Monday, March 26, 2007

உனக்கு இது தேவையா?

உனக்கு இது தேவையா?

மூக்குக்கு முன்னாடி விரலை நீட்டிக் கேட்டக் கேள்விங்க இது? அட நம்ம மனச்சாட்சிதானுங்க...இப்படி கேள்வியைக் கேட்டு நம்மைக் கலாய்ச்சு விட்டுருச்சு..

ம:மேடைப் போட்டு மைக்கைக் கையிலேக் கொடுத்துட்டா தொண்டையைக் கனைச்சுட்டுப் பாடக் கிளம்புருவீயா நீயு...

நா: அட அது இல்லீங்க...பெரியவங்க கூப்பிட்டாங்க...அதுவும் மடல் எல்லாம் போட்டுக் கூப்பிட்டாங்க.. அதான்...

ம: தம்பி... சென்னைக் கச்சேரின்னு பேர் வச்சுட்டு ஒரு ஓரமாக் கச்சேரி பண்ணிட்டிருந்த ரைட்.. அங்கே யாருக்கும் எந்த தொந்தரவும் இல்ல.. நானும் நீ செஞ்சுகிட்டு இருந்த எந்த விசயத்தையும் ஏன்னு கேக்கல்ல.. ஆனா மாப்ளே உனக்கேத் தெரியும் இது டூ மச்ச்ச்.... அவிங்க ஒரு பாசத்துல்ல பய புள்ள எழுதட்டும்ன்னு கூப்பிட்டாலும் நீ என்னச் சொல்லியிருக்கணும்....

நா:என்னங்கச் சொல்லியிருக்கணும்

ம: நானெல்லாம் அதுக்கு லாயக்கு இல்ல்ங்க...வேற ஆளு கையிலே மைக்கைக் கொடுங்க.. அது நாட்டுக்கும் நல்லது.. நமக்கும் நல்லதுன்னு சொல்லியிருக்கணும் இல்ல..

நா: நீங்க என்னை ஓவரா ஓட்டுறீங்கண்ணே.. நானும் கூட எழுதுவேண்ணே...

ம: ஆனாலும் உனக்கு குசும்பு ஜாஸ்திடா.. என் கிட்டயே உன் பிலிமை ஓட்டுறியே... நாலு படத்தைப் பாத்துட்டு அதுல்ல இது நொட்டை அது சொட்டை அப்படின்னு வாய்க்கு வந்தப் படி விளாசுறதா எழுத்தா.. ஒரு பதிவுல்ல பத்து படத்தை அதுவும் நெட்ல்ல சுட்டுப் போட்டு அதுக்குப் பக்கதுல்ல ஒத்த வரி எழுதுறதா எழுத்து...காமெடி பண்றேன்ன்னு வடிவேலையும் கவுண்டரையும் கூட்டி வச்சு அவங்க நடிச்சப் படத்தைப் பிடி அடிக்கிறது தான் எழுத்தாலே..

நா: மக்கள் ரசிக்கிறாங்களேண்ணே..

ம: இங்கேப் பாருடா.. மக்கள் எல்லாம் இவருக்கு மீட்டீங் போட்டு சொன்னாங்களாம் இவர் எழுத்றதை ரசிக்கிறோம்ன்னு.. டேய் அப்பா.. இதுக்கு மேல உங்கூடப் பேசி பிர்யோஜனமில்லடா...

நா: ஏன் அண்ணே அப்படி சொல்லுறீங்க... பதிவுங்கறதுக்கு ஒரு வகுக்கப்பட்ட வடிவம் இல்லண்ண.. எல்லோரும் எழுதலாம்.. எல்லோரும் படிக்கலாம்..

