Wednesday, December 03, 2008

டென்சல் வாஷிங்டன்

சமீப காலமா தமிழ் படங்கள் பார்ப்பது கொஞ்சம் கொஞ்சமாக ஒரு குற்றவாளிக்கு வழங்கபடும் தண்டனையாகவே தோன்ற ஆரம்பித்துவிட்டது.... ஏகன்...சேவல்...வாரணமாயிரம் கொஞ்சம் தேவலாம்) இப்படி வரிசையாக வாங்கி கட்டிக் கொண்டு வலி தாங்க முடியவில்லை...

பள்ளி காலம் வரை ஆங்கில படமென்றால் அது ஜாக்கி சான் படம் தான்... அதிகம் பேசாமல் அந்தரத்தில் அசால்ட் காட்டும் ஜாக்கி தான் நமக்கு தெரிந்த் ஹாலிவுட் ஆக்டர்.. அதுக்குப் பொறவு கொஞ்சம் விவரம் புரிய ஆரம்பிச்சப்போ புருஸ்லீ... ஸ்டோலன்...அப்புறம் வாயிலே செகண்ட் நேம் இன்னிக்கு வரைக்கும் சிக்கினா சின்னாப்பின்னமாகும் புகழுக்குச் சொந்தக்காரரான கலிபோர்னியா கவர்னர் அர்னால்ட்....

அப்புறம் இடையிலே ரொம்ப நாள் ஆங்கில படம்ன்னாலே..தொலை தூரம் ஓடிய காலங்கள் எல்லாம் உண்டு... அதற்கான காரணங்கள் பின் எப்போதாவது ஆபிசர் பதிவுகளின் அரசல் புரசலாக வெளிவரலாம்ன்னு வைங்க... பேசிக்கா உண்மை என்னன்னா.. வெள்ளைக் காரன் வெத்தலை பாக்கை மென்னு துப்புற மாதிரி பேசுற அந்த மொழி நமக்கு சட்டுன்னு பிடிபடாது....இதுன்னால எத்தனையோ ஆங்கிலப் படங்களைப் பார்த்து அதன் பெருமை எனக்கு புலப்படாமலே போனதுண்டு...

கிளாடியேட்டர் போன்ற படததைப் பாக்குறேன்னு கிளம்பி போய் தியேட்டரில் தூங்கிய அனுபவம் எனக்கு உண்டு.. லார்ட் ஆப் த ரிங்க்ஸ் பாக்கப் போய் ஒண்ணும் புரியாமல் வழக்கம் போல எல்லோரும் ஆகான்னு ஆச்சரியம் காட்டும் போது எங்க குரூப் கொஞ்சம் எக்ஸ்ட்ராவா ஆஆஆஆஆஆகான்னு அலப்பரையா ஆச்சரியம் காட்டி முன் சீட்ல்ல இருந்த ஒரு ஆண்ட்டிகிட்ட இங்கிலீஸ்ல்ல சொல்லமுடியாத அளவுக்கு அவமானப்பட்ட வரலாறும் நமக்கு உண்டு...அப்புறம் சில படமெல்லாம் முடிஞ்ச பொறவும் இனிமேத் தாண்டா முக்கிய டர்னிங் பாயிண்ட்டே வருதுன்னு ஆவலா வாய் பிளந்து உக்காந்து டைட்டில் கார்ட் பார்த்து ஏமாந்து எழுந்த கதையெல்லாம் நம்ம இங்கிலீசு படம் பாக்கப் போன அர்சியல்ல சாதாரணம்ப்பா...

இப்படி எல்லாம் இருந்த நானும் இன்னிக்கு நாலு இங்கிலீசு படம்.. பிரெஞ்சு படம்.. இத்தாலி படமெல்லாம் பாத்து புரிஞ்சுப் பரவசப்படுறேன்னு அதுக்கு காரணம் டிவிடி... முக்கியமா சப் டைட்டிலும் வர்ற டிவிடி... நோட் த பாயிண்ட் இங்கிலீசு பட்மும் நாங்க இங்கிலீசி சப் டைட்டிலோடத் தான் பார்ப்போம்....

இப்படி படம் பாக்கும் போது நமக்கு அந்த ஊர் நடிகர் நடிகை பேர்ல்லாம் பெரிசா ஞாபகம் இருக்காது... ஆனா ஒரு சிலப் பேர் மட்டும் யார்டா இவன் பின்னுறான்டான்னு சொல்ல வைக்கும் அளவுக்கு கூத்து கட்டுவாங்க...அப்படி ஒரு ஆளூ தான் இந்த பதிவோட நாயகன்...

டென்சல் வாஷிங்டன்.....கொஞ்சம் ஒபாமாவுக்கு டிஸ்டண்ட் கசின் லுக் நம்ம ஆளுக்கு.. சமீபத்தில் இவர் நடித்த சில படங்கள் பார்த்தேன்... ரசித்தேன்...வியந்தேன்...

டென்சல் ஒரு நடிகர் மட்டுமில்லை.. இயக்குனரும் ஆவார்...டென்சல் பல படங்களில் நடித்திருந்தாலும்.. நான் பார்த்த படங்கள் ஒரு நாலு இருக்கும்... அமெரிக்கன் கேங்க்ஸ்டர் ( AMERICAN GANSTER)... ட்ரெயினிங் டே(TRAINING DAY)...இன்சைட் மேன்(INSIDE MAN).. அப்புறம் கிரேட் டிபேட்டர்ஸ் (THE GREAT DEBATERS)
இதுல்ல கடைசியாச் சொன்ன கிரேட் டிபேட்டர்ஸ் டென்சலே இயக்கி நடிச்ச படம்... நம்ம ஊர்ல்ல எல்லாம் எப்போடா இப்படி படம் எடுப்பீங்கன்னு கேள்வியை எனக்குள்ள விதைச்ச படம்...அமெரிக்க கறுப்பின வரலாற்றின் ஒரு சின்னப் பக்கம்ன்னு அந்த படத்தில் வரும் சம்பவத்தைச் சொல்லலாம்.. அமெரிக்க கல்லூரிகளில் பட்டிமன்றங்கள்ல்ல பங்கெடுத்துக் கொள்ள ஒரு அணி உண்டு... அப்படி ஒரு கறுப்பின மக்கள் படிக்கும் கல்லூரியின் பட்டிமன்ற அணிக்கு நம்ம டென்சல் தான் சாலமன் பாப்பையா... அதாவது இன் சார்ஜ்... அவர் ஒரு நாலு பேரை தேர்ந்தெடுத்து அந்த புள்ளங்களை அமெரிக்கவிலே மிகப் பெரிய பட்டிமன்ற அணிக்கு சொந்தக்கார கல்லூரியான ஹாவர்ட்க்கு எதிராகப் போட்டிக்கு தயார் படுத்துறார்.. இது தான் கதை... டென்சல் இதில் ஒரு புரட்சி பேராசிரியர் வேடத்தில் வந்து பின்னுகிறார்....

சினிமாங்கறது சந்தேகமின்றி பொழுதுபோக்கு தான் வியாபாரம் தான் அதெல்லாம் சரி... ஆனால் அதில் இப்படி ஒரு இனத்தின் வரலாறு பதிவு செய்ய முடியும் அதை ரசிக்கும் படி ஊருக்குச் சொல்லமுடியும் அப்படிங்கறதுக்கு தி கிரேட் டிபேட்டர்ஸ் நல்லதொரு உதாரணம்...



அடுத்து ட்ரெயினிங் டே...ஒரே நாளல்ல நடக்குற கதை.. போதை ஒழிப்பு துறைக்கு புதுசா ஒரு அப்பரசேட் ( நம்ம ப்ரண்ட்ஸ் வடிவேலு மொழி) வேலைக்கு வர்றான்.. அவனுக்கு தொழில் சொல்லிக் கொடுக்கப் போகும் குரு நாதராய் நம்ம டென்சல்.. மனுசன் அப்படி கலக்கியிருப்பான்.. காலையிலே ஒரு மேதாவியான போலீசா ட்ரெயிங் ஆரம்பிச்சி.. சாயங்காலம் முடியும் போது மொள்ளமாரித்தனமான போலீஸ்டா நானு முகம் காட்டும் அந்த நடிப்பு அசால்ட்ங்க... கண்டிப்பாப் பார்த்து ரசிக்கலாம் இந்தப்படத்தை...


இன்சைட் மேன்... ஒரு பேங்க் கொள்ளை.. அதை விசாரிக்க வரும் போலீஸ் டிடெடிக்வ் நம்ம டென்சல்... வினோதமான பேங்க் கொள்ளை அது.. பணம் எதுவும் பறிபோகாமல்... மொத்த பணயக்கைதியில் ஒரு கைதிக்கும் சேதாரமின்றி விடுதலை ஆகி... பணயக் கைதிகளோடு கொள்ளையர்களும் சாதுர்யமாக தப்பி வந்து கூட்டத்தோடு கூட்டமாய் கலந்து நிற்க.. அதன் பின்னணியைத் துப்பறியும் ஒரு விறு விறு படம் இன்சைட்மேன்...


அமெரிக்கன் கேங்க்ஸ்டர் கோட்டு சுட்டு போட்ட தாதாவா அலட்டல் இல்லாமல் டென்சல் நடித்த இன்னொரு படம்...மாடர்ன் டே காட் பாதர் படம்ன்னு கூட சொல்லலாம்... ஒரு மனிதனுக்குள் எவ்வளவு நடிப்புடா சாமி..

இங்கே நடிப்புன்னா முகத்துல்ல முக்கா கிலோ மைதா மாவைப் பூசி முகம் மாற்றி மாறுவேட போட்டிக்கு கிளம்புவது இல்லன்னா கிராம்பிக்ஸ் கொண்டு முகத்தை நீட்டி முழக்கி டெக்னிக்கல் வித்தை காட்டுவது என்று இலக்கணம் உருவாக்கபட்டு விட்டது....

டென்சல் கொடுத்து வச்சவர் ஆலிவுட்ல்ல நடிக்கிறார்.. கோலிவுட்ல்ல இருந்திருந்தார்ன்னு... மன்றம் வச்சு மைக் கட்டி வா தலைவா வண்ணாரப்பேட்டை தொகுதியிலே எம்.எல்.ஏ ஆவலாம்ன்னு நம்ம ரசிக கண்மணிகள் ரவுசு பன்ணியிருந்தாலும் ஆச்சரியமில்ல...அங்கெல்லாம் நடிகன் நடிகனாய் திரையில் இருக்க.... ரசிக்க முடிகிறது...

இதுப் போல என்னைக் கவர்ந்த இன்னும் சில ஆங்கில படங்கள் நடிகர்கள் பத்தி சமயம கிடைக்கும் போது பதியறேன்...

Thursday, November 27, 2008

ஒரு தீவிரவாத புதன் கிழமை

சமீபத்தில் நான் பார்த்து சிலாகித்த இந்தி படமொன்று... A WEDNESDAY..மும்பை ரயில் குண்டு வெடிப்புகளை மையமாக வைத்து எடுக்கப்பட்ட படம்.

ஒரு சாமன்ய மனிதனுக்கு தீவிரவாதத்தின் மீது எழும் அழுத்தமான கோபத்தை பதிவு செய்த திரைப்படம் அது...
அந்தப் படம் பார்த்து அதன் தாக்கம் அடங்குவதற்குள்.. இதோ இன்னொரு புதன் கிழமை.. மீண்டும் மும்பையின் நிலமெல்லாம் ரத்தம்...அப்பாவி பொதுமக்களின் ரத்தம்..

எதற்காக இந்த வெறி ஆட்டம்... ஏனிந்த வெறி.... இந்த கேள்விகள் எல்லாம் இப்போது என் மனத்தில் இல்லை.. அதை எல்லாம் தாண்டி ஒரு தீராத கோபம்... விரக்தி.. எரிச்சல்... எல்லாம் என்னுள் கலந்து ஒலிக்கிறது... என்னால் என்ன இயலும்...

நான் ஒரு சாதரண இந்திய குடிமகன்... வேலை..பொருளாதாரம்..குடும்பம்.. என எனக்கு பல விதத்தில் சுமைகள் உண்டு.. அதன் காரணமாக என் நாட்டைப் பார்த்து கொள்ள எனக்கு நேரம் இல்லை.. என்னைப் போல எத்தனையோ சக இந்தியர்கள் எண்ணிக்கையில் உண்டு... எங்களுக்கு அன்றாட வாழ்க்கைப் போராட்டத்திலே நேரம் போவதால் தான்... நாட்டைப் பார்த்து கொள்ள ஆட்சியாளர்களிடம் அதிகாரத்தைக் கொடுத்து விட்டு வாங்கும் மாதச் சம்பளம் என் வீடு சேரும் முன் அரசாங்கக் கஜானாவுக்கு அதன் வரி பங்கைத் தவறாது கொடுக்கும் பல லட்சக் கணக்கான மாதச் சம்பளதாரர்களின் வர்க்கத்தில் நானும் ஒருவன்...

எது நடந்தப் போதும் பொறுத்துப் போய் பழகிவிட்டது எனக்கு.... பொறுத்ததும் போய் அதையும் தாண்டி நடப்பதை எல்லாம் நகைத்தும் ரசிக்கும் படியான கேவலமான பழக்கமும் சேர்ந்து கொண்டது.. சுத்தி எது நடந்தாலும் அது காமெடி தான்... கரண்ட் இல்லையா... அதுவும் காமெடி தான்...மழையிலே ரோடு இல்லையா அதுவும் காமெடி தான்... அரசியல்வாதிகளின் ஊழலா.. அதுவும் மெகா காமெடி தான்... எதையும் தட்டி கேக்க திராணி இன்றி ஒவ்வொரு தேசியப் பிரச்சினையிலும் தள்ளி போய் அப்படியே இன்று தனித் தீவாக ஆன எத்தனையோ பேர்களில் நானும் ஒருவன்...

