Tuesday, March 06, 2007

புலிக்குட்டி!!! புலிக்குட்டி!!! பாசக்காரப் புலிக்குட்டி!!!!

காட்டுக்குள்ளே திருவிழாவாம் டும் டும் டும்...

அனிமல் கிங் டம்மே அல்லலோ கில்லோல படுது டும் டும் டும்...

பறவைக் கூட்டம் எல்லாம் பாட்டு படிக்க டும் டும் டும்...


கரையோரம் டால்பின் கும்பல் டான்ஸ் ஆட டும் டும் டும்...

செடியும் கொடியும் காத்துல்ல கரகம் ஆட டும் டும் டும்...

மரமெல்லாம் பூச்சொறிய டும் டும் டும்..

பாயும் நதியும் பணிந்து வந்து வாழ்த்துச் சொல்ல டும் டும் டும்...

வானம் வில்லாய் வளைஞ்சு ரங்கோலி போட டும் டும் டும்...

கானகமே கதிகலங்க டும் டும் டும்...


பூமியே ஒரு குலுங்கு குலுங்க டும் டும் டும்....


சிங்கக் கூட்டம் சேர்ந்து சொல்லிச்சாம்

புலிக்குட்டி!!! புலிக்குட்டி!!! பாசக்காரப் புலிக்குட்டி!!!!

இன்னிக்கு உனக்கு ஹேப்பி பர்த் டே டா... டும் டும் டும்...

சூடான் காடுகளில் இன்று தன் பிறந்த நாளைக் கொண்டாடும் பாசக்கார தம்பி புலிக்குட்டி சிவாவுக்கு சென்னைக் கான்கீரிட் காடுகளில் இருந்து கச்சேரிக்காரனின் அன்பு வாழ்த்துக்கள்...

35 comments:

MyFriend said...

நீங்க போஸ்ட்ட் போட்டா என்ன.. போடாடின்னா என்ன.. ஆனால், முதல் முதல் வாழ்த்து சொன்னேன்.. புலிக்குட்டிக்கு நாந்தான் முதல்ல வாழ்த்து சொன்னேண்.. இங்கேயும் நாந்தான் 1st.. hehehe

Anonymous said...

இது என்ன சங்கத்து புலிகுட்டி?நான் சங்கத்து சிங்கத்தைதான் கேள்விப்பட்டு இருக்கேன்.புலிகுட்டி யாரு.சிவா நீங்கள் புலிதானே எப்பொழுது இருந்து புலிக்குட்டி?

நாகை சிவா said...

பாசத்தின் இலக்கணமே!

உன் பாசத்தின் முன் தலை வணங்குகிறேன்.

நாளை கூற வேண்டிய வாழ்த்தை நீர் பதிவின் மூலமும், மை பிரண்ட் கதைத்தல் மூலமும் முன்பே கூறி என் மனதை உங்கள் பாசத்தால் நிரப்பி வீட்டீர்கள். இதனால் இன்று இரவு என்னால் உணவு உட்கொள்ள முடியாது போல இருக்கே
;-)

நாகை சிவா said...

இந்த டும்.... டும்.... டும்........ பாத்ததும் ஒரு நிமிசம் ஆடிப் போயிட்டேன்பா.......

இது மேளம் அடிப்பதால் வர டும்மா????

நாகை சிவா said...

//சென்னைக் கான்கீரிட் காடுகளில் //

செம உள்குத்தும்மா!!!

இலவசக்கொத்தனார் said...

சூடான் காடா? பையன் திரும்ப வந்துட்டாருன்னு இல்ல நினைச்சேன். அப்புறம் சூடானில் சூடான மணற்காடுகள்தான்னு நினைக்கிறேன்.

சேதியைப் படிக்க ஆரம்பிச்சா வேற விசேஷமுன்னு நினைச்சேன்.

புலிக்குப் பிறந்தநாள் வாழ்த்துக்கள்!!

மணிகண்டன் said...

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் சிவா!

கப்பி | Kappi said...

வாழ்த்துக்கள் புலி!!

Unknown said...

Happy Birthday Pulipandi!!!

இராம்/Raam said...

புலிக்குட்டிக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் :)

Syam said...

அடடே..புலிக்குட்டிக்கு இன்னைக்கு பொறந்த நாளா...பய புள்ள சொல்லவே இல்ல :-)

Syam said...

ஹாப்பி பர்த்டே புலிக்குட்டி!!!

Santhosh said...