நம்ம பதிவு பக்கம்ங்கறது ஒரு வீடு மாதிரிண்ணே.. ஒவ்வொருத்தருக்கும் ஒரு வீடு இருக்குண்ணே...இந்த வீடெல்லாம் இருக்கற காலனி தாண்ணே நம்ம தமிழ்மணம்...இங்கிட்டு ஒவ்வொரு வீடும் ஒரு ஒரு மாதிரி ஆனா அம்புட்டு பேரும் நம்ம மக்கள்ண்ணே..சின்னச் சின்னச் சச்சரவு இருக்கத் தான் செய்யும் ஆனா..ஒரு வீட்டு விசேசம்ன்னா அம்புட்டு பேத்துக்கும் சந்தோசம் தானுங்க.. அதே மாதிரி வருத்தம்ன்னாலும் வருத்தம் தான்ணே...

ம: யப்பா நீ பெரிய டகால்டிடா.. நக்கல் நையாண்டின்னு நாதஸ்வரம் வாசிச்சுட்டு பேசுற பேச்சைப் பார்டா, பர்மா பார்டர்ல்ல பத்தமடை பாய் விரிச்சு தவம் பண்ண முனிவர் மாத்திரி பிளாசபி பேசறதை... இதுக்கு மேலயும் உம் பேச்சை கேக்க எனக்குச் சக்தி இல்லப்பா... மக்கா.. இனி இவன் செய்யப் போற அநியாயத்துக்கெல்லாம் நான் பொறுப்பு இல்லப்பா..

கிளம்பறதுக்கு முன்னாடி இந்தா தேவ் உனக்கு ஒண்ணு சொல்லிடுறேன்...

டேய் தம்பி.. நட்சத்திரமாக் கூப்பிட்டாய்ங்கன்னு கீ போர்டை எல்லாம் பூவும் பொட்டும் வச்சு சிங்காரிக்கறது இருக்கட்டும்.. மத்தவங்களைக் கூப்பிட்டக் காரணம் எனக்கு விளங்கிச்சோ இல்லயோ.. உன்னக் கூப்பிட்டத்துக்கு காரணம் விளங்கிருச்சு ராசா...கிளாஸ்ல்ல ஒரமா உக்காந்து லந்து பண்றவனை வாத்தியார் கூப்பிட்டு தண்டனையா எல்லாரும் பாக்கும் படி பெஞ்ச் மேல நிக்கச் சொல்லுவார்.. அப்படியாவது அவன் திருந்துறானான்னு பாக்க..உன்னியும் அப்படித் தான் இப்போ நடுவில்ல நிக்க வச்சு ரவுண்ட் கட்டியிருக்காங்க... பாத்து பதவிசா நடந்துக்க.. அது தான் ஒனக்கு நல்லது.. இனியாவது உருப்படியா எதையாவது எழுது...

மனச்சாட்சி டாட்டாக் காட்டிட்டு எஸ் ஆயிருச்சு...

"அட விடுங்க மக்கா...நீங்க யாரும் டென்சன் ஆவாதீங்க.. சின்னப் புள்ளல்ல இருந்த நம்ம மனச்சாட்சிக்கு நம்மளை நிக்க வச்சு வாத்தியார் வேலைப் பாக்குறதே பொழப்பாப் போச்சு... இருந்தாலும் மனச்சாட்சி இருக்கானே ரொம்பவும் பாசக்காரப் பய தான்.. கொஞ்சம் எடுத்தெறிஞ்சாப்பல்ல பேசுனாலும் உண்மையப் பேசிபுடுவான் பயபுள்ள.. அதனால் தான் அடிக்கடி அவனை நம்ம பினாத்தலார் பாணியிலே அடங்குடா மவனேன்னு நான் கொஞ்சம் அடக்கி வச்சுருவேன்...


சரி மக்கா மேட்டருக்கு வருவோம்..

இந்தா இந்த வாரம் பூராவும் நானும்..நம்ம பாசக்கார பய மனச்சாட்சியும் உங்க கூடப் பேசப் போறோம்.. கேளுங்க.. கேளுங்க... எங்க புராணத்தை எல்லாம் கொஞ்சம் காது கொடுத்துக் கேளுங்க..

