உலகக்கோப்பைக்கு நம் அணி படு பயங்கரமாய் தயாராகி வரும் நிலையில்.. அணியின் வெற்றிக்கு உறுதுணைப் புரிய வேண்டிய சிறப்பு பயிற்சியாளர் பெனத்தலார் அணியின் தேர்வு குறித்து கடுப்பாகி பதிவுலகக் கிரிக்கெட் வாரியத்துக்கு விவகாரம் கிளப்பும் வகையில் ஒரு கடிதம் எழுதியுள்ளதாக ஒரு செய்தி கிளம்பியதை அடுத்து நமது சிறப்பு விசாரணைப் பிரிவு களமிறங்கி அலசி ஆராயந்ததில் அந்தக் கடிதமே நம் கையில் சிக்கியது... இதோ பதிவுலகக் கிரிக்கெட் அணியின் கோடானு கோடி ரசிகப் பக்த பிரஜைகளே படித்துப் பொங்கி எழுங்கள்...
ஓவர் டூ பெனத்தலார் கடிதம்
உங்கள் கண்களுக்கு மட்டும் -- பரம ரகசியம்.
விடுநர்:
பெனாத்தல் சுரேஷ்,
பயிற்சியாளர்,
உலகக்கோப்பை கிரிக்கெட் அணி.
பெறுநர்:
கச்சேரியார்,
நாற்காலிமனிதன்,
வலைக்கிரிக்கெட் ஒருங்கிணைப்பு (BCCB)
ஐயா,
பொருள்: உலகக்கோப்பைக்கான குழு தெரிவு செய்தல்
உலகக்கோப்பைக்கு போறோம் என்று தங்களால் எழுதப்பட்ட பதிவு மிக நல்ல, பொருத்தமான பதிவு. அதில் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்டக்காரர்களும் பொருத்தமானவர்கள் என்று தாங்கள் எண்ணினீர்களே ஆயின், இக்கடிதத்தைப் படிப்பதை உடனடியாக நிறுத்தி விடவும்.
இன்னும் இக்கடிதத்தைப் படித்துக்கொண்டிருப்பதால் சில உண்மைகளை உங்களிடம் தைரியமாக எடுத்துரைக்கலாம் என்றே நம்புகிறேன்.
பெர்னார்டு ஷா சொன்னாராம் - கிரிக்கெட் 11 முட்டாள்கள் ஆடி 11000 முட்டாள்கள் பார்க்கும் விளையாட்டு என்று. அந்த வகையில் நீர் செய்தது மெத்தச் சரி. முதலில் செய்ய வேண்டிய 11 முட்டாள்களை மிகச் சரியாக தேர்ந்தெடுத்து விட்டீர்கள். ஆம் நீர் தேர்ந்தெடுத்திருக்கும் அணியால் உப்புக்கருவாடு கூட வென்று வர முடியாது, உலகக்கோப்பை பற்றிய கனவுகளும் வீணே!
