மனுசனுக்குத் தான் பாஸ்போர்ட் வேணும் மனச்சாட்சிக்கு எதுக்கு பாஸ்போர்ட் விசா எல்லாம்..
நேத்து வெட்டிக்கு மெயில் அனுப்பி பேட்டி எடுத்த மனச்சாட்சி.. இன்னிக்கு மெயில் குள்ளே நுழைஞ்சு அமீரகம் போயிட்டே வந்த்ருச்சு... அபி அப்பா அபி அப்பாங்கறாளே ஒரு வேளை அமிதாப்பசன் தான் தமிழ்ல்ல பதிவு போட இப்படி ஒரு புது பெயர்ல்ல வந்துருக்காரோன்னு ஒரு டவுட்..
அடேய் மனச்சாட்சி.. அமிதாப்பசன் பையன் பேரு அபிஷேக்பச்சன்.. நம்ம அபி அப்பா பாப்பா பேரு அபிராமி.. போட்டுக் குழப்பாதேன்னு சொல்லியும் மனச்சாடசி கேக்கல்லையே.. கிளம்பிப் போயிருச்சு..
அங்கேப் போய் விசாரிச்சுட்டு அவர் அமிதாப்பச்சன் இல்லப்பா.. ஆனா ஒண்ணு அமிதாப் கூடப் பேசுனாக் கூட இவ்வளவு சிரிக்க முடியுமா தெரியாது.. மனுசன் சும்மா சிரிப்பைச் சட்டைப் பாக்கெட்டுக்குள்ளே ஷாசேப் பாக்கேட்டாப் போட்டு வச்சுருக்கார்..
கேக்காமலே அள்ளி அள்ளிக் கொடுக்குறார்.. இந்தா இனி ஓவர் டூ ஸ்டார் ரிப்போர்ட்டர் அன்ட் அபி அப்பா..
உங்களுக்கு ஏத்த ஒரு பட்டம் சொல்லுங்களேன்?வேற என்ன, "phd" தான். அபிஅப்பா டாக் ன்னு சொல்றவங்க டாக்.அபிஅப்பான்னு சொல்லுவாங்களே-:))
**உங்களுக்கு மகளா இருக்க அபி பாவமா? இல்ல அபிக்கு அப்பாவா இருக்க நீங்க பாவமா?இதில பாவம்ன்னு பாத்தா தங்கமணியும், தமிழ்மணமும் தான்! என் பதிவுல எப்பவுமே அபி ஜாலியாதான் இருக்கும். அது போல நானும். ஆனா தங்கமணி தான் நாங்க அடிக்கிற கூத்துல கஷ்டப்படுவாங்க.அதுவும் sportive வா எடுத்துப்பாங்க.
அபி அப்பாவின் பதிவுகள் வெறும் நகைச்சுவைக்கு மட்டுமா இல்ல உள்குத்துக்கள் எதாவது இருக்கா?வெறும் நகைச்சுவைன்னு சொல்ல மாட்டேன். நிறைய உள்குத்து இருக்கும். இதோ
இந்த பதிவிலே முதல் பாரா கூட உள்குத்துதான். என் தம்பி கூட அதை எடுத்துவிடுன்னு சொன்னான். நான் செய்யலை. அது போல் சில தலைப்புகள் கூட உள்குத்து இருக்கும். சில உள்குத்துகள் சம்மந்தபட்டவர்களுக்கு மட்டுமே புரியும் என்பதால் அந்த உள்குத்து புரியாதவர்களுக்கு அது காமடியா தெரியும். அந்த பதிவில் அந்த முதல் பாரவுக்கு இம்சை அரசியிடம் வந்த பின்னூட்டத்தை பாருங்கள்.
இது ஒரு உதாரணம் மட்டுமே.
குழந்தைகளின் மீது பெற்றவர்கள் தம் ஆசைகளைத் திணிப்பது சரியா? உங்கள் பதிவில் அது குறித்து நிறைய உதாரணங்கள் காண முடிகிறது.. உங்க பதில் என்ன?குழந்தைகள் மீது தன் ஆசையை திணிப்பது தவறு. திணிப்பதை நானும் சரி, தங்கமணியும் சரி ஏற்றுக்கவே மாட்டோம். நானும் என் சகோதர சகோதரிகளும் சிறு வயதாய் இருந்த போது எங்கள் விருப்பம் நிராகரிக்கப்பட்டது. அதற்காக எங்கள் குழந்தை மீது அந்த ஆசையை திணிக்க நினைக்கவில்லை. அப்படியே எங்களை அறியாமல் நாங்கள் அந்த தப்பை செய்யும் போது தெள்ள தெளிவாக குழந்தைகள் நிராகரிக்கின்றன.