வாய்ப்பு அமைத்துக் கொடுத்த தமிழ்மண நிர்வாகிகளுக்கு நன்றிகளோட தொடங்கிருவோமா ஆட்டத்தை...

62 comments:

MyFriend said...

நான் வந்துட்டேன்... :-)

வெட்டிப்பயல் said...

நட்சத்திர வாழ்த்துக்கள்!!1

MyFriend said...

ஸ்டாரான்ன எங்க அண்ணணுக்கு ஜே!

வாழ்த்துக்கள் சிங்கமே!

(சிங்கம் மமாதிரி ஒரு ஓரத்துல படுத்துக்கிட்டு இருக்க கூடாது சொல்லிட்டேன்.. புலி மாதிரி பாயுங்கள்.)

;-)

துளசி கோபால் said...

வாங்க நட்சத்திரமே.

வாழ்த்து(க்)கள்.

அதென்னா........... பெஞ்சுமேலே ஏறணுமுன்னா இந்த ஓட்டம் ஓடியாந்தீக?
இன்னும் ரெண்டு மணி நேரம் இருக்கேப்பா.:-))))

ம்ம்ம்ம்ம்ம்ம் எல்லாத்துக்கும் இம்புட்டு அவசரம் காமிச்சா..............?

MyFriend said...

//இந்த வாரம் பூராவும் நானும்..நம்ம பாசக்கார பய மனச்சாட்சியும் உங்க கூடப் பேசப் போறோம்.. //

ரெண்டு பேரா? இதுல யாருப்பா ஹீரோ?

MyFriend said...

I think உங்க நட்சத்திர வார்த்தின் முதல் பின்னூட்டம் என்னுடையதுதான். என் ராசி உங்களுக்கு வொர்க் அவுட் ஆகுதான்னு பார்ப்போம். :-)

MyFriend said...

அப்போ அருமையான கதைகளுக்கு டாட்டாவா?

Santhosh said...

நட்சத்திரம் ஆனதுக்கு வாழ்த்துக்கள் தேவு.
புள்ளைங்களா எல்லாரும் ஓடிவாங்கடே இங்க ஒருத்தன் வகையா இந்த வாரம் சிக்கி இருக்கான் ரொம்ப நல்லவன் வல்லவன் எம்முட்டு அடிச்சாலும் அழ மாட்டான் வாங்கிகுவான் இந்த வாரம் கச்சேரியை இங்க வெச்சிக்க வேண்டியது தான்.

MyFriend said...

//அதென்னா........... பெஞ்சுமேலே ஏறணுமுன்னா இந்த ஓட்டம் ஓடியாந்தீக?
இன்னும் ரெண்டு மணி நேரம் இருக்கேப்பா.:-))))//

ஓ.. இன்னும் ரெண்டு மணி நேரம் இருக்கா? எதுக்கு இப்படி அவசரம்? நாங்கெல்லாம் எங்உம் ஓடமாட்டோம்ப்பா. காலையில 11 மணிக்கு க்லாஸ் முடிஞ்சு வந்ததுல இருந்தே இங்கேதான் வேய்ட்டீங்.. :-)

- யெஸ்.பாலபாரதி said...

:)

வாழ்த்துக்கள் தேவ்!

அபி அப்பா said...

வாழ்த்துக்கள் தேவ்:-)))கலக்கவும்.

MyFriend said...

அண்ணே,

கச்சேரி கலை கட்டிடுச்சுண்ணே! தாரை தப்பட்டைகளை முழங்க இப்பத்தான் ஒரு சங்கத்து சிங்கம் வந்திருக்கு போல.. மத்தவங்களையும் ஓடிவா ஓடிவான்னு அழைங்க.. ஹ்ம்ம்.. கிளம்புங்கள்!

MyFriend said...

