Saturday, March 31, 2007

பொன்ஸ் அக்கா எங்கிட்டச் சொன்னது...

ஸ்ப்பா.. ஒரு மூணு இன்டர்வியூ தான் எடுத்திருப்பேன் அதுக்குள்ளே நம்ம புகழ் அக்கரைச் சீமைக்கெல்லாம் அலாக்காப் பரவிருச்சு.. CNN...BBC..இப்படி இன்டர்நேஷனல் டிவிகாரயங்க அப்புறம் பேர் சொல்ல வேண்டாம்ன்னு கேட்டுகிட்ட வெளிநாட்டு உள்நாட்டு சேனல்... பேப்பர் எல்லாம் எங்களுக்கு நீங்க ஒரு இன்டர்வியூ பண்ணிக் கொடுக்கணும்.. டாலர் தர்றோம்.. பவுண்ட் தர்றோம்.. நவுண்டு வாங்கன்னு நச்சரிப்புத் தாங்கல்ல... நான் தமிழ்ல்ல தானே இன்டர்வியூ பண்ணுறேன்னுச் சொன்னா பரவாயில்ல நாங்க உங்களுக்காக தமிழ் செக்ஷ்ன ஓப்பன் பண்றோம்ன்னு பாசமழையாப் பொழிஞ்சுத் தள்ளுறாங்க..

அதான் நேத்து மார்னிங் மெரிடியன்ல்ல ரூம் போட்டு யோசிச்சேன்.. ஈவினிங் ஈபிள் டவர் அடியிலே நின்னு அண்ணாந்துப் பாத்து யோசித்தேன்.. சரி என்ன இருந்தாலும் இந்த் தேவ் பைய நம்மளை நம்பி தான் வலையுலக பெருமக்களுக்கு எல்லாம் கச்சேரிக்கு வாங்கன்னு கூப்பிட்டிருக்கான்.. இப்படி அவனை அத்து விட்டா அப்செட் ஆயிருவான்ன்னு பீல் ப்ண்ணேன்.. அவனை விட ஆடியன் ஸ் உங்க கண்ணு கலங்கிரும்ன்னு தான் ஒரு நாள் லீவோடு திரும்பி வந்துட்டேன்...

இன்றையக் கச்சேரியில் மனம் திறக்கிறார் பொன்ஸ்... இவங்களைப் பத்தி அதிகம் அறிமுகம் தேவையில்லை... எல்லாருக்கும் தெரிஞ்ச முகம்... அப்புறம் இவங்க புதுசா என்னச் சொல்லப் போறாங்கன்னுப் பாக்குறீங்களா...இந்தா ஓவர் டூ பொன்ஸ் அக்கா

பதிவுலகின் புரட்சித் தலைவின்னு உங்களுக்குப் பட்டம் கொடுத்தா ஒத்துக்குவீங்களா?

இல்லை.. ஆனையக்கா டக்கராக் கீதுபா... ;)

பதிவுலகில் நீங்கள் அடைந்திருக்கும் இந்த அபார வளர்ச்சி அதிர்ஷ்ட்டமா இல்லை உங்கள்
திட்டமிடுதலின் பயனா?


அபார வளர்ச்சி? அது என்னங்க வளர்ச்சி? பொன்ஸ் பக்கங்களோட உள்ள நுழைந்தேன். இப்ப ப்ரோபைல் பார்த்தால், அஞ்சு பதிவுகள் இருக்கு. நல்ல வளர்ச்சி தான் :). இதில் அதிர்ஷ்டமும் இல்லை,திட்டமிடுதலும் இல்லை.
முதல்ல இதுல என்ன வளர்ச்சி இருக்குன்னே புரியலை எனக்கு.
புதுமையாவோ, இதனால் என் தினப்படி வாழ்க்கையில் ஏதும் மாற்றம் ஏற்பட்டிருக்குன்னோ, எனக்கு
அப்படி ஏதும் வளர்ச்சி தெரியலையே..

பொதுவாவே எந்த இடத்திலும் தனியா எதையுமே சாதிக்க முடியாது.. கூட்டணி அவசியம். பதிவுலகில் கூட்டணிகளை எந்த அளவுக்கு நீங்கப் பயன் படுத்தியிருக்கீங்க.. அதனால் உங்களுக்கு
லாபம் அதிகமா? இழப்பு அதிகமா?


