என்றா நாயாம்.. ஏனுங்க தம்பி...எனக்கு எல்லாம் நீதிடா.. நேர்மாடா.. நாயாம்டா.. சொல்லோனும் தம்பி...."
பாண்டிச்சேரியில் பொங்கல் மீது பொங்கியப் படி நாட்டாமை பேசியது நம் வீரர்களையும் பொங்க வைத்து விட்டது..

நம் அணி வீரர்களின் ஆஸ்திரேலியா ரசிகர் மன்ற கிளையினர் பயிற்சி நேரத்தில் அணியினரைக் காண வந்திருந்தப் போது எடுத்தப் படம். நம்ம பாண்டியும் ராயல் ராமும் மன்றத்தின் மகளிர் பிரிவு வராத துக்கத்தில் அன்றைய பயிற்சிகளில் சரி வர ஈடுபடவே இல்லை.. என நம்பத் தகுந்த வட்டாரங்கள் வாய் திறந்தன..மக்களே உங்களுக்காக நம் வீரர்களின் பயிற்சி களத்தின் ஸ்பெஷல் படங்கள்..
இந்தப் படங்களில் உங்கள் பாசமிகு வீரர்கள் எல்லாருமே உள்ளார்கள்.. எங்கே கண்டுப் பிடிங்கப் பாப்போம்..

வீரர்களின் பயிற்சி நேரத்தில் சிறப்பு பிட்னஸ் டிப்ஸ் கொடுக்க அன்பிற்குரிய மருத்துவர்கள் எஸ்.கே அய்யாவும், ரஷ்யா ராமநாதனும் வந்திருந்தது சிறப்பானப் பலன் கொடுக்கும் என எதிர்ப்பார்க்கலாம்.


உருகுவே மான்டி வீடியோவைச் சேர்ந்த ஒரு பிரபல உற்சாக பான நிறுவனம் நம் வீரர்களின் திறனைக் கண்டு மகிழ்ந்து அவர்களைத் தன் நிறுவனத்தின் பிராண்ட் அம்பாசிடர்களாக நியமித்து உள்ளது.. (நம் கப்பி கொடுத்த தகவல் தான்)அதற்கு ஏற்பாடு செய்யப்பட்ட விருந்தில் கல்ந்துக் கொண்ட நம் வீரர்கள் சற்று அசந்த நேரத்தில் நம் அணிக்குச் சொந்தமான மட்டை. பந்து.. ஸ்டம்பு.. பேட்.. போன்ற உபகரணங்களை யாரோ சுட்டுச் சென்றதாய் தெரிய வந்தது..
அந்த விருந்தில் கலந்துக் கொண்டதால் நம் வீரர்களால் முழுதாய் மூன்று நாட்கள் பயிற்சியில் ஈடுபட முடியவில்லையாம்...
அந்த மூன்று நாட்களும் மைதானத்துக்கு வெளியே ஏக்கமாய் காத்துக் கிடந்த ரசிகர் பட்டாளத்தைத் தான் படத்துல்லப் பாக்குறீங்க..

இப்படியாக நம்ம அணி பயங்கர பில்டப்பா அடுத்து பிளைட் ஏறப் போகுது.. வாங்க வாழ்த்துங்க.. வழியனுப்புங்க.. ALL THE BEST சொல்லுங்க...

28 comments:

.:: மை ஃபிரண்ட் ::. said...

ALL THE BEST

சொல்லிட்டேன்ப்பா.. ஜெயிச்சு வந்தா சரி.. ம்ம்ம்...

தேவ் | Dev said...

முதல் வாழ்த்துச் சொன்ன மை பிரெண்ட்க்கு நன்றி..

podakkudian said...

தகவலும் போட்டோவும் அறுமை

வெற்றி இந்தியாவிற்கே.

ஜி said...

போர்வாள் தேவ் அவர்களே...

போருக்கு போகுமுன் வீரர்களுக்கு உற்சாகப் பானமான 'அக்கா மாலா' விற்கல்லவா நான் விளம்பரம் கொடுத்தேன்.. நீங்கள் என்னடாவென்றால் ஏதோ பெயர் தெரியாத ஒரு பானத்திற்கு விளம்பரம் கொடுத்திருக்கிறீர்கள். இதற்கு அரண்மனை தீர்ப்பின் என்ன தண்டனை தெரியுமா???

உங்கள் நண்பன் said...

