Thursday, March 29, 2007

டீச்சருக்கே பரீட்சை...இந்தாங்க கேள்வித் தாள்!!!

ஏலேய் தேவ்.. நீயும் தான் ஒரு 60 - 70 பதிவுப் போட்டுருப்ப... மொத்தமா எத்தனைப் பின்னூட்டம் வாங்கியிருப்ப... என்னையப் பார்த்தல்ல.. 500 தாண்டிப் போயிட்டுருக்கோம்... கொஞ்சம் தள்ளி நில்லு.. ஸ்டார் ரிப்போர்ட்டர்ன்னு தனக்குத் தானே அறிவித்துக் கொண்ட மனச்சாட்சி எகத்தாளத்தில் குதித்தது...
அடேய் ஸ்டார் எல்லாம் உனக்குப் பேட்டிக் கொடுத்தப் புண்ணியாவான்கள் தான் நீ வெறும் ரிப்போர்ட்டர்.. ஆனா நீ என்னமோ ஓவர் பில்டப்புல்ல திரியற.. 500 வந்தாலும் நீ கேட்டக் கேள்வி நல்லாயிருக்குன்னு ஒரு 4 பேர் சொல்லியிருப்பாங்களா.. ம்ஹும் இப்படி எல்லாம் கேக்க நினைச்சேன்.. உச்சியிலே உக்காந்து உடுக்கு அடிக்கிற.. வுழுந்தா தெரியும்டீ சேதின்னு சும்மா இருந்தேன்..

அப்புறம் என்ன எதோ தீவிரமாச் சிந்திச்சான்.. பையக் கையிலே எதோ கொஸ்டீன் பேப்பர் மாதிரி தெரிஞ்சது.. நியுசிலாந்துக்கு எந்தப் பஸ் போகும்ன்னு கேட்டான்?

என்ன லந்தான்னு கேட்டதுக்கு..உனக்குத் தெரியல்லன்னா விடு... நான் கால் டாக்ஸி புடிச்சு போயிக்குறேன்னு போயிகிட்டே இருந்தான்..

அனேகமா அந்த கொஸ்டீன் பேப்பர் துளசி டீச்சருக்குத் தான்னு நினைக்கிறேன்..

சுமார் 500 பதிவுகளைத் தாண்டியும் ஆர்ப்பாட்டமின்றி அமைதியாய் தன் பதிவுலகப் பயணத்தைத் தொடர்ந்து கொண்டிருக்கும் மதிப்புக்கும் பாசத்துக்குமுரிய நம்ம துளசி டீச்சரை பேட்டி எடுக்க முடிவு பண்ணி நம்ம நட்சத்திர ரிப்போர்ட்டர் களத்தில் இறங்கியிருக்கான்

இனி ஓவர் டூ துளசி டீச்சர் அன்ட் ஸ்டார் ரிப்போர்ட்டர்


பதிவுலகப் பதிவர்கள் சார்பா உங்களுக்குப் பட்டம் கொடுத்தா என்னப்
பட்டம் கொடுக்கலாம்ன்னு நினைக்கிறீங்க?


அப்படிக்கேளு என் ராசா! என்னோட வியர்டூலே சொன்னது யாருக்காவது(??)ஞாபகம்
இருக்கா? டாக்குட்டர் பட்டம் கொடுத்துருங்கையா. என்கிட்டே ஸ்டெத்கூட இருக்கு!!!!

பதிவுப் போடுவதற்கு அவசியம் நீங்க நினைக்கிறது என்ன?

இந்தக் கேள்வி எனக்குதானே?
அவசியமுன்னு பார்த்தா என்னுடைய கோடானுகோடி(!!!) வாசகப்பெருமக்கள்
ஏமாந்துருவாங்கன்ற நினைப்பைத் தாங்கிக்க முடியாமத்தான் எழுதறேன்னு
சொல்லலாமா? ( அடச்சீ, ச்சும்மாக்கிட. அது ஒண்ணுமில்லைப்பா.இந்த மனசாட்சிவந்து
பிறாண்டிக்கிட்டு நிக்குது)
தேவ்........... அது ஒண்ணுமில்லை. ச்சும்மா இருக்கமுடியாம எதை எழுதுனாலும் தொடர்ன்னு
ஆரம்பிச்சுக்கறதாலே தொடர்ந்து எழுதத்தானே வேணும்? இப்படித் 'தொடரும் தொடரும்'ன்னு
போட்டே ஒரு அவசியத்தை உண்டாக்கிக்கிறதுதான் உண்மை!

பதிவுலகம் பக்கம் வந்திருக்கும் மூத்த பதிவர்களுக்கும் இளம் பதிவர்களூக்கும்
உறவு நிலை எப்படி இருக்கிரதுன்னு நீங்க நினைக்கிறீங்க? எப்படி இருந்தா
நல்லா இருக்கும்ங்கறது உங்க கருத்து?


உறவு நிலை நல்லாத்தான் இருக்கு. இதுலே எதுக்கு மூத்த, இளைய ன்னு வயசை நுழைக்கணும்?
எல்லாம் அக்கினிக்குஞ்சுங்கதான். எரியுற கொள்ளியிலே எந்தக் கொள்ளி நல்ல கொள்ளி?


உண்மை பெயர் குறிப்பிட்டு எழுதும் சில பதிவர்களில் நீங்களும் ஒருத்தர்... சொந்தப் பெயரில்
பதிவு எழுதுவது வசதியா? இல்லை அதனால் தொல்லையா?


சொந்தப்பெயரில் எழுதுறது ஒரு விதத்தில் வசதிதான். உண்மைக்கு மாறான விஷயத்தை எழுதவோ,
அடுத்தவுங்களைப் பத்திக் கன்னாபின்னான்னு எழுதவோ மனசு வராது. இதுவே ஒரு நல்ல செய்கை. இல்லையா?

தமிழ் பதிவுகள் உங்கப் பார்வையில் ஆரோக்கியமான வளர்ச்சி அடைந்திருக்கா இல்லை
பதிவர்களின் எண்ணிக்கை மட்டும் கூடியிருக்கா? IS IT JUST QUANTIFIED GROWTH
OR QUALIFIED GROWTH?


எழுதணுமுன்ற ஆர்வம் மேலிட்டு, சிலர் நிறையப் பதிவுகளை வச்சுருக்காங்க. நம்ம யாருக்குமே எழுத்துன்றது
தொழில் கிடையாது பாருங்க. புவ்வாவுக்காக வேற வேலை செஞ்சுக்கிட்டு அங்கே இங்கேன்னு நேரம் திருடிக்கிட்டு
எழுதறோம். சில பதிவுகளைப் பார்த்தாத் தொடக்கத்துலே இருந்த ஜோர் இருக்காது. அதுனாலே பதிவுகளுக்கும்
நாமே ஒரு கட்டுப்பாடு வச்சுக்கிட்டா......... அது நிறையப்பேரால் படிக்கப்படும் வாய்ப்பு இருக்குமுன்னு நான்
நினைக்கறேன். இப்பக் கணக்குக்கு 1800 போல வருது. படிக்க நேரம்?

பெண் பதிவர்களுக்கு நகைச்சுவை உணர்வு கம்மின்னு சொன்னா நீங்க ஒத்துக்குவீங்களா?

நான் இருக்கட்டும், உண்மைக்குமே நீங்க இதை ஒத்துக்கறீங்களா? இந்த மாதிரி புரளியை
யார் கிளப்பி விடுறாங்க?

கிசுகிசு பதிவுகள் அவ்சியமா? அதுல்ல உங்களைப் பற்றி செய்தி வந்தா ரசிப்பீங்களா?

