Tuesday, March 13, 2007

ஜொள்ளு ஜெயந்தி!!!!

காதலுக்குத் திருவிழாக் கொண்டாடி உலகமே ஓய்ந்திருந்த வேளையில் நம்ம பேட்டைப் பக்கம்.. பீர் பேரல்களும்... உரித்தக் கோழிகளும்..( அட மெய்யான கோழிங்கப்பா).. அவித்த முட்டைகளும் அளவுக்கதிகமாகக் கொண்டுப் போகப்படும் தகவல் நம்ம காதுக்கு வர விசாரிக்கக் களத்தில் இறங்கைனோம்..

தமிழுக்குச் சங்கம் வளர்த்த பாண்டிய மண்ணில் இருந்து புறப்படுகிறான் ஒரு லட்சிய இளைஞன்...தலைநகரம் சென்னை அன்னையென அவனை வாரி எடுத்து தாலாட்ட..

அமராவதி ஆத்தங்கரையில் அவன் சித்தம் சொக்கியச் சிட்டுக் குருவிகளும்..

பாண்டிய தேசத்தின் புழுதிக் காட்டில் அவன் கண் வழியேக் கொஞ்சிக் காவியம் பாடச் சொன்னக் கருவாச்சிகளும்...

திருவிழாக்களின் தீபம் சுமந்துச் சிரிச்சி சுளிச்சு அவன் சிறு இதயத்தில் சூடு வைத்த சிறுக்கிகளும்...

தாவணிப் போட்ட லேப் டாப்புகளும்.. எகிற அடித்த அவன் இதய லப் டப்புகளும்...

ஞாபகம் வருதே ஞாபகம் வருதேன்னு அவன் மெரீனாவின் ஈரக் கரையோரங்களில் கீதம் பாடிக் களைத்துச் சாய்ந்தான்...களைத்தவன் எழுந்து சிந்தித்தான்..

சைதாப்பேட்டை.. குரோம்பேட்டை.. வண்ணாரப்பேட்டை.. ராயப்பேட்டை. .ஏன் செத்தவனை செட்டில் செய்ய கண்ணம்மாபேட்டை.. கிருஷ்ணாம் பேட்டைன்னு என சென்னையில் தினுசா தினுசா ஆயிரம் பேட்டைகள் இருக்க...

சேட்டைகளின் கோட்டையாக ஒரு பேட்டை வேண்டும் என்ற உயர்ந்த லட்சியத்தோடு சிலிர்த்து எழுந்தான்...

பறவைகள் பலவிதம் அதில் ஒவ்வொன்றும் ஒருவிதம் என்று உரக்கப் பாடினான்..

சிந்தினான்...

இரவு பகல் பாராது சிந்தினான்...

ஓயவு ஒளிச்சல் இன்றி சிந்தினான்..

ஜொள்ளு என்னும் புனித திரவம் சிந்தி எழுப்பினான் பேட்டையை அது தான் இன்று உலக இணையத் தமிழர்களின் உதட்டோரம் குடியிருக்கும் குடியிருக்கும் நம் நிரந்தரப் புன்னகையாம்...

ஜொள்ளுப் பேட்டை...

ஜொள்ளுப் பேட்டை நிறுவிய நம் பாசத்துக்குரிய பாண்டி.. ஜொள்ளு பாண்டி மண்ணில் அவதரித்த இந்த திரு நாளாம் மார்ச் 14ஐ உலக ஜொள்ளு தினமாக அறிவிக்க வேண்டும் என உலகில் உள்ள அனைத்து அரசாங்கங்கள் துவங்கி நம்ம உள்ளூர் பஞ்சாயத்து வரைக் கேட்டுக் கொள்ளுகிறேன்... ......

நான் விசாரிக்கப் போன நேரம் ஜொள்ளுபேட்டையிலே மேடையிலே நின்னு நம்ம டவுசர் பாண்டி தான் இப்படி கண்டப் படி பீலிங் ஆகி மைக் பிடிச்சிப் பேசிகிட்டு இருந்தான்..