ஒரு கட்டத்தில் எல்லாமே எனக்கு என்டர்டெயின்மெண்டாகவே போய் விட்டது... தேங்க்ஸ் டூ மீடியா....

இன்று காலை என் வரவேற்பரையில் மும்பையின் அலறல் சத்தம் கேட்டப் போது...நெடு நாளைய என் தூக்கம் திடுமெனக் கலைந்தது...இல்லை கலைந்துப் போனதாய் நான் உணர்கிறேன்...

எதாவது ஒரு வழியில் என் கோபம் பதிவு செய்ய பட வேண்டும் என விரும்புகிறேன்... அது தான் இந்தப் பதிவின் நோக்கம்...

மிஸ்டர் மன்மோகன் சிங்... இந்தப் பதிவு மூலமா நான் கூட தான் அறிக்கை விடுறேன்... வருத்த,,,...கோபம்... எல்லாத்தையும் சொல்லுறேன்....எதுக்குன்னா என்னால அவ்வளவு தான் முடியும்.. என்னால என்ன முடியுமோ அதை நான் செய்யுறேன்....

உங்க லெவலுக்கு வெறும் அறிக்கை எல்லாம் விடுறது வேலைக்கு ஆவாது சார்.... அடிச்சு ஆடுங்க...

கொடுமை காணும் இடத்தில் பொங்கி எழச் சொல்லி எல்லாப் பெரியவங்களும் சொல்லியிருக்காங்க...உங்க கிட்ட பதவி இருக்கு.. அதிகாரம் இருக்கு... நாடே உங்க பின்னாடி இருக்கு... அப்புறம் எதுக்கு கையைக் கட்டிகிட்டு கண்ணைக் கசக்கிட்டு.....


போடுங்க... ஆர்டர்.. ஆர்மியை விடுங்க... அடிக்கட்டும்... இந்தியாவை சீண்டிப் பாக்கும் தீவிரவாத வேர்கள் எங்கே இருந்தாலும் பிடுங்கி எறியணும்....அதுக்கு நீர் ஊத்துரது யார் விரலா இருந்தாலும் உரல்ல வச்சு இடிக்கணும்...

ரோட்டுல்ல போற அப்பாவி மக்களைச் சுடுற தீவிரவாதியை எல்லாம் கைது எதுக்கு பண்ணி அவனுக்கு எங்க வரி பணத்துல்ல சோறு தண்ணி எதுக்கு கொடுக்கணும்.. அங்கேயே அப்படியே எங்க வரி பணத்துல்ல தோட்டாவால சோறு போடுங்க...இல்ல கத்தியால கூறு போடுங்க....

அடிக்கு அடி உதைக்கு உதைன்னு போட்டுத் தாக்கணும்... தீவிரவாதம் இன்னொரு தாண்டவம் ஆட நம்ம இந்தியா மேடையா இருக்கக் கூடாது,...

இதை தீவிரவாதத்துக்கும் எதிரான ஒரு சாமன்ய இந்தியனின் கோபமாகப் பதிவு செய்ய விரும்புகிறேன்.

Monday, November 10, 2008

சினிமா சினிமா

1. எந்த வயதில் சினிமா பார்க்க ஆரம்பித்தீர்கள்? நினைவுதெரிந்து கண்ட முதல் சினிமா? என்ன உணர்ந்தீர்கள்?
முதல்ல பார்த்த படம் சத்யம் தியேட்டர்ல்ல..மை டியர் குட்டிச்சாத்தான்...பொதுவாக எங்க வீட்டுல்ல இப்போ வரைக்கும் என்னைத் தவிர யாருக்கும் பெரிதாக சினிமா ஆர்வம் கிடையாது.. அதனால் சிறு வயதில் அதிகம் தியேட்டருக்குப் போனது இல்லை....கிட்டத்தட்ட மை டியர் குட்டிச்சாத்தான் பார்த்த அதே நேரம் தான் நாகேஷ் தியேட்டர்ல்ல எங்களையும் வாழ விடுங்கள்ன்னு ஒரு விலங்குகள் சம்பந்தப்பட்ட படம் பார்த்ததாக ஞாபகம்...

சிறு வயதில் அதிகம் கவர்ந்த படங்கள்ன்னா..அது ரஜினி படங்கள்...அதுக்கு ஒரு காரணமிருக்கு அப்போ எல்லாம் கோடை விடுமுறைக்கு ஈரோடு பக்கம் உள்ள என் உறவினர்கள் வீடுகளுக்கு செல்வதுண்டு... அவர்கள் அனைவருக்கும் தொழில் மளிகை கடை.. அங்கு உள்ள என் வயது சிறூவர்களோடு சேர்ந்து ரஜினிக்கு கைத்தட்ட ஆரம்பித்து அப்படியே என் ஆரம்ப கால சினிமா ரசிக அனுபவங்கள் எல்லாம் ரஜினி படங்கள் சார்ந்தே அமைந்து போயின...

2. கடைசியாக அரங்கில் அமர்ந்து பார்த்த சினிமா?
போன சனிக்கிழமை இரவு பிராத்தனா திரையரங்கில் ஜேம்ஸ் பாண்ட் படம் குவாண்டம் ஆப் சோலஸ்

3. கடைசியாக அரங்கிலன்றிப் பார்த்த தமிழ் சினிமா எது, எங்கே, என்ன உணர்ந்தீர்கள்?
சேரன் நடித்த ராமன் தேடிய சீதை.... ஒரு நல்ல பொழுது போக்கு படம்

4. மிகவும் தாக்கிய தமிழ்ச்சினிமா
பட்டியல் ரொம்ப பெருசுங்க... மணிரத்னம் இயக்கி கமல் நடித்த நாயகன்... சிறு வயதில் பெரிதாய் கமல் படங்கள் பார்க்காமல் தவிர்த்த் என்னை கமல் பக்கம் திருப்பிய படம்...மணிரத்னம் படங்கள் மீது ஒரு தனி மரியாதை ஏற்படுத்திய படம்...
பின்னாளில் பிதா மகன்... காசி திரையரங்கமே எழுந்து நின்று மரியாதை கொடுத்த படைப்பு அது...
சத்யம் தியேட்டரில் இரவு காட்சி பார்த்து விட்டு தூக்கம் தொலைக்க செய்த அன்பே சிவம்
எதுக்கு இப்படி ஒரு க்ளைமேக்ஸ் என கோபம் கொள்ள வைத்த பருத்தி வீரன்...
அசத்திட்டான்ப்பா செல்வராகவன்... இந்த பையனுக்குள்ளேயும் என்ன திறமை இருக்குடா என கவனம் ஈர்த்த காதல் கொண்டேன்...
பழையப் படங்களில் வறுமையின் நிறம் சிவப்பு.... நாகேஷின் எதிர் நீச்சல், இப்படி நம்ம லிஸ்ட் ரொம்ப நீளம்..
சமீபத்தில் சென்னை 28...சுப்ரண்யமணியபுரம்...

5-அ. உங்களை மிகவும் தாக்கிய தமிழ்ச்சினிமா-அரசியல் சம்பவம்?
1992 அண்ணாமலையில் துவங்கி அதன் பின்னால் வந்த அனைத்து ரஜினி படங்களின் ரீலிசும் அரசியலின் உச்சம்....
குறிப்பாச் சொல்லணும்ன்னா முத்து வெளியான சமயம் ஆளுங்கட்சியின் கடும் எதிர்ப்புக்கு உள்ளான ரஜினிக்கும் அவர் ரசிக கண்மணிகளுக்கும் பாடம் புகட்ட முத்து வெளியான திரையரங்குகள் தாக்கப்படலாம் என வெளியான செய்தி ( உண்மையா பொய்யா) அதையும் மீறி முதல் நாள் முதல் காட்சிக்கு வீட்டுக்குத் தெரியாமல் சென்று சேதாரமின்றி ( அதாவது வீட்டுல்ல அடிபடாமல் தப்பியது) திரும்பியது 12 வது படிக்கும் போது கிடைத்த அரசியல் வெற்றி

5-ஆ. உங்களை மிகவும் தாக்கிய தமிழ்ச்சினிமா - தொழில்நுட்ப சம்பவம்?
ஜீன்ஸ் வந்தக் காலத்தில் இரட்டையர்களாக பிரசாந்த் நாசர் ஐஸ்வர்யா ராய் என அன்றைய தேதிக்கு ஊரையே பேச வைத்த பிரமாண்டத்துக்கு ஷங்கர்...ஒவ்வொரு காட்சியிலும் தொழில் நுட்ப நேர்த்தி காட்டும் இயக்குனர்.. ரோஜாவுக்குப் பிறகு இசையில் தொழில் நுட்பத்துக்கு ரஹமான்...
இன்னும் தமிழில் தொழில் நுட்பம் மேலும் வளரணும்ங்கறது என் ஆதங்கம்

6. தமிழ்ச்சினிமா பற்றி வாசிப்பதுண்டா?
கையில் புரட்ட கிடைக்கும் அனைத்துப் பத்திரிக்கைகளிலும் தமிழ் சினிமா செய்திகளை தவற விடுவதில்லை

7. தமிழ்ச்சினிமா இசை?
ராஜா ராஜா என்றும் ராஜா... அவ்வப்போது வரும் புது பாடல்களையும் தவற விடுவதில்லை... இப்போதைக்கு அடிக்கடி ஓடுவது வாரணமாயிரம்...

8. தமிழ் தவிர வேறு இந்திய, உலக மொழி சினிமா பார்ப்பதுண்டா? அதிகம் தாக்கிய படங்கள்?
நிச்சயம் உண்டு... தமிழ் தவிர ஆங்கிலம், இந்தி, தெலுங்கு, மலையாளம், பிரெஞ்சு படங்களும் பார்பது உண்டு... சப் டைட்டில் இருந்தா எம்மொழியும் எம் மொழியே...
உலக சினிமாவில் ரசித்த படங்கள் காட் பாதர், சினிமா பாரடிசோ,சேவிங் பிரைவேட் ரேயான், பியூட்டிபுல் மைன்ட்...
இந்திய சினிமாவில்... ஷோலே...தில் சாத்தா ஹேய்...ஏ வெட்னஸ்டே...ரங்க் தே ப்சந்தி...
தெலுங்கில் கம்யம்...கோதாவரி...
மலையாளத்தில் தீலிப் நடித்த நகைச்சுவை படங்கள் பிடிக்கும்...

9. தமிழ்ச்சினிமா உலகுடன் நேரடித்தொடர்பு உண்டா? என்ன செய்தீர்கள்?பிடித்ததா? அதை மீண்டும் செய்வீர்களா? தமிழ்ச்சினிமா மேம்பட அது உதவுமா?
பிரபலங்கள் சிலரின் உறவுகள் எனக்கு நெருக்கமான நண்பர்கள்... நல்லதொரு தமிழ் சினிமா விமர்சன வலைத்தளம் உருவாக்க வேண்டும் என்ற எண்ணத்தில் துவங்கப்பட்ட கீத்துகொட்டா பதிவை தொடர வேண்டும்...

10. தமிழ்ச்சினிமாவின் எதிர்காலம் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
கதை நாயகர்களாக நடிகர்கள் மாறும் வரை.. தமிழ் சினிமா ஸ்டார்களின் முதுகு சொறியும் அலங்கரிக்கப்பட்ட துடைப்பமாகவே இருக்கும் என்ற வருத்தம் இருந்தாலும்... அமீர்.. வெங்கட் பிரபு..மிஷ்கின், பாலா... போன்ற இயக்குனர்களை நம்பலாம்....

11. அடுத்த ஓராண்டு தமிழில் சினிமா கிடையாது, மற்றும் சினிமா பற்றிய சமாச்சாரங்கள், செய்திகள் எதுவுமே பத்திரிகைகள், தொலைக்காட்சி, இணையம் உள்ளிட்ட ஊடகங்களில் கிடையாது என்று வைத்துக்கொள்வோம்? உங்களுக்கு எப்படியிருக்கும்? தமிழர்களுக்கு என்ன ஆகும் என்று நினைக்கிறீர்கள்?
ஹாலிவுட், பாலிவுட் இருக்கும்ல்ல.. அந்தப் பக்கம் ஒதுங்கிருவோம்....
கவுண்டர் பாபால்ல சொல்லுவார் இல்ல... சிங்கிள் லாங்க்வேஜ் வச்சிகிட்டு நான் சென்னைக்கு அந்த பக்கம் போக முடியாம அல்லாடுறேன்னு.. அந்த கவலை நமக்கு இல்ல...

பதிவிட அழைப்பு வைத்த பாசக்கார சிங்கங்கள் கைப்புள்ள மற்றும் கப்பிக்கு மனமார்ந்த நன்றிகள்

Wednesday, November 05, 2008

ஆபிசரின் அரசியல் கச்சேரி

"டேய் பருத்திவீரா... நான் எல்லாம் ஒபாமா ரேஞ்ச்டா...."
"யார்... நம்ம ஆபிஸ் வாசல்ல பரோட்டாப் போடுற கடையிலே தட்டு கழுவுறங்களே அந்த ஒ பாமா அவங்க ரேஞ்சா...?"

"என்ன நக்கலா... நான் சொன்னது...இன்னிக்கு அமெரிக்காவில்ல முதல் கருப்பர் இன அதிபர் ஆகி இருக்காரே அவரைச் சொன்னேன்..."

"அப்படின்னா நீங்க அரசியல்ல இருந்தீங்களாஆஆஆஆஆஆ"

"எதுக்கு இம்புட்டு ஆ?""எல்லாம் ஒரு எபெக்ட் தான் ஆபிசர்... சின்னப் பயல்வ விரலை அசைச்சாலே என்னமா சவுண்ட் கொடுக்கான்வ சினிமாவுல்ல... நீங்க் ஆஆஆபிசர் ஆச்சே.. விடுவோமா.. நீங்க மேல போங்க..."