//மனசாட்சி சொல்லுவது: பிடிக்கும் வரை வாழ்ந்து விடு//

இதுக்கும் இந்த பதிவுக்கும் முரண்பாடா இருக்கே?

இம்சை அரசி said...

இந்த மனசாட்சிப்பய இப்படித்தான் அப்பப்ப உண்மைய சொல்லிடுவான்...

அதுக்கெல்லாம் அசர முடியுமா???

இம்சை அரசி said...

//
சரிங்கோ ஒரு வாரமா நட்சத்திரக் கச்சேரி வச்சிருவோம்.. வாய் பாட்டு தான் நானு.. கூட மேளம் தாளம்ன்னு ஓங்க பாசமழையைக் கொஞ்சம் பொழிஞ்சிங்கன்னா.. தூள் கிளப்பிரலாம்ங்கோ..
//

எல்லாம் ரெடி பண்ணியாச்சி :-)

MyFriend said...

என்ன? என்னுடைய ஒரு பின்னூட்டதுக்கு கூட உங்களுடைய பதிலை காணோம்????

இம்சை அரசி said...

//இடதா/வலதா - நேராப் போயிரலாம்ங்க.. எதுக்கு அந்தப் பக்கம் இந்தப் பக்கம் சாயந்துகிட்டு.. சங்கடம் வேணாம்ய்யா //

keep left - இது தானே இந்தியால ரூல்ஸ்....

இங்க keep right...

இத பத்தி விக்கி பசங்க கூட ஒரு பதிவு போட்டாங்களே!!!

உங்கள் நண்பன்(சரா) said...

ஏலே, நெசந்தான இது, என் அருமை டைரட்டரு நட்சத்திரமா? இந்த அசிஸ்டெண்டுகிட்ட கூட ஒரு வார்த்தை சொல்லையே மக்கா?இந்தா புடி வாழ்த்துக்கள்,

முதலில் யாரு நட்சத்திரம் அப்படிங்கிறதையே பார்க்காமல் உன் பதிவு என்றவுடன் படிக்க ஆரம்பித்தேன் , உன் கேள்வி பதில் படிக்கும் போது தான் தெரிந்தது, சரினு தமிழ்மண முகப்பைப் பார்த்தை பாசக்காரப் பய தேவு கொலைவெறியோட எழுதுற படம் , ஆஹா அப்போ இந்த வாரம் சூப்பரு தான் போ.....

பதிவிற்க்கான பின்னூட்டம் பிறகு, மக்கா உன்னை நட்சத்திரமாப் பார்த்ததும் சந்தோசமா இருக்கு தேவ், நல்ல பல பதிவுகள் எழுதி ஜொலிக்க வாழ்த்துக்கள்,


அன்புடன்...
சரவணன்.

இம்சை அரசி said...

//காதல்..கிசு கிசு...பின்னூட்டங்கள்..பற்றி மனம் திறக்கிறார் வெட்டிப் பயல்....
பிரபல பதிவர்கள் பாபா.. கொத்தனார்..கைப்புள்ள.. சிபிக்கு வெட்டியின் கேள்விகள்..
இன்று மாலை கச்சேரிக்கு வாங்க... படியுங்க...//

எப்படி புக் கம்பெனிக்காரன் எல்லாம் ஏமாத்தறானு இப்ப புரியுது :-)

டிபிஆர்.ஜோசப் said...

அட! நம்ம தேவ்!!

வாழ்த்துக்கள்.. கலக்குங்க:)

கோவி.கண்ணன் said...

தேவுட தேவுட ஏழுநாள் தேவுடா !
தேவ் அண்ணே வணக்கம் !
கா(லா)ய்கிறவங்களுக்குத்தான் கல்லடி விழுமாமே ?
:))))
வாங்க நடசத்திரமே !

நாமக்கல் சிபி said...

வந்துட்டோம் வந்துட்டோம்!
வாழ்த்துச் சொல்ல வந்துட்டோம்!