இந்த பதிவில் கூட "என்னய கேட்டுகிட்டா டான்ஸ் கிளாசில் சேத்தீங்க"ன்னு பாப்பா சொல்வதை பாருங்கள்.
அதே போல்
இந்த பதிவில் கூட அபிபாப்பாவின் குணமறிந்து தான் இ.ஆ.ப என்று முடிவு செய்யப்பட்டதாக பதிவில் சொல்லியிருப்பேன்.
பதிவுலகில் குறுகியக் காலத்தில் கவனிக்கப்படும் பதிவராக ஆகணும்ன்னா என்னப் பண்ணனும்ன்னு சொல்லுங்களேன்?புதிதாக பதியவரும் எல்லோருக்கும் பயனுள்ள கேள்வி. ஆனால் இதை என்னிடம் கேட்டதில் ஏதும் உள்குத்து உண்டா என்பது தெரியவில்லை. ஆனாலும் எனக்கு தெரிந்த அள்வு சொல்கிறேன்.
1. இந்த வலைப்பூவை நம் சொந்த குடும்பமாக பாவியுங்கள்.
2. கண்ணியமாக நடந்து கொள்ளுங்கள். ஏனனில் ஆண்களுக்கு சமமாக பெண்களும் பதிவுகளை படிக்கிறார்கள் என்பதை உணரவும். உங்கள் கண்ணியத்தை பார்த்துதான் "சரி இவன் ஆபத்தில்லாதவன், இவன் பதிவை பாராட்டியோ, குறைகூறியோ பின்னூட்டமிட்டால் நமக்கு எந்த பாதிப்பும் இல்லை" என்று உணர வையுங்கள்.
3. உங்களுக்கு எது எழுத வருமோ அதை எழுதவும். தெரியாததை எழுதி கையை சுட்டுக்க வேண்டாம்.(சொந்த அனுபவம்) இங்கே ஒவ்வொருவருக்கும் தனி தனி திறமை அதிகமாகவே உண்டு என்பதை புரிந்து கொள்ளவும்.
4. தனிமனித தாக்குதல் கண்டிப்பாக கூடாது.
5. குறிப்பாக நீங்கள் உள்ளே நுழையும் போது தமிழ்மணத்தில் எந்த தலைப்பு அப்போது பிரபலமாக இருக்கிறதோ அதில் புகுந்து கொள்ளவும். அதாவது நாய் சேகர்(தலைநகரம் - வடிவேலு)மாதிரி "நானும் ரவுடிதான் நானும் ரவுடிதான்னு கூவிகிட்டே போலீஸ் வண்டியில் ஏறிவிடவும். உதாரணத்துக்கு இப்போ நுழைந்தால் இந்திய கிரிக்கெட் அணியை துவைத்து தொங்க போடலாம்.
6. தாராளமாக மற்ற பதிவுகளில் போய் பின்னூட்டம் போடவும்.
7. உங்கள் பதிவில் மற்ற பதிவர் பெயர்களை குறிப்பிட்டு முடிந்தால் லிங்க் கொடுத்து பாராட்டவும். இது நல்ல பலனை தரும்.
எனக்கு தெரிந்து இவ்வளவே.
நகைச்சுவை என்பது பதிவுகளில் எந்த வரையறைக்குள் நிற்க வேண்டும் என்று நீங்கள் நினைக்கிறீர்கள்?எனக்கு தெரிந்து இந்த உலகில் எதுக்குமே வரையறை கிடையாது. எனக்கு சரின்னு பட்டது மற்றவர்களுக்கு தவறு என படலாம். ஆனாலும் தனி மனித தாக்குதல் அதனால் கிடைக்கும் நகைச்சுவையில் எனக்கு உடன்பாடு கிடையாது.
உதாரணத்துக்கு வேறு யாரையும் சொல்ல விரும்பவில்லை. நம்ம "தம்பி" யின்
இந்த பதிவிலே சில வரிகள் எனக்கு உடன்பாடு இல்லை என தம்பியிடமே கூறினேன்.அந்த எல்லையின் விளிம்பு வரை போயிருப்பார் அதிலே.