நாட்டாமை பேச்சு ஒரு வகையில் நாயமாத்தான் படுது....:)))

//அந்தக் கவ்ர்ச்சி படம் எந்த நேரமும் இணையத்தில் வலம் வரலாம் உஷார்//

அந்த கவிரிச்சிப் படத்தை பார்த்து விட்டு ஆங்கிலப் படத்தயாரிபாளர்கள்(ஏஞ்சலினாவுடன் சோடிபோட்டு ஆட) ஒற்றைக் குத்துப் பாட்டுக்கு கால்சீட் கேட்டு வரும் அபாயம் உள்ளது, கணக்குப்புள்ள கொத்ஸ் ரெடியா?
கைப்பூ.. வெளிய வந்த நீ கைமா தான் ஒழுங்கா ஒட்டகத்துக்குப் பின்னாலயே ஒளிஞ்சிக்கப்பூ...


//. நம்ம பாண்டியும் ராயல் ராமும் மன்றத்தின் மகளிர் பிரிவு வராத துக்கத்தில் அன்றைய பயிற்சிகளில் சரி வர ஈடுபடவே இல்லை//

ஏண்டா பயிற்சிக்கு வரலை?னு கேட்டதுக்கு வீட்டுல அப்பத்தாவுக்கு உடம்பு சரியில்லைனு சொல்லி சோகமா இருந்தாங்களே பயபுள்ளக அப்போ அது உண்மையில்லையா?

//வீரர்களின் திறனைக் கண்டு மகிழ்ந்து அவர்களைத் தன் நிறுவனத்தின் பிராண்ட் அம்பாசிடர்களாக நியமித்து உள்ளது.. //

நல்லாப் பாரும் ஓய்..அது பிராண்ட் அம்பாசிடரா? இல்லை பிராண்டி அம்பாசிடரானு?

//அடுத்து பிளைட் ஏறப் போகுது.. வாங்க வாழ்த்துங்க.. வழியனுப்புங்க//

மக்கா ஏரேப்பிளேன்ல எனக்கு ஜன்னல் சீட்டு ஆமா...!


அன்புடன்...
சரவணன்.

பினாத்தல் சுரேஷ் said...

என்னத்த பயிற்சி எடுத்து, என்னத்த விருந்து சாப்பிட்டு...

கண்டனங்கள் குவிகிறதென்றால் அது என்னுடைய சொத்து. பேரீச்சம்பழம் எனக்கே வர வேண்டும். இல்லையென்றால் அடுத்த விவகாரமாக பேரீச்சம்பழ ஊழல் கிளறப்படும்.

பினாத்தல் சுரேஷ் said...

ஆ.. போனாப்போவுது.. சொல்ல உட்டுட்டேன் ..

ஆல் த பெஸ்ஸ்ஸ்ட்ட்ட்ட்டு

மணிகண்டன் said...

பயிற்சில கலந்துகிட்டு உடம்பெல்லாம் வலிக்குது..எதாவது மசாஜ் உண்டா:)))

Syam said...

எங்க மேல நம்பிக்கை வெச்சு வாழ்த்து சொன்ன மை பிரண்டுக்கு நன்றி தெரிவித்து பதிவ படிக்க போறேன் :-)

Syam said...

//40 கிலோ உச்சவரம்பு அதிகரிக்கப்பட்டால் இன்னும் நிறைய பேரீச்சம் பழம் கிடைக்கும் என வீரர்களின் சிறப்பு ஆலோசனைக் கூட்டத்தில் பேசப்பட்டது//

அதுக்குதேன் போராடி பாத்தேம்...ஒன்னியும் நடக்கல :-)

Syam said...

//கொலச்சாமி கோயில்ல்ல பொங்கல் வைக்க அம்மிணிகள் சகிதமாக் கடந்த வாரம் பாண்டிச்சேரி பார்டர் வரை //

அங்கன தான கோட்டர் கம்மியான ரேட்டுல கிடைக்கும்..கொலச்சாமிக்கு கோட்டர் வெச்சு படைக்கலனா சாமி குத்தம் ஆயிடும் :-)

Syam said...

//ஒருத்தன் ஓடி ஓடி வந்து என் மொகரையப் பேக்கறேன் பாருன்னு வீசுறான்//

அவன ஏன் எதுக்குனு கேக்கலாமுனு போனா கூட பத்து பசங்க தடிமாடு மாதிரி கிரவுண்டயே ரவுண்டு கட்டி நிக்கறானுக.... :-)

கோபிநாத் said...

BEST...BEST...ALL THE BEST....

தேவ் | Dev said...

//தகவலும் போட்டோவும் அறுமை

வெற்றி இந்தியாவிற்கே//

உங்களை மாதிரி ரசிகர்களின் ஆதரவை நம்பித் தான் நாங்க களம் இறங்குகிறோம்..

தேவ் | Dev said...

//போர்வாள் தேவ் அவர்களே...

