Thursday, March 29, 2007

சற்று முன்:பதினாறு வயசு அயிடுச்சா உங்களுக்கு?

துபாய்க்கு வெகு அருகில் இருந்த பாலைவனத்தில் இருந்து நம் அருமை நண்பர் தம்பி தந்த தகவலாவது...

"இங்கே பாலைவனம் முழுக்க பெரிய அளவில் கூடாரங்கள் போடப் பட்டிருக்கு... பெர்சியா தரைவிரிப்புக்கள் விரிக்கப் பட்டிருக்கு...செயற்கை முறையில் பேரீச்ச மரங்கள் அளவுக்கதிகமா நடப்பட்டிருக்கு...

பிரமாண்டமான ஓட்டக் ஊர்வலம் இன்னும் சற்று நேரத்தில் கிளம்பத் தயாராகிட்டு இருக்கு...

பிரபல் அரேபியக் குத்துப் பாட்டு கலைஞர் சோனா சொக்கனாதை ஷேக் தலைமையில் கானாக் கச்சேரிக்கு மைக் டெஸ்டிங் நடந்துகிட்டு இருக்கு...

எண்ணெய் டின்களோடு அரேபிய ஷேக்கள் அங்கும் இங்கும் அலையறாங்க...

வண்ணப் பலூன்கள்...ராட்சச அளவில் வானில் தெரிகின்றன....

முக்குன.. மன்னிக்கவும் முக்கிய விருந்தினர்களுக்கானப் பாதையில் காவல் பலமா இருக்கு..அந்தப் பக்கம் செய்தியாளர்கள் யாரும் அனுமதிக்கப் படவில்லை..

இந்தியா பெங்களூர் பேக்கரியில் இருந்து செய்யப்பட்ட் 16 கிலோ கேக்கும்.. தூத்துக்குடியில் இருந்து அனுப்பப்பட்ட மக்ரூனும் வந்து இறங்கியிருக்கு...

இந்திய அணியின் கிரிக்கெட் வீரர்கள் பலரும் அந்த ஒட்டகங்களுக்குப் பின்னால் ஒளிந்துச் செலவதாய் விழாவுக்கு வந்தவர்கள் பரபரப்பாய் பேசிக்கொண்டார்கள்

இதோ.. நம்ம ஆசிப் மீரான் அண்ணாசி இப்போத் தான் வந்து இருக்கார்.. அவருக்குப் பின்னாலே நிலவு நண்பன்... அபி அப்பா.. பாஸ்ட பவுலர்.... இன்னும் பல பதிவர்கள் வந்து கிட்டு இருக்காங்க...

துபாய் ஷாப்பிங் பெஸ்டிவலுக்கு அப்புறம் துபாய் களைக் கட்டுவது இந்த் ஒரு விஷ்யத்துக்கு மட்டும் தான்

என்னனு கேக்குறீங்களா.. வருசா வருசம் கொண்டாடப்படும் பெனாத்தல் திருவிழா தான்...

விழாவுக்குப் வெள்ளை வேட்டி வெள்ளைச் சட்டையில் வந்திறங்கிய நம்ம பெனத்தலாரிடம் மைக் நீட்டி வாங்கியச் சில பதில்கள் உங்கள் பார்வைக்கு..


கே: போன வருசம் 25.... இந்த வ்ருசம் 16.... எத்தனாவது வருஷமா 16ஐக் கொண்டாடறீங்க?

பதில்: இது ஒரு விஷமத்தனமான கேள்வி. எண்ணத்தில் குறைகாணமுடியாமல் எண்ணிக்கையில் குறைகாணும் உங்களின் இந்தக் கேள்வியை நான் முற்றாகப் புறந்தள்ளுகிறேன்.

கே: அதுக்காக இதைக்கூடச் சொல்லக்கூடாதா?
பதில்: இப்பதான் முதல் முறையா 16 ஆவது பர்த்டே கொண்டாடறேன்


கே: அப்ப?
பதில்: போன வருஷம் 25ஆவது பர்த்டே, அதுக்குமுன் வருஷம் 18ஆவது பர்த்டே கொண்டாடினேன். அதனால, இதான் முதல் முறை 16ஆவது பர்த்டே.