இதுன்னால்லே உங்களுக்கு எல்லாம் சொல்லிக்குரது என்னன்னா..

நம்ம பாசத்துக்குரிய பாண்டிக்கு ஜொள்ளு பாண்டிக்கு டூமாரோ ஹேப்பி பர்த்டே....


HAPPY BIRTHDAY JOLLU PONDY !!!!!
HAPPY BIRTHDAY JOLLU PONDY !!!!!
HAPPY BIRTHDAY JOLLU PONDY !!!!!

34 comments:

துர்கா|thurgah said...

தாங்கல சாமி....எப்படி இப்படி எல்லாம்?ஜொள்ஸ் உங்க பிறந்த நாளுக்கு நல்ல இருப்பீங்க(சாபம் கொடுக்கல.நிஜமா சொல்லுறேன்!)

அருட்பெருங்கோ said...

ஜொள்ளுப்பாண்டிக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்!!!

//அமராவதி ஆத்தங்கரையில் அவன் சித்தம் சொக்கியச் சிட்டுக் குருவிகளும்..//
என்னைய எதுக்குப்பா வம்புக்கு இழுக்கறீங்க? ;-)

ஜொள்ளுப்பாண்டி said...

ஆக்சுவலா நான் இந்த தலைப்ப பார்த்துட்டு யாரோ ஜெயந்தியாமே நம்மள விட பெரிய ஜொள்ளு போல இருக்கே. அதுனால தான் நம்ம அண்ணன் தேவு எழுதி இருகாரேன்னு வந்து பார்த்தா ஹிஹிஹிஹிஹிஹிஹி
அண்ணே இப்படி பப்ளிக்கா .... :))))))))) ஏன்? ஏன் ? :)))))))))

ஜெயந்திக்கு இப்படி ஒரு அர்த்தம் இருக்குன்னு இப்போதானே மண்டைக்கு ஒரைக்குது !!! ;))))))
அண்ணே ஜாக்கிரதை ஜெயந்தின்னு ஆராச்சும் இருக்க போறாக. அப்புறம் பிரிச்சு மேஞ்சுருவாக ;)))))))))))

நாகை சிவா said...

நாளை பிறந்த நாள் காணும் நம் ஜொள்ளின் ஜொள்ளரை, இன்று போல் என்றும் ஜொள்ளு விட்டுக் கொண்டே இருக்க வேண்டும் என மனதார வாழ்த்துகிறேன்.

நாகை சிவா said...

//ஜொள்ளு பாண்டி மண்ணில் அவதரித்த இந்த திரு நாளாம் மார்ச் 14ஐ உலக ஜொள்ளு தினமாக அறிவிக்க வேண்டும்//

இந்த கோரிக்கையை நான் வழிமொழிகிறேன்.

மேலும் இதை நிறைவேற்ற ஒரு கையெழுத்து இயக்கம் தொடங்கும்படி நம் பாசத்துக்குரிய தேவ் வை கேட்டுக் கொள்கிறேன்.

துளசி கோபால் said...

ஜொள்ளுக்கு ஜெயந்தியா?

ஹை........ அப்ப ஸ்கூலு லீவா? :-))))

ஜொள்ளுப்பாண்டி said...

// அருட்பெருங்கோ said...
ஜொள்ளுப்பாண்டிக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்!!!

//அமராவதி ஆத்தங்கரையில் அவன் சித்தம் சொக்கியச் சிட்டுக் குருவிகளும்..//
என்னைய எதுக்குப்பா வம்புக்கு இழுக்கறீங்க? ;-)//

அருளு !!! கலங்காதீங்கண்ணா நாமளும் அந்த ஆத்துல முழுகி முத்தெடுத்தவகதேன் !! ;))))))))அதேன் !!

கைப்புள்ள said...