நாம ஒரு சமூகத்தில் வாழுகிறோம். சமூகத்தில் நம்மையும் வெளிப்படுத்திக்கிறோம், அடுத்தவங்களுக்கு உதவி செய்ய முடியும் போது செய்யுறோம். இதில் லாபம், இழப்பு என்று பேச என்ன இருக்குன்னு எனக்குப் புரியலை. சொல்லப் போனால், வலையுலகத்தைக் கண்டுபிடித்ததின் லாபம் அழுது வடியும் சீரியல்களிலிருந்து தப்பித்தது, ஒத்த கருத்துடைய நல்ல நட்புக்கள், நல்ல கருத்துப் பரிமாறல். இது கூட்டணி பதிவுகளிலும் எனக்குக் கிடைத்தது.

வ.வா.ச மூலம் நிறைய அறிமுகங்கள், சென்னப்பட்டினம் மூலம் சில வலைபதிவர் சந்திப்புகள் ஏற்பாடு செய்ய முடிந்தது, உதவிப் பக்கம் மூலம் நிறைய புது பதிவர்களை மற்றவர்களுக்கு முன்னமே அறிந்து கொள்ள
முடிந்தது, நிறைய லாபம் தான். இழப்புன்னா, இங்கே தொடர்ந்து இயங்கும் எல்லாருக்கும் உள்ளது போல், எனக்கும் நேரக் குறைபாடு நிறைய தெரியுது. ஆனால், அதையும் இப்போ பாலன்ஸ் செய்யக் கற்றுக் கொண்டது போல் தோணுது. பார்க்கலாம்

பெண் பதிவர்களை ஒரு சில பெண் பதிவர்கள் ஒன்றிணைக்கும் நோக்கம் என்ன? சுயலாபமா? பொதுச் சேவையா? சொல்லுங்க..நீங்களும் அந்த ஒரு சிலப் பெண் பதிவர்களில் சேர்த்தி தானே?

வலையுலகில் யார் எதற்காக பதிவர்களை ஒன்றிணைத்தாலும், தத்தம் நோக்கத்தைச் சொல்லித் தான் செய்வதாக நினைக்கிறேன் - பெண் பதிவர்களுக்கு மட்டுமல்ல, எல்லாவித ஒருங்கிணைப்புக்கும் பொருந்துது.
வ.வா.ச தொடங்கிய புதிதில், நீங்களும் நானும் சிபி, இளா, பாண்டி, கைப்புள்ள
எல்லாரையும் ஒருங்கிணைத்த பொழுது, ஒரு காமெடி பதிவு தொடங்கப் போகிறோம் என்று சொல்லிச் செய்தோம். அப்போதைய நோக்கம் பதிவர்களுக்குச் சிரிக்க ஒரு இடம்.

அதே போல், சென்னப் பட்டினம்தொடங்கி ஒருங்கிணைத்த பொழுது, சென்னையைப் பற்றி எழுதுவது என்பது நோக்கம். வலைபதிவர் சந்திப்புகள் ஒருங்கிணைக்கும் பொழுது அனைவரையும் சந்திக்க ஒரு களம் உருவாக்கி கொடுப்பது நோக்கம்.

இதை எல்லாம் போல, சக்தி தொடங்கினவங்களுக்கு அப்போது வலையுலகில் எழுந்த பெண்கள் பற்றிய பொதுபுத்தியிலான தவறான கருத்தாக்கங்களுக்குப் பதில் சொல்வது நோக்கம். மகளிர் சக்தி
க்காக ஒருங்கிணைத்தது மகளிர் பதிவுகளை ஓரிடத்தில் சேர்த்து, தவறவிடாமல் படிக்க விரும்புபவர்கள் பயன்பெற.

சுயலாபமா? பொதுச் சேவையா? - என்னைப் பொறுத்தவரை இது ஒரு சுயலாபம் தான். எல்லா மகளிர் பதிவுகளையும் தவற விடாமல் படிக்கணும் என்பது என்னுடைய ஆசை. அதனால் அதைச் செய்தோம். இதைத் தொடங்கி வைத்து உதவிய மதிக்கும் இதே விருப்பம் தான் என்றே நினைக்கிறேன். மற்ற ஒத்த கருத்துடையவர்களுக்கு உதவும், அதனால் வெளியிட்டோம்.

பொதுவாகவே நீங்க ஒரு விளம்பர பிரியைன்னு நான் சொன்னா நீங்க அதை மறுப்பீங்களா? உங்க யானை
பிராண்டிங்கை நான் அதுக்கு எடுத்துக்காட்டாச் சொல்லுவேன்.