வந்துட்டோம் வந்துட்டோம்!
வாழ்த்துச் சொல்ல வந்துட்டோம்!

வந்துட்டோம் வந்துட்டோம்!
வாழ்த்துச் சொல்ல வந்துட்டோம்!

வந்துட்டோம் வந்துட்டோம்!
வாழ்த்துச் சொல்ல வந்துட்டோம்!

நாமக்கல் சிபி said...

//கா(லா)ய்கிறவங்களுக்குத்தான் கல்லடி விழுமாமே ?
//

கோவியாருக்குக் குசும்பு!

மணிகண்டன் said...

நட்சத்திர வாழ்த்துக்கள் தேவ்!

Unknown said...

வாழ்த்துக்கள் தேவ்.கலக்கி எடுக்கும் வாரத்தை எதிர்பார்க்கிறேன்.அடித்து தூள் கிளப்புங்கள்.

மனதின் ஓசை said...

நட்சத்திர வாழ்த்துக்கள் தேவ்..

ஆரம்பமே அமர்க்களமா இருக்கு.. இந்த வாரம்.. தேவ் வாரம்"

மனதின் ஓசை said...

//நா: நீங்க என்னை ஓவரா ஓட்டுறீங்கண்ணே.. நானும் கூட எழுதுவேண்ணே...
//

அழாத தேவு கண்ணா அழாத..

//என் கிட்டயே உன் பிலிமை ஓட்டுறியே... //

:-)))))))))


//நா: மக்கள் ரசிக்கிறாங்களேண்ணே..//

இது.. இது போதும்யா.. நீ எழுத..

மனதின் ஓசை said...

//இந்தா இந்த வாரம் பூராவும் நானும்..நம்ம பாசக்கார பய மனச்சாட்சியும் உங்க கூடப் பேசப் போறோம்.. //

அய்ய்ய்.. அப்ப நரைய மேட்டர் வெளிய வரும்.. குட் குட்.. மனசாட்சி பேசரத கேக்க ஆவலோடு இருகோம்யா.. சீக்கிரம்.. சென்ஸார் பன்னாம போடு..சரியா?

துளசி கோபால் said...

//இந்த வாரம்.. தேவ் வாரம்"//

இந்த வாரம் தே(வ்) வாரம்:-))))))

இராம்/Raam said...

நட்சத்திர வாழ்த்துக்கள் தேவ்..... :)

இராம்/Raam said...

//தாரை தப்பட்டைகளை முழங்க இப்பத்தான்//

ஃபிரண்ட்,

இது நாந்தான் வந்து சொல்லணும், அதுக்குள்ளே என்ன அவசரம் ... :)

யாரங்கே , அண்ணன் தேவ் நட்சத்திரமானதுக்கு வரவேற்பு அளிக்க கிளப்புங்கள், தாரை தப்பட்டைகள் முழக்கத்தில் இந்த அகிலமே அதிரட்டும்.. :)

MyFriend said...

@இராம்:

//இது நாந்தான் வந்து சொல்லணும், அதுக்குள்ளே என்ன அவசரம் ... :)//

ஃபுல் காண்ட்ரெக் எடுத்துட்டீங்களா?

தேவ் அண்ணே, எனக்கும் ஒரு காண்ட்ரெக் கொடுங்க.. இந்த ராமு பையங்கிட்ட காட்டணும்..

பொன்ஸ்~~Poorna said...

வாழ்த்துக்கள் தேவ்! நாங்கெல்லாம் வந்து வாழ்த்துறதுக்குள்ள உயிரெல்லை தாண்டி எங்கயோ போயிடும் போல :)

பதிவை இப்பவே ரீடரில் போட்டுவச்சிடறேன்.. அப்பதான் விடாம படிக்கலாம் :)

Subbiah Veerappan said...

அட, தேவ்! நீங்கதான் இந்தவார ஸ்டாரா!
வாழத்துக்கள்! கல்க்குங்க!