கே: இந்தக் கொண்டாட்டங்களைப் பத்தி என்ன நினைக்கறீங்க?

Suresh: பதில்: வழக்கமா சிட்னி ஹார்பர் பிரிட்ஜ்லே வாணவேடிக்கையோட என் தொண்டர்கள் கொண்டாடுவாங்க. இந்த முறை கிரிக்கெட்டால அதிர்ச்சி அடைஞ்சிருக்க்றதால சிம்பிளா கொண்டாடுறோம்.


கே: மக்களுக்கு நீங்க என்ன சொல்ல விரும்ப்றீங்க?

பதி: இதுவரைக்கும் சொன்னதெல்லாம் நீங்களே எழுதி நீங்களே படிச்சுக்குவீங்களா? எல்லாமே மக்களுக்கு சொன்னதுதான்யா!



பெனத்தாலருக்கு நட்சத்திர பிறந்த நாள் வாழ்த்துக்கள் நாமும் தெரிவித்துக் கொண்டோம்

நீங்களும் சொல்லுங்க... ஹேப்பி பர்த்டே பாஸ்.......

சென்னைக் கச்சேரி செய்திகளுக்காக துபாயிலிருந்து தம்பி..

32 comments:

MyFriend said...

அடிச்சேன் திரும்பவும்...;-)

MyFriend said...

சாரி சந்தோஷ்..

நீங்க சீக்கிரமா வரலை.. உங்களுக்கு எவ்வளவு நேரம்தான் வேய்ட்டு பன்றது?

அதான் நானே எழுதிட்டேன். ;-)

MyFriend said...

பினாத்தலாருக்கு பிறந்த நாள் வாழ்த்து பினாத்திக்கிறேன். :-)

என்றும் 16ஆக இருக்க வாழ்த்துக்கள்.

MyFriend said...

எல்லாருக்கும் ஒரு அறிவிப்பு.. இந்த பதிவும் கும்மிக்கு இல்ல..

இன்றைய மூனாவது பதிவு.. நம்ம துளசியக்கா பதிவுலதான் இன்னைக்கு கும்மி.. சரியா?

அதுவும் ஃபர்ஸ்ட்டு 50 கமேண்ட்ஸ் துளசியக்காகாக இருக்கணும்.. மீதி, நம்ம அண்ணாச்சிக்காக கும்மி.. ;-)

இதை ஒரு அழைப்பாய் ஏற்று எல்லாரும் கச்சேரிக்கு வந்துருங்க..:-)

மனதின் ஓசை said...

பெனத்தாலருக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்..

அபி அப்பா said...

வாழ்த்துக்கள் பெனாத்தலாரே!:-)))

நாகை சிவா said...

//சாரி சந்தோஷ்..

நீங்க சீக்கிரமா வரலை.. உங்களுக்கு எவ்வளவு நேரம்தான் வேய்ட்டு பன்றது?

அதான் நானே எழுதிட்டேன். ;-) //

பங்கு, நல்ல நித்திரையில் இருப்பாரு இப்ப...நீங்க உங்க கடமை செய்யுங்க....

நாகை சிவா said...

பெனாத்தல் வாழ்த்துக்கள் பல கோடி!

நாகை சிவா said...

//பதி: இதுவரைக்கும் சொன்னதெல்லாம் நீங்களே எழுதி நீங்களே படிச்சுக்குவீங்களா? எல்லாமே மக்களுக்கு சொன்னதுதான்யா!//

சூப்பர் அப்பு!!!!!

உங்கள் நண்பன்(சரா) said...

//இது ஒரு விஷமத்தனமான கேள்வி. எண்ணத்தில் குறைகாணமுடியாமல் எண்ணிக்கையில் குறைகாணும் உங்களின் இந்தக் கேள்வியை நான் முற்றாகப் புறந்தள்ளுகிறேன்.
//

இது தான் சூப்பரப்பூ....