40க்கு மேல் ரன் எடுக்க முடியாமல், ரன் உச்சவரம்பினால் நிலை (பார்ம்) இழந்திருக்கும் இலவச கேப்டன்,
ட்ராக்டரை வைத்து களை பிடுங்க முடியாமல் எல்லாவற்றையும் குத்திக்கிழித்துக் கொண்டிருக்கும் விவசாயி,
பவுன்ஸர் வந்தால் "வேணாம், வலிக்குது, அழுதுடுவேன்" என்று சொல்வதை ஆட்டநுட்பமாக அனைவருக்கும் பயிற்றுவிக்கும் கைப்பு,
தெலுங்கு மண்ணில் மட்டும் விருப்பத்தோடும், வேறு மண்ணில் வேண்டா வெறுப்பாகவும் ஆடும் ஓப்பனர் வெட்டி,
பந்தைத் தான் தடுத்தால் யார் என்ன சொல்லிவிடுவார்களோ என்ற பயத்தோடு கைகளைக் கட்டிக்கொண்டே இருக்கும் தம்பி,
இப்போதுதான் ஊருக்கு வந்த ஜெட்லாக்கில் இருந்தாலும் அட்லாஸாக இருப்பதால் கவனமிழந்திருக்கும் கப்பி பய,
ஆட்டத்தை விட்டு ஸ்டாண்டையே ஆர்வத்தோடு பார்த்துக்கொண்டிருக்கும் ஜொள்ளு,
பாட்டிங், பவுலிங், பீல்டிங் எதையும் பதிவு செய்யாமல், விக்கெட் விழுந்தால் கைதட்ட மட்டுமே செய்யும் பின்னூட்ட ஸ்பெஷலிஸ்ட் பைரன்னர்கள்,
ஸ்பின்னரா, பாஸ்ட் பவுலரா என்ற குழப்பத்தில், ஆஸ்திரேலியாவை மட்டுமே ஆதரிக்கும் பாஸ்ட் பவுலர்,
ஆடினாலும் ஆடாவிட்டாலும் நாற்காலிமனிதன் என்பதால் டீமில் இடம் உறுதி என்ற மமதையில் இருக்கும் தாங்கள் --
இவர்களெல்லாம் கொண்டதா ஒரு கிரிக்கெட் அணி? இது உருப்படுமா?
நான் பரிந்துரைக்கும் கிரிக்கெட் அணியைப் பாருங்கள்.
டீம் காப்டன்: கலைஞர் கருணாநிதி:
பந்துகள் காலடியில் குத்த நினைக்கும் பா ம க (பாகிஸ்தான் மக்கள் கட்சி) யின் உணர்வுகளைப் பாராட்டுகிறேன். அவர்களுடைய உணர்ச்சியில் பங்கேற்கிறேன் என்பதை மட்டும்தான் இப்போது சொல்ல முடியும். நம் அணியும் பா ம கவும் ஆசிய முன்னேற்றக்கூட்டணியின் அங்கங்கள். நாம் இப்போது போட்டி போடலாம், போரிடக்கூடாது. கொடுங்கோல் ஆட்சியான ஆ கி மு க (ஆஸ்திரேலிய கிரிக்கெட் முன்னேற்றக் கழகம்) கோப்பையை எடுத்துச் செல்லவிட்டுவிடக்கூடாது. அடித்துரைக்கும் பந்துகளைப் போடுங்கள், இடித்துரைக்கும் பந்துகளைப் போடாதீர்கள் எனக் கேட்டுக்கொள்கிறேன்
இப்படி பேசியே வெற்றிக்கனியைக் கொண்டுவந்துவிடுவார்.
உபகேப்டன்: தயாநிதி மாறன்
அனுபவம் குறைவென்று பார்க்காதீர்கள். இவர் அவுட் ஆகும் பந்துகளை தொலைக்காட்சியில் இருட்டடிப்பு செய்து, சிக்ஸர் அடித்ததை திரும்பத் திரும்பக் காட்டி எதிரணிக்கு கிலி ஏற்றிவிடுவார். அனைத்து எதிரணிவீரர்களையும் "ஒண்டிக்கு ஒண்டி வாறயா" என்று மெட்ராஸ் பாஷையில் கலாய்த்து பயமுறுத்துவார். கேப்டனை போட்டோ எடுக்கும் நேரங்களில் விட்டுப்பிரியாமல் அணுக்கமாக இருப்பார். உபயோகமான மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் மற்றும் பி ஆர் ஓ.
பீல்டிங் ஸ்பெஷலிஸ்ட் : வாட்டாள் நாகராஜ்
ஒரு ரன்கூட எதிரணிக்கு கொடுக்கமாட்டோம் என்று சூளுரைக்க வல்லவர். மற்ற பீல்டர்களுக்கும் அதே வெறியை ஏற்றிவிடுவார்.
