Sunday, March 04, 2007

லீ - பார்க்கலாம்ங்க


நம்ம சிவாஜி குடும்பம் கட்டியிருக்க புது தியேட்டர் சாய் சாந்தியிலே இப்போத் தான் ஒரு படம் பாக்க வாய்ப்புக் கிடைச்சுது. நம்ம பெரியார் பட நாயகர் சத்யராஜ் அவர் புள்ளக்காக எடுத்திருக்கப் படம் தான் லீ.

சிபி அதாங்க ஜூனியர் சத்யராஜ் நடிச்சப் படம் எதையுமே நான் இது வரைக்கும் தியேட்ட்ரிலோ இல்ல டிவியிலோக் கூடப் பார்த்தது இல்ல. தியேட்டருக்கு வந்த நிறையப் பேத்துக்கும் இதே நிலைமைத் தான். பக்கத்து அரங்குகளில் திரையிடப் பட்ட சரத் படம் அப்புறம் நம்ம பிரகாஷ்ராஜ் மொழி படங்களுக்கு டிக்கெட் கிடைக்காத மக்கள் தான் லீ பார்க்க வழியினி வந்தார்கள். நாங்களும் தான்...

பிரபு சாலமன் இயக்கம் (கொக்கி, கிங் படங்கள்ன் இயக்குனர்). இமான் இசை. சத்யராஜ் தயாரிப்பு.

கதை ஆரம்பம் டாகுமெண்டிரி பாணியில் கதாபாத்திரங்களின் அறிமுகத்தோடு டேக் ஆப் ஆகிறது.. அதன் பின் நல்ல வேகம்.

எங்களையும் வாழ விடுங்கள் இது தான் படத்தின் ஒரு வரி கதை.. அதை ஒரு விளையாட்டுக் குழுவினை மையப் படுத்தி கதைப் பின்னியிருக்கிறார் இயக்குனர். சமுதாயத்தின் தாழ்ந்த நிலைகளில் இருந்து பிராகாஷ்ராஜ் பார்த்து பார்த்து எடுத்து பயிற்றுவித்த ஒரு கால் பந்து அணியின் மொத்தக் கனவுகளும் அதிகார வர்க்கத்தின் ஆணவத்தினால் நசுக்கப்படுகிறது.. அதன் தொடர்ச்சியாக நிகழும் பழி வாங்கும் படலம் தான் படம்..

முதல் பாதியில் வசனங்கள் அதிகமின்றி காட்சி அமைப்புகளையே அதிகம் நம்பியிருக்கிறார் இயக்குனர். இரண்டாம் பாதியில் வழக்கமான தமிழ் சினிமாவின் மசாலா தலைத் தூக்கி நிற்கிறது. வழக்கமானப் பழிவாங்கும் கதை தான்.. அதைக் கொஞ்சம் சுவாரஸ்யாமாகச் சொல்ல முயன்றிருக்கிறார் இயக்குனர். அதில் ஓரளவு வெற்றியும் பெறுகிறார்.

கதைக்கு நன்றாகவே துணைப் புரிந்திருக்கிறார்கள் நடிகர்கள். குறிப்பாகச் சிபி.. ஆர்ப்பாட்டமில்லாத அமைதியான நடிப்பில் நிற்கிறார். சிபியிடம் சரக்கு இருப்பது தெரிகிறது. நல்ல இயக்குனர்கள் நல்ல கதையுள்ள படங்கள் இதை நம்பினால் அவர் நிச்சயம் ஜெயிக்கலாம். பையனுக்கு நடனம் தான் நாக்கு தள்ளூது. பாக்குற நமக்கு கண் முழி வெளியே தள்ளுது..அவர் நடனம் கத்துக்குறது நல்லது இல்லை ஆடாம இருக்கது அதைவிட நல்லது.

சிபியின் நண்பர்கள் படையாக வருபவர்களில் அந்த ஜொள்ளு குணா, பன்னீர் ,விக்கி, கதாபாத்திரங்கள் நினைவில் நிழ்லாய் தங்குகின்றன. மற்றவர்களுக்குப் போதிய வாய்ப்பு இல்லை.

யாருங்க அந்த வில்லன்... மிகவும் அமைதியா சின்ன சின்ன அசைவுகளிலும் அவ்வளவு வில்லத் தனம் காட்டுகிறார். மொத்தப் பெயர்களின் வயித்தெறிச்சலையும் கொட்டிக்கொள்கிறார். படத்துல்ல அவர் பெயர் ரங்கபாஷ்யம்.

