Thursday, March 08, 2007

சாப்ட்வேர் கம்பெனிகளில் நடப்பது என்ன?

வணக்கம் மக்கா,

சாப்ட்வேர்ல்ல இன்னிக்கு என்னய்யா நடக்குது?

ஆளுக்கு ஆள் என்ன என்னமோச் சொல்லுறாயங்க...

சரி நானும் நம்ம பங்குக்கு நமக்குத் தெரிஞ்ச அம்புட்டு சாப்ட்வேர் நட்புக்களுக்கும், சொந்தங்களுக்கும், பந்தங்களுக்கும், பரிவாரங்களுக்கும் மெயில் தட்டியும், செல் பேசியும், குறுஞ்செயதி அனுப்பியும்.. இன்னப் பிற தகவல் பரிமாற்ற வசதிகளையும் பயன் படுத்தி விசாரிச்சதன் விளைவு தான் கீழே இருக்கப் படங்கள்..

இவர் ரொம்ப நாளா சாப்ட்வேர்ல்ல இருந்துருப்பார் போல ....ஆகா வேலை செஞ்சு வேலை செஞ்சுப் படமாவே தொங்குறார்..ஓயாம இப்படித் தான் செய்யணுமாம்தேடிப் பிடிச்சு வேலைப் பாக்கணும்..எட்டல்லன்னாலும் செஞ்சு முடிக்கணும்ய்யாபய வேலைக்குப் புதுசானாலும் வேலையிலே கவனமா இருக்கான்ய்யா


நாள் எல்லாம் வேலை செஞ்சா கடைசியிலே இது தான் மிஞ்சுது...


ஆமாங்க யாரைக் கேட்டாலும்

ஆபிஸ்ல்ல ஆணி அடிக்கிறாங்கய்யா.. ஆணி புடுங்க வைக்கிறாங்கய்யான்னு ஒரே அழுவாச்சி.....


இந்தா எனக்கு என் பாஸ் கொடுத்த துண்டு சீட்டு கடைசியா ஓங்கப் பார்வைக்கு...
ம்ம்ம்ம் இந்தப் பத்திரிக்கைகாரங்க எழுதுற மாதிரி கூத்தடிக்கற ஆபிஸ்ல்ல நான் விசாரிச்ச வரைக்கும் எவனுமே வேலை பாக்கல்லய்ய்யா.. இல்ல நாம பொறாமைப் படுவோம்ன்னு சொல்ல மாட்டேங்குறாங்களா... அதையும் விசாரிச்சு எழுதுங்கய்யா..

ஆணி புடுங்க நேரமாச்சு..

சாயங்காலமா.. என் பாஸ் கிட்ட சொல்லி ஒரு பெக் வாங்கி ஊத்திகிட்டு போதையா வந்துப் படிக்கேன்...

யப்பா... சாப்ட்வேர் புரொபஷனல்களா நீங்களும் ஓங்க கம்பெனி வசதிக்குத் தக்க கஞ்சா, அபின், பட்டசரக்கு, சுண்டங்கஞ்சி... இதை எல்லாம் ஹெ.எச் ஆர்ல்ல கேட்டு வாங்கி அடிச்சுட்டு வந்து குஜாலா அந்தப் பத்திரிக்கையப் படிங்கப்பா...

பிகு:நம்ம ராம் தம்பி தான் இது.. எமபுட்டு அழகா ஆணி அடிச்சு விளையாடுது பாருங்க..32 comments:

சென்ஷி said...

ஒத்துக்கறேன்..
ஆபிஸ்ல நீ ஆணிதான் புடுங்குறேங்கறத ஒத்துக்கறேன்..
அதுக்காக இப்படியா..! :)

சென்ஷி

G.Ragavan said...

காலை ஜப்பானில் காபி
மாலை நியூயார்க்கில் காபரே
இரவில் தாய்லாந்தில் ஜாலி...இதெல்லாம் சினிமாப் பாட்டுலதான் நடக்கும்.

ஆணி அடிக்கனும். அடிச்சதப் புடுங்கனும். புடுங்கும் போது நெளிச்சதை மறுபடியும் தட்டி நீட்டனும்...அட போங்கய்யா....எங் கஷ்டம் எனக்குத்தான் தெரியும்.

Anonymous said...

ஆணி அடிக்கனும். அடிச்சதப் புடுங்கனும். புடுங்கும் போது நெளிச்சதை மறுபடியும் தட்டி நீட்டனும்...அட போங்கய்யா....எங் கஷ்டம் எனக்குத்தான் தெரியும்.
//


enakum

kapi

Valavan said...