இதோ நன்பர் கோவி.கண்ணன் அவர்களின்
இந்த நகைச்சுவை பதிவை பாருங்கள். இது பார்த்திபன், வடிவேலு கண்ணில் பட்டால் கொத்திகிட்டு போயிடுவாங்க. நான் கூட இந்த தவரை செய்தேன் ஒரு முறை. சுட்டி காட்டப்பட்ட பின் அப்படி செய்வதில்லை. ஆக மற்றவர் மனம் புண்படாமல் சிரிப்பை வரவழைப்பதே நகைச்சுவையின் எல்லை என்னை பொருத்தமட்டில்.
தமிழ் பதிவுலகில் நகைச்சுவை உங்கள் பார்வையில் சொல்லுங்களேன்?பதிவில் மட்டுமா நகைச்சுவை! பின்னூட்டங்களை பாருங்கள். சும்மா கலக்கலாக இருக்கும். ஒரு பதிவில் உஷா மேடம் பதிவில் கும்மி என்பதை கும்பி என்று டைப்பிங் தவறு நடந்துவிட்டது. பின்ன நம்ம லக்கியும், கொத்ஸும் வந்து விவாதங்கள் பரபரப்பாக நடந்தது. அதற்கு உஷா மேடம் "நான் கும்மின்னு சொன்னவுடனே இப்டி சர்றுன்னு வந்து நிக்கிறீங்களே"ன்னு ஒரு பின்னூட்டம் போட அதற்க்கு கொத்ஸ்"நீங்க எங்க கும்மின்னு சொன்னீங்க, நாங்க வந்து சர்றுன்னு வந்து நிக்கிறத்துக்கு"ன்னு ஒரு பின்னூட்டம் போட்டார். வெடிச்சிரிப்புதான்.
அது போல் செந்தழல்ரவி போடும் மொக்கை பதிவுகளும், லக்கி,பாலபாரதியின் பதிவுகளிள் அனானி கும்மிகளும் 100% சிரிப்புக்கு உத்தரவாதம்.
டுபுக்கு, வெட்டிதம்பி, தம்பி, பின்னூட்டதிலேயே காமடி செய்யும் நாகைசிவா, கண்மணி,கைப்ஸ் இப்படி நிறைய சொல்லலாம்.
சிரீயசா யாரும் படிக்க மாட்டாங்கன்னு தானே நகைச்சுவையா எழுதுறீங்க?
அப்படியில்லை. சீரியசாக எழுத நிறைய பேர் இருக்காங்க, தவிர நான் முதலில் சொன்னது போல் தெரிந்த தொழிலை விட்டவனும் கெட்டான், தெரியாத தொழிலை தொட்டவனும் கெட்டான் என்பதை போல் நான் இப்படியே இருக்கவே ஆசைப்படுகிறேன்.
அமீரக வாழ் பதிவரான நீங்க.. அமீரக வாழ் தமிழர்கள் நிலைப் பத்தி பதிவுகள்ல்ல சொல்லணும்ன்னு நினைத்துண்டா? அது பற்றி நிறைய எழுதலாம். தனி பதிவே போடும் அளவு செய்திகள் உண்டு. கண்டிப்பாக எழுதுகிறேன். அதிலே காமடிகூட உண்டு. விரைவில் பதிகிறேன்.
பொழுது போகாமாத் தான் பதிவுப் போட வந்தீங்களா? இல்லை வேறு எதேனும் நோக்கம் உண்டா?உண்மையை சொல்லப்போனால் எப்போதும் லைம்லைட்டில் இருக்கனும். எல்லாரும் என்னை கவணித்துக் கொண்டே இருக்கனும் என்கிற வியர்டுதனம் தான் காரணம். இதை சொல்வதால் என் இமேஜ் பாதிக்காது. காரணம் 90% பேர் அப்படித்தான்.
உண்மையைச் சொல்லுங்க... தமிழ் மணத்துல்ல நகைச்சுவைப் பதிவுகளைப் படித்து அதிகம் சிரித்தீர்களா இல்லை சிரீயஸ் என்று முத்திரைக் குத்தப்பட்ட பதிவுகளைப் படித்து அதிகம் சிரிக்கிறீர்களா?நான் அதிகம் படிப்பது சீரியஸ் பதிவுகள் தான். அதிலும் நான் தவராமல் படிப்பது லக்கிலுக், வரவனையயன், ஹரிஹரன், டோண்டு, மிதக்கும் வெளி, விடாதுகருப்பு, கால்கரி சிவா, மயிலாடுதுறை சிவா. இந்த சீரியஸ் பதிவுகள் சீரியஸாக இருக்கும். பின்னூட்டங்கள் காமடியாக இருக்கும்.
