Friday, March 16, 2007

ஆல் இன் ஆல் அழகுராஜா கோச்சிங் சென்டர்...

குட் மார்னிங் பாய்ஸ்

ஆ வாங்க வாங்க.. அழகுராஜ் வணக்கம் வைப்பதற்குள் செல்போனைக் காதில் வைக்கிறார்..

"ஹலோ.. யா..யா.. அழகுராஜ் ஸ்பீக்கீங்..

நவ் ஐயாம் கோச்சிங் பிளாக் கைஸ்...

டூமாரோ.. பெர்மூடால்ல பிச் ரிப்போர்ட் கொடுக்கணும்..

20த் ஜமைக்கல்ல இருக்கேன்..

21ச்ட் ஆன்டிகோவால்ல.. அத்லெடிக்ஸ் ட்ரெனியிங்...

ஹே ஆன்ட்டி கூட கோவா போல்ல மேன் .. வெஸ்ட் இன்டீஸ் ஆன்டிகோவா... கிரிக்கெட் கிரவுண்ட் மேன்......

யாரிடமோ பயங்கரமானப் பில்டபில் பேசிக் கொண்டிருந்தார் ஆல் இன் ஆல் அழகு ராஜ்..பின் போனைக் காதை விட்டு எடுத்தவர்.

அய்யோ அய்யோ.. இந்த டிரா தொல்லைத் தாங்கல்லப்பா

"நான் வேணும்ன்னா கார்பெண்டர் கூப்பிட்டு டிராவை சரி பண்ணித் தரச் சொல்லவாண்ணேன்னு பவ்யமா நம்ம மணிகண்டன் கேக்க.."

"ஹேய் யார் மேன் நீ.. ஸ்டூபீட் பெல்லோ... டிரான்னா.. ராகுல் டிராவிட்.. இந்தியாக் கேப்டன்.. கோச்சிங் கொடுக்க வாங்க.. கோச்சிங் கொடுக்க வாங்க்ன்னு ஒரே நச்சரிப்பு.. நான் பேட் வாங்கி கொடுத்து பேட் கட்டி கிரவுண்டுக்கு அனுப்புன பையன்.. அந்த ஸ்கொயர் கட சரியா வர மாட்டேங்குதுன்னு பீல் பண்ணுறான்.. என்னப் பண்ரது இதுக்குத் தான் ஊருக்குள்ள ஒரு ஆல் இன் ஆல் அழ்குராஜ் வேணும்ங்கறது..

அண்ணே..அண்ணே.. இது உங்க போனுக்குள்ளே இருந்துச்சு.. என்னன்னு கழட்டிப் பாத்தேண்ணே ஒண்ணும் விளங்கல்லண்ணே.. விளக்கம் சொல்லுங்கண்ணே டவ்சர் பாண்டி செல்போன் பேட்டரியைக் கையில் பிடித்தப் படி அழகு ராஜ் முன்னால் வந்து நின்றான்..

செல்போன் ரிங்டோன் வராமலே போன் எடுக்கும் போதே நினைச்சேன்னு பாஸ்ட் பௌலர் கிசுகிசுக்க அழகுராஜ் அவர் பாணியில் ஹே..ஹே..ஹேய்.. இதெல்லாம் அரசியல்ல சாதரணமப்பான்னு சொல்லிச் சிரித்தார்.

ஏன் கேப்டன்.. இவர் தான் நம்மளைக் கோச் பண்ணனுமா.. நம்ம நண்பன் சரா பரிதாபமாகக் கொத்ஸைப் பார்க்க.. கொத்ஸ் பதில் எதுவும் சொல்லாமல் நின்றார்.

ஏ யூ.. இங்கே வா மேன்...காட்ச் என்று வேகமாப் பந்தை நம்ம புலிக்குட்டியிடம் பந்தைப் போட்டார். புலிக்குட்டி டக்கென கேட்ச் பிடித்து விட லைட்டா ஜெர்க்கான அழகுராஜ்... (அய்யோ இவன் பந்தைக் கரெக்ட்டா கவ்வுறானே.. விவரமா இருப்பானோ)

அய்ய்யோ இவர் காட்ச் பிடிக்கிறதப் பார்த்தா மான்டி கிராஸ் காட்ச் புடிக்கிற மாதிரியே இருக்கு.. சூப்பர்.. சூப்பர்... டவுசர் பாண்டி தட்டி மகிழ.. அழகுராஜ் டவுசரைக் கடுமையான லுக் விடுகிறார்.