வெகுஜனப் பத்திரிக்கைகள் காசு பண்ணறதுக்காக இப்படிக் கிசுகிசுக்களை அள்ளி வீசிக்கிட்டு இருக்கு. இந்தக்
கேவலம் எல்லாம் நமக்கு வேணுமா? மாற்று ஊடகம் வேணுமுன்னுதானே பதிவு எழுதவோ, பதிவுகளைப் படிக்கவோ வர்றோம்?
என்னப் பத்தின கிசுகிசு வந்தா( வந்தா என்ன.வந்தா? அதான் நாலைஞ்சுமுறை வந்துட்டதே) அடப் போங்கடான்னுட்டு
போய்க்கிட்டே இருக்கறதுதான். எனக்கு இதைப் பத்திக் கவலைப்பட நேரம் இல்லை. பதிவு எழுதணும் எனக்கு........ ஆமா.

எனக்குத் தெரிஞ்ச வரை உங்கள் பதிவுகளில் ஆணாதிக்க எதிர்ப்பு பார்க்க கிடைக்காது...
( தவறாக இருப்பின் திருத்துங்கள்) உங்கள் ஆண் சமுதாயத்தின் மீது எந்த விதமான
வருத்தமும் கிடையாதா?


எதுக்குப்பா ஆணாதிக்கம், பெண்ணாதிக்கமுன்னு சர்ச்சையை வளர்த்துக்கிட்டு நேரம் போக்கணும்? அந்த
நேரத்தை நம்மோட அறிவை வளர்க்கரதுக்கும்( பதிவுகள் படிச்சான்னு கேக்காதீங்க) ஆக்க பூர்வமா செய்ய
வேண்டியதைச் செஞ்சுக்கிட்டும் இருந்தா எந்த ஆதிக்கமும் நம்மைக் கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு
வளர்ந்துறமாட்டோமா?

ஆண் சமுதாயத்துமேலே எனக்கிருக்கற ஒரே ஒரு வருத்தம் என்னன்னா............ஒரு சிலர்( கவனிங்க ஒரு சிலர்) பெண்ணைத் திட்டணுமுன்னா அவள் என்ன செஞ்சாளோ அந்த செய்கையை விட்டுட்டு, அவளுடைய ஒழுக்கத்தை கேவலமாப்பேசி சேறு எறியறது. இது தனக்கே அசிங்கமுன்னு எப்பத்தான் உணருவாங்களோ?

பதிவுகள் பொருத்த வரை நீங்க ஒரு VORACIOUS READER எந்த விதமானப் பதிவுகள்
தேவை இல்லாதது அப்படின்னு நினைக்கிறீங்க? எந்த விதமானப் பதிவுகள் அதிகம்
வரணும்ன்னு நினைக்கிறீங்க?


என்னைப் பொறுத்தவரை ஜாதி, மதப் பதிவுகள் தேவையே இல்லை. பதிவு எழுதி ஜாதியை ஒழிக்கவும் முடியாது. ஜாதி இல்லாத சமுதாயம் உருவாக எதாவது செய்ய முடியுமுன்னா அதைத் தன்னோட வாழ்க்கையில் கடைப்பிடிச்சாப் போதும். சிலர் குதிரைக்கு கண்பட்டை போட்டுருக்கறமாதிரி விடாம எழுதிக்கிட்டே இருக்காங்க. இதையெல்லாம் யாராவது படிக்கிறாங்களான்னு அவுங்களுக்கே தெரியணும்.

மத்தபடி பதிவுகள் எதைப் பத்திவேணுமுன்னாலும் இருக்கட்டுமே. அவுங்கவுங்களுக்குப் பிடிச்சதைப் படிச்சுக்கிட்டுப் போகவேண்டியதுதான்.

பதிவுகள் போடுறது கிட்டத் தட்ட ஒரு ADDICTION மாதிரி ஆகிட்டு வருது... இது நல்ல விஷ்யமா?

இல்லவே இல்லை. கடைசியில் இதுக்கு ஒரு 'ரீஹேப் செண்ட்டர்' திறக்கும்படியா ஆகப்போகுது:-))))

பின்னூட்ட நாயகின்னு பெயர் வாங்குனவங்க நீங்க.. சொல்லுங்க இந்த பின்னூட்ட விளையாட்டுக்களை
நிறைய பேர் எதிர்க்கிறாங்களே.. அதனால் அப்படி என்ன ஆக்கபூர்வமான விழைவு
இருக்குன்னுச் சொல்லுங்க?


பின்னூட்டங்களை வச்சு ஒரு பதிவு நல்லதா, சிறந்ததான்னு சொல்ல முடியாதுன்னு ஆரம்பத்துலே இருந்தே
நான் சொல்லிக்கிட்டு வர்றேன். 'நாளைக்கு திங்கக்கிழமை'ன்னு ஒரு வரியிலே பதிவு போட்டுப்பாருங்க. அதுக்கு ஒரு அம்பது பின்னூட்டம் வரும். பின்னூட்டங்கறது நம்ம வீட்டுக்கு வர்ற விருந்தாளிங்க மாதிரி. வர்றவங்களை வாங்கன்னு சொல்றது ஒரு மரியாதைக்காக. வீட்டுவாசலிலே ஒவ்வொருத்தரா வந்து பத்துப்பேர் சேர்ந்தப்புறம்தான் வாங்கன்னு எல்லாரையும் கூப்புடுவோமா? இதுலே விளையாட்டு எங்கெ வந்துச்சு? எதிர்க்கறது அவுங்கவுங்க விருப்பம்.
வள்ளுவரே விருந்து, அனிச்சம்பூன்னு எழுதி வச்சுட்டார் இல்லையா?

ஆங்கிலப் பதிவுகளும் படிக்கும் பழக்கமுடையவ்ர் நீங்கள்.. தமிழ் பதிவுகளுக்கும்
நம்ம இந்திய மக்கள் இடும் ஆங்கிலப் பதிவுகளுக்கும் என்ன வேற்றுமை காணுகிறீர்கள்?


ஆங்கிலப்பதிவுகள் படிக்கறதை நிறுத்தி ரொம்ப நாளாச்சுங்க. எல்லாம் கனி இருக்கக் காயாப் போச்சு.அதனாலே
படிக்காம அதைப் பத்திச் சொல்றது நியாயம் இல்லை பாருங்க.

மூத்தப் பதிவரான நீங்க நம் தமிழ் பதிவர்களின் தனிமனிதத் தாக்குதல்கள்
தவிர்க்க ஒரு யோசனைச் சொல்லுங்களேன்?


தாக்கணுமுன்னு வந்தவுங்க அடுத்தவுங்க யோசனையைக் கேட்டுக்கிட்டு இருப்பாங்களா?
திருடனாப் பார்த்துத் திருந்தணும்.

கடைசியா.. ஒரு கவிதைச் சொல்லுங்களேன்... சும்மா நம்ம கச்சேரிக்காக முயலுங்களேன்

இப்படி மாட்டிவிடப் பாக்கறிங்களே! கவிதைக்கும் எனக்கும் காத தூரம். அனாவசியமா என்னைத்
'திருட' வச்சீங்கன்னா அந்தப் பாவம் உங்களைச் சும்மா விடாது:-)))))

90 comments:

.:: மை ஃபிரண்ட் ::. said...

துளசியக்கா போஸ்ட்டுலையும் நாந்தான் ஃபர்ஸ்ட்டு.. இதுல யாரும் பொறாமை படக்கூடாது.. சொல்லிட்டேன்.. உங்களுக்கு 100, 200, 300, ..... ன்ற இடம் இருக்கு. ஓகேவா?

.:: மை ஃபிரண்ட் ::. said...

ஸ்டார் வீக்குல மூனாவது ஸ்டாரா செலெக்ட்டு ஆகியிருக்கும் துளசி டீச்சருக்கு வாழ்த்துக்கள். :-D

.:: மை ஃபிரண்ட் ::. said...