ஆபிசர் பருத்தி வீரனை படு கடுப்பாய் முறைத்துவிட்டு தன் அரசியல் அனுபவத்தைச் சொல்ல ரெடியாகுகிறார்.

அப்போ நான் பள்ளிக்கூடத்துக்குப் போயிட்டிருந்தேன்...

இது தான் ஆபிசர் உங்க கிட்ட எனக்கு பிடிச்ச விசயம்...
எது எது....
இந்த உண்மை பேசற விசயம்...பள்ளிக்கூடத்துல்ல படிச்சிட்டு இருந்தேன்னு பொய் சொல்லாமல் போயிட்டு இருந்தேன்னு சொல்லுறீங்க பாருங்க.. அந்த உண்மை பேசுற மனசை நான் பாராட்டுறென் ஆபிசர் ..ப்ளீஸ் கன்டினியூ

மீண்டும் கடுப்பு பார்வை பார்க்கும் ஆபிசர் தொடர்கிறார்..."அப்போ எல்லாம் நான் வந்து ஒரு பெரிய நடிகருக்கு ரசிகர்.....""ஆபிசர் குண்டு கல்யாணமா.. இல்லை உசிலை மணியா ஆபிசர்.... எனக்குத் தெரிஞ்ச பெரிய நடிகர்ஸ் அவங்க தான்... ரொம்ப பெரிய நடிகர்ஸ்"

தமிழ் நாட்டுல்லே பெரிய நடிகர்ன்னா யாருன்னு சின்னப் புள்ளக்கு கூடத் தெரியுமே...
சாரி ஆபிசர் நான் பெரிய புள்ளையாகி பல வருசம் ஆச்சு... சைல்ட்வுட் மெமரி எல்லாம் லாஸ் ஆயிருச்சு... பட் நீங்க கன்டினியூ ஆபிசர்...

அவர் அப்போ அரசியலுக்கு வரப் போறதா ஊர் முழுக்கப் பேச்சு....
ஆபிசர் இப்போ உங்க பையனே பள்ளிக் கூடம் போக ஆரம்பிச்சுட்டான்... இன்னும் அந்தப் பேச்சு நிக்கல்ல... மே பி உங்க பேரனும் பள்ளிக்கூடம் போற வரைக்கும் அது நிக்காது.. அது கன்னித் தீவு பார்ட் டூ... என்னக் கன்னித் தீவு... தந்தில்ல மட்டும் வரும்...இந்த மேட்டர் ஆல் பேப்பர்ஸ்ல்லயும் வரும... பட் நீங்க மேட்டருக்கு வாங்க... வாட் ஹேப்பண்ட் டூ யூ இன் பொலிடிக்ஸ்?

எங்க குடும்பம் ஒரு பராம்பரியமான அரசியல் குடும்பம்...
அதாவது வேற பொழப்பே இல்லாம மொத்தக் குடும்பமும் கும்பலாக் கிளம்பி ஊரை அடிச்சு உலையைப் போட்ட அது பராம்பரிய அரசியல் குடும்பம்
ரைட்டா....ப்ளீஸ் ப்ரொசிட் ஆபிசர்..

"நக்கலை கன்ட்ரோல் பண்ணிட்டு கேளு...எங்க ஊர் பக்கம் அப்போ எங்க கட்சி சார்பா ஒரு மாநாடு... தேர்தல் வேற பக்கமா வந்துச்சு

பக்கமா வந்துருச்சு...சரி... நீங்க என்னப் பண்ணீங்க....

இதேக் கேள்வியை தான் அக்கம் பக்கம் எல்லாத்துல்லயும் என்னைப் பாத்துக் கேட்டாங்க. நான் கொதிச்சுக் கொந்தளிச்சிப் போயிட்டேன், ஒரு பரம்பரை அரசியல் குடும்பத்துல்ல வந்த நான் தேர்தல் வர்ற நேரம்... அதுவும் நான் ரசிக்கிற பெரிய நடிகர் வேற எங்க கட்சிக்கு ஆத்ரவு கொடுத்துட்டார்...இந்த டைம்ல்ல நம்ம வெயிட் காட்டணும்ன்னு முடிவு பண்ணிட்டேன்...

"நாம யாரு... ஆபிசர்....ஒரு தடவை முடிவு பண்ணிட்டா அப்புறம் நம்ம பேச்சை நாமளேக் கேக்க மாட்டோமே... ம்ம்ம் சொல்லுங்க"

"ஸ்கூலுக்கு மட்டம் போட்டுட்டு உக்காந்து யோசிச்சோம்ப்பா...."

"அதிசயம்...ஆபிசர்.. நீங்க கூடவா யோசிச்சீங்க... சரி அந்த யோசிக்கற பழக்கம் எல்லாம் உங்களுக்கும் இருந்து இருக்கு எப்போ அதை எல்லாம் விட்டீங்க...ஆப்டர் மேரேஜா"

"ஜஸ்ட் பிபோர் மேரேஜ்...யோசிச்சிருந்தா கல்யாணம் நடந்திருக்குமா..."

"ஆமா அண்ணி யோசிச்சுருக்கலாம்... மேரேஜ் நடந்திருக்காது... சரி அது எதுக்கு இப்போ... அரசியலுக்கு வாங்க..."

ஆபிசர் அலட்டல் போஸ் கொடுக்க...

"ஆபிசர்ண்ணா... அரசியல் கதைக்கு வாங்கன்னு சொன்னேன்.. கதை மிஸ் ஆயிடுச்சு.. சீன் வேணாம் கன்டினீயு.."

மெகாவா ஒரு திட்டம் போட்டோம்.. அது படி பேனர் வைக்க முடிவு பண்ணுனோம்...அப்போ பிளக்ஸ் எல்லாம் வர்றல்ல்யா... சோ... ஆயில் பெயிண்ட் பேனர் தான்...

அட்ரா சக்க..அட்ரா சக்க,.... அப்புறம்

பயங்கரமா யோசிச்சு எங்க கட்சி தலைவர் படம் ப்ளஸ் எங்க ஸ்டார் படமும் போட்டு பேனரை ரெடி பண்ணிட்டோம்.... பேனர்ல்ல எல்லாம் கரெக்ட்டா இருக்கான்னு லாஸ்ட் மினிட் செக் பண்ணும் போது தான் டக்குன்னு தோணுச்சு

தலைவருக்குப் பட்டம் எதுவும் போடல்லயேன்னு.. தமிழினத் தலைவர்ன்னு எழுதிடலாம்ன்னு முடிவு பண்ணுனோம்

அது உங்க தலைவருக்குப் பலக் காலமா இருக்க பட்டம் தானே.. இதுல்ல என்ன புதுமை...

ஆனா அங்கே தான் ஒரு சிக்கல் வந்துருச்சு...

நான் தெளிவாத் தான் இருந்தேன்... பசங்க தான் குழம்பி என்னையும் குழப்பிட்டாங்க

ஓ அப்படியா.. அப்புறம்
என்னச் சிக்கல்..
தமிழின தலைவருக்கு சின்ன ழி யா இல்லை பெரிய ழீ யா அப்படின்னு

ஒஹோ நீங்க தான் தமிழ் புலவர் ஆச்சே ஆபிசர்... டெய்லி ஆபிஸ்ல்ல எல்லாருக்கு குட் மார்னிங் வித குறள் மெயில் எல்லாம் பார்வர்ட் பண்ணுற தமிழ் பத்தர் ஆச்சே.. சாரி தமிழ் பித்தர் ஆச்சே...

அண்ணே உங்களுக்கு அரசியல்ல பெரிய எதிர்காலம் வேணும்ன்னா பெரிய ழீ யே போட்ருவோம்ன்னே.. சென்டிமென்ட்டா ஓர்க் அவுட் ஆகும்ண்ணே... ழீயும் பெருசு... உங்க கனவும் பெருசுன்னு ஏத்தி விட்டுட்டாங்க.... நானும் அந்த ஜெர்க்ல்ல ஒத்துகிட்டேன்...

பருத்தி வீரன் விழுந்து விழுந்து சிரிக்க.....
"ஆபிசர் அங்கிள்.... உங்க தலைவர் அதைப் படிச்சிட்டாரா....?"
"ஊரே படிச்சிருச்சு,,,, எங்க அப்பாரு அன்னிக்கே என்னை ரயில் ஏத்தி ஊரை விட்டு அனுபிட்டார்... இனி அரசியல் அது இதுன்னு வந்த ... வெட்டிருவேன்னு விளக்கமா வெவரமா கடுதாசியே போட்டுட்டு போயிட்டார்..

அப்புறம் தான் நானும் அரசியல் விட்டு விலகி வந்து இப்படி ஐ.டியிலே சேந்துட்டேன்

இதோ பாரு.... தன் மெயிலில் இருந்த ஒரு பழைய படத்தைக் காட்டினார்..அதில் தமிழீனத் தலைவர்.......... அப்படிங்கற பேனர் பக்கத்தில் மாசு மருவறியாத இளம் காளையாய் நம்ம ஆபிசர்...அரசியல் கெட்டப்பில் அட்டகாசமாய் போஸ் கொடுத்திருந்தார்

ஒரு பெரிய ழீ அநியாயமாய் தமிழகத்தின் அரசியலோடும் ஐடியோடும் விளையாடிய வினையை என்னவென்று சொல்ல....:))))

Tuesday, October 07, 2008

தேசிய முற்போக்கு திராவிட வ.வா.சங்கம் உதயம்

அக்டோபரில் என்டிரி
2011ல் நமக்கே தமிழ் கன்டிரி

இது திருவான்மியூர் பகுதியில் சமீபக்காலத்தில் மிகவும் அதீத பரபரப்பு ஏற்படுத்திய பிட் நோட்டீஸ்..
பிட் நோட்டீஸ் கீழே பூதக் கண்ணாடி கொண்டு பார்த்தவர்கள் படித்துச் சொன்னத் தகவல்...

அகில உலக தமிழ் பதிவுலக சூப்பர் ஸ்டார் அண்ணன் பின்னூட்ட சுனாமி கொத்தனார் தலைமை மன்றம்

என்னப் படிச்ச உடனே சும்மா கம்ப்யூட்டர் மானிட்டரே உதறுதுல்ல....( பின்னே சீட்டை விட்டு வேகமா மானிட்டரை ஆட்டிகிட்டே எந்திரிச்சா உதறாம என்னச் செய்யும்ன்னு எதிர்பாக்குறீங்க.. உக்காந்து மேலே படிங்க...)

தம்மடிக்க தடை....
தட்டிக் கேட்க கிளம்புது தலைவர் படை...

மும்பையில் ஷாருக்கான் வீட்டுப் பக்கம் இப்படி ஒரு போஸ்ட்டர்.. பதறுதுல்ல... ஷாருக்கான் ரசிகர்கள் தான் ஒட்டியிருப்பாங்கன்னு ஐபிஎன், என்டிடிவி, ஆஜ் தக், இப்படி ஆளுக்காளு ஐடியா பண்ண.. அந்தப் போஸ்ட்டருக்கு கீழே உத்துப் பாத்தவங்கப் படிச்சது...

தலால் வீதி தளபதி பதிவு புயல் கொத்தனார் போர்படை

அமெரிக்காவில் ஒபாமா...
அப்கானிஸ்தானில் ஓசாமா..
தமிழகத்துக்கு 2011ல்ல நீங்கதாம்மா....

படிக்கும் போதே சீறுதுல்ல....பின்னே... கேரளாவில்ல இருந்து வர்ற கப்பக் கிழங்கு லாரி பேக் சைட்ல்ல எல்லாம் இப்படி போஸ்ட்டர் ஓட்டி இருக்குதாம்...கப்பக் கிழங்கை இறக்கும் போது போஸ்ட்டரை நல்லாப் பாத்தவங்க கீழே இருந்த மேட்டரைப் படிச்சாங்க....

அடுத்த உலக ஜனாதிபதி அண்ணன் கிராஸ்வேர்ட் கிளாடியேட்டர் கொத்தனார் பேரவை

இப்போ இலவசம்... 2011ல் எல்லாம் இவர் வசம்...

இன்னிக்கு பிளாக்.....எதிரிக்கெல்லாம் ஷாக்....

பொதுவாக அண்ணன் போடுறது பின்னூட்டம்... ஒரு போட்டீன்னு வந்தா அண்ணன் போடுவார் வேற ஆட்டம்....

போட்டியின்னு வந்தா குறுக்கெழுத்து... 2011ல்ல தலைவர் தான் தமிழகத்தின் தலை எழுத்து....

என்னப் பாக்குறீங்க... இதெல்லாம் தலைவர் அண்ணன் கொத்தனாருக்காக நான் ரெடி பண்ணி வச்சிருக்க பேனர் மேட்டர்... நான் முடிவு பண்ணிட்டேன்.... 2011ல் தலைவர் தான் தமிழ்நாட்டை ஆளணும்ன்னு.... அதான் களத்துல்ல இறங்கிட்டேன்....

யார் தடுத்தாலும் தலைவரை கோட்டைக்கு அனுப்பிட்டு தான் எனக்கு அடுத்த வேலை..

புதுக் கட்ட்சி ஆரம்பிச்சாச்சிப்பா... கொடி எங்க வீட்டு மொட்டை மாடியிலே ஏத்திட்டேன்....சோ தலைவர் அரசியலுக்கு இட்டாந்தாச்சுப்பா...
ஒழுங்கா ஓட்டுப் போடுறவங்க...அப்புறம் கள்ள ஓட்டுப் போடுறவங்க எல்லாம் கரெக்ட்டாத் தலைவருக்கே போடுருங்கப்பா...