"டேய் என்னப் பேர் சொன்ன?"

"மான்டி கிராஸ்"

உடனே புலி குறுக்கிட்டு அது ஜான்டி ரோட்ஸ்..

"இல்லையே நீங்க மான்டி கிரால்ன்னு தானே சொல்லிக்கொடுத்தீங்க.. கேட்ச் பிடிக்கும் போது கரெக்ட்டாச் சொல்ல சொன்னீங்களே.. நான் கரெக்ட்டாத் தான் சொன்னேன்" என்று டவுசர் பாண்டி கிடமாய் படு சீரியசான முகத்தோடு சொல்ல.. அழகு ராஜ் புலிக்குட்டியை மேலிருந்து கீழ் வரைப் பார்க்கிறார்.

போன அஞ்சு மேட்சுல்ல நீ அடிச்ச ரன் எவ்வளவுடா?

2, 5,0,0,1 ராயல் ராம் சந்தோசமாப் போட்டுக் கொடுக்க..

"ஏன்டா.. ஏன் இப்படி?"

"எல்லாம் ஒரு வெளம்பரம் தான்.. ஊர்ல்ல நமக்குன்னு ஒரு கெத்து இருக்குல்ல.."

"ஏன்டா இன்டர்நேசனல் லெவல்ல விளையாடுர பரோட்ட மண்டையனுங்க தான் கெத்து பொத்துன்னு பிலிம் காட்டுறாங்கன்னா.. உள்ளூர்ல்ல ஒரு ரன் அடிக்கிறது உக்காந்து உக்காந்து தடவுர உனக்கெல்லாம் வெளம்பரம் தேவையாடா.. அப்படி ஓரமா நில்லு.. உன்னிய லாஸ்ட் மீட் பண்றேன்..

ஓட்டைச் செல்போன் வச்சிகிட்டு பீலா விடுற இந்தாளுக்கு லொள்ளைப் பாரு லோலாயத்தைப் பாரு.. வெட்டி வீராப்பாப் பேசுனது அழகுராஜ் காதில் விழ...

"ஏய்.. யூ மேன்.. கம் பிரண்ட்"

வெட்டி வந்து நிக்க...

"ஹேய்.. பந்து வீசுவீயா...?"

"ப்ரட் லீ மாதிரி போடுவேன்"

"லீ புட்பால் இல்ல ஆடுவான்...என்னய நக்கல் பண்ணுறீயா?"

"ப்ரட் லீ ஆஸ்திரேலியா ப்ளேயர்.."

அந்த நேரம் கிரவுண்ட்க்குள் .. நம்ம நாட்டாமை தீர்ப்புச் சொன்னா பாட்டு ஒலிக்க... நாட்டாமை.. தம்பி.. கப்பி எல்லாம் குருப்பா வர்றாங்க..."

"ஏய் ஸ்டாப் த மீயூசிக்.. WHO IS THE DISTURBANCE..யார் மேன் நீ எதாவது சந்தனம் கரைச்ச ஆண்டாவில்ல சிலிப் ஆகி விழுந்துட்டியா.. ஓடம்பு முழுக்க இப்படி பூசிட்டு வந்து இருக்க... ஆ.. அது என்னடா சொம்பு.. முன்ன ஒரு முறை புல் குத்த அவுட்சைட் போற சொக்மே சொகம்ன்னு நான் சொன்னதைக் கேட்டுட்டு கிரவுண்ட்ல்ல புல்லை எல்லாம் நாசமாக்க குரூப்பா வந்துட்டீய்யா.."

"அட தம்பிகளா.. நம்ம 16 பட்டி கிராமத்துல்லயும் பாடம் சொல்லிக் கொடுக்குற வாத்தியாருக்கு மருவாத கொடுக்கறது எங்க பழக்கம்ங்க.. பண்பாடுங்க...பராம்பரியம்ங்கோ.. நீங்க எங்களுக்கு கில்லிச் சொல்லிக் கொடுக்க வந்த வாத்தியார் ஆச்சே.. அதாங்க.. உங்களுக்கு ஊர் மரியாதைக் கொடுத்து ஆரம்பிக்கணும்ன்னு பாட்டெல்லாம் போட்டு வந்தோம்.."