கூக்ளி ஸ்பெஷலிஸ்ட்: ப சிதம்பரம்
வருமான வரி குறைப்பு என்று எதிரணி பேட்ஸ்மேன் நினைத்து அடித்து ஆடத் தயாராக இருக்கும் நிலையில் செஸ் என்று கூக்ளியாக மாற்றி விக்கெட் எடுக்க வல்லவர். எப்படியும் எதிரணிக்கு கடும் டார்ச்சராக இருப்பார். ரன் குறைவாக எடுத்தாலும் அதைவிடக்குறைவாக கொடுப்பார் - அல்லது அப்படி ஒரு பிம்பத்தை ஏற்படுத்திவிடுவார்.
ஆல்ரவுண்டர்கள்: காங்கிரஸ், பா ஜ க, கம்யூனிஸ்டுகள்
எந்த ஊரில் இருந்தாலும் அந்த ஊர் மக்கள் என்ன விருப்பப்படுகிறார்களோ அதைக்கொடுத்து மக்கள் ஆதரவைச் சேர்த்துவிடும் நிபுணர்கள். டீம் வெற்றி அடைகிறதா தோல்வி அடைகிறதா என்பதைவிட, தான் அந்த ஊரில் வெற்றி அடைகிறோமா தோல்வி அடைகிறோமா என்று மட்டுமே பார்க்கும் திறன் உடைய ஆல்ரவுண்டர்கள்.
ஓப்பனிங் பேட்ஸ்மேன்: விஜய டி ராஜேந்தர்
டேய்.. போடாதடா பந்து,
இப்படி வந்து குந்து.
பாடுவடண்டா சிந்து
என்கிட்ட வேணாண்டா லந்து
என்று பாட்டுப்பாடியே எதிரணியை பயமுறுத்தி, அவர்கள் ஓவர் ரேட்டை கச்சாமுச்சா என்று குறைத்து, அவர்களுக்கு பெனால்டி வருமாறு செய்துவிடுவார். இவர் ரன் எடுக்காவிட்டாலும், எதிரணியை கதறக்கதற அழவைத்து அவர்களையும் ரன் எடுக்கவிடாமல் செய்துவிடுவார்.
ஸ்லிப் பீல்டர் : ரஜினிகாந்த்
ஸ்லிப்பிலே பீல்ட் செய்யும்போது இவர் கொடுக்கற ஹவ் ஈஸ் இட்..வாய்ஸ்- இன் பலத்திலேயே அம்பயரை மிரட்டி விக்கெட் விழ வைப்பார். பவுலிங் போட, பேட்டிங் வர பயமா, மரியாதையா என்று தெரியவில்லை, வந்தா சூப்பரா ஆடுவார் என்று நிறைய பேர் நம்பிக்கொண்டிருக்கிறார்கள்.
நான் எப்ப வருவேன், எங்கே வருவேன்னு யாருக்கும் தெரியாது.. விக்கட் வுழுந்த வுடனே கரெக்டா வந்துடுவேன் - என்று பன்ச் டயலாக்குடன் உள்ளே வருவார், தான் ஒரு ரன் அடிச்சவுடனே செஞ்சுரிக்கு கைதட்டணும்னு எதிர்பார்ப்பார், என்பது போன்ற பயங்களும் உள்ளன.
விக்கெட் கீப்பர், பாஸ்ட் பவுலர்களைத் தேடி முடிவு செய்யும் உரிமையைத் தங்களுக்கே அளிக்கிறேன்.
மீண்டும் ஒருமுறை இது உங்கள் கண்களுக்கு மட்டும், தவறியும் பதிவுகளுக்கு வந்துவிடக்கூடாது என்பதை நினைவுறுத்துகிறேன்.
நன்றி,
(ஒ-ம்)பினாத்தலார்
21 comments:
//முதலில் செய்ய வேண்டிய 11 முட்டாள்களை மிகச் சரியாக தேர்ந்தெடுத்து விட்டீர்கள்//
இந்த 11 முட்டாள்களை விட மோசமான வடிகட்டிய முட்டாள்கள் சிலரை தேர்ந்திடுதிருக்கும் பெனாத்தலாருக்கு கண்டனம் :)).