ம்ம்ம்.... எல்லா ஆபிஸ்லேயும் அப்பிடிதானா... முன்னாடியெல்லாம் ஆணி அடிச்ச பின்னாடி ரொம்ப நாள் கழிச்சித்தான் அடிச்சதெல்லாமே தேவையில்லாத ஆணின்னு தெரியும்... இப்ப எல்லாம் ரொம்ப தெளிவா "இந்த தேவையில்லாத ஆணியெல்லாம் அடி"ன்னுதான் சொல்றானுங்க...

ஆனா ஒண்ணு அது தேவையான ஆணியோ தேவையில்லாத ஆணியோ.... பிரச்சனைன்னு வந்தா, சுவத்தயும், ஆணியையும் விட்டுபுட்டு சுத்தியலதான் கொற சொல்வானுங்க... :-)

Anonymous said...

//ஆணி அடிக்கனும். அடிச்சதப் புடுங்கனும். புடுங்கும் போது நெளிச்சதை மறுபடியும் தட்டி நீட்டனும்...அட போங்கய்யா....எங் கஷ்டம் எனக்குத்தான் தெரியும்.//

அதோட கிளைன்ட் கேக்குற சைடுல எல்லாம் ஆணி அடிக்கனும்.

:)))))))

இம்சை அரசி said...

அய் அண்ணா...

எல்லா picsலயும் சூப்பரா இருக்கீங்க :))))

ராம் அழக் கூடாது... நீங்களும்தான்...:)))

செந்தழல் ரவி said...

ஆணி புடுங்கறதை வெச்சு இப்படி ஒரு மொக்கையா ? ஆண்டவா, இந்த மக்களை காப்பாத்துப்பா

இராம் said...

போர்வாளு,

ஏனிந்த ரத்தவெறி... மெதுவா பொறுமையா ஒவ்வொரு ஆணியா பார்த்துட்டு வந்தா கடைசியிலே பெரியா ஆப்புலே சொருகிற ஆணியா எனக்கு வைச்சாச்சா???

மணிகண்டன் said...

//நாள் எல்லாம் வேலை செஞ்சா கடைசியிலே இது தான் மிஞ்சுது...//

போதைல ஆணி அடிச்சா இப்படிதாம்ப்பு :)

கோபிநாத் said...

நீங்க புடுங்கின ஆணி எல்லாத்தையும் சேர்த்து ராம்க்கு ஆப்பா வச்சிட்டுங்க...சபாஷ்...சபாஷ்

சிறில் அலெக்ஸ் said...

உங்க மேனேஜர் பெரிய 'புடுங்கியா'? ஆணிய சொல்றேன்.
:))

இலவசக்கொத்தனார் said...

கூர்மையான ஆணியை வைத்துக் கூட மொக்கைப் பதிவு போடும் போர்வாள் வாழ்க வாழ்க!!

போர்வாள் கூர்மையா மொக்கையா என கேள்வி கேட்டால் தகுந்த முறையில் மொத்தப் படுவீர்கள் என சங்கத்தின் சார்பில் அறிக்கை வெளி இடுகிறேன். நன்றி. வணக்கம்.

நாகை சிவா said...

தேவ்,

அது சாப்ட்வேர் ல மட்டும் இல்ல இங்கயும் சேர்த்து தான்.... நம்ம எல்லார் பீலிங்கஸ்சயும் ரொம்ப நல்லாவே பீல் பண்ணி இருக்கியா நீ.

.:: மை ஃபிரண்ட் ::. said...

Superruu..


aduththa maththa professionalim eppadi aani pidungguraanggannu ou post podavum.. :-P

sari,, raam appadithaan aani pidungguvaarunnu ungalukku eppadi theriyum??

அபி அப்பா said...

தேவ், இது பரவாயில்ல. அட்லீஸ்ட் சுத்தியலாவது தாராய்ங்க!! நம்ம ஆபீஸ்ல ஒரு டேமேஜர் ஆணிய தப்பா அடிச்சுட்டா சுத்தியல புடுங்கிகிட்டு வாயாலயே புடுங்க சொல்றார்ன்னா பாத்துகோங்க!!

தேவ் | Dev said...

//ஒத்துக்கறேன்..
ஆபிஸ்ல நீ ஆணிதான் புடுங்குறேங்கறத ஒத்துக்கறேன்..
அதுக்காக இப்படியா..! :)

சென்ஷி //

அப்பூ சென்ஷி நீ ஓத்துக்குறே ஆனா ஒத்துக்க வேண்டிய என் டேமேஜர் நான் என்னவோ தேவை இல்லாத ஆணிய மட்டுமே புடுங்குறேன்னு எம் மேல்லெ குத்தம் இல்ல சொல்லுறார் வந்து என்னன்னு கேளுய்யா

தேவ் | Dev said...