"ஓ நாட்.. ஐ லவ் யூ.. பட் இப்போ நான் டூட்டில்ல இருக்கேன்.. அதுன்னால உங்க மரியாதை எல்லாம் ஏத்துக்க முடியாது.. பட் நீங்க வருத்தப் பட வேண்டாம்.. உன் கூட வந்த அந்தக் காந்த கண் அழ்கியை வரச் சொல்லு.. காந்தக் கண் அழகி.. இவன் ஓவராப் பூசி இருக்க சந்தனத்தை எடுத்து இந்தா ரைட்ல்ல பூஸ்.. ஆங் இந்தா அப்படியே லெப்ட்ல்ல பூஸ்.. ஓ... பேக்ல்ல பூஸ்..."

அழகு ராஜ் இந்த ஆர்ப்பாட்டத்தில் இருக்கும் போது... ஆறரைக் கோடி பேர்களில் ஒருவன் பாட்டு ஒலிக்க நம்ம ஜொ.பாண்டி... கட் பனியன்.. டிராக் சூட்.. கூலர்ஸ் என அட்டகாசமாய் வந்து இறங்கி காந்த கண்ணழகியைக் கவர் பண்ணி நிக்க...அழகுராஜ் அக்னி நட்சத்திரமாய் ஜொ.பாவைப் பார்க்கிறார்...

டேய் கூடை கவுத்த மண்டையா.. இங்கே என்னடாப் பண்ணுற..

"கிரிக்கெட் ஆட வந்தேன்ண்ணே.. சோனி டிவி யிலே ஒரு அக்கா வருவாங்க இல்ல அவங்க என்னியப் பாக்க வர்றேன்ன்னு சொல்லியிருக்காங்க.. அதான் கொஞ்சம் நல்லா ஆடணும்ன்னு உங்க கிட்ட ட்ரெயினிங் எடுக்க வந்தேன்.."

"டேய் மண்டையா உன் மண்டையிலே ஒரு கூடையை ஏன் கவுத்துகிட்டு திரியுறன்னு இப்போ விளங்குதுடா"

"எதுக்குன்ணே நம்ம சரா கேக்க?"

" ஊர்ல்ல எந்தப் பிகரை எப்போ கவுத்தலாம்ன்னு கூடையோடவே திரியற நீ... மந்திரா பேடி எல்லாம் கூடைக்கு கவுறர லேடியாடா... அப்புறம் உனக்கு எல்லாம் கோச்சிங சொல்லித் தர முடியாது?'

" ஏன் அண்ணே" ஜொ.பா பரிதாபமாகக் கேட்க..

"கூடை வச்சிருக்கவனுக்கெல்லாம் நான் கோச்சிங்க் கொடுக்குரது இல்ல" அப்படின்னு சொல்லிட்டு மறுபடியும் வெட்டியைப் பார்க்கிறார்.

"நீ இன்னும் பந்து வீசப் போகல்லய்யா.. அய்யோ ஆண்டவா.. இந்த லாயக்கில்லாத பசங்களுக்கு எல்லாம் ஏன்டா என்னைக் கூட்டுச் சேர வைக்குற?"

வெட்டி பயங்கர கோவமாப் பந்தை பேண்டில் தேய்த்தப் படி பவுண்டரி வரை செல்ல..

அப்போது பார்த்து நம்ம டவுசர் பாண்டிக்கு பயங்கரமான டவுட் வருகிறது.. அவசரமாக மட்டை, பேட் எல்லாம் போட்டுகிட்டு கிளம்பிய அழ்குராஜை நிறுத்தினான்..

"அண்ணே.. அண்ணே.. அன்னிக்கே கேக்கணும்ன்னு நினைச்சேன்ண்ணே.. இந்தா இவனை மாதிரியே ஒருத்தன் அன்னிக்கு ஒரு நாள் ரொம்ப தூரத்துல்ல இருந்து ஓடி வந்து காட்டுத் தனமா உங்களைப் பார்த்து வீசுனானே.. அந்தப் பந்தைக் கூட அடிக்க முடியாம அது உங்களுக்கு 'அந்த' இடத்துல்ல பட்டுச்சே.. நான் கூட நீங்க புட்டுக்குவீங்கன்னு தான் நினைச்சேன்.. ஆனா உங்களுக்கு ஒண்ணுமே ஆகல்லியே அண்ணே எப்படிண்ணே?"


"டேய் டவுசர் மண்டையா.. நல்ல கேள்விடா.. இதுக்குத் தான் ஊருக்குள்ளே ஒரு ஆல் இன் ஆல் அழகுராஜ் வேணும்ங்கறது.. சொல்லுறேன் கேளு.. இந்த பந்து இருக்கே கிரிக்கெட் பால் நல்ல திடமானது படாத இடத்தில்ல பட்டா பலி தான்.. ஆனா அதுக்குத் தான் இது இருக்கு என கையில் கார்ட் எடுத்து வைத்தார்.