//தமிழ் பதிவுகள் உங்கப் பார்வையில் ஆரோக்கியமான வளர்ச்சி அடைந்திருக்கா இல்லை
பதிவர்களின் எண்ணிக்கை மட்டும் கூடியிருக்கா? IS IT JUST QUANTIFIED GROWTH
OR QUALIFIED GROWTH?//

இங்க பார்ட்டா... துளசி டீச்சருக்கு தமிழ் தெரியாதுன்னு நெனச்சு இங்கிலீஸுல கேக்குறீயா இல்லை.. இங்கிலீசு புரியாத டீச்சருன்னு தமிழ்ல சொல்லிட்டு ட்ரான்ஸ்லேட் பன்றியா மனசாட்சீ??

.:: மை ஃபிரண்ட் ::. said...

//பின்னூட்டங்கறது நம்ம வீட்டுக்கு வர்ற விருந்தாளிங்க மாதிரி. வர்றவங்களை வாங்கன்னு சொல்றது ஒரு மரியாதைக்காக. //

ஆஹா.. டீச்சர் பர்மிஷன் கொடுத்தாச்சு கும்பி... மன்னிக்கவும் கும்மியடிக்க..

ஆனா, முதல் 50 பதிவுக்கேத்த பின்னூட்டம்.. அப்புறம்தான் ஆட்டம் ஸ்ட்டார்ட்..

தேவண்ணே, கணக்கு வச்சி பிறகு கமேண்ட் மோடரேஷனை தூக்கிடுங்க.. ;-)

இராம் said...

//பதிவுலகம் பக்கம் வந்திருக்கும் மூத்த பதிவர்களுக்கும் இளம் பதிவர்களூக்கும்
உறவு நிலை எப்படி இருக்கிரதுன்னு நீங்க நினைக்கிறீங்க? எப்படி இருந்தா
நல்லா இருக்கும்ங்கறது உங்க கருத்து?

உறவு நிலை நல்லாத்தான் இருக்கு. இதுலே எதுக்கு மூத்த, இளைய ன்னு வயசை நுழைக்கணும்?
எல்லாம் அக்கினிக்குஞ்சுங்கதான். எரியுற கொள்ளியிலே எந்தக் கொள்ளி நல்ல கொள்ளி?
///

சூப்பர் டீச்சர்.... ரொம்பவே ரசிச்சேன் இந்த கேள்வியையும் பதிலையும் :)

அபி அப்பா said...

//சிலர் குதிரைக்கு கண்பட்டை போட்டுருக்கறமாதிரி விடாம எழுதிக்கிட்டே இருக்காங்க.//

நம்ம துளசி டீச்சர் பேட்டிக்கு இன்னும் கீதா மேடம் வரலையே? எங்க போயிட்டாங்க?:-))

அபி அப்பா said...

//எல்லாம் அக்கினிக்குஞ்சுங்கதான். எரியுற கொள்ளியிலே எந்தக் கொள்ளி நல்ல கொள்ளி?//

சரி! "உள்குத்து திலகம்"ன்னு பட்டம் குடுக்கலாமா?:-))

அபி அப்பா said...

//சொந்தப்பெயரில் எழுதுறது ஒரு விதத்தில் வசதிதான். உண்மைக்கு மாறான விஷயத்தை எழுதவோ,
அடுத்தவுங்களைப் பத்திக் கன்னாபின்னான்னு எழுதவோ மனசு வராது. இதுவே ஒரு நல்ல செய்கை. இல்லையா//

சரியான அளவில் வீசப்பட்ட பந்து. இதோ...இதோ....துளசிடீச்சர் ஸிக்சர்:-))

.:: மை ஃபிரண்ட் ::. said...

நம்ம ஸ்டாருக்கு ஒரு விளம்பராம்:

http://www.orkut.com/Community.aspx?cmm=21485229

ஃப்ரீயா இருந்தா இங்கேயும் வந்து கொஞ்சம் கும்பி(மி)ட்டு போகவும். ;-)

அபி அப்பா said...

//சுமார் 500 பதிவுகளைத் தாண்டியும் ஆர்ப்பாட்டமின்றி அமைதியாய் //

யோவ் தேவு! 500 பின்னூட்டத்துக்கு இன்னா ஆட்டம் ஆடிட்ட...சரியான ஆள்யா உன் மனசாட்சி:-))

இலவசக்கொத்தனார் said...

பதில்களை மாற்றினாரா ஸ்டார் ரிப்போர்ட்டர்? வலையுலகில் பரபரப்பு!!

சமீபத்தில் ஸ்டார் ரிப்போர்ட்டர் பலரை பேட்டி எடுத்துப் போடுவது அனைவரும் அறிந்ததே. அந்த வரிசையில் சமீபத்தில் வலையுலகின் மாதாமகி (பிதாமகர் மாதிரிங்க) துளசி அவர்களின் பேட்டி வந்தது. அந்த பதில்களினால் சந்தேகம் அடைந்த நம் நிருபர்கள் விசாரித்ததில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளி வந்திருக்கின்றன. தன் தேவைக்கு ஏற்ப பதில்களை மாற்றி போட்டுள்ளார் இந்த ரிப்போர்டர். இதனால் மனவருத்தம் அடைந்த டீச்சர் இந்தப் பக்கமே வரவில்லை. இது பற்றி ரிப்போர்ட்டர் தரப்பில் யாரும் பதில் தர முன் வரவில்லை. ரிப்போர்ட்டர் ஏன் இப்படிச் செய்தார் என தமிழ்மணத்தில் என்கொயரி நடத்தத் திட்டமிட்டிருப்பதாகத் தெரிகிறது.


துளசி் டீச்சர் அளித்த ஒரிஜினல் பதில்கள் இப்பொழுது நம் கையில். அது இதோ உங்கள் பார்வைக்கு. நீங்களே சொல்லுங்க. எது டீச்சர் எழுதின மாதிரி இருக்கு?


1. அதான் டீச்சர் பட்டம் குடுத்தாச்சே. என்னதான் சொல்லுங்க, கையில் ஸ்டெத் இருந்தாக்கூட டாக்டர் பட்டத்தை விட டீச்சர் பட்டம்தான் நல்லா இருக்கு. துளசி டீச்சர் அப்படின்னு சொல்ற அன்னியோன்னியம் டாக்டர் துளசில இல்லை பாருங்க.

2. ஒரு ப்ளாக்தான். என்ன இது கிறுக்குப் பதிவு எல்லாம் போட்டு கேட்கற கேள்வியும் அப்படியே இருக்கு.

3. உறவு நிலை எல்லாம் நல்லாத்தேன் இருக்கு. சில பெருசுங்க வந்து நம்மை (!) மாதிரி இளவயசு பசங்களாட்டும் குதிக்குது பாரு. அதுலயே தெரியலை.

4. பெயர் மேல என்ன இது அப்ஸ்ஷன்? சொந்த பெயர் இருக்கட்டும் வாடகைப் பெயர் இருக்கட்டும் இல்லை பெயரே இல்லாம வரட்டும். வள்ளுவர் கூட எப்பொருள் யார் யார் வாய் கேட்பினும் அப்படின்னுதான் சொல்லி இருக்காரு. அவர் பெயரைப் பார்த்துன்னு சொல்லலை.

5. அளவு அதிகம் ஆகுது. அதுல தரமான பதிவுகளின் சதவிகிதம் அதேவாத்தான் இருக்கு. அதனால அளவு கூடக் கூட தரமான பதிவுகளின் எண்ணிக்கையும் கூடுது.

6. ஏம்பா தேவு, உனக்கு 500 பின்னூட்டம் வரணமுன்னா இப்படி என்னையா மாட்டி விடறது. நம்மாளுங்க வந்தா நீயும் அந்த கொத்ஸ் புலி ரேஞ்சுக்குப் பம்ம வேண்டியது இருக்கும். தெரியும்மில்ல.