அப்படியே அந்த சிங்கப்பூர் கோவியாரருக்கும், மணியண்ணனுக்கும்
நடந்த டெவில் ஷோவைப் பதிவாப் போட்டிருங்க!

அதை ஏன் நிறுத்திவச்சிரிக்கீங்க?
யோசைனையெல்லம் ஓன்னும் வேண்டாம். உடனே போட்டிருங்க!
கை தட்றதுக்கு நம்ம வகுப்புக் கண்மணிகளை நான் கூட்டியாறேன்!

மனதின் ஓசை said...

//பதிவை இப்பவே ரீடரில் போட்டுவச்சிடறேன்..// ????

நாகை சிவா said...

வந்துட்டோம் வந்துட்டோம்!
ஒடோடி வந்துட்டோம்!

வந்துட்டோம் வந்துட்டோம்!
வாழ்த்து சொல்ல வந்துட்டோம்!

வந்துட்டோம் வந்துட்டோம்!
கும்மி அடிக்க வந்துட்டோம்!

வந்துட்டோம் வந்துட்டோம்!
கலங்க அடிக்க வந்துட்டோம்!

நாகை சிவா said...

//ஏன் அண்ணே அப்படி சொல்லுறீங்க... பதிவுங்றதுக்கு ஒரு வகுக்கப்பட்ட வடிவம் இல்லண்ண.. எல்லோரும் எழுதலாம்.. எல்லோரும் படிக்கலாம்..//

இதை மனசில் வச்சு தானய்யா நாங்களும் பொழப்ப ஒட்டிக்கிட்டு இருக்கோம்!!!!

நாகை சிவா said...

//கொஞ்சம் கெத்துக் கூட்டிச் சொல்லணும்ன்னா எப்படியாவது வரலாறுல்ல ஒரு ஒத்த வரியிலாவது நம்ம பெயரைச் சேத்துடணும்ன்னு நிதம் கனவு கண்டு அதற்கு போராடும் ஒரு மெட்ராஸ்காரன். //

ஒத்த வரி என்ன, புக்கே போட்டு விடுவோம், நாளை வரலாறு உன் பெருமையை உலகுக்கு உணர்த்தட்டும்!!!

நாகை சிவா said...

//இடதா/வலதா - நேராப் போயிரலாம்ங்க.. எதுக்கு அந்தப் பக்கம் இந்தப் பக்கம் சாயந்துகிட்டு.. சங்கடம் வேணாம்ய்யா //

என்னய்யா இம்புட்டு உள்குத்து,

ஆட்டோ பயமா?

நாகை சிவா said...

//(சிங்கம் மமாதிரி ஒரு ஓரத்துல படுத்துக்கிட்டு இருக்க கூடாது சொல்லிட்டேன்.. புலி மாதிரி பாயுங்கள்.)//

நல்லா கேட்டுக்கோய்யா, சும்மா நம்மள மாதிரி பாய்னும் சொல்லிப்புட்டேன், நான் சொல்லி கொடுத்த அம்புட்டு திறமையையும் இந்த வாரத்தில் நீ காட்டனும், அது தான் எனக்கு பெருமை, நம் இனத்துக்கும் பெருமை சொல்லிப்புட்டேன் ஆமா....

நாகை சிவா said...

//புள்ளைங்களா எல்லாரும் ஓடிவாங்கடே இங்க ஒருத்தன் வகையா இந்த வாரம் சிக்கி இருக்கான் ரொம்ப நல்லவன் வல்லவன் எம்முட்டு அடிச்சாலும் அழ மாட்டான் வாங்கிகுவான் இந்த வாரம் கச்சேரியை இங்க வெச்சிக்க வேண்டியது தான். //

பங்கு, அல்ரெடி ஸ்டார்ட் ஆயிடுச்சு. ஆனா தனியா ஆட வேண்டியதா இருக்கு.... வந்து கை கொடுங்க மக்கா

MyFriend said...