"பதிவுகள் வராவிட்டாலும் நம்மைப் பற்றிய செய்திகள் வந்து கொண்டே இருக்க, பதிவு என்று எழுத ஒன்றும் இல்லாவிட்டாலும், சும்மாவேனும் ஏதாவது controversyஆன தலைப்பில் சொல்வதற்கு ஒன்றும் இல்லாத பொழுதும் எழுதி, அடுத்தவர்களைப் படிக்க வைக்க வேண்டும்" என்பதைத் தான் விளம்பரம் தேடும் விதமாக நான் நினைக்கிறேன்.

இந்தக் காரணத்திற்காக முன்பு நண்பர் ஒருவரை நான் விளம்பரம் தேடுபவர் என்று சொல்லி இருந்தேன். இந்த விளக்கத்தை வைத்துப் பார்த்தால் நீங்கள் சொல்வதை நான் மறுக்கிறேன். ஆனால், "நீங்க ஒரு விளம்பர ப்ரியை" என்று நீங்க சொல்வதால், அதை நீங்க டிபைன் செய்தால் அதன்பின் நான் பதில் சொல்லலாம்.

யானை ப்ராண்டிங்: யானை பிராண்டிங்கில் என்ன விதத்தில் விளம்பரம் வருதுன்னு எனக்கு இன்னும் புரியலை. பிராண்டிங் என்பதன் டிக்சனரி
விளக்கம்,

"ஒரு பொருளைத் தன்னுடையது என்று உடமைப் பொருளாக, ஆணித்தரமாக சொல்லிக் கொள்வது. மிருகங்களின் முதுகில் பச்சை குத்துவது போல..." என்று சொல்கிறது.

யானையை யாரும் பயன்படுத்தக் கூடாது என்றோ, யானையின் படங்களை வேறு இடுகைகளில் வரக்கூடாதென்றோ, யானையைப் பற்றிய செய்திகள் வேறெங்கும் வரக்கூடாதென்றோ... எந்த விதத்திலும் ப்ராண்டிங் செய்து கொண்டதாகத் தெரியவில்லை. யானைப் பற்றிய செய்திகள் உள்ள எல்லா பதிவிலும் என்னுடைய பின்னூட்டம் இருக்கிறது என்று நீங்கள் சொன்னால், அதற்கும் என்னால் exceptionsஐக் காட்ட முடியும். எனக்கு யானை பிடிக்கும். உங்கள் ப்ரோபைலில் உள்ள குழந்தை போல, எஸ்கேவின் முருகன் போல, நாகை சிவாவின் புலி போல.. இதில் ப்ராண்டிங் எங்கிருந்து வருது என்று விளக்கினால், பதில் சொல்ல முடியுமா என்று பார்க்கலாம் ;)


ஆரம்பக் காலங்களில் உங்களுக்கு உங்க பதிவுகளில் எழுத வேண்டும் என்று இருந்த ஆர்வம் இப்போ பதிவர்களோடும்... பதிவுலகை ஒழுங்குப்படுத்துவதிலும் திரும்பியதற்கானக் காரணம் என்ன?

பதிவுலகை ஒழுங்குப்படுத்துவது - இதையும் கொஞ்சம் டிபைன் செய்தால் நல்லா இருக்கும் - அதாவது எந்த விதத்தில் இதை நான்(நான் மட்டும் ? ;) ) செய்வதாக உணர்கிறீர்கள்? இப்பவும் பதிவு எழுதிக் கொண்டிருப்பதாகத் தான் நினைக்கிறேன். ஒரு வருடத்தில் என்னுடைய தனிப்பதிவுகளில்(குழு அல்லாமல்) எழுதியவற்றைக் கூட்டினாலே நூற்றி எழுபதுக்கும் மேலான இடுகைகள் இருப்பதாகத் தெரிகிறது. எழுதும் ஆர்வம் குறைந்து போய் நீங்கள் குறிப்பிடுவது போன்ற நாட்டாமை வேலை செய்யத் தொடங்கி இருந்தால், இது கஷ்டம் என்றே நினைக்கிறேன்.

பின்னூட்டங்களில் நீங்கள் வீசும் வாட்களின் வேகம் உங்கள் பதிவுகளில் குறைவு என நினைக்கிறேன்... இதை ஒப்புக்கொள்வீர்களா? அதாவது இப்படிச் சொல்லலாமா அடுத்தவர் பதிவுகளில் பிரச்சனை என்றால் நாட்டாமையை நிற்கும் நீங்கள் உங்கள் பதிவுகளில் அதிகம் பிரச்சனை இல்லாத எழுத்துக்களைத் தான் போடுகிறீர்கள்.. சரியா?