"இது என்னண்ணே...?"

"டேய் நோபால் மண்டையா.. இதுக்குப் பேர் அப்டாமினல் கார்ட்.. இது தான்டா.. நமக்கு அடிபடாமக் காப்பாத்துது.." என பொறுமையாக விளக்கிக் கொண்டிருக்கும் போதே டவுசர் பாண்டி அவர் கையிலிருந்தக் கார்டைப் பிடுங்கி தூர எறிந்து விட்டு

"சும்மா விளையாடதீங்க இது எப்படிண்ணே அவ்வளவு வேகம் தாங்க முடியும்.. உண்மையைச் சொல்லுங்கண்ணே" என்று அழகுராஜைப் பார்க்க
அந்தக் கேப்பில் அந்தப் பக்கம் வந்த நாய் ஒன்று அப்டாமினல் கார்டை கவ்விக் கொண்டு போக..

"என்ன அண்ணே.. நாய் கவ்விகிட்டுப் போகுது பாத்துட்டு இருக்கீங்க..."

அழகுராஜ் இருந்த ஒரு கார்டும் நாய் கவ்விப் போவதைப் பார்க்கிறார்.. அதே சமயம் வெட்டி கொலை வெறியோடு அழகுராஜ்க்கு பந்து வீச பவுண்டரியில் ரன் எடுக்க தயார் ஆகுகிறான்.....

இனிமே என்ன நடந்து இருக்கும் நீங்களே ஊகிச்சுக்கங்க மக்கா.. ஹேப்பி வீக் என்ட்...

29 comments:

Anonymous said...

ஹேப்பி வீக் என்ட்...

Ravi

ஜொள்ளுப்பாண்டி said...

//அய்யோ இவன் பந்தைக் கரெக்ட்டா கவ்வுறானே.. விவரமா இருப்பானோ//

:)))))))))))))) புலிகுட்டி அப்படியா என்ன?


தேவு ஏதொ பல பேட்ஸ்மேனோட பேரை சொல்லி இருக்கீங்க ஆனா எனக்கு மந்த்ரா பேடிய தவிர வேற ஆரையுமே தெரியலையே என்ன பண்ணுவேன் ?? :((((((

இராம்/Raam said...

அண்ணே அசத்தல் போஸ்ட்'ண்ணே :)

//2, 5,0,0,1 ராயல் ராம் சந்தோசமாப் போட்டுக் கொடுக்க..

"ஏன்டா.. ஏன் இப்படி?"

"எல்லாம் ஒரு வெளம்பரம் தான்.. ஊர்ல்ல நமக்குன்னு ஒரு கெத்து இருக்குல்ல.."
//

பின்னே எங்கூருக்குள்ளே கிரிக்கெட் விளையாடுறேன்னு சொல்லி எத்தனை கிழவி மண்டையை ஒடச்சிருப்போம் :)

இம்சை அரசி said...

வழக்கம் போல கலக்கல் அண்ணா...

கவுண்டர ஒரு வழி பண்ணாம விடப் போறதில்ல... :))))

happy week end

Anonymous said...

//"கூடை வச்சிருக்கவனுக்கெல்லாம் நான் கோச்சிங்க் கொடுக்குரது இல்ல" //

Sema Timing..Nalla Comedy :)

Nayagan.

கப்பி | Kappi said...

:)))

கலக்கல்ங்ண்ணா!

Anonymous said...

abdominal cord na enna dev :P =======rasigai

Unknown said...

//ஹேப்பி வீக் என்ட்...//

வீக் என்ட் நல்லா ஹேப்பீயாப் போச்சி.. உங்களுக்கு எப்படிப் போச்சு ரவி?

எல்லாம் நம்ம இந்திய அணியின் உபயம்.

Unknown said...

//தேவு ஏதொ பல பேட்ஸ்மேனோட பேரை சொல்லி இருக்கீங்க ஆனா எனக்கு மந்த்ரா பேடிய தவிர வேற ஆரையுமே தெரியலையே என்ன பண்ணுவேன் ?? :(((((( //

அவங்களாத் தெரிஞ்சு வச்சிருந்தாலே போதுமே உனக்கு எக்ஸ்ட்ரா இன்னிங்க்ஸ் நிச்ச்யமா உண்டு.. டோன்ட் ஓர்ரி.