பெனாத்தல் சுரேஷ் அவர்களுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்!


அன்புடன்...
சரவணன்.

துளசி கோபால் said...

பினாத்தலுக்கு ஹேப்பி பர்த்டேன்னு நானும் கொஞ்சம் ( தூக்கத்தில்) பினாத்திக்கறேன்.

Anonymous said...

கவிமடத்து தலைமைச்சீடன் ஏழு கழுதை வயசுக்கப்புறமும் பதினாறு வயசு பள்ளிக்கூட பையன் போல் பொறுப்பில்லாமல் திரியுறான் என்பதை உள்குத்து வைத்து வெளிப்படுத்திய உங்கள் சூழ்ச்சியை கவிமடம் வன்மையாகக் கண்டிக்கிறது :-)

பெனாத்தலுக்கு வாழ்த்துகள்!உங்களுக்கும் :-)

சாத்தான்குளத்தான்

Leo Suresh said...

பெணாத்தலரே
காலைல இருந்து மொபைல் ஆப் பண்ணி வைத்திருக்கிறிற்களே, வாழ்த்துக்கள்
லியோ சுரேஷ்

rv said...

அருமை அண்ணன் பெனாத்தலாருக்கு எனது வாழ்த்துகளையும் வணக்கங்களையும் தெரிவித்துக்கொள்கிறேன்!

மற்றவை சாயந்திரம்.

Anonymous said...

என்னங்க ... அங்க இங்க பேட்டிய படிச்சு எனக்கு மண்டை குழம்பி போச்சு! இல்ல தெளிவாயிடுச்சா?

அபி அப்பாதான் பெனாத்தலாரா?!!! துபாய்ல இருக்காரா? அண்ணாச்சிக்கு பக்கத்திலையா?

இராம் தான் வெட்டியா? பாபா பக்கத்தில இருக்காரா?

மை ஃப்ரெண்டு பேசுறதும் மர்ம பாஷையா இருக்கு! :)

கருத்தைப் பாரு, ஆளு யாருன்னு பாக்காதே அப்படின்றீங்களா?
பேட்டி எல்லாம் சூப்பருங்க ... நிஜமாவே நல்லாருந்தது ...

எனக்கு தான் யாரு எவருன்னு காட்டு குழப்பமா போச்சு! ;)

Naufal MQ said...

பெனாத்தலாருக்கு வாழ்த்துக்கள்!!

G.Ragavan said...

அயிருச்சே ஆயிருச்சே...பதினாறு வயசுக்கு மேலயும் ஆயிருச்சே!

பெனாத்தலாருக்கு மனமார்ந்த வாழ்த்துகள்.

இலவசக்கொத்தனார் said...

பெனாத்ஸ், என்றும் 16ஆ இருங்கன்னு சொல்ல மாட்டேன். அதான் வருஷா வருஷம் எண்ணிக்கையை மாத்தறீங்களே.

ஹாப்பி பர்த்டே மேட்!!!

MyFriend said...

//Madura said...
என்னங்க ... அங்க இங்க பேட்டிய படிச்சு எனக்கு மண்டை குழம்பி போச்சு! இல்ல தெளிவாயிடுச்சா?

அபி அப்பாதான் பெனாத்தலாரா?!!! துபாய்ல இருக்காரா? அண்ணாச்சிக்கு பக்கத்திலையா?

இராம் தான் வெட்டியா? பாபா பக்கத்தில இருக்காரா?

மை ஃப்ரெண்டு பேசுறதும் மர்ம பாஷையா இருக்கு! :)
//

எல்லாம் க்ளியர் ஆகணும்ன்னா இன்று மாலை கச்சேரியில கலந்துக்கோங்க. [:)]

மு.கார்த்திகேயன் said...

நட்சத்திரம் ஆனவுடனே இப்படி டகால் டகால்ன்னு பதிவு மழையா போடுறீங்க.. என்னன்னு சொல்றது தேவ்..

மு.கார்த்திகேயன் said...

பெனத்தாலருக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்..

Unknown said...