--பதினொரு முட்டாள்களில் ஒருவன்.
இன்னாது... ஒரு வரம்பில்லாம போய்கிட்டு இருக்கு!!
பினாத்தல் சார், கலக்கிட்டீங்க.
தொடர் நாயகன் என்ற இலக்கை மட்டுமே வைத்து கொண்டிருக்கும் இந்த ஜியை மறந்த பெனாத்தலாரை மிக வன்மையாகக் கண்டிக்கிறேன்...
//தொடர் நாயகன் என்ற இலக்கை மட்டுமே வைத்து கொண்டிருக்கும் இந்த ஜியை மறந்த பெனாத்தலாரை மிக வன்மையாகக் கண்டிக்கிறேன்..//
என்னுடைய இலக்கை தட்டிப்பறிக்க நினைக்கும் ஜி-zயை மிக மிக வன்மையாக கண்டிக்கிறேன்..
அடபாவிகளா.. என்னை டீம் விட்டே தூக்கிட்டிங்களா????
அமைதி அமைதி நண்பர்களே நம்ம டீம் கேப்டன் பாசமிகு அண்ணன் கொத்ஸ் நமக்காக இங்கிலாந்து காடுகளில் பேட் தயாரித்து எடுத்து வர போயிருக்கும் இந்த தருணத்தில் பினாத்தலாரின் இந்தக் கடிதம் வெளி வந்துள்ளது..
அண்ணன் வருவார் பதில் கடிதத்தோடு.. அதுவரை நாம் சொல்ல விரும்புவது.. எங்க கேப்டன் கொத்தனாரை சீண்டாதீங்க... பினாத்தலாரே...
மணி அமைதி அமைதி நம்ம நாட்டாமை நாலு குதிரைப் பூட்டுன சேரியட்ல்ல கிளம்பி கொலச்சாமிக்குப் பொங்கல் வைக்க போயிருக்கார் அவர் வரட்டும் அப்புறம் ஸ்டார்ட் பஞ்சாயத்து பண்ணிரலாம்
பாஸ்ட் பவுலர் நீங்க பவுன்சர் போட வேண்டிய நேரத்துல்ல பந்து உருட்டி விடுறீங்களே நியாமுங்களா?
மணி , ஜீ... நம்மளைத் தொடருக்கேப் போகாம டர் ஆக்கணும்ன்னு பயிற்சியாளர் பீல் பண்ணிட்டார்.. இந்தக் கேப்ல்ல நீங்க அடிச்சுக்கல்லாமா?
//அடபாவிகளா.. என்னை டீம் விட்டே தூக்கிட்டிங்களா???? //
எலேய் ராம் தம்பி போற போக்குல்ல டீமையேத் தூக்கிருவாங்கப் போலிருக்கு நீயு உன்னியப் பத்தி பொலம்புற?
//மணி அமைதி அமைதி //
தல நீங்க சொல்றதால, சினம் கொண்ட இந்த சிங்கம் ரெஸ்ட் எடுக்குது :))
என் தன்னிலை விளக்கம் இங்கே:
http://penathal.blogspot.com/2007/03/05-mar-2007.html
இந்த பதிவை கன்னா பின்னாவென்று எதிர்க்கிறேன்.
மக்கள்ஸ் எதுக்கு இதுக்கு எல்லாம் டென்சன் ஆகிட்டு...நம்ம டீம்ல இருந்தாலும் இல்லனாலும்...நமக்கு எல்லாம் வெஸ்ட் இண்டீஸ்ல ரூம் போட்டு வெச்சு இருகாங்க...அந்த வேகாத வெயில்ல போயி விளையாடுறத விட ரூம்ல உக்காந்து மரம் கொத்தி கூட பேசிட்டெ குளு குளுனு மேட்சு பாக்கலாம் :-)
//தல நீங்க சொல்றதால, சினம் கொண்ட இந்த சிங்கம் ரெஸ்ட் எடுக்குது :))//
சிங்கம் ஓவரா ரெஸ்ட் எடுத்துராதே பிளைட் கிளம்புர நேரத்துக்கு கரெக்ட்டா ஆஜர் ஆயிடு..