7. ஆமாம் எல்லார் கிட்டயும் இதே மாதிரி கேள்வி கேட்கறியே. ஒரு வேளை நீதான் அந்த சாம்பு, கழுகு வெரைய்ட்டியா? நம்மள பத்தி கூட கன்னாபின்னான்னு எழுதிட்டயே வாத்தியாரே. உனுக்கே நாயாமாக்கீதா?

8. //தவறாக இருப்பின் திருத்துங்கள்// நக்கல்தானே. நான் பாட்டுக்கு என்னமோ கோயில் குளமின்னு எழுதிக்கிட்டு இருக்கேன். என்னைப் போயி மாட்டி விடற பாத்தியா. அதெல்லாம் இருக்கட்டும். இங்க இவ்வளவு பேசற நீயி அன்னைக்கு உங்க தலைவர் அங்க கத்தி சுழட்டும் போது காணாமப் போயிட்டயே. அது ஏன்?

9. தேவை இல்லைன்னு சொல்ல நாம யாரு, 'தேவை' இப்படி பக்கத்தில் வெச்சுக்கிட்டே இல்லைன்னு சொல்ல முடியுமா? நமக்கு வேணுங்கிறதை எடுத்துக்கிட்டு போயிடணும். நமக்கு பிடிக்காத இடத்தில் நுழைஞ்சா நமக்குத்தான் மனக்கஷ்டம். மத்தபடி எனக்குப் பிடிச்சது நகைச்சுவை, பயணக்கட்டுரை, தெரியாத தகவல்கள் இப்படித்தான்.

10. என்னைக் கேட்டா நல்லது இல்லைதான்னு சொல்லுவேன். ஆனா கோபாலைக் கேட்டா நல்லதுன்னு சொல்லுவாரு. நம்ம தொந்தரவு கம்மி பாருங்க. ஆனா அந்த கோபாலக்கிருஷ்ணந்தான் முறைக்கறான். அவனுக்கு எதுவும் டயம்படி நடக்கறதில்லன்னு கடுப்பு.

11. பின்னூட்டத்தை ஏன் எதிர்க்கணமுன்னு தெரியலை. அதில் மகிழ்ச்சி அடையறவங்க அடைஞ்சுட்டுப் போறாங்க. அதுனால நல்ல பதிவுகள் வெளிய வரதில்லை என்பதில் எனக்கு உடன்படிக்கை இல்லை. பின்னூட்ட விளையாட்டு நடக்கணமுன்னா நடந்துகிட்டேதான் இருக்கும். உங்க 500ஏ சாட்சியா இருக்கே.

12. // தமிழ் பதிவுகளுக்கும்
நம்ம இந்திய மக்கள் இடும் ஆங்கிலப் பதிவுகளுக்கும் என்ன வேற்றுமை காணுகிறீர்கள்?//

அது ஆங்கிலத்தில் இருக்கு. இது தமிழில். இதை விட என்னங்க வேற்றுமை வேணும்? :) உண்மையில் சொல்லப் போனா இங்க இருக்கிற அன்னியோன்னியம் அங்க இல்லை. ஆனா அதே மாதிரி இங்க போடற ஜாதி மதச் சண்டைகளும் அங்க இல்லை.

13. அதை இக்னோர் செய்யணும். நமக்குப் பிடிக்காதவங்களைப் பத்தி இருந்தாக்கூட அதை என்கரேஜ் பண்ணக்கூடாது. நாளை நம்ம பேரிலும் அந்த மாதிரி வரும் என்பது ஞாபகத்தில் இருக்கணும்.

14. யப்பா சாமி. இது மட்டும் வேண்டாம். இந்த விஷயத்தில் நான் கொத்ஸ் கட்சி. கவுஜன்னாலே....ஹச்சூ...ஹச்சூ..

மு.கார்த்திகேயன் said...

கேள்விபதிலெல்லாம் ரொம்ப நல்ல இருக்கு தேவ்

தேவ் | Dev said...

மைபிரெண்ட், அபி அப்பா, ராம், கார்த்திக் எல்லோருக்கும் மனமார்ந்த நன்றிகள்

தேவ் | Dev said...

தலைவா எழுதியது நீங்கள் தானா? நம்ப முடியவில்லை..... தன் கையே தனக்கு தலைவாரி விடலாம்.. குனிந்து காலை வருமா? நம் மனித இனம் காணாமுடியாத நிகழ்வு அல்லவா இது.. இந்தப் பின்னூட்டத்திற்கு பின் புலமாய் இருப்பது கயமைக்கு எதிரானக் கும்பல்.. பின்னூட்டங்களின் எழுச்சியில் தங்களுக்கு பேராபத்து ஒளிந்திருக்கிறது என அஞ்சும் நடுங்கும் கும்பல்...

பின்னூட்டங்களின் வாழவதனைத் தன் வாழ்வென எண்ணும் என் தர்மதலைவன் கொத்தனாரின் பெயரில் புகுந்த அந்த வைரஸ் கிருமி யாரோ....நிச்சயம் கண்டுப்பிடிப்பேன் இது பதிவுலகின் பின்னூட்ட புயல் என் தலைவன் மீது ஆணை...

தேவ் | Dev said...

முதலில் இது தலைவன் போட்ட பின்னூட்டமாக இருக்காது என அடித்துச் சொல்லக் காரணம்.. இந்தப் பின்னூட்டத்தின் நீளம் அளந்துப் பார்த்தால்... ஆங்காங்கு செதுக்கிப் பார்த்தால் தெரியும் தனியாகப் பிரித்துப் போட்டால் இந்தப் பின்னூட்டங்கள் மட்டும் 300 தேறும்.. அதற்கு பதிலேனக் கிளம்பி கும்மியாட்டம் ஆரம்பித்தால் கூட்டிக் கழித்துப் பார்த்தால் ஒரு 400 தேறும்... அப்படி பின்னூட்டங்களின் மொத்த எண்ணிக்கை 700.. இப்படி ஒத்தப் பின்னூட்டமாகப் போட்டு பின்னூட்டங்களின் வாழ்வை என் தலைவன் ஒரு போதும் அழிக்க மாட்டார்...

இது ஒன்றே போதும் இது கொத்தனார் பெயரில் புறப்பட்டிருக்கும் கிருமி என்பதை நாடறியச் செய்ய..

நாகை சிவா said...

பதிவுலக லாரா துளசி க்கு ஒரு வணக்கம் வச்சுக்குறேன். அப்பால வரனுங்க....

சந்தோஷ் aka Santhosh said...

டீச்சரம்மா பதில் ரொம்ப சூப்பரு கலக்கிட்டிங்க.

சந்தோஷ் aka Santhosh said...

//துளசியக்கா போஸ்ட்டுலையும் நாந்தான் ஃபர்ஸ்ட்டு.. இதுல யாரும் பொறாமை படக்கூடாது.. சொல்லிட்டேன்.. உங்களுக்கு 100, 200, 300, ..... ன்ற இடம் இருக்கு. ஓகேவா//
இது எல்லாம் ரொம்ப ஓவரு,

சந்தோஷ் aka Santhosh said...

//முதலில் இது தலைவன் போட்ட பின்னூட்டமாக இருக்காது என அடித்துச் சொல்லக் காரணம்..//
ரீப்பீட்டு.

தம்பி said...

டீச்சருக்கு முதல் வணக்கம்.
பதில்கள் சிம்ப்ளி சூப்பர்ப்!

கொத்தனார் பின்னூட்டமும் செம சூப்பர்.

கொத்தனார் எங்கயோ போய்ட்டிங்க போங்க.

தேவ் கலக்குங்க இன்னும்.

இலவசக்கொத்தனார் said...