அப்புறம் இந்தப் புதுக்கட்ட்சியிலே சேர தலீவருக்கு 14..அக்டோபர் 14 வரைக்கும் நான் டைம் கொடுக்குறேன்... அதுக்குள்ளே நல்ல முடிவாச் சொல்லு தலீவா....
அப்புறம்...இந்தப் பதிவின் மூலம் செயல் படாத தலைவர் என என்னை தலீவர் கிட்டே சைலண்ட்டாப் போட்டுக் கொடுத்த அனைவருக்கும் விரைவில் ஆப்படிக்கப்படும் எனத் தெரிவித்துக் கொள்கிறேன்...

கட்சியில் உறுப்பினராக தே.மு.தி.வா.வ.ச தலைமையகத்தை அணுகவும் நன்றி நன்றி... மீண்டும் வந்துட்டோம்ல்ல

Tuesday, August 19, 2008

ரஜினிகாந்த் தலைவரா? வியாபாரியா?

ஒருவன் இரண்டு எஜமானர்களுக்கு வேலைக்காரனாக இருக்க முடியாது என வேதாகமத்தில் ஒரு வாக்கியம் உண்டு.

அது தற்சமயம் யாருக்குப் பொருந்துமோ இல்லையோ நம்ம சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு நன்றாக பொருந்துகிறது

தலைவர் ரஜினிக்காக எதையும் செய்யக் காத்திருக்கும் கோடிக்கணக்கான ரசிகர்கள் ஒரு பக்கம்.
வியாபாரி ரஜினிக்காக கோடிக்கணக்கான பணம் சுமந்துக் காத்திருக்கும் வியாபார உலகம் ஒரு புறம்.
இரண்டுக்கு இடையில் சிக்கியிருக்கும் ரஜினி என்ற மனிதனின் நிலை தான் இன்று தமிழ் கூறும் நல்லுலகத்தின் ஹாட் டாபிக்

ரஜினியின் புகழ் என்பது பலருக்குக் கனவிலும் வாய்க்காத ஒன்று...அவர் வளர்ச்சி அசாதரமானது.. அந்த வெற்றியின் சூத்திரம் அறிய முயன்று முடியாமல் போனோர் பலர் உண்டு.. அறிந்ததாக நினைத்து கதை அளந்தவர் ஆயிரம் உண்டு... உண்மை அவருக்கும் அவரை படைத்த ஆண்டவனுக்குமே வெளிச்சம்...

ஒரு மரம் விதையாக இருக்கும் போது அது படும் அவமானங்கள் அதிகம்.. அதை மிதிப்பவர்கள் ஏராளம்... அந்த மிதிகளால் அந்த விதை மண்ணுக்குள் அமிழ்ந்து பின்னர் எப்படியோ பிழைத்து மெதுவாக மண்ணை விட்டு தலை உயர்த்தி கொஞ்சம் கொஞ்சமாய் இலை விட்டு.. வேர் விட்டு... நிலம் பிடித்து... அப்புறம் ஆகாயம் பார்த்து கிளை விட்டு...மரமாக வளர்ச்சியடையும்.. அந்த மரமானது பலருக்கு நிழல் கொடுக்கும்..காய் கொடுக்கும்... கனி கொடுக்கும்...கூடு கட்டி வாழ இடம கொடுக்கும்...அந்த மரத்தில் ஊஞ்சல் கட்டி ஆடியவர் ஏராளம்..தாவி விளையாடிக் களித்தவர் ஏராளம்... அந்த மரம் பலருக்குப் பார்பதற்கே பரவசம் கொடுக்கும்....

அப்படிப் பட்ட மரம் ஒரு வியாபாரியின் கண்ணில் பட்டால் என்ன ஆகும்... ம்ம்ம் நல்ல மரம் இதைப் படம் புடிச்சு போடுவோம் நாலு காசு பாப்போம்... ஆகா இந்த மரம் என்ன மாதிரி இருக்கு சுத்தி வேலி கட்டி டிக்கெட் போடுவோம் வசூலைப் பாப்போம்...ம்ம்ம் இப்படியே வசூல் பாத்துகிட்டு இருந்தா எவ்வளவு நாள் ஆகுமோ சம்பாதிக்க...அப்படின்னு ஒரு எண்ணம் வரும் போது அந்த மரத்தையே கூறு போட்டு வித்தா ஓடனே நிறைய அள்ளலாம்ன்னு தான் தோணும்.. அது தான் வியாபார உலக நியதி...

இங்கே யாரை மரம் என்று நான் சொல்ல வந்தேன்னு உங்களுக்கு சொல்ல வேண்டியதில்லை... ரஜினி விதையாய் தமிழ் மண்ணில் வந்து விழுந்து... இங்கே மிதிப்பட்டு... நிலத்தில் தன்னை ஊன்றி.. இங்கே வேர் விட்டு.. இன்று ஒரு மரமாய் இங்கே இருக்கிறார்... அந்த மரம் காய்த்த மரம்.. கல்லடிகள் அதுக்கு விதிக்கப்பட்டவை...கல்லால் எத்தனை நாள் அடிப்பது.. வாய்ப்பு கிடைக்கும் போது வாங்க வெட்டிச் சாய்க்கலாம்ன்னு இப்போ ஒரு வியாபாரக் கூட்டம் கிளம்பிருச்சு...

எதையும் தாங்கும் மரமாய் ரஜினி நிற்பதை பாவம் அவர் ரசிகர்களால் தான் ஏற்க முடியவில்லை.. தவிக்கிறார்கள்... இன்னும் சிலர் விரக்தியின் உச்சத்துக்கே போய் விட்டார்கள்...

1990களின் பிற்பகுதியில் ரஜினிக்கு சொல்லளவில் கிடைத்து வந்த தலைவர் பதவி செயலளவிலும் கிடைப்பதற்கான சாத்தியக் கூறுகள் அவர் படங்களின் வாயிலாகவே அவரே ஏற்படுத்தினார். ( இப்போது குசேலன் மூலம் அதையே அவர் மறுத்திருப்பது முரண்)

அண்ணாமலையில் துவங்கி விரல் சொடுக்கி அரசியல் வசனங்கள் பேசியதாகட்டும்,
பாட்சாவில் திரையைப் பார்த்து "இது தானா சேர்ந்த அன்புக்கூட்டம்" என்றது ஆகட்டும்....,
முத்துவில் "நான் எப்போ வருவேன் எப்படி வருவேன்னு" வசனம் பேசி ரசிகனை உசுப்பதியாகட்டும்,
தொடர்ந்து அருணாச்சலம் , படையப்பா என ரசிகனைத் திரையில் தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடியதாகட்டும் ரசிகர்களை அவரை இன்னொரு எம்.ஜி.ஆராகவேப் ஆராதிக்க வைத்தன...

2000க்கு பிறகும் ரஜினியின் இந்த போகும் வரை போகட்டும்... நடக்கும் வரை நடக்கட்டும் என்ற செயல்பாடு அவருக்கு சறுக்கலைக் கொடுத்தது... திரையுலகின் முடிசூடா மன்னனாக இருந்த ரஜினி பாபாவில் பாமக விடம் அடிவாங்கியதும், பின் தொடர்ந்த பாமக மோதலில் ரஜினி படை தோற்றதும் அரசியலில் ரஜினியும் சரி....அவர் ரசிகர்களும் சரி.... கற்க வேண்டிய பாடங்கள் நிறைய இருப்பதை அவர்களுக்கு எடுத்துச் சொல்லியது...

அந்த பாடத்தைத் தலைவர் கற்று கொண்டார்.. ஒரு கலைஞனுக்கு எல்லாரும் தேவை என்பதை புரிந்துக் கொண்டார்... புயலுக்கு பூச்செண்டு கொடுத்த வரலாறு எல்லாம் அடுத்து அடுத்து அரங்கேறியதும் அதன் பின் நடந்ததும் நாடறியும்....

ரஜினி ரசிகன் மட்டும் ஏனோ ரஜினியைத் தலைவனாகப் பார்ப்பதைத் தவிர்க்க முடியாமல் தவித்தான்... ரஜினி ரசிகன் என்ற அவன் கெத்து பிற நடிகர்களின் அரசியல் பிரவேசமும் அதைத் தொடர்ந்து அந்த நடிகர்களுக்குக் கிடைத்த வெற்றியும்...குறிப்பாக அரசியலுக்கு வந்த மற்ற நடிகர்களின் ரசிகர்களுக்கு கிடைத்த புது மரியாதைகளாலும் சரிந்துப் போனது...அதை மீட்டு எடுக்க தலைவனின் தயவு அவனுக்குத் தேவைப்பட்டது....

அவன் குரலைக் கேட்கும் தூரம் தாண்டி அவன் தலைவராக நினைத்த மனிதன் நகர்ந்து போனதை அறிந்தும் அதை ஏற்று கொள்ள முடியாமல் அவன் குரல் அவரைக் கோட்டைக்கு அழைத்தப் படியே இருந்தது...
ரஜினி என்ற நடிகரின் வியாபார எல்லைகள் இந்த நேரத்தில் யாரும் எதிர்பார்க்காத வண்ணம் உலகம் எங்கிலும் விரிந்தது.. வேர்கள் தமிழகத்தில் இருந்தாலும் கிளைகள் ஜப்பான் வரையிலும் நீண்டன....

தேசிய பத்திரிக்கைகள் ரஜினியை இந்திய சினிமாவின் உச்ச வியாபாரியாக சித்தரிக்க துவங்கின... உள்ளூர் பத்திரிக்கைகள் எழுத எதுவுமின்றி இங்கிருக்கும் ரசிகனின் உணர்வுகளோடு விளையாடிய வண்ணம் இருந்தன...

சந்திரமுகி. சிவாஜி என்ற இமாலய வெற்றிகளின் உஷ்ணம் உள்ளூரில் பலருக்கு பல உபாதைகளைக் கொடுத்தக் காலகட்டம்.... அந்த உஷ்ணம் தணியும் முன்னரே ரஜினியே வலிய வந்து அவர்களுக்கு வைத்த விருந்து... ஹோக்கனேக்கல் உண்ணாவிரதப் பேச்சு.. பின் தொடர்ந்த கர்னாடக வருத்தம்... அதைத் தொடர்ந்த குசேலன் வசனங்கள்....

அடுத்து அடுத்து தொடர்ந்த எல்லா நிகழ்வுகளிலும் ரஜினி மாற்றி மாற்றி தலைவர், வியாபாரம் என இரட்டை குதிரைகளில் லாவகமாக சவாரி செய்து சமாளித்து வந்தார்... சமீபத்தில் அந்த இரண்டு குதிரைகளும் முரண்டு பிடித்து நிற்கின்றன....

"ரஜினி வியாபாரம்" நஷ்ட்டம் கொடுத்து விட்டது எனக் குரல் உயர்த்தி கொக்கரிக்கும் மக்கள் ஒரு பக்கம் நிற்க...

காலம் எல்லாம் தலைவன் என்று அடி மனத்தில் இருந்து குரல் உயர்த்தி இன்று பேச்சு இழந்து ரசிகன் ஒரு புறம்...

எதிலும் ஆகாயம் பார்த்து விடை தேடும் ரஜினி இம்முறையும் ஆகாயம் பார்த்து ஆண்டவனிடம் கேட்கும் கேள்வி....

"இந்த ரஜினிகாந்த தலைவனா? வியாபாரியா?"

Thursday, June 19, 2008

சிவாஜி வாயிலே ஜிலேபி

ரொம்ப நாளாக் கச்சேரி வைக்கல்லன்னு நம்ம மேலக் குத்தச்சாட்டு குவிஞ்சுகிட்டே இருக்கு.... அந்தக் குத்தச்சாட்டை எல்லாம் குப்புறக் கவுத்திப் போட்டு கும்மி அடிக்க கிளம்பிட்டோம்ல்லா...
ஒரு கேப்புக்கு அப்புறம் வர்றோம்ல்லா.. அது தான் சும்மா பஞ்சிங்க்கா ஆரம்பிக்கலாம்ன்னு நமக்கு புடிச்சப் பஞ்ச் டயலாக் எல்லத்தையும் போட்டு அதுக்குப் படமும் போட்டு பதிவு போட்டுருக்கோம்..

மக்கா இது 100 சதவீத சீரியஸ் பதிவு...


இந்தப் பஞ்ச் எல்லாம் படிச்ச்ட்டு அதுன்னாலப் பாதிக்கப்பட்டு எனக்கு ரசிகர் மன்றம் வைக்க நினைக்கும் அன்பு ரசிகர்கள் தனி மெயில் மூலம் என்னை அணுகலாம்... கிடைக்கும் வரவேற்பைப் பொறுத்து 2011 அல்லது 2016ல் முதல்வராகும் என் திட்டம் நாட்டு மக்களுக்கு அறிவிக்கப்படும் எனபதியும் இந்தப் பதிவின் மூலம் பணிவண்போடு தெரிவித்துக்கொள்கிறேன்.





மன்னிப்பு தமிழ்ல்ல எனக்குப் பிடிக்காத ஒரே வார்த்தை - ரமணா


மன்னிக்குறவன் மனுசன் !!! மன்னிப்பு கேக்குறவன் பெரிய மனுசன் !!! - விருமாண்டி





எவ்வளவோ பாத்துட்டோம் இதைப் பாக்க மாட்டோமா - அழகிய தமிழ் மகன்





அதுதுதுது - தல ரெட்




இன்னுமாடா ஊருக்குள்ளே என்னை நம்புறாங்க.. இப்படி உசுப்பேத்தி உசுப்பேத்தித் தான் ஓடம்பை ரணகளமா ஆக்கிட்டாங்க - கைப்புள்ள



சும்மா அதிருதுல்ல !!!! - சிவாஜி




அரசியல்ல இதெல்லாம் சாதரணம் அப்பா... - பன்னிக்குட்டி ராமசாமி



ப்ரீயா விடு ப்ரீயா வீடு ப்ரியா வீடு மாமே.. வாழ்க்கைக்கு இல்ல கியராண்டி - ஆறு

தலைப்புக்கும் பதிவுக்கும் என்ன சம்பந்தம்ன்னு கேக்குறவங்களுக்கு இது தலைவர் கொத்தனார் நமக்கு கொடுத்த பஞ்ச்... இந்தப் பஞ்சுக்கும் ஒரு படம் போடுறோம்ல்லா..அது அடுத்தப் பதிவில்

Sunday, June 15, 2008

கலக்கல் கமல் - சொதப்பல் தசாவதாரம்

நடிப்புன்னா என்ன? மேக்கப் போடுறதா? விதம் விதமா மேக்கப் போட்டுகிட்டு சும்மா அங்கிட்டும் இங்கிட்டும் நடக்கிறதா நடிப்பு.... தசாவதாரம் படம் முடிஞ்சு வெளியே வரும் போது எனக்குள் எழுந்த கேள்வி இது...