உண்மை. ஏற்கனவே எழுதப்பட்ட ஒரு பிரச்சனையைப் பற்றிய என் பார்வையை வைக்க முடியும். ஆனால், புதிதாக ஒரு செய்தியை வைத்து, அது குறித்து எழுத வேண்டும் என்றால், எனக்கு அதில் விருப்பமும் ஆர்வமும் இல்லை. செய்திகளை அத்தனை தூரம் தொடர்ந்து வாசிப்பதும் இல்லை.
"சற்றுமுன்" தான் இப்போதைய தினசரி எனக்கு :). ஆனால், பிரச்சனையான இடுகைகள் - அல்லது உங்கள் கேள்வியில் ஒலிப்பது போன்ற சீரியஸான பிரச்சனைக்குரிய இடுகைகளையும் எழுதி இருக்கிறேன் - எண்ணிக்கையில் அதிகமில்லை.

நம்ம பதிவுலகம் இன்னிக்குக் கிட்டத்தட்ட தமிழ் சினிமா மாதிரி தான்.. பதிவர்களுக்காக மட்டுமே
படிக்கும் பழக்கம் அதிகமாகி உள்ளது.. இது ஆரோக்கியமான விஷ்யமா?


இது உண்மையா? எல்லாருமே பதிவர்களுக்காகத் தான் படிக்கிறார்களா? அப்படியானால், கண்மணி, அபி அப்பா, கௌசி, செல்லி, போன்ற புதுப் பதிவர்கள் எப்படி பெரும்பான்மையால் வாசிக்கப்படுகிறார்கள்? என்னைப் பொறுத்தவரை, புதுப் பதிவர்களின் எழுத்துக்களையும் நான் வாசித்துக் கொண்டு தான் இருக்கிறேன். பதிவிட்டவரைப் பார்க்காமல் இடுகையைப் படிப்பது, இன்றைக்குத் தமிழ்மணம் இல்லாமல்[அலுவலகத்தில் என் லொள்ளு தாங்காமல் கட் பண்ணிவிட்டார்கள் :(],கூகிள் வாசிப்பகத்தில் மட்டுமே படிக்கும் எனக்கே சாத்தியமாக இருக்கிறது. இது போல் பதிவர் பெயருக்காக படிக்காமல், எழுத்துத் தரம், நடை, பேசுபொருள் இவற்றிற்காக நிறைய பேர்
இருக்கிறார்கள் என்றும் நம்புகிறேன்.

மக்களுக்காக என் பதிவா? எனக்காக என் பதிவா? நீங்கச் சொன்னத் தீர்ப்பைத் திருத்தி எழுதும் படி
உங்க மெஜாரிட்டி வாசகர்கள் சொன்னா.. ஏத்துக்குவீங்களா?"


உங்க பதிவு எதுக்கு என்று என்னிடம் கேட்டால் நான் என்ன சொல்வேன் தேவ்? ;) என் பதிவு எனக்காக. பொன்ஸ் பக்கங்கள் எனக்காக. சமீபத்தில் விவாதத்தில் இனியன் சொன்னது போல் "எந்த தனிமனிதருக்கும் பாதிப்பு ஏற்படாது என்ற உறுதியுடனான" எல்லா விவரங்களும், எனக்குப் பிடித்த வகையில், என் பதிவில் வரும். ஒரு மழை நாளின் மாலையில், இஞ்சி போட்ட சுவையான சூடான தேநீரை ரசிப்பது போல், என் பழைய இடுகைகளைப் படியெடுத்துப் படித்து ரசிப்பது என்னுடைய பிடித்தமான பொழுதுபோக்கு. அதிகம் பேர் படிக்காத, விரும்பாத பதிவுகளைக் கூட இப்படி உட்கார்ந்து படித்துக் கொண்டிருந்ததுண்டு :)

ஆகையால், மெஜாரிட்டி வாசகர்கள், "மக்களுக்காக என் பதிவு" என்று சொன்னால் இருக்கட்டுமே! அவர்கள் பதிவு அவர்கள் மக்களுக்காக :-D பொன்ஸ் பக்கங்கள் பொன்ஸுக்காக ;)

தமிழ் பதிவுலகம் மேம்பட ஒரு மூணு திட்டம் போடுற அதிகாரம் உங்க கிட்ட இருந்தா என்னத்
திட்டங்கள் போடுவீங்க?