//ஜொள்ளுக்கு ஜெயந்தியா?

ஹை........ அப்ப ஸ்கூலு லீவா? :-))))//

முட்டாயும் குடுப்பாங்களா? அட! டிரை டே வேறயா?

நாளை ஆயிரத்தி ஐநூறு ரூபாய் நோட்டில் இடம் பிடிக்கப் போகும் தேசத் தலைவர் மங்காப்புகழோன் ஜொள்ளுப்பாண்டி பல்லாண்டு காலம் பல நூறு காலம் வாழ வாழ்த்துகிறேன்.

இலவசக்கொத்தனார் said...

ஜொள்ளுக்கு ஒரே ஒரு ஜெயந்தியை மட்டும் கொடுத்து மற்றவர்களை கொடுக்காத தேவுக்கு கண்டனங்கள்.

ஆமா இலியானா, நம்ம வெட்டி சொல்ற சாமியார் பொண்ணு அப்படின்னு காலம் மாறுது இவரு என்ன இன்னும் ஜெயந்தி காலத்துலையே இருக்காரு? அவ்வளவு வயசாகிப் போச்சா?

ஜொள்ளுமாமாவிற்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

ஜி said...

ஜொள்ளுப் பாண்டி அண்ணன் பல்லாண்டு வாழ வாழ்த்தும் இன்னொரு ஜொள்ளன்....

ஜி said...

இருந்தாலும் அருள வீணா வம்புக்கு இழுத்துப் புட்டியளே தேவ்....

ஜி said...

//அண்ணே ஜாக்கிரதை ஜெயந்தின்னு ஆராச்சும் இருக்க போறாக. அப்புறம் பிரிச்சு மேஞ்சுருவாக ;)))))))))))//

இருக்காங்க அப்பு.. இருக்காங்க...

நான் அவிங்களுக்கு இன்ஃபர்மேஷன பாஸ் பண்ணிடுறேன்...

கோபிநாத் said...

ஜொள்ளுப்பாண்டிக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்!!!

வாழ்த்துக்கள்!!! வாழ்த்துக்கள்!!! வாழ்த்துக்கள்!!! வாழ்த்துக்கள்!!! வாழ்த்துக்கள்!!! வாழ்த்துக்கள்!!!

கோபிநாத் said...

பிறந்தது முதல் இன்று வரை இம்மி அளவும் ஜொள்ளு குறையாமால் விட்டு கொண்டிருக்கும்

எங்கள் சிங்கம், தங்கம், வைரம்,...த்துக்கு

மேலும் ஒருமுறை பிறந்த நாள் வாழ்த்துக்கள் சொல்லி கொள்கிறேன்.

கோபிநாத் said...

வாழ்க நீ
வழிக உன் ஜொள்ளு..

Syam said...

ஜொல்ஸ் நம்ம இனமா...பிறந்தநாள் வாழ்த்துக்கள்...வருடம் பூராம் மடை திறந்த வெள்ளம் போல ஜொல் விட வாழ்த்துக்கள் :-)

Syam said...

//நாளை ஆயிரத்தி ஐநூறு ரூபாய் நோட்டில் இடம் பிடிக்கப் போகும் தேசத் தலைவர் மங்காப்புகழோன் ஜொள்ளுப்பாண்டி பல்லாண்டு காலம் பல நூறு காலம் வாழ வாழ்த்துகிறேன்//

1850 ரூபா நோட்டுல இடம் பிடிக்க போகும் நம்ம தல சொன்னத நான் வழி மொழிகிறேன் :-)

.:: மை ஃபிரண்ட் ::. said...

நீங்க எப்பேயோ கொடுத்த லிங்க்.. இப்பத்தான் படிக்கிறேன்..

.:: மை ஃபிரண்ட் ::. said...

வாழ்த்துக்கள் ஜொல்லு.. :-D

Anonymous said...