பிறந்த நாள் வாழ்த்துக்கள்மா புலி.

ஜி said...

பிறந்தநாள் வாழ்த்துக்கள் சூடான் புலி...

அபி அப்பா said...

சூடான வாழ்த்துக்கள் புலி!! அடுத்த பிறந்த நாள் ஜோடிபுலியோட, அதுக்கு அடுத்த பிறந்த நாள் அடிஷனலா குட்டி புலியோட அப்டீன்னு....வாழ்த்தறேன்!!!!

வெட்டிப்பயல் said...

இது செல்லாது... நான் இன்னைக்கு போடலாம்னு பார்த்தா ஒரு நாள் முன்னாடியே போட்டுட்டீங்க...


இருந்தாலும் சொல்லிக்கறேன்...

பிறந்த நாள் வாழ்த்துக்கள் புலி!!!

மனதின் ஓசை said...

சூடான் புலி சிவாவுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

இன்றும் என்றும் உள்ளத்தில் உறுதியுடனும், உதட்டில் புன்னகையுடனும் மொத்ததில் இளமையுடனும் இருக்க என் இனிய வாழ்த்துக்கள்.

ஜொள்ளுப்பாண்டி said...

புலிகுட்டிக்கு இன்னிக்கு மான் அடிச்சு விருந்து வெச்சுடலாம் ! அல்லாறும் சூடானுக்கு வந்துருங்கப்பூ !! புலி சரக்கு ரெடியா ?? பிறந்த நாள் வாழ்த்துக்கள் !! :)))))))

Anonymous said...

புலிகுட்டியோ புலியோ என்று ரொம்ப குழம்பி போய் பிறந்த நாள் வாழ்த்தை சொல்லமால் போய்விட்டேன்.

பிறந்த நாள் வாழ்த்துக்கள்
Happy Birthday
Selamat Hari Jadi

எனக்குத் தெரிந்த அனைத்து மொழிகளிலும் புலிக்கு வாழ்த்து சொல்லிவிட்டேன்.

முத்துலெட்சுமி/muthuletchumi said...

வாழ்த்துக்கள்.

G.Ragavan said...

புலிக்குட்டிக்குப் பிறந்த நாள் வாழ்த்துகள். உலகத்தின் மீது நட்போடு உள்ளம் திறந்த நாள் வாழ்த்துகள். நலமும் வளமும் பெற்று நீடு வாழ்க. ழ்க. க.

நாகை சிவா said...

வாழ்த்துக் கூறி அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

//புலிகுட்டி யாரு.சிவா நீங்கள் புலிதானே எப்பொழுது இருந்து புலிக்குட்டி? //

:-))))) தாய்க்கு என்றுமே தன் பிள்ளைகள் குழந்தைகள் தானே. அது போல நம்ம தேவ்க்க்கு நான் என்றுமே சின்ன பையன் தான். அதான் அப்படி

நாகை சிவா said...

//பிறந்த நாள் வாழ்த்துக்கள்
Happy Birthday
Selamat Hari Jadi

எனக்குத் தெரிந்த அனைத்து மொழிகளிலும் புலிக்கு வாழ்த்து சொல்லிவிட்டேன். //

நன்றிங்க துர்கா.
Thanks Thurgha
remercie le thurgha
Sukran Jesilan Thurgha
Thanyavar Thurgha
agradece thurgha

இது எல்லாம் எனக்கு தெரிஞ்ச மொழி நினைச்சுக்காதீங்க... நன்றி மட்டும் இன்னும் கொஞ்சம் வார்த்தைகள் மட்டும் தான் தெரியும் :-)

நாகை சிவா said...

//ஆனால், முதல் முதல் வாழ்த்து சொன்னேன்.. புலிக்குட்டிக்கு நாந்தான் முதல்ல வாழ்த்து சொன்னேண்.. இங்கேயும் நாந்தான் 1st.. hehehe//

இதுக்காக பிரைஸ் ஏதும் கேட்க மாட்டீங்களா? அப்படி ஏதும் வேணும்னா எங்க போர்வாள் தேவ் கிட்ட வாங்கிக்கோங்க...

நாகை சிவா said...

//சூடான் காடா? பையன் திரும்ப வந்துட்டாருன்னு இல்ல நினைச்சேன். அப்புறம் சூடானில் சூடான மணற்காடுகள்தான்னு நினைக்கிறேன். //

ஆமாம் கொத்துஸ் :-(

//சேதியைப் படிக்க ஆரம்பிச்சா வேற விசேஷமுன்னு நினைச்சேன். //

நீர் இருக்கீரே.... உம்மை எல்லாம்... ஏன்ய்யா கொஞ்சம் நாள் நிம்மதியா இருக்க விடுமே...

