Tuesday, March 20, 2007

க்ரேக் சேப்பல் காப்பாற்றபட்டார்

மேற்கிந்திய தீவுகள் பாகிஸ்தான் அயர்லாந்திடம் தோற்ற பின் இன்சமாம் நம்ம டிராவிட்க்குப் போன் போடுகிறார்..

இ: சரி பங்கு நாங்க கிளம்புறோம்.. எல்லாம் முடிஞ்சுப் போச்சு..

டி: இருங்க பங்கௌ இன்னும் ஒரு நாள் தான் நாங்களும் கிளம்பி வந்துறோம்.. ஒண்ணாப் போயிரலாம்

இ: ஓ.கே பங்கு அப்படின்னா ஒரே பிளைட்ல்ல போயிறலாம்.. டிக்கெட் சொல்லிடுறேன்...

இரண்டு நாட்களுக்குப் பிறகு இன்சமாம் மீண்டும் போனில் டிராவிட்டை அழைக்கிறார்..

இ: என்னப் பங்கு வர்றேன்னு சொல்லிட்டு பெர்மூடாவை இந்த துவை துவைச்சீட்டீங்க...

டி: பங்கு.. என்னப் பண்றது..நம்மளை நம்பி வந்த மனுசனைக் காப்பாத்துனும் இல்ல..

இ: என்னப் பங்கு சொல்லுற...

டி: நமக்கு மானம் மாரியாத்தா வெக்கம் வேலாயுதம் சூடு சூலாயுதம் எல்லாம் இல்லன்னாலும்.. இந்த வெளிநாட்டுக் கோச்சுக்கெல்லாம் அது ரொம்ப ஜாஸ்தியா இருக்கே..
அதான் ஒண்ணுக் கூடி க்ரேக் சேப்பலைக் காப்பாத்துறதுன்னு முடிவு பண்ணி விளையாட வேண்டியதாப் போச்சு..

இன்சமாம் தாடியை தடவியப் படி ஏர்போர்ட் செல்கிறார்.

24 comments:

அபி அப்பா said...

பட்டைய கிளப்புனது தேவ்:-)))

G.Ragavan said...

:-)))))))) என்னங்க இது! உண்மைய இவ்வளவு வெளிப்படையாவா சொல்றது? இதப் படிச்சிட்டு கிரிக்கெட்டுக்காரங்களுக்குத் திடீர்னு மானம் வந்து...நாளைக்கே விளம்பரத்துல நடிக்காம...கோடிக்காசு வாங்காம...வெளையாடிச் செயிச்சிரப் போறாங்க!

Naufal MQ said...

Superb

லக்கிலுக் said...

:-))))))))))))

Anonymous said...

கலக்கிட்டீங்க! :)

Anonymous said...

Sir,
really your imagination is sooooooooo super!!!!!!!!!.
i loughed for some 10 minutes

இலவசக்கொத்தனார் said...

பாப் வூல்மர் மரணம் ஒரு பரிதாபமான சம்பவம். அதனைக் குறிக்கும் இந்த பதிவில் அதற்குண்டான மரியாதை தரவில்லை என்றே நினைக்கிறேன். இது வரை கருத்து சொன்னவர்களுடன் இணைந்து பாராட்டத் தோணவில்லை. மன்னிக்கவும்.

G.Ragavan said...

// இலவசக்கொத்தனார் said...
பாப் வூல்மர் மரணம் ஒரு பரிதாபமான சம்பவம். அதனைக் குறிக்கும் இந்த பதிவில் அதற்குண்டான மரியாதை தரவில்லை என்றே நினைக்கிறேன். இது வரை கருத்து சொன்னவர்களுடன் இணைந்து பாராட்டத் தோணவில்லை. மன்னிக்கவும். //

ஐய்யோ! இந்தப் பதிவுக்கு இப்பிடி ஒரு பொருள் இருக்கா? எனக்கு அது உண்மையிலேயே புரியலைங்க. சும்மா திட்டுறதா நெனச்சு நானும் திட்டீட்டேன்.

பால் ஊல்மர் ஆன்மா அமைதி பெற ஆண்டவனை வேண்டுகிறேன்.

ராசுக்குட்டி said...

சரியான நககல்தான். கிரேக் சாப்பல் ஐப்பற்றிய கவலையை விடுங்கள் இங்கே நமம ரசிக சிகாமணிகள் சும்மாவா இருக்க்காங்க. அவனவன் சோத்துக்கே வழியில்லாமக் கெடக்கான் கிரிக்கெட்டுல இந்தியா தோத்ததுக்கு உயிர விடுர எடுபட்ட பயலுக ஏகப்பட்ட பேர் இருக்க்குராங்களே...

நாடு வெளங்குமா?

ராசுக்குட்டி said...

ஆடி ஜெயிக்கிறதவிட விளம்பரத்தில நடிக்கிறதுலதானே இவங்க கவனமெல்லாம். இதுல ரசிகன் தற்கொலை செஞ்சுக்கிட்டா என்ன பயிற்சியாளர் போய் சேர்ந்தா என்ன?

நாகை சிவா said...

வழக்கம் போல் நகைச்சுவையான பதிவு.

பால் உம்மர் மறைவுக்கு என் அழ்ந்த அனுதாபங்கள்.