//ஜெயந்திக்கு இப்படி ஒரு அர்த்தம் இருக்குன்னு இப்போதானே மண்டைக்கு ஒரைக்குது !!! ;))))))//

ஏகபத்னிவிரதன் ஆனதனால் ஸ்ரீராமரின் பிறந்த நாளை பேருக்குக்கூட ஸ்ரீராம ஜெயந்தி என்று சொல்லாமல் ஸ்ரீராம நவமி என்கிறார்களாம்

வெட்டிப்பயல் said...

பிறந்த நாள் வாழ்த்துக்கள் ஜொள்ஸ்...

இன்று போல் என்றும் ஜொள்ஸ் விட்டு எங்களை வழி நடத்த வேண்டி கொள்கிறேன் :-)

மனதின் ஓசை said...

//தாங்கல சாமி....எப்படி இப்படி எல்லாம்?ஜொள்ஸ் உங்க பிறந்த நாளுக்கு நல்ல இருப்பீங்க(சாபம் கொடுக்கல.நிஜமா சொல்லுறேன்!)
//

ரிப்பிட்டேய்...

பாண்டி.. இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

ஜொள்ளுப்பாண்டி said...

//இலவசக்கொத்தனார் said...
ஜொள்ளுக்கு ஒரே ஒரு ஜெயந்தியை மட்டும் கொடுத்து மற்றவர்களை கொடுக்காத தேவுக்கு கண்டனங்கள்.//

கொத்ஸ் அட நீங்களும்தான் புரியாம இருக்கியளா??

//ஆமா இலியானா, நம்ம வெட்டி சொல்ற சாமியார் பொண்ணு அப்படின்னு காலம் மாறுது இவரு என்ன இன்னும் ஜெயந்தி காலத்துலையே இருக்காரு? அவ்வளவு வயசாகிப் போச்சா?

ஜொள்ளுமாமாவிற்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள். //

இதுதானே வேணாங்கறது ??;)))))))
என்னோட இஞ்சி இடுப்பை படிக்கலைன்னு தெரியுது ! போய் படிச்சு வெண்பாவையும் ஜொள்ளையும் சேர்த்து வடிங்கண்ணே !:))))))))))

ஜொள்ளுப்பாண்டி said...

// ஜி - Z said...
ஜொள்ளுப் பாண்டி அண்ணன் பல்லாண்டு வாழ வாழ்த்தும் இன்னொரு ஜொள்ளன்.... //

நெம்ப தேங்க்ஸ் ஜி ;)))))

//இருக்காங்க அப்பு.. இருக்காங்க...

நான் அவிங்களுக்கு இன்ஃபர்மேஷன பாஸ் பண்ணிடுறேன்... //

ஜி என்னாங்க ஜி யாருங்க அவங்க ? ஏதொ வெளையட்டுக்கு சொன்னா ...:):):))))))

ஜொள்ளுப்பாண்டி said...

// கைப்புள்ள said...
நாளை ஆயிரத்தி ஐநூறு ரூபாய் நோட்டில் இடம் பிடிக்கப் போகும் தேசத் தலைவர் மங்காப்புகழோன் ஜொள்ளுப்பாண்டி பல்லாண்டு காலம் பல நூறு காலம் வாழ வாழ்த்துகிறேன். //

தல உங்க வாழ்த்தைப் படிச்சுட்டு புல்லரிக்குதே!!! :)))))) ரொம்ப தேங்ஷ் தல !! :)))

ஜொள்ளுப்பாண்டி said...

//கோபிநாத் said...
வாழ்க நீ
வழிக உன் ஜொள்ளு.. //

கோபிநாத் என்னே ஒரு வாழ்த்து என்னே ஒரு வாழ்த்து !! அல்டிமேட் !! :)))))))))))

ஜொள்ளுப்பாண்டி said...