அந்தப் பின்னூட்டம் நான் போட்டதுதான். உண்மையைச் சொல்வதில் நாம் என்றும் தயங்கியதே இல்லை.

தம்பி தேவு, கொஞ்சம் டென்ஷனாகாமல் யோசித்துப் பார். நானா உன் காலை வாருவேன்? நான் இது செய்தது உன் நன்மைக்கே!! இன்னும் புரியவில்லை என்றால் பொறுத்திரு. நானே வந்து விளக்குகிறேன்.

//தெரியும் தனியாகப் பிரித்துப் போட்டால் இந்தப் பின்னூட்டங்கள் மட்டும் 300 தேறும்..//

இதுவே சில காலம் முன்பென்றால் அப்படித்தான் செய்திருப்பேன். ஆனால் அன்பு தங்கச்சிக்கா சொன்னதை கொஞ்சம் நினைத்துப் பார்.

(தேவ் மனதில் கொசுவர்த்தி சுழல்கிறது. அவுட் ஆப் போகஸில் தங்கச்சிக்கா முகம். குரல் மட்டும் வழக்கம் போல் நன்றாகக் கேட்கிறது. "ஆனா, முதல் 50 பதிவுக்கேத்த பின்னூட்டம்.. அப்புறம்தான் ஆட்டம் ஸ்ட்டார்ட்..". கட் கட் கட். மீண்டும் கொசுவர்த்தி சுழல்கிறது ரிவர்ஸில்)

என்ன தேவ் நினைத்துப் பார்த்தாயா? நம் தங்கச்சிக்கா மேல் நாம் வைத்திருக்கும் அன்பு என்ன? அவர்கள் ஒரு வார்த்தை சொன்னால் நாம் கட்டுப்பட வேண்டாமா? அவர்கள் ஆசை நமக்கு ஆணை அல்லவா? அதனால்தானே நான் அப்படி ஒரு காரியம் செய்ய வேண்டிய நிலமை வந்தது. இல்லையென்றால் பின்னூட்டக் கலைக்கு துரோகம் செய்பவனா நான்? யோசித்துப் பார் தம்பி!! என்னை நம்பு!

ஆகட்டும் 40 அப்புறம் வரும் விளக்கம். இந்த பின்னூட்டம் போட்டது தம்பி நீ அவசரப்பட்டு எதேனும் செய்து கொள்ளக்கூடாதே என்ற கவலையில்தான். தங்கச்சிக்கா, இந்த ஒண்ணை மட்டும் மன்னிச்சு விட்டுடுங்க.

வல்லிசிம்ஹன் said...

துளசி எழுதின பதில்தானா?:-)
இ.கொ. சொல்றதும் சரியத்தான் இருக்கு.
சூப்பர் கேள்விகள். அதி சூப்பர் பதில்கள்.

இலவசக்கொத்தனார் said...

அப்படிச் சொல்லுங்க வல்லியம்மா. இவரு 14 கேள்வி கேட்டாராம். ஆனா அதுல டீச்சர் ஒருதடவை கூட அவங்க அவரைப் பத்தியோ இல்லை இந்த கோ.கி பத்தியோ சொல்லலையாம். நம்பும்படியாவா இருக்கு? ஒரிஜினல் பதிலைப் பாருங்க. பக்காவா இருக்கு.

துளசி கோபால் said...

வாய்யா கொத்ஸ், எங்கி(யா)யோ போயிட்டீர்! வகுப்புலே சேர்ந்ததுக்கு....... இப்ப
நல்ல முன்னேற்றம் இருக்கு. என்னுடைய கல்விமுறையிலே இப்படி ( அற்புதம்/அற்பம்ன்னு எதோ)
ஒண்ணு நடந்து நான் பார்த்ததே இல்லை. அப்படியே புல்லரிச்சுப்போச்சு.

இப்படி மக்களின் அறிவுக்கண் திறக்கும் துளசி டீச்சர் வகுப்புக்கு மாணவர்களே அணி திரண்டு வாரீர்( ச்சும்மா ஒரு ad தான்!)

( யோவ்.......மேனேஜர் எங்கேய்யா தொலைந்தீர்? சீக்கிரம் இப்படி ஒரு விளம்பரம் போடும்)

"இன்று முதல் துளசி டீச்சரின் வகுப்புக் 'கட்டணக்கல்வி'யாகிறது. இன்னும் சில இடங்களே காலி இருப்பதால்
சீக்கிரம் முந்துங்கள் "

( இலவச முதியோர்க் கல்விக்கு வச்சேனே ஆப்பு)

கோபிநாத் said...

டீச்சருக்கே கேள்விகளை கேட்ட எங்கள் அன்பு அண்ணன் தேவ் அவர்களுக்கு என் வாழ்த்துக்கள் ;-))

கொத்தனாரின் அதிரடி பின்னூட்டமும் அட்டகாசம் ;-)))

கோபிநாத் said...

வணக்கம் துளசி டீச்சர் ;-))
டீச்சர் உங்கள் பதில் அனைத்தும் அருமை ;-))

\\உறவு நிலை நல்லாத்தான் இருக்கு. இதுலே எதுக்கு மூத்த, இளைய ன்னு வயசை நுழைக்கணும்?
எல்லாம் அக்கினிக்குஞ்சுங்கதான். எரியுற கொள்ளியிலே எந்தக் கொள்ளி நல்ல கொள்ளி?\\

\\எதுக்குப்பா ஆணாதிக்கம், பெண்ணாதிக்கமுன்னு சர்ச்சையை வளர்த்துக்கிட்டு நேரம் போக்கணும்? அந்த
நேரத்தை நம்மோட அறிவை வளர்க்கரதுக்கும்( பதிவுகள் படிச்சான்னு கேக்காதீங்க) ஆக்க பூர்வமா செய்ய
வேண்டியதைச் செஞ்சுக்கிட்டும் இருந்தா எந்த ஆதிக்கமும் நம்மைக் கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு
வளர்ந்துறமாட்டோமா?\\

சூப்பர் பதில்கள் டீச்சர்....கலக்கிட்டீங்க ;-))))

கோபிநாத் said...

\\.:: மை ஃபிரண்ட் ::. said...
துளசியக்கா போஸ்ட்டுலையும் நாந்தான் ஃபர்ஸ்ட்டு.. இதுல யாரும் பொறாமை படக்கூடாது.. சொல்லிட்டேன்\\

அண்ணாத்த...இதுல ஏதோ மேட்சு பீக்ஸிங் இருக்குற மாதிரி தெரியுது......புலி.... நீ இன்னாப்பா சொல்லற ;-))

.:: மை ஃபிரண்ட் ::. said...

//பதில்களை மாற்றினாரா ஸ்டார் ரிப்போர்ட்டர்? வலையுலகில் பரபரப்பு!! //

அன்ஸ்வர் பேப்பர் மாறிப்போச்சுப்பா! இதுல அண்ணனோட தவறு எதுவும் இல்லே! :-)

.:: மை ஃபிரண்ட் ::. said...

கொத்ஸ், துளசி டீச்சர் எழுதுனதா சொல்லி வெளியிட்ட பதில்கள் கலக்கலா இருக்கு!

ஆனால் அது உண்மையில்லையோன்னு சந்தேகம்.. ஹீஹீஹீ...

.:: மை ஃபிரண்ட் ::. said...

//தன் கையே தனக்கு தலைவாரி விடலாம்.. குனிந்து காலை வருமா? //

சூப்பர். கொத்ஸ் சாரே, நீங்க விதவிதமான டெக்னிக் வச்சிருக்கீங்கன்னு சொல்லவே இல்ல? நீங்களும் ஒரு கோச்சிங் க்லாஸ் எடுத்து நடத்தலாமே? வருமானம் கனிசமாக வரும். :-)

.:: மை ஃபிரண்ட் ::. said...