அவர் மகனாக வரும் சசி.. வழக்கமான வில்லன் மகனாக வந்து அட்டுழியம் பண்ணுவதாய் அடி வாங்குகிறார். அப்புறம் அப்பீட்டு ஆகிறார்.

நம்ம செல்லம் பிரகாஷ் ராஜ் புட் பால் கோச்சாக அசத்துகிறார். கொஞ்சமே வந்தாலும் கதைக்கு வலுச் சேர்க்கும் முக்கியப் பாத்திரமாய் நிறைகிறார்.

படத்துல்ல கதாநாயகியும் உண்டு.. நிலா.. டைட்டா உடையைப் போட்டுகிட்டு அங்கிட்டும் இங்கிட்டும் வந்துப் போகிறார். பாடுகிறார். ஆடுகிறார். கொஞ்சம் அவரை வைத்து காமெடியும் செய்யப் பார்த்துருக்காங்க... பலன் லேசான சிரிப்பலைகள் அவ்வள்வே...

படத்தின் வேகத் தடைகளாய் பாடல்களைச் சொல்லலாம். கதையோடு கைலாஷ் கெர் பாடி வரும் ஒரு பாடல் ஓ.கே... ராக் அன்ட் ரோல் பாடல் டி.க் ஹேய் மத்தப் படி பாடல்களைத் தாராளமாய் வெட்டியெறியலாம்.

சில ரசிக்கும் படியான துணைக் கதாபாத்திரங்களும் படத்தில் வருகிறது. எ.கா. லீ க்கு துப்பாக்கி வாங்கி தரும் அடியாள் பாத்திரம்.

சன் டி.வி நேருக்கு நேர் புகழ் வீர பாண்டியன் படத்தின் கிளைமாக்ஸில் கெஸ்ட் ரோலில் வருகிறார். நேருக்கு நேர் காண்கிறார். அந்த நேருக்கு நேரில் சிந்திக்க வைக்கும் வினாக்கள் பல..

எக்வேடார் மாதிரி ஒரு பஞ்சம் சூழ்ந்த நாட்டில் 13 லட்சம் பேர் மட்டுமே மக்கள் தொகையாக் கொண்ட ஒரு நாடு உலகக் கோப்பை கால்பந்து ஆட்டத்திற்கு தகுதி பெற்று கலக்கும் போது 106 கோடி பேர் இருக்க நம்ம இந்தியா இன்னும் கைத்தட்டிகிட்டே இருக்கே.. ஏன்? இது போன்ற சாட்டையடிகளோடு படம் முடிகிறது...

டைம் இருந்தா ஒரு தரம் லீ பாருங்க...

8 comments:

MyFriend said...

padam nalla illainnu sollikkiddu iruntaangka.. neengga maddumthaan nall irukkunu solreengka..

paarkkalaamaa????

இலவசக்கொத்தனார் said...

இல்லீங்க. அந்த மூஞ்சியை மூணு மணி நேரம் பார்க்க முடியுமான்னு தெரியலை. சாய்ஸில் விட்டுடறேன்.

Anonymous said...

கொத்தண்ணே, பாக்கணும்னு நெனச்சுக் கிட்டு இருக்கவுங்கள கெடுத்துப்புடாதீங்க.

சிபி
சன் ஆப் சத்யராஜ்

Unknown said...

மை பிரெண்ட் நிச்சயமா படம் மொக்கை இல்லை.. பார்க்கும் படித் தான் உள்ளது நம்பி போய் பார்க்கலாம்.

Unknown said...

//இல்லீங்க. அந்த மூஞ்சியை மூணு மணி நேரம் பார்க்க முடியுமான்னு தெரியலை. சாய்ஸில் விட்டுடறேன். //

மூணு நேரத்துக்கும் கம்மி தானுங்க படம்.

Unknown said...

//கொத்தண்ணே, பாக்கணும்னு நெனச்சுக் கிட்டு இருக்கவுங்கள கெடுத்துப்புடாதீங்க.

சிபி
சன் ஆப் சத்யராஜ் //

ஓவர் டூ கொத்ஸ்.. இந்தாப் பாருங்க கொத்ஸ் சிபியே வந்துக் கேக்குறார் பதில் சொல்லுங்க..

கார்த்திக் பிரபு said...

i saw the trailer and thirai vimarsan, parklamnu than ninakane ..parkalama??????

Unknown said...

தாராளமாப் பாக்கலாம் கார்த்தி.. படம் போரடிக்காமல் போகுது

tamil10