தமிழ்ப் பதிவுலகம் என்பது தனிமனிதர்களால் ஆன உலகம். இதில் யாரும் எந்த அதிகாரமும் யாருக்கும் தர முடியாது. ஒருவருக்குப் பிடிக்காத உலகமாக தோன்றினால், புதுப் புது உலகங்களை உருவாக்கிக் கொள்வார்கள். ஒரு மாற்று போல, ஒரு மகளிர் சக்தி போல, அவரவர்க்கான உரல் திரட்டிகள் தனியாக உருவாகும். உருவாக்கிக்
கொள்ளும் தொழிற்நுட்பத்தை மட்டும் பரவலாக ஆர்வமுள்ளவர்களுக்குக் கற்றுக் கொடுக்க வேண்டும். ஏற்கனவே நெல்லை சிவா, ரவிசங்கர் போன்றவர்கள் இந்த முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

கடைசியா.. பதிவுகள் எல்லாம் NOTHING BUT REPRESENTATION OF UR OWN EGOnnu சொன்னா
ஒத்துக்குவீங்களா?


அதான் முதல்லயே சொல்லியாச்சே.. பொன்ஸ் பக்கங்கள் - பொன்ஸுக்காக பொன்ஸால் எழுதப்படும் ஜனநாயக வீடு :) வெட்டியாய்ச் சுட்டவை, வெட்டியாக வெட்டியான பொன்ஸால் வெட்டியான பொன்ஸுக்காக எழுதப்படும்... :-D


நன்றி பொன்ஸ் கச்சேரிக்காக நேரம் ஒதுக்கி உங்கள் கருத்துக்களை வழங்கியதற்கு..

மக்கா.. இன்னும் நீங்க எதாவது கேக்கணும்ன்னா கேக்கலாம்... HOPE U ENJOYED THE CUTCHERY

29 comments:

இராம்/Raam said...

பதிவும் முழுவதும் படிச்சிட்டேன்....

:)

இராம்/Raam said...

/வலையுலகத்தைக் கண்டுபிடித்ததின் லாபம் அழுது வடியும் சீரியல்களிலிருந்து தப்பித்தது, ஒத்த கருத்துடைய நல்ல நட்புக்கள், நல்ல கருத்துப் பரிமாறல். இது கூட்டணி பதிவுகளிலும் எனக்குக் கிடைத்தது.//

இது உண்மைக்கா... நான் பதிவெழுத ஆரம்பிக்கிறது முன்னாடி வெட்டியா இப்பிடிதான் டிவி பார்க்கிறோம்'னு வெட்டியா பொழுது போக்கிட்டு இருப்பேன்... இப்போ பதிவே படிக்கிறேன்னு வெட்டியா பொழுது போக்கிட்டு இருக்கேன் :)

இப்போ நட்பு வட்டம் நல்லபடியா விரிவடைச்சு இருக்கு :))

சென்ஷி said...

//பொன்ஸ் பக்கங்கள் - பொன்ஸுக்காக பொன்ஸால் எழுதப்படும் ஜனநாயக வீடு :) வெட்டியாய்ச் சுட்டவை, வெட்டியாக வெட்டியான பொன்ஸால் வெட்டியான பொன்ஸுக்காக எழுதப்படும்... //

உங்க விருப்பத்துக்கு மாறான வாழ்க்கை கிடைத்தால் அதில் வாழும்போது உங்களுக்கு என்ன தோன்றும்? (உ.ம். கம்ப்யூட்டர் தொடாமல் 1 வருடம்)

சென்ஷி

Anonymous said...

//பதிவுகள் வராவிட்டாலும் நம்மைப் பற்றிய செய்திகள் வந்து கொண்டே இருக்க, பதிவு என்று எழுத ஒன்றும் இல்லாவிட்டாலும், சும்மாவேனும் ஏதாவது controversyஆன தலைப்பில் சொல்வதற்கு ஒன்றும் இல்லாத பொழுதும் எழுதி, அடுத்தவர்களைப் படிக்க வைக்க வேண்டும்" என்பதைத் தான் விளம்பரம் தேடும் விதமாக நான் நினைக்கிறேன்//

சரியே..