Unknown said...

//பட்டைய கிளப்புனது தேவ்:-)))//

வாங்க அபி அப்பா, நகைச்சுவைப் பதிவுகளின் மொத்தச் சுரங்கம் நீங்க.. நீங்க நல்லாயிருக்குன்னு சொல்லுறது சந்தோஷம்ங்க..

Unknown said...

//:-)))))))) என்னங்க இது! உண்மைய இவ்வளவு வெளிப்படையாவா சொல்றது? இதப் படிச்சிட்டு கிரிக்கெட்டுக்காரங்களுக்குத் திடீர்னு மானம் வந்து...நாளைக்கே விளம்பரத்துல நடிக்காம...கோடிக்காசு வாங்காம...வெளையாடிச் செயிச்சிரப் போறாங்க! //

நீங்க வேற.. அப்படி எல்லாம் எதாவது நடந்தா நம்ம தூத்துக்குடியில்ல வெள்ளம் வருவது நிச்சயம் போங்க...

Unknown said...

//Superb //

danks fast bowler

Unknown said...

//:-)))))))))))) //

வாங்க லக்கி முதல் வருகை பெரிய புன்னகையோட வந்துருக்கீங்க.. நன்றிங்க..

Unknown said...

//கலக்கிட்டீங்க! :)
//

நன்றிங்க கண்ணன்

Unknown said...

//Sir,
really your imagination is sooooooooo super!!!!!!!!!.
i loughed for some 10 minutes //

Thanks anony sir.. ur smile is my pleasure sir

Unknown said...

//பாப் வூல்மர் மரணம் ஒரு பரிதாபமான சம்பவம். அதனைக் குறிக்கும் இந்த பதிவில் அதற்குண்டான மரியாதை தரவில்லை என்றே நினைக்கிறேன். இது வரை கருத்து சொன்னவர்களுடன் இணைந்து பாராட்டத் தோணவில்லை. மன்னிக்கவும். //

கொத்ஸ் பாப் வூல்மரின் மரணம் வருத்தமான விஷ்யமே.. நானும் உங்கள் வருத்ததில் இணைகிறேன்..

அந்த வருத்தம் குலைக்கும் எந்த ஒரு நோக்கமும் இந்தப் பதிவிற்கு கிடையாது எனத் திட்டமாய் தெரிவித்துக் கொள்கிறேன்..

Unknown said...

//சரியான நககல்தான். கிரேக் சாப்பல் ஐப்பற்றிய கவலையை விடுங்கள் இங்கே நமம ரசிக சிகாமணிகள் சும்மாவா இருக்க்காங்க. அவனவன் சோத்துக்கே வழியில்லாமக் கெடக்கான் கிரிக்கெட்டுல இந்தியா தோத்ததுக்கு உயிர விடுர எடுபட்ட பயலுக ஏகப்பட்ட பேர் இருக்க்குராங்களே...

நாடு வெளங்குமா? //

கிரிக்கெட் சினிமா என்று நம்ம ரசிகக் கண்மணிகள் எப்போதும் எதாவது ஒன்றுக்குத் தங்கள் உயிரை கிப்ட் செக்காய் கொடுத்தப் படியேத் தான் உள்ளனர். உங்கள் வருத்தம் எனக்குமுண்டு ராசுக்குட்டி.

Unknown said...

//ஆடி ஜெயிக்கிறதவிட விளம்பரத்தில நடிக்கிறதுலதானே இவங்க கவனமெல்லாம். இதுல ரசிகன் தற்கொலை செஞ்சுக்கிட்டா என்ன பயிற்சியாளர் போய் சேர்ந்தா என்ன? //


எல்லா கிரிக்கெட் ர்சிகர்களின் மனத்திலும் உள்ள ஆதங்கத்தைச் சொல்லீட்டீங்க ராசுக்குட்டி.

Unknown said...

//ஐய்யோ! இந்தப் பதிவுக்கு இப்பிடி ஒரு பொருள் இருக்கா? எனக்கு அது உண்மையிலேயே புரியலைங்க. சும்மா திட்டுறதா நெனச்சு நானும் திட்டீட்டேன்.//
அய்ய்யோஅப்படி எல்லாம் எந்தப் பொருளும் இல்லங்க.. நம்புங்க..

//பால் ஊல்மர் ஆன்மா அமைதி பெற ஆண்டவனை வேண்டுகிறேன். //

நானும் வேண்டுகிறேன்

Unknown said...

//வழக்கம் போல் நகைச்சுவையான பதிவு.//
ஹி..ஹி..வழ்க்கம் போல நம்ம புலியின் நகைச்சுவை பின்னூட்டம்ய்யா

மனதின் ஓசை said...

யப்பா சாமி.. இதெல்லாம் ஓவர்யா... உக்கந்து யோசிப்பியோ..

ஆனாலும் நம்ம ஜிராக்கு ஆசை அதிகம்தான்..

Unknown said...

உக்காந்து யோசிப்போம்.. இல்ல நடந்துகிட்டே யோசிப்போம்..

ஆமா ஜி.ராவுக்கு என்ன ஆசை? அதுவும் எது மேல? அதிகம்ன்னு வேறச் சொல்லியிருக்கே..:-)

tamil10