Unknown said...

//பின்னே எங்கூருக்குள்ளே கிரிக்கெட் விளையாடுறேன்னு சொல்லி எத்தனை கிழவி மண்டையை ஒடச்சிருப்போம் :) //

அட பாவிகளா கிழவிக என்னடா பாவம் பண்ணாயங்க ஓங்களூக்கு?

Unknown said...

//வழக்கம் போல கலக்கல் அண்ணா...//
நன்றி நன்றி

//கவுண்டர ஒரு வழி பண்ணாம விடப் போறதில்ல... :))))//
ரூட் போட்டுக் கொடுத்துட்டாங்க.. நம்ம வண்டியை அந்த ரூட்ல்ல ஓட்டுறோம் அவ்வளவு தான்

//happy week end //

:)))

Unknown said...

//Sema Timing..Nalla Comedy :)

Nayagan. //

வாங்க நாயகன்,

நன்றி.

Anonymous said...

தேவ், உங்க ஊர் தமிழ் டீச்சர் உங்க பதிவு மொழி பெயர்த்து அனுப்பிருக்காங்க என் வீட்டுக்கு :) ...
மொழி பெயர்க்கிறேன்னுட்டு, பிரம்பால முளியப் பேக்கிறாங்கப்பு ... என்னோடதா உங்களோடதான்னு எனக்கு சரியா தெரியல ... :)

இதுக்குத்தான் பந்து சந்துக்குள்ள போடும்போது கவனமா போடணும்ன்றது ... இங்க அடிச்ச பந்து அங்க இடிச்சிரிச்சுங்கோ :) ... மாட்டிக்கினாங்க யாரு? :)

G.Ragavan said...

எனக்கு ஒன்னு மட்டும் புரியுது மக்கா...கவுண்டமணியுஞ் சரி செந்திலுஞ் சரி...இன்னமும் ரிட்டயர் ஆகலை. இல்லைன்னா இப்பிடிப் புகுந்து விளையாடுவாங்களா? கலக்கல். அதுலயும் நாய் கவ்விக்கிட்டுப் போறது......சூப்பரப்பு.

Unknown said...

//:)))

கலக்கல்ங்ண்ணா!//

டாங்க்ஸ் கப்பி

Unknown said...

//abdominal cord na enna dev :P =======rasigai
//

அது ABDOMINAL CORD இல்லைங்க ABDOMINAL GUARD ...

நம்ம ஆல் இன் ஆல் அழகுராஜ் கோச்சிங் சென்டரல்ல கிரிக்கெட் கத்துக்க உங்களையும் சேர்த்து விடணும் போல இருக்கே..:)

Anonymous said...

tamil la cord um guard um ore maathiri irukuthungna athan :D =======rasigai

நாகை சிவா said...

ஏனுங்கண்ணா, கொட்டாங்கச்சிய வச்சு சமாளிக்க முடியாதா என்ன?

அனுபவஸ்தர், நீங்க நம்ம அழகு ராஜாவுக்கு இத சொல்லுங்களேன்...

ஜி said...

அசத்திருக்கீங்க தேவ் அண்ணே...

Anonymous said...

அன்புக்குறிய மருமகனே, கொட்டாங்கச்சிய தழல்ல போட்டத்து நாகம் தானா? ;) ... ஐ ... வேற என்ன ரகசியம் இருக்கு? :) இப்படிக்கு கோவா ஆன்டி :) அப்படின்னு உங்க பதிவுல பின்னூட்டம் போடச் சொல்லி உத்தரவு வந்ததுங்க பெரியவங்கட்டிருந்து ... என்ன பண்ணட்டும்?

Unknown said...

//:))))))))))))))))))))))))) //

வாங்க கோபிநாத் :))))))))))))))))))))

Unknown said...

//தேவ், உங்க ஊர் தமிழ் டீச்சர் உங்க பதிவு மொழி பெயர்த்து அனுப்பிருக்காங்க என் வீட்டுக்கு :) ... //

தமிழ் டூ தமிழ் மொழிபெயர்ப்பா???!!!!

//மொழி பெயர்க்கிறேன்னுட்டு, பிரம்பால முளியப் பேக்கிறாங்கப்பு ... என்னோடதா உங்களோடதான்னு எனக்கு சரியா தெரியல ... :)//

என்னுது இல்லங்கோ.. நான் எஸ்கேப்..

