Tuesday, March 27, 2007

சற்றுமுன்: இந்திய வீரர்களும் ஸ்காட்லாண்ட் யார்ட் போலீஸும்

சற்றுமுன் பதிவு பதிவாளர்கள் கவனிக்கத் தவறிய செய்தி... அவங்க கோல் விட்டதால நம்ம கச்சேரியில்ல போட வேண்டியதாப் போச்சு...

சிறில் அலெக்சைக் கால் பண்ணா ஸ்லீப்பிங் நோ டிஸ்ட்ரபன்ஸ்ன்னு வருது...
இந்திய டீம் சம்பந்தமான நியூஸ்ங்கோன்னு சொன்னாலே மணிகண்டன்.. பேட் வெர்ட்ஸ்ல்ல திட்டுறார்..

சரி சரி... நானேச் சொல்லிடுறேன்

ஜமைக்கா இருக்க ரிச்சர்ட்ஸ் நகர் டைம்ஸ் சிறப்பு செய்தியாளர் மொக்கப் போண்டா டுமேட்டோங்கறவர் நம்ம இந்தியால்ல கைக்குக் கிடைச்ச நம்பருக்குச் சுத்திச் சொன்னத் தகவ்ல்...

" பாப் யூல்மர் கொலை வழக்கில் இது வரைச் சொல்லிக் கொள்ளும் படி பெரிதானக் கைதுகள் எதுவும் ந்டைப்பெறாத நிலையில்... வருத்தம் தோய டீக் குடித்துக் கொண்டிருந்த ஸ்காட்லாண்ட் யார்ட் மற்றும் ஜமைக்காப் போலீஸ் மார்க் ஷீல்ட்ஸ் தீடிரென ஒரு முடிவு எடுத்துள்ளாராம்

அதாவது இந்தக் கேசில் சந்தேகத்தின் பேரில் இந்திய அணியினர் அனைவரையும் கைதுச் செய்து ஜமைக்காவின் சிறை ஒன்றில் கடுமையானப் பாதுகாப்போடு அடைக்க முடிவுச் செய்துள்ளாராம்.. இது குறித்து மொக்காபோண்டோவிடம் ஆப் த ரிக்கார்ட்டாக ஜமைக்காப் போலீஸ் கான்ஸ்டபிள் ஓருவர் கூறியதாவது...(மைக்கேல் ஹோல்டிங் ACCENTல் படிக்கவும்)

"THE INDIAN PLAYERS ARE TERRIFIED TO GO BACK HOME SEEMINGLY HORRIFIED AT THE WAY THE INDIAN FANS HAVE UNLEASHED THE WRATH ON THEIR FAILURE IN THIS WORLDCUP..THEY ARE IN NO MOOD TO RETURN HOME..THEIR SPONSORS ARE EXERTING SEVERE PRESSURE ON THEM TO STAY IN WINDIES TILL THE WORLD CUP IS OVER... SO AFTER DEEP DISCUSSIONS WITHIN THE TEAM MANAGEMENT THEY HAVE ARRIVED AT THIS DECISION OF PLACING THEMSELVES UNDER ARREST.... "

இதை விரைவில் ஜமைக்காப் போலீஸ் உலகச் செய்தி நிறுவனங்களுக்குத் தெரிவிக்கும் என மொக்கப் போண்டா நம்மிடம் தெரிவித்தார்..

இந்தியாவுக்கு இவிங்க வந்தா இங்கிட்டு பெரியக் கொலைக் கேசாயிரும்ன்னு பயந்து அங்கிட்டு செட்டில் ஆக இப்படி முடிவுப் பண்ணிட்டாங்களோ....

செய்தி உண்மையா இல்லயான்னு தெரியல்ல சாமி... ஆனா உங்க கிட்டச் சொல்லிட்டேன்..

சாயங்காலம் வெட்டி பேட்டியோட மீட் பண்ணுவோம்

18 comments:

.:: மை ஃபிரண்ட் ::. said...

முதல்ல கைத்தட்ட நான் வந்தாச்சு! ;-)

துளசி கோபால் said...

ஜனங்க கொலவெறியோட இருக்காம். அதான்............ இப்படி

நாகை சிவா said...

ஒன்றும் சொல்லாதே! ஏதுவும் சொல்லாதே!!!

இது எனக்கு நான் சொல்லிக்கிட்டது...

தேவ் | Dev said...

மை பிரெண்ட் ஜோரானக் கைத்தட்டு தான் :-)

துளசி அக்கா மெய்யாலுமே நம்ம பசங்க இங்கே வந்து பல கொல கேசு ஆவுறதுக்கு அவங்க அங்கேயே ஒரு கொலை கேசுன்னு உக்காந்துரலாம் :-)

சொல்லத் தான் நினைக்கிறேன் புலிக்குட்டி ஆனா சொல்லாமலே இருக்கிறேன் ஹி..ஹி

இராம் said...