//காலை ஜப்பானில் காபி
மாலை நியூயார்க்கில் காபரே
இரவில் தாய்லாந்தில் ஜாலி...இதெல்லாம் சினிமாப் பாட்டுலதான் நடக்கும்.//

ஜி.ரா கனவு காணும் வாழ்க்கை எல்லாம்.... ம்ஹூம்... அந்தப் பாட்டுத் தான் ஞாபகம் வருதுய்யா

//ஆணி அடிக்கனும். அடிச்சதப் புடுங்கனும். புடுங்கும் போது நெளிச்சதை மறுபடியும் தட்டி நீட்டனும்...அட போங்கய்யா....எங் கஷ்டம் எனக்குத்தான் தெரியும். //
U STOLE THE WORD FROM MY MOUTHS :)))

தேவ் | Dev said...

//ஆணி அடிக்கனும். அடிச்சதப் புடுங்கனும். புடுங்கும் போது நெளிச்சதை மறுபடியும் தட்டி நீட்டனும்...அட போங்கய்யா....எங் கஷ்டம் எனக்குத்தான் தெரியும்.
//


enakum

kapi //

ஆமா.. ஆணி கையிலே வேற குத்தி கிழிச்சிருக்குமே அந்த வீர வரலாறு எல்லாம் யாருக்குப் புரியுது.. கூத்து கும்மாளம்ன்னு நல்லாக் கிளப்புறாங்கய்யா பீதிய

தேவ் | Dev said...

//ம்ம்ம்.... எல்லா ஆபிஸ்லேயும் அப்பிடிதானா... முன்னாடியெல்லாம் ஆணி அடிச்ச பின்னாடி ரொம்ப நாள் கழிச்சித்தான் அடிச்சதெல்லாமே தேவையில்லாத ஆணின்னு தெரியும்... இப்ப எல்லாம் ரொம்ப தெளிவா "இந்த தேவையில்லாத ஆணியெல்லாம் அடி"ன்னுதான் சொல்றானுங்க...

ஆனா ஒண்ணு அது தேவையான ஆணியோ தேவையில்லாத ஆணியோ.... பிரச்சனைன்னு வந்தா, சுவத்தயும், ஆணியையும் விட்டுபுட்டு சுத்தியலதான் கொற சொல்வானுங்க... :-) //

அடப் போங்க வளவன்.. சுவத்தைக் கண்ணுல்ல காட்டாம.. காத்து வெளியிலே எல்லாம் ஆணி அடிக்கச் சொல்லுறாங்கப்பா :(

தேவ் | Dev said...

////ஆணி அடிக்கனும். அடிச்சதப் புடுங்கனும். புடுங்கும் போது நெளிச்சதை மறுபடியும் தட்டி நீட்டனும்...அட போங்கய்யா....எங் கஷ்டம் எனக்குத்தான் தெரியும்.//

அதோட கிளைன்ட் கேக்குற சைடுல எல்லாம் ஆணி அடிக்கனும்.

:))))))) //

ஆணி அடிக்கும் வாழ்க்கையடா.. அவதிகள் மட்டுமே மிச்சமடா...

தேவ் | Dev said...

//அய் அண்ணா...

எல்லா picsலயும் சூப்பரா இருக்கீங்க :))))

ராம் அழக் கூடாது... நீங்களும்தான்...:))) //

டாங்க்ஸ் ராம் சார்பாச் சொல்லிக்கிறேன்.. ஹி..ஹி..

தேவ் | Dev said...

//ஆணி புடுங்கறதை வெச்சு இப்படி ஒரு மொக்கையா ? ஆண்டவா, இந்த மக்களை காப்பாத்துப்பா //

ஆண்டவன் உங்க வேண்டுதலைக் கேட்க கடவாராக.. :)))

தேவ் | Dev said...

//போர்வாளு,

ஏனிந்த ரத்தவெறி... மெதுவா பொறுமையா ஒவ்வொரு ஆணியா பார்த்துட்டு வந்தா கடைசியிலே பெரியா ஆப்புலே சொருகிற ஆணியா எனக்கு வைச்சாச்சா??? //

ரத்த வெறின்னு குத்த வரி சொல்லப் பிடாது.. நீ எம்புட்டு கஷ்ட்டப் படுதன்னு நாட்டுக்குச் சொல்லணும்ன்னு நான் நினைச்சா என்னையே கேள்விக் கேட்டு வேகடிக்கற நீயு..:(((

தேவ் | Dev said...