//இதுக்குத்தான் பந்து சந்துக்குள்ள போடும்போது கவனமா போடணும்ன்றது ... இங்க அடிச்ச பந்து அங்க இடிச்சிரிச்சுங்கோ :) ... மாட்டிக்கினாங்க யாரு? :) //

வார்த்தை எல்லாம் தமிழ்ன்னு தெரியுது.. மதுரா தமிழ் கைட் எங்கே கிடைக்கும்ன்னு சொன்னீங்கன்னா உபயோகமா இருக்கும் :-)

Unknown said...

//எனக்கு ஒன்னு மட்டும் புரியுது மக்கா...கவுண்டமணியுஞ் சரி செந்திலுஞ் சரி...இன்னமும் ரிட்டயர் ஆகலை. இல்லைன்னா இப்பிடிப் புகுந்து விளையாடுவாங்களா? //

காமெடியர்களுக்கு என்றுமே ரிட்டயர்மென்ட் கிடையாதுங்க ஜி.ரா. நம்ம கலைவாணர் கூட கிரிக்கெட் நல்லா விளையாடுவாரே உங்களுக்குத் தெரியாதா?


//கலக்கல். அதுலயும் நாய் கவ்விக்கிட்டுப் போறது......சூப்பரப்பு. //

Thank u gi.ra

Unknown said...

//tamil la cord um guard um ore maathiri irukuthungna athan :D =======rasigai //

இத்தனைப் பேர் படிச்சாங்க யாருக்குமே தோணாத விசயம் உங்களுக்கு மட்டும் எப்படித் தான் தோணுதோ!!! வாழ்க ரசிகை :-)

Unknown said...

//ஏனுங்கண்ணா, கொட்டாங்கச்சிய வச்சு சமாளிக்க முடியாதா என்ன?//

டெஸ்டிங்க்கு நம்ம வெட்டியைக் கூப்பிடுவோமா? அவன் கரெக்ட்டா ரிசல்ட் சொல்லிருவான்..

//அனுபவஸ்தர், நீங்க நம்ம அழகு ராஜாவுக்கு இத சொல்லுங்களேன்...//
வில்லங்கமாவே பேசிக்கிட்டு திரிஞ்ச கோமட்டி தலையனைக் கூப்பிட்டு உன் காதைக் கடிச்சு வைக்கச் சொல்லிடுவேன்..

Unknown said...

//அசத்திருக்கீங்க தேவ் அண்ணே... //
டாங்க்ஸ்ப்பா ஜீ :-)

Unknown said...

//அன்புக்குறிய மருமகனே, கொட்டாங்கச்சிய தழல்ல போட்டத்து நாகம் தானா? ;) ... ஐ ... வேற என்ன ரகசியம் இருக்கு? :) இப்படிக்கு கோவா ஆன்டி :) அப்படின்னு உங்க பதிவுல பின்னூட்டம் போடச் சொல்லி உத்தரவு வந்ததுங்க பெரியவங்கட்டிருந்து ... என்ன பண்ணட்டும்? //


மொதல்ல அந்தப் பெரியவங்க கிட்டச் சொல்லி மதுரா தமிழ் கைடு வாங்கி நம்ம கச்சேரி அட்ரஸ்க்கு அனுப்பச் சொல்லுங்க.. பேசுறது அம்புட்டும் தமிழ் மாதிரியே இருக்கு ஆனா விளங்கத் தான் மாட்டேங்குது :-)

Anonymous said...

அப்ப ஒண்ணுமே இல்லையா ... நான் கூட என்னவோ ஏதோ பெருசா வருதுன்னு நினைச்சு ... அட அட அடா ... :)
ஞான் போயி அடுத்து பதிவு எழுதி குழப்பம் பண்ற வேலையப் பாக்கேன் :) எதுனாச்சும் விஷேஷம்னா சொல்லி அனுப்புங்க :)

Unknown said...

//அப்ப ஒண்ணுமே இல்லையா ... நான் கூட என்னவோ ஏதோ பெருசா வருதுன்னு நினைச்சு ... அட அட அடா ... :)
ஞான் போயி அடுத்து பதிவு எழுதி குழப்பம் பண்ற வேலையப் பாக்கேன் :) எதுனாச்சும் விஷேஷம்னா சொல்லி அனுப்புங்க :)//

அதைச் செய்ங்க மொதல்ல வந்து நாங்களும் ஒரு வணக்கம் வைக்கிறோம் :-)

tamil10