சரி மூணு நேரம் உள்ளே உக்காந்து படம் பார்த்தோமே படத்துக் கதை என்னன்னு கொஞ்சம் யோசிச்சுப் பாத்தேன்... அதான் படத்துல்ல மிஸ்ஸிங்... 10 கமல் இது தான் படத்துக்கு ஒன் லைனர்... ஒரு கமல் துரத்த.. இன்னொரு கமல் ஓட... வழியில் பல கமல்.. இது தான் படம்.

பல வருடங்களுக்கு முன் வந்த ஜிம் காரியின் மாஸ்க் படத்தை கமலின் மேக்கப் ஞாபகப்படுத்தியது... சின்ன வயசில் பொம்மைகளுக்கு மைதா மாவு பிசைந்து மாஸ் செய்து மாடி விட்ட ஞாபகமும் வந்துப் போனது... இந்தியனில் கமலுக்கு ஏற்பட்ட மைதா மாவு மோகம்.. சாரி மேக்கப் மோகம் இன்னும் தீர்ந்தபாடில்லை... மைதா மாவு அரைப்பது தவிர்த்து பூசும் காட்சிகளைத் தொகுத்து இறுதியில் உலக நாயகனே பாடலில் தந்து இருக்கிறார்கள்..விருப்பமுள்ளவர்கள் பார்த்து பூசி பழகி உலக நாயகர்கள் ஆகும் முயற்சியில் ஈடுபடலாம்.

வழக்கமாய் ரஜினி படங்களில் ஒலிக்கும் நீ என்ன பெரிய இவனா பாணி காட்சி அமைப்பு அதற்கு கமல் தரும் பன்ச் டயலாக் பதில் ... யூ டூ கமல் என கேட்க வைக்கிறது...

பி.வாசு.. நீ என்ன உலக நாயகனா எனக் கேட்பது அதற்கு கமல் கேமராப் பார்த்து கமல் சொல்லும் பதிலும்... கமல் வெல்கம் டூ கோலிவுட் லோக்கல் சினிமா என சொல்ல வைக்கிறது...

புல்லட்டால் கேன்சர் சிகிச்சை செய்வது.... ஒடும் ரயிலில் தாவி ஏறுவது...மீண்டும் குதிப்பது, பைக் வைத்து லாரிக்கு அடியில் போவது, வேளாங்கண்ணி வரை எம்.ஆர்.டி.எஸ் ட்ரெயினில் போய் சேர்வது என கேப்டன் , இளையதளபதி, படங்களின் பாதிப்பு கமல் படத்திலும் தெரிவது கொடுமை..

மைக்கேல் மதன காமராஜன், பஞ்சதந்திரம், பாணி நகைச்சுவை தோரணங்கள் இதிலும் உண்டு கொஞ்சம் சலிப்பு, கொஞ்சம் சிரிப்பு

எல்லாருக்கும் "நானும்" பொது ஆள் தாம்ப்பா எனக் காட்டிக் கொள்ள அம்மாவும் ஹெலிகாப்டரில் வர்றாங்க.. அய்யாவும் கடைசியா சார்ஜ் புஷ் கூட மேடையேறி வர்றார் படத்துல்ல...

கமலின் அரசியல் முகவரி சொல்லும் வசனங்களும் படத்தில் உண்டு... ( கமல் தி.க. உறுப்பினர் தானே) . ரயிலில் அவர் பேசும் வசனங்கள் அதற்கு உதாரணம். மடம் குறித்து கமல் பேசும் சில வசனங்கள் சர்ச்சையைக் கிளப்பலாம் என்பது என் கணிப்பு. ஒரு நல்ல கலைஞன் மதம் தீண்டாமல் மக்கள் ரசனையை மெருகேற்றும் விதம் படம் எடுக்கலாமே...

ஒரு சாரசரி தமிழ் மசாலா படம் கமல் போடும் 10 வேடங்களால் அளவுக்கு மீறிய ஆவலைத் தூண்டி விட்டுள்ளது என்பது படம் பார்த்து வந்தப் பின் எனக்கு உதித்த கருத்து...

படத்தில் நான் ரசித்த விசயங்கள்... பல்ராம் நாயுடு கமலின் காமெடி... ஜப்பானிய கமலின் மேக்கப்... பிளட்சரின் அனாசயமான ஆங்கில உச்சரிப்பு....பூவராகவன் கமல் அருமையான பாத்திரப்படைப்பு..ஒரு தனிப் படமே எடுக்கலாம்... அசத்தியிருக்கிறார் கமல்.. அந்த மைதா மாவு மேக்கப் பெரிதாக உறுத்தாத ஒரு கமல் இவர்... குமரி மொழியை சரளமாய் பேசுகிறார் கமல்...சூப்பர். மத்தப் படி மற்ற கமல்கள் மேக்கப் என்னும் முகமுடிக்குள் சிக்கிய அனானிகளாகவே எனக்கு தென்பட்டனர்...

படம் ஆரம்பிக்கும் போது 12ஆம் நூற்றாண்டில் ஒரு கமல் வருவதாய் காட்டுகிறார்கள்.. அது கமலின் அடுத்தப் பட ட்ரெயிலரா.. இல்லை அந்த கமலுக்கும் இந்த தசாவதாரத்துக்கும் எந்த சம்பந்தமாவது இருக்குதா.. இருந்த மாதிரி எனக்கு தெரியல்ல... அந்த காட்சி அமைப்புகள் ப்ளஸ் கமல் நடிப்பு கலக்கல் ரகம்.

நாகேஷ், கூட கே.ஆர்.விஜயா, ஜெயப்ரதா,சந்தானபாரதி, பி.வாசு, ரேகா,வையாபுரி, சிட்டி பாபு, ரமேஷ் கண்ணா... இவங்களும் படத்துல்ல வர்றாங்க... பேசாம இவங்க ரோலையும் கமலே பண்ணியிருக்கலாம்...

எம்.எஸ்.பாஸ்கர் ஜொலிக்கிறார்.. குறிப்பாக... அந்த காற்றில் விரலால் S போட்டுக் காட்டும் காட்சி கலக்கல் காமெடி.

மல்லிகா ஷெராவத் அறிமுக காட்சி வசனம் அபத்தமாய் துவங்கினாலும் போக போக நன்றாகவே செய்துள்ளார்..அவரை இன்னும் கொஞ்சம் நேரம் வாழ விட்டிருக்கலாம்.

மொத்ததில் சொல்லணும்ன்னா கமல் ரசிகர்களுக்கு ஆஹா.. நல்ல சினிமா ரசிகர்களுக்கு அய்யோ...நம்மளை மாதிரி சாதாரண ரசிகனுக்கு ம்ம்ம்

பொதுவா கமல் என்ற கலைஞனுக்காக ஓ.கே.

தம்பியின் விமர்சனம் பாருங்க...
பா.ராகவன் விமர்சனம் படிங்க

Saturday, June 14, 2008

விசாவதாரம் போஸ்ட்டர் போட்டாச்சுப்பா

இன்று வெள்ளித் திரையை அலங்கரிக்கப் போகும் உலக நாயகன் கமல்ஹாசன் அவர்களின் 'தசாவதாரம்' திரைப்படம் மிகப் பெரிய வெற்றி பெற

விரைவில் இணையத் திரையை அலங்கரிக்கப் போகும்


உலக தமிழ் பதிவுலக ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்க்கும் மெகா மகா பதிவுலக காவியம் விசாவதாரம் குழுவின் வாழ்த்துக்கள்
COMING SOON TO A BLOG VERY NEAR YOU

Tuesday, May 06, 2008

விசாவதாரம்

From the Makers of விவாஜி - Blogbuster of 2007

சூப்பர் பதிவர் இளா சங்கம் பிலிம்ஸ் மீண்டும் இணையும்

A Cutchery Presentation

WATCH OUT FOR THE BLOGBUSTER OF 2008

One man 10 Faces stands up against the west

Watch the epic fight of a GLOBAL CITIZEN

A STORY OF CENTURIES TOLD IN CLASSIC STYLE

உலக பதிவு நாயகன் இளா நடிக்கும்

விசாவதாரம்

தேவ் - பினாத்தல் சுரேஷ் - கானா பிரபா- சங்கம் பிலிம்ஸ்

Copy rights reserved chennai cutchery

Thursday, April 10, 2008

சில தலைவர் படப் பாடல் வரிகள்



உப்பிட்டத் தமிழ் மண்ணை நான் மறக்க மாட்டேன்..
நான் உயிர் வாழ்ந்தால் இங்கே தான் ஓடி விட மாட்டேன்...
கட்சிகளைப் பதவிகளை நான் விரும்ப மாட்டேன்...
காலத்தின் கட்டளையை நான் மறுக்க மாட்டேன்....


உன்னைப் பத்தி யாரு அட...என்னச் சொன்னப் என்ன..
அதை இந்தக் காதில் வாங்கி அந்தக் காதில் தள்ளு...
அட மேகம் மிதந்தாலும் காகம் பறந்தாலும்
ஆகாயம் தான் அழுக்காகதுன்னு சொல்லு...

மூன்றாம் பிறை மெல்ல மெல்ல
முழு நிலவாய் மின்னுவதை
மின்மினிகள் தடுத்திடுமா..... ரீப்பீட்டு


சிங்கம் ஒன்று புறப்பட்டதே...


அதற்கு காலம் கனிஞ்சிருக்கு...

நேரம் நிறைஞ்சிருக்கு...

Saturday, April 05, 2008

வந்தார் ரஜினி



வருவீயா .. வரமாட்டீயா.. தலைவா.... அப்படின்னு ஒட்டு மொத்த மீடியாவும் கேள்வி கேட்டுகிட்டு இருந்த நேரத்தில் வந்தார் ரஜினி... தலைவர் ரஜினிகாந்த் நேற்று உண்ணாவிரதத்தில் பேசிய பேச்சின் விவரம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

இது ஒரு வித்தியாசமான சந்திப்பு என்றுதான் சொல்ல வேண்டும். மிகவும் அதிகமாகப் பேசி புகழ்பெறுவதும் கஷ்டம், குறைவாகப் பேசி புகழ்பெறுவதும் கஷ்டம். இங்கே பேசியவர்கள் மிகவும் உணர்ச்சி வசப்பட்டார்கள். நியாயம்தான். நடந்துள்ள விஷயங்கள் அனைத்தும் மனதுக்கு மிகவும் வேதனையைத் தருவதாக உள்ளன.

குறிப்பாக கர்நாடகாவில் தமிழ் மக்கள் தாக்கப்பட்டதற்கு எனது கடுமையான கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். தமிழ் மக்கள் மீதான வன்முறைக்குக் காரணமானவர்களைக் கண்டிக்கிறேன். இதற்காக வேதனைப்படுகிறேன்.

நாடு எங்கே போய்க் கொண்டிருக்கிறது. கவர்ன்மென்ட் இருக்கா, சுப்ரீம் கோர்ட் எல்லாம் இருக்கிறதா... மக்கள் யார் பேச்சைக் கேட்கிறார்கள்... யார் சொன்னால் கேட்பார்கள்... புரியவில்லை.

இப்ப நம்மளோட நிலம் இருக்கு... அதை வேறொருத்தர் சொந்தம்னு சொன்னா, பட்டா இருக்கா எடுய்யான்னு கேட்டு, அது இருந்தா ரிஜிஸ்திட்ராரே ஒதைச்சு அனுப்பிச்சுடுவார்...

பல ஆண்டுகளுக்கு முன்பே ஓகேனக்கல்லின் ஒரு பகுதி கர்நாடகாவுக்கும், மறுபகுதி தமிழகத்துக்கும் என ஒதுக்கப்பட்டுவிட்டது. நமக்காக ஒதுக்கப்பட்ட பகுதியிலிருந்து நாம தண்ணி எடுத்துக்க திட்டம் போட்டா அதை எடுக்கக் கூடாதுன்னு தடுத்தா ஒதைக்க வேண்டாமா...

இதை எப்பவுமே அவங்க பண்ணிக்கிட்டிருக்காங்க... விடுங்க. சரி, எனக்கு இதுல என்ன வருத்தம்னு சொன்னா... ஒரு தேசியக் கட்சி... மிகப்பெரிய தேசியக் கட்சி (பாஜக), அந்த மாநிலத்தின் அந்த கட்சியோட மிகப்பெரிய தலைவராக இருந்தவர், இருப்பவர் (எதியூரப்பா).. இப்ப வந்து இந்த விஷயத்தைத் தூண்டிவிடறார். என்ன கேவலம் பாருங்க.

என்ன நடந்தாலும் கைகட்டி வேடிக்கைப் பார்க்க எதற்கு அரசாங்கம்? இந்த வட்டாள்... நாராயணகவுடா அவுங்க இவுங்க எல்லாத்தையும் விட்டுடுங்க...

பெரிய தலைவர்கள் ரேஞ்சுக்குப் பேசுவோம். அப்படிப்பட்ட ஒரு பெரிய தலைவர் வந்து இதைத் தூண்டிவிடுறார். எதுக்கு? எலக்ஷன்... தேர்தல் வருது. அந்த தேசியக் கட்சியைச் சேர்ந்தவங்க, இங்க நம்ம மாநிலத்தில் இருக்கறவங்க எல்லாம் வேடிக்கைப் பார்த்துக்கிட்டு சும்மா இருக்காங்க.