ஒன்னும் சொல்லுறதுக்கு இல்லே போர்வாளு, வெள்ளிக்கிழமை நைட் 8 மணிக்கு ஆரம்பிச்சு சனிக்கிழமை விடியக்காலை 5 மணி வரைக்கும் இதைப் பத்தி பேசி முடிச்சாச்சு.....

:((

இத்தனை தடவை தோத்தாலும் இன்னுமாடா நம்மளை நம்புறாய்ங்கே'ன்னு தல சொல்லுறமாதிரி நம்ம கேப்டன்'யும் சொல்லவிடப்பிடாது ;)

உங்கள் நண்பன் said...

மக்கா, மீட்டிங் மாலைனு சொன்ன, மணி இப்போவே 5 ஆச்சு, இதுக்குமேல தாங்காது, கூட்டிவந்த பயக பூரம் சவுண்டக் குடுக்குறாய்ங்க, நானும் உன்னை நம்பி 2 லாரி புடுச்சு பயல்களை அள்ளிப் போட்டுகிட்டு வந்திருக்கேன், பயக பூரம் கிரிக்கெட் காரய்ங்க மேல இருக்குற கொலவெறில இருக்காய்ங்க அதுனால , இன்னைக்கி மீட்டிங்கப் பத்தி ஒன்னும் கவலப் படாத யார்யாரெல்லம் நம்ம வெட்டிக்குப் பிட்டு போடுராங்கன்னு ஒரு லிஸ்ட் மட்டும் கொடு, ஒரு காட்டுக் காட்டிருவோம்,


அன்புடன்...
சரவணன்

வல்லிசிம்ஹன் said...

வெறியா.??
பேசிப் பேசி அலுத்து விட்டது.
இதுக்கும் மேல இவங்க இன்னோரு கேம் சொன்னாங்கனு வச்சிக் கிட்டாலும் மீண்டும் பாக்கப் போறது நீதானெனு தோணுது.
அடி வாங்கியே பழக்கப் பட்டுப் போச்சு.:-)
நல்ல போடு போட்டிங்க அவங்களை.

இலவசக்கொத்தனார் said...

அதாவதுங்க, ஒருத்தன் வில்லனோட கையாளா இருப்பான். அவனுக்கு ஹீரோவோட தங்கச்சியோட காதல் வந்திடும். தான் யாருன்னு சொல்லாம அவங்க வீட்டுக்குப் போயிட்டு வந்துக்கிட்டு இருப்பான். அந்த பொண்ணு அண்ணந்தான் கேப்டன். போலீஸ் ஆபீஸர்.

நம்ம ஆளு கொஞ்சம் கொஞ்சமா மனம் திருந்தி அப்ரூவராயிடுவான். முதலில் அவனை ஸ்டேஷனில்தான் வைப்பாங்க. ஆனா அந்த ஸ்டேஷனில் ஒரு பொல்லாத போலீஸ் ஆபீஸரும் இருப்பாரு. அவர்தான் நாசர். நம்ம வில்லனுக்கு இவரும் கையாள். அப்ரூவைரைப் போட்டுத்தள்ள வில்லன் நாசருக்கு ஆர்டர் போட்டுட்டாரு. இவனைத் தேடி ஸ்டேஷனுக்கு வந்தா அங்க காணும்.

என்ன விஷயமுன்னு பார்த்தா, நம்ம கேப்டன் இவனைத் தூக்கிட்டு போயி தன் வீட்டில் வெச்சு பாதுகாக்கறாரு.

(என்னமோ உங்க பதிவைப் படிச்சா இப்படி எல்லாம் மனசுக்குள்ள ஒன்லைன் ஓடுதப்பா!!!)

மணிகண்டன் said...

//கிரிக்கெட் சம்பந்தமான நியூஸ்ங்கோன்னு சொன்னாலே மணிகண்டன்.. பேட் வெர்ட்ஸ்ல்ல திட்டுறார்..
//

ஒரு திருத்தம் தேவ், இந்திய அணி சம்பந்தமான நியூஸ்னு போடுங்க. கிரிக்கெட் என்ன பாவம் பண்ணுச்சு?

சிறில் அலெக்ஸ் said...

அடடா இந்த செய்திய விட்டுட்டோமே.

அன்னைக்கு மிஸ்ட் கால் 000000000லேந்து வந்திருச்சே அது நீங்கதானா.?

:))

தேவ் | Dev said...

//ஒன்னும் சொல்லுறதுக்கு இல்லே போர்வாளு, வெள்ளிக்கிழமை நைட் 8 மணிக்கு ஆரம்பிச்சு சனிக்கிழமை விடியக்காலை 5 மணி வரைக்கும் இதைப் பத்தி பேசி முடிச்சாச்சு.....