//நாள் எல்லாம் வேலை செஞ்சா கடைசியிலே இது தான் மிஞ்சுது...//

போதைல ஆணி அடிச்சா இப்படிதாம்ப்பு :) //

மணி அனுபவஸ்தர் சரியாத் தான் சொல்லுவீங்க.. :))))

தேவ் | Dev said...

//நீங்க புடுங்கின ஆணி எல்லாத்தையும் சேர்த்து ராம்க்கு ஆப்பா வச்சிட்டுங்க...சபாஷ்...சபாஷ் //

ஆகா கோபிநாத் நீங்களுமா? ஏன் இந்தக் கொலவெறின்னு ராம் தம்பி வந்து உங்களைக் கேக்கும் பாருங்க

தேவ் | Dev said...

//உங்க மேனேஜர் பெரிய 'புடுங்கியா'? ஆணிய சொல்றேன்.
:))
//

நான் பேச நினைப்பதெல்லாம் பார்ட்னர் பேச வேண்டும் :-)

தேவ் | Dev said...

//கூர்மையான ஆணியை வைத்துக் கூட மொக்கைப் பதிவு போடும் போர்வாள் வாழ்க வாழ்க!!//

இது எல்லாம் உங்க கிட்ட கத்துக்கிட்ட பாடம் தானே தலைவா :-)

//போர்வாள் கூர்மையா மொக்கையா என கேள்வி கேட்டால் தகுந்த முறையில் மொத்தப் படுவீர்கள் என சங்கத்தின் சார்பில் அறிக்கை வெளி இடுகிறேன். நன்றி. வணக்கம். //

வயித்து வலிக்கு ஏற்பாடு பண்ணிட்டு வைத்தியன் வீட்டுக்கு வழியும் சொல்லுறீங்களே எப்படி? உங்க டேமேஜர் ஊர்ல்ல இல்லையா.. இல்லை அடிக்க வேண்டிய ஆணியெல்லாம் எங்கிட்டாவது எடுத்து எறிஞ்சிட்டீங்களா?

தேவ் | Dev said...

//தேவ்,

அது சாப்ட்வேர் ல மட்டும் இல்ல இங்கயும் சேர்த்து தான்.... நம்ம எல்லார் பீலிங்கஸ்சயும் ரொம்ப நல்லாவே பீல் பண்ணி இருக்கியா நீ. //

பீலிங் மட்டும் தானே பண்ண முடியும் அதான் ரவுண்ட் கட்டி பீல் பண்ணியாச்சு...

தேவ் | Dev said...

//Superruu..


aduththa maththa professionalim eppadi aani pidungguraanggannu ou post podavum.. :-P

sari,, raam appadithaan aani pidungguvaarunnu ungalukku eppadi theriyum?? //

ராம் ஆணி புடுங்குற ரகசியம் எனக்கு எப்படியோ தெரியும் .. அந்த ரகசியம் தெரிஞ்சு நீங்க என்னப் பண்ண்ப் போறீங்க அதைச் சொல்லுங்க..

தேவ் | Dev said...

//Superruu..


aduththa maththa professionalim eppadi aani pidungguraanggannu ou post podavum.. :-P

sari,, raam appadithaan aani pidungguvaarunnu ungalukku eppadi theriyum?? //

ராம் ஆணி புடுங்குற ரகசியம் எனக்கு எப்படியோ தெரியும் .. அந்த ரகசியம் தெரிஞ்சு நீங்க என்னப் பண்ண்ப் போறீங்க அதைச் சொல்லுங்க..

தேவ் | Dev said...

//தேவ், இது பரவாயில்ல. அட்லீஸ்ட் சுத்தியலாவது தாராய்ங்க!! நம்ம ஆபீஸ்ல ஒரு டேமேஜர் ஆணிய தப்பா அடிச்சுட்டா சுத்தியல புடுங்கிகிட்டு வாயாலயே புடுங்க சொல்றார்ன்னா பாத்துகோங்க!! //

அடக் கொய்யல... மெய்யாலுமா.. வாயெல்லாம் வலிச்சு புண்ணாகி நாசம இல்லப் போயிருக்கும் :(((

Anonymous said...

tibia money tibia gold tibia item runescape money runescape gold tibia money tibia gold runescape gold runescape accounts tibia gold tibia money runescape money runescape gp buy runescape gold tibia gold tibia item buy runescape money runescape gold runescape items tibia money tibia gold

tamil10