வாங்க கார்த்தி மை பிரெண்ட் உங்களை வரவேத்து காபி டீ எதாவது கொடுத்தாங்களா?

Unknown said...

//கவிமடத்து தலைமைச்சீடன் ஏழு கழுதை வயசுக்கப்புறமும் பதினாறு வயசு பள்ளிக்கூட பையன் போல் பொறுப்பில்லாமல் திரியுறான் என்பதை உள்குத்து வைத்து வெளிப்படுத்திய உங்கள் சூழ்ச்சியை கவிமடம் வன்மையாகக் கண்டிக்கிறது :-)

பெனாத்தலுக்கு வாழ்த்துகள்!உங்களுக்கும் :-)

சாத்தான்குளத்தான் //

அண்ணாச்சி... இதுல்ல இப்படி ஒரு உள்குத்து இருக்குன்னு சொல்லி எனக்கு செமக் குத்து வாங்கி தர நீங்கள் செய்யும் முயற்சியை கண்டிப்பாக யாராவது கன்னாபின்னாவெனக் கண்டிப்பார்கள் என எதிர்பார்க்கிறேன்...:-)

வாழ்த்துக்களுக்கு நன்றி அண்ணாச்சி.. :-)

இராம்/Raam said...

பிறந்தநாள் வாழ்த்துக்கள் சுரேஷ் :)

இராம்/Raam said...

//இராம் தான் வெட்டியா? பாபா பக்கத்தில இருக்காரா?//

ஆமாம் இன்னும் கொஞ்சம் குழப்புங்க..... எல்லாரும் அவந்தான் இவனா? இவந்தான் அவனா'ன்னு திரியட்டும்?? ;)

இலவசக்கொத்தனார் said...

ஆமாம் அந்தப் பதிவுல டீச்சரைக் காணும். அவங்க இங்க வந்திருக்காங்க. இங்க என்னடான்னா பெனத்தலாரைக் காணும்.

என்னமோ நடக்குது. மர்மமாய் இருக்குது. ஒண்ணுமே புரியலை உலகத்துல.

மணிகண்டன் said...

பெனாத்தலாருக்கு வாழ்த்துக்கள்!

பினாத்தல் சுரேஷ் said...

வாழ்த்திய அன்பு உள்ளங்கள் அனைவருக்கும் நன்றி.

பேட்டி நல்லா இருந்தது என்று சொன்னவர்களுக்கு ஸ்பெஷல் நன்றி :-)) (முழுப்பதிவு போடும் சூழலில் இல்லாமையால் பிட்டுப்போடவேண்டிய நிலை:-(()

ஒரு கழுதைக்கு 2 வயது மட்டுமே எனக் கண்டுபிடித்துள்ள மடத்தலைவனுக்கும், இல்லாத இடங்களில் இல்லாதவரைத் தேடும் கொத்ஸுக்கும் நற நற!!

எல்லாத்துக்கும் மேலா இந்தப் பிறந்தநாளை இனிய நகைச்சுவைப் பிறந்தநாளாக ஆக்கிய நட்சத்திர தேவுக்கு நன்றியோ நன்றி.

Santhosh said...

//சாரி சந்தோஷ்..

நீங்க சீக்கிரமா வரலை.. உங்களுக்கு எவ்வளவு நேரம்தான் வேய்ட்டு பன்றது?

அதான் நானே எழுதிட்டேன். ;-)//
இம்முட்டு பாசக்காரங்களா இருக்கீகளே..ஆனா எனக்கு இது அர்த்த ராத்திரிங்கோ வர முடியாதுங்கோ... நாளைக்கு பாத்துகலாம் :)

Santhosh said...

பெனாத்தலாரே பிறந்த நாள் வாழ்த்துக்கள் கொஞ்சம் லேட் ஆயிடிச்சிங்கோ.

கோபிநாத் said...

எங்கள் துபாய் சிங்கத்திற்கு

பிறந்த நாள் வாழ்த்துக்கள் ;-)))

Boston Bala said...

பெனத்தாலருக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

tamil10