சந்தோஷ் aka Santhosh said...

//இது எல்லாம் ரொம்ப ஓவரு,//

:-P

.:: மை ஃபிரண்ட் ::. said...

//அவுட் ஆப் போகஸில் தங்கச்சிக்கா முகம். குரல் மட்டும் வழக்கம் போல் நன்றாகக் கேட்கிறது. "ஆனா, முதல் 50 பதிவுக்கேத்த பின்னூட்டம்.. அப்புறம்தான் ஆட்டம் ஸ்ட்டார்ட்//

அட பாசக்கார பயபுள்ளைங்களா! நேத்து எல்லாரும் இதுக்குதானா வேய்ட்டீங்? இது தெரியாம நான் வெளியே போயிட்டு லேட்டால வந்தேன். :-(

.:: மை ஃபிரண்ட் ::. said...

//தங்கச்சிக்கா, இந்த ஒண்ணை மட்டும் மன்னிச்சு விட்டுடுங்க.//

அசத்தலான ஒரு பின்னூட்டம் போட்டு அசத்திய கொத்ஸ்க்கு ஒன்னென்ன.. ரெண்டு, மூனு, நாலுன்னு எத்தனை வேணுமோ அத்தனையும் எடுத்துக்கலாம். :-)

(40 நெருங்கிட்டு இருக்கு!)

.:: மை ஃபிரண்ட் ::. said...

//அண்ணாத்த...இதுல ஏதோ மேட்சு பீக்ஸிங் இருக்குற மாதிரி தெரியுது......புலி.... நீ இன்னாப்பா சொல்லற ;-))
//

மேட்சு பிக்ஸிங்கா? அப்படின்னா? :-?
புலி, ஒன்னும் சொல்லாது. அவரு எங்க கடிசிக்கு தாவிட்டாரு! இந்த தங்கச்சிக்கு சப்போர்ட்டா. ;-)

மனதின் ஓசை said...

கேள்வியும் பதில்களும் நன்றாக உள்ளன..

//சுமார் 500 பதிவுகளைத் தாண்டியும் //

அப்படியா?? கிரேட்.

//இல்லவே இல்லை. கடைசியில் இதுக்கு ஒரு 'ரீஹேப் செண்ட்டர்' திறக்கும்படியா ஆகப்போகுது:-))))//

:-)))))))

இலவசக்கொத்தனார் said...

//வாய்யா கொத்ஸ், எங்கி(யா)யோ போயிட்டீர்!//

இங்கதான் இருக்கேன் டீச்சர். உங்க பேர்ல ஒரு தப்பு நடக்குது அதான் கிளாசுக்குக் கூட வராம இங்கயே இருக்கேன்.

//அப்படியே புல்லரிச்சுப்போச்சு.//
ஆமாம் டீச்சர். நீங்க சொல்லும் ஒரு ஒரு வார்த்தையையும் நோட்ஸ் எடுத்து வெச்சதுனால அதை இங்க சரியா போட முடிஞ்சுது.

//இப்படி மக்களின் அறிவுக்கண் திறக்கும் துளசி டீச்சர் வகுப்புக்கு மாணவர்களே அணி திரண்டு வாரீர்( ச்சும்மா ஒரு ad தான்!)//

டீச்சர், விளம்பரம் போட்டா சுட்டி தரணமுன்னு நீங்க சொல்லிக் குடுத்ததை உங்களே மறந்து போகும் அளவுக்கு மனவருத்தத்தைத் தந்த ஸ்டார் ரிப்போர்ட்டரை வன்முறையாகக் கண்டிக்கிறேன் டீச்சர்.

//"இன்று முதல் துளசி டீச்சரின் வகுப்புக் 'கட்டணக்கல்வி'யாகிறது.//

கிளாசுக்கு எத்தனை பின்னூட்டம் டீச்சர்? சரியா கணக்குப் பண்ணி நான் வாங்கி வைக்கிறேன் டீச்சர்.

//( இலவச முதியோர்க் கல்விக்கு வச்சேனே ஆப்பு)//

ஏன் டீச்சர், சிவஞானம்ஜி, டிபிஆர், வாத்தியாரய்யா எல்லாம் பதிவா வராங்க டீச்சர், அவங்க மேல உங்க கோபத்தைக் காமிச்சா நல்லா இருக்காது டீச்சர். நன்றி டீச்சர்.

இலவசக்கொத்தனார் said...

//ஆனால் அது உண்மையில்லையோன்னு சந்தேகம்.. ஹீஹீஹீ...//

நான் உண்மையான பதில்களைப் போட்ட பிந்தான் டீச்சரே இங்க வந்தாங்க. ஸ்டார் ரிப்போர்ட்டரின் பதில்கள் பற்றி அவர்கள் கருத்து கூறாமல் சென்றதைக் கவனிக்கவும்.

எதையும் அவசரப்பட்டு செய்யறவங்க இல்லை இந்த டீச்சர், ஆராய்ந்து செய்யறவங்க. (பஞ்ச் டயலாக்கு!)

இலவசக்கொத்தனார் said...

//கொத்ஸ் சாரே,//

என்னை சாரே என விளித்து நானும் ஒரு வாத்தியாராக ஒரு எண்ணத்தை உருவாக்கி என்னை டீச்சருக்கு எதிராக கொம்பு சீவி விடும் உங்கள் கொயப்பல்ஸ் எண்ணத்தை வன்மையாகக் கண்டிக்கிறேன். உங்கள் பிரிவினை வாத சூழ்ச்சி வெற்றி பெறாது என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.


//நீங்க விதவிதமான டெக்னிக் வச்சிருக்கீங்கன்னு சொல்லவே இல்ல? //

குருவுக்கு மிஞ்சிய சிஷ்யன் எனச் சொல்ல வருகிறீர்களா? ஒரு வகுப்பில் ஆர்ப்பாட்டம் செய்யாமல் அமைதியாய் டீச்சர் சொன்னதை நோட்ஸ் எடுப்பதால் அவர்கள் பேட்டி குடுக்கும் பொழுது அருகில் இருத்தி நோட்ஸ் எடுக்கச் சொன்னதை நானே எழுதுவது போல் சித்தரித்து எனக்கும் டீச்சருக்கும் உள்ள மேம்பட்ட குரு-சிஷ்ய உறவை சிதைக்கலாம் என நீங்கள் போட்ட திட்டம் தவிடு பொடியாகும் என்பதில் எந்த வித ஐயமும் இல்லை. இதையெல்லாம் நம்பிவிட டீச்சர் ஒன்றும் ஒன்றுமறியா எடுப்பார் கைப்பிள்ளை இல்லை. (அட இது என்னடா வம்பாப் போச்சு, அந்த கைப்பு இல்லைங்க, இது பழமொழி)

//நீங்களும் ஒரு கோச்சிங் க்லாஸ் எடுத்து நடத்தலாமே?//

ஆஹா! உங்கள் உள்மன ஆழத்தின் வக்கிரம் வார்த்தைகளாய் வெளி வந்துவிட்டதே. டீச்சருக்குப் பாடம் நடத்தத் தெரியவில்லை, அதனால் வகுப்பில் இருப்பவர்களுக்குப் புரியவில்லை. அதற்குத் தனி கோச்சிங் தேவைப்படுகிறது என அபாண்டமாய் பழி சுமத்தி, என் உயிருக்கும் மேலான டீச்சரை அவமானப் படுத்த என்னையே அந்த கோச்சிங் கிளாசை ஆரம்பிக்கச் சொல்லும் உங்கள் பிரித்தாளும் சூழ்ச்சி வெற்றி அடையாது. அடையவே அடையாது.