நாகை சிவா said...

மணிக்கண்டன், நெல்லை காந்த், ராம், பங்கு ஷாம், கப்பி, பங்கு சந்தோஷ், ஜி - Z, முத்துலெட்மி

மிக்க நன்றி! நன்றி! நன்றி!

நாகை சிவா said...

//சூடான வாழ்த்துக்கள் புலி!! அடுத்த பிறந்த நாள் ஜோடிபுலியோட, அதுக்கு அடுத்த பிறந்த நாள் அடிஷனலா குட்டி புலியோட அப்டீன்னு....வாழ்த்தறேன்!!!! //

அடுத்த பிறந்த நாள்க்கேவா இன்னும் கொஞ்சம் தள்ளி போகட்டுமே.....

நாகை சிவா said...

//இது செல்லாது... நான் இன்னைக்கு போடலாம்னு பார்த்தா ஒரு நாள் முன்னாடியே போட்டுட்டீங்க...//

சரி விடுப்பா.... எல்லாம் நம் மக்கள் தானே....

நாகை சிவா said...

//இன்றும் என்றும் உள்ளத்தில் உறுதியுடனும், உதட்டில் புன்னகையுடனும் மொத்ததில் இளமையுடனும் இருக்க என் இனிய வாழ்த்துக்கள். //

ஆஹா ஹமீது... தாக்கிட்ட போ... உன் வார்த்தை அப்படி பழிக்கட்டும்ப்பா.... பழிக்கட்டும்.

நாகை சிவா said...

//புலிகுட்டிக்கு இன்னிக்கு மான் அடிச்சு விருந்து வெச்சுடலாம் ! அல்லாறும் சூடானுக்கு வந்துருங்கப்பூ !! புலி சரக்கு ரெடியா ?? பிறந்த நாள் வாழ்த்துக்கள் !! :))))))) //

மானா, சல்மான் மாதிரி என்னையும் உள்ள தள்ள பிளான் பண்ணுறீயே பாண்டி. இது நியாயமா?

நாகை சிவா said...

//உலகத்தின் மீது நட்போடு உள்ளம் திறந்த நாள் வாழ்த்துகள். நலமும் வளமும் பெற்று நீடு வாழ்க. ழ்க. க.//

ஜி.ரா. ரொம்ப நன்றிங்க.....

உங்கள் நண்பன்(சரா) said...

ஆஹா என் அருமை சகோதரனுக்குப் பிறந்தநாள் நாள் வாழ்த்துகூடச் சொல்ல முடியாமல் கைப்பூ அதிகமா ஆணி புடுங்க வச்சு அசதீல தூங்க வச்சிட்டாரு மக்கா...

பிறந்த நாள் வாழ்த்துக்கள்....

ஆமா! சென்னைல நடந்த சங்கமத் திருவிழாவே உன் பிறந்த நாளுக்குத் தான்னு இங்க அவனவனும் கவர் ஸ்டோரி எழுதுறான்?

அதெல்லாம் பழைய நியூஸ் சற்றும்முன் நியூஸ் மாதிரி புதுசா என்ன பண்ணலாம்னு சங்கத்துத் திண்ணைல ஒக்காராம படுத்துக்கிட்டு யோசிச்சதுல ஒன்னு தோணுச்சு சூடான் ஃபிகர்களை வச்சு அங்க "சூடானில் சங்கமி"(சங்கமத்திற்க்குப் பொண்பால்)
(பெயர்காரணம் ஓவர் டூ ஜொள்ளு.) கொண்டடலாம்னு என்ன சொல்லுர மக்கா?


அன்புடன்...
சரவணன்.

Anonymous said...

Enna ithu dev :O ===== rasigai

நாகை சிவா said...

நன்றி சரா!!!!

//ஆமா! சென்னைல நடந்த சங்கமத் திருவிழாவே உன் பிறந்த நாளுக்குத் தான்னு இங்க அவனவனும் கவர் ஸ்டோரி எழுதுறான்?//

அட ஏன்ப்பா, கரண்ட் கம்பில கொண்டு போய் கோர்த்து விடுற?

நாகை சிவா said...

//Enna ithu dev :O ===== rasigai //

என்னது தேவ்.....!!!

tamil10