//நான் சொல்லி கொடுத்த அம்புட்டு திறமையையும் இந்த வாரத்தில் நீ காட்டனும், அது தான் எனக்கு பெருமை, நம் இனத்துக்கும் பெருமை சொல்லிப்புட்டேன் ஆமா.... //

பர்ர்ர்ட்டா.. யாரோ கஷ்டப்பட்டு சுட்ட வடையை யாரோ கஷ்டப்பட்டு தூக்கிட்டு போயி, உக்கார்ந்த இடத்திலேயே அந்த வடையை நரி சாப்பிட்ட கதையால இருக்கு!!!!!!

கோவி.கண்ணன் said...

//SP.VR. சுப்பையா said...
அட, தேவ்! நீங்கதான் இந்தவார ஸ்டாரா!
வாழத்துக்கள்! கல்க்குங்க!
//

ஆசிரியர் சிறப்பு வகுப்பை கட் அடித்துட்டு வந்து சினிமா பார்க்க வந்துட்டார் போல. சினிமா ? அதானே..? நட்சத்திரப் பதிவு !
:))

Subbiah Veerappan said...

/// Koviyaar Said: ஆசிரியர் சிறப்பு வகுப்பை கட் அடித்துட்டு வந்து சினிமா பார்க்க வந்துட்டார் போல. சினிமா ? அதானே..? நட்சத்திரப் பதிவு !
:))///
வாத்தியர்ரும் ஒரு காலத்தில் மாணவராக இருந்தவர்தான். அப்பவெல்லாம் கட் அடிக்க முடியாதகாலம்.பிட் அடிக்க முடியாத காலம்
இப்பவெல்லாம் அப்படியா இருக்கு?

நான் வகுப்பு இடவேளையில் இங்கே வந்தேன்!
படம் பார்க்க அல்ல! - நல்ல
படங்களாகப் போடச் சொல்ல்!

இலவசக்கொத்தனார் said...

மேளம் எடுத்துக்கிட்டு வந்தாச்சு. உமக்காக வேற ஒரு கச்சேரியைக் கூட கேன்ஸல் பண்ணியாச்சு. என்ன தாளமுன்னு சொல்லும். அடிக்க ஆரம்பிச்சுடலாம்.

ஆ! ரண்டக்கு ரக்குன, ரண்டக்கு ரக்குன, டண்டனக்கன டண்டக்குனக்கன...

சிவபாலன் said...

தேவ்,

நட்சத்திர வார பதிவுகளுக்கு வாழ்த்துக்கள்..

கலக்குங்க..

Anonymous said...

கலக்கல் வாரமாக அமைய வாழ்த்துக்கள் தேவ்.

இம்சை அரசி said...

வந்துட்டேன்... வந்துட்டேன்... மறுபடியும் வந்துட்டேன்....

G.Ragavan said...

தேவைதான்னு முக்குல ஒருத்தன் சொல்றான்...என்னய்யா கேள்வி இது? இப்பிடி ஒரு கேள்வியக் கேட்டே நட்சத்திர வாரத்தத் தொடங்கீட்டீரு. ஒமக்கென்னவே...கலக்கல் மன்னன். என்னுடைய வாழ்த்துகள். இந்த வாரம் இனிய வாரமாக அமைய வாழ்த்துகள். அடுத்த பின்னூட்டம் நாளைக்கு நைட்டுதான். கொஞ்சம் வேலை. வந்து பேசிக்கிறேன்.

கதிர் said...

லேட்டா வந்துட்டனோ!

நட்சத்திர வாழ்த்துக்கள் தேவ் அண்ணே. டிசம்பர் மாத மயிலாப்பூர் சபாக்கள் மாதிரி கச்சேரி களை கட்டணும்.

ஜொள்ளுப்பாண்டி said...