போருக்கு போகுமுன் வீரர்களுக்கு உற்சாகப் பானமான 'அக்கா மாலா' விற்கல்லவா நான் விளம்பரம் கொடுத்தேன்.. நீங்கள் என்னடாவென்றால் ஏதோ பெயர் தெரியாத ஒரு பானத்திற்கு விளம்பரம் கொடுத்திருக்கிறீர்கள். இதற்கு அரண்மனை தீர்ப்பின் என்ன தண்டனை தெரியுமா??? //

போட்டி நம் நெல்லைச் சீமையில் நடந்திருந்தால் பாளையக்காரர்களின் பேரதரவோடு நாம் அக்காமாலாவை நம் அபிசியல் பானமாக அறிவித்திருக்கலாம்... பானச் செலவு பாளையத்துக்காரர்களைச் சார்ந்திருக்கும்.. ஆனா நம் செல்வதோ கரீபிய தேசம்.. பைரட்ஸ் நிரம்பிய ஒரு தேசம் அங்கு என்னக் கிடைக்குமோ அதை அறிவிப்பது தானடா நம் ராஜதந்திரம்.. அவசரத்தில் அண்ணனை என்னவெல்லாமோ பேசி விட்டாயே கண்மணி... பொறுமையடா.. பொறுமை..

தேவ் | Dev said...

//அந்த கவிரிச்சிப் படத்தை பார்த்து விட்டு ஆங்கிலப் படத்தயாரிபாளர்கள்(ஏஞ்சலினாவுடன் சோடிபோட்டு ஆட) ஒற்றைக் குத்துப் பாட்டுக்கு கால்சீட் கேட்டு வரும் அபாயம் உள்ளது, கணக்குப்புள்ள கொத்ஸ் ரெடியா?
கைப்பூ.. வெளிய வந்த நீ கைமா தான் ஒழுங்கா ஒட்டகத்துக்குப் பின்னாலயே ஒளிஞ்சிக்கப்பூ...//

இருக்க சோலியே சமாளிக்க முடியல்லன்னு பொலம்புறார் நீ வேற ஏஞ்சலினா சோலி... காஞ்சனா மாலி நல்லாக் கிளப்புறீயே பீதிய..

தேவ் | Dev said...

//ஏண்டா பயிற்சிக்கு வரலை?னு கேட்டதுக்கு வீட்டுல அப்பத்தாவுக்கு உடம்பு சரியில்லைனு சொல்லி சோகமா இருந்தாங்களே பயபுள்ளக அப்போ அது உண்மையில்லையா?//

அப்பத்தா வீட்டுல்ல இருந்த அண்டாவை ஆட்டயப் போட்டுத் தான் பயபுள்ளக பந்துக்கும் பேட்டுக்கும் வீரர்களின் உற்சாகப் பானத்திற்கும் துட்டு தேத்திக் கொடுத்தாயங்க... நீ என்ன இப்படிக் கேக்குற...

தேவ் | Dev said...

//நல்லாப் பாரும் ஓய்..அது பிராண்ட் அம்பாசிடரா? இல்லை பிராண்டி அம்பாசிடரானு?//

வெறும் பிராண்டி மட்டுமான்னு பயபுள்ளகப் பொங்கிரப் போறாங்கப்பூ.. அம்பாசிடர்.. பியட்.. மாருதி.. போர்ட்...ஹுண்டாய்... எல்லாம் உண்டுப்பா..

//மக்கா ஏரேப்பிளேன்ல எனக்கு ஜன்னல் சீட்டு ஆமா...!//

மாப்பூ.. நீ புட் போர்ட்ல்ல உக்காந்து காலாட்டிகிட்டே வா மாப்பூ... பிளைட்டே நம்மளது தான்..

தேவ் | Dev said...

//என்னத்த பயிற்சி எடுத்து, என்னத்த விருந்து சாப்பிட்டு...

கண்டனங்கள் குவிகிறதென்றால் அது என்னுடைய சொத்து. பேரீச்சம்பழம் எனக்கே வர வேண்டும். இல்லையென்றால் அடுத்த விவகாரமாக பேரீச்சம்பழ ஊழல் கிளறப்படும். //


சாரே.. எங்க கேப்டன் உங்க கடிதப் பதிவுல்ல உங்களுக்காக எவ்வளவு பரிஞ்சுப் பேசியிருக்கார்.. நீங்க என்னடான்னு ஊழல்... அது இதுன்னு பேசிகிட்டு என்ன இது சின்னப்பிள்ளத்தனமால்ல இருக்கு...வந்து உங்க பங்குக்கு ரெண்டு பேரீச்சம் பழ்ம தின்னுட்டு மீனைக் கொத்துவீங்களா அதை விட்டுப்போட்டு என்ன வெட்டிப் பேச்சு..