// Syam said...
ஜொல்ஸ் நம்ம இனமா...பிறந்தநாள் வாழ்த்துக்கள்...வருடம் பூராம் மடை திறந்த வெள்ளம் போல ஜொல் விட வாழ்த்துக்கள் :-) //

வணக்கம நட்டாமை :)))))))
நாம்ம இனமான சிங்கந்தேன் ;)))))) மடைதிறந்த வெள்ளம் மாதிரியா???:))))))))))))

ஜொள்ளுப்பாண்டி said...

//மை ஃபிரண்ட் ::. said...
வாழ்த்துக்கள் ஜொல்லு.. :-D //

நன்றிங்க மை ஃபிரண்ட் :)))))))

ஜொள்ளுப்பாண்டி said...

//ஏகபத்னிவிரதன் ஆனதனால் ஸ்ரீராமரின் பிறந்த நாளை பேருக்குக்கூட ஸ்ரீராம ஜெயந்தி என்று சொல்லாமல் ஸ்ரீராம நவமி என்கிறார்களாம் //

அட அனானி இப்படி ஒரு கதை நெசமாதேன் இருக்கா??;)))))))

ஜொள்ளுப்பாண்டி said...

// வெட்டிப்பயல் said...
பிறந்த நாள் வாழ்த்துக்கள் ஜொள்ஸ்...

இன்று போல் என்றும் ஜொள்ஸ் விட்டு எங்களை வழி நடத்த வேண்டி கொள்கிறேன் :-) //

நெம்ப டேங்க்ஸ் வெட்டி :)))) அட என்னா இது நான் வழி நடத்தனுமா?? சும்மா இருங்க ;)))))))))

ஜொள்ளுப்பாண்டி said...

// துர்கா said...
தாங்கல சாமி....எப்படி இப்படி எல்லாம்?ஜொள்ஸ் உங்க பிறந்த நாளுக்கு நல்ல இருப்பீங்க(சாபம் கொடுக்கல.நிஜமா சொல்லுறேன்!) //

துர்கையம்மனே ;))))))) உங்களூகு மனசு பூ மாதிரிங்க எனக்கு சாபம் எல்லாம் கொடுக்க மாட்டிங்கன்னு எனக்கு தெரியுங்க !! :)))))))))

ஜொள்ளுப்பாண்டி said...

// மனதின் ஓசை said...
//தாங்கல சாமி....எப்படி இப்படி எல்லாம்?ஜொள்ஸ் உங்க பிறந்த நாளுக்கு நல்ல இருப்பீங்க(சாபம் கொடுக்கல.நிஜமா சொல்லுறேன்!)
//

ரிப்பிட்டேய்...

பாண்டி.. இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள். //

ரொம்ப ரொம்ப தேங்ஸ்சுங்க :)))))))))

சுந்தர் / Sundar said...

ஜொள்ளுப்பாண்டிக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்!!!

உங்கள் நண்பன் said...

பாசக்காரப் பயல்களுக்கு பிறந்தநாள் வாழ்த்து தாமதமாகச் சொல்ல வர்ரதே வேலையாப் போச்சு...

பரவாயில்லை ஜொள்ளூ யாரு நம்ம பயதானே...

பிறந்த நாள் வாழ்த்துக்கள் பாண்டி.

//நாளை ஆயிரத்தி ஐநூறு ரூபாய் நோட்டில் இடம் பிடிக்கப் போகும் தேசத் தலைவர் மங்காப்புகழோன் ஜொள்ளுப்பாண்டி பல்லாண்டு காலம் பல நூறு காலம் வாழ வாழ்த்துகிறேன்.
//

தல எம்புட்டு வாங்குனாலும் அடங்க மாட்டேங்கிதே...:))))

தேவு கூட கிரிக்கிட்டு வெளையாட"ஆண்டி"குவா போகும் போது உனக்கு அங்க வச்சு பரிசு தர்ரேன் , சரியா மக்கா...

அன்புடன்...
சரவணன்.

tamil10