ஆகா கோச் குப்புற கவுந்துட்டார் சாமி... எல்லாம் நம்மைப் பார்த்து ஒரு பயம் தான்
நாட்டாமை.. ஆகா வேணாம்ய்யா.. வம்படியாப் பேசி பிளைட ஏறப் போற நேரத்துல்ல காலை வாரி வைக்காதீங்க.. நீங்க்ச் சொல்லுரதைச் செய்யத் தான் நாம் கரீபியன் தீவுக்குப் போனாலும்.. ஊர் முழுக்க கவுரவமாக் கிரிக்கெட் விளையாடப் போறதா பதிவு எல்லாம் ரெடி பண்ணி வச்சிருக்கோம்ய்யா.. கெடுத்துப்புடாதீங்க அய்யா.
இப்படி கன்னா பின்னாவென்று ஒரு பதிவையும் போட்டது இல்லாம நம்ம டேமேஜர் கிட்ட வேற நம்மளை போட்டுக் குடுத்துட்டாரு இந்த பெனாத்தலார்ன்னு நினைக்கறேன்.
ஏன்னா இப்படி மூச்சு விட நேரமில்லாம ஆணி புடுங்க வைக்கிறாங்கப்பா. இதுவும் ஒரு நாள் மாறும் அப்படின்னு நினைச்சுக்கிட்டுதான் ஓட்டிக்கிட்டு இருக்கேன்.
நம்ம கப் வாங்கிறுவோமோ (அல்லது கப் வாங்க மாட்டோமோ - சென்னை மொழியில்)என்ற பயத்தில் எதிர் கட்சிக் காரர்கள் செய்யும் சதி திட்டம்தான் இது. அதில் மயங்கி நம் பெனாத்தலார் ஏமாந்ததுதான் வருத்தமான விஷயம்.
இருக்கட்டும். மீண்டும் வருகிறேன்.
எங்கள் அணியின் ரன் நாயகன் ( மாதவ்ன்ன்னு தப்பா எடுத்துக்கக் கூடாது) விக்கெட்களின் வீரன்.. கேப்டன் கொத்தனாரைத் தொடர்ந்து பயிற்சிக்கு வர விடாமல் சதி செய்யும் முயற்சியில் இறங்கியிருக்கும் பினாத்தலாரை வன்மையாகக் கண்டிக்கிறேன்...
அவரை ஆணி வேற புடுங்க விட்டு வேடிக்கைப் பார்ப்பது அடாதச் செயல் என்றும் எச்சரிக்கிறோம்.. சிங்கங்களே கண்டனங்களைக் கிலோ கணக்கில் அனுப்பி வைக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்..
//ஏன்னா இப்படி மூச்சு விட நேரமில்லாம ஆணி புடுங்க வைக்கிறாங்கப்பா. இதுவும் ஒரு நாள் மாறும் அப்படின்னு நினைச்சுக்கிட்டுதான் ஓட்டிக்கிட்டு இருக்கேன்.
//
இதைத்தான் பார்ம்லே இல்லைன்னு சொன்னேன்.. நான் சொன்னது தவறா? தவறா? வறா? றா?
என்னதான் விவகாரமாக கடிதம் எழுதினாலும் இந்த செய்தியில் குறிப்பிடப்பட்டு இருக்கும் பயிற்சியாளர் சுரேஷுக்கும் எங்கள் அணிப் பயிற்சியாளரான சுரேஷுக்கும் எந்த விதமான சம்பந்தமும் இல்லை என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம். இதைப் போன்ற செய்திகளால் கடும் புரளிகளில் சிக்கி இருக்கும் எங்கள் பயிற்சியாளர் சுரேஷுக்கு எங்கள் ஆதரவைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
Post a Comment