//வருமானம் கனிசமாக வரும். :-)//

காசுக்கு மயங்குபவனா இந்த இ.கொ.? என்ன ஒரு மட்டரக சிந்தனை. உண்ண உணவின்றி, உடுத்த உடையின்றி, இருக்க இடமின்றி, படுக்கப் பாயின்றி, எழுத எதுகையின்றி இருந்தாலும் கூட பணத்திற்கு அடிபணிய மாட்டான் இந்த இ.கொ. இதைப் புரிந்து கொள்ளாமல் பணம் என்ற பசப்பு வார்த்தையால் மயக்கிட நினைக்கும் உங்களைப் பார்த்தால் பரிதாபம்தான் வருகிறது. இது போன்ற சிறு நரிகளின் சலசலப்புக்கு அஞ்ச மாட்டான் இந்த இ.கொ.

நாகை சிவா said...

கொத்துஸ்

உம்ம சத்தம் இன்னிக்கு ரொம்பவே அதிகமா இருக்கே!

நாகை சிவா said...

மறுக்கா கமெண்ட் மாடுரேஷனை தூக்கி விட்டீர் போல.. என்ன தேவ் இது....

உள்ளே வெளியே விளையாட்டு போல இருக்கு

மனதின் ஓசை said...

யப்பா..கொத்தனார் வூடு கட்டி அடிக்கிறாரு..

உங்கள் நண்பன் said...

உ(பிள்ளையார் சுழி)

மனதின் ஓசை said...

//உ(பிள்ளையார் சுழி) //

எதுக்கு கும்மிக்கா?? மக்கா..ஸ்டார்ட் த மீஸிக்..

உங்கள் நண்பன் said...

வேற எதுக்காம் பிள்ளையேரே வந்து சுளித்துவிட்டார் வாங்க வாங்க( பலகாரக் கடைல கூப்பிட்ற மாதிரியே கூப்பிடுறியே சரவணா?)

மனதின் ஓசை, உங்களின் பெயரை நினைத்ததும் அந்த "--%பூச்சிக் கொள்ளிப் பதிவு" தான் நினைவிற்க்கு வருகின்றது(எனது கிராமம் பற்றிய பதிவில் அதை எழுதியால் எனக்கு நினைவை விட்டு அகலவில்லை என நினைக்கின்றேன்)

வேற யாரெல்லாம் இருக்கீங்க மக்கா?

உங்கள் நண்பன் said...

எனக்கு இப்பொழுது ஆணி ஒன்றும் இல்லை மாலை 5 மணிக்குத்தான் சேவியர்ஸ் கல்லூரிக்கு ஒரு புது ஆர்டர் விசயமாகச் செல்ல வேண்டும் , அதுவரை ஜாலியா ஆடியோவில் சிவாஜியைக் கேட்டுக் கொண்டே கும்ம நான் ரெடி!

இலவசக்கொத்தனார் said...

புலி = பிரஸண்ட்
உங்கள் நண்பன் = பிரஸண்ட்
மனதின் ஓசை = பிரஸண்ட்

வேற யாருப்பா?

உங்கள் நண்பன் said...

சொக்கா!இப்படித் தனியா பொழம்ப விட்டுட்டாய்ங்களே!!!

ஒரு "எடுபட்ட பயல"க் கூட காணோமே?

இலவசக்கொத்தனார் said...

//எனக்கு இப்பொழுது ஆணி ஒன்றும் இல்லை //

இப்படி எல்லாம் சொல்லபிடாது!! ஒரு பந்தா, ஒரு கெத்து வேண்டாம், என்ன பசங்கடா நீங்க

இலவசக்கொத்தனார் said...

50 ஆச்சா?

உங்கள் நண்பன் said...

ஹி ஹி...கொத்ஸ் நீங்க வந்துக்கிட்டு இருக்கிறதைப் பாக்கலை , அதான் அந்த எடுபட்டபய பின்னூட்டம்

இலவசக்கொத்தனார் said...

இல்லை இதுதான் 50??

நாகை சிவா said...

பாசம் ஒரு பக்கம்

நட்பு ஒரு பக்கம்

இருவருக்கும் நடுவில் சிக்கி திக்கு தெரியாமல் திணறும் புலி....

என்ன கொடுமையடா இது?

:-((((((((((

இலவசக்கொத்தனார் said...

சரி, நம்ம பின்னூட்டத்துக்கு எல்லாம் பதில் சொல்லுங்க. இதான் உங்களுக்கு அசைன்மெண்ட் நம்பர் 1.

உங்கள் நண்பன் said...

கொத்ஸ் 50 அடிச்சாச்சு!
கடந்த கும்மியில் நான் 100 அடிச்சேன் அது 500க்கு மேல போய் நின்னது இன்னைகு 50 லயே ஆரம்பிச்சாச்சு இது எதுல போய் முடியுமோ?

உங்கள் நண்பன் said...

//பாசம் ஒரு பக்கம்

நட்பு ஒரு பக்கம்

இருவருக்கும் நடுவில் சிக்கி திக்கு தெரியாமல் திணறும் புலி....

//

இந்தக் கரடி விடுற வேலையெல்லாம் கூடாது மருவாதியா வந்து கலந்துக்க!

இல்லைனா தம்பிகிட்ட சொல்லி டீக்கடை முன்னால இன்றைய ஸ்பெசல் "புலிக்கால் சூப்பு ரெடி" போர்டை வைக்கச் சொல்லிடுவேன்

இலவசக்கொத்தனார் said...

//இந்தக் கரடி விடுற வேலையெல்லாம் கூடாது மருவாதியா வந்து கலந்துக்க//

முதலில் எடுபட்ட பயலே, அப்புறம் கரடி, நம்ம பதிவோட தாக்கம் உங்க கிட்ட நிறையா இருக்கே. ஐயாம் சோஓஓஓஓ ப்ரவுட் ஆப் யூ மை பாய்....

நாகை சிவா said...

கொத்துஸ் நீர் கணக்கில் ரொம்பவே வீக்,

49 & 51 தான் நீர்.

இலவசக்கொத்தனார் said...

//கொத்துஸ் நீர் கணக்கில் ரொம்பவே வீக்,

49 & 51 தான் நீர்.//

(49+51)/2 == ??

அது அட்வான்ஸ்ட் மேத்டா கண்ணா!!

நாகை சிவா said...

சரா

உன்னுற மேட்டர் என்னாச்சு.

கரேக்ட் ஆச்சு, எக்ஸ்டாரஸ் எப்ப பாக்கலாம் ;-)

இலவசக்கொத்தனார் said...

அட ஆமாம். அந்த மேட்டரை கேட்க விட்டுப் போச்சே, நேத்து அந்த பில்டப் குடுத்தாரே. என்ன ஆச்சு சரா?

உங்கள் நண்பன் said...

இருக்காதா பின்னே! தங்களின் விலங்குப் பதிவை விழுந்து விழுந்து படிச்சேன், விவாதப் பதிவு என்று தாங்கள் காமெடி பண்ணியதால் என்னால் விவாதிக்க முடியவில்லை!

உங்கள் நண்பன் said...

ஆஅவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

உங்கள் நண்பன் said...

ஐச்கிரீம் பார்லருக்கெல்லாம் வரமுடியாதாம், நெக்ஸ்ட் வீக் புதன்கிழமை பேசலாம்னு சொல்லி இருக்காங்க! பாக்கலாம்

இலவசக்கொத்தனார் said...

ஏன்யா பேசிக்கிட்டு இருக்கும் போது யானை பிளிறின மாதிரி அப்படி ஒரு கொட்டாவி?

உங்கள் நண்பன் said...

//சரா

உன்னுற மேட்டர் என்னாச்சு.

கரேக்ட் ஆச்சு, எக்ஸ்டாரஸ் எப்ப பாக்கலாம் ;-)

//

இதிலெல்லாம் ரெம்ப கரெக்டா இரு!

உங்கள் நண்பன் said...