அடுத்து என் நட்பு வட்டத்தில் உள்ள அனைவரின் பதிவுகளும் படிப்பேன். இதில் நான் அதிகம் சிரிப்பது நன்பர் பால பாரதியின் அனானி பின்னூட்டங்கள், மற்றும் நன்பர் நாகைசிவா வின் பின்னூட்டங்களுக்கே:))
கடைசியா இன்னும் எத்தனை நாளைக்கு அபியை நம்பி உங்க பொழப்பை ஓட்டப் போறீங்க..?நான் இது வரை போட்ட 26 பதிவுகளிள் 7 பதிவுக்குதான் பாப்பாவை தூக்கிகிட்டு சுத்தினேன். அலுக்கும் வரை சுத்தும் உத்தேசம். யாருக்கு அலுக்கும் என்பது உள்குத்து.
ஒரு கிரிக்கெட் ஜோக் உங்க சொந்தத் தயாரிப்பு சொல்லுங்க நம்ம கச்சேரிக்காக?கிரிக்கெட் ஜோக்காயிடுச்சு என்பதே ஒரு சோகம். இதுல கிரிக்கெட் ஜோக்கா. சரி, இப்போ நடந்த ஜோக்குன்னா இந்தியா-பர்மூடா மேட்ச்தான். போயும் போயும் இந்தியா கிட்ட போய் தோத்தாங்களே பர்மூடா, ஆக உலகத்திலேயே மோசமான அணி பர்மூடாதான்.
சரி, சொந்த தயாரிப்பா இருக்கனும்ன்னு சொன்னதால இது.
*****************
நேத்திக்கு நானும் என் தம்பியும் நெட், வெப்கேம் சகிதமா பேசிகிட்டு இருந்தோம். அப்போ அபிபாப்பாவும் அங்கதான் இருந்தா.
அபிஅப்பா: என்னடா கிரிகெட் ஜுரம் விட்டாச்சா?
அபிசித்தப்பா: ம். பாவம் பசங்களுக்கு கிரிக்கெட் பத்தி எல்லாம் சொல்லி குடுத்தேன். எல்லார் போட்டோவும் காட்டி சொல்லிகுத்தேன்.
அபிஅப்பா: ம்.. பாஸ்ட் பவுலர் பதிவ பாத்தியா?
அ.சி: பார்த்தேன். அவர் என்ன அடுத்த உ.கோ போட்டிக்கு உத்தேச அணியில சச்சின், திராவிட், கங்குலி எல்லாம் சேத்துட்டார். ஏன் கவாஸ்கர், கபில் கூட சேத்திருக்கலாமே,
அ.அ: லல்லூ கூட ரொம்ப ஆர்வமா இருக்கார். அவரை சேத்தா சரத்பவார் நானும் ஆட்டைக்கு உண்டுன்னு அடம் பிடிப்பார்
அ.சி: டேய்! சொல்ல மறந்துட்டேனே, இந்த போட்டோல்லாம் காட்டி கிரிக்கெட் பத்தி சொல்லிகுடுத்த்னே அப்போ சரத்பவார் படத்தை காட்டி "இவர்தான் நம்ம இந்திய கிரிக்கெட் போர்டு தலைவர்"ன்னு சொன்னேன். அதுக்கு அபிபாப்பா "இவர் கூட கிரிக்கெட் விளையாடுவார் சித்தூ"ன்னா. அதுக்கு நான் "அவரு விளையாடி நீ எங்க பாத்த"ன்னு கேட்டேன். அதுக்கு பாப்பா" டி.வி ல பாத்தேன்"ன்னு சொன்னா."அவரு கூட இப்ப என்ன செய்யுவ இப்ப என்ன செய்யுவன்னு ஒரு சின்ன பையன் கிட்ட டான்ஸ் ஆடுவார்"ன்னா. அது என்ன விஷயும்ன்னா S.B.I விளம்பரம் பாரு புரியும்.
அ.அ: பார்த்தேன் பார்த்தேன். பேசாம அந்த தாத்தாஸ் டீமை கூட அடுத்த உ.கோ வுக்கு அனுப்பலாம்டா!!
********
மேலே உள்ள உரையாடல் கூட கொஞ்சம் செதுக்கினா ஒரு நகைச்சுவை பதிவு கிடைக்கும்.
பேட்டிக்கு நன்றி அபி அப்பா...
அடுத்து மீண்டும் மீட் பண்ணுவோம்