கர்நாடகத்தைச் சேர்ந்த நான் மிகவும் மதிக்கிற ஒரு தலைவர் (காங்கிரஸ் தலைவரும் முன்னாள் முதல்வருமான எஸ்.எம்.கிருஷ்ணா) அவர். மும்பையிலிருந்து இப்ப வந்துட்டு (மகாராஷ்டிர கவர்னராக இருந்தவர்), இந்தப் பிரச்சினைக்கெல்லாம் அதாவது இந்த வைரஸ் உருவாகக் காரணமே, கலைஞர்தான்னு சொல்றார்.

என்ன கேவலங்க இது. மக்கள் என்ன முட்டாள்களா... அவர்களுக்கு ஒன்றுமே தெரியாதா.... மக்கள் எங்கிருந்தாலும் அது கர்நாடகமோ தமிழகமோ... அவங்க முட்டாள்கள் அல்ல...

அரசியல்வாதிகளே உண்மையைப் பேசுங்க. சத்தியம் பேசுங்க. சுயநினைவோட பேசுங்க. (நெஞ்சில் கை வைத்து) இங்க இருந்து பேசணும்... அவன் பாத்துக்கிட்டே இருக்கான். தெய்வம் அவன்.

இங்க இருக்கிற நீங்கள்ளாம் (மக்கள்) தெய்வத்துக்குச் சமம்... எனக்குத் தெரியாதா... உண்மை, சத்தியம், நியாயம் அதுதான் என்னிக்குமே சோறுபோடும். என்னிக்குமே காப்பாத்தும்.

சும்மா எல்லாரும் எலெக்ஷனுக்காக ஆட்டம் போட்டுக்கிட்டிருக்காங்க...
இதை அந்தக் கட்சி சும்மா வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்கிறது. காரணம் அங்கே விரைவில் வரப்போகிற தேர்தல். அரசியல் ஆதாயத்துக்காக அப்படிச் செய்கிறார்கள்.

நான் கர்நாடகத்திலிருக்கும் மதிப்புக்குரிய தேவகவுடா, குமாரசாமி, எடியூரப்பா, சித்தராமையா, தரம்சிங், கார்கே, அனந்தமூர்த்தி போன்றவர்களுக்கும் ஒன்று சொல்லிக் கொள்கிறேன். அரசியலுக்காக ஆட்டம் போடாதீர்கள்... அதன் விளைவு மோசமாக இருக்கும். உங்களையே அழிச்சிடும்.

இதை மீண்டும் மீண்டும் வளர விடாதீர்கள், காவிரி பிரச்சினை மாதிரி. பத்து வருஷம் ஆச்சி, இந்திய அரசு இந்த விஷயத்தில் (ஓகேனக்கல் விவகாரத்தில்) என்ஓசி போட்டு.

அறிவோட செயல்படுங்க தயவு செஞ்சு. இங்கே, கலைஞர் மற்றும் எல்லாருக்கும் எனது வேண்டுகோள்... இது நகத்தால் கிள்ளி எறியப்பட வேண்டிய விஷயம். அதற்கு இதைவிட்டால் சரியான நேரம் கிடைக்காது. இப்போது அதைச் செய்யத் தவறிவிட்டால் பின்னர் கோடாலி கொண்டு வெட்டினாலும் பிரச்சினை தீராது.

இப்பவே, இந்த நிமிஷமே ஏந்த வேலையைச் செய்யணும். இதைவிட வேறு பெரிய பிரச்சினை இப்போது கிடையாது.

உங்களது இந்த அரசியல் விளையாட்டில் பாதிக்கப்படுவது அப்பாவி மக்கள்தான். எனவே இம்மாதிரி உணர்வுப்பூர்வமான விஷயங்களை அரசியலாக்காதீர்கள், தயவுசெய்து இந்த விஷயத்துக்கு இப்பவே முடிவு கட்டுங்க... என்றார் ஆவேசமாக.

பேச்சு விவரம் : நன்றி தட்ஸ் தமிழ்

Tuesday, April 01, 2008

கச்சேரி வித் ஜி.ரா மற்றும் கே.ஆர்.எஸ்

வணக்கம் மக்கா,

பொதுவாக் கச்சேரி வச்சுக் கொஞ்ச் கேப் விழுந்துப் போச்சு அதுன்னால்லா யாருக்கும் எந்த டேமேஜுமில்லன்னு வைங்க... இப்போ கச்சேரி வைக்க வேண்டிய அளவுக்கு ஒரு சரித்திர புகழ் வாயந்த சம்பவம் திங்கள் மாலை அடையார் காபி டேவில் நடந்த படியால இந்த்க் கச்சேரி..

கண்டேன் ஜி.ரா வை.... இப்படித் தான் இந்தப் பதிவுக்கு தலைப்பு வச்சிருப்பேன் அவர் கூட இன்னொரு வி.ஐ.பி வராமல் இருந்திருந்தால்...முதல்ல ஜி.ரா பத்திச் சொல்லணும் நான் பதிவு எழுத ஆரம்பித்த காலத்தில் நான் படித்து ரசிதத பதிவ்ர்களில் ஒருவர்...கிட்டத்தட்ட மூணு வருசம் ஆச்சு நானும் பதிவெல்லாம் எழுத வந்து....அவரது எழுத்துக்களில் எப்போதும் நிறைந்திருக்கும் கண்ணியம் எனக்கு மிகவும் பிடித்தமான மட்டுமின்றி நான் வியக்கும் விஷயமும் கூட...முடிந்த வரை அதை என் பதிவுகளிலும் பின்பற்ற நான் முயலுகிறேன்...

ஜிராவின் கதைகளுக்கு மட்டுமன்றி அவருடைய பயணக்கட்டுரைகளுக்கும் நான் விசிறி.. என்னக் காரணமோ இப்போதெல்லாம் அவர் அதிகமாய் பயணக் கட்டுரைகள் எழுதுவது இல்லை.. அவர் எழுத வேண்டும் என்பது என் அவா..நல்லதொரு சினிமா ரசிகர்...அவரோடு ஒரிருமுறை தொலைபேசியில் உரையாடி இருக்கிறேன்... ஆனா நேரில் சந்திப்பது இதுவே முதல் முறை...மஞ்சச் சொக்காப் போட்டுகிட்டு படு ஸ்மார்ட்டா வந்திருந்தார் ஜிரா..

ஒலக லெவல்ல அவர் கூட என்னத்தைப் பேசறது அப்படின்னு நாலு நாள் வளத்த தாடியை பிச்சிகிட்டு இருக்கும் போது போன் பண்ணார் ஜி.ரா... நான் தனியா வர்றல்ல...அப்படின்னு அவர் விட்டச் சின்னக் கேப்ல்ல மோனிகா சால்சா பாலையும் கூட கூட்டிட்டு வரப் போறாரோன்னு நினைச்சேன்... ஆனா அவரே கேப்பை பில் பண்ணார்..அவர் கூட வர்றதா சொன்ன அந்த வி.ஐ.பி... ஆன்மீகச் சுனாமி... சங்கம் வந்து நகைச்சுவை விருந்து பரிமாறிய சிரிப்புச் சித்தர் அன்பர் கே.ஆர்.எஸ்..

ஆகா ஓலகம் சுற்றும் வாலிபர் ஒரு பக்கம்ன்னா இன்னொரு பக்கம் பக்தி இலக்கிய வித்தகர் வேறவா... வாய்ல்ல கம் தடவாமலே கம்ன்னு இருந்தா தான் நம்ம பொழப்பு ஓடும்ன்னு முடிவு பண்ணிகிட்டேன்...

முதல்ல நாங்க சந்திக்க நினைச்ச இடம் அடையார் ஷேக்ஸ் அன்ட் க்ரீம்ஸ் ஆனாப் பாருங்க... இப்படி ஒரு ஆன்மீகச் சுனாமி வந்தா இடம் தாங்காதுன்னு மராமத்து பணி நடப்பதாய் சொல்லிக் கடையைச் சாத்திட்டாங்க...

அப்புறம் அப்படியே இந்திரா நகர்ல்ல தேடி அலைஞ்சு திரிஞ்சதுல்ல அமைஞ்ச இடம் தான் காபி டே...வரும் போதே முகமெல்லாம் பூரிக்க புன்னகை ஏந்தி இளமைத் துள்ளலோடு வந்தார் நம்ம சிரிப்பு சித்தர்... அதிக அறிமுகம் இல்லன்னாலும் முதல் சந்திப்புல்ல அப்படி ஒரு நட்பு பூத்திருச்சுன்னாப் பாருங்களேன்...

காபி கடையிலே காபிக்குச் சொல்லிட்டு.. கூட பிரட் பன் எல்லாம் சொன்னோம்... அதுக்குக் காத்திருந்த நேரத்திலே கும்மியை ஆரம்பிச்சோம்... ஜி.ராவுக்கு இன்னொரு பிரபல பதிவர் கொடுக்கச் சொன்னப் பரிசைக் கொடுத்துட்டு ஒரு சின்ன விளையாட்டு நடத்தினோம்...

பரிசு கொடுத்தப் பதிவர் யார்ன்னு ஜிராவைக் கண்டுபிடிக்கச் சொன்னோம்... ஜி.ராவும் கரெக்ட்டா தப்பா சில பெயர்களைச் சொன்னார்... பரிசுப் பொருளைப் பார்த்து ரொம்ப நேரம் யோசிச்சார்.. யோசிச்சுகிட்டே இருந்தார்... அதுக்குள்ளே காபியைக் கலக்கிக் கொண்டு வந்துட்டாங்க...

நம்ம கே.ஆர்.எஸ்குள்ளே இருந்த அம்புட்டு புகைப்படம் ஆர்வமும் பீறிட அந்தக் காபியை கன்னாபின்னான்னு போட்டோ எடுக்க ஆரம்பிச்சுட்டார்.. ஒரு கட்டத்துல்ல காபியே போதும்ய்யா... என்னைக் குடிக்கப் போறீயா...இல்ல அப்படியே கவுந்துரவான்னு கேக்க ஆரம்பிச்சுருச்சுன்னாப் பாருங்க...

கே.ஆர்.எஸ் கலையார்வம் காபியைத் தாண்டி காபி டே சுவத்துல்ல இருந்த ஒரு புலி மேலே பாஞ்சுது... ஆனாப் பாருங்க.. நம்ம ஜி.ரா இன்னும் யோசிச்சு முடிக்கவே இல்ல... நிலவரம் கலவரமாப் போயிட்டு இருந்துச்சு.. நான் காபியை கடக்குன்னு குடிச்சுட்டு நிமிந்தா... என்னை புலி பக்கமாப் போய் நிக்கச் சொல்லி போட்டோவா எடுத்து தள்ளுனார்...

இன்னும் ஜிரா யோசிச்சுகிட்டே இருக்க.. அப்படியே அசால்ட்டா களத்தில் குதிச்ச கே.ஆர்.எஸ் சரியாப் பதிவர் யாருன்னு சொல்லி அசத்துனார் பாக்கணும்... அதான் கே.ஆர்.எஸ்ன்னு சொல்லத் தோணுச்சு,,

ஒரு வழியா யோசனை எல்லாம் முடிஞ்சு வெளியே வந்த ஜிரா நம்ம கும்மியிலே என்டிரி ஆனாரு...மாதவி பந்தல்காரரு லேசா மேடி மாதிரி இருக்கரதை என்னையும் கவனிக்க வச்ச ஜிரா... இந்த ஆன்மீகச் சிங்கம் தமிழ் கலையுலகுக்கு கிடைக்கவேண்டிய ஒரு தவப்புதல்வன் அப்படின்னு டாபிக் மாத்துனார்....

ஆகா.... விவாஜிக்கு அப்புறம் நாமும் சரியானக் கதைச் சிக்காம சைலண்ட்டாவே இருக்கோமேன்னு பீலீங்ல்ல இருந்த என்னையும் உசுப்பி விட்டார்...கே.ஆர்.எஸ்க்கு ஏத்த கதையாக இருந்தால் தானே தயாரிப்பதாகவும் அயல்னாடுகளில் சூட்டீங் நடத்த ஆவனச் செயவதாகவும் வாக்கு கொடுத்தார்...

அப்புறம் என்ன சூடான காபியும் சிக்கன் க்ராசன்ட்டும் உள்ளே போய் மூளையை முட்டி எழுப்ப... அழகான கதை ஒண்ணு ரெடி ஆச்சு... படத்துக்குப் பேரும் வச்சோம்....

இந்த லோகத்தில் நானும் அழகப்பன்

கே.ஆர்.எஸ் மூன்று வேடங்களில் நடிப்பதாக ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார்... நாலாவதாக நாயகி வேடத்திலும் அவரே நடிக்க ஜி.ரா ஆலோசனை வழங்கினார்.. அதையும் புன்முறுவலோடு கே.ஆர்.எஸ் ஏற்றுகொண்டார்...படத்தில் பல கோலிவுட், பாலிவுட், டொலிவுட் மற்றும் ஹாலிவுட் முக்கிய பிரபலங்களோடு நம் பதிவுலகின் அதி முக்கிய பிரபலங்களும் இந்தப் படத்தில் பங்கேற்க உள்ளனர் என்பது தயாரிப்பாளர் அளித்த உறுதி...

அப்புறம்... கே.ஆர்.எஸ் பகிர்ந்த முக்கிய செய்திகள் அடுத்து வரும் பதிவுகளில்....

சும்மா ஒரு சின்ன ட்ரெயிலர்.... மேயர் வீட்டில் இளாவும் ஆப்பிள் மரமும்.... பாபாவுக்கு பிடித்த பாபி....விரைவில் எதிர்பாருங்கள்....