வாவ் தேவு இந்த வாரம் சரவெடிதான் !! நட்சத்திர வாழ்த்துக்கள் தேவ் !!

ஜொள்ளுப்பாண்டி said...

சங்கத்து சிங்கமே!
எங்களின் அங்கமே!
ம்ம்ம் ஒலிக்கட்டும் பறை!
புறப்பட்டுவிடார் எங்கள் போர்வாள்!
தேவூ !!

அண்ணாத்தே ஆடுறார்
ஒத்திகோ ஒத்திகோ !!!
தென்னாட்டு வேங்கைத்தான்
ஒத்திக்கோ ஒத்திகோ !!

:)))))))))))

Unknown said...

மக்களே வந்து வாழ்த்திய மை பிரெண்ட்,வெட்டி, துளசி அக்கா, சிவா,ராம்,இம்சை அரசி,
தல பாலபாரதி, டிபி.ஆர் ஜோசப் சார்,பொன்ஸ், எங்கள் நண்பன் சரா, பாசக்கார பைய சந்தோஷ், அபி அப்பா,கோவி.கண்ணன், சுப்பையா வாத்தியார்,தளபதி சிபி, நம்ம கிரிக்கெட் மணிகண்டன், நட்பு செல்வன், மனதின் ஓசையார்,தலைவர் இலவசக்கொத்தனார், சிவபாலன், விக்கி, அன்பின் ஜி.ராகவன், நம்ம தங்க தம்பி,

எல்லோருக்கும் என் மனமார்ந்த நன்றிகள்... தொடரும் கச்சேரி உங்கள் ஆதரவுடன்..

கப்பி | Kappi said...

வாழ்த்துக்கள் தேவ் :)

சிறில் அலெக்ஸ் said...

வாழ்த்துக்கள் பார்ட்னர்.
ஏற்கனவ்வே கலக்க ஆரம்பிச்சுட்டீங்க.

கலக்குங்க
:))

கோபிநாத் said...

நட்சத்திர வாழ்த்துக்கள் .;-)))

குமரன் (Kumaran) said...

தேவ். இப்பத்தான் கவனிச்சேன். வாத்துகள் தேவ். சே. வாழ்த்துகள் தேவ். இந்த வாரமும் நல்ல வாரம்பா. ரொம்ப மகிழ்ச்சி அதுல. :-)

Unknown said...

பாண்டி தம்பி, பார்ட்னர் சிறில்,பாசக்கார கோபிநாத், ஆன்மீக்த் தென்றல் குமரன்,

எல்லாருக்கும் என் மனமார்ந்த நன்றிகள்

கார்த்திக் பிரபு said...

valthukal dev

Unknown said...

Wishes for the star!!!

will read the posts later :(

(konjam busy paa)

Unknown said...

நன்றி கார்த்திக் பிரபு

நன்றி அருட்பெருங்கோ பொறுமையா வேலையை முடிச்சுட்டு வாப்பா

சேதுக்கரசி said...

ரெண்டு வாரம் வெளியூர் போயிருந்தேனுங்களா.. அப்புறம் போன வாரம் அன்புடன் கவிதைப் போட்டி சூடுபிடிச்சு நிறைய வேலை வந்துச்சுங்களா.. அப்புறம் வர்ற வாரம் வருமான வரிக் கணக்கு முடிச்சு அங்கிள் சாமுக்கு துட்டு குடுக்கணும்ங்களா.. வேலை பின்னியெடுக்குது.. நட்சத்திர வாழ்த்து சொல்லக்கூட முடியலை :-(

எப்படியோ... தாமதமா சொல்றதுக்காவது வந்து சேர்ந்தேனே.. நட்சத்திர வாழ்த்துக்கள். போன வாரத்துக்கு மட்டுந்தானா நட்சத்திரம்? Once a star, always a star இல்லீங்களா? :-) (ஐஸ் போதுங்களா? ஹிஹி..)

tamil10