//எல்லாருமே பதிவர்களுக்காகத் தான் படிக்கிறார்களா? அப்படியானால், கண்மணி, அபி அப்பா, கௌசி, செல்லி, போன்ற புதுப் பதிவர்கள் எப்படி பெரும்பான்மையால் வாசிக்கப்படுகிறார்கள்? //

அதற்கு காரணம் அவர்கள் எழுத்து என்பது முதன்மையானது. இருந்தாலும் அவர்களுக்கு (அவர்களது எழுத்துக்களால்) கிடைத்த அங்கீகாரம் மற்றும் அதனால் கிடைத்த தொடர்வாசகர்களே அவர்களது படைப்பு அதிகம் வாசிக்கப்படுவத்ற்கு முக்கிய காரணம் என நினைக்கிறேன்.அபி அப்பா கூட ஒரு முறை அவர் பெயர் தமிழ்மனத்தில் தெரியாததால் அதிகம் பேர் படிக்கவில்லை என சொன்னதாக ஞாபகம்.
இப்பொழுது இந்தப்பதிவரின் பெயருக்காக படிப்பவர் அதிகம் இருப்பதாகவே நினைக்கிறேன்.ஆனால் அவர்களை தக்கவைத்துக்கொள்வது என்பது பதிவரின் எழுத்துக்களை பொருத்தது. நான் கூறவருவது பதிவர்களுக்காக மட்டுமே படிக்கும் பழக்கம் அதிகமாகி உள்ளது என்பது உண்மை என்பதையே..அதற்கு இப்பொதைய சூழலில் மிக அதிகமான பதிவுகள் வருவதால் எதனை படிப்பது என்பதை முடிவு செய்வதே ஒரு பெரிய காரியமாக இருப்பது முக்கிய காரணம்.
- மனதின் ஓசை

Anonymous said...

//எந்த தனிமனிதருக்கும் பாதிப்பு ஏற்படாது என்ற உறுதியுடனான" எல்லா விவரங்களும், எனக்குப் பிடித்த வகையில், என் பதிவில் வரும்.//

:-)

//ஒரு மழை நாளின் மாலையில், இஞ்சி போட்ட சுவையான சூடான தேநீரை ரசிப்பது போல், என் பழைய இடுகைகளைப் படியெடுத்துப் படித்து ரசிப்பது என்னுடைய பிடித்தமான பொழுதுபோக்கு. அதிகம் பேர் படிக்காத, விரும்பாத பதிவுகளைக் கூட இப்படி உட்கார்ந்து படித்துக் கொண்டிருந்ததுண்டு :)//

ரசனையான வரிகள்.
- மனதின் ஓசை( ஏனோ தெரியல. பிளாக்கர் சொதப்புது. அதான் அனானியா)

பொன்ஸ்~~Poorna said...

சென்ஷி,
உங்க விருப்பத்துக்கு மாறான வாழ்க்கை கிடைத்தால் அதில் வாழும்போது உங்களுக்கு என்ன தோன்றும்?

நமக்குப் பிடிக்காத வாழ்க்கையை நம்மால் வாழ முடியுமா? எப்படி வெளியே வரலாம் என்று தானே யோசிக்க முடியும்?

உங்கள் நண்பன்(சரா) said...

நானும் பதிவை முழுமையாகப் படித்தேன்!

அன்புடன்...
சரவணன்.

சென்ஷி said...

//நமக்குப் பிடிக்காத வாழ்க்கையை நம்மால் வாழ முடியுமா? எப்படி வெளியே வரலாம் என்று தானே யோசிக்க முடியும்?//

:)

சென்ஷி

Anonymous said...

//இந்தப்பதிவரின் பெயருக்காக படிப்பவர் அதிகம் இருப்பதாகவே நினைக்கிறேன்//

சாரி.. பொதுவாக சொல்ல நினைத்ததை தவறாக எழுதிவிட்டேன் என நினைக்கிறேன்.. அது யாரையும் குறிப்பிட்டு சொன்னது அல்ல.

"பதிவரின் பெயருக்காக படிப்பவர் அதிகம் இருப்பதாகவே நினைக்கிறேன்"
இப்படி இருக்க வேண்டும்.
- மனதின் ஓசை

இம்சை அரசி said...

பொன்ஸக்கா நானும் முழுசா படிச்சிட்டேன் :)))

Anonymous said...

பொன்ஸ்,

உங்களுக்கு 'வெள்ளத்தனைய' என்ற குறள் பிடிக்காமல் போனதேன்?.

மனதின் ஓசை said...

//பதிவும் முழுவதும் படிச்சிட்டேன்...//

//நானும் பதிவை முழுமையாகப் படித்தேன்!

அன்புடன்...
சரவணன். //

//பொன்ஸக்கா நானும் முழுசா படிச்சிட்டேன் :)))//

ஏன் எல்லாரும் இப்படி டீச்சர்கிட்ட ஹோம் ஒர்க் பன்னிட்டேன்னு சொல்லுற மாதிரி ஒப்பிக்கிறாங்க???