இப்போதைக்கு இம்புட்டு தான்.. வர்றட்டா

Saturday, February 23, 2008

டி.ஜி.எஸ். தினகரன் சில ஞாபகங்கள்

இந்த வாரத்தைப் பொறுத்த வரை என்னைப் பாதிச்ச ஒரு விசயம்... டி.ஜி.எஸ்.தினகரனின் மறைவு..தமிழகத்தின் கிறித்தவக் குடும்பத்தில் பிறந்து வளர்ந்த யாராக இருந்தாலும் இவரைப் பற்றிய ஒரு அறிதல் இல்லாமல் வளர்ந்திருக்க முடியாது..

எதோ ஒரு விதத்தில் இவரைப் பற்றி விசயங்களும் செய்திகளும் நிகழ்வுகளும் என்னை என் சிறு வயது துவங்கி வந்தடைந்து கொண்டே இருந்து வந்துள்ளன..சுயமாக சிந்திக்கும் காலம் வரை பெற்றவர்களும் உற்றவர்களும் உறவினர்களும் சொல்லிக் கொடுத்து வளர்த்த அறிவே ஆன்மீகம் என்பதாய் இருந்தது.. சுருங்கச் சொல்லுவதனால் ஆன்மீகம் என்பது மனம் சார்ந்ததாக இல்லாமல் மதம் சார்ந்ததாகவே இருந்து வந்துள்ளது...

தமிழகத்தைச் சார்ந்த கிறித்தவக் குடும்பங்களுக்கு டிஜிஎஸ் அவர்கள் ஒரு ஐகானிக் பிகர்.. அவரைப் போல இறை பணி செய்ய தம் குடும்பத்தில் இருந்து ஒருவராவது வரவேண்டும் என்பது பரவலான எண்ணம். இறை பணிக்காகவே தன் வாழ்க்கையை ஒப்படைத்து அதன் பொருட்டாகவே வாழ்ந்தவர் டிஜிஎஸ் தினகரன்.. மனிதராய் பிறந்த எவரும் விமர்சனங்களுக்கு அப்பாற்பட்டவர் அல்ல... அந்த முறையில் கிறித்தவச் சமுதாயத்திலே அவரை விமர்சிப்பவர்களும் உண்டு.. ..

அவரைப் பற்றி இது வரை பொதுவாக சொல்லிய கருத்துக்களை விட அவரைப் பற்றி நான் ஒரு பதிவு எழுதும் அளவுக்கு என்னைத் தூண்டிய விசயங்கள் இரண்டு...

முதல் விசயம்.. டிஜிஎஸ் அங்கிளின் பாடல்கள்.. கிறித்துவச் சமய வழிபாடுகளில் இசை ஒரு முக்கிய பங்கு வகிக்கிறது என்பது ஒரளவு உலகறிந்த விசயம்... டிஜி.எஸ் முறைபடி சங்கீதம் கற்றவரா என்ற விவரம் எனக்கு தெரியாது.. ஆனால் அவர் பாடும் பாடல்கள் பொதுவாக கர்னாடக சங்கீத ராகங்களை அடிப்படையாக கொண்டிருப்பதாகக் கேள்விபட்டிருக்கிறேன்..

வாத்தியங்களின் இரைச்சலும் இதர பிற தற்கால இசை முன்னேற்றங்களும் வந்த போதும் அந்த பழமையான சாஸ்தீரிய முறையில் கணீரென ஒலிக்கும் அவர் குரலுக்கு நான் பரம ரசிகன்...

பழங்காலங்களில் சொல்லக் கேட்டிருக்கிறேன்... இறையடியார்கள் உள்ளம் உருகி இறைவனைத் துதித்து பாடும் போது அதைக் கேட்போரின் மனமும் உருகி போகும் என்பதாய்... அதை நான் இவர் பாடல்களைக் கேட்கும் போது உணர்ந்திருக்கிறேன்... அதிகமாய் பக்தி பாடல்கள் கேட்கும் பழக்கம் இல்லாத எனக்கு இவரது பாடல்கள் மட்டும் அலாதி விருப்பம்... மனம் சோர்ந்த நேரங்களிலும் பின்னிரவு நேரங்களிலும் இப்படி பாடல்கள் கேட்பது உண்டு...

என்னுடைய ஆல் டைம் பேவரிட் பாடல்கள் என நான் குறிப்பிட விரும்பும் பாடல்கள்

இயேசு அழைக்கிறார்.. மற்றும் சோர்ந்து போகாதே மனமே ... என்னும் இந்த இரண்டு பாடல்களும் தான்

அடுத்தக் காரணம் சில பல நேரங்களில் மனம் மதத்தை எதிர்ப்பதாய் கிளம்பி இறை நம்பிக்கை விட்டு தூரம் போகும்.. அப்படிப் பட்ட நேரங்களில் நான் கோயில்களுக்குச் செல்லாமல் இருந்தது உண்டு.. கோயிலுக்குப் போனால் இறைவனைப் பற்றி பேசுவதை விட மதம் பற்றிய பேச்சே அதிகமாக இருக்கும்...அப்படி ஒரு எண்ணம்... அந்த நேரங்களில் இவரது ஜெப கோபுரம் அமைந்திருக்கும் இடத்தில் இருக்கும் ஒரு தியான மண்டபத்தில் சென்று அமர்வது உண்டு... அங்கு அமைதி மட்டுமே நிறைந்து இருக்கும்... நம்மை நாமே பரிசோதித்து அறிய அந்த இடம் வசதி படைத்ததாய் என் மனத்திற்கு படும்... நகரத்தின் மையத்தில் நான் அலுவலகம் செல்லும் வழியில் இப்படி ஒரு இடம் இந்த மனிதரால் தான் எனக்கு கிடைத்தது என்பது இன்னொரு விசயம்...

மதம் மீது நம்பிக்கை தொலைத்த என் மனத்தை இறைவனை நோக்கி செலுத்த டிஜிஎஸ் அவர்களின் பாடல்கள் பெரிதும் உதவியிருக்கின்றன....

விவிலியத்தின் வாக்கு படி நல்லதொரு ஓட்டத்தை ஓடி முடித்து விட்டார்....

Blessed be the name of the lord...

Monday, January 28, 2008

சொன்னா மானக்கேடு...சொல்லாட்டி வெக்கக்கேடு...


"டேய் நீ எல்லாம் ஒரு மனுசனா.... உன்னச் சுத்தி என்னவெல்லாமோ தப்பு நடக்குது..அதுவும் தப்பு தப்பா நடக்குது... கருத்துச் சுதந்திரம்ங்கற பேர்ல்ல கருவாடு மீனாகுது.. மீன் வெறும் கூடாகுது...

அவங்கப் பேசலாம்...பேசிகிட்டேப் போலாம்...நீ கேளு..கேக்காம போ...ஆனா கேள்வி எல்லாம் கேக்கப்பிடாது....கேட்டா... பிஞ்சுரும் பேட்டா...மேடை மைக் எல்லாம் உனக்கு இல்ல.. இல்லவே இல்ல... புரியுதா? கையை மட்டும் தட்டு.. தட்டிகிட்டே இரு....

காலம் காலமா இதைத் தானே செய்யுற... இப்போ மட்டும் என்ன வந்துச்சு? அதையேச் செஞ்சுட்டு போ... என்னாது கோவம் வருதா....அதெல்லாம் எதுக்கு? என்னப் பண்ண போற கோவப்பட்டு....

போடா போவீயா... போய் பொழப்பைப் பாரு... உருப்படற வழியை பாரு....யாருக்கு என்ன நடந்தாலும் ஏன் உனக்கே என்ன நடந்தாலும் "மூடிகிட்டு" இருக்கறதோ இல்ல போறதோ தான் பொழைக்கற புள்ளக்கு புத்திசாலித்தனம் ... ரைட்டா...

அய்யோ இதெல்லாம் உங்களைச் சொல்லல்ல... எனக்கு நானே சொல்லிகிட்டது... சொல்லிக்குறது... சொல்லிக்கப் போறது..

இதை எல்லாம் வெளியே சொன்னா மானக்கேடு... சொல்லாட்டி வெக்கக்கேடுங்கண்ணா"

இதை எல்லாம் படிச்சுட்டு கைத் தட்டுனும்ன்னா என் பின்னூட்டப் பொட்டி தொறந்தே தான் இருக்கு... கோவத்துல்ல முதுகைத் தட்டுணும்ன்னா... ஓவர் டூ ஜி.ரா அன்ட் காதல் முரசு அருட்பெருங்கோ... ஏன்னா அவங்க இரண்டு பேரும் தான் என்னை மொக்கப் போடச் சொல்லிக் கூப்பிட்டாங்க....

போட்டாச்சுப்பா மொக்க...

நம்ம பங்குக்கு நான் கூப்பிடுறது....

அனுசுயா
சந்தனமுல்லை

Tuesday, January 22, 2008

சீனியருக்கு எல்லாம் சீனியர்டா இந்த ஆபிசர்

"ஆகா...மொத்தப் பணமும் போச்சே... " கையைக் கன்னத்துக்கு முட்டுக் கொடுத்துகிட்டு மானிட்டர்ல்ல எதோ ஷேர் மார்கெட் சைட் பாத்து நம்ம ஆபிசர் பிலீங்க்கா நேத்துல்ல உக்காந்து இருக்கார்.

"ஆபிசர் மார்கெட்ல்ல பணம் போறது இருக்கட்டும்... டேமேஜருக்கும் உங்களுக்குமான உறவு வர ரணகளமாப் போயிட்டு இருக்கே அதை பத்தி கொஞ்சமாவது கவலை இருக்கா உங்களுக்கு?" பருத்தி வீரன் ஆபிசர் முதுகைத் தட்டிக் கேட்டான்

மார்கெட் சோகத்தில் இருந்து மெல்ல நிமிர்ந்து லுக் விட்ட ஆபிசர்... கால் மேல் கால் போட்டு உட்கார்ந்தார்.

"டேய் பருத்திவீரா... நான் எல்லாம் சீனியருக்கு எல்லாம் சீனியர்டா...உனக்கேத் தெரியும் நான் பதவிக்கெல்லாம் ஆசைப் படறவன் இல்லன்னு.. அவன் பொடி பைய.நானாப் பாத்து வழி விட்டு மேனேஜர் ஆனப் பய அவன்..என் மேல அவனுக்கு மரியாதை ஜாஸ்திடா..."

ஆபிசர் சொல்லி முடிக்கவும்..."யோவ் ஆபிசர்... இந்தாப் பாருய்யா.. அந்த எக்ஸல் ஷீட் பிரிண்ட் கொடுத்து இருக்கேன்.. போய் அதை எடுத்துட்டு சீக்கிரம் இங்கே வாய்யா ஒரு டிஸ்கஷன் இருக்கு" டேமேஜர் குரல் படு சத்தமாய் பாய்ந்து வந்தது.. அவ்வளவு தான் பதறியடித்து எழுந்த ஆபிசர்.. சுற்றி இருந்த எங்களைப் பார்த்து பயங்கரமான எபெக்ட் கொடுத்து பயந்த பாடி லாங்க்வேஜை அப்படியே உதாரான போஸுக்கு மாத்துன அந்த அழகு இருக்கே...அதை எல்லாம் வெறும் வார்த்தையிலே சொல்லமுடியாது.

'என்ன ஆபிசர்.. பிரிண்ட் எடுக்கவெல்லாம் உங்களை வெரட்டுறார்... நீங்க எவ்வளவு பெரிய சீனியர்... மரியாதை கூட வேணாம்... ஒரு சின்ன மதிப்பு கூட் மிஸ் ஆகுற மாதிரி தெரியுது.." பருத்திவீரன் கொளுத்தினான்...

"லேய் பருத்திவீரா.. நீ கார்பரேட் ஒலகத்துல்ல இன்னும் பச்சப்புள்ளயாவே இருக்கே...அந்த பிரின்டரை பாரு அது நம்ம ஆபிஸ் ஆரம்பிக்கிறதுக்கு அறுவது வருசம் முன்னாலே இருந்து பல இடத்துல்ல வேலை பாத்து அந்து அவலாகி இத்து இரும்பாகி இங்கே வந்து நிக்குது... மேனேஜர் பயலுக்கு பிரிண்டருக்கும் ஜெராக்ஸ்க்குமே ஒழுங்கா வித்தியாசம் தெரியாது.. இப்படி ஒரு பராம்பரியமான சீனியர் பிரிண்டரை ஒரு சீனியரால மட்டுமே ஹேண்டில் பண்ணமுடியும்ங்கற உண்மை அவனுக்குத் தெரியும் அதான்......" ஆபிசர் பேசி கொண்டிருக்கும் போதே பருத்திவீரன் கொட்டாவி விட வாயைத் திறந்தான்...

'நீ கொட்டாவி விடுறதைப் பாத்த என்னை அவமானப்படுத்த மாதிரி அடுத்தவங்களுக்குத் தெரியும்...ஆனா ராத்திரி இரண்டு மணி வரைக்கும் நீ வேலை பாத்த விவரம் எனக்குத் தெரியும்ங்கறதால உன்னை நான் தப்பா நினைக்க மாட்டேன்.. உன் கொட்டாவியைக் கன்டினியூ பண்ணு.. நான் பிரிண்டரைப் பாத்துட்டு வர்றேன்..." ஆபிசர் அசுர வேகத்தில் கிளம்பினார்.

ஆபிசர் போய் அரை மணி நேரமாகியும் திரும்பி வரவில்லை....டேமேஜரே பிரிண்டர் ரூம்க்கு எழுந்து போக வேண்டியதாப் போச்சு. நாங்களும் பின்னாலேப் போனோம் நடக்கிறதைப் பாக்க

"யோவ் ஆபிசர் என்னய்யா...இப்படி ஒரேடியா பிரிண்டருக்குப் பக்கத்துல்ல வந்து நின்னுகிட்டா என்ன அர்த்தம்?"