தேவ் | Dev said...

//ஆ.. போனாப்போவுது.. சொல்ல உட்டுட்டேன் ..

ஆல் த பெஸ்ஸ்ஸ்ட்ட்ட்ட்டு

//

இதை இதைத் தான் எதிர்பாக்குறோம்ய்யா உங்ககிட்ட..:-)

தேவ் | Dev said...

//பயிற்சில கலந்துகிட்டு உடம்பெல்லாம் வலிக்குது..எதாவது மசாஜ் உண்டா:)))

//
ஆகா இப்படி தேவையான விசயத்தை எடுத்துச் சொல்ல நம்ம ம்ணியை விட்டா வேறு ஆள் கிடைக்குமா....ம்ம்ம்ம் நல்ல ரோசனை..கேப்டன் கேப்டன் சொல்லுங்க கேப்டன்..

தேவ் | Dev said...

//எங்க மேல நம்பிக்கை வெச்சு வாழ்த்து சொன்ன மை பிரண்டுக்கு நன்றி தெரிவித்து பதிவ படிக்க போறேன் :-) //
நாட்டாமை நன்றி சொல்லுறார் கண்ணு... :-)

தேவ் | Dev said...

//எங்க மேல நம்பிக்கை வெச்சு வாழ்த்து சொன்ன மை பிரண்டுக்கு நன்றி தெரிவித்து பதிவ படிக்க போறேன் :-) //
நாட்டாமை நன்றி சொல்லுறார் கண்ணு... :-)

இராம் said...

//நம்ம பாண்டியும் ராயல் ராமும் மன்றத்தின் மகளிர் பிரிவு வராத துக்கத்தில் அன்றைய பயிற்சிகளில் சரி வர ஈடுபடவே இல்லை.. என நம்பத் தகுந்த வட்டாரங்கள் வாய் திறந்தன..//

அண்ணே அந்த சோகத்தை நினைச்சு இன்னும் தாங்கலைண்ணே :( என்னையறியமாலே நான் அழுததை விட நம்ம பாண்டிண்ணே தான் ரொம்பவே குலுங்கி குலுங்கி அழுதுட்டாரு :)

தேவ் | Dev said...

//40 கிலோ உச்சவரம்பு அதிகரிக்கப்பட்டால் இன்னும் நிறைய பேரீச்சம் பழம் கிடைக்கும் என வீரர்களின் சிறப்பு ஆலோசனைக் கூட்டத்தில் பேசப்பட்டது//

அதுக்குதேன் போராடி பாத்தேம்...ஒன்னியும் நடக்கல :-)//

நாட்டாமை மேட்ச் முடிஞ்சப் பின்னாலச் சொல்ல வேண்டியதை எல்லாம் முன்னாடியே சொல்லாதீங்க...

தேவ் | Dev said...

//அவன ஏன் எதுக்குனு கேக்கலாமுனு போனா கூட பத்து பசங்க தடிமாடு மாதிரி கிரவுண்டயே ரவுண்டு கட்டி நிக்கறானுக.... :-) //

அவன் மேல நம்மூர் பஞ்சாயத்தில்ல பிராது கொடுத்தாச்சிங்க நாட்டாமை... சொம்பும் கையுமாக் கிளம்புங்க ஒரு வழி பண்ணிருவோம் அவனை...

தேவ் | Dev said...

//BEST...BEST...ALL THE BEST.... //

டாங்க் யூ கோபி..மேட்ச் பாக்க கண்டிப்பா வந்துருங்க...DONT MISS IT

தேவ் | Dev said...

/அண்ணே அந்த சோகத்தை நினைச்சு இன்னும் தாங்கலைண்ணே :( என்னையறியமாலே நான் அழுததை விட நம்ம பாண்டிண்ணே தான் ரொம்பவே குலுங்கி குலுங்கி அழுதுட்டாரு :) //

அட ஆமாப்பா.. பாண்டி அழுத அழுகையிலே பேட்டையிலே ஜொள்ளை விட கண்ணீர் அதிகமாப் போயிருச்சாமே... அது மட்டுமா..பாண்டி பேட்ல்ல தார் பூசியும்.. பந்துல்ல சிறுசா கருப்பு பொட்டு வச்சும் இல்ல தன் துக்கத்தை நாட்டுக்கே அறிவிச்சுருக்கார்.. வெஸ்ட் இன்டீஸ் புள்ளக எப்படியும் உங்க ஆட்டத்துல்ல மயங்கிரும்ன்னு எடுத்துச் சொல்லி இல்ல அவரைத் தேத்தி வச்சிருக்கேன்..

tamil10