MyFriend said...

இப்பத்தான் வந்து சேர்ந்தேன். சேச்சேசேச்சே!! என்ன வெயில் என்ன வெயில்..

MyFriend said...

பதிவை முழுசா படிச்சு முடிச்சாச்சு.. ஒரு அட்டேண்டண்ட்ஸ் போட்டுக்கிறேன்.

MyFriend said...

//பொன்ஸ் பக்கங்கள் - பொன்ஸுக்காக பொன்ஸால் எழுதப்படும் ஜனநாயக வீடு :) வெட்டியாய்ச் சுட்டவை, வெட்டியாக வெட்டியான பொன்ஸால் வெட்டியான பொன்ஸுக்காக எழுதப்படும்... :-D
//

ஆமாம்..நானும் வெட்டியாக ஆரம்பித்த என் வலை.. இப்போது வெட்டியாக பதிவெழுதி.. வெட்டியாக நானே படித்துக்கொள்கிறேன். பின்காலத்தில் நான் வெட்டியாக இருக்கும்போதும் திரும்பவும் படிப்பேன். ஹீஹீ.. ;)

நாகை சிவா said...

பொன்ஸ்ங்கோ....

நம்ம பெயரையும் அப்படியே சைட்ல சொன்னதுக்கு ரொம்ப தாங்கஸ்ங்கோ

நாகை சிவா said...

//நேத்து மார்னிங் மெரிடியன்ல்ல ரூம் போட்டு யோசிச்சேன்.. ஈவினிங் ஈபிள் டவர் அடியிலே நின்னு அண்ணாந்துப் பாத்து யோசித்தேன்//

நைட்டு???? திருவான்மீயூர் டாஸ்மார்க்லிலா

Boston Bala said...

நானும் (கேள்விகளை) பதிவை முழுமையாகப் படித்தேன் :D

இலவசக்கொத்தனார் said...

தேவ், மீண்டும் சொல்கிறேன். உம் மனசாட்சி உமக்கு ஆப்பு வைப்பதை உணராமல் இருக்கிறீர்களே. உம்மை நினைத்தால் எனக்குப் பாவமாகத்தான் இருக்கிறது.

(மனசாட்சி இருப்பவர்கள் ரசிகர் மன்றத் தலைவர்களாக இருக்க முடியாதென்பதால்தான் நான் இதைச் சொல்கிறேன் எனச் சில புல்லுருவிகள் உன்னிடம் சொல்லலாம். அதையெல்லாம் காதில் போட்டுக் கொள்ளாதே. உன் நலத்திற்காகத்தானே இவ்வளவு மெனக்கிடுகிறேன்.)

Boston Bala said...

இன்னொரு தடவை படித்தாயிற்று :))

---நம்ம பதிவுலகம் இன்னிக்குக் கிட்டத்தட்ட தமிழ் சினிமா மாதிரி தான்.. பதிவர்களுக்காக மட்டுமே படிக்கும் பழக்கம் அதிகமாகி உள்ளது..---

ஹ்ம்ம்!! உங்ககிட்ட இண்டெர்வ்யூ வைக்கணும் ;)

---பொன்ஸ் பக்கங்கள் - பொன்ஸுக்காக பொன்ஸால் எழுதப்படும் ஜனநாயக வீடு---

க்ராஸ் எக்சாமினேசனில் இப்படி டிஃபென்சிவாக மாறுமாறு, கேள்வி தொடுத்திட்டீங்களே :(


நேர்காணல் போலவே இயல்பாக அமைந்த இன்னொரு சுவையான/மனம் திறந்த பேட்டிக்கு நன்றி.

மணிகண்டன் said...

//ஸ்ப்பா.. ஒரு மூணு இன்டர்வியூ தான் எடுத்திருப்பேன் அதுக்குள்ளே நம்ம புகழ் அக்கரைச் சீமைக்கெல்லாம் அலாக்காப் பரவிருச்சு.. CNN...BBC..இப்படி இன்டர்நேஷனல் டிவிகாரயங்க அப்புறம் பேர் சொல்ல வேண்டாம்ன்னு கேட்டுகிட்ட வெளிநாட்டு உள்நாட்டு சேனல்... பேப்பர் எல்லாம் எங்களுக்கு நீங்க ஒரு இன்டர்வியூ பண்ணிக் கொடுக்கணும்.. டாலர் தர்றோம்.. பவுண்ட் தர்றோம்.. நவுண்டு வாங்கன்னு நச்சரிப்புத் தாங்கல்ல... நான் தமிழ்ல்ல தானே இன்டர்வியூ பண்ணுறேன்னுச் சொன்னா பரவாயில்ல நாங்க உங்களுக்காக தமிழ் செக்ஷ்ன ஓப்பன் பண்றோம்ன்னு பாசமழையாப் பொழிஞ்சுத் தள்ளுறாங்க..
//

லொள்ளு தாங்க முடியலைடா சாமி..