அவ்வளவு தான் ஆபிசர்.. அப்படியே ரெண்டி ஜம்ப் அடித்து பிரிண்டரில் இருந்து நாலடி தள்ளி போய் நின்றார்...நின்றது மட்டுமில்லாமல்... இது போதுமா மேனேஜர்ன்னு பம்மி பணிவாக வேற கேட்டுவிட்டு பால் பொங்கும் முகத்தோடு நின்றார்...

கஷ்ட்டப்பட்டு சிரிப்பை அடக்கிட்டோம் நாங்க.. டேமேஜர் ஆபிசரை கோபமாகப் பார்க்க ஆபிசர் பணிவு குறையாமல் தரையைப் பாக்க...

"யோவ் பிரிண்டர்ல்ல கார்ட் எங்கேய்யா...?"

"அதை தான்ங்க மேனேஜர் நானும் அரை மணி நேரமாத் தேடிகிட்டு இருக்கேன்" அப்படின்னு அப்பவும் பணிவு குறையாமல் சொன்னார் பாக்கணும் ஆபிசர்.

"ஒரு வேலை ஒழுங்காத் தெரியுதாய்யா உனக்கு..போன வாரம் ஜெராக்ஸ் மெஷினுக்கு பிரிண்டருக்கும் வித்தியாசம் தெரியாம..பிரிண்டர்ல்ல ஜெராக்ஸ் எடுக்க மூணு மணி நேரம் முயற்சி பண்ணியிருக்கீங்க..... பிரிண்டர் டேமேஜ் ஆனது தான் மிச்சம்....." டேமேஜர் ஆபிசரை பார்ட் பை பார்ட்டாக் கிழித்து தொங்கவிட்டுட்டு கிளம்பி போனார்.

வழக்கம் போல் நம்ம ஆபிசர் எதுவுமே நடக்காதது போல் வெளியே வாசலில் நின்று பருத்திவீரன் தலைமையில் அவருக்கு ஓ போட்டு நாங்க வரவேற்பு கொடுத்தோம். அதை அசால்ட்டாச் சிரிச்சுகிட்டே வாங்குன ஆபிசரை பருத்திவீரன் கைப் போட்டு ஆபிசர்....

"ஏன் ஆபிசர்...ஊர்ல்ல நாங்க எல்லாம் காளை மாட்டுல்லேயே பால் கறந்தவய்ங்க தெரியும்ல்லன்னு சொல்லுவீங்களே.... அதுக்கும் இந்த பிரிண்டர் ஜெராக்ஸ் மேட்டருக்கும் சம்பந்தம் இருக்கும் போல இருக்கேன்னு" ஆரம்பிச்சான்...

"அது எப்படி?" நாம் டவுட் கேக்க..

"ஒரு வேளை பசு மாட்டுக்கும் காளை மாட்டுக்கும் வித்தியாசம் தெரியாமப் போயிருக்குமோ.... ஜெராக்ஸ் மிசின்ன்னு நெனச்சு பிரிண்டரை அந்தப் பாடு படுத்துனவர்.. ம்ம்ம்ம்ம்..பாவம்ய்யா அந்த காளை....." பருத்திவீரன் சொல்லி நிறுத்தினான்.

"தம்பி பருத்திவீரா... இந்த நக்கல் எல்லாம் நம்ம கிட்ட வேணாம்ய்யா...உனக்கெல்லாம் ஜாவா சொல்லி கொடுத்து பூவாக்கு வழி சொன்ன என்கிட்டவே நக்கலா.... எதோ சீனியர் ஆபிசர் வாழ்க்கையிலே மைனரா ஒரு மிஸ்டேக் நடந்துப் போச்சு...."

"இது மட்டுமா....ஆபிசர்....புது ப்ராஜக்ட் சம்பந்தமா எத்தனை டாக்குமெண்ட் படிச்சிங்கன்னு மேனேஜர் கேட்டதுக்கு என்னப் பதில் சொன்னீங்க?"

"ஒம்போது டாகுமென்ட் படிச்சதாச் சொன்னேன்"

"மொத்தம் இருக்க டாகுமென்ட்டே நாலு தானே அப்படின்னு டேமேஜர் உங்களை டீம் மீட்ல்ல கேவலப்படுத்துனாரே ஆபிசர்"

"அதையே தான் நான் ஒம்போதாப் பிரிச்சு பிரிச்சுப் படிச்சேன்னு விளக்கம் கொடுத்தேன்ல்ல"

"விளங்காத விளக்கம்"

"என் புத்திசாலித்தனத்தை உன்னாலயும் உங்க டேமேஜரால்லயும் தாங்கிக்க முடியல்ல.."

"இன்னுமா உங்களை நீங்களே புத்திசாலின்னு நம்புறீங்க?"

"கண்டிப்பா...."

"அட அநியாய ஆபிசரே"

"போதும் பருத்திவீரா நிப்பாடிக்க... இப்போ என்னத் தான் சொல்ல வர்ற?"

"ஆபிசர் மருதமலையிலே நம்ம என்கவுண்டர் ஏகாம்பரம் சொல்லுறதை தான் நான் உங்களைப் பார்த்துச் சொல்லுறேன்"

"அது என்னாஆஆது?"

"உங்களுக்கு ஒரு அதிகாரியை எப்படி டீல் பண்றதுன்னு தெரியல்ல..."

"எதை வச்சு அப்படி சொல்லுற?"

"போன வாரம் நம்ம டேமேஜர்... ஆபிஸ்க்கு வர்ற வழியிலே பைக்ல்ல இருந்து சிலிப் ஆகி கீழே விழுந்து கால் உடைஞ்சு வீட்டுல்ல இருந்தாரே அப்போ நம்ம டீம் மொத்தமும் அவரைப் போய் பார்த்து ஆப்பிள், ஆர்லிக்ஸ், ஆரஞ்சு.. அது இதுன்னு கொடுத்து ஆறுதலா நாலு வார்த்தைப் பேசிட்டு வந்தோமே.... நீங்களும் கூட வந்திருந்தா.. டேமேஜருக்கும் உங்க மேல ஒரு சின்ன பாசம் வந்துருக்கும்ல்ல... " பருத்திவீரன் பிலீங்கா அட்வைஸ் மழை பொழிய

"ஹா...ஹா..ஹா...ஹா..." என அடக்கமுடியாமல் ஆபிசர் சிரிக்க ஆரம்பித்தார்.

"யோவ் ஆபிசர் என்னய்யா ஆச்சு உனக்கு?" பருத்திவீரன் கேட்டான்....

"கொய்யால.. வண்டியிலே இருந்து அவன் சிலிப் எல்லாம் ஆவல்ல... சைட்ல்ல போய் கட் கொடுத்து தள்ளி விட்டதே நான் தான்.... அவன் கால் உடைஞ்சுருச்சுன்னு நானே சந்தோசத்துல்ல திக்கு முக்காடி போயிருக்கேன்... சந்தோசத்துல்ல இருக்க நான் துக்கம் கேக்கணுமாம்ல்ல.... போவீயா" ந்னு சொல்லிட்டு மை நேம் இஸ் பில்லா பாட்டை விசிலா அடிச்சுகிட்டு படு ஸ்டைலா நடந்துப் போயிகிட்டே இருந்தார் ஆபிசர்...

"அட மெய்யாலுமே.. அநியாயத்துக்கு அநியாய ஆபிசாரா இல்ல இருக்கார்" பருத்தி வீரன் வாய்விட்டு சொன்னான்.

Friday, January 18, 2008

எழுதியதில் பிடித்தது - விளம்பர விளையாட்டு

புது வருசத்துல்ல நமக்கு ஒரே விளம்பர பதிவா போட வேண்டியதாப் போயிட்டு இருக்கு.... மக்களே உங்களுக்கு சத்திய சோதனை தான் போங்க...

நான் எழுதுன பதிவை முதல்ல ஒரு தடவை படிக்காம நீங்க எஸ்கேப் ஆயிருந்தாலும் இன்னொரு தடவை உங்களைப் பொறி வச்சு பிடிக்குறதுக்குன்னா வாய்ப்பா நம்ம பெனத்தலார் எனக்கு இப்படி ஒரு வாய்ப்பைக் கொடுத்துருக்கார்ன்னு சொல்லணும்... பெனத்தாலர் மட்டும் கொடுப்பாரே இந்தாங்க நானும் தர்றேன்னு சொல்லி இங்கே பாச மழைப் பொழிஞ்சிருக்கான் நம்ம தம்பி வெட்டி பயல் அதுன்னால இந்தப் பதிவின் மூலம் கிடைக்கப் போகும் எல்லாப் புகழையும் அவர்களுக்கே சமர்ப்பிக்கிறேன்.. இப்போ ஆரம்பிக்கிறேன்.

தேவ்க்கு இரண்டு பதிவுகள் உண்டுங்கற மேட்டர் உங்க எல்லாருக்குன் தெரியும்ன்னு நினைக்கிறேன்.. பக்கம்78 கதை கவிதைக்குன்னு எழுதுறது...சென்னைக் கச்சேரிங்கறது சும்மா தோணுறதை எல்லாம் சொல்லுறது.. முன்னதுல்ல எழுதுவேன்... பின்னதுல்லே பேசுவேன் அப்படின்னு சொல்லலாம்...

அதுன்னால எழுதுனது பேசுனது இரண்டுல்லயும் பிடிச்சதைச் சொல்லுறேன்...

சென்னைக் கச்சேரியைப் பொறுத்த வரை ஆபிசர்கள் பதிவுகள் எனக்கு மிகவும் நெருக்கமானப் பதிவுகளாகச் சொல்லுவேன்... ஆபிசர் பதிவுகள் தினசரி அலுவலகத்தில் நான் சந்தித்த சுவாரஸ்யமான மனிதர்களைக் குறித்தான வாய்ப்பாக அந்தப் பதிவுகளை நான் பார்க்கிறேன்..இதுவரைப் படிக்கல்லன்னாப் படிச்சுப் பாருங்களேன்.

ஆபிசர் ஆன கதை, அம்மா உங்க பையன் இப்போ ஆபிசர், ஆபிசருக்கு இன்னிக்கு அப்புரேசல், அட அநியாய ஆபிசரே, ஆபிசர் விடைபெறுகிறார், எங்க ஆபிஸ் பருத்திவீரன, எம்.ஜி.ஆரையே எதிர்த்தவன்டா இந்த ஆபிசர்,
ஆபிசர் கவிஞர் ஆகிறார்

இந்தப் பதிவுகள் தவிர்த்துப் பார்த்தீங்கன்னா.. சமீபக் காலத்தில் போட்ட கச்சேரி பிலிம்ஸ் பாணி பதிவுகளுக்கான முன்னோடி பதிவாய் இந்தப் பதிவைச் சொல்லுவேன்.. ஒரு ரயில் பயணத்தில் உதித்த யோசனை இது... அப்படியே உசுப்பேத்தி ரணகளப்படுத்திட்டோம்ல்ல....நண்பர் கொத்தனாரை வைத்து உருவாக்கிய இலவச அரசன் 23ஆம் பின்னூட்டக்கேசி பதிவு எனக்குப் பிடித்தமான ஒரு பதிவு.

இந்தப் பதிவைத் தொடர்ந்து பின்னால் எழுதி பெரு வெற்றி பெற்ற பதிவுத் தொடர் தான் விவாஜி.
விவாஜியைத் தொடர்ந்து அதே பாணியில் பதிவுலக லொள்ளு சபா ரேஞ்சுக்கு கச்சேரி பிலிம்ஸ் பதிவுகள் பண்ண வேண்டும் என்பது என் விருப்பம். விரைவில் பாலாகன், மற்றும் கே.டி.எம் பதிவுகளை நீங்கள் எதிர்பார்க்கலாம்.

சினிமாக் குறித்தான விமர்சனப் பதிவுகள் தவிர ஒரளவுக்கு அலசி போட்ட சந்திரமுகி ஒரு ரஜினி படமா? பதிவும் மணிரத்னத்தின் இரவல் சிந்தனைகள் பதிவும் எனக்கு விருப்பமான மற்ற பதிவுகள்.

அரசியலில் ஒரளவுக்கு நாட்டம் இருந்தாலும் அது பற்றி எழுதுவதற்கு போதிய விஷய ஞானம் இருக்காங்கற எண்ணம் அதைப் பத்தி எழுதுறதை அடிக்கடி தடுத்து விடுவது உண்டு..அந்த தடுப்புக்களையும் மீறி நான் போட்ட இந்த இரண்டு அரசியல் சம்பந்தமானப் பதிவுகளும் எனக்குப் பிடிக்கும்

தலைவர் ஆவாரா தளபதி? மற்றும் கலாநிதி மாறன் - நிழல் அரசாங்கம்

மேலே குறிப்பிட்ட எல்லாப் பதிவுகளும் நான் கச்சேரியில் போட்ட பதிவுகள்...

பக்கம்78ஐ பொறுத்தவரை எனக்குப் பிடித்தவைகளை மட்டுமே எழுதி வருகிறேன்.. அது உங்களுக்கும் பிடித்தால் சந்தோஷம்...

இப்படி சொந்தச் செலவில் விளம்பர தட்டி வைக்க ஒரு வாய்ப்பு கொடுத்த பெனத்தலாருக்கு ஒரு டாங்க்ஸ் சொல்லிட்டு... இப்படி சொந்த வீட்டுக்கே மேப் போட்டு சுட்டி கொடுக்குற ஐடியா ஊருக்குச் சொன்ன பதிவுலக சுட்டி செம்மல் பாபா அவர்களுக்கும் ஒரு பெரிய டாங்க்ஸ் சொல்லிகிட்டு முடிச்சிக்குறேன்... நன்றி.

நம்ம பங்குக்கு நாம யாரைக் கூப்பிடலாம்ன்னு யோசிச்சா இவங்க நியாபகம் தான் வந்துச்சு.

நாகை சிவா
கீதா சாம்பசிவம்
மு.கார்த்திகேயன்

tamil10