யோவ் கொத்ஸ் நீர் இன்னும் உம்ம பதிவின் தாக்கத்திலிருந்து வெளிவரவில்லையா?

அது யானைப் பிளிறல் இல்லை, என் அழுகைச் சத்தம்

உங்கள் நண்பன் said...

//(49+51)/2 == ??

அது அட்வான்ஸ்ட் மேத்டா கண்ணா!!//

கொத்ஸ் முகத்தில் மண் ஒட்டலை! ( புலி கொத்ஸ்க்கு முகமே இல்லையேனு வந்து கலாய்ச்சிடாத!)

இலவசக்கொத்தனார் said...

//அது யானைப் பிளிறல் இல்லை, என் அழுகைச் சத்தம்//

கண்ணு அழுகைன்னா சும்மா அப்படி ரொம்ப சவுண்ட் விடாமா ஜெண்டில அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ் அப்படின்னு இருக்கணும்.

நீ என்ன பெரிய கமலா கண்ட மேனிக்கு அழ?

நாகை சிவா said...

//(49+51)/2 == ??

அது அட்வான்ஸ்ட் மேத்டா கண்ணா!! //

அட அநியாயத்தின் உச்சக்கட்ட ஆபிஸ்சரே!!!!

நாகை சிவா said...

//(49+51)/2 == ??

அது அட்வான்ஸ்ட் மேத்டா கண்ணா!! //

அட அநியாயத்தின் உச்சக்கட்ட ஆபிஸ்சரே!!!!

நாகை சிவா said...

//நீ என்ன பெரிய கமலா கண்ட மேனிக்கு அழ? //

அது யாரு "கமலா", சரோஜா மாதிரி இவங்களுக்கும் பெரிய ரைட்டரா?

உங்கள் நண்பன் said...

மனதின் ஓசை இருக்கிறீங்களா? ஓசையே இல்லையே?

நாகை சிவா said...

//இதிலெல்லாம் ரெம்ப கரெக்டா இரு! //

பின்ன கடமை வீரன் இல்லையா நாம் எல்லாம்!

உங்கள் நண்பன் said...

//அது யாரு "கமலா", சரோஜா மாதிரி இவங்களுக்கும் பெரிய ரைட்டரா? //

முதலில் இப்படித் தான் ஆரம்பிப்பாய்! பின் அவங்க எழுதின ரெண்டு கதை சொல்லுங்கனு ஜொள்ளுவ உன்னைப் பத்தி தெரியாதா?

இலவசக்கொத்தனார் said...

//அது யாரு "கமலா", சரோஜா மாதிரி இவங்களுக்கும் பெரிய ரைட்டரா?//

கமலா, கண்ட மேனிக்கு அப்படின்னு ரெண்டு மூணு வார்த்தையைப் பார்த்து கன்பியூஸ் ஆகி சரோவை எல்லாம் இழுக்கக்கூடாது. க்ரோ அப் பாய்.

நாகை சிவா said...

//முதலில் இப்படித் தான் ஆரம்பிப்பாய்! பின் அவங்க எழுதின ரெண்டு கதை சொல்லுங்கனு ஜொள்ளுவ உன்னைப் பத்தி தெரியாதா? //

ஆஹா இது கூட நல்லா இருக்கே, அப்ப கொத்துஸ் இப்ப இங்க நமக்கு கதை சொல்லுவாரா?

நாகை சிவா said...

//கமலா, கண்ட மேனிக்கு அப்படின்னு ரெண்டு மூணு வார்த்தையைப் பார்த்து கன்பியூஸ் ஆகி சரோவை எல்லாம் இழுக்கக்கூடாது. க்ரோ அப் பாய். //

இப்ப இது வேறயா? எனக்கு புதுசா புதுசா பட்டம் வாங்கி கொடுப்பதில் அப்படி என்னய்யா ஆனந்தம் உமக்கு.

உங்கள் நண்பன் said...

மக்கா! என்ன வேகமில்லையே! சரி சாயங்காலம் தான் நல்லா களைக்கடும்னு நினைக்கின்றேன், நானும் அப்படியே மற்ற பதிவுகலுக்கும் ஒரு ரவுண்டு போயிட்டு வர்ரேன்.

மனதின் ஓசை said...

நெட்ஒர்க்கும் பிளாக்கரும் ரொம்ப சொதப்புது.. எந்த கமெண்டு போட்டாலும் இத்ல்லாம் ஒரு கமெண்டா ன்னு "page not found"னு துப்புது.. (
இதுவாவது வருதா பாக்குறேன்.

மனதின் ஓசை said...

//மனதின் ஓசை, உங்களின் பெயரை நினைத்ததும் அந்த "--%பூச்சிக் கொள்ளிப் பதிவு" தான் நினைவிற்க்கு வருகின்றது(எனது கிராமம் பற்றிய பதிவில் அதை எழுதியால் எனக்கு நினைவை விட்டு அகலவில்லை என நினைக்கின்றேன்)
//
எப்படியோ.. ஞாபகம் இருந்தா நல்லதுதான்..

//எனது கிராமம் பற்றிய பதிவில் அதை எழுதியால்//???? புரியலியே சரவணா..

மனதின் ஓசை said...

//ஐச்கிரீம் பார்லருக்கெல்லாம் வரமுடியாதாம்,//

என்ன கொடுமை சரவணா இது..

//நெக்ஸ்ட் வீக் புதன்கிழமை பேசலாம்னு சொல்லி இருக்காங்க! பாக்கலாம்//

சரவணா, ஒரு பெரிய தொடர் பதிவு பின்னால வரும்னு சொல்லு. வாழ்த்துக்கள்.

மனதின் ஓசை said...

//மனதின் ஓசை இருக்கிறீங்களா? ஓசையே இல்லையே? //
ம்ம்..அதான் சொன்னேன்ன பிளாக்கர் சொதப்பல். :-((((((

மனதின் ஓசை said...

//நானும் அப்படியே மற்ற பதிவுகலுக்கும் ஒரு ரவுண்டு போயிட்டு வர்ரேன்.
//

லுக்கு விட்டு முடிச்சிட்டியா? சீக்கிரம் வா..

வல்லிசிம்ஹன் said...

கமலா,சரோஜா அப்புறம் வேறா

யாரு இவங்கள் எல்லாம்.??

துர்கா|thurgah said...

மை ஃபிரண்ட் அனைத்திலும் நீங்கதான் முதல் மறுமொழியா?பாசமலர்ன்னு உங்களைக் கூப்பிட்ட தப்பே இல்லை.:))

துர்கா|thurgah said...

டீச்சர் பதில் சூப்பர் :))

துர்கா|thurgah said...

/பெண் பதிவர்களுக்கு நகைச்சுவை உணர்வு கம்மின்னு சொன்னா நீங்க ஒத்துக்குவீங்களா?

நான் இருக்கட்டும், உண்மைக்குமே நீங்க இதை ஒத்துக்கறீங்களா? இந்த மாதிரி புரளியை
யார் கிளப்பி விடுறாங்க?//


நானும் இதைதான் கேட்குறேன்.நம்ப மை ஃபிரண்டை மறந்துவிட்டீர்களா தேவ்?

துர்கா|thurgah said...

////நீ என்ன பெரிய கமலா கண்ட மேனிக்கு அழ? //
யாருப்பா இது?

உங்கள் நண்பன் said...

இன்னைக்கி கும்பி எங்கே? இங்கேயா? இல்லை அங்கேயா?(நட்சத்திரத்தின் புதிய பதிவிலா?)

Anonymous said...

tibia money tibia gold tibia item runescape money runescape gold tibia money tibia gold runescape gold runescape accounts tibia gold tibia money runescape money runescape gp buy runescape gold tibia gold tibia item buy runescape money runescape gold runescape items tibia money tibia gold

tamil10