Syam said...

நானும் நிறுத்தி நிதானமா பதிவை முழுசும் படிச்சுட்டேன் :-)

Syam said...

//ஆமாம்..நானும் வெட்டியாக ஆரம்பித்த என் வலை.. இப்போது வெட்டியாக பதிவெழுதி.. வெட்டியாக நானே படித்துக்கொள்கிறேன். பின்காலத்தில் நான் வெட்டியாக இருக்கும்போதும் திரும்பவும் படிப்பேன்//

@மை பிரண்ட்,

நீங்க படிங்க, பதிவு எழுதுங்க...எதுக்கு நம்ம வெட்டிய இழுத்து விடுறீங்க :-)

துளசி கோபால் said...

இது என்னய்யா? எல்லாரும் நானும் பதிவை ' முழுசாக' படிச்சேன்ன்னு
'கும்பசாரிக்கிறாங்க'!

இப்போ இதுதான் ட்ரெண்டா?

அப்ப, 'நானும்' சேர்ந்துக்கிட்டேன்:-)))))

துளசி கோபால் said...

அருஞ்சொற்பொருள்:

கும்பசாரம் = கன்ஃபெஷன்.

வெட்டிப்பயல் said...

//வெட்டியாய்ச் சுட்டவை, வெட்டியாக வெட்டியான பொன்ஸால் வெட்டியான பொன்ஸுக்காக எழுதப்படும்... :-D//

நமக்கு இவ்வளவு அட்வர்டைஸ்மெண்டா???

போதுங்கா... என்னதான் பொ.க.ச அமெரிக்க கிளைக்கு நான் பொறுப்பா இருந்தாலும் இப்படியா பெருமைப்படுத்துறது???

மக்களே மேல இருக்கறது புரியலைனா தமிழ்ல சொல்றேன்...

எல்லாம் வெட்டியோட பதிவை படிச்சி என்ஜாய் பண்ணுங்கோ!!!

வெட்டிப்பயல் said...

// .:: மை ஃபிரண்ட் ::. said...

//பொன்ஸ் பக்கங்கள் - பொன்ஸுக்காக பொன்ஸால் எழுதப்படும் ஜனநாயக வீடு :) வெட்டியாய்ச் சுட்டவை, வெட்டியாக வெட்டியான பொன்ஸால் வெட்டியான பொன்ஸுக்காக எழுதப்படும்... :-D
//

ஆமாம்..நானும் வெட்டியாக ஆரம்பித்த என் வலை.. இப்போது வெட்டியாக பதிவெழுதி.. வெட்டியாக நானே படித்துக்கொள்கிறேன். பின்காலத்தில் நான் வெட்டியாக இருக்கும்போதும் திரும்பவும் படிப்பேன். ஹீஹீ.. ;) //

தங்கச்சிக்கா நீங்களுமா???

வெட்டிப்பயல் said...

தேவண்ணா,
உங்களுக்கும் பொன்ஸக்காவா???

அப்படினா எங்களுக்கு பாட்டியா???

அபி அப்பா said...

//வெட்டிப்பயல் said...
தேவண்ணா,
உங்களுக்கும் பொன்ஸக்காவா???

அப்படினா எங்களுக்கு பாட்டியா???//

இந்த இடத்துல நானு ஒன்னு சொல்லிக்கனும்.

மைஃபிரண்ட் நம்ம கதிர்தம்பிய "தம்பியண்ணா"ன்னு சொன்னதால, அவரு மைஃபிரண்டை "தங்கச்சியக்கா"ன்னு சொல்லிட்டாரு.

நான் கூட பொன்ஸை "பொன்ஸக்கா" ன்னு சொன்னத பாத்து கோபிதம்பி "அபிஅப்பா. உங்க ஊர்ல பேத்திய அக்கான்னுதான் சொல்லுவாங்களான்னு காலை வாரினதால இன்று முதல் பொன்ஸக்கா எனக்கு "அக்காதங்கச்சி"யா ஆகிட்டாங்க:-))

tamil10