:((//

புரியுது ராம் :((

தேவ் | Dev said...

//இத்தனை தடவை தோத்தாலும் இன்னுமாடா நம்மளை நம்புறாய்ங்கே'ன்னு தல சொல்லுறமாதிரி நம்ம கேப்டன்'யும் சொல்லவிடப்பிடாது ;) //

கண்டிப்பா ராம்.. அதுக்கு என்னப் பண்ணலாம்ன்னு நீயே ஒரு ஐடியா கொடுப்பா

தேவ் | Dev said...

சரா வெட்டிக்கு பிட் போடுறேன்னு சொல்லிட்டு அப்பீட் ஆயிட்டே நீயு.. இதே கெட்டப் பழக்கமாப் போச்சு உனக்கு... உனக்கும் ஒரு பிட் போடணும் போலிருக்கு ;-)

தேவ் | Dev said...

//வெறியா.??
பேசிப் பேசி அலுத்து விட்டது.
இதுக்கும் மேல இவங்க இன்னோரு கேம் சொன்னாங்கனு வச்சிக் கிட்டாலும் மீண்டும் பாக்கப் போறது நீதானெனு தோணுது.
அடி வாங்கியே பழக்கப் பட்டுப் போச்சு.:-)
நல்ல போடு போட்டிங்க அவங்களை.//

என்னங்கப் பண்றது ஓட்டு வாங்குறவனும் நம்மளை ஏமாத்துறான்.. பேட் தூக்குறவனும் நம்மளை ஏமாத்துறான்.. ம்ம்:(

தேவ் | Dev said...

//அதாவதுங்க, ஒருத்தன் வில்லனோட கையாளா இருப்பான். அவனுக்கு ஹீரோவோட தங்கச்சியோட காதல் வந்திடும். தான் யாருன்னு சொல்லாம அவங்க வீட்டுக்குப் போயிட்டு வந்துக்கிட்டு இருப்பான். அந்த பொண்ணு அண்ணந்தான் கேப்டன். போலீஸ் ஆபீஸர்.

நம்ம ஆளு கொஞ்சம் கொஞ்சமா மனம் திருந்தி அப்ரூவராயிடுவான். முதலில் அவனை ஸ்டேஷனில்தான் வைப்பாங்க. ஆனா அந்த ஸ்டேஷனில் ஒரு பொல்லாத போலீஸ் ஆபீஸரும் இருப்பாரு. அவர்தான் நாசர். நம்ம வில்லனுக்கு இவரும் கையாள். அப்ரூவைரைப் போட்டுத்தள்ள வில்லன் நாசருக்கு ஆர்டர் போட்டுட்டாரு. இவனைத் தேடி ஸ்டேஷனுக்கு வந்தா அங்க காணும்.

என்ன விஷயமுன்னு பார்த்தா, நம்ம கேப்டன் இவனைத் தூக்கிட்டு போயி தன் வீட்டில் வெச்சு பாதுகாக்கறாரு.

(என்னமோ உங்க பதிவைப் படிச்சா இப்படி எல்லாம் மனசுக்குள்ள ஒன்லைன் ஓடுதப்பா!!!) //

இம்மா பெரிய பின்னூட்டத்தை அடிச்சுட்டு இதை ஒன் லைன்ன்னு சொல்லி என்னை நம்பச் சொல்லுறீங்களா? இதுல்ல கண்டிப்பா உகு இருக்கு ஆனா எனக்குத் தான் புரியல்ல:-)

தேவ் | Dev said...

//ஒரு திருத்தம் தேவ், இந்திய அணி சம்பந்தமான நியூஸ்னு போடுங்க. கிரிக்கெட் என்ன பாவம் பண்ணுச்சு?//

இந்தாப் பதிவில் மாத்திடுறேன்... கிரிக்கெட் நல்லாத் தான் இருக்கு இந்திய கிரிக்கெட்ட(வ)ர்கள் தான் சரியில்ல

தேவ் | Dev said...

//அடடா இந்த செய்திய விட்டுட்டோமே.

அன்னைக்கு மிஸ்ட் கால் 000000000லேந்து வந்திருச்சே அது நீங்கதானா.?

:)) //

அய்யோ பார்ட்னர் அதே நம்பர் தான்.. அந்த நம்பர்ல்ல நம்ம மொக்கப் போண்டா இந்த முக்கியச் செய்தியை எனக்குச் சொன்னார்.. எப்படியோ மக்களுக்கு செய்தியைச் சொல்லிட்டோம்ல்ல.. :-)

Anonymous said...

tibia money tibia gold tibia item runescape money runescape gold tibia money tibia gold runescape gold runescape accounts tibia gold tibia money runescape money runescape gp buy runescape gold tibia gold tibia item buy runescape money runescape gold runescape items tibia money tibia gold

tamil10